Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

நீங்கள் ஒரினச்சேர்க்கையளார்  எனவே நான் எழுத முடியாது என்று அவர் கூற முடியாது அல்லவா?.

ஒரு மதகுருவால் கூற முடியும். தனது மத நம்பிக்கையை காட்டி.

note:Religious officials

3 It is recognized that officials of religious groups are free to refuse to perform marriages that are not in accordance with their religious beliefs.

https://laws-lois.justice.gc.ca/eng/acts/c-31.5/page-1.html

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Sasi_varnam said:

https://imgur.com/a/yAUQ4Lk

டொரோண்டோ போலீசின் குற்றப்பதிவு இணைத்திருக்கிறேன், என்ன காரணமோ படமாக பதிவில் தெரியவில்லை. 
போலீசால் தரப்பட்ட அந்த தொலைபேசி இலக்கத்திலும் நான் எடுத்து செய்தியின் உண்மையை உறுதி செய்திருக்கிறேன். 
இவ்வளவுக்கும் குற்றம் சாட்டப்பட்ட அந்த அம்மணி ஒரு தமிழ் வழக்கறிஞராம்!!!
மடமையின்  உச்ச மகுடம் இந்த அம்மணி. 
ரேடியோ நிகழ்ச்சியில் வந்து சடங்கு நடாத்திக்கொடுத்த ஐயாவை வறுத்தெடுத்ததும் இவராக இருக்கலாம்.  சரியாக தெரியவில்லை. 

நேற்று எழுதிய விடயம்தான் "பொல்லை கொடுத்து அடிவாங்கிய கதை"
ஒரு நாடு சட்டம் ஒன்றை இயற்றி அதை அமுலுக்கு கொண்டுவந்தால், நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். 

சமூக ஊடகங்களில் பேசுவது , எழுதுவதில் கூட அவதானம் வேண்டும் போலும்.சோ சாட்.😣🙆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஒரு மதகுருவால் கூற முடியும். தனது மத நம்பிக்கையை காட்டி.

இப்ப உங்கினேக்கை திரியிற எங்கடை மத குருமாருக்கு காசுலைதான் நம்பிக்கை....மத நம்பிக்கை எல்லாம் கிடையாது சார் 🤣

புல் நாத்தீகன் எண்டால் ஐயர்/ குருக்கள்மார்தான் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

அவர்கள் தயக்கத்துடனும், பயத்துடனும் வாழவேண்டுமென்று நான் எங்கும் கருத்தெழுதவில்லை

மன்னிக்கவேண்டும் அண்ணா!, உங்களை குறிப்பபிட்டு சொல்லவில்லை “ மறுக்கிறார்கள், எப்படி என்றால் அவர்கள் தயக்கத்துடனும் பயத்துடனும் வாழவேண்டும் என்ற கருத்தின் மூலம்” என எழுதியிருக்கவேண்டும்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

https://imgur.com/a/yAUQ4Lk

டொரோண்டோ போலீசின் குற்றப்பதிவு இணைத்திருக்கிறேன், என்ன காரணமோ படமாக பதிவில் தெரியவில்லை. 
போலீசால் தரப்பட்ட அந்த தொலைபேசி இலக்கத்திலும் நான் எடுத்து செய்தியின் உண்மையை உறுதி செய்திருக்கிறேன். 
இவ்வளவுக்கும் குற்றம் சாட்டப்பட்ட அந்த அம்மணி ஒரு தமிழ் வழக்கறிஞராம்!!!
மடமையின்  உச்ச மகுடம் இந்த அம்மணி. 
ரேடியோ நிகழ்ச்சியில் வந்து சடங்கு நடாத்திக்கொடுத்த ஐயாவை வறுத்தெடுத்ததும் இவராக இருக்கலாம்.  சரியாக தெரியவில்லை. 

நேற்று எழுதிய விடயம்தான் "பொல்லை கொடுத்து அடிவாங்கிய கதை"
ஒரு நாடு சட்டம் ஒன்றை இயற்றி அதை அமுலுக்கு கொண்டுவந்தால், நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். 

ஆச்சரியமாக உள்ளது. கவலையான விடயமும் கூட. கனடாவில் வக்கீலாக வருவது, பணியாற்றுவது எவ்வளவு சிரமம். செய்யும் தொழில் பற்றியாவது பொறுப்புணர்வு தேவை அல்லவா! 

குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி. பல வைத்தியர்கள் தமக்கு வியாதி வராது எனும் மனப்போக்கில் செயற்படுவது போல் வக்கீல்களும் தம்மை கைது செய்ய முடியாது, தமக்கு ஏதும் நடக்காது எனும் துணிவில் செயற்பட வாய்ப்பு உள்ளது. 

யாரோ ஊற்றும் எண்ணெய் எங்கோ பற்றி உள்ளது. 

5 hours ago, நிலாமதி said:

யாழ்களத்தில்   14    பக்கம் தாண்டி

தாண் டி வெற்றிகரமாக 

ஓடிக்கொண்டிருக்கும்  திரைப்படம் 

தன்பால்ஈர்ப்பின   பெண்களின் திருமணம் 

 "போய்  வேறு வேலையை பாருங்கப்பு" 

😡😡😡

பலரும் தம்மை மேதாவிகள் என நிறுவும் செயற்பாட்டில் மும்மரமாக உள்ளார்கள். இந்த விடயம் ஓர் ஆரம்பமே. இது திரைப்படம் அல்ல மெகா சீரியல். வாசகர்களுக்கு பொறுமை அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

பேசுவது , எழுதுவதில் கூட அவதானம் வேண்டும் போலும்.சோ சாட்.😣🙆

என்ன யாயினி .. இப்படி அப்பாவியாக இருக்கிறீர்கள்?
சமூக ஊடகங்களில் மிரட்டல்கள், பயமுறுத்தல்கள், ஹேட் க்ரைம் இதெல்லாம் தண்டனைக்குரிய குற்றங்கள் தான். 
சட்டம் பிடிக்கவில்லை என்றால் அதை பற்றி கேள்வி எழுப்பி குறை நிவர்த்திசெய்ய ஒரு முறை உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

TORONTO -- Toronto Police Services (TPS) have made an arrest in connection with an incident in which a man received threatening calls after performing a religious ceremony.

Toronto resident Umananthini Nishanathan, 47, has been charged with one count of uttering threats and one count of criminal harassment.

இந்த முடிவு ஏற்படும் என்பதைதான் பக்கம் பக்கமாக பேசியும் முடிவில்லாமல் 15 பக்கங்களையும் தாண்டி நகர்கிறது.

ஒரு நாட்டின் சட்டத்தினாலும் அரசியல் தர்மத்தினாலும் தவறேயில்லை, அது தனிப்பட்டவர்களின் உரிமை என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வாழ்க்கை முறைமையை வாழ்பவர்களை எதிர்க்கவோ அவர்கள்மீது எதிர் தாக்குதல் செய்யவோ எமக்கு உரிமை இல்லை.

இதை இங்கேயே பலவாறு பல தரப்பினராலும் தெளிவாக்கப்பட்ட பின்னரும்  பிறரை தொந்தரவு செய்யாத அடுத்தவர்களின் உரிமைகள்மீது தலையிடுபவர்களின் மீது சட்டம் இப்படித்தான் தனது கடமையை செய்யும் என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது.

இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது,

சமூக உணர்வுகள் கலாச்சாரம் பற்றி நாங்கள் கொந்தளிப்பதாயிருந்தால், இன்னொருவன் நாட்டில் அந்தநாட்டுக்குரிய மக்களின் பாரம்பரியம் கலாச்சாரம் மொழி, நிறம் எதுக்குமே சம்பந்தபடாத வெளிநாட்டவர்களாகிய நாம் வந்து குடியேறுவதை  அவர்கள் அடியோடு வெறுக்கிறார்கள், அதுகூட நாம் அவர்களுக்கு கொடுக்கும் கலாச்சார சமூக மன உழைச்சலை ஏற்படுத்தும் செயல்தானே.

இதை ஒப்புக்கொண்டு எத்தனைபேர் அவனது நாட்டைவிட்டு வெளியேற தயாராயிருக்கிறார்கள்? அவர்கள்நாட்டு அரசியலும் சட்டமும் வந்தேறிகளுக்கு ஆதரவாயிருப்பதால் அதை மகிழ்ச்சியாக கொண்டாடி  வாழ்வை அமைத்துக்கொள்ளும் இனம் அதேபோல் பிற விடயங்களில் அவன் அளித்த உரிமைகளுக்கு எதிராக மட்டும் போர்கொடி தூக்குவதேன்?

எங்களில் யாரையாவது ஓரின சேர்க்கையாளராக இருக்க சொல்லி அவன் ஊக்கபடுத்தினானா?

இருப்பவர்களை அவர்கள்பாட்டில் விட்டுவிடுங்கள் என்று மட்டுமே சொல்கிறான். முடிந்தால் புரிந்து கொள்ளலாம் முடியாவிட்டால் Umananthini Nishanathan    போல் உள்ளே போயிருக்கலாம்.

குற்றம் சாட்டப்பட்ட பெண்மணி ஒரு வழக்கறிஞர் என்றும் இங்கே பேசி கொள்கிறார்கள் மிரட்டல் துன்புறுத்தல்  குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரது வழக்கறிஞர் உரிமமும் ரத்து செய்யப்பட  வாய்ப்புகளும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

Bild

எனக்கு  என்ன, கவலை என்றால்....
ஒரு பாலின கலியாணத்தை செய்து வைத்த ஐயருக்கு...
இரு பாலின கலியாணம் செய்து வைக்க, யாராவது  கூப்பிடுவார்களா என்ற சந்தேகம் உள்ளது.
இந்த இருவரின் வேலையால், இரண்டு ஐயருக்கு...  வேலையும் போய் விட்டது. 😢 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Bild

Bild

எனக்கு  என்ன, கவலை என்றால்....
ஒரு பாலின கலியாணத்தை செய்து வைத்த ஐயருக்கு...
இரு பாலின கலியாணம் செய்து வைக்க, யாராவது  கூப்பிடுவார்களா என்ற சந்தேகம் உள்ளது.
இந்த இருவரின் வேலையால், இரண்டு ஐயருக்கு...  வேலையும் போய் விட்டது. 😢 

ஏன் அப்படி சொல்கிறீர்கள் சிறி 

அவர் மிகவும் பிரபலமாகி விட்டார். இது போன்ற திருமணங்களுக்கு மிகுந்த கிராக்கி இருப்பதும் தெரிகிறது. எனவே அவரது காட்டில் இனி பணமழை தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு விடையத்தை ஊதி பெரிதாக்கி அதை ஒரு பேசு பொருளாக்கி இருக்கும் பிரச்சினையை இன்னும் பெரிதாக்கும் வர்கள் யார்,...அன்று அந்த வானொக்காரர்கள் இந்த விடையத்தை ஒரு பேசு பொருளாக்கி இருக்காது விட்டீருந்தால் அந்த பெண் இந்தளவு நிலைக்கு போயிருக்க வாய்ப்பில்லை..ஒரு கட்டத்டத்தில் அவரே சொல்லி இருந்தார். நிகழ்வை கேட்டதிலிருந்து தன் வீட்டில் இருந்த நின்மதி போய் விட்டது, மற்றும் குறிப்பிட்ட சம்பவத்தோடு தொடர்பு பட்ட அந்தணரே தன்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல விடையங்களில் கலந்து கொண்டுள்ளார் என்றும் சொல்லிக் கொண்டார்..எனவே எனது எண்ணப் பாடு நாம் சம்பந்தப் படாத ஒன்றுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை..இன்று பாருங்கள் நாம் குடுக்கும் உத்வேகம் , உற்சாகம் எங்கே போய் முடிந்திருக்கிறது.நன்றி👋✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, யாயினி said:

யார் உத்வேகம் கொடுத்தார்கள் யாயினி?

இந்த பெண் இந்த திரியை பார்த்தார் என்று உங்களுக்கு எப்படித்தெரியும்? 

இந்த செய்தியை இங்கே பகிர்ந்தவர் இந்த திருமணத்தை விரும்பாதவர் என நினைகிறேன். 

வாழ்தியவர்கள் எல்லாரும் ஒரு வரியில்தான் முதல் பதிவுகளில் வாழ்தினார்கள். பின்னர் நடந்த சம்பாசணை எல்லாம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலே.

ஊடகங்களின் முதலாவது தொழிலே சமூகத்தில் இருக்கும் விடயங்களை பேசுவதுதான். எல்லா உரிமைக்கும் அடிப்படை கருத்து உரிமை. தனி நபர்களின் பைத்தியகாரதனமா செயல்பாடுகளுக்காக ஒரு சமூகம் தன் கருத்துரிமையை மூடி வைத்து விட்டு, ரேடியோவில் பாட்டு போடமுடியாது, கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

ஏன் அப்படி சொல்கிறீர்கள் சிறி 

அவர் மிகவும் பிரபலமாகி விட்டார். இது போன்ற திருமணங்களுக்கு மிகுந்த கிராக்கி இருப்பதும் தெரிகிறது. எனவே அவரது காட்டில் இனி பணமழை தான். 

விசுகர்… இந்த ஐயர், இரண்டு ஆண்களுக்கும் திருமணம் செய்து வைப்பாரா?

ஏனென்றால்… இரண்டு ஜேர்மன் பெடியள், இந்து முறைப்படி கலியாணம் கட்ட விரும்புகின்றார்கள். 💔💔

ஐயரை… கனடாவிலிருந்து, விமான ரிக்கற் அனுப்பி கூப்பிடவும் தயாராக உள்ளார்கள்.

ஐயர்… சம்மதம் என்றால், கேட்டு சொல்லுங்கோ….

வாற ஆவணி மாதம்… பெடியளின் திருமணத்தை…. ஜாம், ஜாம் என்று நடத்தி விடலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

 ஒரு விடையத்தை ஊதி பெரிதாக்கி அதை ஒரு பேசு பொருளாக்கி இருக்கும் பிரச்சினையை இன்னும் பெரிதாக்கும் வர்கள் யார்,...அன்று அந்த வானொக்காரர்கள் இந்த விடையத்தை ஒரு பேசு பொருளாக்கி இருக்காது விட்டீருந்தால் அந்த பெண் இந்தளவு நிலைக்கு போயிருக்க வாய்ப்பில்லை..ஒரு கட்டத்டத்தில் அவரே சொல்லி இருந்தார். நிகழ்வை கேட்டதிலிருந்து தன் வீட்டில் இருந்த நின்மதி போய் விட்டது, மற்றும் குறிப்பிட்ட சம்பவத்தோடு தொடர்பு பட்ட அந்தணரே தன்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல விடையங்களில் கலந்து கொண்டுள்ளார் என்றும் சொல்லிக் கொண்டார்..எனவே எனது எண்ணப் பாடு நாம் சம்பந்தப் படாத ஒன்றுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை..இன்று பாருங்கள் நாம் குடுக்கும் உத்வேகம் , உற்சாகம் எங்கே போய் முடிந்திருக்கிறது.நன்றி👋✍️

யாயினி…. அவர்கள் இருவரும், இரகசியமாக இந்த விடயத்தை செய்திருந்தால்… வானொலி வரை, இந்த விடயத்தை அலச வேண்டி வந்திருக்காது.

பெரும்பாலான… ஒரின சேர்க்கையாளர்கள், இரகசியமாகவே இதனை செய்வதால் நிம்மதியாக இருக்கின்றார்கள்.

இவர்கள் கொழுப்பெடுத்து… விளம்பரம் தேடப் போய்… யாழ். களத்திலும், அதனைப் பற்றி அலச வேண்டி வந்து விட்டது.

அது… அவர்கள் பிழையே தவிர, நம் பிழை அல்ல.

ஒரு காரியத்தை செய்யும் போது… அதன் பின் விளைவுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

நாம் சம்பந்தப் படாத ஒன்றுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை..

திருக்குறள்போல் இரண்டு வரிகளில் சொல்லியிருக்கிறீர்கள்.

இதுதான் விஷயம் இதை தெளிவாய் மனசில் ஆணியடித்தால் எந்த குழப்பமும் இல்லை, இத்தனை தூரம் இது ஒரு விவாத பொருளாய் இழுபட வேண்டிய அவசியமும் இல்லை.

தன்னின சேர்க்கையென்பது கலாச்சாரம் பார்த்து வருவதல்ல, அது அவர்களின் மனநிலை பொறுத்து உருவாவது, எம் வாழ்வில் அவர்கள் மூக்கை நுழைக்காதவரை  அடுத்தவன் மனநிலைகள் பற்றி அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை.

இங்கே கருத்தாடல்களில் ஈடுபடுகிறவர்கள் எவருமே சாதாரணமானவர்களல்ல, கல்வி திறன். பிரமிக்கதக்க அறிவாற்றல்.உதவும் குணம்  உலக அனுபவம் அறிந்தவர்கள் அனுபவபட்டவர்கள்.

இருந்தும் பல திரிகள் கொளுந்துவிட்டு எரிவதற்கு பிரதான காரணம் யதார்த்தம் என்ன என்பதை உணர்வதைவிட தமது கருத்துக்கள் மறுக்கபடுகிறதே என்ற சிறு முட்டு  மோதல்கள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

யாயினி…. அவர்கள் இருவரும், இரகசியமாக இந்த விடயத்தை செய்திருந்தால்… வானொலி வரை, இந்த விடயத்தை அலச வேண்டி வந்திருக்காது.

பெரும்பாலான… ஒரின சேர்க்கையாளர்கள், இரகசியமாகவே இதனை செய்வதால் நிம்மதியாக இருக்கின்றார்கள்.

இவர்கள் கொழுப்பெடுத்து… விளம்பரம் தேடப் போய்… யாழ். களத்திலும், அதனைப் பற்றி அலச வேண்டி வந்து விட்டது.

அது… அவர்கள் பிழையே தவிர, நம் பிழை அல்ல.

ஒரு காரியத்தை செய்யும் போது… அதன் பின் விளைவுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி வரும்.

ஒரு  கொலைக்குற்றவாளிக்கு

ஒரு கொள்ளைக்காரன்   /காரிக்கு

பல பேரை காதலிச்சவனுக்கு.  |வளுக்கு

பல திருமணம் செய்தவனுக்கு.   \வளுக்கு 

எந்த யோசனையுமின்றி அனுதினமும்  மது அருத்துபனுக்கு. |பவளுக்கு

பச்சை பொய் சொல்லி எமாற்றியவனுக்கு    /வளுக்கு. 

இப்படிப்பட்டவார்கள்.  ஐயார் வைத்து. திருமணம் செய்யலாம்   ஆனால் ஒரினச் சேர்க்கையாளர்.ஐயார வைத்து திருமணம்  செய்யப்படாது 

நடப்பது நித்திரைசெய்வது   சாப்பாடுவது.  வேலைசெய்வது மலசலம் கழிப்பது போன்ற ஒரு செயல் தானே  Sex.  உடலுறவு  இதுக்கு ஏன்  பிரத்தியோக முக்கியம் கொடுக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வாற ஆவணி மாதம்… பெடியளின் திருமணத்தை…. ஜாம், ஜாம் என்று நடத்தி விடலாம். 

ஏன் எல்லாத்தையும் ஜாம் ஜாம் என்று செய்யவேணும்? சிலதை பட்டர், பட்டர், பிரெட், பிரெட், மாமயிட் மாமயிட் என்றும் செய்தால் நீரிழிவுகாரரும் சந்தோசப்படுவினம் அல்லோ🤣?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

யாயினி…. அவர்கள் இருவரும், இரகசியமாக இந்த விடயத்தை செய்திருந்தால்… வானொலி வரை, இந்த விடயத்தை அலச வேண்டி வந்திருக்காது.

பெரும்பாலான… ஒரின சேர்க்கையாளர்கள், இரகசியமாகவே இதனை செய்வதால் நிம்மதியாக இருக்கின்றார்கள்.

இவர்கள் கொழுப்பெடுத்து… விளம்பரம் தேடப் போய்… யாழ். களத்திலும், அதனைப் பற்றி அலச வேண்டி வந்து விட்டது.

அது… அவர்கள் பிழையே தவிர, நம் பிழை அல்ல.

ஒரு காரியத்தை செய்யும் போது… அதன் பின் விளைவுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி வரும்.

இதில் இந்த ஜோடி பாதிக்கபடவில்லை.

ஐயர் ரிஸ்க் தெரிந்துதான் எடுத்திருப்பார் என நினைகிறேன்.

பாதிக்கபட்டது போன் எடுத்து மிரட்டியவர்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

விசுகர்… இந்த ஐயர், இரண்டு ஆண்களுக்கும் திருமணம் செய்து வைப்பாரா?

ஏனென்றால்… இரண்டு ஜேர்மன் பெடியள், இந்து முறைப்படி கலியாணம் கட்ட விரும்புகின்றார்கள். 💔💔

ஐயரை… கனடாவிலிருந்து, விமான ரிக்கற் அனுப்பி கூப்பிடவும் தயாராக உள்ளார்கள்.

ஐயர்… சம்மதம் என்றால், கேட்டு சொல்லுங்கோ….

வாற ஆவணி மாதம்… பெடியளின் திருமணத்தை…. ஜாம், ஜாம் என்று நடத்தி விடலாம். 

மன்னிக்கணும் சிறி

இது போன்றவர்களுடன் நான்  தொடர்பில்  இருப்பதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சம்பந்தப்படாத ஒன்று ஏனெனில் அது எங்கள் வீட்டில் நடைபெறவில்லை.. ஆனால் இதுவே நாளை உங்கள்/எங்கள் வீட்டில் நடந்தால்? இந்த சமூகம் எப்படி நடந்துகொள்ளும் என்பதற்கு இங்கே எழுதிய கருத்துக்களே போதும்.. 

இங்கே இந்த செய்தி பதியப்பட்டதன் நோக்கம் தனியே வம்பு பேசுவதற்கு அல்ல, இது எங்கள் சமூகத்திற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் உலகில் இவர்கள் ஒரு அங்கம், இனி பேசாமல் இருக்கமுடியாது.. விளக்கங்களும் அறிவூட்டலும் இருக்கவேண்டும் என்பதற்காகவே என நான் நம்புகிறேன்.. 
மரபணு, உணர்வுகள், உரிமைகள், சட்டம் சமூகம், குழந்தைகள் என பலவிடயங்களில் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பதியப்பட்டன. எங்களது சமூகத்தின் போக்கையும் விளங்கிக்கொள்ள முடிந்தது. பலவிடயங்களை அறியவும் முடிந்தது.. 

அதே போலவே மற்றைய ஊடகங்களிலும், அவை வந்துள்ளன.. ஆனால் ஊடக சுதந்திரம், தனிமனித கருத்து சுதந்திரம்..நாட்டின் சட்டதிட்டங்கள் இவைபற்றி வழக்கறிஞரான இந்த பெண்ணுக்கு தெரிந்தல்லவா இருக்கவேண்டும்..இவர் எடுத்த முடிவுகளுக்கு இவர்தானே பொறுப்பு.. அதைவிடுத்து உற்சாகம் கொடுத்தோம் உத்வேகம் கொடுத்தோம் என மற்றவர்களின் மேல் பழியைப்போடுவது என்பது சரியா என தெரியவில்லை.. 

என் மனதில் பட்டது எழுதுகிறேன் அவ்வளவுதான்.  இதனை இன்னொரு விவாவதமாக்குவதற்காக இல்லை.
நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பிண்ணனிகளை கொண்டு வளர்ந்தவர்கள். ஒவ்வொருவரின் கருத்துக்கள், அனுபவங்களிலிருந்து எங்களது அறிவை வளர்த்துக்கொள்கிறோம்..இந்த திரியும் அது போன்றதே.. 
 
Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

புல் நாத்தீகன் எண்டால் ஐயர்/ குருக்கள்மார்தான் :cool:

ஓம் அவையளுக்குத்தான் கடவுள் ஒன்று இல்லை என வடிவாத் தெரியும். எத்தணை பொய் பிரட்டுச் சொன்னாலும் அவைக்கு ஒரு பிரச்சணையும் வராது. மாறாக அவையின்ர புகழும் செல்வமும் அதிகரிக்கும். எனவே அவைக்கு கடவுள் என்பது மற்றவனை மடையனாக்க பாவிக்கப்படும் ஒரு கருவி என நல்ல வடிவாகத் தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜோடிகளை போன்ற ஏனைய ஓரினசேர்கையாளருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று கூறுபவர்கள் தான் அவர்களின் படங்களையும் திரும்ப திரும்ப போட்டு பிரசித்தியடைய செய்கிறார்கள்.
திரி 16 பக்கம் கடந்துட்டுது. 
இங்கே திரும்ப திரும்ப ஆர்வமாய் எழுதியதற்கான காரணம்: 
1. ஓரினச்சேர்க்கையாளர்களின் வாழ்வியலை புரிந்து கொள்கிறேன். நன் வாழும் சமூகத்தில் அவர்களும் என்னை விட எந்த விதத்திலும் குறைந்திடாத ஒரு அங்கம் என ஏற்றுக்கொள்கிறேன். 
2. நான் வாழும் நாட்டில், நானும் என்னைப்போல அனைவரும் ஏற்றுக்கொண்ட சட்டத்தின் பிரகாரம் நடந்த நிகழ்வு. 
3. இது என் தமிழ் சமூகம் சார்ந்த நிகழ்வு. இது கொலை குற்றமோ அல்லது சமூக சீர்கேடோ அல்ல. ஒருசிலருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய உறவுமுறை பரிணாமம் . நாளைக்கு இதுபோன்றதொரு நிலை என்குடும்பம் உட்பட யாருக்கும் வரலாம்.

நான் அவர்களை புரிந்துகொள்வேன். 
ஒதுக்கிவைக்க மாட்டேன். முடிந்தால் வாழ்த்துவேன் அவ்வளவே.
  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nedukkalapoovan said:

Neuroendocrine Mechanisms and the Aetiology of Male and Female Homosexuality

Theories on the classification and aetiology of male homosexuality are reviewed, particularly recent hypotheses on the role of prenatal hormonal influences on brain sexual differentiation and subsequent sexual object choice in the male. Female as well as male brain sexual differentiation may be hormonally determined, and so primary homosexuality in both sexes may be due to abnormalities in foetal exposure to hormones, leading first to physical mis-differentiation and later to homosexual behaviour in genetically and phenotypically normal men and women.

https://www.cambridge.org/core/journals/the-british-journal-of-psychiatry/article/abs/neuroendocrine-mechanisms-and-the-aetiology-of-male-and-female-homosexuality/82AA01F0F8F9043BEAA3713ED67595C0#

உலகம் பூராவும் உள்ள ஆய்வாளர்கள் எல்லாம் போலி.. யாழில் உள்ள ஒரு சிலர் மட்டும் தான் உண்மை. ஒருவேளை  கோவேறு கழுதை மூளையை ஆராய்ந்தால்.. இந்தப் பித்தலாட்டக் கருத்துக்களுக்கு விடை கிடைக்குமோ என்னமோ..?! 

😂நெடுக்கர், 1981 ஆம் ஆண்டுக் கட்டுரை -அதுவும் எடுகோள்களின் விபரிப்பு மட்டும் - இதை2018 இல் கேம்பிரிட்ஜ் ஒன்லைலின் விட்டதும் அது நிறுவப் பட்டு விட்டதா? Cherry-pick செய்யும் போது கொஞ்சம் நம்பகமான நவீன கால ஆய்வைத் தெரிவு செய்தாலாவது உங்கள் விஞ்ஞான அறிவை மெச்சலாம்! 

freemartinism கேள்விப்படவில்லையோ? ஏற்கனவே விலங்குகளில் கண்டு பிடிக்கப் பட்டது தான் - நீங்கள் சொன்ன பொறிமுறை. ஆனால் இது தன்னினச் சேர்க்கைக்கு காரணமெனில் ஆண் பெண் fraternal twins பல பேர் தன்னினச் சேர்க்கயாளராக வர வேண்டும்! அப்படி எதுவும் கண்டறியப் படவில்லை. எனவே நீங்கள் இணைத்தது போலி விஞ்ஞானம் சார்ந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, யாயினி said:

 ஒரு விடையத்தை ஊதி பெரிதாக்கி அதை ஒரு பேசு பொருளாக்கி இருக்கும் பிரச்சினையை இன்னும் பெரிதாக்கும் வர்கள் யார்,...அன்று அந்த வானொக்காரர்கள் இந்த விடையத்தை ஒரு பேசு பொருளாக்கி இருக்காது விட்டீருந்தால் அந்த பெண் இந்தளவு நிலைக்கு போயிருக்க வாய்ப்பில்லை..ஒரு கட்டத்டத்தில் அவரே சொல்லி இருந்தார். நிகழ்வை கேட்டதிலிருந்து தன் வீட்டில் இருந்த நின்மதி போய் விட்டது, மற்றும் குறிப்பிட்ட சம்பவத்தோடு தொடர்பு பட்ட அந்தணரே தன்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல விடையங்களில் கலந்து கொண்டுள்ளார் என்றும் சொல்லிக் கொண்டார்..எனவே எனது எண்ணப் பாடு நாம் சம்பந்தப் படாத ஒன்றுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை..இன்று பாருங்கள் நாம் குடுக்கும் உத்வேகம் , உற்சாகம் எங்கே போய் முடிந்திருக்கிறது.நன்றி👋✍️

அந்த பெண்மணிக்கு வீட்டில்/குடும்பத்தில் நிகழும் மங்கள காரியங்களை குறிப்பிட்ட ஐயாவே செய்து வந்தமையால் இப்படி ஓர் சம்பவம் நடைபெற்றதும் உணர்ச்சி வசப்பட்டு விட்டார் போல தெரிகின்றது.

கைது செய்யப்பட்ட தினமே பிணையில் வீடு திரும்பி விட்டார் என கேள்விப்பட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

நெடுக்கர், 1981 ஆம் ஆண்டுக் கட்டுரை -அதுவும் எடுகோள்களின் விபரிப்பு மட்டும் - இதை2018 இல் கேம்பிரிட்ஜ் ஒன்லைலின் விட்டதும் அது நிறுவப் பட்டு விட்டதா? Cherry-pick செய்யும் போது கொஞ்சம் நம்பகமான நவீன கால ஆய்வைத் தெரிவு செய்தாலாவது உங்கள் விஞ்ஞான அறிவை மெச்சலாம்! 

freemartinism கேள்விப்படவில்லையோ? ஏற்கனவே விலங்குகளில் கண்டு பிடிக்கப் பட்டது தான் - நீங்கள் சொன்ன பொறிமுறை. ஆனால் இது தன்னினச் சேர்க்கைக்கு காரணமெனில் ஆண் பெண் fraternal twins பல பேர் தன்னினச் சேர்க்கயாளராக வர வேண்டும்! அப்படி எதுவும் கண்டறியப் படவில்லை. எனவே நீங்கள் இணைத்தது போலி விஞ்ஞானம் சார்ந்தது!

கேம்பிரிஷ் ஜேர்னல் போலி.. தங்கள் ஆதாரமற்ற கருத்து மெய்.

What might those environmental factors be? Some researchers point to the hormones we’re exposed to in the womb. Perhaps one twin is being exposed to different levels of a given hormone or has a different response to that hormone than the other, and this is ultimately what contributes to later differences in sexual orientation. This is plausible because identical twins sometimes develop with different placentas, and those placentas might not transfer the same level of hormones to each fetus.

https://blogs.iu.edu/kinseyinstitute/2020/06/25/why-do-some-identical-twins-have-different-sexual-orientations/

இப்படி ஒரு விளக்கமும் உள்ளது. 

4 hours ago, Sasi_varnam said:

இங்கே திரும்ப திரும்ப ஆர்வமாய் எழுதியதற்கான காரணம்: 
1. ஓரினச்சேர்க்கையாளர்களின் வாழ்வியலை புரிந்து கொள்கிறேன். நன் வாழும் சமூகத்தில் அவர்களும் என்னை விட எந்த விதத்திலும் குறைந்திடாத ஒரு அங்கம் என ஏற்றுக்கொள்கிறேன். 
2. நான் வாழும் நாட்டில், நானும் என்னைப்போல அனைவரும் ஏற்றுக்கொண்ட சட்டத்தின் பிரகாரம் நடந்த நிகழ்வு. 
3. இது என் தமிழ் சமூகம் சார்ந்த நிகழ்வு. இது கொலை குற்றமோ அல்லது சமூக சீர்கேடோ அல்ல. ஒருசிலருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய உறவுமுறை பரிணாமம் . நாளைக்கு இதுபோன்றதொரு நிலை என்குடும்பம் உட்பட யாருக்கும் வரலாம்.

கனடாவுக்கு போன தமிழர்கள் எல்லாம் கனடாச் சட்டத்தை அணு அணுவா மதிக்கிறாய்களாமில்ல.

நல்லா கதை விடுறீங்கண்ணே.

இந்த 3ம் உங்களது சொந்த நிலைப்பாடு. அதையே பொதுமைப்படுத்த பாடுபடக் கூடாது.. அல்லது திணிக்க முயலக் கூடாது. 

இந்த நிலைப்பாடுகளில் இருந்து மாற்றுக் கருத்து அல்லது நிலைப்பாடு உள்ளவர்களையும் இந்த உலகம் கொண்டிருக்கிறது. அவையும் மதிக்கப்படனும். 

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான மாற்றுக்கருத்துக்களை மள மளவென அங்கீகரிக்கும் நம்மவர்களில் ஒரு தொகுதி.. இதில் மட்டும் இந்த ஓர் பால் கவர்ச்சியினரின் இயற்கைக்கு மாறான நடத்தையை ஏற்கச் சொல்ல ஏன் கருத்துத் திணிப்புச் செய்யினம். ஏற்பதுவும் விடுவதும் தனிநபர் உரிமை. அதில் தலையீடு இருக்கக் கூடாது. ஆனால்.. இந்தக் கும்பலுக்கு எதிரான வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை.. ஏனெனில்.. அவர்கள் வாழும் மனிதர்கள் என்ற வகையில்.. அவர்களுக்குரிய வாழ்தகவு அங்கீகரிக்கப்படனும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.