Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம் 💞

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2021 at 20:41, சாமானியன் said:

ஆரம்பத்தில் இனப்பெருக்கத்துக்கான உறவுமுறை தெரிவு கட்டுப்பாடுகளற்று இருந்தது. பின்பு பொது மனித முன்னேற்றம் கருதி நாகரீக வளர்ச்சியின் படியில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு கடைப்பிடிக்கப்பட்ட வருகிறது.  உதாரணமாக நெருங்கிய உறவினரிடையே திருமணம் செய்ய முடியாது. 

தனி மனித உரிமை தானே என்று சொல்லி யாரவது நெருங்கிய உறவினரிடையே திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினால் ஏற்றுக்கொள்ளலாமா. 

உதாரணமாக தாய் மகனை மணம் புரிதல்.

 இங்கே நான் சட்டத்தை பற்றி கதைக்கவில்லை.

மாற்றங்களே மனித வரலாற்றில் மாறாதிருப்பவை எனினும் காட்டு வாழ்க்கைக்கு திரும்பிப் போகாமலிருப்பது நலம் எனவே தோன்றுகிறது.

தனிப்பட்ட முறையில் இருக்கும் புறநடைகளை கொண்டாட வேண்டியதில்லை என்பது எனது அபிப்பிராயம் ...

On 28/9/2021 at 20:59, விசுகு said:

இதற்கு காரணம் சில வேளை குறையுள்ள பிள்ளை பிறக்கலாம் என்கிறார்கள்.

நான் உட்பட எனது ஊரில் பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள விடயம் தான் இது. அப்படி யாரையும் நான் கண்டதில்லை.

ஆனால் பிறக்கும் குழந்தைக்கு சிலவேளை குறையிருக்கலாம் என்பதற்காக அதை தடுக்கும் சட்டம் குழந்தையே பிறக்காத விடயத்துக்கு சட்ட சேவைகளை வழங்குகிறது??

கொஞ்சம் உறுத்தலாக இல்லையா?

மன்னிக்கவேண்டும் இப்போதான் உங்கள் இருவரின் இந்த கருத்தையும் பார்க்கிறேன்.

சட்டதை விட்டு விடுவதாக சொல்கிறீகள். ஆனால் சட்டம் ஒன்றும் வெற்றிடத்தில் உருவாவதில்லை.

சிறுவருடனான உறவு, நெருங்கிய உறவினருடம் உறவு (இன்செஸ்ட்) இவற்றை சட்டம் குற்றம் என்கிறது என்றால் அதன் காரணம் சமூகம் இவற்றை குற்றமாக காண்கிறது.

ஒரு சமுதாயம் ஒரு விடயத்தை தார்மீகமாக பிழை (morally wrong) என கருதும் போது, சட்டம் இயற்றி அதை குற்றமாக அறிவிக்கிறது.

உதாரணமாக சித்திரவதை இதை சில சமூகங்கள் தார்மீகமாக பிழை என கருதுவதால் சட்டம் போட்டு தடுக்கிறன. வேறு சில சமூகங்கள் அனுமதிக்கிறன.

இதை போலத்தான் நாமும், நாம் வாழும் சமுதாயமும் இன்செஸ்டையும், சைல்ட் அபுயூசையும் தார்மீக பிழை என காண்கிறது, சட்டம் போட்டு தடுக்கிறது. ஆனால் அதே சமுதாயம் இரெண்டு வயது வந்த மனிதர்களின் ஹோமோ செக்சுவாலிட்டியை அப்படி காண்பதில்லை.

இதுதான் இன்செஸ்டுக்கும், ஹோமோ செக்சுவாலிடிக்கும் உள்ள வேறுபாடு. ஒன்றை சமுதாயம் தார்மீக பிழை என காண்கிறது, மற்றயதை (இப்போ) அப்படி காண்பதில்லை.

Link to comment
Share on other sites

 • Replies 386
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Sasi_varnam

இந்த ஜோடிகளை போன்ற ஏனைய ஓரினசேர்கையாளருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று கூறுபவர்கள் தான் அவர்களின் படங்களையும் திரும்ப திரும்ப போட்டு பிரசித்தியடைய செய்கிறார்கள். திரி 16 பக்கம் கடந்துட்டு

பிரபா சிதம்பரநாதன்

மறுக்கிறீர்கள் எப்படியென்றால் அவர்கள் தயக்கத்துடனும் பயத்தைடனும் வாழ வேண்டும் என்ற கருத்தின் மூலம். இதற்கான பதில், இருக்காது ஏனெனில் இவை இங்கே இந்த சமயசடங்குகளிற்கு போய்தான் அறியவேண்டுமென்பதில்

அக்னியஷ்த்ரா

இப்போ என்ன யாழ் களம் இதனை வரவேற்று எல்லோரும் எழுதவேண்டும் என்று தானே எதிர்பார்க்கிறது,  இயற்க்கை ஆணுக்கு ஆணுக்குரிய பாலியல் உறுப்புகளையும் ,பெண்ணுக்கு பெண்ணிற்குரிய பாலியல் உறுப்புகளையும் மனிதர்களது

 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

யாராவது ஒரு சாமியார் இந்துக்களின் எண்ணிக்கை குறைகிறது ஆகவே எல்லாரும் பிள்ளை பெறுங்கள் என அறைகூவல் விடுவார் - அடுத்த கணமே அரசு நிலைப்பாட்டை மாற்றும் 🤣.

ஓம் சாமியார் கேட்டால் போதகர் கேட்டால் புத்த குரு கேட்டால் அது கடவுளின்  உத்தரவு தானே ஆன்மிக அரசுகள் அதை நிறைவேற்றும்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Clapping hands GIFs - Get the best gif on GIFER

இந்த விடயத்தில்.... முஸ்லீம் பெண்களை பாராட்ட வேண்டும். 👍
அவர்கள் ஒரு பாலின திருமணமான... 
"லெஸ்பியன்" திருமணம்  செய்வதை விரும்புவதில்லை. 
வாழ்த்துக்கள்...  முஸ்லீம் சகோதரிகளே. 👏 👏 👏 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

இந்த விடயத்தில்.... முஸ்லீம் பெண்களை பாராட்ட வேண்டும். 👍
அவர்கள் ஒரு பாலின திருமணமான... 
"லெஸ்பியன்" திருமணம்  செய்வதை விரும்புவதில்லை. 
வாழ்த்துக்கள்... சகோதரிகளே. 👏 👏 👏 

ஈரானின் அஹ்மடி நஜாப் என நினைக்கிறேன் ஒரு முறை ஒரு கூட்டத்தில் “ ஈரானில் ஒத்த பாலினகவர்ச்சி உடையவர்களே இல்லை” என்றார்.  உலகம் கொடுப்புக்குள் சிரித்தது.

https://www.npr.org/2011/01/17/132711102/pakistans-lesbians-live-in-silence-love-in-secret?t=1632974922324

https://www.bbc.co.uk/news/world-asia-28693456

https://www.bbc.co.uk/news/magazine-36388507

பாவம் சகோதரிகள், கல்லால் அடித்து கொல்லும் நாட்டில் இதை வெளிப்படையாக சொல்லவா முடியும்?

இஸ்லாமிய நாடுகளிலும், உகண்டா போன்ற நாடுகளிலும் உயிராபத்து உள்ளது என தெரிந்துகொண்டும் ஒத்த பாலின இணையை தேடுபவர்களை பற்றி அறிந்து கொண்டால் இது ஒரு “அடக்கமுடியாத” உள்ளார்ந்த உணர்வு என்பது புரியும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

தாங்கள் விளைநிலம்  அல்ல  என போராடும் அதே  பெண்கள்  தான்  வாடகைத்தாய்  மூலம் பிள்ளை  பெற்றுக்கொள்கிறார்கள்

அல்லது வாடகைத்தாய் மூலம்  பிள்ளை  பெற்றுக்கொண் ட  அனைத்து  பெண்களும்  தாம் விளைநிலமல்ல  என்பவர்கள்  தான்.

பெண் புரட்சி செய்பவர்கள் ஏன் ஐயர் குருக்களை கூப்பிட்டு தாலி கட்டுகின்றார்கள் என்று தெரியவில்லை.கலியாணம் என்று வந்தால் சகல பெரியாரிஸ்டுகளும்  பூரண கும்பம் குத்துவிளக்கு என மங்களகரமாய் காட்சி தருவார்கள் :grin:

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

Clapping hands GIFs - Get the best gif on GIFER

இந்த விடயத்தில்.... முஸ்லீம் பெண்களை பாராட்ட வேண்டும். 👍
அவர்கள் ஒரு பாலின திருமணமான... 
"லெஸ்பியன்" திருமணம்  செய்வதை விரும்புவதில்லை. 
வாழ்த்துக்கள்...  முஸ்லீம் சகோதரிகளே. 👏 👏 👏 

****** அங்கையும் இருக்கு சிறித்தம்பி..🤣

Lesbian - Posts | Facebook

Bild

Link to comment
Share on other sites

இந்த முறை இயற்கையானது, ஆனால் வழமைக்குமாறானது, இவர்களுக்கு பிறக்கும் அல்லது தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளுக்கும் சரி பிரச்சனைகள் வரகூடாது, சமூகத்தில் இவர்களுக்கும் சகல உரிமைகளும் இருக்கவேண்டும் என்பதற்காக இவர்களை சட்டரீதியாக ஏற்றுக்கொள்கிறார்கள் என எத்தனையோ விதமாக கருத்துக்கள் எழுதப்பட்டன. எல்லோரும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பதில்லை.. எங்களுக்கு பிடிக்கவில்லையா, பழகாமல் விடலாம், அவர்களை புண்படுத்த தேவையில்லை. 

அதே போல விளைநிலம் என குறிப்பிடப்படுவது இயற்கை பெண்களை மட்டுமே தாயாகும் தகுதியை தந்துள்ளது என்பதற்காக பெண்களை தனியே குழந்தை பெறும் இயந்திரமாக  பார்க்ககூடாது, நடத்தகூடாது, என்பதே தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை இங்கே நன்றாகவே விளங்கப்படுத்தியிருக்கிறார்கள். 

அப்படியிருந்தும், வாடகைதாய் முறை இங்கே எழுதியதை பார்க்கும் பொழுது, 
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் மனநிலையும் அவர்களது கஷ்டங்களும் சரி, வாடகைதாயாக இருக்க ஒப்புக்கொள்ளும் பெண்களின் மனநிலையும் கஷ்டங்களும் தெரிந்திருந்தாலோ, உணர்ந்திருந்தாலோ அன்றி உங்களைப்போன்றவர்களுக்கு அவை விளங்கப்போவதில்லை.. 

எல்லா அனுபவங்களும் படித்தும் பட்டம் பெற்றும் எப்படி வருவதில்லையோ, அது போலத்தான் இந்த வாடகைதாய் முறையோ, ஓரினச்சேர்க்கை உறவுகளோ எதுவுமே எங்கள் எங்கள் குடும்பங்களுக்கென வரும் வரை, அவர்களது இடத்தில் எங்களை வைத்து பார்க்கும் வரை விளங்கப்போவதில்லை.

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Lesbian - Posts | Facebook

Bild

குமாரசாமி அண்ணை… இது நிச்சயமாக, “போட்டோ சொப்” செய்த படமாக இருக்கும். 🧐

நான் இதனை நம்பவில்லை அண்ணை. 🙂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை… இது நிச்சயமாக, “போட்டோ சொப்” செய்த படமாக இருக்கும். 🧐

நான் இதனை நம்பவில்லை அண்ணை. 🙂

நம்ம தமிழ் பெண்களின் இல்லாத நம்பிக்கை பாசம் இவர்கள் மேல் வரக் காரணம் என்ன?😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பெண் புரட்சி செய்பவர்கள் ஏன் ஐயர் குருக்களை கூப்பிட்டு தாலி கட்டுகின்றார்கள் என்று தெரியவில்லை.கலியாணம் என்று வந்தால் சகல பெரியாரிஸ்டுகளும்  பூரண கும்பம் குத்துவிளக்கு என மங்களகரமாய் காட்சி தருவார்கள் :grin:

அண்ணை,

தன்பாலின கவர்சி இருப்பதால் அவர்கள் எல்லா விடயங்களிலும் முற்போக்காக சிந்திக்க வேண்டும் என்பதில்லை.

எப்படி நீங்கள் எதிர்பாலின கவர்சியோடு கலாச்சார காவலர்களாக இருக்கிறீர்களோ அப்படி தன்பாலின கவர்சியோடு கலாசாரகாவலர்களாக, பழமைவாதிகளாக இருக்கலாம்.

நீங்கள் சொன்ன AfD தலைவியே நல்ல உதாரணம். அவரே ஒரு பாலியல் சிறுபான்மை, அப்படி இருந்தும் அவர் செய்யும் அரசியல்? மத, இன சிறுபான்மையை வெறுக்கும் அரசியல்.

பல பழமைவாதிகள், கடும் இனதுவேசிகள் கூட தன்பாலின கவர்சியுடைவர்கள் உள்ளார்கள். 

முற்போக்குவாதமும், எல்லா இசங்களும், பெரியாரியமும் நாம் கற்று, வாசித்து உண்மை என கண்டு கைகொள்ளும் “தெரிவுகள்”. ஆனால் தன்பாலின கவர்சி இப்படி ஒரு தெரிவல்லவே?

ஆகவே பாலினகவர்சி ஒன்றை தவிர மிகுதி எல்லாத்திலும் அவர்கள் கடைந்தெடுத்த பிற்போக்கு வாதிகளாகவும் இருக்கலாம், நடுநிலைபாதிகளாயும் இருக்கலாம், முற்போக்குவந்திகளாயும் இருக்கலாம்.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்து வைக்க ஒன்றுமேயில்லை புலம்பெயர்ந்துவிட்டு, பிள்ளைகளின் வாழ்கையை அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும், இருந்தாலும் என்னால் இயன்றவரை எமது கலாச்சாரத்தை போதிப்பேன், அது மட்டும்தான் என்னால முடியும், மிகுதி அவர்களின் முடிவு, எது என்றாலும், சந்தோஷமாக ஏற்பேன்.

நாடு கடந்து வந்த து முதல் தவறு என்னில், அதை ஏற்று நடப்பதை ஒரு பார்வையாளனாக இருந்து பார்ப்பதைவிட, என்னால் ஒரு மாற்றமும் அவர்கள் முடிவில் திணிக்க முடியாது😎

 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

நம்ம தமிழ் பெண்களின் இல்லாத நம்பிக்கை பாசம் இவர்கள் மேல் வரக் காரணம் என்ன?😂

கந்தையா அண்ணை…  அதிக துருக்கிக்காரர், தங்கடை இனத்தில்… அப்படியான ஆட்கள் இல்லை என்று, சத்தியம் பண்ணி சொல்லுகிறார்கள்.

அப்பிடி எண்டால், நம்பத்தானே வேணும்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளுக்கு எமது பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்களை சொல்லிக்கொடுத்து அவர்களுக்கு நல்லறிவையும், எதிர்கால வாழ்க்கைக்கான படிப்பறிவையும் கொடுப்பது பெற்றோருக்கான கடமை. 18 வயதின்பின் அவர்களெடுக்கும் முடிவுகளுக்கு அவர்களே பொறுப்பு. அதற்காக இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எனது ஆதரவோ வாழ்த்துகளோ நிச்சயமாக இல்லை. அது எனது பிள்ளையாக இருந்தாலும்!!!

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

முஸ்லீம் பெண்களை

முல்லா ஒமார்க்களால் அடக்கப்பட்ட முஸ்லீம் பெண்களை என்று எழுதியிருக்கவேண்டும்  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Sasi_varnam said:

முல்லா ஒமார்க்களால் அடக்கப்பட்ட முஸ்லீம் பெண்களை என்று எழுதியிருக்கவேண்டும்  

முல்லா ஒமர்கள்… என்பவர்கள் யார்? சசி.

நல்ல பழக்க வழக்கத்தைத் தானே… கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.

மற்றைய இனங்களிலோ, மதங்களிலோ அவர்கள் ஏன்  உருவாகவில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

முல்லா ஒமர்கள்… என்பவர்கள் யார்? சசி.

நல்ல பழக்க வழக்கத்தைத் தானே… கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.

மற்றைய இனங்களிலோ, மதங்களிலோ அவர்கள் ஏன்  உருவாகவில்லை.

ஆடைஅணிகலன்களில் தொடங்கி கல்வி தடை, தொழில் தடை, பேச்சுத்தடை, காதல் தடை இப்படி எல்லாமே நல்ல வழக்கத்தைத் தானே..

வன்முறை பாவித்து சவுக்கால் அடித்து, கல் எறிந்து  சொல்லிக்கொடுக்கிறார்கள். 👍 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

முல்லா ஒமர்கள்… என்பவர்கள் யார்? சசி.

நல்ல பழக்க வழக்கத்தைத் தானே… கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.

மற்றைய இனங்களிலோ, மதங்களிலோ அவர்கள் ஏன்  உருவாகவில்லை.

1 hour ago, Sasi_varnam said:

ஆடைஅணிகலன்களில் தொடங்கி கல்வி தடை, தொழில் தடை, பேச்சுத்தடை, காதல் தடை இப்படி எல்லாமே நல்ல வழக்கத்தைத் தானே..

வன்முறை பாவித்து சவுக்கால் அடித்து, கல் எறிந்து  சொல்லிக்கொடுக்கிறார்கள். 👍 

தமிழ் சிறி, நான் நீண்டகாலமாகவே சொல்லிவருவது முஸ்லிம்களிடமிருந்து ஈழத்தமிழர் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உள்ளன.

 1. போர்களால் ஆண்கள் இறந்துபோக சனத்தொகையை பெருக்க நபிகள் பெருமானார் பலதார விவாகத்தை ஊக்குவித்தார்.
 2. மீதமுள்ள ஆண்களும் பெண்களுக்காக ஒருவரை ஒருவர் அடித்து கொல்ஙாமல் இருக்க பெண்களை முற்றாக மூடி வீட்டுக்குள் முடக்கினார்.
 3. இருக்கும் பிரச்சினைகளையே கையாள ஆண்களுக்கு நேரமில்லாத நிலையில் பெண்களால் மேலதிக பிரச்சினைகள் வராமல் இருக்க பெண்களை அடிமைகளாக்கி சவுக்கடியையும் கல்லால் எறிந்து கொல்வதையும் பொதுவழக்காக்கினார்.

ஈழத்தமிழருக்கு எவ்வளவு பொருத்தமான கலாச்சாரம், பார்த்தீர்களா? 😄

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

மன்னிக்கவேண்டும் இப்போதான் உங்கள் இருவரின் இந்த கருத்தையும் பார்க்கிறேன்.

சட்டதை விட்டு விடுவதாக சொல்கிறீகள். ஆனால் சட்டம் ஒன்றும் வெற்றிடத்தில் உருவாவதில்லை.

சிறுவருடனான உறவு, நெருங்கிய உறவினருடம் உறவு (இன்செஸ்ட்) இவற்றை சட்டம் குற்றம் என்கிறது என்றால் அதன் காரணம் சமூகம் இவற்றை குற்றமாக காண்கிறது.

ஒரு சமுதாயம் ஒரு விடயத்தை தார்மீகமாக பிழை (morally wrong) என கருதும் போது, சட்டம் இயற்றி அதை குற்றமாக அறிவிக்கிறது.

உதாரணமாக சித்திரவதை இதை சில சமூகங்கள் தார்மீகமாக பிழை என கருதுவதால் சட்டம் போட்டு தடுக்கிறன. வேறு சில சமூகங்கள் அனுமதிக்கிறன.

இதை போலத்தான் நாமும், நாம் வாழும் சமுதாயமும் இன்செஸ்டையும், சைல்ட் அபுயூசையும் தார்மீக பிழை என காண்கிறது, சட்டம் போட்டு தடுக்கிறது. ஆனால் அதே சமுதாயம் இரெண்டு வயது வந்த மனிதர்களின் ஹோமோ செக்சுவாலிட்டியை அப்படி காண்பதில்லை.

இதுதான் இன்செஸ்டுக்கும், ஹோமோ செக்சுவாலிடிக்கும் உள்ள வேறுபாடு. ஒன்றை சமுதாயம் தார்மீக பிழை என காண்கிறது, மற்றயதை (இப்போ) அப்படி காண்பதில்லை.

குடும்பத்திற்குள் நடக்கும் பாலுறவான incest ஐ சட்டம் தடுக்கப் பல நியாயமான காரணங்கள் உண்டு. குறைபாடுள்ள பிள்ளை பிறப்பதைத் தடுப்பது அதிலொன்றாக இருக்கலாம்! ஆனால், சிறுவர்களை/சிறுமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யாமல் தடுப்பதே மிகப் பெரிய காரணமாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். Incest ஐ சட்டம் போட்டுத் தடுக்கா விட்டால், தங்கள் மகளையே புணர முயலும் மிருகத் தனமான தந்தையர் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள்!

ஒரு பாலுறவு என்பது இரு வளர்ந்தோர் பரஸ்பர சம்மதத்தோடு உருவாக்கும் உறவு. இங்கெ சம்மதம் (consent) என்பது முக்கியமான சொல்! ஒருவர் குழந்தையைப் பாலியல் ரீதியில் தொட்டால், அங்கே சம்மதம் கிடையாது! ஒரு மிருகத்தைப் புணர்ந்தால் அங்கே சம்மதம் கிடையாது! எனவே consent இல்லாத உறவு வல்லுறவு - சட்ட விரோதம்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

Incest ஐ சட்டம் போட்டுத் தடுக்கா விட்டால், தங்கள் மகளையே புணர முயலும் மிருகத் தனமான தந்தையர் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள்!

ஓரின சேர்க்கை எல்லா உயினங்களிலும் உள்ளது என வாதிட்டு சமாதானம் சொன்ன விண்ணர்களே!
ஜஸ்ரின் சொன்ன இந்த கருத்தைப்பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

ஏனைய உயிரினங்கள் பாலியலில் தாய் தந்தை மகன் மகள் வேறுபாடு பார்ப்பதில்லை.ஆனால் மனித குலத்திற்கு  இந்த விடயத்தில் மட்டும் சட்டம் தேவைப்படுகின்றது. 
இங்கு மட்டும் மனிதனுக்கு இயற்கை முரண் தெரிகின்றது.

-----

Edited by நிழலி
ஆதாரமற்ற தகவல்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎-‎09‎-‎2021 at 22:08, goshan_che said:

என்கரேஜ் பண்ண இது ஒன்றும் பழக்கம் (habit) இல்லை. உள்ளார்ந்த விடயம். 

எவ்வளவுதான் என்கரேஜ் பண்ணினாலும் நீங்களோ நானோ இப்படி செய்வோமா? 

Sexuality என்பது நோயோ, பழக்கவழக்கமோ, அங்கவீனமோ, பேஷன் டிரெண்டோ இல்லை.

நாம் எப்படி உள்ளக உந்தலால், எந்த என்கரேஜ்மண்டும் இன்றி எதிர்பாலினத்தவரால் ஈர்க்கப்படுகிறோமே அப்படி அவர்கள் தன்பாலினத்தபரால் ஈர்கப்படுகிறனர்.  அவ்வளவுதான் இதில் மேட்டர்.

நீங்கள் சொன்ன மாதிரி அவர்களுக்கு வரும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது தான் ...நான் சொல்ல வந்தது இப்படி வெளிப்படையாய் எல்லோரும் வாழ்த்துக்களையும், ஆதரவுனை தெரிவித்தால் இவர்கள் போல் இருப்பவர் தைரியமாய் திருமணம் செய்ய வெளிவிக்கிடுவார்கள் ...நாங்கள் காணாத மாதிரி இருந்தால் அவர்களுக்கு தயக்கம் வரும்.
இங்கு வெளிப்படையாய் இத் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்த நிழலி,கிருபன் , நீங்கள் உட்பட மனதிற்குள் உங்கள் பிள்ளைகள் இப்படி செய்ய கூடாது என்ற பயத்திலேயே வாழ்கிறீர்கள்.சொல்லிக் கொடுத்து தான் வளர்ப்பீர்கள் .தற்செயலாய் அவர்கள் செய்திட்டாலும் என்ற பயத்தில் முன்னெச்செரிக்கையாய் ஆதரவு கொடுக்கிறீர்கள் . அவ்வளவு தான் மனப்பூர்வமாய் எத்தனை பேர் இந்த திருமணத்திற்கு ஆதரவு?...இந்த திருமணத்திற்கு போனவர்களே இவர்களை மனப் பூர்வமாய் வாழ்த்தி இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
நான் படித்தவன் ,முற்போக்கான சிந்தனைவாதி என்று தம்மை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் 

 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இதைத்தான் சகோதரி இந்த 6 பக்கமாக சொல்லி வருகிறேன் 👏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மனிதர் பிறந்து  உடலில்  ஸ்பரிசசுகம் உணர்ந்ததில் இருந்து நல்ல பழக்கங்களும் கெட்ட பழக்கங்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல சேர்ந்தே இருக்கின்றன......பெண் தலைமைத்துவ காலத்தில் அதன் தலைவி அந்தக் குழுமத்தில் தான் விரும்பிய யாரோடும் அவள் உறவு கொள்கிறாள் அது தந்தையோ சகோதரனோ மற்றும் மகனோ யாராயினும் சரி (வால்காவில் இருந்து கங்கை வரை)......பின் மனித மனம் செம்மையடைய அவைகள் எல்லாம் வழக்கொழிந்து ஒரு கண்ணியமான காலத்தில் வாழுகின்றோம்......!

சுய இன்பங்களும், ஓரினசேர்க்கைகளும் ஆங்காங்கே நடப்பது வழமையானதே ......ஆண்  பெண் விடுதிகளில், ஒருசில நண்பர்களிடத்தில், மற்றும் சில ஆசிரியர்கள் மேலதிகாரிகள் என்றவாறு......!

ஆனால்  இறைச்சி சாப்பிட்டனான் என்று எலும்பை கழுத்தில கட்டிக்கொண்டு திரியக் கூடாது......!

மேல்நாட்டு  கீழ்நாட்டு வேறு எந்த நாட்டு கலாசாரத்திலும் சரி பெற்றோருக்கு முன்பாகவோ மற்றும் பிள்ளைகளுக்கு முன்பாகவோ கட்டிய சொந்த மனைவியையோ /கணவனையோ எவராவது பாலியல் இச்சையுடன் முத்தமிடுவார்களா (அன்பு ரீதியாக நட்பு ரீதியாக அல்ல).......அதுபோல் சில விடயங்கள் இலைமறை காயாக அது பாட்டுக்கு கிடக்கட்டும்......அவற்றை வெளிச்சம் போட்டு காட்டத் தேவையில்லை என்று நினைக்கிறேன்......!  

 • Like 5
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் சொன்ன மாதிரி அவர்களுக்கு வரும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது தான் ...நான் சொல்ல வந்தது இப்படி வெளிப்படையாய் எல்லோரும் வாழ்த்துக்களையும், ஆதரவுனை தெரிவித்தால் இவர்கள் போல் இருப்பவர் தைரியமாய் திருமணம் செய்ய வெளிவிக்கிடுவார்கள் ...நாங்கள் காணாத மாதிரி இருந்தால் அவர்களுக்கு தயக்கம் வரும்.
இங்கு வெளிப்படையாய் இத் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்த நிழலி,கிருபன் , நீங்கள் உட்பட மனதிற்குள் உங்கள் பிள்ளைகள் இப்படி செய்ய கூடாது என்ற பயத்திலேயே வாழ்கிறீர்கள்.சொல்லிக் கொடுத்து தான் வளர்ப்பீர்கள் .தற்செயலாய் அவர்கள் செய்திட்டாலும் என்ற பயத்தில் முன்னெச்செரிக்கையாய் ஆதரவு கொடுக்கிறீர்கள் . அவ்வளவு தான் மனப்பூர்வமாய் எத்தனை பேர் இந்த திருமணத்திற்கு ஆதரவு?...இந்த திருமணத்திற்கு போனவர்களே இவர்களை மனப் பூர்வமாய் வாழ்த்தி இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
நான் படித்தவன் ,முற்போக்கான சிந்தனைவாதி என்று தம்மை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் 

ரதிக்கு… ஒரு சபாஷ், போடுங்க. 👏👏👏

நச்சென்று… அருமையாக சொன்னீர்கள் ரதி. 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • றோ உளவுப்பிரிவு தனது நலனுக்காக எதையும் செய்யும். விடுதலைப்புலியாக மாறும் கரும்புலியாக மாறும். சிங்கள அரசியல்வாதிகளை தற்கொலை போராளி கொண்டு கொலை செய்யும். விடுதலைப்புலிகளுக்குள்ளும் வேறு இயக்கங்கள் பெயரில் படு கொலைகளை நடத்தும். இன்னும் பற்பல......
  • இது இன்னுமொரு ஈஸ்ரர் தாக்குதலாக இருக்கலாம் மும்பைத் துறைமுகத்தில் ஒரு கடற்படை நீர்மூழ்கி தாக்கி மூழ்கடிக்கப்பட்டது அப்போது விபத்து எனப் பூசி மொழுகிவிட்டார்கள் இல்லையேல் பங்குச்சந்தையில் தடாலடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதுபோல் இதையும் பூசி மெழுகிவிடுவார்கள். ஆனால் சுப்பிரமணியம் சுவாமி சீனாக்காரன் செய்தவேலை என அறிக்கை விட்டிருக்கிறார். துட்டகெமுனுவின் நிலை இந்தியாவுக்கு வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் பாகிஸ்தான் சொல்லவே தேவை இல்லை காஸ்மீர் என்றும் புகையும் விடையம் இப்போ வங்காள விரிகுடாவின் இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கம் அம்பாந்தோட்டயிலிருந்து அட்டை வளர்ப்புவரை அங்கெங்கிலாதபடி அவர்கள்பாடுதான். கெமுனுக்கு ஒருபக்கம் கடலாவது இருந்தது இவர்களுக்கு கடலுக்கு அப்பாலும் சீனாக்காரன் நிக்கிறான். சிலவேளை யாராவது அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத்தமிழன்மீது பாரத்தைப்போட்டு விடுதலைப்புலி எனக்கூறினாலும் கூறலாம். 
  • மாசிகருவாட்டுக் குழம்பும் சோறும் அருமையான காம்பினேஷன்.......!  👍
  • இது நடைபெறுவதைத் தடுப்பது எங்கணம்? ஒரே வழிதான். சிங்கள பெளத்த பேரினவாத அரசு தொடர்ந்தும் இயங்குவதை முடக்குவது. இன்றிருக்கும் அதன் அதிகார பலத்தினை உடைத்து, அது கம்பீரமாக நிற்கும் வெற்றிமமதையிலிருந்து கீழே வீழ்த்தி தமிழருடன் சமரசத்தில் ஈடுபடுவதன்மூலம், அவர்களின் கோரிக்கைக்கு உடன்படுவதே ஒரே வழியெனும் நிலையினை உருவாக்குவது.  நாட்டினை தொடர்ந்து கொண்டுநடாத்துவதற்குத் தேவையான வருவாய்களை பேரினவாதம் பெற்றுக்கொள்ளும் வழிகளைத் தடுப்பது. உல்லாசப் பயணத்துறை, கைத்தொழில்ப் பேட்டைகள் மூலம் கிடைக்கும் வருவாய்களை முற்றாக முடக்குவது. பொருளாதார ரீதியில் தோல்வியடைந்த நாடாக மாற்றுவது.  இதனைச் செய்ய தமிழர்கள் தமக்கு முன்னால் இருக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவது அவசியமானது. அந்த வழிகள் என்னவென்று கண்டுபிடிப்பது இப்போதைக்குத் தேவையானது.
  • அப்படியானால் தமிழர்களின் எதிர்காலம் என்ன? நிச்சயமாக நடக்கப்போவது இவைதான் 1. தமிழர்களின் தாயகம் இன்று வடக்கென்றும் கிழக்கென்றும் பிரிக்கட்டிருப்பதுபோல, இன்னும் சிறிதுகாலத்தில் கிழக்கிலும், வடக்கிலும் பகுதிகள் சிறிது சிறிதாக அரித்தெடுக்கப்பட்டு பெருத்துவரும் சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்படும். 2. தமிழரின் அருகிவரும் தாயகத்தில் சிங்களத்தின் ராணுவமும், கடற்படையும், வான்படையும், காவல்த்துறையும், புலநாய்வு அமைப்புக்களும் தொடர்ச்சியாக நிலை நிறுத்தப்படுவதோடு, அவற்றின் பிரசன்னமும் விஸ்த்தரிக்கப்படும். 3. தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களத்தின் அதிகாரிகளும், அவர்களின்குடும்பங்களும் பெருமளவில் குடியமர்த்தப்படும். 4. தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்கள் சிங்களத்திற்குள் ஊல்வாங்கப்படும் (உடனடியாக இல்லாவிட்டாலும்கூட இன்னுமோர் 50 - 60 வருடங்களில் இது சாத்தியமே).  5. அருகிவரும் தமிழரின் மொழி, கலசார விழுமியங்கள், ச்மய அடையாளங்கள் சிறிது சிறிதாக தொல்பொருள் காத்தல் எனும் பெயரிலும், "முன்னைய சிங்கள பெளத்த சின்னங்கள் " எனும் பெயரிலும் அபகரிக்கப்படும். அப்படி அபகரிக்க முடியாத தமிழரின் தொல்லியல் சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுதலோ அல்லது வேண்டுமென்றே பராமரிப்பின்றி விடப்படும், இன்று வன்னியின் பல பகுதிகளிலும் அழிந்துவரும் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட பல தொன்மைவாய்ந்த கட்டிடங்கள் இதற்கு உதாரணம். 6. தொடர்ச்சியான ராணுவ அடக்குமுறைக்கும், நில அபகரிப்பிற்கும் முகம் கொடுக்கும் தமிழினம் ஒன்றில் நாட்டைவிட்டு வெளியேறி சிங்கள் ஆக்கிரமிப்பினை இலகுவாக்கும், அல்லது தனது அடையாலம் துறந்து சிங்களுத்தினுள் உள்வாங்கப்படும்.  7. இன்னொரு நூற்றாண்டில் முழு நாடும் சிங்கள மயமாகும். 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.