Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால்ஈர்ப்புடைய( lesbian) பெண்களின் திருமணம்👩‍❤️‍👩

திருமண வாழ்த்துக்கள்💐

Bild

  Bild

Bild

💝

டிவிட்டரிலிருந்து......

Bild

Edited by குமாரசாமி
 • Like 3
 • Haha 2
Link to comment
Share on other sites

 • Replies 386
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பிரபா சிதம்பரநாதன்

மறுக்கிறீர்கள் எப்படியென்றால் அவர்கள் தயக்கத்துடனும் பயத்தைடனும் வாழ வேண்டும் என்ற கருத்தின் மூலம். இதற்கான பதில், இருக்காது ஏனெனில் இவை இங்கே இந்த சமயசடங்குகளிற்கு போய்தான் அறியவேண்டுமென்பதில்

Sasi_varnam

இந்த ஜோடிகளை போன்ற ஏனைய ஓரினசேர்கையாளருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று கூறுபவர்கள் தான் அவர்களின் படங்களையும் திரும்ப திரும்ப போட்டு பிரசித்தியடைய செய்கிறார்கள். திரி 16 பக்கம் கடந்துட்டு

அக்னியஷ்த்ரா

இப்போ என்ன யாழ் களம் இதனை வரவேற்று எல்லோரும் எழுதவேண்டும் என்று தானே எதிர்பார்க்கிறது,  இயற்க்கை ஆணுக்கு ஆணுக்குரிய பாலியல் உறுப்புகளையும் ,பெண்ணுக்கு பெண்ணிற்குரிய பாலியல் உறுப்புகளையும் மனிதர்களது

 • கருத்துக்கள உறவுகள்

சிங்கள - தமிழ் ஒருபால்த் திருமணம் எண்டு சொல்லுங்கோ !

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

சிங்கள - தமிழ் ஒருபால்த் திருமணம் எண்டு சொல்லுங்கோ !

வந்தனீங்கள்.... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க எண்டு வாழ்த்து சொல்லுங்கோ🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இல்லறம் சிறக்க வாழ்த்து💐.

ஐயருக்கும் ஒரு சலூட் 🖖

Link to comment
Share on other sites

இந்து திருமணச் சடங்குகளுடன் இரண்டு பெண்கள் திருமணம் முடித்துக்கொண்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இரண்டு பெண்களும் தமது சுற்றத்தார் முன்னிலையில், அம்மி மித்து, அருந்ததி பார்த்து, தாலிகட்டிக்கொண்ட அந்தக் காட்சி ஊடகங்களில் வெளியாகி சாதகமாகவும், எதிரானதுமான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்தச் சம்பவம் கனடா நாட்டின் Grafton பகுதியில் கடந்த 26ம் திகதி நடந்ததாக தெரியவருகின்றது.

 

பலவித செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்க!!🙌

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்னெண்டா.....

 

…ஒண்டுமில்லை... 

சொன்னாப்போல.... அய்யா, மோனோட வந்திட்டார் போலை கிடக்குது.....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமண நல் வாழ்த்துக்கள் .........இவர்களின் சொத்துக்கள் இவர்களுக்கு பின் யாருக்கு போகும் 😂

Link to comment
Share on other sites

 தன்பாலின சேர்க்கை என்பது அவரவர் உரிமை , அதை பிறர் விமர்சிக்கவோ அவர்களை தொந்தரவு செய்யவோ சட்டத்திலும் தர்மத்திலும் இடம் கிடையாது என்ற கொள்கைகளை கொண்ட நாடுகளில் வாழ்வதால் இது அவர்களின் தனிப்பட்ட விசயம் .

திருமண வாழ்த்துக்கள்.

ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

அதைதான் ஐயரின் கை  சிம்பாலிக்கா சொல்லுதாக்கும்.

Bild

அதாவது கையை கட்டிக்கொண்டு அமைதியா போகவேண்டியதுதான் எண்டு சொல்ல வாறன்.

 • Like 3
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் என்று  சொல்லி என்னை  நானே  ஏமாற்ற  விரும்பவில்லை

இயற்கைக்கு எதிரானவற்றிற்கு  எதிராக  குரல்  கொடுக்க  பின்னிற்கக்கூடாது

அது  நாளை நம் கதவை  தட்டும்?😢

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.💐💐💐

அத்துடன் தோழனாக நிற்கும் தோழிக்கும் (அப்படித்தான் வீடியோவில் தெரிகின்றது) பாராட்டுக்கள்👍🏾

49 minutes ago, valavan said:

ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

 

கவலை வேண்டாம். விந்து வங்கி ஆண்களுக்கு திறந்தே உள்ளது😜

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.💐💐💐

அத்துடன் தோழனாக நிற்கும் தோழிக்கும் (அப்படித்தான் வீடியோவில் தெரிகின்றது) பாராட்டுக்கள்👍🏾

 

ஒரு சிறு  சந்தேகம்

இதையே  உங்கள் பிள்ளை  செய்தால்??

எந்தவித உதறலுமற்று

இதேபோல்  வாழ்த்து  சொல்வீர்களா???

(ஒரு  உறவு என்ற  ரீதியில்  கேட்கிறேன் தவறாக இருந்தால்  பதில் தரவேண்டாம்)

 • Like 1
Link to comment
Share on other sites

1 minute ago, விசுகு said:

 

ஒரு சிறு  சந்தேகம்

இதையே  உங்கள் பிள்ளை  செய்தால்??

எந்தவித உதறலுமற்று

இதேபோல்  வாழ்த்து  சொல்வீர்களா???

(ஒரு  உறவு என்ற  ரீதியில்  கேட்கிறேன் தவறாக இருந்தால்  பதில் தரவேண்டாம்)

நானும் வாழ்த்துச் சொன்னவன் என்ற முறையில் இதற்கான என் நேர்மையான பதில்

கண்டிப்பாக நான் எதிர்க்க மாட்டேன் 

உங்களுக்கு என் பிள்ளைகளையும் தெரியும் என்பதுடன் அவர்கள் பதின்ம வயதில் உள்ளார்கள் என்றும் தெரியும். எனவே இங்கு சும்மாச்சும் சொல்ல முடியாது. 

என் பிள்ளைகளின் எந்த நியாயபூர்வமான ஆசைகளுக்கும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் எந்தவிதத்திலும் நான் குறுக்கா நிற்பதும் இல்லை. அத்துடன் அதற்கான உரிமையும் இல்லை.

 • Like 4
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

நானும் வாழ்த்துச் சொன்னவன் என்ற முறையில் இதற்கான என் நேர்மையான பதில்

கண்டிப்பாக நான் எதிர்க்க மாட்டேன் 

உங்களுக்கு என் பிள்ளைகளையும் தெரியும் என்பதுடன் அவர்கள் பதின்ம வயதில் உள்ளார்கள் என்றும் தெரியும். எனவே இங்கு சும்மாச்சும் சொல்ல முடியாது. 

என் பிள்ளைகளின் எந்த நியாயபூர்வமான ஆசைகளுக்கும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் எந்தவிதத்திலும் நான் குறுக்கா நிற்பதும் இல்லை. அத்துடன் அதற்கான உரிமையும் இல்லை.

ஆனால் நான்கேட்ட கேள்வி வேறு  நிழலி

எந்தவித உதறலுமற்று

இதேபோல்  வாழ்த்து  சொல்வீர்களா???

Link to comment
Share on other sites

4 minutes ago, விசுகு said:

 

ஒரு சிறு  சந்தேகம்

இதையே  உங்கள் பிள்ளை  செய்தால்??

எந்தவித உதறலுமற்று

இதேபோல்  வாழ்த்து  சொல்வீர்களா???

(ஒரு  உறவு என்ற  ரீதியில்  கேட்கிறேன் தவறாக இருந்தால்  பதில் தரவேண்டாம்)

விசுகு அண்ணா உங்கள் புரிதலில் தவறு உள்ளது, நீங்கள் வாழுகின்ற தேசத்தின் சட்டப்படி நீங்கள் உங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை செய்யாதுவிடலாம், ஆனால் மற்றவர்கள் அதை செய்யகூடாது என்று சொல்ல எமக்கு எந்த உரிமையும் இல்லையென்பதே நாடுகளின் சட்டம்.

வாழ்வு தந்த நாடுகளின் சட்டங்களை,அவர்களின் உரிமைகளை  மதிப்பவர்களாயிருந்தால் நீங்களும் ஒரு வாழ்த்தை தட்டிவிடலாம் தவறில்லை.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, valavan said:

ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

 

மிக முக்கியமான விடயத்தை தொட்டிருக்கிறீர்கள்....

கோழியில் பெண்கோழி, மாட்டில், ஆட்டில் பெண் இனம் என மனிதன், முட்டை, பால், இறைச்சி என பேராசை கொண்டு வளர்ப்பதால், இவைகளில் ஆண் இனமே ஒரு வாரத்தில் அழிக்கப்படுகின்றன அல்லது உண்ணப்படுகின்றன.

இது புரிந்ததால், அதிர்ந்து போன பிரிட்டிஸ் மக்களிடையே, மரக்கறி உணவு, 750 வீதம் வரை கடந்த நாலு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

இந்த வகையில் மனித இனத்தில், ஆண்கள் தேவையில்லை என்ற நிலைக்கு வந்துள்ளோம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, valavan said:

விசுகு அண்ணா உங்கள் புரிதலில் தவறு உள்ளது, நீங்கள் வாழுகின்ற தேசத்தின் சட்டப்படி நீங்கள் உங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை செய்யாதுவிடலாம், ஆனால் மற்றவர்கள் அதை செய்யகூடாது என்று சொல்ல எமக்கு எந்த உரிமையும் இல்லையென்பதே நாடுகளின் சட்டம்.

வாழ்வு தந்த நாடுகளின் சட்டங்களை,அவர்களின் உரிமைகளை  மதிப்பவர்களாயிருந்தால் நீங்களும் ஒரு வாழ்த்தை தட்டிவிடலாம் தவறில்லை.

சட்டத்தை நான்  புரிந்து  கொள்கின்றேன் 

இப்படி  திருமணம்  எனக்கு  உறவான இடத்திலேயே  ஏற்கனவே  நடந்திருக்கிறது

(பெற்றோர் இன்றும் மன நெரிசலிலேயே  உள்ளனர்)

அதல்ல  கேள்வி?

இங்கே  வாழ்த்து சொல்லும்  எத்தனைபேர் மனதார அதை ஏற்று எந்த  வித  பாகுபாடுமற்று வாழ்த்தும் பக்குவத்துக்கு  வந்துள்ளனர்?? என்பதே???

என்னைப்பொறுத்தவரை இன்னும்  சில  தலைமுறை  போகணும்?

இப்ப  சொல்வதெல்லாம் தம்மை தயாராக்குதல்  மட்டுமே...

ஆனால்  தயாராகி  விட்டோம் என்று  வெளியில் காட்டுகிறார்கள்

உண்மை  நிலை அதுவல்ல என்பது  தான் நிஐம்

Edited by விசுகு
பிழை திருத்தம்
 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

 

ஒரு சிறு  சந்தேகம்

இதையே  உங்கள் பிள்ளை  செய்தால்??

எந்தவித உதறலுமற்று

இதேபோல்  வாழ்த்து  சொல்வீர்களா???

(ஒரு  உறவு என்ற  ரீதியில்  கேட்கிறேன் தவறாக இருந்தால்  பதில் தரவேண்டாம்)

எதுவித உதறுதலும் இருக்காது @விசுகுஐயா. பிள்ளைகள் வளரும் மேற்கு நாடுகளில் தன்பாலீர்ப்பினரை  விலக்கும் வழக்கம் அருகிக்கொண்டு வருகின்றது. எனினும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளும், இழிசொற்களால் திட்டுவதும் இன்னும் ஒழியவில்லை. 

பிள்ளைகள் தமக்குப் பிடித்தமான வாழ்வை அவர்களே தீர்மானிக்க விட்டுவிடவேண்டும் என்பதே என் கொள்கை. 

 

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

ஆனால் நான்கேட்ட கேள்வி வேறு  நிழலி

எந்தவித உதறலுமற்று

இதேபோல்  வாழ்த்து  சொல்வீர்களா???

வாழ்த்து சொன்னவன் என்றவகையில்.

உறுத்தலோடு வாழ்த்து சொல்லுவேன்.

அவர்கள் செய்தால், செய்வதில் எந்த தப்புமே இல்லை என்பதை நான் (முன்பு அல்ல) இப்போது நன்கு விளங்கி கொள்கிறேன். பாலியல் என்பது ஒரு தெரிவு அல்ல அது உள்ளார்ந்த உந்தல் (innate) என்பதை என் மனது ஏற்று கொள்கிறது. 

ஆனால் என் சமூகம் இன்னும் இந்த புரிதலுக்கு வரவில்லை என்ற உண்மையும் எனக்கு தெரியும். 

ஆகவே அவர்கள் இப்படி செய்தால், இந்த சமூகம் என்னையும், நான் சார்ந்தவர்களையும், அவர்களையும் இப்படி பேசு பொருளாக்கும் கேலி பேசும், யாழில் வந்து பல்லின் மேல் நாக்கை போட்டு இளிக்கும் என்பதும் எனக்கு விளங்கிறது.

ஆகவே நிச்சயம் இந்த சமூகத்யின் எதிர்வினையை இட்டு உறுத்தல்…..இல்லை பயம் இருக்கும்.

 • Like 1
 • Thanks 2
Link to comment
Share on other sites

22 minutes ago, விசுகு said:

ஆனால் நான்கேட்ட கேள்வி வேறு  நிழலி

எந்தவித உதறலுமற்று

இதேபோல்  வாழ்த்து  சொல்வீர்களா???

கண்டிப்பாக விசுகண்ணா. இதில் எனக்கு எந்த உறுத்தலும் இல்லை. என் பிள்ளைகள் தவறான வழியில் சென்று (போதைப் பொருள் பாவனை போன்ற), தவறான வழியில் பணம் ஈட்டினால் தான் உறுத்தலும் கவலையும் ஏற்படும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு முரண்நகை - இந்த பெண்கள் இருவரும் மிக தைரியமாக தமது பாலின தெரிவை முன்னிலைபடுத்துகிறனர். ஒரு புரோகிதர் பழைய வழக்கத்தை உடைத்து தன் முகத்தை காட்டி இதை செய்து வைக்கிறார். துணிச்சல் மிக்க செயல்.

ஆனால் இதை கேலி பேசும் பலர் இந்த கேலியை சொந்த பெயரில் செய்ய முடியாது. செய்தால் இருக்கும் நாட்டில் சட்டம் பாயும்.

இதில் யார் பேடி?

 • Like 1
Link to comment
Share on other sites

3 minutes ago, goshan_che said:

 

ஆகவே நிச்சயம் இந்த சமூகத்யின் எதிர்வினையை இட்டு உறுத்தல்…..இல்லை பயம் இருக்கும்.

என் உறவுகளில் ஒரு பிள்ளை தான் ஓரினச்சேர்க்கையாளர் என்றதை பெற்றோருக்கு மறைமுகமாக சொன்னார். அவர்களால் அவனை புரிந்து கொள்ள முடிந்தாலும், "என்ற சொந்தம் எல்லாம் எப்படி என்னை கேவலமாக பார்க்கும்" என்ற கடும் மனவுளைச்சலில் உள்ளார்.

மற்றவர்களின் எம்மைப் பற்றிய அபிப்பிராயம் என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் நாய் குலைப்பது போன்றது. திருப்பி உறுதியாக நின்றால் குலைக்கும் நாய் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிடும்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வாழ்த்துகள் என்று  சொல்லி என்னை  நானே  ஏமாற்ற  விரும்பவில்லை

இயற்கைக்கு எதிரானவற்றிற்கு  எதிராக  குரல்  கொடுக்க  பின்னிற்கக்கூடாது

அது  நாளை நம் கதவை  தட்டும்?😢

 
அண்ணா தட்டினால் திறப்பது தான் எமது பண்பாடு.  வளமாக வாழ வாழ்த்துவோம். 

Link to comment
Share on other sites

பொதுவாக யாழ் இணையத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்கையில் நிகழும் சம்பவங்கள்,வைபங்கள், சொந்த விடயங்கள் பற்றி இணைப்பதை தவிர்க்க சொல்வதுண்டு. தனிப்பட்டவர்களின் தனியுரிமையை அது மீறுகின்றது என்பதனால். ஆனால் இந்த பெண்களின் திருமண விடயம் புலம்பெயர் தமிழ் செய்தித் தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்படுவதாலும், கட்டுண்ட சமூகம் ஒன்று கட்டுடைப்பை செய்ய எத்தனிப்பதை வெளிக்காட்டுவதாலும் பண்பான முறையில் தொடர்ந்து கருத்தாடுவது ஆரோக்கியமானது என நினைக்கின்றோம்.

Link to comment
Share on other sites

14 minutes ago, விசுகு said:

சட்டத்தை நான்  புரிந்து  கொள்கின்றேன் 

இப்படி  திருமணம்  எனக்கு  உறவான இடத்திலேயே  ஏற்கனவே  நடந்திருக்கிறது

(பெற்றோர் இன்றும் மன நெரிசலிலேயே  உள்ளனர்)

அதல்ல  கேள்வி?

இங்கே  வாழ்த்து சொல்லும்  எத்தனைபேர் மனதார அதை ஏற்று எந்த  வித  பாகுபாடுமற்று வாழ்த்தும் பக்குவத்துக்கு  வந்துள்ளனர்?? என்பதே???

வாழும் உலகத்தை பொறுத்து எமது புரிதல்கள் வேறுபடுகின்றன.

இலங்கையில் இருந்திருந்தால் நிச்சயமாக பலர் இதற்கு வாழ்த்து சொல்லவேமாட்டார்கள், கேலிதான் பண்ணுவார்கள். இவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பார்கள்.

ஏனெனின் ஆணும் பெண்ணும் காதல் செய்தாலே சாதி மதம் மொழி ஏரியா அந்தஸ்து என்று பிரித்து பார்க்கும் சமூகம் நாம்.

இதை எல்லாம் விட்டு வைப்போமா?

ஆனால் புலம்பெயர்ந்தபின் அடுத்தவன் உணர்வை உரிமையை மதிக்கணும் எமக்கு சம்பந்தமில்லாத விசயங்களில் தலையிடகூடாது,  

இரு உயிர்கள் வாழ பிற உயிர்களின் அனுமதி தேவையில்லை போன்ற பல நாகரிகங்களை விரும்பியோ விரும்பாமலோ கடைபிடிக்கிறோம் அல்லது கடைபிடிக்க சொல்லி அறிவுறுத்தபடுகிறோம் அதனால், அந்த வாழ்வை நாம் விரும்பாவிடினும் அடுத்தவர் வாழ்க்கைமுறையை குறை சொல்லவேண்டிய தேவை நமக்கு இல்லை என்பதே என் எண்ணம்.

ஆனால் எம் சமூகத்தில் இதுபோன்ற உறவுமுறைகள் ஏற்படும்போது அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் பழக்கம் ஏற்பட பல தசாப்தங்கள் கடந்தாலும் முழுமையாக ஒருபோதும் ஏற்படாது என்ற உங்கள் கருத்து சரிதான்.

ஒரு பொது விழாக்கள் ஒன்றுகூடல் இடங்களில் நின்றபடி எம் பெற்றோர்,

என் மகன் ஒரு கம்பி காய் என்றோ..என் மகள் ஒரு சாப்பை என்றோ பெருமையாக பிறருக்கு சொல்லி கொள்ளும் நிலை எம் சமூகத்தில் இன்னும் பல தசாப்தங்களுக்கு சாத்தியமில்லை என்பது மட்டும் நிதர்சனம்.

Link to comment
Share on other sites

 • நியானி changed the title to கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்
 • நிழலி locked this topic
Guest
This topic is now closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.