Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

மேலும்: பிரபாவிடம் நீங்கள் கேட்ட "பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக அமைந்து விடாதா?" என்ற கேள்விக்கு என் பதில்! - இது சகஜமான விடயமென பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டும். அவ்வாறு தெரிந்தாலும், வளர்ந்த பிள்ளைகள் தங்கள் sexual orientation இனை  இதை வைத்து கட்டாயமாக மாற்றிக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் இது நீங்கள் நினைப்பது போல ஒரு பேஷன் அல்ல!

மேலும், இவ்வாறு ஓரின உறவு சகஜம் என்று அறிவூட்டப் படாத பிள்ளைகள் தான் மேலே வளவன் இணைத்த செய்தியில் இருக்கும் வெறுப்பாளர்களாகவும் வன்முறையாளர்களாகவும் மாறுகிறார்கள். எனவே இது இளம் பிள்ளைகளிடையே சகஜமான விடயமாக காட்டப் படுவது நன்மையே! 

நீங்கள் எங்கேயோ போய்விட்டீர்கள் ஜஸ்டின். பாடசாலைகளில் Sex  Education சிறுவயதிலிருந்தே படிப்பிக்கிறார்கள் என்பதற்காக pornography படங்களை பிள்ளைகளுடன் கூட இருந்து பார்க்கலாம் என்று சொல்லாதமட்டும் ஒகே! வாழ்க வளமுடன்.🙏

Link to comment
Share on other sites

 • Replies 386
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பிரபா சிதம்பரநாதன்

மறுக்கிறீர்கள் எப்படியென்றால் அவர்கள் தயக்கத்துடனும் பயத்தைடனும் வாழ வேண்டும் என்ற கருத்தின் மூலம். இதற்கான பதில், இருக்காது ஏனெனில் இவை இங்கே இந்த சமயசடங்குகளிற்கு போய்தான் அறியவேண்டுமென்பதில்

Sasi_varnam

இந்த ஜோடிகளை போன்ற ஏனைய ஓரினசேர்கையாளருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று கூறுபவர்கள் தான் அவர்களின் படங்களையும் திரும்ப திரும்ப போட்டு பிரசித்தியடைய செய்கிறார்கள். திரி 16 பக்கம் கடந்துட்டு

அக்னியஷ்த்ரா

இப்போ என்ன யாழ் களம் இதனை வரவேற்று எல்லோரும் எழுதவேண்டும் என்று தானே எதிர்பார்க்கிறது,  இயற்க்கை ஆணுக்கு ஆணுக்குரிய பாலியல் உறுப்புகளையும் ,பெண்ணுக்கு பெண்ணிற்குரிய பாலியல் உறுப்புகளையும் மனிதர்களது

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

நீங்கள் எங்கேயோ போய்விட்டீர்கள் ஜஸ்டின். பாடசாலைகளில் Sex  Education சிறுவயதிலிருந்தே படிப்பிக்கிறார்கள் என்பதற்காக pornography படங்களை பிள்ளைகளுடன் கூட இருந்து பார்க்கலாம் என்று சொல்லாதமட்டும் ஒகே! வாழ்க வளமுடன்.🙏

இதற்கும் நாம் பேசுவதற்கும் தொடர்பில்லையே? ஏன் இங்கே porn வருகிறது?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

நான் குறிப்பிடும் தரவுகள் empirical. எங்கள் நாட்டில் மட்டுமல்லாமல்  மேற்கு நாடுகளில் நீண்ட கால உறவில் வாழ்வோர். ஹொஸ்ரல் கதைகளுக்கும் மேற்கு நாடுகளில் மணம் முடித்து வாழும் இணைகளுக்குமிடையே ஒளியாண்டு தூரம்! 

ஒளியாண்டு தூரமெல்லாம் போகவேண்டாம் ஜஸ்டின்,  உங்கள் empirical தரவுகளின்படி ஓரின சேர்க்கை உடையவர்களினதும், அவர்களில் காலம் முழுக்க சேர்ந்து வாழ்பவர்களின் தரவுகளையும் தாருங்களேன்!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

ஒளியாண்டு தூரமெல்லாம் போகவேண்டாம் ஜஸ்டின்,  உங்கள் empirical தரவுகளின்படி ஓரின சேர்க்கை உடையவர்களினதும், அவர்களில் காலம் முழுக்க சேர்ந்து வாழ்பவர்களின் தரவுகளையும் தாருங்களேன்!!

 அப்படி அவர்கள் வாழ்வதில்லையென்று முதலில் சொன்னவர் நீங்கள். தரவுகள் இருந்த படியால் தானே சொன்னீர்கள்? எனவே நீங்கள் தான் தரவேண்டும்! 

empirical என்பதன் அர்த்தம் புரிந்தால் நீங்கள் இதைக் கேட்டிருக்க மாட்டீர்களென நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

 அப்படி அவர்கள் வாழ்வதில்லையென்று முதலில் சொன்னவர் நீங்கள். தரவுகள் இருந்த படியால் தானே சொன்னீர்கள்? எனவே நீங்கள் தான் தரவேண்டும்! 

நான் சொன்னது எனது கண்முன்னே நடந்தவைகளை, கேட்டவைகளையும் கொண்டே!  அதே empirical.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

இங்கே எம் மீது கொட்டப்பட்ட அனைத்து அவமதிப்புக்களையும் கண்ணை மூடி கடந்து வந்த தங்களின் மன ஓட்டத்தை மெச்ச வார்த்தைகள் வரவில்லை. நன்றி. 

தமிழ்  உணர்வு, தேசியம் பற்றி கதைக்கும் விவாதங்களில் எனக்கு சரி என பட்டதை ஆதரித்தும், எனக்கு பிழை என பட்டதை விவாதித்தும், எதிர்த்தும், சில பல  தெரியாத விடயங்களை உள்வாங்கிக்கொண்டும் தான் நான் எழுதுகிறேன்.
 "கற்றுக்கொண்டால் குற்றமில்லை" என்பதுதான் எனது சித்தாந்தம்.
இந்த திரியும் கூட அப்படியே. நான் 4 காணொளிகள் பதித்தேன் அவ்வளவும் தன்பாலின உணர்வு கொண்டவர் பற்றியது. நானும் கூட இந்த திரியின் மூலம் நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டேன். இதில் தனிநபர் தாக்குதல், அவமதிப்புகள் இருந்தால் கட்டாயம் நிர்வாகம் அதை கவனத்தில் எடுக்கும் என்று திடமாக நம்புகிறேன்.
தொடர்ந்து பேசுவோம். 
யாதும் ஊரே யாவரும் கேளீர் .. அன்பே எங்கள் உலக தத்துவம்.🙏

Link to comment
Share on other sites

34 minutes ago, Eppothum Thamizhan said:

சுண்டிக்குளி, வேம்படி, girls ஹாஸ்டல், boys ஹாஸ்டல் என்று ஓரினச்சேர்க்கைக்கு தாராளமான தரவுகள் தந்தாகிவிட்டது ஜஸ்டின்! அவர்கள் அதை காலாகாலமாக தொடரவில்லையே!!

சுண்டிக்குளி, வேம்படி, Girls hostel பற்றி நீங்களும் வேறு சிலரும் இங்கு கூறுபவை தரவுகள் அல்ல.  அவை யாழ்பாணத்து விடுப்பு கதை பேசும் வம்புகளின் கொசிப்புகள். அந்த கொசிப் கதைகளை இங்கு பேசுவதே அக்கதைகளை உருவாக்கிய வக்கிரம் படைத்தவர்களை போன்றதே. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Sasi_varnam said:

12 Animals That Reproduce Asexually

https://www.treehugger.com/animals-that-reproduce-asexually-5112566

பெண்துணை / கலவி இன்றிழும் கூட சந்ததி பெருக்கும் 12 உயிரினங்கள் --> இயற்கை மிக நுட்பமான அட்புதமான விடயம். இது இப்படித்தான் என்று வரையறை போடுதல்  எல்லா சந்தர்ப்பத்திலும் பொருந்துமா?

அண்ணே.. reproduction இல் அடிப்படையில் இரண்டு வகை உண்டு. Asexual and Sexual reproduction. இது இனப்பெருக்கமே செய்யத் தகுதியற்ற இணைவுக்கு பொருந்தாது கண்டியளோ. 🤣

1 hour ago, nedukkalapoovan said:

உண்மையில்.. இது சில மரபணுத் திரிபுகள் சார்ந்து.. உடல் இரசாயனத் தூண்டல் மூளையில் ஏற்படுத்தும்.. இயல்புக்கு மாறான தூண்டற் பிறழ்வுகள் சார்ந்து (abnormality) மற்றும் சூழல் சார்ந்து ஏற்படுத்தப்படும் ஒரு பழக்கம் என்பதே இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.

அந்த வகையில்.. இவர்களின் உயிரியல் வாழ்க்கை நிலை மனிதர்கள் என்ற வகைக்குள் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.. என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்களின் நடத்தையியலை அவர்கள் தங்கள் மட்டில் மட்டுப்படுத்தி வைத்துக் கொள்வதையும் உலகம் எதிர்க்கவில்லை.

ஆனால்.. இதை ஒரு பொது நடத்தையாக.. ஒரு பொது சமூக ஒழுங்காக காட்ட நினைக்கும் கோமாளிகளால் தான்.. இவர்களுக்குப் பிரச்சனை என்பதே நிஜமாகும். யார் இந்தக் கோமாளிகள் என்றால்.. தங்களை தாங்களே சமூக சீர்திருத்தவாதிகள் என்று விளம்பரம் தேடப் பறைசாற்றித் திரிபவர்கள் தான். 

1 hour ago, Justin said:

ஒரு ஜீன் வடிவத்தில் இருந்தால் தான் அந்த இயல்பு இயற்கையால் தப்ப வைக்கப் படுகிறது என்ற  கருத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை! இது இங்கே இருக்கும் பெரும்பாலானோருக்கு ஜீன்கள் பற்றிய உயிரியல் புரியாது என்ற நம்பிக்கையில் எழுதியிருக்கிறீர்கள் போல! 

ஏலவே இக்கருத்திற்கு பதில் அளிக்கப்பட்டாயிற்று. வாசிக்கல்லப் போல. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில்   14    பக்கம் தாண்டி

தாண் டி வெற்றிகரமாக 

ஓடிக்கொண்டிருக்கும்  திரைப்படம் 

தன்பால்ஈர்ப்பின   பெண்களின் திருமணம் 

 "போய்  வேறு வேலையை பாருங்கப்பு" 

😡😡😡

Edited by நிலாமதி
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் அறிய யாரும் இங்கே தன்பாலின கவர்ச்சி உள்ளவர்களை இனம் காண தனியான மரபணு இருக்கிறது என்றோ அல்லது இது மரபணு அடிப்படையில் அமைந்தது என்றோ எழுதவில்லை.

அப்படி இருந்தால் இதே ஆட்கள் அது ஒரு மரபணு பிறழ்வு என்றும் வாதாடுவார்கள்.

இயற்கையானது எல்லாத்துக்கும் மரபணுவில் footprint இருக்கும் என்பது இல்லை. 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Sasi_varnam said:

தமிழ்  உணர்வு, தேசியம் பற்றி கதைக்கும் விவாதங்களில் எனக்கு சரி என பட்டதை ஆதரித்தும், எனக்கு பிழை என பட்டதை விவாதித்தும், எதிர்த்தும், சில பல  தெரியாத விடயங்களை உள்வாங்கிக்கொண்டும் தான் நான் எழுதுகிறேன்.
 "கற்றுக்கொண்டால் குற்றமில்லை" என்பதுதான் எனது சித்தாந்தம்.
இந்த திரியும் கூட அப்படியே. நான் 4 காணொளிகள் பதித்தேன் அவ்வளவும் தன்பாலின உணர்வு கொண்டவர் பற்றியது. நானும் கூட இந்த திரியின் மூலம் நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டேன். இதில் தனிநபர் தாக்குதல், அவமதிப்புகள் இருந்தால் கட்டாயம் நிர்வாகம் அதை கவனத்தில் எடுக்கும் என்று திடமாக நம்புகிறேன்.
தொடர்ந்து பேசுவோம். 
யாதும் ஊரே யாவரும் கேளீர் .. அன்பே எங்கள் உலக தத்துவம்.🙏

அப்படி தானே ராசா எல்லோரும் அறிந்து தெரிந்து

அறிந்ததை தெரிந்ததை எழுதி வருகின்றார்கள்.

அப்புறம் எதுக்கு ஒரு பக்க கருத்தாளர்களின் சொற்களை மட்டும் பொறுக்கி (ஹோமோபோபியா உள்ள பலரின் முகத்தை காட்டிய திரி இது. 
வாழ்த்தத் தேவையில்லை, கடந்து போவோம் என்ற நிலையை கூட நான் புரிந்து ஏற்றுக்கொள்கிறேன். 
அதற்கப்பால் எழுதப்பட்ட; தன்னின உறவுவைத்தோரை மொத்து மொத்தென்று போட்டார்கள், புட்டீன் படைகள் பின்னால் சென்று போட்டார்கள், எல்லா சட்டத்தையும் முதுகில் தூக்க அவசியம் இல்லை, அச்சம், நாணத்தால் அவர்களே இந்த உறவை துண்டிப்பார்கள், மிருகத்தோடும் படுக்க அனுமதிப்பீர்களா? இப்படியான பாலுணர்வு உள்ளவன் சைவனாய் இருக்க மாட்டான், இது ஒரு பிறழ்வு, குறை, போன்ற இது போன்ற பல கருத்துக்களை வெளிச்சம் காட்டிய திரியும் இது தான்.) இப்படி கண்மூடித்தனமாக ஒரு சிலரை குறி வைத்து எழுதுகிறீர்கள்??

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2021 at 16:44, Nathamuni said:

என்னெண்டா.....

…ஒண்டுமில்லை... 

சொன்னாப்போல.... அய்யா, மோனோட வந்திட்டார் போலை கிடக்குது.....

லண்டனிலும் இப்ப மகன் அல்லது தொட்டாட்டு வேலைக்கு இன்னொருவரோடுதான் ஐயர் வாறது.

On 28/9/2021 at 17:07, valavan said:

ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

சந்நியாசந்தான். வேறென்ன.???

😀😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது அது அவர்கள் விருப்பம். ஆனாலும் எல்லோராலும் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் சரி. ஆனால் இரு பெண்களாகட்டும் அல்லது ஆண்களாகட்டும் ஒரு பெற்றோரை இழந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசை கொள்ளலாம். ஆனால் இவர்கள் தமக்குக் குழந்தை வேண்டும் என்பதற்காக ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு அந்தக் குழந்தை தாய் அல்லது தந்தை இன்றி வளரும்போது அந்தப் பிள்ளையின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்றுதான் நான் எண்ணிப் பார்க்கிறேன். ஓரினச் சேர்க்கையாளர்களை நான் எதிர்க்காவிட்டாலும் அவர்கள் தமக்கான குழந்தையை உருவாக்குவதை நான் கண்டிக்கிறேன்.

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

ஒருவர் தமிழ். மற்றவர் பஞ்சாபி என (நிச்சயமாக இந்தியர்) நினைக்கிறேன்.

தகவலுக்கு நன்றி நுணாவிலன்.

20 hours ago, nunavilan said:

திருமணத்துக்கு  ஒரு பஞ்சாபியையும் காணவில்லை

கனேடிய ஈழத்தழிழர்கள் இயற்கைகை நிகழ்வை  advance ஆக ஏற்றுக்கொள்ளுதல் எனக்கு பிடித்திருக்கிறது.

1 hour ago, tulpen said:

யாழ்பாணத்து விடுப்பு கதை பேசும் வம்புகளின் கொசிப்புகள். அந்த கொசிப் கதைகளை இங்கு பேசுவதே அக்கதைகளை உருவாக்கிய வக்கிரம் படைத்தவர்களை போன்றதே. 

யாழ்பாணத்தில் செக்ஸ் கொசிப் கதைகள் இயற்றி  பேசுவதில் மிகவும் கெட்டிக்காரர்கள் என்று தெரிந்து இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

ஏலவே இக்கருத்திற்கு பதில் அளிக்கப்பட்டாயிற்று. வாசிக்கல்லப் போல. 

யார் இது பிறழ்வு மூளைச் சுரப்பென்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? நெடுக்கரும் தோழர்களும்?🤣

10 hours ago, Eppothum Thamizhan said:

நான் சொன்னது எனது கண்முன்னே நடந்தவைகளை, கேட்டவைகளையும் கொண்டே!  அதே empirical.

அதே தான் எனக்கும்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் அறிய யாரும் இங்கே தன்பாலின கவர்ச்சி உள்ளவர்களை இனம் காண தனியான மரபணு இருக்கிறது என்றோ அல்லது இது மரபணு அடிப்படையில் அமைந்தது என்றோ எழுதவில்லை.

அப்படி இருந்தால் இதே ஆட்கள் அது ஒரு மரபணு பிறழ்வு என்றும் வாதாடுவார்கள்.

இயற்கையானது எல்லாத்துக்கும் மரபணுவில் footprint இருக்கும் என்பது இல்லை. 

நெடுக்கர் சொல்வது போன்ற கருத்துடைய போலி விஞ்ஞானிகள் தான் நாசி ஜேர்மனியில் தன்னினச் சேர்க்கையாளர்களை "பிறழ்வுடையோர்" என கொன்றும் கொடுமையான மருத்துவப் பரிசோதனைகள் செய்தும் வதைக்கக் காரணமாக இருந்தனர். இந்த மன நிலை மாறாமல் இருப்பது ஒரு பயங்கரமான அதிசயம் தான் 👇

"..Homosexuals were subjected to medical experiments. A Danish endocrinologist, Carl Vaernet, castrated 18 homosexuals in the Buchenwald camp and then injected them with high doses of male hormones. The goal of the experiment was to discover whether they would be interested in the opposite sex following such procedures. The results remain unknown, since a yellow fever epidemic in the camp caused the experiment to be suspended. Vaernet carried out similar experiments at the Neuengamme camp.."

http://auschwitz.org/ 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது அது அவர்கள் விருப்பம். ஆனாலும் எல்லோராலும் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் சரி. ஆனால் இரு பெண்களாகட்டும் அல்லது ஆண்களாகட்டும் ஒரு பெற்றோரை இழந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசை கொள்ளலாம். ஆனால் இவர்கள் தமக்குக் குழந்தை வேண்டும் என்பதற்காக ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு அந்தக் குழந்தை தாய் அல்லது தந்தை இன்றி வளரும்போது அந்தப் பிள்ளையின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்றுதான் நான் எண்ணிப் பார்க்கிறேன். ஓரினச் சேர்க்கையாளர்களை நான் எதிர்க்காவிட்டாலும் அவர்கள் தமக்கான குழந்தையை உருவாக்குவதை நான் கண்டிக்கிறேன்.

உங்கள் கரிசனை நியாமானதுதான். ஆனால் இதற்க்கான விடை வரலாற்றில் உள்ளது. ஒரு காலத்தில் ஆண்-பெண் திருமண உறவுக்கு வெளியே பிறந்த பிள்ளைகளை இந்த சமூகம் மிக கீழ்தரமாக நடத்தியது. 

ஆனால் இப்போ? சிங்கிள் பேரெண்டின் பிள்ளைகளை யாரும் வித்தியாசமாக நடத்துவதில்லை.

அதே போல் எனது பிள்ளை 2ம்/3ம் ஆண்டில் இருக்கும் போதே like having a mummy and daddy, having two daddies or having two mommies is also natural and there is nothing wrong with that என்பது சொல்லி கொடுக்கப்படுகிறது (இதைதான் முன்பு இன்னொரு திரியில் லண்டனில் பிரைமறி ஸ்கூலில் மஞ்சள் புத்தகத்தில் இருப்பதை படிபிக்கிறார்கள் என இன்னொரு கள உறவு காமெடி பண்ணினார்).

பிள்ளைகளும் அதை ஏற்றே வாழ்கிறார்கள். எனது பிள்ளையின் பள்ளியில் இப்படி இரு அம்மாக்கள் உள்ள குடும்பம் ஒன்று உள்ளது - யாரும் அந்த பிள்ளையை தொந்தரவு செய்வதில்லை.

ஆனால் கண்ணாடி போடுதல், கட்டையாய் இருத்தல், geek, உடல் பருமன், தோல்நிறம், மதம் இப்படி இதுவும் சில குறுகிய கண்ணோட்டம் உள்ளவர்கள் இந்த பிள்ளைகளை வதைக்க ஒரு காரணியாக அமையும்.

ஆகவே இதுக்கு ஒரே வழி அறிவூட்டல்தான். 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

யார் இது பிறழ்வு மூளைச் சுரப்பென்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? நெடுக்கரும் தோழர்களும்?

Neuroendocrine Mechanisms and the Aetiology of Male and Female Homosexuality

Theories on the classification and aetiology of male homosexuality are reviewed, particularly recent hypotheses on the role of prenatal hormonal influences on brain sexual differentiation and subsequent sexual object choice in the male. Female as well as male brain sexual differentiation may be hormonally determined, and so primary homosexuality in both sexes may be due to abnormalities in foetal exposure to hormones, leading first to physical mis-differentiation and later to homosexual behaviour in genetically and phenotypically normal men and women.

https://www.cambridge.org/core/journals/the-british-journal-of-psychiatry/article/abs/neuroendocrine-mechanisms-and-the-aetiology-of-male-and-female-homosexuality/82AA01F0F8F9043BEAA3713ED67595C0#

உலகம் பூராவும் உள்ள ஆய்வாளர்கள் எல்லாம் போலி.. யாழில் உள்ள ஒரு சிலர் மட்டும் தான் உண்மை. ஒருவேளை  கோவேறு கழுதை மூளையை ஆராய்ந்தால்.. இந்தப் பித்தலாட்டக் கருத்துக்களுக்கு விடை கிடைக்குமோ என்னமோ..?! 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இந்த பெண்கள் இருவரும் அதே இடத்தில் அதே தினம் ஐயார்  இல்லாமல் மாலையை  மாற்றி  பல படங்கள் எடுத்து   Facebook...You Tube....போன்ற தளங்களில் போடுவதான் மூலமும்.  விளம்பரம் செய்திருக்க முடியும்  இதையும் எமது குழந்தைகள் பார்க்க தான் போகிறார்கள்   உங்களால் தடுக்க முடியுமா?இல்லை அல்லவா 

சரியான கேள்வி கேட்டீர்கள் கந்தையா அண்ணா. ஆனால் பழமைவாதிகளோ தன்னின சேர்க்கையாளர்களை மிரட்டி பயமுறுத்த வேண்டும் என்று தான் இப்படி செய்கிறார்கள். ரஷ்ய கோத்தபாயவான புட்டின் தன்னின சேர்க்கையாளர்களை ஒடவிட்டு பின்பக்கம் உதைத்த காரணத்தால் உள்ளம் கவர்ந்த தலைவராகிவிட்டார். அவர்களை கண்டால் மொத்து மொத்தென்று மொத்த வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

4 hours ago, Kandiah57 said:

அந்த பெண்கள் இந்து சமயத்தில் உள்ள பற்று காரணமாக ஐயார் மூலம்  செய்துள்ளனர் 

உண்மை தான்.   இப்படி கொஞ்ச பேரை ஒதுக்கிவிட  மிகுதியை சாதி பார்த்து குறைந்தவர்கள் என்று ஒதுக்கிவிட...

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

TORONTO -- Toronto Police Services (TPS) have made an arrest in connection with an incident in which a man received threatening calls after performing a religious ceremony.

Toronto resident Umananthini Nishanathan, 47, has been charged with one count of uttering threats and one count of criminal harassment.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

https://imgur.com/a/yAUQ4Lk

டொரோண்டோ போலீசின் குற்றப்பதிவு இணைத்திருக்கிறேன், என்ன காரணமோ படமாக பதிவில் தெரியவில்லை. 
போலீசால் தரப்பட்ட அந்த தொலைபேசி இலக்கத்திலும் நான் எடுத்து செய்தியின் உண்மையை உறுதி செய்திருக்கிறேன். 
இவ்வளவுக்கும் குற்றம் சாட்டப்பட்ட அந்த அம்மணி ஒரு தமிழ் வழக்கறிஞராம்!!!
மடமையின்  உச்ச மகுடம் இந்த அம்மணி. 
ரேடியோ நிகழ்ச்சியில் வந்து சடங்கு நடாத்திக்கொடுத்த ஐயாவை வறுத்தெடுத்ததும் இவராக இருக்கலாம்.  சரியாக தெரியவில்லை. 

நேற்று எழுதிய விடயம்தான் "பொல்லை கொடுத்து அடிவாங்கிய கதை"
ஒரு நாடு சட்டம் ஒன்றை இயற்றி அதை அமுலுக்கு கொண்டுவந்தால், நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். 

Edited by Sasi_varnam
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

யாழ்களத்தில்   14    பக்கம் தாண்டி

தாண் டி வெற்றிகரமாக 

ஓடிக்கொண்டிருக்கும்  திரைப்படம் 

தன்பால்ஈர்ப்பின   பெண்களின் திருமணம் 

 "போய்  வேறு வேலையை பாருங்கப்பு" 

😡😡😡

என்ன செய்ய ஒன்றை செய்தாலும் பிழை செய்யவில்லை என்றாலும் பிழை. 

யாழுக்கு ஒருவரும் வரவில்லை என்றாலும் பேசுவீர்கள் எல்லோரும் வந்தாலும் பேசுறீங்களே?😂🤣

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சந்நியாசந்தான். வேறென்ன.???

ஆமாம் நல்லது இந்தியாவில் உள்ள நித்தியானந்தாவின் சந்நியாசம்போல் எனில் ஆண்கள் எல்லோரும் விரும்புவர்கள் 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது அது அவர்கள் விருப்பம். ஆனாலும் எல்லோராலும் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் சரி. ஆனால் இரு பெண்களாகட்டும் அல்லது ஆண்களாகட்டும் ஒரு பெற்றோரை இழந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசை கொள்ளலாம். ஆனால் இவர்கள் தமக்குக் குழந்தை வேண்டும் என்பதற்காக ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு அந்தக் குழந்தை தாய் அல்லது தந்தை இன்றி வளரும்போது அந்தப் பிள்ளையின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்றுதான் நான் எண்ணிப் பார்க்கிறேன். ஓரினச் சேர்க்கையாளர்களை நான் எதிர்க்காவிட்டாலும் அவர்கள் தமக்கான குழந்தையை உருவாக்குவதை நான் கண்டிக்கிறேன்.

வெரி சிம்பிள் விளக்கம்.👍🏽

சும்மா பந்தி பந்தியாக விளக்கம் இப்படியான  நடத்தைகளுக்கு தேவையில்லை. :)

Link to comment
Share on other sites

6 hours ago, Kandiah57 said:

ஜேர்மனியில் Standesamt.  என்ற காரியாலயத்தில் பதிவு செயது. தான் திருமண எழுத்து எழுத முடியும்    கனடாவில் ஐயார்மாரும். அனுமதி பெற்று வீட்டில் மண்டபம்...என.  திருமணம். எழுதுவதாக அறிந்தேன்.  இந்த திருமணம் யார் எழுதியது  மேற்படி ஐயாரா.? எழுத முடியாது என அவர் மறுக்க முடியாது என நினைக்கிறன் அப்படி மறுத்தால். .....சம்பத்தப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்யும்போது அனுமதி இரத்து செய்யப்படும் எனவே அவர் எழுதியிருத்தால் சடங்கும் செய்ய கடமைப்பட்டிருக்கிறார்.  இதுபற்றி  மேலதிக தகவல்களை கனடா வாழ். யாழ்கள உறவுகள் அறியத்தருவார்கள். என நம்புகிறேன் 

கனடாவில் ஐயருக்கு  திருமண எழுத்தை நடாத்தி முடிக்க உரிமம் (license) உள்ளவர்களை கண்டுள்ளேன்.அதாவது சமய  கிரியைகள் முடித்தவுடன் அவரே எழுத்தை முடித்து வைப்பார்.  பிறிதொரு நாளில் மேற்கு நாட்டு முறைப்படி கேக் வெட்டி தண்ணி அடித்து (அடிப்பவர்கள்) நடனமாடி திருமணம் இனிதுறும். இப்போதையை  Trend இது தான் கனடாவில். மேற்படி ஐயருக்கும் அந்த உரிமம் இருக்குமென நம்புகிறேன்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

கனடாவில் ஐயருக்கு  திருமண எழுத்தை நடாத்தி முடிக்க உரிமம் (license) உள்ளவர்களை கண்டுள்ளேன்.அதாவது சமய  கிரியைகள் முடித்தவுடன் அவரே எழுத்தை முடித்து வைப்பார்.  பிறிதொரு நாளில் மேற்கு நாட்டு முறைப்படி கேக் வெட்டி தண்ணி அடித்து (அடிப்பவர்கள்) நடனமாடி திருமணம் இனிதுறும். இப்போதையை  Trend இது தான் கனடாவில். மேற்படி ஐயருக்கும் அந்த உரிமம் இருக்குமென நம்புகிறேன்.

நீங்கள் ஒரினச்சேர்க்கையளார்  எனவே நான் எழுத முடியாது என்று அவர் கூற முடியாது அல்லவா?.  உங்கள் பதிலுக்கும் நேரத்திற்கும் நன்றி 

Link to comment
Share on other sites

 • நியானி changed the title to கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்
 • நிழலி locked this topic
Guest
This topic is now closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.