Jump to content

இலங்கை மீது இந்தியா அத்துமீறுவதாக தெரிவித்து ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக ஜெனிவாவினுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக நேற்றுமுன்தினம் மாலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு முன்னால் இந்தியாவிற்கு எதிரான எதிர்ப்பு  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

IMG-20210929-WA0021.jpg

இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்தியா தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை உலக அரங்கில் தக்கவைத்துக் கொள்வதற்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் உள்ள பெரிய, சிறிய  நாடுகளையெல்லாம் தங்களுடைய (இந்தியா) கண்பார்வையில் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும் அதாவது இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற  நாடுகளையெல்லாம் தொடர்ந்து தங்களுடைய (இந்தியா) கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவுடன் இணைந்து கொண்டு இந்த நாடுகளுடைய விடையங்களில் எல்லை மீறி தலையிட்டுக்  கொண்டு வருகிறார்கள் எனும் குற்றசாட்டு உலக அரங்கில் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.

IMG-20210929-WA0022.jpg

மேலும் அந்த அறிக்கையில்,

இந்தியாவுக்கு கட்டுப்படாத நாடுகளுக்குள் தங்களுடைய புலனாய்வுப் பிரிவினரை பயன்படுத்தி இன மோதல்களை ஏற்படுத்துவது, ஆயுத குழுக்களை உருவாக்குவது, கூலிப்படைகளுக்கு பணம் கொடுத்து குண்டு வெடிப்புகளை ஏற்படுத்துவது போன்ற இவ்வாறான விடயங்களை செய்து வருவது இந்தியாவுடைய நாற்பது, ஐம்பது வருட கால வரலாறுகளில் இருந்து தெரியவருகிறது; இதில் ஒரு பின்னணிதான் எல்டிடிஈ (LTTE) பயங்கரவாதிகளுக்கும் - இலங்கை அரசுக்கும் ஏற்பட்ட யுத்தம் இந்த யுத்தம் நீண்ட காலமாக நீண்டு செல்வதற்கும், அவர்களுக்குப் (LTTE) பின்னால் முழுமையாக நின்று செயல்பட்டது இந்தியா என்பதும் மறைக்கப்பட்ட ஒரு உண்மையாகும் என்கின்றனர் அரசியல் அவதானிகள்.

IMG-20210929-WA0019.jpg

அதுமட்டுமல்லாமல்  யுத்தத்திற்குப் பின்னால்  இலங்கையினுடைய விடயங்களில் டயஸ்போரா அமைப்பை மிகவும் ஒரு பலமான அமைப்பாக பலப்படுத்தி உலக நாடுகளில் இலங்கைக்கு எதிராக செயற்படுவதற்கு பாரிய உதவிகளை செய்து வருகிறார்கள் (இந்தியா) ; மேலும் இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு பின்னால் முழுமையாக ஈடுபட்டிருப்பது இந்திய ரோ அமைப்பும், இந்திய அரசும் என்பது எமது இலங்கையிலுள்ள புலனாய்வுப் பிரிவினருக்கு மட்டுமன்றி இலங்கையிலுள்ள 90 சதவீதமான மக்களுக்கும் தெரியவந்துள்ளது. அத்துடன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் மிக முக்கியமான சூத்திரதாரிகளில் ஒருவரான சாரா புலஸ்தீனி  என்பவளை மறைத்து பாதுகாத்து வைத்திருப்பதும் இந்தியா என்பது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்;  என்பது காற்றில் உலாவும் செய்தி. பலதடவைகள் அரச மற்றும் எதிரணி அரசியல்வாதிகளினால் ஊடகங்களில் பேசப்பட்டுவந்த செய்தியும் கூட.

IMG-20210929-WA0020.jpg

அது மட்டுமல்லாமல் ஏனைய அண்டைய நாடுகளில் நடக்கக்கூடிய அசம்பாவிதங்கள், ஏனைய பிரச்சினைகளாக இருக்கட்டும் அனைத்திற்குப் பின்னாலும் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர்தான் செயற்பட்டு வருகிறார்கள்; முக்கியமாக இவர்கள்(இந்தியா)  ஒவ்வொரு நாடுகளிலும் தங்களுடைய கூலிப்படைகளை பயன்படுத்துவதுடன், அந்த நாடுகளில் இருக்கும் தனியார் ஊடகங்கள் மற்றும் சிறு சிறு ஒரு சில அரசியல் கட்சிகள் போன்றவற்றிற்கு பணம் கொடுத்து அவர்களுடைய(இந்தியா) நிகழ்ச்சி நிரல்களுக்கு இயங்க வைப்பதும், சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்திற்கு  எதிராக செயற்படுவதற்கு கூலிப்படைகளை பயன்படுத்தி வருவது போன்ற விடயங்களை இவர்கள் (இந்தியா) செய்து வருகிறார்கள். எனவேதான்  தற்போது ஜெனிவாவில் ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில்  அதுவும் இலங்கை பற்றிய விடயங்கள்  அதிகம் பேசப்பட்டு வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கை மீது இந்தியா அத்துமீறுவதாக தெரிவித்து ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இத  

இந்தியாவுக்கு வந்த  சோதனை???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தி நடாத்தியவர்கள் யார்? 

நிச்சயம் புலிகளோ அவர்கள் சம்பந்தப்பட்டவர்களோ இல்லை 

1 hour ago, விசுகு said:

என்ன இத  

இந்தியாவுக்கு வந்த  சோதனை???

எனக்கு இது சந்தோசம் தரும் செய்தி என்ன நடக்கிறது என்று உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தி நடாத்தியவர்கள் யார்? 

இது இந்தியாவுக்கு எதிரானது என்பதால் பாகிஸ்தான் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இது இந்தியாவுக்கு எதிரானது என்பதால் பாகிஸ்தான் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது

இல்லை ..இது இலங்கை அரசின் வேலையேதான்...தமிழர்களின் போராட்டம் நடந்தல் .தமக்கு ஆப்பு என்றபடியால்...திசை திருப்பும் போராட்டங்களை அரசே நடத்தியது......அமெரிக்காவிலும் நடந்தது இதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

என்ன நடக்கிறது என்று உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் 

இது, அடிக்கடி இலங்கையைப்பார்த்து  இந்தியா கூறும்  வார்த்தையாயிற்றே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற் கிந்தியன் மொமென்ற்.😊

Screenshot-2021-09-29-08-33-47-031-com-a

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.