Jump to content

T 20 உலக கோப்பை 2021 செய்திகள்


Recommended Posts

ICC Cricket T20 World Cup 2021 Schedule, Team, Venue, Time Table, PDF, Point Table, Ranking & Winning Prediction

 

t20-world-cup-2021-news-640x359.jpg

 

ipl-2021-desktop.jpeg

ICC Men’s Cricket T20 World Cup 2021, the 7th T20 Cricket World Cup, has been scheduled between 17 October 2021 and 14 November 2021 in the UAE and Oman. Initially, the tournament was to be held in Australia from October 18 to November 15, 2020. However, in July 2020, the International Cricket Council (ICC) confirmed that the tournament had been postponed to 2021, due to the COVID-19 epidemic. In August 2020, the ICC reaffirmed India’s hosting of the 2021 tournament.

 

ICC Men’s T20 World Cup groups announced. Wow! India and Pakistan are in the same group. We all hope for a great battle between India and Pakistan on 24 October in UAE.

ICC Men’s Cricket T20 World Cup 2021 Stage, Group and Team Details:

Stage Group Terms
Round 1 Group A Sri Lanka, Ireland, the Netherlands and Namibia
Round 1 Group B Bangladesh, Scotland, Papua New Guinea and Oman
Super 12s Group 1 England, Australia, South Africa, West Indies, A1 and B2
Super 12s Group 2 India, Pakistan, New Zealand, Afghanistan, A2 and B

T20 World Cup 2021

The International Cricket Council (ICC) has taken the final decision on the host country for the Men’s T20 World Cup 2021 and made this clear that BCCI will retain hosting rights no matter where the event is played.

Due to the very bad COVID pandemic situation in India, IPL 2021 second leg is shifted to UAE. BCCI will host the T20 World Cup 2021 in UAE & Oman. A final decision on the T20 World Cup 2021 venue has been taken. ICC confirmed the tournament will be staged in the UAE and Oman.

 

There is two continuous T20 world cup in 2021 and 2022. The ICC Cricket Control Board announced in April 2018 that T20 World Cup 2021 will replace Champions Trophy 2021 which will be now 2022 in Australia.

T20 World Cup 2021 Schedule

 

Super12-Group-2-1-India.jpg Click on the image to view the full ICC Cricket T20 World Cup 2021 Schedule Pictures.

There are 8 teams in round 1 playing matches into 2 groups. Group A has Sri Lanka, Ireland, the Netherlands, Namibia and Group B has Bangladesh, Scotland, Papua New Guinea, Oman. From each group, 2 teams will qualify. These 4 teams later will join already qualified 8 teams (India, West Indies, England, Australia, New Zealand, South Africa, Pakistan and Afghanistan) in Super 12. Semi-finals to be played on 10 and 11 November. ICC Men’s T20 World Cup 2021 Final is likely to be played on November, 14.

T20 2020 World cup was postponed due to the Covid-19 until 2022 but T20 World Cup 2021 schedule should be the same as announced. I will keep updating as the tournament progress. You find below the match date, team, venue, round and group details.

 

All the match start times (hours) are given in India Standard Time (IST)

Round 1 Fixture:

Match No Date Match Centers Time Venue
1 17-Oct-21 Oman Vs Papua New Guinea 3:30 PM Muscat
2 17-Oct-21 Bangladesh Vs Scotland 7:30 PM Muscat
3 18-Oct-21 Ireland Vs Netherlands 3:30 PM Abu Dhabi 
4 18-Oct-21 Sri Lanka  Vs Namibia 7:30 PM Abu Dhabi 
5 19-Oct-21 Scotland Vs Papua New Guinea 3:30 PM Muscat
6 19-Oct-21 Oman Vs Bangladesh 7:30 PM Muscat
7 20-Oct-21 Namibia Vs Netherlands 3:30 PM Abu Dhabi
8 20-Oct-21 Sri Lanka  Vs Ireland 7:30 PM Abu Dhabi
9 21-Oct-21 Bangladesh Vs Papua New Guinea 3:30 PM Muscat
10 21-Oct-21 Oman Vs Scotland 7:30 PM Muscat
11 22-Oct-21 Namibia Vs Ireland 3:30 PM Sharjah
12 22-Oct-21 Sri Lanka  Vs Netherlands 7:30 PM Sharjah

Super 12 – Group 1 Fixture :

Match No Date Match Centers Time Venue
1 23-Oct-21 Australia Vs South Africa 3:30 PM Abu Dhabi
2 23-Oct-21 England Vs West Indies 7:30 PM Dubai
3 24-Oct-21 A1 Vs B2 3:30 PM Sharjah
4 26-Oct-21 South Africa Vs West Indies 3:30 PM Dubai
5 27-Oct-21 England Vs B2 3:30 PM Abu Dhabi
6 28-Oct-21 Australia Vs A1 7:30 PM Dubai
7 29-Oct-21 West Indies Vs B2 3:30 PM Sharjah
8 30-Oct-21 South Africa Vs A1 3:30 PM Sharjah
9 30-Oct-21 England Vs Australia 7:30 PM Dubai
10 01-Nov-21 England Vs A1 7:30 PM Sharjah
11 02-Nov-21 South Africa Vs B2 3:30 PM Abu Dhabi
12 04-Nov-21 Australia Vs B2 3:30 PM Dubai
13 04-Nov-21 West Indies Vs A1 7:30 PM Abu Dhabi
14 06-Nov-21 Australia Vs West Indies 3:30 PM Abu Dhabi
15 06-Nov-21 England Vs South Africa 7:30 PM Sharjah

Super 12 – Group 2 Fixture:

Match No Date Match Centers Time Venue
1 24-Oct-21 India Vs Pakistan 7:30 PM Dubai
2 25-Oct-21 Afghanistan Vs B1 7:30 PM Sharjah
3 26-Oct-21 Pakistan Vs New Zealand 7:30 PM Sharjah
4 27-Oct-21 B1 Vs A2 7:30 PM Abu Dhabi
5 29-Oct-21 Afghanistan Vs Pakistan 7:30 PM Dubai
6 31-Oct-21 Afghanistan Vs A2 3:30 PM Abu Dhabi
7 31-Oct-21 India Vs New Zealand 7:30 PM Dubai
8 02-Nov-21 Pakistan Vs A2 7:30 PM Abu Dhabi
9 03-Nov-21 New Zealand Vs B1 3:30 PM Dubai
10 03-Nov-21 India Vs Afghanistan 7:30 PM Abu Dhabi
11 05-Nov-21 New Zealand Vs A2 3:30 PM Sharjah
12 05-Nov-21 India Vs B1 7:30 PM Dubai
13 07-Nov-21 New Zealand Vs Afghanistan 3:30 PM Abu Dhabi
14 07-Nov-21 Pakistan Vs B1 7:30 PM Sharjah
15 08-Nov-21 India Vs A2 7:30 PM Dubai

ICC T20 World Cup 2021 Final & Semifinal Fixture:

Date Teams Semi-Final | Final Time
10 Nov 2021 TBC vs TBC 1st Semi-Final 7:30 PM
11 Nov 2021 TBC vs TBC 2nd Semi-Final 7:30 PM
14 Nov 2021 TBC vs TBC Final 7:30 PM

 

https://www.icccricketschedule.com/icc-cricket-t20-world-cup-2021-schedule-team-venue-time-table-pdf-point-table-ranking-winning-prediction/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரை நேரடியாக கண்டுகளிக்க சந்தர்ப்பம்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை கிரிக்கெட் இரசிகர்களுக்கு நேரடியாக கண்டுகளிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன்படி, இப்போட்டித் தொடரில் நடைபெறவுள்ள 45 போட்டிகளையும் நேரடியாக கண்டுகளிப்பதற்கான டிக்கெட் விநியோகம் நடவடிக்கையை கடந்த ஞாயிறு முதல் ஆரம்பித்துள்ளது.

t20_cricket1.jpg

இம்மு‍றை உலக இருபதுக்கு 20 தொடரானது ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகியன கூட்டாக நடத்துகிறது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் போட்டிகளை நேரடியாக கண்டுகளிப்பதற்கு 70 சதவீதமானோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதுடன், ஓமானில் நடைபெறும் போட்டிகளை பார்வையிடுவதற்கு 3000 பார்வையாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான சூழலுடன் இரசிகர்களுக்கு போட்டியை நேரடியாக கண்டுகொள்ள முடியும். 

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின்  பிரதான சுற்றுக்கு தகுதியை பெறுவதற்கான தகுதிகாண் சுற்றுத் தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதியன்றும் பிரதான சுற்று எதிர்வரும் 23 ஆம் திகயன்று ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, இலங்கை மற்றும் ஓமான் அணிகள் பங்கேற்கும் இரண்டு சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகள்  எதிர்வரும் 7 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெறுவுள்ளன. 

இதன் முதலாவது போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கும் ஆரம்மாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/114723

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக இருபத்துக்கு 20 கிரிக்கெட் தொடர் : போட்டி மத்தியஸ்தர்கள், நடுவர்களின் பெயர் வெளியீடு

(எம். எம். சில்வெஸ்டர்)

இம்மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள  உலக இருபத்துக்கு 20 கிரிக்கெட் தொடரில் கடமையாற்றவுள்ள போட்டி மத்தியஸ்தர்கள் மற்றும் போட்டி நடுவர்களின் பெயர்களை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ. சி. சி.) வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கையைச் சேர்ந்த ரஞ்சன் மடுகல்ல போட்டி மத்தியஸ்தராகவும் குமார் தர்மசேன போட்டி நடுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

icc1.jpg

ரஞ்சன் மடுகல்லவைத் தவிரவும் ஜவகல் ஸ்ரீநாத், டேவிட் பூன், ஜெப் க்ரோவ் ஆகியோர் உலக இருபதுக்கு 20 தொடரின் போட்டி மத்தியஸ்தர்கள்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, போட்டி நடுவர்களாக குமார் தர்மசேனவுடன் 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தர்மசேனவைத் தவிர, அலீம் டார், கிறிஸ் பிறவுன், மராய்ஸ் இரஸ்மஸ், கிறிஸ் கபானி, மைக்கல் கோ, ஏட்ரியன் ஹோல்ட் ஸ்ட்ரோக்ஸ், ரிச்சர்ட் இல்லிங்கவர்த், ரிச்சர்ட் கெட்டல்பிரோ, நித்தின் மேனன், ஹசன் ராசா, போல் ரைபல், லங்க்டன்  ரூசர், ரொட் டக்கர், போல் வில்சன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 17 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 14 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியம்  மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
 

https://www.virakesari.lk/article/114916

Link to comment
Share on other sites

தர்மசேனா தானே உலக கோப்பை இறுதி போட்டியில் (Uk vs Nz)நடுவராக செயற்பட்டவர்?🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்று நாளைய தினம்

எம்.எம்.சில்வெஸ்டர்

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்று நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தகுதிச் சுற்று ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளதுடன் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது போட்டியில் பப்புவா நியு கீனியா அணியை ஓமான் அணி எதிர்கொள்ளவுள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் இந்த தகுதிச் சுற்றில் தலா 4 அணிகள் இரண்டு குழுக்களில் போட்டியிடுகின்றன. குழு ஏயில் இலங்கை, அயர்லாந்து,நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.

அதேவேளை, குழு பீயில் பங்களாதேஷ், ஓமான்,ஸ்கொட்லாந்து, பப்புவா நியு கீனியா ஆகியன காணப்படுகின்றன. 

World_Cup.jpg

தத்தம் குழுக்களில் உள்ள ஒவ்வொரு அணியும் ஏனைய மூன்று அணிகளுடன் தலா ஒரு தடவை மோதவுள்ளதுடன், லீக் சுற்றின் நிறைவில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.

2018  ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதின்று சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் அணிகளது தரவரிசையின் படி முதல் 8 இடங்களைப் பிடித்த 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றன.  உலக இருபதுக்கு 20 பிரதான சுற்று எதிர்வரும் 23 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி தனது முதல் போட்டியில் நமீபிய அணியை எதிர்வரும் 18 ஆம் திகதியன்று போட்டியிடவுள்ளது.

இதனையடுத்து அயர்லாந்து அணியை 20 ஆம் திகதியன்றும், நெதர்லாந்து அணியை 22 ஆம் திகதியன்றும் எதிர்கொள்ளவுள்ளன. 

இலங்கை விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும். 

 

https://www.virakesari.lk/article/115397

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம் ; தெரிந்த போட்டிகளில் தெரியாத பல விடயங்கள்

(ஜெ.அனோஜன்)

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமன் நாடுகளில் நடத்தப்படும் 16 நாடுகள் கொண்ட இருபதுக்கு -20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (ஒக்டோபர் 17) அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. 

GettyImages-483071483

இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தின் தொடக்க போட்டியில் ஓமன் பப்புவா நியூ கினியாவை சந்திக்கிறது.

இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஓமானின் அல் அமரத் நகரில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பாமகும்.

இம்முறை டி-20 உலகக் கிண்ணத்தில் டுபாய் சர்வதேச மைதானத்தில் நவம்பர் 14 அன்று நடக்கும் இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 45 போட்டிகள் உள்ளடங்குகின்றன.

 

இலங்கை

நடப்பு டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் பயிற்சிப் போட்டிகள் அனைத்திலும் வென்றுள்ள இலங்கை நாளை (ஒக்டோபர் 18) நமீபியாவுக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை தகுதிகாண் போடியில் ஆரம்பிக்கும்.

ஒக்டோபர் 20 ஆம் திகதி அயர்லாந்துக்கு எதிராகவும், ஒக்டோபர் 22 ஆம் திகதி நெதர்லாந்துக்கு எதிராகவும் உலகக் கிண்ண தகுதிப் போட்டியில் இலங்கை 'ஏ' பிரிவில் விளையாடும்.

தகுதி சுற்றிலிருந்து அடுத்த 12 சுற்றுகளுக்கு முன்னேற இலங்கை நாளை முதல் தொடங்கும் மூன்று தகுதிகாண் போட்டிகளிலிருந்து இரண்டில் வெற்றி பெற வேண்டும். 

Image

 

நிலைகள்

போட்டிகள் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது - சுற்று 1, சூப்பர் 12 சுற்று மற்றும் நொக்அவுட்கள் (அரை இறுதி / இறுதி)

சுற்று 1 ; எட்டு அணிகள் இரண்டு குழுக்களாக போட்டியிடும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 நிலைக்கு முன்னேறும்.

சூப்பர் 12 ; தலா ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் நொக்-அவுட் நிலைக்கு முன்னேறும், நொக்-அவுட்டில் இரண்டு அரையிறுதி மற்றும் ஒரு இறுதிப் போட்டி இருக்கும்.

புள்ளி வழங்கும் முறை

ஒரு வெற்றியின் மூலம் அந்த அணி இரண்டு புள்ளிகளைப் பெறும். சமநிலை ஏற்பட்டால், முடிவு அல்லது கைவிடப்படாவிட்டால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொள்ளும். தோல்வியைத் தழுவினால் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.

ரிசர்வ் டே

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐ.சி.சி.) அரையிறுதி மற்றும் இறுதி இரண்டிற்கும் 'ரிசர்வ் டே'களை வைத்துள்ளது. வேறு எந்த போட்டிகளுக்கும் அந்த நாள் ஒதுக்கப்படவில்லை.

குழுக்கள்

சுற்று 1 

குழு ஏ : இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா

குழு பி : பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, பப்புவா நியூகினியா, ஓமான்

சூப்பர் 12 

குழு 1 : இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், குழு ஏ யில் முதலிடம் பெறும் அணி, குழு பி யில் இரண்டாம் இடம்பெறும் அணி.

குழு 2 : இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து, குழு ஏ யில் இரண்டாம் இடம்பெறும் அணி, குழு பி யில் முதலிடம் பெறும் அணி.

Image

Image

Image

பரிசு பணம்

போட்டிக்கான பரிசுத் தொகையாக ஒதுக்கப்பட்ட 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை அணிகள் பகிர்ந்து கொள்ளும்.

வெற்றியாளர்கள் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவார்கள், இரண்டாம் இடத்திற்கு 800,000 அமெரிக்க டொலர்களை கிடைக்கும். தோல்வியடைந்த அரை இறுதிப் போட்டியாளர்கள் இருவரும் 400,000 அமெரிக்க டொலர்களை பெறுவார்கள்.

சூப்பர் 12 சுற்று அணிகள் ஒவ்வொன்றும் 70,000 அமெரிக்க டொலர்களை பெறும். அதே சமயம் குழுவில் ஒரு போட்டியில் வெற்றி பெறும் அணி 40,000 அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கும்.

சுற்று 1 முடிவில் நான்கு அணிகள் நொக் அவுட் ஆனதும் 40,000 அமெரிக்க டொலர்களை பெறும். முதல் சுற்றில் ஒரு அணி வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டியிலும் 40,000 அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கும்.

இடங்கள்

இந்தப் போட்டிகள் டுபாய் சர்வதேச மைதானம், அபுதாபி ஷேக் சயீத் மைதானம் மற்றும் ஓமன் கிரிக்கெட் அகாடமி ஆகிய மூன்று மைதானங்கிளல் நடைபெறும்.

ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்தை இதுவரை வென்றவர்கள்

  • இந்தியா (2007)
  • பாகிஸ்தான் (2009)
  • இங்கிலாந்து (2010)
  • மேற்கிந்தியத்தீவுகள் (2012)
  • இலங்கை (2014)
  • மேற்கிந்தியத்தீவுகள் (2016)

மேலதிக குறிப்புகள்

  • இலங்கை விளையாடிய இறுதிப் போட்டிகளின் எண்ணிக்கை மொத்தமாக மூன்றாகும். அதிகமுறை இறுதிப் போட்டியில் விளையாடிய அணி.
  • டி-20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் விளையாடிய அரையிறுதி எண்ணிக்கை நான்காகும்.
  • இரண்டு முறை இறுதிப் போட்டியில் விளையாடிய சம்பியனான அணி மேற்கிந்தியத்தீவுகள் மட்டுமே ஆகும்.
  • டி-20 உலகக் கிண்ணத்தில் அதிகளவான சதங்களை விளாசிய வீரர் கிறிஸ் கெய்ல் ஆவார். அவர் 8 சதங்களை விளாசியுள்ளார். அதேநேரம் ஒரு தொடரில் இரண்டு முறை சதம் அடித்த ஒரே வீரரும் அவர் தான்.
  • ஒரு போட்டியில் அதிகளவான ஓட்டங்களை குவித்த வீரர் மெக்கலாம் ஆவார் (123). அவர் இந்த சாதனையை 2012 ஆம் ஆண்டில் பங்களாதேஷுக்கு எதிராக நிகழ்த்தினார்.
  • டி-20 உலகக் கிண்ணத்தில் மஹேல ஜெயவர்த்தனாவை விட அதிக ஓட்டங்கள் யாரும் எடுக்கவில்லை. அவர் 2007 - 2014 ஆம் அண்டு வரை விளையாடிய 31 போட்டிகளில் 1016 ஓட்டங்களை குவித்துள்ளார்.
  • இந்தியாவின் விராட் கோலி, இலங்கையின் திலகரத்ன டில்ஷான் மற்றும் மஹேல ஜெயவர்த்தன - ஒரே தொடரில் 300 ஓட்டங்களுக்கு மேல் அடித்த வீரர்கள் ஆவர்.
  • 2014 இல் கோஹ்லி 319 ஓட்டங்களையும், 2009 இல் டில்ஷான் 317 ஓட்டங்களையும், 2010 இல் ஜெயவர்த்தன 302 ஓட்டங்களையும் எடுத்தனர்.
  • அதிகளவான விக்கெட்டுகளை வீழ்த்திய சகலதுறை வீரர் ஷாஹித் அப்ரிடி ஆவார். அவர் 34 போட்டிகளில் 39 விக்கெட்டுகளை எடுத்துள்ளதுடன், 546 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
  • முதல் தடவயைாக ஹெட்ரிக் எடுத்த வீரர் பிரட் லீ ஆவார். அவர் 2007 இல் தொடக்க பதிப்பில் பங்களாதேஷத்திற்கு எதிராக இந்த சாதனையை புரிந்தார்.
  • தொடரில் அதிகளவிலான ஓட்டங்களை குவித்த அணி இலங்கை ஆகும். 2007 இல் இவர்கள் கென்யாவுக்கு எதிராக 260/6 ஓட்டங்களை பெற்றனர்.
  • தொடரில் மிகவும் குறைந்த அளவிலான ஓட்டங்களை (39) பெற்றுக் கொண்ட அணி நெதர்லாந்து ஆகும். அவர்கள் 2014 இல் இலங்கைக்கு எதிராக இந்த நிலையை எட்டினர்.

 

https://www.virakesari.lk/article/115442

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவங்க எல்லாம் பெரிய டீமா?.. சொல்லி அடித்து வென்ற கத்துக்குட்டி டீம்..
உலக கோப்பை டி 20 செம தொடக்கம்! By Shyamsundar I Updated: Monday, October 18, 2021, 16:34 [IST] Google Oneindia Tamil News சென்னை:
 
உலகக் கோப்பை டி 20 தொடர் நேற்று தொடங்கியது. ஐபிஎல் தொடர் முடிந்த அடுத்த நாளே டி 20 உலகக் கோப்பை தொடங்கி உள்ளது. தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. ஓமான் பப்புவா நியூ கினியா ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையில் முதல் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ஓமான் 13.4 ஓவரில் 131 ரன்கள் எடுத்து வென்றது.
 
இந்த போட்டிக்கு அடுத்து நடந்த வங்கதேச மேட்ச்தான் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. 
 
 
 இந்த தொடரின் இரண்டாவது ஆட்டமாக நேற்று வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 ஆட்டம் நடைபெற்றது. வங்கதேசம் கடந்த 10 வருடங்களில் மிகப்பெரிய அளவில் முன்னேறி உள்ளதால் கண்டிப்பாக இந்த போட்டியில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
பொதுவாக வங்கதேச அணியில் சில சர்வதேச தரத்திலான வீரர்கள் இருக்கிறார்கள். ஷாகிப், முஸ்தபிசர் போன்ற நல்ல வீரர்கள் உள்ளனர். ஐபிஎல் ஐபிஎல் ஐபிஎல் தொடரில் ஆடிய அனுபவமும் இவர்களுக்கு இருப்பதால் வங்கதேசம் நேற்று ஸ்காட்லாந்தை எளிதாக வீழ்த்தும் என்றே பலரும் நினைத்தனர்.
 
ஆனால் நேற்று ஸ்காட்லாந்து கோச் ஷேன் பர்கர் மட்டும் வங்கதேச அணியை நாங்கள் எளிதாக வென்றுவிடுவோம் என்று கூறி இருந்தார். அவர் அளித்த பேட்டியில், வங்கதேசம் எங்களை பொறுத்தவரை பெரிய அணி கிடையாது. பெரிய அணி பெரிய அணி வங்கதேசத்தை நாங்கள் பெரிய அணியாக நினைக்கவில்லை. ஓமான், பப்புவா நியூ கினியா அணியை எப்படி பார்க்கிறோமோ அப்படித்தான் நாங்கள் வங்கதேசத்தை பார்க்கிறோம். எங்கள் குழுவில் இருக்கும் எல்லா அணிகளும் எங்களுக்கு ஒரே அளவிலான திறமை கொண்ட அணிகள்தான். எல்லோரிடமும் நாங்கள் முழு திட்டமிடலுடன்தான் ஆடுவோம் என்று கூறி இருந்தார்.
 
அதாவது வங்கதேசம் எங்களை பொறுத்தவரை பெரிய அணி கிடையாது. ஓமான், பப்புவா நியூ கினியா போலத்தான் வங்கதேசமும் எங்களுக்கு என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
 
 இவரின் பேட்டியை வங்கதேச ரசிகர்கள் விமர்சனம் செய்து இருந்தனர். பொதுவாகவே வங்கதேச ரசிகர்கள் கொஞ்சம் ஆக்ரோஷமான ரசிகர்கள். மற்ற அணிகளை மோசமாக விமர்சனம் செய்யும் பழக்கம் அந்த அணி ரசிகர்களுக்கும், அந்த அணியின் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் உண்டு. இதனால் ஸ்காட்லாந்து அணியையும்.. நீ கிரவுண்டுக்கு வா... பார்ப்போம் என்பது போல வங்கதேச ரசிகர்கள் வம்பிழுத்து இருந்தனர்.
 
 அதேபோல் நேற்று ஆட்டத்திலும் முதலில் பேட்டிங் இறங்கிய ஸ்காட்லாந்து அணி வெறும் 11.4 ஓவரில் 53 ரன்கள் மட்டுமே எடுத்து 6 இழந்து திணறி வந்தது. இதனால் அவ்வளவுதான் ஸ்காட்லாந்து கதை முடிந்தது..
 
விரைவில் வங்கதேசத்தின் நாகினி டான்சை களத்தில் பார்க்கலாம் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் அதன்பின் களத்தில் நடந்ததுதான் ட்விஸ்ட். ஸ்காட்லாந்து அணிக்கு களமிறங்கிய க்ரிஸ் கிரேவஸ் கடைசி நேரத்தில் பினிஷர் போல ஆடி வெறும் 28 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி அடக்கம். மார்க் வாட் மார்க் வாட் இன்னொரு பக்கம் மார்க் வாட் 17 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். இதனால் சரிவில் இருந்த ஸ்காட்லாந்து அணி 140 ரன்கள் எடுத்தது. இதன் பின் களமிறங்கிய வங்கதேசத்தின் டாப் ஸ்காட்லாந்தின் வீல்ஸ் போட்ட சரமாரி யார்க்கர், பவுன்சர் பவுலிங்கில் அடுத்தடுத்து சுருண்டது. 140 ரன்களை கூட எடுக்க முடியாமல் வங்கதேசம் படாதபாடு பட்டுவிட்டது.
 
ஸ்காட்லாந்து அணியில் வெறும் 24 ரன்கள் மட்டுமே கொடுத்த வீல்ஸ் 3 விக்கெட் எடுத்தார். லிட்டான் தாஸ், சவுமியா சர்க்கார் இருவருமே தலா 5 ரன்களுக்கு வங்கதேச அணியில் அவுட் ஆனார்கள். முஷ்பிகர் ரஹீம் முஷ்பிகர் ரஹீம் முஷ்பிகர் ரஹீம் மட்டும் 38 ரன்கள் எடுத்தார். வேறு யாரும் அந்த அணியில் சரியாக ஆடவில்லை. இதனால் 20 ஓவரில் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து வங்கதேசம் அணி ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.
 
அவங்க எல்லாம் பெரிய டீமா என்று ஸ்காட்லாந்து கோச் சொன்னது போலவே அதிரடியாக ஆடி வங்கதேசத்தை ஸ்காட்லாந்து வீழ்த்தி உள்ளது. முதல் நாள் ஆட்டத்திலேயே இவ்வளவு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளதால் இந்த சீசன் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/how-scotland-wins-the-match-against-bangladesh-in-t20-world-cup-2021/articlecontent-pf606622-436190.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Homeclicks-News
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2021 at 07:57, கிருபன் said:

ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்தை இதுவரை வென்றவர்கள்

  • இந்தியா (2007)
  • பாகிஸ்தான் (2009)
  • இங்கிலாந்து (2010)
  • மேற்கிந்தியத்தீவுகள் (2012)
  • இலங்கை (2014)
  • மேற்கிந்தியத்தீவுகள் (2016)

மேற்கிந்திய தீவுகள் மூன்றாவது முறையாக கோப்பையைத் தூக்கப் போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றை அடைய ஒரு படி முன்னேறிய இலங்கை

நமீபியாவுடன் இடம்பெற்ற டி-20 உலகக் கிண்ண ஆட்டத்தில இலங்கை அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று, சூப்பர் 12 சுற்றை அடைய ஒரு படி முன்னேறியுள்ளது.

Image

2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற நான்காவது போட்டியின் தகுதிச் சுற்றில் இலங்கை - நமீபியா அணிகள் மோதின.

இந்த ஆட்டம் நேற்றிரவு 7.30 மணிக்கு அபுதாபியில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்க‍ை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை நமீபியாவுக்கு வழங்கியது.

தலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நமீபியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஸ்டீபன் பார்ட் - ஜேன் கிரே ஆகியோர் மகீஷ் தீக்ஷனாவின் சுழலில் சிக்கி குறைந்த ஓட்டத்துடன் வெளியேறினர்.

இதனால் நமீபியாவின் முதல் இரு விக்கெட்டுகளும் 29 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

பின்னர் கிரேக் வில்லியம்ஸ் மற்றும் அணித் தலைவர் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்காக கைகோர்த்து விக்கெட்டுகளை பாதுகாத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

எனினும் அவர்களினாலும் ஒரு கட்டத்துக்கு மேல் இலங்கை அணியின் பந்து தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியவில்லை.

12.2 ஆவது ஓவரில் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் லஹிரு குமாரவின் பந்து வீச்சில் 20 ஓட்டங்களுடன் ஹசரங்கவிடம் பிடிகொடுக்க, 13.3 ஆவது ஓவரில் கிரேக் வில்லியம்ஸ் 29 ஓட்டங்களுடன் ஹசரங்கவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் 13.3 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 74 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து நமீபியா இறுதியாக 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

HYOHREm4?format=jpg&name=small

97 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 5.1 ஆவது ஓவரில் 26 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

(குசல் பெரேரா 11, பதும் நிஷாங்க 5, சந்திமால் 5)

எனினும் நான்காவது விக்கெட்டுக்காக பானுக ராஜபக்ஷ - அவிஷ்க பெர்னாண்டா கைகோர்த்தாட பவர் - பிளேயான ஆறு ஓவர்கள் நிறைவில் 37 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது இலங்கை.

பின்னர் ஓட்டக் குவிப்பில் பானுக ராஜபக்ஷ தீவிரம் காட்ட இறுதியாக 13.3 ஓவர்களில் 100 ஓட்டங்கள‍ை பெற்று வெற்றியிலக்கை கடந்தது இலங்கை.

பானுக ராஜபக்ஷ 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 30 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

246892347_5410635972300899_5143838008672

இந்த வெற்றிக்கான முழுப் புகழும் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கே இருந்தது. முதல் ஓவரை வீசிய சாமிக கருணாரத்ன முதல், ஒவ்வொரு பந்து வீச்சாளரும் தனது கடமையை முழுமையாக செய்து, குறைந்த ஸ்கோருக்குள் எதிரணியினரை கட்டுப்படுத்தினர்.

மகீஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளையும், ஹசரங்க, லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கருணாரத்ன, துஷ்மந்த சமீர ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

டி-20 உலகக் கிண்ணத்தில் இலங்கையின் அடுத்த போட்டி அயர்லாந்துக்கு எதிராக நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும்.

இந்த போட்டியிலும் இலங்கை வெற்றி பெற்றால் சூப்பர் 12 சுற்றை அடைந்து விடும்.
 

https://www.virakesari.lk/article/115577

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து அணி வீரர் படைத்த புதிய சாதனை !

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஐக்கிய அரபு மற்றும் ஓமானில் நடைபெற்று வரும் உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணியுடனான போட்டியில் ஹெற்றிக் சாதனையுடன் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார் அயர்லாந்தின் கேர்டிஸ் கேம்ப்ஹர்.  

Curtis Campher rocked Netherlands with four wickets in four balls, Ireland vs Netherlands, T20 World Cup, Abu Dhabi, October 18, 2021

இதன் மூலம் இருபதுக்கு 20 அரங்கில்  அடுத்தடுத்து வீசப்பட்ட 4  பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய  உலகின் மூன்றாவது வீரராக தனது பெயரை பதித்தார் கேர்டிஸ் கேம்ப்ஹர்.  

போட்டியின் 10 ஆவது ஓவரை வீசிய கேர்டிஸ் கேம்பர், அந்த ஓவரின் 2 ஆவது பந்தில் நெதர்லாந்து அணியின் துடுப்பாட்ட வீரரான கொலின் அக்கெர்மென்னை  விக்கெட் காப்பாளரிடம் பிடியெடுக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். 

அதனை அடுத்து வீசப்பட்ட அடுத்த பந்தில் அதிரடி வீரரான ரயன் டென் டஸ்கட்டே எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். Curtis Campher became the third man to take four wickets in four balls in men's T20Is, Ireland vs Netherlands, T20 World Cup, Abu Dhabi, October 18, 2021

இதையடுத்து வீசப்பாட்ட பந்தில் ஸ்கொட்ட எட்வர்ட்ஸையும்  எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்யவே அயர்லாந்து சார்பாக ஹெற்றிக் சாதனை படைத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் கேர்டிஸ். 

இதை அடுத்து வீசப்பட்ட அடுத்த பந்தில் முன்னாள் தென் ஆபிரிக்க வீரரும் தற்போது நெதர்லாந்துக்காக விளையாடும் ரோல்வ் வேன் டர் மேர்வ் 'போல்ட்' முறையில்  ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் அடுத்தடுத்து வீசப்பட்ட 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை  கைப்பற்றிய மூன்றாவது வீரராக வரலாற்றில் இடம்பிடித்தார்.

சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் இந்த சாதனையை முதன் முதலாக நிகழ்த்தியவர்  ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் ஆவார். 

Pieter Seelaar and Curtis Campher in action, Ireland vs Netherlands, T20 World Cup, Abu Dhabi, October 18, 2021

இவர், 2019 ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதியன்று  அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்தார். 

இவருக்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் முன்னாள் வீரரான லசித் மாலிங்க அதே ஆண்டு செப்டெம்பர் 6 ஆம் திகதியன்று நியூஸிலாந்து  அணிக்கெதிரான போட்டியில் படைத்தார்.

இவ்வாறிருக்க, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தொடர்ச்சியான 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திவர் என்ற சாதனையை படைத்தவர் லசித் மாலிங்க ஆவார். இவர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென் ஆபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் இச்சாதனையை படைத்திருந்தார்.

மேலும், இந்த ஹெற்றிக் சாதனையின் மூலமாக உலக இருபதுக்கு 20  கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரருக்கு அடுத்து இரண்டாவது இடத்தை அவர் கேர்டிஸ் கேம்ப்ஹர் பெற்றுக்கொண்டார். 
 

https://www.virakesari.lk/article/115552

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்........!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமானை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பினை தக்க வைத்த பங்களாதேஷ்

முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் ஷகிப் ஆகியோரின் சிறந்த பந்துவீச்சு மூலம், டி-20 உலகக் கிண்ணத்தின் இரண்டாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் ஓமனை செவ்வாய்க்கிழமை தோற்கடித்தது.

mVWz4R5C?format=jpg&name=small

2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற ஆறாவது போட்டியின் தகுதிச் சுற்றில் பங்களாதேஷ் - ஒமான் அணிகள் மோதின.

இந்த ஆட்டம் நேற்றிரவு 7.30 மணிக்கு ஓமான் அல் அமரத் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக மொஹமட் நைம் 64 (50) ஓட்டங்களையும், ஷாகிப் அல் ஹசன் 42 (29) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் ஓமான் சார்பில் பிலால் கான் மற்றும் ஃபயாஸ் பட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கலீமுல்லா 2 விக்கெட்டுகளையும், ஜீஷன் மக்சூத் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்கள்.

fCZBhbri?format=jpg&name=small

154 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணியினரால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

ஜதிந்தர் சிங் 41 ஓட்டங்களையும், காஷ்யப் பிரஜாபதி 21 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

இதனால் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பங்களாஷே் சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பினை தக்க வைத்துள்ளது.

இதேவேளை பி பிரிவில் இடம்பெற்ற மற்றொரு போட்டியில் பப்புவா நியூ கினியா ஸ்கெட்லாந்திடம் 17 ஓட்டங்களினால் தோல்வியடைந்து, சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பினை இழந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை எடுத்தது.

பெர்ரிங்டன் 70 ஓட்டங்களையும் கிராஸ் 45 ஓட்டங்களையும் அணி சார்பில் அதிகபட்சமாக எடுத்தனர்.

166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பப்புவா நியூ கினியா அணி களமிறங்கியது. அதிகபட்சமாக நார்மன் வனுவா 47 ஓட்டங்களை எடுத்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இறுதியில், 19.3 ஓவரில் பப்புவா நியூ கினியா அணி 148 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது.

mILGUopt?format=jpg&name=small
 

 

https://www.virakesari.lk/article/115654

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்தை தோற்கடித்து சூப்பர் - 12 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை

டி-20 உலகக் கிண்ணத்தில் தகுதச் சுற்றில் தமக்கான ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் அயர்லாந்துக்கு எதிராக 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ள இலங்கை சூப்பர் - 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ISP_4695-960x639.jpg

இந்த நிலையை அடைவதற்கு வனிந்து ஹசரங்கா மற்றும் பத்தும் நிசாங்க ஆகியோர் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக வலுவான கூட்டணியை பதிவு செய்தனர்.

அது மாத்திரமின்றி இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களும் தங்கொளுக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை சிறப்பாக செய்து முடித்தமை ஆகும்.

2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தில் நேற்றிரவு அபுதாபியில் நடைபெற்ற எட்டாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பின‍ை இலங்கைக்கு வழங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 1.4 ஓவரில் எட்டு ஓட்டங்களை எடுத்த நிலையில் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

Image

(குசல் பெரேரா 0, சந்திமால் 6, அவிஷ்க பெர்னாண்டோ 0)

இலங்கையில் முதல் மூன்று விக்கெட்டுகளை இவ்வளவு குறைந்த ஓட்டத்தில் இழந்தது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, இலங்கை முதல் மூன்று விக்கெட்டுகளையும் 11 ஓட்டங்களுக்குள் இழந்திருந்தது. 

முதல் மூன்று விக்கெட்டுகளை எட்டு ஓட்டங்களில் இழந்த போதிலும், 150 ஓட்டங்களை கடந்த முதல் டெஸ்ட் நாடாக இலங்கை மாறியது. 

அதற்கு காரணம் பதும் நிசங்க  - வணிந்து ஹசரங்கவின் வலுவான இணைப்பாட்டம் ஆகும். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 82 பந்துகளை பயன்படுத்தி 123 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

May be an image of 1 person, playing a sport and text

டி-20 உலகக் கிண்ண போட்டியில் நான்காவது விக்கெட்டுக்காக பெற்றுக் கொண்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்பு 2007 இல் இலங்கைக்கு எதிரான போட்டியில் மிஸ்பா-உல்-ஹக் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோர் நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து 119 ஓட்டங்களை எடுத்திருந்தனர்.

இந்த இன்னிங்ஸில் இவர்கள் இருவருமே தங்களது டி-20 கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் அரை சதங்களை பதிவு செய்தனர்.

இறுதியாக வனிந்து ஹசரங்க 47 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் அடங்கலாக 71 ஓட்டத்துடனும், பதும் நிசாங்க 47 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

பின்னர் இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை எடுத்தது. 

அணித் தலைவர் தசூன் சானக்க 21 ஓட்டங்களுடனும், சமீர ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

172 ஓட்டம் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 4.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 32 ஓட்டங்களை பெற்றது.

(பால் ஸ்டிர்லிங் 07, கெவின் ஓ பிரையன் 05, கரேத் டெலானி 02)

32 ஓடடங்களுக்குள் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்த போதிலும், அயர்லாந்து அணித் தலைவர் ஆண்ட்ரூ பால்பெர்னி மற்றும் கர்டிஸ் கேம்பர் ஆகியோர் நான்காவது விக்கெட்டுக்கு 53 ஓட்டங்களை சேர்த்தனர். 

இதன் பின்னர் 12.5 ஆவது ஓவரில் கர்டிஸ் கேம்பர் 24 ஓட்டங்களுடன் தீக்ஷணவின் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேற, அயர்லாந்து அணி மேலும் 16 ஓட்டங்களை சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

அதன்படி அயர்லாந்து 18.3 ஓவரில் 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆல் அவுட் ஆனது.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் நமீபியாவுக்கு எதிராக ஆட்ட நாயகன் விருதை வென்ற மகேஷ் தீக்ஷனா 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லஹிரு குமார மற்றும் சாமிகா கருணாரத்ன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்கா 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் துஷ்மந்த சமீர ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஹசரங்க தெரிவானார்.

இதன் மூலம் 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது.

இதேவேளை அயர்லாந்து - நமீபியா அணிகளுக்கு இடையில் நாளை நடக்கும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கையுடன் சேர்ந்து முன்னேறும்.
 

https://www.virakesari.lk/article/115707

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமானை தோற்கடித்து சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது ஸ்கொட்லாந்து

ஓமன் அணிக்கு எதிரான டி-20 உலகக் கிண்ணத்துக்கான சூப்பர் 12 சுற்றுக்கான தகுதிப் போட்டியில் ஸ்கொட்லாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

MDKehlIw?format=jpg&name=small

2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தில் நேற்றிரவு ஓமான், அல் அமரத் மைதானத்தில் ஆரம்பமான முதல் சுற்று போட்டியில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. 

நாணய சுழற்சியில் வென்ற ஓமன் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 122 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அணி சார்பில் அதிகபட்சமாக லியாஸ் 37 ஓட்டங்களையும், மசூத் 34 ஓட்டங்களையும் எடுத்தனர்.

ஸ்கொட்லாந்து சார்பில் பந்து வீச்சில் டேவி 3 விக்கெட்டுகளையும், சஃபியான் ஷெரீப், லீஸ்க் தலா 2 விக்கெட்டுகளையும் மற்றும் மார்க் வாட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Image

இதையடுத்து 123 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 17 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி பெற்றது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய ஜார்ஜ் முன்சே 20 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் கைல் கோட்சர் 41 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க மத்தேயு கிராஸ் 26 ஓட்டங்களுடனும், ரிச்சி பெரிங்டன் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

ஆட்ட நாயகன் விருது ஜோஷ் டேவிக்கு வழங்கப்பட்டது. 

இந்த வெற்றியின் மூலம் டி-20 உலகக் கிண்ணத் தொடரில் ஸ்கொட்லாந்து எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் வெற்றியை பிதவுசெய்தது.

இதேவேளை நேற்று மாலை இடம்பெற்ற குழு பி யில் மற்றொரு ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி, பப்புவா நியூ கினியாவை 84 ஓட்டங்களினால் தோற்கடித்து.

QFyfZN4w?format=jpg&name=small

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேண் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை சேர்த்தது. 

அதிகபட்சமாக அணித் தலைவர் மஹ்முதுல்லா 50 ஓட்டங்களை பெற்றார். ஷாகிப் அல் ஹசன் 46 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதையடுத்து 182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி, ஆரம்பம் முதலே பங்களாதேஷ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 

முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்து வெளியேறினர். 29 ஓட்டங்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், கிப்லின் டோரிகா ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடி அரை சதத்தை நெருங்கினார். 

எனினும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இதனால் பப்புவா நியூ கினியா அணி 97 ஓட்டங்களில் சுருண்டது.  

கிப்லின் டோரிகா 34 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ஓட்டங்களை சேர்த்தார்.  இறுதியாக பங்களாதேஷ் அணி 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

 

https://www.virakesari.lk/article/115780

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்தை சுருட்டிப்போட்ட இலங்கை !

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் இறுதிப்போட்டியில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

Dasun Shanaka flips the coin, Netherlands vs Sri Lanka, T20 World Cup, Sharjah, October 22, 2021

இப்போட்டியில் நெதர்லாந்து அணியை 10 ஓவர்களுக்குள் சுருட்டிய இலங்கை அணி வெறும் 44 ஓட்டங்களுக்குள் அனைத்துவிக்கெட்டுக்களையும் வீழ்த்தி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் செற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. 

Sri Lanka celebrate the dismissal of Max O'Dowd, Netherlands vs Sri Lanka, T20 World Cup, Sharjah, October 22, 2021

அதன்படி முதலில் துடுப்பெடுத்தடிாய நெதர்லாந்து அணி இலங்கை அணியின் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகியது.

முதல் விக்கெட்டுக்காக மெக்ஸ் ஓ டௌட் 2 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Ben Cooper loses his stumps to Maheesh Theekshana, Netherlands vs Sri Lanka, T20 World Cup, Sharjah, October 22, 2021

இதனைத் தொடர்ந்து வந்த ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 10 ஓவர்களில் 44 ஓட்டங்களுக்கு நெதர்லாந்து அணி சுருண்டது.

Wanindu Hasaranga had the Netherlands batters tied up in knots, Netherlands vs Sri Lanka, T20 World Cup, Sharjah, October 22, 2021

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் மிரட்டிய வனிந்து ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மகேஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

The Sri Lankan players celebrate after knocking Netherlands over in ten overs, Netherlands vs Sri Lanka, T20 World Cup, Sharjah, October 22, 2021

இதனையடுத்து மிகவும் சுலபமான ஓட்ட இலக்கை விரட்ட துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான பதும் நிஷங்க ஓட்டமேதனையும் பெறாமல் ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

Kusal Perera guides the ball behind point, Netherlands vs Sri Lanka, T20 World Cup, Sharjah, October 22, 2021

அதன்பின்னர் வந்த சரித் அசலங்கவும் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, குசல் ஜனித் பெரேரா 33 ஓட்டங்களைப் பெற இலங்கை அணி 7.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 45 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

Sri Lanka fans are all smiles, Netherlands vs Sri Lanka, T20 World Cup, Sharjah, October 22, 2021

Ryan ten Doeschate talks to Mickey Arthur after the game, Netherlands vs Sri Lanka, T20 World Cup, Sharjah, October 22, 2021
 

https://www.virakesari.lk/article/115844

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

55 ஓட்டங்களுக்குள் சுருண்ட மே.இ.தீவுகள் ; 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

சூப்பர் 12 சுற்றில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நடப்பு சம்பியனான மேற்கிந்தியத்தீவுகளை தோற்கடித்து 2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்தில் தனது முதல் ஆட்டத்தை இங்கிலாந்து வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.

Image

டுபாய் சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான 2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தின் 14 ஆவது போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை மேற்கிந்தியத்தீவுகளுக்கு வழங்கியது. 

Image

இந்த போட்டி மே.இ.தீவுகளின் திறமைக்கும் அற்புமான இங்கிலாந்து அணியினரின் பந்து வீச்சு தாக்குதலுக்கும் இடையே ஒரு பலத்த யுத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, 

ஆனால் 2016 இல் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்த மே.இ.தீவுகள், எதிரணியின் பந்து வீச்சுகளுக்கு முகங்கொடுக்கத் தெரியாது 14.2 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு 55 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

Image

பந்து வீச்சில் அசத்திய அடில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், மொய்ன் அலி மற்றும் டைமல் மில்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் கிறிஸ் ஜோர்தன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

56 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 8.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 56 ஓட்டம் என்ற இலக்கை துரத்துவதில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்கரர்களுள் ஒருவரான ஜேசன் ரோய் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின் வந்த ஜோனி பெயர்ஸ்டோ ஒன்பது ஓட்டங்களுடன் வெளியேறினர், தொடர்ந்து மொய்ன் அலி 3 ஓட்டங்களுடனும், லிவிங்ஸ்டன் ஓரு ஆட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

எனினும் ஜோஸ் பட்லர் 24 ஓட்டங்களுடனும், இயன் மோர்கன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்து அணியின் வெற்றிய‍ை உறுதிபடுத்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக மொய்ன் அலி தெரிவானார்.

இதேவ‍ேளை நேற்று பிற்பகல் அபுதாபியில் இடம்பெற்ற மற்றொரு 2021 ஐசிசி டி-20 உலகக் கிண்ண ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியை 5 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது அவுஸ்திரேலியா.

HM7MGDZP?format=jpg&name=small

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 20 ஓவர்களில் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ஓட்டங்களை பெற, அவுஸ்திரேலிய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை பெற்ற வெற்றியிலக்கை கடந்தது.
 

https://www.virakesari.lk/article/115889

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி 20 உலகக் கோப்பை இலங்கை Vs வங்கதேசம்: அசலங்கா, ராஜபக்ச அதிரடியால் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை

24 அக்டோபர் 2021, 12:19 GMT
புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்
அசலங்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் வீரர்கள் அசலங்கா மற்றும் பானுகா ராஜபக்ச ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் வங்கதேசத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது.

அசலங்கா 50 பந்துகளில் 84 ரன்களும் ராஜபக்ஸ 31 பந்துகளில் 53 ரன்களும் எடுத்தனர்.

15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்து தடுமாறிய இலங்கை அணி அடுத்த 5 ஓவர்களில் அதிரடியாக ரன்களைக் குவித்தது.

முன்னதாக வங்கதேசம் இருபது ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம் 171 ரன்களைக் குவித்தது.

வங்கதேசத்தின் முஷ்ஃபிகுர் ரஹீம், தொடக்க வீரர் முகமது நயீம் ஆகியோர் அரைச் சதம் அடித்து கணிசமான ரன் குவிப்புக்கு உதவினார்கள். அதிரடியாக ஆடிய முஷ்ஃபிகுர் ரஹீம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் ஆறாவது ஓவரில் லஹிரு குமாரவின் பந்துவீச்சில் மிட் ஆஃப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது லஹிரு குமாரவுக்கும் லிட்டனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தள்ளிவிட்டதால் நடுவர் வந்து இருவரையும் விலக்கிவிட்டார்.

அடுத்து ஆட வந்த ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் 10 ரன்களில் வெளியேற நயீமுடன் முஷ்பிகுர் ரஹீம் இணைசேர்ந்தார். இருவரும் இணைந்து இலங்கையின் பந்துவீச்சை நிதானமாகக் கையாண்டு படிப்படியாக ரன்களைக் குவித்தனர்.

ரஹீம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த இணை 17 -ஆவது ஓவர் வரை களத்தில் இருந்தது அப்போது அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 129.

இதன் பிறகு முஷ்பிகுர் அதிரடியாக ஆடினார். கடைசி நான்கு ஓவர்களில் 43 ரன்களைக் குவித்த வங்கதேசம் இலங்கைக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

https://www.bbc.com/tamil/sport-59029332

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

India vs Pakistan: பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்தியாவின் தோல்விக்கான 4 காரணங்கள்

  • பு விவேக் ஆனந்த்
  • பிபிசி தமிழ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

இழப்பதற்கு இனி ஏதும் இல்லை; இது பாகிஸ்தானின் நிலை. ஏனெனில் அக்டோபர் 21-ம் தேதி இந்திய நேரப்படி கிட்டத்தட்ட இரவு 11 மணிவரையில் ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் ஒருமுறை கூட இந்திய அணியை பாகிஸ்தான் சாய்த்தது கிடையாது.

ஞாயிற்றுக் கிழமை இரவு நடந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்றாலும் பெரிய சிக்கல் இல்லை; தொடர்ச்சியாக உலகக் கோப்பைத் தொடர்களில் 12 முறை இந்தியாவிடம் தோற்ற அணி எனும் புள்ளிவிவரம் 13 என மாறும் அவ்வளவுதான்.

ஆனால் இந்திய அணிக்கோ பாகிஸ்தானை வீழ்த்தியே ஆகவேண்டும் எனும் அழுத்தம். தோல்வியுற்றால் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த அணி என வரலாற்றில் பதியப்படும்.

அது போக, விராட் கோலி டி20 ஃபார்மெட்டில் அணித்தலைவராக வழிநடத்தும் கடைசி தொடர், கிட்டத்தட்ட பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கடைசி தொடர்; ஒரு ஆலோசகராக தோனிக்கு முதல் தொடர், இப்படி இத்தொடரில் இந்தியாவுக்கு பல அழுத்தங்களும் இருந்தன.

புள்ளிவிவரங்கள் ஒருபுறமிருக்க இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு எதிராக உள்நாட்டில், குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் அபிமானிகள் என அறியப்படுபவர்கள் சிலர் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து கண்டித்தார்கள். அது தேசநலனுக்கு எதிரானது என கொக்கரித்தார்கள்.

ஒருபுறம் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பாதுகாப்பு காரணங்கள் கருதி பாகிஸ்தான் மண்ணில் விளையாட முடியாது என விலகிச் சென்றுவிட, சர்வதேச போட்டிகளில் வலுவான அணிகளுடன் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தது பாகிஸ்தான்.

அதேவேளை, இந்திய வீரர்கள் கடந்த ஓராண்டாக பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து பங்கெடுத்து வந்தார்கள். உலகக் கோப்பைக்கு சிறந்தமுறையில் தயாராகும் வகையில் அரபு மண்ணில் நடந்த ஐபிஎல் தொடர் கைகொடுத்தது.

பாகிஸ்தான் உலகக்கோப்பை தொடர்களில் இன்னொரு முறை தோற்றுப்போவதற்கு எதற்கு விளையாட வேண்டும் என இந்தியா தரப்பில் கேலி குரல்கள் எழுந்தன. இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூட இப்படிச் சொல்லி இருந்தார். மறுபுறம் இந்தியாவை வென்றால் பரிசு மழை என பாகிஸ்தான் மண்ணில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்தியா vs பாகிஸ்தான்

இந்திய அணியின் அணித்தலைவர் விராட் கோலியும் சரி, பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் பாபர் அசமும் சரி, இதை மற்றுமொரு போட்டி என்கிற கோணத்திலேயே பார்க்கவிரும்புவதாக தெரிவித்திருந்தனர். வார்த்தை போர்கள் எதுவும் இல்லை.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் வாசிம் அக்ரம் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், இந்திய ரசிகர்கள் கொண்டாட்டத்தை துவங்கலாம், ஆனால் போட்டி நடப்பதற்கு முன் தேவையில்லை. 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியை நினைவில் வைக்க வேண்டும். இரு அணி ரசிகர்களும் போட்டி முடிந்தபிறகு கொண்டாட்டத்தை தொடரலாம் எனக்கூறி இருந்தார். மோக்கா மோக்கா விளம்பரம் உள்ளிட்டவற்றை குறித்தே தனது கருத்தை அப்படி வெளிப்படுத்தி இருந்தார்.

இத்தகைய சூழலில்தான், போட்டி நாள் வந்தது. விராட் கோலி டாஸை சுண்டினார்; பாகிஸ்தான் அணித்தலைவர் வென்றார்; பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். டாஸ் நமது கையில் இல்லை என்றார் விராட் கோலி.

அந்தபுள்ளியில் இருந்து ஆட்டம் முடியும் வரை, பாகிஸ்தானே முழுமையான ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முடிவில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது பாகிஸ்தான்.

உலகக்கோப்பை டி20 வரலாற்றிலேயே 150 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கை துரத்தி ஒரு விக்கெட் கூட இழக்காமல் வென்ற முதல் அணி பாகிஸ்தான் தான்.

பாகிஸ்தானின் வெற்றிக்கு கிரிக்கெட் உலகில் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. இந்திய வீரர்களான ஷேவாக், ஹர்பஜன் உள்ளிட்ட பலரும் கூட பாகிஸ்தானுக்கு தங்களது வாழ்த்துகளை டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்கள்.

வலுவான அணியாக கருதப்பட்ட இந்தியா தோல்வியடைய காரணமாக அமைந்தது என்னென்ன?

டாஸ்

டாஸ் சுண்டும் விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

டாஸ் சுண்டும் விராட் கோலி

டாஸில் வென்றவுடனேயே முதலில் பனித்துளிகளை பற்றிக் குறிப்பிட்டிருந்தார் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் ஆசம். தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு அழுத்தம் ஏற்படுத்த முயற்சிப்போம் என்றார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அப்போது பேசும்போது இலக்கை நிர்ணயிக்கும் பணியைச் செய்வதில் மகிழ்ச்சியே. ஆனால் நாங்களும் டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சையே தேர்ந்தெடுத்திருப்போம் என்றார். டாஸ் என்பது உங்கள் கையில் கிடையாதல்லவா என்றார்.

ஆனால் ஆட்டம் முடிந்தபிறகு தோல்விக்கான காரணங்களில் பனித்துளிகளையும் குறிப்பிட்டுச் சொன்னார் விராட் கோலி.

ஷாஹீன் அஃப்ரிடி அபாரம்

ஷாஹீன் அஃப்ரிடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஷாஹீன் அஃப்ரிடி

பாகிஸ்தான் அணிக்கு எப்போதுமே ஐசிசி தொடர்களில் சிம்மசொப்பனமான வீரர்களில் ஒருவர் ரோகித் ஷர்மா. ஆனால் அவருக்கு சிம்மசொப்பனமாக விளங்குபவர்கள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் தான்.

இன்றைய ஆட்டத்தில் ரோகித் தனது கணக்கை துவங்க ஆரம்பிக்கும் முன்னரே, அதாவது அவர் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆனார்.

மிடில் ஸ்டம்பை தகர்த்தெறியும் வண்ணம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி வீசிய யார்க்கருக்கு ரோகித்தின் விக்கெட் பலியானது.

முதல் ஓவரிலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பாகிஸ்தான், தொடர்ந்து ஆக்ரோஷமாக செயல்பட்டது. ரன்களை கட்டுப்படுத்தும் வண்ணம் ஃபீல்டர்கள் கிடுக்கிப்பிடி போட்டனர். முதல் ஓவரிலேயே அணித்தலைவர் கோலி களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒருபுறம் இடது கை வேகப்பந்து வீச்சாளரை வைத்து விக்கெட்டைத் தகர்க்க மறுபுறம் அவருக்கு துணையாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிமை அழைத்து சூழல்வலை அமைத்துக் குடைச்சல் கொடுத்தார் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசம்.

முதல் ஓவரை வீசிய அதே துடிப்போடு தனது இரண்டாவது ஓவரை வீச வந்தார் ஷாஹீன். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஷாஹீன் வீசிய இன்ஸ்விங்குக்கு இரையானார் இந்திய அணியின் மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல்.

இந்திய ரசிகர்களுக்கு பேரிடி. அப்போது ஆறு ரன்களுக்கு இந்தியா இரண்டு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தை தன்னம்பிக்கையுடன் சிக்சருக்கு பறக்கவிட்டார் சூரியகுமார் யாதவ்.

கோலியும் ஷாஹீன் வீசிய மூன்றாவது ஓவரில் ஒரு சிக்ஸர் வைத்து தெம்புடன் இன்னிங்ஸை தொடர முயன்றார். அப்போது பவர்பிளேவின் கடைசி ஓவரை வீசிய ஹசன் அலி, சூரியகுமார் யாதவை பெவிலியனுக்கு அனுப்பிவைக்க, பவர்பிளே முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி.

அப்போது கோலியுடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இணைந்தார். ஆனால், அதுவே இந்திய அணியின் கடைசி வலுவான கூட்டணி.

மிடில் ஆர்டர் சொதப்பல்கள்

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

விராட் கோலி

இந்திய அணி பாகிஸ்தான் உடனான போட்டியில் இரு ஆல்ரவுண்டர்கள் உடன் விளையாடியது. ஒருவர் ரவீந்திர ஜடேஜா மற்றொருவர் ஹர்திக் பாண்ட்யா.

ஹர்திக் பாண்ட்யாவை ஒரு பேட்ஸ்மேனாகவே அணியில் சேர்த்திருப்பதாக விராட் கோலி கூறியிருந்தார். ஆனால் அவரது முடிவு பெரிய பலன் தரவில்லை.

ஏனெனில், ஹர்திக் பாண்ட்யா பந்துவீசப்போவதில்லை எனும்போது, அவர் பேட்டிங்கிலும் சிறந்த பார்மில் இல்லாத சூழலில் பேட்ஸ்மேனாக களமிறக்கியது இந்திய அணி. அதற்காக இஷான் கிஷன் வெளியே உட்கார வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் இஷான் கிஷன் தான் விளையாடிய கடைசி இரு போட்டிகளில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், மும்பை அணியின் கடைசி லீக் போட்டியில் பந்துவீச்சில் வலுவான அணி என கருதப்படும் ஹைதரபாத் அணியை துவம்சம் செய்தார்.

அவர் சந்தித்தது 32 பந்துகள் தான். ஆனால் அதில் 11 பந்துகள் எல்லைக்கோட்டை நோக்கி ஓடின, நான்கு பந்துகள் எல்லைக்கோட்டை தாண்டி விழுந்தன. அந்த போட்டியில் 32 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து மிரட்டி இருந்தார்.

அதேபோல, கடந்த அக்டோபர் 18-ம் தேதி நடந்த பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை அணியை துவைத்து எடுத்து 46 பந்துகளில் 70 ரன்கள் விளாசி இருந்தார்.

ஹர்திக் பாண்ட்யா பந்துவீசுவாரா என்பது சந்தேகம் எனும் சூழலில், பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இஷான் கிஷனை புறக்கணித்து, பேட்ஸ்மேனாக ஹர்திக் பாண்ட்யாவை களமிறக்கிய உத்தி கோலிக்கு இம்முறை பலனளிக்கவில்லை.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியை மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீட்டதில் பந்த்துக்கு பெரும் பங்குண்டு. அவர் ஹசன் அலி ஓவரில் அனாயாசமாக இரு சிக்ஸர்கள் வைத்தார். ஆனால் பெரிய ஸ்கோர் குவிக்கும் முன்னர் 39 ரன்களிலேயே ஆட்டம் இழந்தார்.

கைவசம் விக்கெட்டுகள் இல்லாததால் இந்திய அணி கடைசி ஓவர்களில் அதிரடி காட்ட முடியவில்லை.

விராட் கோலி அரைசதமடித்து அவுட் ஆனார். அவர் 49 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு வழியாக கிட்டத்தட்ட 9 ஆண்டுகளில் முதல் முறையாக விராட் கோலி விக்கெட்டை பாகிஸ்தான் வீழ்த்தியது. அவரது விக்கெட்டை வீழ்த்தியவரும் ஷாஹீன் தான்.

ஜடேஜா, பாண்ட்யா ஜொலிக்காத நிலையில் 20 ஓவர்களில் 150 ரன்களை கடந்தது இந்திய அணி.

பாகிஸ்தான் ஆட்டத்தில் விராட் கோலி தனது கால் நகர்த்தல்கள் மற்றும் முன் நகர்ந்து, பந்து இன்ஸ்விங் ஆவதற்கு முன்பே விளாசும் உத்தி மூலம் தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டதோடு இந்திய அணி கெளரவமான ரன்களை எட்ட உதவினார்.

பாகிஸ்தான் வீரர்களின் நேர்த்தியான ஆட்டம்

பாகிஸ்தான் பேட்டர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாகிஸ்தான் பேட்டர்கள்

152 ரன்கள் எடுத்தால் வரலாற்றில் முதன்முறையாக ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இந்தியாவைச் சாய்க்கலாம் எனும் இலக்கோடு களமிறங்கிது பாகிஸ்தான்.

தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வானும், பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசமும் களமிறங்கினர்.

முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அதில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் வைத்து கச்சிதமாக ஆட்டத்தை தொடங்கியது ரிஸ்வான் - பாபர் இணை.

இரண்டாவது ஓவரை ஷமியிடம் கொடுத்தார் கோலி - பலனில்லை. மூன்றாவது ஓவரை பும்ரா வீசினார் - விக்கெட் விழ வில்லை.

நான்காவது ஓவரை வீச வருண் சக்கரவர்த்தியை அழைத்தார். அவரால் ரன்களை கட்டுப்படுத்த முடிந்ததே தவிர இணையை பிரிக்க முடியவில்லை.

ஆரம்ப ஓவர்களில் விக்கெட் வேட்டையை தொடங்கவேண்டும் எனும் முனைப்போடு முதல் நான்கு ஓவர்களில் நான்கு பேரை பந்துவீச வைத்த உத்தி, பலன் தரவில்லை. பவர்பிளே முடிவிலேயே விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்தது இந்த இணை.

பந்துவீச்சாளர்கள் மாறிக்கொண்டிருந்தார்களே தவிர இந்த இரு இணையும் உடும்புப்பிடியாய் விக்கெட்டை காத்துக் கொண்டிருந்ததால், ஆட்டம் அதிவேகமாக பாகிஸ்தான் பக்கம் நகரத் தொடங்கியது.

ஒரு ரன் அவுட்டில் இருந்து நடுவரின் தீர்ப்பு ஒன்றால் முகமது ரிஸ்வான் தப்பிப்பிழைத்தார். அதைத்தவிர இந்தியாவுக்கு எந்த ஒரு வாய்ப்பையும் இந்த இணை வழங்கவே இல்லை. குறிப்பாக அனைத்து பந்துவீச்சாளர்களையும் பாரபட்சமின்றி தவறான பந்துகளை வீசினால் தண்டித்தார்கள்.

நிதானமாக நின்று விளையாடி, 18வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து வைத்தது இந்த இணை. இரு வீரர்களும் அரை சதம் விளாசினர். ஷமி வீசிய பதினெட்டாவது ஓவரில் முதல் ஐந்து பந்துகளிலேயே 17 ரன்களை இவ்விருவரும் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷர்துல் தாக்கூர், அனுபவ வீரர் அஷ்வின் வெளியே அமர்ந்திருக்க, இத்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை அசைக்க முடியாமல் தவிக்க, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

இந்திய அணி, சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-ல் உள்ளது. இன்னும் ஸ்காட்லாந்து, ஆஃப்கானிஸ்தான், நமீபியா, நியூசிலாந்து அணிகளுடன் விளையாடவுள்ளது. இந்த நான்கில் இன்னும் ஒரு தோல்வி ஏற்பட்டால் கூட இந்திய அணியின் அரை இறுதி கனவு மங்கிவிடும் வாய்ப்புண்டு.

இத்தகைய சூழலில் வரும் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. மறுபுறம் பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பை நெருங்க முதல் அடியை வெற்றிகரமாக எடுத்துவைத்துவிட்டது.

போட்டி முடிந்தபிறகு பேசிய விராட் கோலி இது இந்த தொடரில் எங்களுக்கு முதல் போட்டி. கடைசி போட்டியல்ல என குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/sport-59033110

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷுக்கு பாடம் கற்பித்த இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு நல்ல பாடம் கற்பித்த இலங்கை துடுப்பாட வீரர்கள் இலக்கை துரத்தும்போது, 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் 172 என்ற இலக்கை விரட்டினர். 

Image

பங்களாதேஷுக்கு எதிரான டி-20 உலகக் கிண்ண போட்டியில் இதுவரை தோல்வியை சந்திக்காத இலங்கை அணி, நேற்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று 100 சதவீதத்தை தக்க வைத்துள்ளது.

நேற்யை தினம் தனது 5 ஆவது டி-20 போட்டியில் விளையாடிய அசலங்க, தனது முதல் அரை சதம் அடித்து பங்களாதேஷுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறினார். 

இந்த இன்னிங்ஸிற்காக அசலங்க ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

குசல் பெரேரா ஆட்டமிழந்ததால் முதல் ஓவரில் பேட்டிங் செய்ய வந்த 24 வயதான இடது கை ஆட்டக்காரரான அசலங்க, இரண்டாவது ஓவரில் ஹசனின் நான்காவது பந்தில் பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கினார். 

அதன் பின்னர் அவரின் தொடர்ச்சியான அதிரடிகளின் விளைவாக பவர் - ப்ளேயில் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 54 ஓட்டங்களை எடுத்தது இலங்கை.

8.1 ஆவது ஓவரில் பதும் நிஷாங்க 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்தடுத்து வந்த அவிஷ்க பெர்னாண்டோ டக்கவுட்டுடனும், வனிந்து ஹசரங்க 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதனால் 79 ஓட்டங்களுக்கு இலங்கையின் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் பானுக ராஜபக்ஷ களமிறங்கினார்.

அசலங்காவின் வேகமான இன்னிங்ஸால் அதிரடியை ஆரம்பிக்காத பானுக முதல் 9 பந்துகளில் 6 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தார்.

தொடர்ந்து பானுகாவின் முதல் சிக்ஸர் அஃபிஃப் ஹொசைனின் சுழற்பந்து பந்தில் பெறப்பட்டது, அதையடுத்து இலங்கையின் அதிரடி ஆட்டம் சார்ஜாவில் நிலை கொண்டது.

இலங்கைக்கு கடைசி 8 ஓவர்களில் 82 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், அசலங்கா மற்றும் பானுகா மஹ்முதுல்லா வீசிய 14 ஆவது ஓவரில் 16 ஓட்டங்களையும், சஃபுதீன் வீசிய 16 ஆவது ஓவரில் 22 ஓட்டங்களையும் பெற்று நெருக்கடியிலிருந்து விடுபட்டனர்.

பானுகாவின் பெயருக்கு முன்னதாக 53 ரன்கள் இன்னிங்ஸில், அவர் 31 பந்துகளை எதிர்கொண்டார், மூன்று சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்தார். 

வெற்றியின் தருவாயில் தனது 30 ஆவது பிறந்த தினத்தை அரை சதத்தை குவித்த பானுக மொத்தமாக 31 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக அணித் தலைவர் தசூன் சானக்க களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க 18.5 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் மேலும் ஒரு பவுண்டரியுடன் வெற்றியை பறை சாற்றினார் அசலங்க.

ISP_9312-1-960x639.jpg

இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்த அவர் 49 பந்துகளில் 80 ஓட்டங்களை குவித்தார்.

 

போட்டியின் சிறம்பம்சங்கள்

துஷ்மந்த சமீர ஒரு மணி நேரத்திற்கு 150 கி.மீ வேகத்தில் பந்துப் பறிமாற்றம் மேற்கொண்டமை ஒரு சிறப்பான விடயமாகும்.

இன்னிங்ஸின் தொடக்கத்தில் லிட்டன் தாஸை எதிர்த்த லஹிரு குமாரவின் திறமை மைதானத்தில் சற்று சூடுபிடித்தது. ஆனால் வீரர்களின் தலையீட்டினால் அது சரி செய்யப்பட்டது, லஹிருவின் பந்து வீச்சில் தாஸ் விக்கெட்டை இழந்தார். 

நான்கு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் இலங்கை இன்னிங்ஸ் நுழைந்ததால் மகேஷ் தீக்ஷனாவுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. 

தீக்ஷனாவுக்கு பதிலாக பினுரா பெர்னாண்டோ உள்ளீர்க்கப்பட்டார். 
 

 

https://www.virakesari.lk/article/115945

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந்தைப் பதம்பார்த்தது ஆப்கானிஸ்தான்

ஸ்கொட்லாந்துக்கு எதிராக ஷார்ஜாவில் திங்கட்கிழமை (25) இரவு நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண 2ஆம் குழுவுக்கான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 130 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பி குழுவுக்கான முதல் சுற்றுப் போட்டியில் பங்களாதேஷை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த ஸ்கொட்லாந்து இன்றைய போட்டியிலும் அசத்தக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

2510_najibullah_zadran.jpg
ஆனால், சகல துறைகளிலும் அபரிமிதமாக பிரகாசித்த ஆப்கானிஸ்தானின் பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஸ்கொட்லாந்து தோல்வியைத் தழுவியது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 190 ஓட்டங்களைக் குவித்தது.

முன்வரிசை விரர்கள் அனைவரும் அதிரடி வேகத்தில் ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் நடப்பு இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பதிவு செய்தது.

ஆரம்ப வீரர்களான ஹஸ்ரத்துல்லா ஸஸாய், மொஹம்மத் ஷாஸாத் ஆகிய இருவரும் 35 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷாஸாத் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 28 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஸஸாய் ஆட்டமிழந்தார். ஸஸாய் 30 பந்துகளில் 3 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஸத்ரான் ஆகிய இருவரும் 52 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானை மேலும் பலப்படுத்தினர்.
குர்பாஸ் 37 பந்துகளில் 4 சிக்ஸ்கள், ஒரு பவுண்ட்றியுடன் 46 ஒட்டங்களையும் ஸத்ரான் 34 பந்துகளில் 5 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களையும் குவித்தனர். அணித் தலைவர் மொஹம்மத் நபி 4 பந்துகளில் 11 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

ஸ்கொட்லாந்து பந்துவீச்சில் சபியான் ஷெரிப் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
191 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 10.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது.

2510_mujeeb_ur_rahman-1.jpg

ஆரம்ப வீரர் ஜோர்ஜ் மன்சே அதிரடியாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்து 18 பந்துகளில் 2 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகளுடன் 25 ஓட்டங்களைக் குவித்தார்.
20 பந்துகளில் மொத்த எண்ணிக்கை 28 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவர் கய்ல் கோர்ட்ஸர் 10 ஓட்டங்களுடன் முதலாவதாக ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து மூவர் ஓட்டம் பெறாமல் களம் விட்டகன்றதுடன் ஜோர்ஜ் மன்சே 5ஆவதாக ஆட்டமிழந்து வெளியேறினார். மத்திய வரிசையில் கிறிஸ் க்றீவ்ஸ் 12 ஓட்டங்களைப் பெற்றார்.
பினவரிசை துடுப்பாட்ட வீரர்களும் ஒற்றை இலக்க எண்ணிக்கைளையே பெற்றனர்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் முஜீப் உர் றஹ்மான் 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ராஷித் கான் 2.2 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
நடப்பு இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முஜீப் உர் றஹ்மான் முதலாவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.
 

https://www.virakesari.lk/article/116010

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியத்தீவுகளை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தியது தென்னாபிரிக்கா

மேற்கிந்தியத்தீவுகளை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தியது தென்னாபிரிக்கா

தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (26) சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற இருபது 20 உலகக் கிண்ண குழு 1க்கான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தென் அபிரிக்கா 8 விக்கெட்களால் அமோக வெற்றிபெற்றது.

Evin Lewis powers one towards midwicket, South Africa vs West Indies, T20 World Cup, Group 1, Dubai, October 26, 2021

தத்தமது முதலாவது போட்டிகளில் தோல்விகளைத் தழுவிய நிலையில் இன்றைய போட்டியில் வெற்றியை இலக்குவைத்து விளையாடிய இந்த இரண்டு அணிகளில் தென் ஆபிரிக்கா அதனை நிறைவேற்றிக்கொண்டது.

ட்வெய்ன் ப்ரிட்டோரியஸின் துல்லியமான பந்துவீச்சு, ஏய்டன் மார்க்ராம், ரெசி வென் டேர் டுசென் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தன.

Lendl Simmons failed to get going at the top of the order, South Africa vs West Indies, T20 World Cup, Group 1, Dubai, October 26, 2021

இன்றைய போட்டியில் தென் ஆபிரிக்க அணியிலிருந்து முற்றிலும் எதிர்பாராதவிதமாக கடைசி நேரத்தில் தனிப்பாட்ட காரணத்துக்காக தானகவே நீங்கிக்கொள்வதாக குவின்டன் டி கொக் அறிவித்தார். அவருக்குப் பதிலாக ரீஸா ஹெண்ட்றிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டதுடன் ஹெய்ன்ரிச் க்ளாசென் விக்கெட் காப்பாளராக விளையாடினார்.

கறுப்பினத்தவரின் உயிர்களும் முக்கியம் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் முழந்தால்படியிட மறுத்த பின்னரே அவர் அணியிலிருந்து நீங்கிக்கொள்வதாக அறிவித்தார்.

Chris Gayle takes a tumble after missing with a slog sweep, South Africa vs West Indies, T20 World Cup, Group 1, Dubai, October 26, 2021

இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 144 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 18.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மொத்த எண்ணிக்கை வெறும் 4 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரரும் அணித் தலைவருமான டெம்பா பவுமா 2 ஓட்டங்களுடன் முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததும் தென் ஆபிரிக்கா சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

Andre Russell hits the stumps to run Temba Bavuma out, South Africa vs West Indies, T20 World Cup, Group 1, Dubai, October 26, 2021

ஆனால், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ரெஸி வென் டேர் டுசென் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு பலம் சேர்தனர்.

ஹெண்ட்றிக்ஸ் 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ரெசி வென் டேர் டுசென், ஏய்டன் மார்க்ராம் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச்செய்தனர்.

Aiden Markram targets the midwicket boundary, South Africa vs West Indies, T20 World Cup, Group 1, Dubai, October 26, 2021

வென் டேர் டுசென் 43 ஓட்டங்களுடனும் ஏய்டன் மார்க் ராம் 26 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகள் அடங்கலாக 51 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள், எவின் லூயிஸ் குவித்த அதிரடி அரைச் சதத்தின் உதவியுடன் 20 ஒவர்களில் 8 விக்கெட்களை இழந்து 143 ஒட்டங்களைப் பெற்றது.

Rassie van der Dussen gets down to play a reverse sweep, South Africa vs West Indies, T20 World Cup, Group 1, Dubai, October 26, 2021

எவின் லூயிஸ் 35 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸ்கள், 3 பவுண்ட்றிகளுடன் 56 ஓட்டங்களைக் குவித்தார்.

இவரை விட கீரன் பொலார்ட் (26), லெண்ட்ல் சிமன்ஸ் (18), நிக்கலஸ் பூரண் (12), கிறிஸ் கேல் (12) ஆகியோரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

Ravi Rampaul and Kieron Pollard try to get the field just right, South Africa vs West Indies, T20 World Cup, Group 1, Dubai, October 26, 2021

இவர்களுடன் மற்றைய அதிரடி ஆட்டக்காரர்களான அண்ட்ரே ரசல், ஷிம்ரன் ஹெட்மியர், ட்வேன் ப்ராவோ ஆகியோர் துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டனர்.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் சாதிக்க வல்லவர் என கருதப்பட்ட தப்ரெய்ஸ் ஷம்சி 37 ஓட்டங்கள் கொடுத்து விக்கெட் எதனையும் வீழ்த்தவில்லை. மாறாக 32 வயதான ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் திறமையாக பந்துவீசி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் கேஷவ் மஹாராஜ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

The South African players get together at the fall of a West Indian wicket, South Africa vs West Indies, T20 World Cup, Group 1, Dubai, October 26, 2021

 

(என்.வீ.ஏ.)

https://www.virakesari.lk/article/116066

 

 

நியூசிலாந்தை 5 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டது பாகிஸ்தான்

நியூசிலாந்து அணிக்கு எதிரான பரபரப்பான இருபதுக்கு - 20 போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

Babar Azam lofts over the off side, Pakistan vs New Zealand, T20 World Cup 2021, Group 2, Sharjah, October 26, 2021

இருபது 20 உலக கிண்ணத்தில் பாகிஸ்தானின் 2ஆவது வெற்றிக்கு ஹரிஸ் ரவூப் வித்திட்டார்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது உலகக் கி;ண்ண அத்தியாயத்தில் சுப்பர் 12 சுற்றில் குழு 1இல் இடம்பெறும் பாகிஸ்தான் இரண்டாவது வெற்றியை இன்று செவ்வாய்க்கிழமை (26) ஈட்டிக்கொண்டது.

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிறன்று இந்தியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றியை ஈட்டிய பாகிஸ்தான், ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
இதன் மூலம் அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை சிறுகசிறுக பாகிஸ்தான் அதிகரித்துக்கொண்டுசெல்கின்றது.

நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 135 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தடிhய பாகிஸ்தான் 18.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் பாபர் அஸாம் இன்றைய போட்டியில் 9 ஓட்டங்களுடன் வெளியேற, தொடர்ந்து பக்கார் ஸமான் (11), சிரேஷ்ட வீரர் மொஹம்மத் ஹபீஸ் (11) ஆகிய இருவரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் ஆட்டமிழந்து சென்றனர். (63 -3 விக்.)

இதனிடையே சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஆரம்ப வீரர் மொஹம்மத் ரிஸ்வான் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். (69-4 விக்.).

அவரைத் தொடர்ந்து 15ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 87 ஓட்டங்களாக இருந்தபோது இமாத் வசிம் 11 ஓட்டங்களுடன் 5ஆவதாக ஆட்டமிழந்தார். இதன் காரணமாக போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்படுவதாக தென்பட்டது.

ஆனால், மற்றொரு சிரேஷ்ட வீரரும் உலகக் கிண்ணப் போட்டி நெருங்கும்போது மாற்று வீரராக குழாத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவருமான ஷொயெப் மாலிகும் அசிப் அலியும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்தனர்.

அசிப் அலி துணிவை வரவழைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 12 பந்தகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்ட்றி அடங்கலாக 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். ஷொயெப் மாலிக் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களைப் பெற்றார்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் இஷ் சோதி 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றியுதுடன் டிம் சௌதி (25-1 விக்.), ட்ரென்ட் போல்ட் (29-1 விக்.), மிச்செல் சென்ட்னர் (33-1 விக்.) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இப் போட்டியில் முன்னதாக துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நியூஸிலாந்து துடுப்பாட்டத்தில் இருவர் மாத்திரம் அதிகப்பட்சமாக தலா 27 ஓட்டங்களைப் பெற்றனர்.
மேலும் சிறப்பான இணைப்பாட்டங்களை நியூஸிலாந்து வீரர்களால் கட்டி எழுப்ப முடியாமல் போனமையும் அதன் தோல்விக்கு காரணமானது.

ஆரம்ப விக்கட்டில் மார்ட்டின் கப்டில் (17), டெரில் மிச்செல் (27) ஆகிய இருவரும் பகிர்ந்த 36 ஓட்டங்களே அவ்வணியின் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.
இவர்களை விட அணித் தலைவர் கேன் வில்லியம்சன் (25), டெவொன் கொன்வோய் (27) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

மத்திய மற்றும் பின்வரிசையில் எவரும் திறமையை வெளிப்படுத்தவில்லை.
பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ரவுப் 4 ஓவர்களில் 22 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

மொஹம்மத் ஹவீஸ் (16-1 விக்), ஷஹீன் ஷா அப்றிடி (21-1 விக்), இமாத் வசிம் (24-1 விக்.) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இது இவ்வாறிருக்க நியூஸிலாந்து குழுhத்தில் இடம்பெற்ற லொக்கி பேர்குசன் இன்றைய போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் உபாதைக்குள்ளானதால் தொடர்ந்து உலகக் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.  - - (என்.வீ.ஏ.)

Hasan Ali was confident after getting in a direct hit, Pakistan vs New Zealand, T20 World Cup 2021, Group 2, Sharjah, October 26, 2021

Who said revenge? Babar Azam has a laugh with the ever-smiling Kane Williamson at toss, Pakistan vs New Zealand, T20 World Cup 2021, Group 2, Sharjah, October 26, 2021

https://www.virakesari.lk/article/116067

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷை 8 விக்கெட்களால் வீழ்த்தியது இங்கிலாந்து

பங்களாதேஷுக்கு எதிராக துபாய் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற குழு ஒன்றுக்கான இருபதுக்கு - 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து மிக இலகுவாக 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

No description available.

இந்த வெற்றியுடன் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான தனது வாய்ப்பை இங்கிலாந்து அதிகரித்துக் கொண்டுள்ளதுடன் பங்களாதேஷின் வாய்ப்பு கேள்விக் குறியை நோக்கி நகர்கின்றது.

Nasum Ahmed got the first breakthrough, Bangladesh vs England, T20 World Cup, Group 1, Abu Dhabi, October 27, 2021

மேலும் இந்தப் போட்டி முடிவுடன் 2 நேரடி வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள இங்கிலாந்து குழு 1 இல் முதல் இடத்தை வகிக்கின்றது.

மொயீன் அலி, டய்மல் மில்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் ஜேசன் ரோய் குவித்த அதிரடி அரைச் சதமும் இங்கிலாந்தின் வெற்றியை சுலபப்படுத்தின.

Jos Buttler bats with Nurul Hasan behind the poles, Bangladesh vs England, T20 World Cup, Group 1, Abu Dhabi, October 27, 2021

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 125 ஓட்டங்கள் சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 14.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரர் ஜேசன் ரோய் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 38 பந்துகளில் 5 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைக் குவித்தார்.

Eoin Morgan's successful review removed Mushfiqur Rahim, Bangladesh vs England, T20 World Cup, Group 1, Abu Dhabi, October 27, 2021

18 ஓட்டங்களைப் பெற்ற ஜொஸ் பட்லருடன் முதலாவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்த ஜேசன் ரோய், 2ஆவது விக்கெட்டில் மேலும் 83 ஓட்டங்களை டேவிட் மாலனுடன் பகிர்ந்தார்.

மாலன் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்ததுடன் ஜொனி பெயர்ஸ்டோ 8 ஆட்டமிழக்காமல் 8 ஓட்டங்களைப் பெற்றார்.

Eoin Morgan's successful review removed Mushfiqur Rahim, Bangladesh vs England, T20 World Cup, Group 1, Abu Dhabi, October 27, 2021

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ், எதிரணியினரின்  பந்துவீச்சுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

தனது முதலாவது ஓவரில் 10 ஓட்டங்களைக் கொடுத்த மொயின் அலி, தனது 2ஆவது ஓவரில் பங்களாதேஷின் ஆரமப வீரர்களான லிட்டன் தாஸ் (9 ஓட்டங்கள்), மொஹம்மத் நய்ம் (5) ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்தார்.

Mushfiqur Rahim looks to reverse with Jos Buttler behind the stumps, Bangladesh vs England, T20 World Cup, Group 1, Abu Dhabi, October 27, 2021

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷக்கிப் அல் ஹசன் 4 ஓட்டங்களுடன் வோக்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

முஷ்பிக்குர் ரஹிம் (29), அணித் தலைவர் மஹ்முதுல்லாஹ் (19) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைக் கட்டி எழுப்ப முயற்சித்தனர். ஆனால், ரஹிம், அபிப் ஹொசன் (5), மஹ்முதுல்லாஹ் ஆகிய மூவரும் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் களம் விட்டகன்றனர்.

Moeen Ali removed Liton Das and Mohammad Naim in back-to-back deliveries, Bangladesh vs England, T20 World Cup, Group 1, Abu Dhabi, October 27, 2021

நூருள் ஹசன் (16), மஹேதி ஹசன் (11), நசும் அஹ்மத் (9 பந்துகளில் 19 ஆ.இ.) ஆகிய பின்வரிசை வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றிராவிட்டால் பங்களாதேஷ் மேலும் மோசமான நிலையை அடைந்திருக்கும்.

Bangladesh fans turned up in large numbers for the afternoon fixture against England, Bangladesh vs England, T20 World Cup, Group 1, Abu Dhabi, October 27, 2021

இங்கிலாந்து பந்துவீச்சில் டய்மல் மில்ஸ் 4 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லியாம் லிவிங்ஸ்டோன் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொயீன் அலி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.  

 (என்.வீ.ஏ.)

 

https://www.virakesari.lk/article/116117

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பான போட்டியில் ஸ்கொட்லாந்தை 4 விக்கெட்டுகளால் தோற்கடித்தது நமீபியா

பரபரப்பான போட்டியில் நமீபியா அணி ஸ்கொட்லாந்து அணியை 4 விக்கெட்டுகளால் தோற்கடித்துள்ளது.

Ruben Trumpelmann is mobbed by his team-mates in the first over, Scotland vs Namibia, T20 World Cup 2021, Group 2, Abu Dhabi, October 27, 2021

இருபது 20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை பங்குபற்றும் நமீபியா பி குழுவில் அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளை வெற்றிகொண்டு சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

இந்நிலையில் சுப்பர் 12 சுற்றிலும் ஸ்கொட்லாந்துக்கு எதிராக வரலாற்று வெற்றியை இலக்கு வைத்து இன்றைய போட்டியை எதிர்கொண்ட நமீபியா 4 விக்கெட்டுகளால் அந்த வெற்றியை ருசித்தது.

ஸ்கொட்லாந்துக்கு எதிராக அபு தாபியில் இன்று இரவு நடைபெற்ற குழு 2க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று போட்டியில் நமிபியா 4 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
இருபது 20 உலகக் கி;ண்ண கிரிக்கெட்டில் முதல் தடவையாக பங்குபற்றும் நமிபியா இந்த வெற்றியை ஈட்டியதன் மூலம் பிரதான சுற்றில் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று வரலாறு படைத்தது.

நமிபியாவின் இந்த வெற்றியில் ருபென் ட்ரம்ப்பெல்மான், ஜேன் ப்ரைலின்க் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் ஜே.ஜே. ஸ்மித்தின் சிறப்பான துடுப்பாட்டமும் பிரதான பங்காற்றின.

எவ்வாறாயினும் இந்த வெற்றி நமிபியாவுக்கு இலகுவாக அமையவில்லை.
பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இப் போட்டியில் ஸ்கொட்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 110 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா, 19.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆரம்ப விக்கெட்டில் 28 பந்துகளில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்களைப் பெற்ற நமியா 10ஆவது ஓவரில் மேலும் ஒரு விக்கெட் இழப்பக்கு 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ததிருந்தது. 

தொடர்ந்து 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்களை இழந்த நமிபியா தடுமாற்றம் அடைந்தது.

ஆனால் டேவிட் வைஸ், ஜே.ஜே. ஸ்மித் ஆகய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகம் கொடுத்தனர். அதன் பின்னர் 2 விக்கெட்கள் சரிந்த போதிலும் ஸ்மித் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி வெற்றி ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

துடுப்பாட்டத்தில் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் க்ரெய்க் வில்லியம்ஸ் 23 ஓட்டங்களையும் மைக்கல் வென் லிங்கென் 18 ஓட்டங்களையும் டேவிட் வைஸ் 16 ஓட்டங்களையும் பெற்றார்.

ஸ்கொட்லாந்து பந்துவீச்சில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
நமிபியர்களின் பந்து வீச்சுகளை எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கிய ஸ்கொட்லாந்தின் முதல் நான்கு விக்கெட்கள் சரிந்தபோது 6ஆவது ஓவரில் அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 18 ஓட்டங்களாக இருந்தது.

மெத்யூ க்ரொஸ் (19), மைக்கல் லீஸ்க் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களையும் தொடர்ந்து லீஸ்க், கிறிஸ் க்றீவ்ஸ் (25) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களையும் பகிர்ந்ததால் ஸ்கொட்லாந்து 100 ஓட்டங்களைக் கடந்தது.
க்றீவ்ஸ் 27 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்களுடன் 44 ஓட்டங்களைக் குவித்தார்.

நமிபியா பந்துவீச்சில் ருபென் ட்ரம்ப்பெல்மான் 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜென் ப்ரைலின்க் 4 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.  - (என்.வீ.ஏ.)

https://www.virakesari.lk/article/116123

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவிடம் மண்டியிட்டது இலங்கை !

இலங்கைக்கு எதிராக துபாய் விளையாட்டரங்கில் இன்று (28) இரவு நடைபெற்ற குழு 1க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 2 சுற்று கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

இலங்கை அணியின் முன்வரிசையில் ஏற்படும் சரிவுகள் அதன் தோல்விக்கு மீண்டும் காரணமாக அமைந்தது. ஆரம்ப வீரர்களில் ஒருவர் பிரகாசித்தால் மற்றையர் சோடை போகும் கதை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இரண்டு வீரர்களும் சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுக்காமல் போவதால் அடுத்துவரும் துடுப்பாட்ட வீரர்கள் நெருக்கடிக்கு மத்தியில் துடுப்பெடுத்தாட வேண்டி ஏற்படுகின்றது.
இந்தக் குறையை அணி முகாமைத்துவம் நிவர்த்தி செய்யாவிட்டால் இறுதிச் சுற்று வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்காமல் போகலாம்.

இதேவேளை, டோவிட் வோர்னர், அணித் தலைவர் ஆரொன் பின்ச் ஆகிய இருவரும் 41 பந்துகளில் ஆர்ம்ப விக்கெட்டில் பகிர்ந்த 70 ஓட்டங்கள் அவுஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு பெரிய அளவில் உதவியது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை, 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெத்தும் நிஸ்ஸன்க தவறான அடி தெரிவினால் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

குசல் பெரேராவும் சரித் அசலன்கவும் பொறுமை கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அசலன்க 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். சற்று நேரத்தில் குசல் பெரேராவும் 35 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

அவிஷ்க பெர்னாண்டோ (4), வனிந்து ஹசரங்க (4) ஆகிய இருவரும் மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி 4 ஓட்டங்களுடன் வெளியேறினர்.

பானுக்க ராஜபக்ஷவும் தசுன் ஷானக்கவும் 6ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த அணியை கட்டி எழுப்ப முயற்சித்தனர். ஆனால் 40 ஓட் டங் களைப் பகர்ந்திருந்தபோது ஷானக்க 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பானுக்க ராஜபக்ஷ 33 ஓட்டங்களுடனும் சாமிக்க கருணாரட்ன 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் அடம் ஸம்பா 4 ஓவர்களில் 12 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன், மிச்செல் ஸ்டார்க் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

155 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 17 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 155 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.

முதலாவதாக ஆட்டமிழந்த ஆரொன் பின்ச் 23 பந்துகளில் 5 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 37 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டமிழந்தார். துடுப்பாட்ட வரிசையில் தரமுயர்த்தப்பட்ட க்ளென் மெக்ஸ்வேல் ஆடுகளம் நுழைந்த சொற்ப நேரத்தில் 5 ஓட்டஙகளுடன் வெளியேறினார்.

மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டேவிட் வோர்னர் 42 பந்துகளில் 10 பவுண்ட்றிகளுடன் 75 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஸ்டீவன் ஸ்மித்துடன 3ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை அண்மிக்கச் செய்தார்.

தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியை உறுதி செய்த ஸ்டீவன் ஸ்மித் 28 ஓட்டங்களுடனும் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களுக்கு 2விக்கெட்களை விழ்த்தினார்.

ஆட்டநாயகன் அடம் ஸம்பா   - (என.வீ.ஏ.)

David Warner raises his half-century

Adam Zampa ended a fifty stand with Charith Asalanka's wicket, Australia vs Sri Lanka, 2021 Men's T20 World Cup, Dubai, October 28, 2021

Mitchell Starc bowled Kusal Perera with a searing yorker, Australia vs Sri Lanka, 2021 Men's T20 World Cup, Dubai, October 28, 2021

 

https://www.virakesari.lk/article/116196

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷை 3 ஓட்டங்களால் வீழ்த்தியது மேற்கிந்தியத்தீவுகள்

பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஷார்ஜா விளையாட்டரங்கில் இன்று (29) நடைபெற்ற குழு 1 க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர்  12 சுற்று கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

Kieron Pollard flips the coin at the toss, Bangladesh vs West Indies, T20 World Cup, Group 1, Sharjah, October 29, 2021

Nicholas Pooran leads the team off after a slim win, Bangladesh vs West Indies, T20 World Cup, Group 1, Sharjah, October 29, 2021

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

Nicholas Pooran provide the innings with some impetus in the death overs, Bangladesh vs West Indies, T20 World Cup, Group 1, Sharjah, October 29, 2021

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.

Kieron Pollard walks off the field, retired hurt, Bangladesh vs West Indies, T20 World Cup, Group 1, Sharjah, October 29, 2021

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பாக ரொஸ்டன் சேஸி 39 ஓட்டங்களையும் நிக்கொலஸ் பூரான் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

Mahedi Hasan celebrates with team-mates after dismissing Shimron Hetmyer, Bangladesh vs West Indies, T20 World Cup, Group 1, Sharjah, October 29, 2021

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் மெஹிந்தி ஹசன், முஸ்தபிஷுர் ரஹ்மான் மற்றும் சொரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Chris Gayle loses his stumps to Mahedi Hasan, Bangladesh vs West Indies, T20 World Cup, Group 1, Sharjah, October 29, 2021

இந்நிலையில், 20 ஓவர்களில் 143 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 3 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

Mahmudullah played a crucial role but couldn't see Bangladesh through, Bangladesh vs West Indies, T20 World Cup, Group 1, Sharjah, October 29, 2021

பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டன் தாஸ் 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

Chris Gayle dives forward to dismiss Soumya Sarkar, Bangladesh vs West Indies, T20 World Cup, Group 1, Sharjah, October 29, 2021

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ரவி ராம்போல், ஜேசன் கோல்டர், அந்ரே ரசல்,அகவில் கொசைன் மற்றம் டுவைன் பிராவோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

Andre Russell and Chris Gayle celebrate their thrilling win with team-mates, Bangladesh vs West Indies, T20 World Cup, Group 1, Sharjah, October 29, 2021

3 ஓட்டங்களால் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நிக்கொலஸ் பூரன் தெரிவுசெய்யப்பட்டார்.

 

https://www.virakesari.lk/article/116264

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.