Jump to content

T 20 உலக கோப்பை 2021 செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிப் அலியின் அதிரடியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி ஆசிப் அலியின் அதிரடியில் 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று சுப்பர் 12 சுற்றில் தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்றுள்ளது.

Afghanistan players celebrate after Mohammad Nabi dismissed Fakhar Zaman, Afghanistan vs Pakistan, T20 World Cup, Group 2, Dubai, October 29, 2021

இருபதுக்கு - 20 உலகக்கிண்ண தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

நாணயச்சுழற்றிசியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. 

Babar Azam swats one away, Afghanistan vs Pakistan, T20 World Cup, Group 2, Dubai, October 29, 2021

76 ஓட்டங்களுக்குள்  6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின், அணித் தலைவர்  முகமது நபி, குல்பதின் நயிப் இருவரும் அதிரடியாக ஆடினர்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 147 ஓட்டங்களை  சேர்த்தது. முகமது நபி, குல்பதின் நயிப் தலா 35 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

The Afghanistan players get into a huddle, Afghanistan vs Pakistan, T20 World Cup, Group 2, Dubai, October 29, 2021

இதையடுத்து 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆரம்ப ஆட்டக்காரர் ரிஸ்வான் 8 ஓட்டங்களுடனும் பகர் சமான் 30 ஓட்டங்களுடனும் முகமது ஹபீஸ் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

Mujeeb Ur Rahman takes off in celebration after getting Mohammad Rizwan, Afghanistan vs Pakistan, T20 World Cup, Group 2, Dubai, October 29, 2021

அணித் தலைவர் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 51 ஓட்டங்களுடன் வெளியேறினார். சொய்ப் மாலிக் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஆசிப் அலி அதிரடியாக ஆடி ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Mohammad Nabi pulls one away, Afghanistan vs Pakistan, T20 World Cup, Group 2, Dubai, October 29, 2021

இறுதியில், பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் பாகிஸ்தான் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Imad Wasim celebrates a wicket with his team-mates, Afghanistan vs Pakistan, T20 World Cup, Group 2, Dubai, October 29, 2021

Mohammad Rizwan whips the bails off, but Rahmanullah Gurbaz is safely in, Afghanistan vs Pakistan, T20 World Cup, Group 2, Dubai, October 29, 2021

 

https://www.virakesari.lk/article/116278

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியை தென்னாபிரிக்காவுக்கு தாரைவார்த்தது இலங்கை !

இலங்கை அணிக்கு எதிராக ஷார்ஜா விளையாட்டரங்கில் இன்று (30) நடைபெற்ற குழு 1 க்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுப்பர்  12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

Quinton de Kock takes a knee before the start of the game, South Africa vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 30, 2021

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

Charith Asalanka plays powerfully to the leg side, South Africa vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 30, 2021

அதன்படி முதலில் துடுப்படுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.

Temba Bavuma congratulates Quinton de Kock after the run-out of Charith Asalanka, South Africa vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 30, 2021

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பதும் நிசங்க 70 ஓட்டங்களையும் சரித்த அசலங்க 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் தப்ரைஸ் சம்ஷி மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அன்ரிஜ் நொர்ட்ஜே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

The Sri Lankans get into a huddle, South Africa vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 30, 2021

இந்நிலையில், 143 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி அணித்தலைவர் பவுமாவின் நிதான ஆட்டத்துடன் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்து 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

Dasun Shanaka's direct hit caught Rassie van der Dussen short, South Africa vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 30, 2021

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக அணித் தலைவர் பவுமா 46 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

Temba Bavuma makes room to play on the off side, South Africa vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 30, 2021

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ஹெட்ரிக் சாதனை படைத்த வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சாமிர 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

David Miller and Kagiso Rabada celebrate after the win, South Africa vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 30, 2021

இப் போட்டியின் ஆட்டநாயகனாக சம்ஷி தெரிவு செய்யப்பட்டார்.

Aiden Markram shapes to guide the ball towards the covers, South Africa vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 30, 2021

The Sri Lanka fans were in attendance, and in good voice, South Africa vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 30, 2021

Wanindu Hasaranga is congratulated after picking up a wicket, South Africa vs Sri Lanka, T20 World Cup, Group 1, Sharjah, October 30, 2021

https://www.virakesari.lk/article/116312

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரம எதிரிகளை 8 விக்கெட்டுகளினால் வீழ்த்திய இங்கிலாந்து

2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தின் சூப்பர் 12 ஆட்டத்தில் பரம எதிரியான அவுஸ்திரேலியாவை இங்கிலாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ENG AUS

டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதனால் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, இங்கிலாந்து பந்து வீச்சாளர்களது பந்து பரிமாற்றங்களில் திக்குமுக்காடி 20 ஓவர்கள் நிறைவில் 10 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

அணித்தலைவர் ஆரோன் ஃபின்ச் மாத்திரம் அதிகபடியாக 44 (49) ஓட்டங்களை பெற்றார்.

இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் கிறிஸ் ஜோர்தன் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் டைமல் மில்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், அடில் ரஷித், லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

126 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்களாக ஜேசன் ரோய் மற்றும் பட்லர் களமிறங்கினர்.

முதல் பவர்-பிளே வரை அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சுகளை சிதறித்த இவர்கள் 6 ஓவர்கள் நிறைவில் 66 ஓட்டங்களை குவித்தனர்.

இவர்கள் ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி அடித்தார்கள், இது இதுவரை உலகக் கிண்ணத்தில் முதல் பவர்-பிளேயில் ஒரு அணி பெற்றுக் கொள்ளும் அதிகபடியான ஓட்ட எண்ணிக்கை ஆகும்.

பின்னர் 6.2 ஆவது ஓவரில் அடம் சாம்பாவின் பந்து வீச்சில் ஜேசன் ரோய் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த டேவிட் மலனும் 8 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இது அவுஸ்திரேலிய அணிக்கு சற்று ஆறுதல் அளித்தது.

எனினும் பின்னர் களமிறங்கிய ஜோனி பெயர்ஸ்டோவுடன் கைகோர்த்தாடிய பட்லர், 'ஹிட்லராக' உருவெடுத்து தனது கோர முகத்தை வெளிக்காட்டினார்.

இறுதியாக இங்கிலாந்து அணி 11.4 ஓவர்கள் நிறைவில் 126 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

பட்லர் 32 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்களுடனும், ஜோனி பெயர்ஸ்டோ 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

Image

 

 

https://www.virakesari.lk/article/116328

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை துவம்சம் செய்தது நியூஸிலாந்து

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

விராத் கோஹ்லி தலைமையிலான இந்தியாவுக்கு எதிராக துபாய் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குழு 2க்கான சுப்பர் 12 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ட்ரென்ட் போல்டின் பந்துவீச்சின் உதவியதுடன் நியூஸிலாந்து 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

IMG_20211101_000503.jpg
 

இப் போட்டியில் அடைந்த தோல்வியுடன் இந்தியா அரை இறுதிக்குச் செல்வது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.

சுப்பர் 12 சுற்றுக்கான தனது ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானிடமும் இந்தியா தோல்வி அடைந்திருந்தது. 

பாகிஸ்தானிடம் நியூஸிலாந்தும் தோல்வி அடைந்திருந்தது.

துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் எமது அணி சிறப்பாக விளையாடியதென்று தன்னால் கூறமுடியாது என போட்டி முடிவில் இந்திய அணித் தலைவர் விரோத் கோஹ்லி தெரிவித்தார்.

இதேவேளை தமது அணியின் வெற்றியை நியூஸிலாந்து அணித் தலைவர் பெரிதும் பாராட்டினார்.

IMG_20211101_000151.jpg
 

ட்ரென்ட் போல்டும் இஷ் சோதியம் தங்களிடையே 5 விக்கெட்களைப் பகிர்ந்து இந்தியாவை துவம்சம்செய்திருந்தனர்.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பலம்வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக்கொண்ட இந்திய அணியில் 7ஆம் இலக்க வீpரர் ரவிந்த்ர ஜடேஜா அதிகப்பட்சமாக ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களைப் பெற்றார்.
ரவிந்த்ர ஜடேஜாவைவிட ஹார்திக் பாண்டியா மாத்திரமே (23) இருபது ஓட்டங்களுக்கு மேல் பெற்றார்.

இந்திய அணியில் அதிரடிக்கு பெயர்பெற்ற கே.எல்.ராகுல் (18), இஷான் கிஷான் (4), ரோஹித் ஷர்மா (14), அணித் தலைவர் விராத் கோஹ்லி (9) ரிஷாப் பன்ட் (12) ஆகய அனைவருமே நியூஸிலாந்தின் பந்துவீச்சுக்கனை எதிர்கொள்ள முடியாமல் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளையும் இஷ் சோதி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

111 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 112ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.

மார்ட்டின் கப்டில் 20 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் டெரில் மிச்செல், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியை சுலபமாக்கினர்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டெரில் மிச்செல் 4 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 49 ஓட்டங்களைக் குவித்தார். கேன் வில்லியம்சன் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
https://www.virakesari.lk/article/116371

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தியாவை துவம்சம் செய்தது நியூஸிலாந்து

மகிழ்ச்சி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதிக்குள்

(ஷார்ஜாவிலிருந்து நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக ஷார்ஜாவில்  திங்கட்கிழமை (1) இரவு நடைபெற்ற குழு 1க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 26 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை, அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

இப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் மாத்திரம் இங்கிலாந்துக்கு 125 ஓட்டங்களைத் தாரைவார்த்ததாலேயே இலங்கை தோல்வியைத் தழுவியது.

ஜொஸ் பட்லர் குவித்த அபார சதம், அவரது அணியினரின் துல்லியமான பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகியவை இங்கிலாந்தை இலகுவாக வெற்றிபெறச் செய்தது.

இதன் மூலம் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் 4ஆவது தொடர்ச்சியான வெற்றியுடன் இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 163 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரரான ஜொஸ் பட்லர் கடைசிவரை துடுப்பெடுத்தாடி 67 பந்துகளில் 6 சிக்ஸ்கள், 6 பவுணட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டார்.

துஷ்மன்த சமீர கடைசி ஓவரை வீச ஆரம்பித்தபோது 87 ஓட்டங்களைப் பெற்றிருந்த ஜொஸ் பட்லர், 4, 2, 2, 0, 0, 6 என 14 ஓட்டங்களை விளாசி சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
அத்துடன் நடப்பு இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் பெறப்பட்ட முதலாவது சதமாகவும் இது அமைந்தது.

ஜொஸ் பட்லர் 93 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கொடுத்த மிகவும் கடினமான பிடியை பெத்தும் நிஸ்ஸன்க கடும் முயற்சியின் பின்னர் தவறவிட்டார்.

இங்கிலாந்தின் மற்றைய ஆரம்ப வீரர் ஜேசன் ரோய் (9) மற்றும் டேவிட் மாலன் (6), ஜொனி பெயார்ஸ்டோவ் (0) ஆகியோர் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழக்க 6ஆவது ஓவரில் இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 35 ஓட்டங்களாக இருந்தது.

அத்துடன் 10 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 47 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. ஆனால், அதன் பின்னர் அதரடி ஆட்டத்தில் இறங்கிய இங்கலாந்து எஞ்சிய 10 ஓவர்களில் மேலதிகமாக ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 116 ஓட்டங்களைக் குவித்து மொத்த எண்ணிக்கையை 163 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டது.

இதனிடையே ஜொஸ் பட்லரும் அணித் தலைவர் ஒய்ன் மோர்கனும் 4ஆவது விக்கெட்டில் 78 பந்துகளில் பெறுமதிமிக்க 112 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஒய்ன் மோர்கன் 36 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்ட்றியுடன் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

மொயின் அலி 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கையின் வனிந்து ஹசரங்க திறமைiயாக பந்துவீசி 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் தனது 30ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 50 விக்கெட்களைப் பூர்த்திசெய்தார்.

164 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

முதலாவது ஓவரிலேயே பெத்தும் நிஸ்ஸன்க (1) ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தமை இலங்கையை தடுமாற்றத்துக்கு உள்ளாக்கியது.

குசல் பெரேரா (7) மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினார்.

சரித் அசலன்க (21), அவிஷ்க பெர்னாண்டோ 13), பானுக்க ராஜபக்ஷ (26) ஆகிய மூவரும் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழக்க 11ஆவது ஓவரில் இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 76 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து 6ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த வனிந்து ஹசரங்கவும் அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் சிறுக சிறுக ஓட்டவேகத்தை அதிகரித்து அதிரடியில் இறங்கி இலங்கைக்கு நம்பிக்கையைக் கொடுத்தனர்.

இவர்கள் இருவரும் 36 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது வனிந்து ஹசரங்க 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

வனிந்து ஹசரங்க உயர்த்தி அடித்த பந்தை நோக்கி 25 யார் தூரம்வரை ஓடிய ஜேசன் ரோய் பந்தை அபாரமாகப் பிடித்தார். ஆனால். அவர் எல்லைக்கோட்டுக்கு மிக அருகாமையில் சென்றதால் பந்தை மாற்றுவீரர் பில்லிங்ஸை நோக்கி வீச அவர் பந்தைப் பிடித்து ஹசரங்கவை ஆட்டமிழக்கச்செய்தார்.

ஹசரங்கவைத் தொடர்ந்து சொற்ப நேரத்தில் அவசரப்பட்டு ஓட்டம் ஒன்றை எடுக்க விளைந்த தசுன் ஷானக்க அநாவசியமாக 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அத்துடன் இலங்கையின் எதிர்பார்ப்பு அற்றுப் போனதுடன் இலங்கை இரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்ந்து துஷ்மன்த சமீர (4), சாமிக்க கருணாரட்ன (0), மஹீஷ் தீக்ஷன (2) ஆகியோர் ஆட்டமிழக்க இங்கிலாந்து அபார வெற்றியீட்டியது. லஹிரு குமார ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் மொயீன் அலி 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கிறிஸ் ஜோர்டன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

 

புலி பதுங்கியது பாய்வதற்குத்தான்

இலங்கையை கட்டுப்படுத்த சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரின் சேவையை இழந்தாலும், ஏனைய பந்துவீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இயன் மோர்கன் வெற்றிபெறச் செய்துள்ளார்.

euKjN2C2?format=jpg&name=small

இந்த வெற்றியின் மூலம் நான்கு வெற்றிகளுடன் இங்கிலாந்து 2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ண போட்டியில் அரையிறுதிக்குள் முதலாவது அணியாக நுழைந்துள்ளது.

இன்றைய தோல்வியின் மூலம் போட்டியின் அடுத்த சுற்றுக்கு எளிதாக நுழைவதற்கான வாய்ப்பினை இலங்கை இழந்துள்ளது. 

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக எஞ்சியுள்ள போட்டியில் இலங்கை வெற்றி பெற்றாலும், குழு 1 இல் ஏனைய அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் முடிவுகள், மற்றும் சராசரி விகிதம் என்பன இலங்கை அணிக்கான அரையிறுதி வாய்ப்பினை குறைந்த அளவில் வழங்கும்.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களை குவிப்பதற்கான வாய்ப்பினை வழங்கவில்லை.

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களின் அபாரமான ஆட்டத்தால் இங்கிலாந்து ஆரம்பத்தில் 36 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. 

பின்னர் ஜோடி சேர்ந்து நிலைமையை புரிந்து கொண்ட பட்லர் மற்றும் அணித்தலைவர் இயன் மோர்கனுக்கு 12 ஆவது ஓவர் வரை பதுங்கியிருந்தனர்.

12 ஆவது ஓவரின் நிறைவில் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து 61 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது இங்கிலாந்து.

புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் எனத் தெரியாத இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள ஹிட்லராக மாறினார் பட்லர்.

ஒரு கட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீரர்கள் 13 ஆவது ஓவருடன் அதிரடியான ஆட்டத்தை ஆரம்பித்தனர்.

அந்த ஓவரில் 14 ஓட்டங்களை எடுத்திருந்த பட்லரும், அணித் தலைவர் மோர்கனும், அதன்பிறகு தங்களது தாக்குதல் துடுப்பாட்டத்தை விட்டதாக தெரியவில்லை.

Image

மகேஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சார்களைத் தவிர ஏனைய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர்.

இறுதிக் கட்டத்தில் ஹசரங்கவின் பந்து வீச்சில் மோர்கன் 40 (36) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை இலங்கைக்கு சற்று ஆறுதல் அளித்தது.

எனினும் வேகப் பந்து வீச்சாளர்களின் பந்துப் பரிமாற்றங்களை தொடர்ந்தும் துவம்சம் செய்த பட்லர் இறுதிப் பந்தில் ஒரு சிக்ஸருடன் டி-20 கிரிக்கெட் அரங்கில் தனது முதல் சதத்தை பெற்றார்.

மொத்தமாக 67 பந்துகளை எதிர்கொண்ட அவர், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களை பெற்றார்.

Image

20 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றது.

இதில் 128 ஓட்டங்கள் துஷ்மந்த சமீர, லஹிரு குமார, சமிக்க கருணாரத்ன மற்றும் தசுன் ஷனக ஆகிய இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் வழங்கியவை ஆகும்.

வேகப்பந்து வீச்சாளர்கள் சார்பில் ஒரே ஒரு விக்கெட்டை மாத்திரம் துஷ்மந்த சமீர கைப்பற்றினார்.

பின்னர் 164 என்ற இலக்கினை துரத்திய இலங்கை 19 ஓவர்களில் 137 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

ISP_9229-960x639.jpg

14 ஆவது ஓவரில், இங்கிலாந்து தனது முக்கிய பந்துவீச்சாளரான டிமல் மில்ஸை இழந்தது, எனினும் மீதமுள்ள பந்துவீச்சாளர்கள் இடைவெளியை நிரப்பினர்.

எட்டு ஓவரில் இலங்கையின் கடைசி ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்திய அவர்கள் இங்கிலாந்தை நான்காவது வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபடியாக வனிந்து ஹசரங்க 34 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ மற்றும் அணித் தலைவர் தசூன் சானக்க ஆகியோர் தலா 26 ஓட்டங்களை பெற்றனர்.

https://www.virakesari.lk/article/116429

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6 விக்கெட்டுகளால் தென்னாபிரிக்கா வெற்றி !வெளியேறியது பங்களாதேஷ் !

(அபுதாபியிலிருந்து நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் அபு தாபியில் இன்று செவ்வாய்க்கிழமை (2) நடைபெற்ற குழு 1 க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் ஆற்றல்களை வெளிப்படுத்திய தென் ஆபிரிக்கா 6 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

Liton Das and Soumya Sarkar watch as South Africa celebrate an early wicket, Bangladesh vs South Africa, T20 World Cup 2021, Group 1, Abu Dhabi, November 2, 2021

இந்த வெற்றியுடன் அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை தென் ஆபிரிக்கா அதிகரித்துக்கொண்டதுடன் பங்களாதேஷ், சுப்பர் 12 சுற்றுடன் வெளியேறவுள்ளது.

Temba Bavuma and Mahmudullah at the coin toss, Bangladesh vs South Africa, T20 World Cup 2021, Group 1, Abu Dhabi, November 2, 2021

கெகிசோ ரபாடா, அன்ரிச் நோக்யா ஆகியோரின் மிகத் திறமையான பந்துவீச்சுகளும் தென் ஆபிரிக்காவின் வெற்றியை இலகுபடுத்தியது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ், 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 84 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

The South African team gets into a huddle before the game, Bangladesh vs South Africa, T20 World Cup 2021, Group 1, Abu Dhabi, November 2, 2021

தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட பங்களாதேஷ் சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்தது.

Liton Das sets off for a run, Bangladesh vs South Africa, T20 World Cup, Group 1, Abu Dhabi, November 2, 2021

ஆரம்ப வீரர்களில் ஒருவரான லிட்டன் தாஸ் (24), மத்திய வரிசையில் மஹேதி ஹசன் (27), ஷமிம் ஹசன் (11) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

Mahedi Hasan in action, Bangladesh vs South Africa, T20 World Cup, Group 1, Abu Dhabi, November 2, 2021

தென் ஆபிரிக்கா பந்துவீச்சில் அன்ரிச் நோக்யா 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தம்ரெய்ஸ் ஷம்சி 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Dwaine Pretorius and David Miller celebrate the wicket of Afif Hossain, Bangladesh vs South Africa, T20 World Cup, Group 1, Abu Dhabi, November 2, 2021

85 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 13.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

Kagiso Rabada and Anrich Nortje picked up three wickets each, Bangladesh vs South Africa, T20 World Cup, Group 1, Abu Dhabi, November 2, 2021

ஒரு கட்டத்தில் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்த தென் ஆபிர்ககா சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும் அணித் தலைவர் டெம்பா பவுமா ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் ரசி வென் டேர் டுசென் 22 ஓட்டங்களையும் குவின்டன் டி கொக் 16 ஓட்டங்களையும் பெற்று தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச்செய்தனர்.

Kagiso Rabada and Anrich Nortje picked up three wickets each, Bangladesh vs South Africa, T20 World Cup, Group 1, Abu Dhabi, November 2, 2021

Taskin Ahmed dismissed South Africa's Reeza Hendricks in the very first over , Bangladesh vs South Africa, T20 World Cup, Group 1, Abu Dhabi, November 2, 2021

பவுமா, வென் டேர் டுசென் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை இலகுபடுத்தினர்.

Temba Bavuma pulls the ball, Bangladesh vs South Africa, T20 World Cup, Group 1, Abu Dhabi, November 2, 2021

Taskin Ahmed celebrates with team-mates, Bangladesh vs South Africa, T20 World Cup, Group 1, Abu Dhabi, November 2, 2021

Taskin Ahmed dismissed South Africa's Reeza Hendricks in the very first over , Bangladesh vs South Africa, T20 World Cup, Group 1, Abu Dhabi, November 2, 2021

 

https://www.virakesari.lk/article/116493

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமிபியாவை வெற்றிகொண்ட பாகிஸ்தான் அரை இறுதியில் விளையாடத் தகுதி

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் இங்கிலாந்தை தொடர்ந்து இரண்டாவது அணியாக பாகிஸ்தான் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

IMG_20211103_031123.jpg

அபு தாபியில் செவ்வாய்க்கிழமை (2) இரவு நடைபெற்ற நமிபியாவுக்கு எதிரான குழு 2க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலமே பாகிஸ்தான் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

பாகிஸ்தான் இன்றுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றிளை ஈட்டி தோல்வி அடையாத அணியாகத் திகழ்கின்றது.

மொஹம்மத் ரிஸ்வான், அணித் தலைவர் பாபர் அஸாம், சிரேஷ்ட வீரர் மொஹம்மத் ஹவீஸ் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் பாகிஸ்தானின் வெற்றிக்கு அடிகோலின.

ரிஸ்வான், அஸாம் ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் இரண்டாவது தடவையாக 100 ஓட்டங்களுக்கு மேல் பகிர்ந்தமை விசேட அம்சமாகும்.

இவர்கள் இருவரும் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ரிஸ்வான் 50 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்ட்றிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 79 ஓட்ட்ஙகளையும் பாபர் அஸாம் 49 பந்துகளில் 7 பவுண்ட்றிகளுடன் 70 ஓட்டங்களையும் பெற்றனர். நடப்பு இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ரிஸ்வான் இரண்டாவது அரைச் சதத்தையும் பாபர் அஸாம் மூன்றாவது அரைச் சதத்தையும் பூர்த்திசெய்தனர்.

இவர்களை விட 41 வயதான மொஹம்மத் ஹபீஸ் 16 பந்துகளில் 5 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றார். இவர் ரிஸ்வானுடன் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

190 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா, 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று 45 ஓட்டங்களால் கௌரவமான தோல்வியைத் தழுவியது.

நமிபியா துடுப்பாட்டத்தில் டேவிட் வைஸ் 31 பந்துகளில் 3 பவுண்ட்றிகள, 2 சிக்ஸ்களுடன் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றார்.

க்ரெய்க் வில்லியம்ஸ் 37 பந்துகளில் 5 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸுடன் 40 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் ஸ்டீவன் பார்ட் 29 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

2021 டி-20 உலகக் கிண்ணமும் பாகிஸ்தானின் விஸ்வரூபமும்

2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ண போட்டியின் சூப்பர் 12 சுற்றில் குழு 2 இல் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

Pakistan 16x9 1

நடப்பு டி-20 உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் பரம எதிரியான இந்தியாவை 10 விக்கெட்டுகளினால் வீழ்த்தி உலகக் கிண்ண வரலாற்றைப் படைத்தது.

இந்தியாவுடனான வெற்றியின் உறுதியான விதம் அணியில் மன வலிமையையும் தன்னம்பிக்கையையும் ஊட்டியது. அதிலிருந்து பாகிஸ்தான் அணியின் வெற்றிப் பயணம் ஆரம்பமானது.

இந்தியா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடனான தொடர் வெற்றிக்கு பின்னர் செவ்வாயன்று அபுதாபியில் அரங்கேறிய ஆட்டத்திலும் நமீபியாவை 45 ஓட்டங்களினால் வீழ்த்தியது பாகிஸ்தான்.

இந்த நான்காவது தொடர் வெற்றியுடன் அரையிறுதிக்குள் அணி நுழைந்துள்ளதுடன், சூப்பர் 12 சுற்றின் குழு 2 இல் முதலிடத்தையும் பிடித்துள்ளது.  

2021 டி-20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக பாகிஸ்தான் தான் எதிர்கொண்ட போட்டிகளில் நிலையற்ற தன்மையினை வெளிப்படுத்தியது. இதனால் கணிக்க முடியாத பாகிஸ்தான் அணியின் போட்டி முடிவுகள் ரசிகர்களை பெரும் கவலையடையச் செய்தது.

ஆனால் டி-20 உலகக் கிண்ணத்தில் இதுவரையான போட்டிகளில் அவர்கள் காட்டிய நிலையான வெற்றி எதிரிகளுக்கு சற்றும் இடம் கொடுக்கவில்லை.

அது மாத்திரமன்றி முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு அணிக்குள் தற்சமயம் ஒற்றுமை உணர்வு வேரூன்றி இருப்பதை அவர்களின் போட்டிகளில் காணலாம்.  இது அவர்களில் அடுத்தடுத்த வெற்றிப் பாதைக்கும் பிரதானமாக கைகொடுக்கிறது எனலாம்.

நடப்பு டி-20 உலகக் கிண்ணத்தை பொறுத்தமட்டியில் அனைத்துப் போட்டிகளிலும் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள், எதிரிகளுக்கு சவாலான பேட்டிங் தொனியை அமைத்துள்ளனர்.

அவர்கள் விக்கெட்டு இடைவெளிக்கு இடையில் கடினமாக தூரம் உள்ளது. அனுபவம் வாய்ந்த மொஹமட் ஹபீஸ் மற்றும் மாலிக் பயனுள்ள பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். அதே நேரத்தில் அலி சில ஆட்டங்களில் சிறந்த ஃபினிஷராக இருந்துள்ளார்.

அதேநேரம் அவர்களின் பந்து வீச்சாளர்களும் குறிப்பாக வேகப் பந்து வீச்சாளர்கள் எதிரிகளின் விக்கெட்டுகளை வேட்டையாடி வருகின்றனர்.

நான்கு ஆட்டங்களுக்கான நாணய சுழற்சிகளிலும் அவர்கள் மூன்றில் வென்றுள்ளது அவர்களுக்கான அதிர்ஷ்டத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. எனினும் அதிர்ஷ்டத்துக்கு மாறாக அணியின் ஒவ்வொரு வீரரது பெயர்களும் ஆட்டங்களில் நிலைத்து நின்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த டி-20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி எடுத்துள்ள விஸ்வரூபம் எதிர் அணிக்கு மரண பயத்தை காண்பித்துள்ளதுடன், எதிர் அணி ரசிகர்களையும் பொறாமையின் உச்ச கட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது எனலாம்.

 

https://www.virakesari.lk/article/116503

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்டிலின் அதிரடியில் ஸ்கொட்லாந்தை வென்றது நியூசிலாந்து

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

ஸ்கொட்லாந்துக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (3 ) நடைபெற்ற மிக முக்கிய குழு 1க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 16 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொண்டது.

Martin Guptill raises his bat after scoring a fifty, New Zealand vs Scotland, T20 World Cup, Group 2, Dubai, November 3, 2021

இந்த வெற்றியுடன் குழு 2 இலிருந்து அரை இறுதிக்கு இரண்டாவது அணியாக செல்வதற்கான தனது வாய்ப்பை நியஸிலாந்து சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

Ish Sodhi picked up the wicket of George Munsey, New Zealand vs Scotland, T20 World Cup, Group 2, Dubai, November 3, 2021

35 வயதான மார்ட்டின் கப்டிலின் அதிரடி துடுப்பாட்டம் நியூஸிலாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றியது.

இப் போடடியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களைக் குவித்தது.

Trent Boult celebrates with his team-mates, New Zealand vs Scotland, T20 World Cup, Group 2, Dubai, November 3, 2021

நியூஸிலாந்து துடுப்பாட்டத்தில் ஒரு புறத்தில் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க, மறுபுறத்தில் மார்ட்டின் கப்டில் தனி ஒருவராக அதரடியாக ஓட்டங்களைக் குவித்து நியூஸிலாந்துக்கு பலம் சேர்த்தார்.

Martin Guptill goes for the big one, New Zealand vs Scotland, T20 World Cup, Group 2, Dubai, November 3, 2021

56 பந்துகளை எதிர்கொண்ட மார்ட்டின் கப்டில் 7 சிக்ஸ்கள், 6 பவுண்ட்றிகளுடன் 93 ஓட்டங்களை விளாசி 7 ஓட்டங்களால் சதத்தைத் தவறவிட்டார்.

இவரைவிட க்லென் பிலிப்ஸ் 33 ஓட்டங்களைப் பெற்றார்.

Glenn Phillips hits one behind, New Zealand vs Scotland, T20 World Cup, Group 2, Dubai, November 3, 2021

மார்ட்டின் கப்டிலும் கிலென் பில்ப்ஸும் 4ஆவது விக்கெட்டில் 105 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஸ்கொட்லாந்து பந்துவீச்சில் சபியான் ஷரிப் 28 ஓட்டங்களுக்கு 2விக்கெட்களையும் ப்றெட் வீல் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

The Scotland players get into a huddle, New Zealand vs Scotland, T20 World Cup, Group 2, Dubai, November 3, 2021

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

மத்தியவரிசை வீரர் மைக்கல் லீக் 20 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 3 சிக்ஸ்கள், 3 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைக் குவித்தார்.

இவரை விட மெத்யூ க்ரொஸ் 27 ஓட்டங்களையும் ஜோர்ஜ் மன்சே 22 ஓட்டங்களையும் ரிச்சி பெரிங்டன் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இஷ் சோதி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
 

https://www.virakesari.lk/article/116565

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2021 டி-20 உலகக் கிண்ண பயணத்தை வெற்றியுடன் நிறைவுக்கு கொண்டு வந்த இலங்கை

அபுதாபியில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் 12 சுற்றின் தனது இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான மேற்கிந்தியத்தீவுகளை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று 2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ண பயணத்தை வெற்றியுடன் நிறைவுக்கு கொண்டு வந்தது இலங்கை அணி.

ISP_3052-960x639.jpg

இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும், இலங்கை அணி சூப்பர் 12 சுற்றில் மூன்று போட்டிகளில் ஏற்கனவே தோல்வியடைந்துள்ளமையினால் டி-20  உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு கை நழுவிப்போயுள்ளது.

எனினும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்கள் கடந்த கால வருத்தங்களிலிருந்து மீண்டு நம்பிக்கைக்கும் வெற்றிப் பாதைக்கும் திரும்பியுள்ளது.

190 ஓட்டம் என்ற இலக்கை நிர்ணயிப்பதற்காக இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சுதந்திரத்துடனும் திறமையுடனும் அபுதாபியில் விளையாடினர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 189 ஓட்டங்களைப் பெற்றதற்கு சரித் அசலங்க மற்றும் பத்தும் நிஸங்க ஆகியோர் முக்கிய பங்காற்றினர். 

இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 61 பந்துகளில் 91 ஓட்டங்களை சேர்த்தனர்.

ISP_2163-960x639.jpg

பத்தும் நிஸங்க 41 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்களையும், அசலங்க 41 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 68 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

போட்டித் தொடரில் அதிகம் தேடப்படும் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகத் திகழும் சரித் அசலங்க, நேற்று தனது இன்னிங்ஸ் மூலம் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்களில் முதன்மையானவராக மாறியுள்ளார். 

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள இடது கை ஆட்டக்காரர் தற்போது 46.2 இன்னிங்ஸ் சராசரியுடன் 231 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அதேசமயம் எட்டு ஆட்டங்களில் 221 ஓட்டங்களை குவித்துள்ள நிஸங்க பட்டியலில் அவருக்கு ஒரு இடம் பின்னால் உள்ளார். 

 9 ஆவது டி-20 சர்வதேச போட்டியில் விளையாடிய அசலங்க, தனது இரண்டாவது டி-20 அரைசதத்தை நேற்று பதிவு செய்தார். இந்த இன்னிங்ஸ் அவருக்கு ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுத் தந்தது.

அதேநேரம் பதும் நிஸங்க பெற்று கொண்ட மூன்றாவது அரை சதம் இதுவாகும்.

அனுபவத்தில் இலங்கையை விட முன்னிலையில் உள்ள மேற்கிந்தியதீவுகள் அணி 190 என்ற வெற்றியிலக்கை துரத்தியது. எனினும் அவர்களால் 20 ஓவர் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இந்த போட்டியின் முடிவுகளின் பிரகாரம் மொத்தமாக நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியைத் தழுவியுள்ள மேற்கிந்தியத்தீவுகளின் அரையிறுதிக்கான வாய்ப்பு கை நழுவியது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நடப்பு சம்பியனான மேற்கிந்தியத்தீவுகள் டி-20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்கு வரத் தவறியமை இது முதல் சந்தர்ப்பமாகும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வீரரான ஷிம்ரன் ஹெட்மேயர் தனித்து துடுப்பெடுத்தாடி 81 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸ் முடியும் வரை விக்கெட்டை பாதுகாத்தார்.

54 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட இடது கை ஆட்டக்காரரான அவர் நான்கு சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் தனது இன்னிங்ஸை வண்ணமயமாக்கினார்.

அவருக்கு அடுத்தபடியாக நிகோலஷ் பூரண் 34 பந்துகளில் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 46 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பினுர பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க மற்றும் சமிக கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர, தசூன் சானக்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த உலகக் கிண்ணத்தின் தகுதிச் சுற்று உட்பட அனைத்து போட்டிகளிலும் ஹசரங்க மொத்தமாக 16 விக்கெட்டுகளை கைப்பற்றி முன்னிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/116623

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமிபியாவை 62 ஓட்டங்களால் தோற்கடித்தது நியூசிலாந்து

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

 

நமிபியாவுக்கு எதிராக ஷார்ஜா விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழு 2 க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 52 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நியூஸிலாந்து அணி  6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

New Zealand players line up for the national anthem, Namibia vs New Zealand, T20 World Cup, Group 2, Sharjah, November 5, 2021

எவ்வாறாயினும் 4 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலுள்ள ஆப்கானிஸ்தானைவிட நிகர ஓட்ட வேகத்தில் நியூஸிலாந்து தொடர்ந்தும் பின்னிலையில் இருக்கின்றது. 

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள போட்டியில் நியூஸிலாந்து வெற்றிபெற்றால் அவ்வணி அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். 

Ish Sodhi is congratulated after getting the wicket of Gerhard Erasmus, Namibia vs New Zealand, T20 World Cup, Group 2, Sharjah, November 5, 2021

ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் இந்தியாவின் போட்டி முடிவுகள் அரை இறுதிக்கு தெரிவாகும் இரண்டாவது அணியைத் தீர்மானிக்கும்.

இக் குழுவிலிருந்து பாகிஸ்தான் ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை பெற்றுவிட்டது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஒவர்களில் 4 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைக் குவித்தது.

Jimmy Neesham picked up the first wicket for New Zealand, Namibia vs New Zealand, T20 World Cup, Group 2, Sharjah, November 5, 2021

முன்வரிசை வீரர்கள் தடுமாற்றத்துக்கு மத்தியில் மந்தகதியில் ஓட்டங்களைப் பெற 14 ஓவர்கள் நிறைவில் நியூஸிலாந்து 4 விக்கெட் இழப்பு 87 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

ஆனால், க்லென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷாம் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் வெறும் 24 பந்துகளில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்து அணியைப் பலப்படுத்தினர்.

Kane Williamson loses his stumps to Gerhard Erasmus, Namibia vs New Zealand, T20 World Cup, Group 2, Sharjah, November 5, 2021

பிலிப்ஸ் 21 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்ட்றியுடன் ஆட்டமிழக்கமால் 39 ஓட்டங்களையும் நீஷாம் 23 பந்துகளில் 2 சிக்ஸ்கள், ஒரு பவுண்ட்றியுடன் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

இவர்களைவிட அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

Kane Williamson steers the ball past point, Namibia vs New Zealand, T20 World Cup, Group 2, Sharjah, November 5, 2021

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் மைக்கல் வென் லிங்கென் (25), ஸேன் க்றீன் (23), ஸ்டீவன் பியர்ட் (21) ஆகியோர் ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர்.

David Wiese after dismissing Martin Guptill, Namibia vs New Zealand, T20 World Cup, Group 2, Sharjah, November 5, 2021

பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

நியூஸிலாந்துக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி அபு தாபியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது.

David Wiese after dismissing Martin Guptill, Namibia vs New Zealand, T20 World Cup, Group 2, Sharjah, November 5, 2021

 

https://www.virakesari.lk/article/116681

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந்தை 8 விக்கெட்களால் வீழ்த்தியது இந்தியா

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறுவற்கு கடும் முயற்சியில் இறங்கியுள்ள இந்தியா, இன்று நடைபெற்ற ஸ்கொட்லாந்துக்கு எதிரான குழு 2 க்கான உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

It was raining sixes in Dubai courtesy Rohit Sharma and KL Rahul, India vs Scotland, Men's T20 World Cup 2021, Super 12s, Dubai, November 5, 2021

இன்றைய வெற்றியுடன் குழு 2க்கான அணிகள் நிலையில் இந்தியா 4 புள்ளிகளுடன் 3ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

எனினும் நியூஸிலாந்துக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போட்டியின் முடிவே இந்தியாவால் அரை இறுதிக்கு முன்னேற முடியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.

Ravindra Jadeja and Jasprit Bumrah have some fun, India vs Scotland, Men's T20 World Cup 2021, Super 12s, Dubai, November 5, 2021

இன்றைய போட்டியில் ஸ்கொட்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 86 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 6.3 ஓவர்களில்  2 விக்கெட்களை இழந்து 89 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.

Ravindra Jadeja belts out a successful appeal, India vs Scotland, Men's T20 World Cup 2021, Super 12s, Dubai, November 5, 2021

கே. எல். ராகுல், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் 70 ஒட்டங்களைப் பகிர்ந்திருந்தனர். 

Rohit Sharma and KL Rahul bump fists, India vs Scotland, Men's T20 World Cup 2021, Super 12s, Dubai, November 5, 2021

ரோஹித் ஷர்ரமா 16 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸுடன் 30 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 19 பந்துகளில் 8 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

Richie Berrington walks off after bagging a duck, India vs Scotland, Men's T20 World Cup 2021, Super 12s, Dubai, November 5, 2021

சூரியகுமார் யாதவ் சிக்ஸ் மூலம் வெற்றி ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து 6 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் விராத் கோஹ்லி 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Mohammed Shami struck an early blow for India, India vs Scotland, Men's T20 World Cup 2021, Super 12s, Dubai, November 5, 2021

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 17.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

Kyle Coetzer was bowled cheaply by Jasprit Bumrah, India vs Scotland, Men's T20 World Cup 2021, Super 12s, Dubai, November 5, 2021

துடுப்பாட்டத்தில் ஜோர்ஜ் மன்சி (24), மைக்கல் லீஸ்க் (21), கெலம் மெக்லீட் (16), மார்க் வொட் (14) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

இந்திய பந்துவீ;ச்சில் ரவிந்த்ர ஜடேஜா 4 ஓவர்களில் 15 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் மொஹம்மத் ஷமி ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3 ஓவர்களில் 15 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 3.4 ஒவரி;களில் 10 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/116682

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவின் துரதிர்ஷ்டம் தொடர்கின்றது ! இங்கிலாந்தை வீழ்த்தியும் அரை இறுதி வாய்ப்பை இழந்தது

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் ஷார்ஜாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை சற்று நேரத்துக்கு முன்னர் பரபரப்புக்கு மததியில் நிறைவுபெற்ற குழு 1க்கான கடைசி இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று லீக் போட்டியில் தென் ஆபிரி;க்கா 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றபோதிலும் அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

Tabraiz Shamsi celebrates with team-mates as Moeen Ali walks back, England vs South Africa, T20 World Cup 2021, Sharjah, November 6, 2021

கெகிசோ ரபாடா போட்டியின் கடைசி ஓவரில் ஹெட் - ட்ரிக்கைப் பதிவு செய்தார். ஆனால் அவரது முயற்சியும் பலனற்றுப் போனது.

இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கேர்ட்டிஸ் கெம்ப்வர், வனிந்த ஹசரங்க ஆகியோரைத் தொடர்ந்து ஹெட்-ட்ரிக்கை பதிவு செய்த 3ஆவது பந்துவீச்சாளர் கெகிசோ ரபாடா ஆவார்.

The South Africa players gather to celebrate Kagiso Rabada's hat-trick, England vs South Africa, T20 World Cup 2021, Sharjah, November 6, 2021

இப் போட்டிக்கு முன்பதாக தென் ஆபிரிக்கா 160 ஓட்டங்களுக்கு மேல் பெற்று இங்கிலாந்தை 100 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தினால் தென் ஆபிரிக்கா அரை இறுதி வாய்ப்பைப் பெறும் என எதிர்வு கூறப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமான அணி என பெயர்பெற்ற தென் ஆபிரிக்காவுக்கு இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டிலும் அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை.

Dawid Malan guides the ball, England vs South Africa, T20 World Cup 2021, Sharjah, November 6, 2021

தென் ஆபிரிக்காவுடனான இன்றைய போட்டியில் 87ஆவது ஓட்டத்தைப் பெற்றதும் இங்கிலாந்து அரை இறுதியில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் இங்கிலாந்து 137 ஒட்டங்களைப் பெற்றபோது தென் ஆபிரிக்காவின் அரை இறுதி வாய்ப்பு அற்றுப்போய் அவுஸ்திரேலியா அரை இறுதிக்குள் நுழைந்தது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா, ரெசி வென் டேர் டுசென், ஏய்டன் மார்க்ராம் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்ட உதவியுடன் 20 ஓவர்களில 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 189 ஓட்டங்களைக் குவித்தது.

Tabraiz Shamsi and Kagiso Rabada celebrate after the former got Jonny Bairstow, England vs South Africa, T20 World Cup 2021, Sharjah, November 6, 2021

ஆரம்ப வீரர்களில் ஒருவரான ரீஸா ஹெண்ட்றிக்ஸ் (2) 3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தபோது தென் ஆபிரிக்காவின் மொத்த எண்ணிக்கை 15 ஓட்டங்களாக இருந்தது.

மற்றைய ஆரம்ப வீரர் குவின்டன் டி கொக்குடன் ஜோடி சேர்ந்த ரெசி வென் டேர் டுசென் 71 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது டி கொக் 34 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

Jason Roy fell to the floor with an apparent leg injury, England vs South Africa, T20 World Cup 2021, Sharjah, November 6, 2021

12ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் டி கொக் ஆட்டமிழந்தபோது தென் ஆபிரிக்காவின் மொத்த எண்ணிக்கை 86 ஓட்டங்களாக இருந்தது.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த வென் டேர் டுசெனும் மார்க்ராமும் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 52 பந்துகளில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் மொத்த எண்ணிக்கையை 189 ஓட்டங்களாக உயர்த்தினர்.

Jason Roy goes on the attack, England vs South Africa, T20 World Cup 2021, Sharjah, November 6, 2021

ரெசி வென் டேர் டுசென் 60 பந்துகளில் 6 சிக்ஸ்கள், 5 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களையும் ஏய்டன் மார்க்ராம் 25 பந்துகளில் 4 சிக்ஸ்கள். 2 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும் குவித்தனர்.

கடினமான ஆனால் எட்டக்கூடிய 190 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 8விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

David Miller in action on the field, England vs South Africa, T20 World Cup 2021, Sharjah, November 6, 2021

இங்கிலாந்து 4.1 ஓவர்களில் 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஜேசன் ரோய் தசை பிடிப்புக்குள்ளானதால் ஒய்வுபெற நேரிட்டது. அவர் ஓய்வு பெற்றபோது 20 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

6ஆவது ஓவரில் ஜொஸ் பட்லரும் (26), 7ஆவது ஓவரில் ஜொனி பெயார்ஸ்டோவும் (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்தமை இங்கிலாந்தை நெருக்கடிக்குள்ளாக்கியது.

Aiden Markram slaps one away, England vs South Africa, T20 World Cup 2021, Sharjah, November 6, 2021

எனினும் டேவிட் மாலனும் மொயின் அலியும் ஜோடி சேர்ந்து மொத்த எண்ணிக்கையை 87 ஓட்டங்களாக உயர்த்திபோது இங்கிலாந்து அரை இறுதியில் விளையாடுவது உறுதிசெய்யப்பட்டது. இவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மொயின் அலி 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

Rassie van der Dussen and Aiden Markram added quick runs for the third wicket, England vs South Africa, T20 World Cup 2021, Sharjah, November 6, 2021

தொடர்ந்து டேவிட் மாலன், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தபோதிலும் இங்கிலாந்தினால் வெற்றிபெறமுடியாமல் போனது.

மாலன் 26 பந்துகளில் 33 ஓட்டங்களையும் லிவிங்ஸ்டோன் 17 பந்துகளில் 28 ஓட்டங்களையும் ஒய்ன் மோர்கன் 12 பந்துகளில் 17 ஓட்டங்களையும் விளாசினர்.

Rassie van der Dussen slides his way into safety, England vs South Africa, T20 World Cup 2021, Sharjah, November 6, 2021

ஆனால் கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் கிறிஸ் வோக்ஸ், ஒய்ன் மோர்கன், கிறிஸ் ஜோர்டான் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து ஹெட்-ட்ரிக்கை பதிவு செய்த கெகிசோ ரபாடா, இருபது 20 உலகக் கிண்ணத்திலிருந்து தென் ஆபிரிக்காiவா வெற்றியுடன் விடைபெறச் செய்தார்.

பந்துவீச்சில் ரபாடா 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தப்ரெய்ஸ் ஷம்சி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Quinton de Kock slogs to the on side, England vs South Africa, T20 World Cup 2021, Sharjah, November 6, 2021

Adil Rashid celebrates with team-mates after dismissing Quinton de Kock, England vs South Africa, T20 World Cup 2021, Sharjah, November 6, 2021

 

https://www.virakesari.lk/article/116728

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து உள்ளே ! ஆப்கானிஸ்தான், இந்தியாவின் கனவுகள் கலைந்தன !

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 4 ஆவது அணியாக அரை இறுதியில் விளையாடுவதற்கு குழு 2 இலிருந்து நியூஸிலாந்து தகுதிபெற்றுக்கொண்டது.

Devon Conway goes for the reverse-sweep

அபு தாபியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான குழு 2 க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் வெற்றிபெற்றதன் மூலம் நியூஸிலாந்து அரை இறுதியில் விளையாடுவதற்கு தகுதிபெற்றுக்கொண்டது.

Devon Conway and Kane Williamson punch gloves during their partnership, Afghanistan vs New Zealand, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 7, 2021

இதனை அடுத்து அரை இறுதியில் விளையாடுவதற்கான இந்தியாவினதும் ஆப்கானிஸ்தானினதும் எதிர்பார்ப்பு தகர்க்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 125 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 18.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

Kane Williamson skips to play the cut, Afghanistan vs New Zealand, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 7, 2021

அரை இறுதியில் விளையாடுவதற்கான தகுதியை மாத்திரம் குறிவைத்து விளையாடிய நியூஸிலாந்து. நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி தனது இரண்டு இலக்குகளையும் சிரமிமின்றி அடைந்தது.

டெரில் மிச்செல் (17), மார்ட்டின் கப்டில் (28) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

Devon Conway tucks one away, Afghanistan vs New Zealand, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 7, 2021

மொத்த எண்ணிக்கை 57 ஓட்டங்களாக இருந்தபோது ஜோடி சேர்ந்த அணித் தலைவர் கேன் வில்லிம்சனும் டெவன் கொன்வேயும் நிதானத்துடன் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியையும் அரை இறுதி வாய்ப்பையும் உறுதி செய்தனர்.

Martin Guptill is cleaned up by Rashid Khan, Afghanistan vs New Zealand, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 7, 2021

கேன் வில்லியம்சன் 40 ஓட்டங்களுடனும் டெவன் கொன்வே 36 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.

Kane Williamson rocks back to play a cut, Afghanistan vs New Zealand, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 7, 2021

துடுப்பாட்டத்தில் நஜிபுல்லா ஸத்ரான் தனி ஒருவராக பிரகாசித்ததன் பலனாகவே ஆப்கானிஸ்தான் ஓரளவு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

இந்த மொத்த எண்ணிக்கையில் அரைவாசிக்கும் மேற்பட்ட ஓட்டங்களை நஜிபுல்லா ஸத்ரான் பெற்றமை விசேட அம்சமாகும்.

Rashid Khan takes off after dismissing Martin Guptill, Afghanistan vs New Zealand, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 7, 2021

6 ஆவது ஓவரில் ஆப்கானிஸ்தானின் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 19 ஓட்டங்களாக இருந்தபோது களம்புகுந்த நஜிபுல்லா ஸத்தரான் 48 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 73 ஓட்டங்களைக் குவித்த அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்தார்.

Martin Guptill and Daryl Mitchell take a run, Afghanistan vs New Zealand, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 7, 2021

இவரை விட குல்பாதின் நய்ப் (15), அணித் தலைவர் மொஹமத் நபி (14) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். 

Mujeeb Ur Rahman got Daryl Mitchell early, Afghanistan vs New Zealand, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 7, 2021

https://www.virakesari.lk/article/116772

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியடையாத ஒரே ஒரு அணியாக பாகிஸ்தான் !

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

ஸ்கொட்லாந்துக்கு எதிராக அபு தாபியில் ஞாயிற்றுக்கிழமை (7) இரவு நடைபெற்ற குழு 2க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

The Pakistan team gets together in celebration after a Scotland wicket, Pakistan vs Scotland, T20 World Cup, Group 2, Sharjah, November 7, 2021

இந்தப் போட்டி முடிவுடன் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற 4 அணிகளில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணி என்ற பெருமையைப் பாகிஸ்தான் பெற்றுக்கொண்டது.

Babar Azam and Kyle Coetzer shake hands after the toss, Pakistan vs Scotland, T20 World Cup, Group 2, Sharjah, November 7, 2021

அணித் தலைவர் பாபர் அஸாம், ஷொயெப் மாலிக் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் பாகிஸ்தானின் வெற்றிக்கு அடிகோலின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 189 ஓட்டங்களைக் குவித்தது.

Babar Azam and Mohammad Rizwan were unspectacular in the powerplay, Pakistan vs Scotland, T20 World Cup, Group 2, Sharjah, November 7, 2021

அணித் தலைவர் பாபர் அஸாம் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி 47 பந்துகளில் 66 ஓட்டங்களைக் குவித்தார்.

Babar Azam thwacks Mark Watt out of the ground, Pakistan vs Scotland, T20 World Cup, Group 2, Sharjah, November 7, 2021

 நடப்பு இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அஸாம் குவித்த 4ஆவது அரைச் சதம் இதுவாகும். அவர் இதுவரை 5 போட்டிகளில் மொத்தமாக 264 ஓட்டங்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

ஷொயெப் மாலிக் 18 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 6 சிக்ஸ்கள், ஒரு பவுண்ட்றியுடன் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைக் குவித்தார். 

Shoaib Malik added some quick runs, Pakistan vs Scotland, T20 World Cup, Group 2, Sharjah, November 7, 2021

மொஹமத் ஹபீஸ் 19 பந்துகளில் 31 ஓட்டங்ளைப் பெற்றார்.

இது இவ்வாறிருக்க ஆரம்ப வீரர் மொஹம்மத் ரிஸ்வான் இன்றைய போட்டியில் 15 ஓட்டங்களை மாத்திரம் பெற்றபோதிலும் அனைத்துவகை இருபது 20 கிரிக்கெட் போட்டியில் ஒரே வருடத்தில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையைப் படைத்தார்.

A dejected Kyle Coetzer looks back at his shattered stumps, Pakistan vs Scotland, T20 World Cup, Group 2, Sharjah, November 7, 2021

கிறிஸ் கேல் 2015இல் 36 இன்னிங்ஸ்களில் மொத்தமாக பெற்ற 1,665 ஓட்டங்கள் என்ற சாதனையை மொஹம்மத் ரிஸ்வான் இன்று தனது 5ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது முறியடித்தார். ரிஸ்வான் 38 இன்னிங்ஸ்களில் 1,676 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

Richie Berrington was the only top-order batter to resist, Pakistan vs Scotland, T20 World Cup, Group 2, Sharjah, November 7, 2021

பாகிஸ்தான் பெற்ற 189 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்கபை; பெற்று 72 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ரிச்சி பெரிங்டன் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை அதிகப்பட்சமாகப் பெற்றார்.

பந்துவீச்சில் ஷதாப் கான் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Pakistan made it five in five, while India failed to make it to the semi-finals, Pakistan vs Scotland, T20 World Cup, Group 2, Sharjah, November 7, 2021

 

https://www.virakesari.lk/article/116785

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா ! இந்தியாவின் இருபதுக்கு - 20 அணியின் அடுத்த தலைவர் இவரா ?

ரோகித் சர்மா, கே.எல். ராகுல் அரைசதம் அடிக்க நமீபியா நிர்ணயித்த 133 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை 15.2 ஓவரில் பெற்ற இந்தியா அணி வெற்றியுடன் உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறியது.

இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 

The Indian players get ready for the game against Namibia, Dubai, November 8, 2021

சூப்பர் 12 சுற்றில் இந்தியா 2 ஆவது பிரிவில் இடம் பிடித்திருந்தது. முதல் போட்டியில் பாகிஸ்தானிடமும், 2 ஆவது போட்டியில் நியூசிலாந்திடமும் தோல்வியடைந்ததால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு மங்கியது.

நியூசிலாந்திடம் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்ததன் மூலம், அதிகாரப்பூர்வமாக இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

Zane Green loses his stumps to R Ashwin, India vs Namibia, T20 World Cup, Group 2, Dubai, November 8, 2021

நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொண்டது இந்தியா. இதில் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி, பந்து வீச்சை தேர்வு செய்தார். 

Gerhard Erasmus and Virat Kohli greet each other at the toss, India vs Namibia, T20 World Cup, Group 2, Dubai, November 8, 2021

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை சேர்த்தது. இந்திய அணி சார்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Rishabh Pant stumps Craig Williams off Ravindra Jadeja, India vs Namibia, T20 World Cup, Group 2, Dubai, November 8, 2021

பின்னர் 133 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி துடுப்பெடுத்தாடியது. கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ரோகித் சர்மா 37 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் - ரோகித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவரில் 86 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து கே.எல். ராகுல் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றது.

Rohit Sharma swings the ball towards deep square-leg, India vs Namibia, T20 World Cup, Group 2, Dubai, November 8, 2021

கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 36 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ் 19 பந்தில் 4 பவுண்டரியுடன் 25 ஓட்டங்களம் எடுக்க இந்தியா 15.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Ruben Trumpelmann reacts as a chance off Rohit Sharma goes down, India vs Namibia, T20 World Cup, Group 2, Dubai, November 8, 2021

ஐந்து லீக் ஆட்டங்களில் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற நிலையில், இருபதுக்கு - 20 உலகக் கிண்ண தொடரில் இருந்து இந்தியா வெளியேறியது.

இந்த போட்டியில் அரைச்சதம் கடந்த ரோஹித் சர்மா இருபதுக்கு -  20 கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்களை கடந்த 3 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Rohit Sharma and KL Rahul gave India another good start, India vs Namibia, T20 World Cup, Group 2, Dubai, November 8, 2021

அடுத்த தலைவர் இவரா ?

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி, இருபதுக்கு - 20 அணியின் அடுத்த அணித் தலைவர் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.

Virat Kohli talks to his team-mates outside the dressing room, Dubai, November 8, 2021

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின் சூப்பர் 12 சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது. சூப்பர் 12 சுற்று முடிவில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

Virat Kohli and MS Dhoni share a laugh, India vs Namibia, T20 World Cup, Group 2, Dubai, November 8, 2021

 இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்கே தகுதிபெறாமல் இந்திய அணி வெளியேறியதைவிட, விராட் கோலி இத்தொடருடன்  அணித் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. 

Virat Kohli returns to the dressing room after India's win, India vs Namibia, T20 World Cup, Group 2, Dubai, November 8, 2021

இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த தலைவர் யார் என்ற தகவலை விராட் கோலி நேற்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் நாணச்சுழற்சியில் வென்ற பிறகு பேசிய விராட் கோலி, 

இந்திய அணியின் தலைவராக செயல்பட்டதில் மகிழ்ச்சி. அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. 

ரோகித் அதற்காக காத்து கொண்டுள்ளார். இந்திய அணி சிறந்த நபரிடம் தான் செல்கிறது. அந்த நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

India's fans were there in force, India vs Namibia, T20 World Cup, Group 2, Dubai, November 8, 2021

எனவே, இந்திய இருபதுக்கு - 20 அணியின் அடுத்த தலைவராக ரோகித் சர்மா என்பதை விராட் கோலியே உறுதிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
 

https://www.virakesari.lk/article/116851

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போட்டிக்குள் நுழைவது யார்? : இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

255601806_169215792090867_73899134719982

ஒய்ன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், கேன் வில்லியம்ஸன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் அபு தாபியில் இன்று இரவு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே தலைமைகளின் கீழ் இந்த இரண்டு அணிகளும் ஐசிசி உலகக் கிண்ண இறுதியில் சந்தித்துக்கொண்டபோது அப் போட்டி 50 ஓவர்கள் நிறைவிலும் சுப்பர் ஓவர் நிறைவிலும் சமநிலையில் முடிவடைந்தது. 

அதனைத் தொடர்ந்து பவுண்ட்றிகள் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து சம்பியனாக பிரகடனப்படுத்தப்பட்டது.

எனினும் அபு தாபியில் இன்று நடைபெறவுள்ள அரை இறுதிப் போட்டியில் அப்படி ஒரு நிலைமை மீண்டும் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தரவரிசையில் முதலாம் இடத்திலுள்ள இங்கிலாந்தும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலாம் இடத்திலுள்ள நியூஸிலாந்தும் சமபலம் கொண்ட அணிகளாக இருப்பதால் இன்றைய அரை இறுதிப் போட்டி இரசிகர்களை பரபரப்பின் உச்சத்துக்கே இட்டுச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலக சம்பயின் பட்டத்தையும் (2010), ஐசிசி ஆடவர் உலக சம்பியன் பட்டத்தையும் (2019) இங்கிலாந்து வென்றுள்ள அதேவேளை, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியில் (2021) நியூஸிலாந்து சம்பியனாகியுள்ளது.

பென் ஸ்டோக்ஸ், ஜொவ்ரா ஆச்சர் போன்ற பிரபல வீரர்கள் இடம்பெறாதபோதிலும் மேற்கிந்தியத் தீவுகளை தனது முதலாவது போட்டியில் 55 ஓட்டங்களுக்கு சுருட்டி, சிறந்த ஓட்ட வேக வெற்றியுடன் இந்த வருட இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டை இங்கிலாந்து ஆரம்பித்திருந்தது.

எவ்வாறாயினும் குழு 1இல் இடம்பெற்ற இங்கிலாந்தின் அரை இறுதி வாய்ப்பு கடைசி போட்டி முடிவின் பின்னரே உறுதிசெய்யப்பட்டது. கடைசிப் போட்டியில் தென் ஆபிரிக்காவிடம் இங்கிலாந்து தோல்வி அடைந்த போதிலும் அதன் அரை இறுதி வாய்ப்புக்கு தடை ஏற்படவில்லை.

இங்கிலாந்து அரை இறுதிப் போட்டிக்கு தெரிவானபோதிலும் துடுப்பாட்டத்தில் ஜொஸ் பட்லர் (ஒரு சதம் உட்பட 240 ஓட்டங்கள்), ஜேசன் ரோய் (123) ஆகிய இருவரே பிரகாசித்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக ஜேசன் ரோய் காயமடைந்து உலகக் கிண்ணத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இங்கிலாந்தின் வெற்றிகளில் பந்துவீச்சாளர்களே பெருவாரியாக பங்களிப்பு செய்திருந்தனர்.

ஆதில் ராஷித் (8) விக்கெட்கள்), மொயின் அலி (7), டய்ல் மில்ஸ் (7), கிறிஸ் வோக்ஸ் (5) ஆகியோர் பந்துவீச்சில் பிரகாசித்திருந்தனர்.

குழு 2இல் நியூஸிலாந்து தனது ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தபோதிலும் ஏனைய 4 அணிகளை இலகுவாக வெற்றிகொண்டு அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

ட்ரென்ட் போல்ட் (11 விக்கெட்கள்), இஷ் சோதி (8), டிம் சௌதீ (7) ஆகியோர் பந்துவீச்சில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

துடுப்பாட்டத்தைப் பொறுத்தமட்டில் சிரேஷ்ட வீரர் மார்ட்டின் கப்டில் (176), கேன் வில்லியம்சன் (26), டெரில் மிச்செல் (125) ஆகிய மூவரே 100 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

இந்த வருட இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் முதல் 4 போட்டிகளில் வெற்றியீட்டிய இங்கிலாந்து கடைசிப் போட்டியில் தோல்வி அடைந்தது.

நியூஸிலாந்து முதல் போட்டியில் தோல்வியுடன் ஆரம்பித்து தொடர்ந்த 4 போட்டிகளில் வெற்றியீட்டியது.

இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் 21 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. 

அதில் இங்கிலாந்து 12 க்கு 9 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கின்றது. ஒரு போட்டி சம நிலையில் முடிவடைந்ததுடன் மற்றொரு போட்டியில் முடிவு கிட்டவில்லை.

நடப்பு உலகக் கிண்ணத்தில் கடந்துவந்த பாதை

இங்கிலாந்து

எதிர் மே. தீவுகள் 6 விக்கெட்களால் வெற்றி

எதிர் பங்களாதேஷ் 8 விக்கெட்களால் வெற்றி

எதிர் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் வெற்றி

எதிர் இலங்கை 26 ஓட்டங்களால் வெற்றி

எதிர் தென் ஆபிரிக்கா 10 ஓட்டங்களால் தோல்வி

நியூஸிலாந்து

எதிர் பாகிஸ்தான் 5 விக்கெட்களால் தோல்வி

எதிர் இந்தியா 8 விக்கெட்களால் வெற்றி

எதிர் ஸ்கொட்லாந்து 16 ஓட்டங்களால் வெற்றி

எதிர் நமிபியா 52 ஓட்டங்களால் வெற்றி

எதிர் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்களால் வெற்றி
 

https://www.virakesari.lk/article/116907

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து விஸ்வரூபம் ! இங்கிலாந்தை 5 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது !

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை கதிகலங்கச் செய்த நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டி வீரர் டெரில் மிட்சல் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் இங்கிலாந்தை வீழ்த்தி இருபதுக்கு - 20 உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

 

அபு தாபி ஷெய்க் சய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (10) இரவு நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட்களால் அபார வெற்றிகொண்ட நியூஸிலாந்து, ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு முதலாவது அணியாகத் தகுதிபெற்றது.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் அதிரடியில் இறங்கிய நியூஸிலாந்து 23 பந்துகளில் 60 ஓட்டங்களைக் குவித்து வெற்றி இலங்கை அடைந்தது.

டெரில் மிச்செல் குவித்த அதிரடி அரைச் சதம், டெவன் கொன்வே, ஜேம்ஸ் நீஷாம் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்கள் என்பன நியூஸிலாந்தின் வெற்றியை இலகுவாக்கின.

மேலும் இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து விளையாடவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

பாகிஸ்தானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் துபாயில் இன்று நடைபெறவுள்ள 2ஆவது அரை இறதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி, 15ஆம் திகதி நடைபெறவுள்ள உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்தாடும்.

இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 167 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரர் மார்ட்டின் கப்டில் (4), அணித் தலைவர் கேன் வில்லிம்ஸ் (5) ஆகிய இருவரும் மொத்த  எண்ணிக்கை முறையே 4 ஓட்டங்களாகவும் 13 ஓட்டங்களாகவும் இருந்தபோது ஆட்டமிழக்க நியூஸிலாந்து தடுமாற்றம் அடைந்தது.

ஆனால், டெரில் மிச்செல், டெவன் கொன்வே ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 66 பந்துகளில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு வலுசேர்த்தனர். கொன்வே 38 பந்துகளில் 6 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸுடன் 46 ஓட்டங்களைப் பெற்றார். அவர் ஆட்டமிழந்த சொற்ப நேரத்தில் க்ளென் பிலிப்ஸும (2) வெளியேறினார்.

அப்போது நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கை 15.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்களாக இருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணியினரும் இரசிகர்களும் இறுதிப் போட்டிக்கு சென்றுவிடலாம் என எண்ணியிருக்கக் கூடும்.

எனினும், டெரில் மிச்செல், ஜேம்ஸ் நீஷாம் ஆகிய இருவரும் அதிரடியில் இறங்கி 5ஆவது விக்கெட்டில் 17 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியை இலகுவாக்கினர். நீஷாம் 11 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்ட்றியுடன் 26 ஓட்டங்களை விளாசினார். டெரில் மிச்செல் 48 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 4 பவுண்ட்றிகள் அடங்கலாக 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

16ஆவது ஒவரிலிருந்து வெறும் 23 பந்துகளில் 60 ஓட்டங்களைக் குவித்ததன் மூலமே நியூஸிலாந்தின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது.
இங்கிலாந்து பந்துவீச்சில் லியாம் லிவிங்டன் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில்  முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து, டேவிட் மாலன், மொயீன் அலி ஆகியோரின் அதிரடிகளின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைக் குவித்தது.

ஜொனி பெயார்ஸ்டோவ் (13), ஜொஸ் பட்லர் (29) ஆகிய இருவரும் ஆட்டமிழந்த பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன், மொயீன் அலி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 43 பந்துகளில் 63 ஓட்ங்களைப் பகிர்ந்தனர். மாலன் 41 ஒட்டஙகளுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்தவந்த லியாம் லிவிங்ஸ்டோன் (17), மொயின் அலியுடன் 4ஆவது விக்கெட்டில் மேலும் 40 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மொயின் அலி 37 பந்தகளில் 3 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் சௌதீ, அடம் மில்னே, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
 

https://www.virakesari.lk/article/116951

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானா ? அவுஸ்திரேலியாவா ? இறுதிப் போட்டியில் !

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெடடில் பாகிஸ்தானின் வெற்றி அலையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியுடன் துபாயில் இன்று நடைபெறவுள்ள 2 ஆவது அரை இறுதிப் போட்டியை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளவுள்ளது.

1992 உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை ஈட்டிய நியூஸிலாந்தை கடைசி குழுநிலைப் போட்டியிலும் அரை இறுதிப் போட்டியிலும் வீழ்த்தி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொண்டு பாகிஸ்தான் உலக சம்பியனாகியிருந்தது.

அதேபோன்று இம்முறை இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானின் வெற்றி அலையை முடிவுக்குக் கொண்டுவந்து அதிசயம் ஒன்றை அவுஸ்திரேலியா நிகழ்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Australia_-Pakistan_-Twenty20_-World-Cup

ஆனால். பலம்வாய்ந்த பாகிஸ்தானும் இந்தப் போட்டியை இலகுவில் நழுவ விடப்போவதில்லை.

குழு 1க்கான சுப்பர் 12 சுற்றில் 4 வெற்றிகளை ஈட்டிய அவுஸ்திரேலியா, நிகர ஓட்ட வேக அடிப்படையில் தென் ஆபிரிக்காவைப் பின்தள்ளி 9 வருடங்களின் பின்னர் அரை இறுதியில் விளையாடும் தகுதியை பெற்றுக்கொண்டது.

குழு 2 இல் 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட பாகிஸ்தான் தகுதிபெற்றது.

சுப்பர் 12 சுற்றில் தனது பரம வைரியான இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தி இருவகை உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவை முதல் தடவையாக வெற்றகொண்டமை விசேட அம்சமாகும்.

50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 3 தடவைகள் உட்பட 5 சம்பியன் பட்டங்களை சூடியுள்ள அவுஸ்திரேலியா இதுவரை இருபது 20 உலகக் கிண்ணத்தை வென்றதில்லை.

இங்கிலாந்தில் 2009 இல் நடைபெற்ற 2 ஆவது இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டு பாகிஸ்தான் உலக சம்பயின் பட்டத்தை சூடியிருந்தது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அவுஸ்திரேலியாவின் வெற்றிகளில் டேவிட் வோர்னர் (187 ஓட்டங்கள்), ஆரொன் பின்ச் (130 ஓட்டங்கள்), அடம் ஸம்ப்பா (11 விக்கெட்கள்) ஆகிய மூவர் பிரதான பங்காற்றியுள்ளதுடன் ஷொயெப் மாலிக், மொஹம்மத் ஹபீஸ், பக்கார் ஸமான், ஷஹீன் ஷா அப்றிடி, ஷதாப் கான் போன்ற சிறந்த வீரர்களும் அணியில் இடம்பெறுகின்றனர்.

அதேபோன்று பாபர் அஸாம் (264 ஓட்டங்கள்), மொஹம்மத் ரிஸ்வான் (214 ஓட்டங்கள்), ஹரிஸ் ரவூப் (8 விக்கெட்கள்) ஆகியோர் பாகிஸ்தானின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளனர். 

அதேவேளை, க்ளென் மெக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிச்செல் மார்ஷ், மிச்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய வீரர்களும் ஆற்றல்களை வெளிப்படுத்தக்கூடியவர்களே.

இந்த இரண்டு அணிகளுக்கும் அவுஸ்திரேலியர்கள் இருவர் பயிற்றுநர்களாக இருப்பது மற்றொரு விசேட அம்சமாகும். 

அவுஸ்திரேலிய அணியில் அதிசிறந்த ஆரம்ப ஜோடியாக 2001 முதல் 2007வரை விளையாடிய மெத்யூ ஹேடனும் ஜஸ்டின் லெங்கரும் இன்று எதிரும் புதிருமாக இரண்டு அணிகளை வழிநடத்தவுள்ளனர்.

பாகிஸ்தான் அணிக்கு மெத்யூ ஹேடன் துடுப்பாட்ட ஆலோசகராகவும் அவஸ்திரேலிய அணிக்கு ஜஸ்டின் லெங்கர் தலைமைப் பயிற்றுநராகவும் செயற்படுகின்றனர்.

பாகிஸ்தானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இன்றைய போட்டி, கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப் போட்டியில் வெற்றிபெறும் அணி துபாயில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்தாடும்.

அணிகள்

 

பாகிஸ்தான்: மொஹம்மத் ரிஸ்வான், பாபர் அஸாம் (தலைவர்), பக்கார் ஸமான், மொஹம்மத் ஹவீஸ், ஷொயெப் மாலிக், அசிப் அலி, ஷதாப் கான், இமாத் வசிம், ஹசன் அலி, ஹரிஸ் ரவூப், ஷஹீன் ஷா அப்றிடி.

அவுஸ்திரேலியா: டேவிட் வோர்னர், ஆரொன் பின்ச் (தலைவர்), மிச்செல் மார்ஷ், க்லென் மெக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், மெத்யூ வேட், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், அடம் ஸம்ப்பா, ஜொஷ் ஹேஸ்ல்வூட்.

அணிகள் கடந்து வந்த பாதை

 

பாகிஸ்தான்

 

எதிர் இந்தியா 10 விக்கெட்களால் வெற்றி

எதிர் நியூஸிலாந்து 5 விக்கெட்களால் வெற்றி

எதிர் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்களால் வெற்றி

எதிர் நமிபியா 48 ஓட்டங்களால் வெற்றி

எதிர் ஸ்கொட்லாந்து 72 ஓட்டங்களால் வெற்றி

அவுஸ்திரேலியா

எதிர் தென் ஆபிரிக்கா 5 விக்கெட்களால் வெற்றி

எதிர் இலங்கை 7 விக்கெட்களால் வெற்றி

எதிர் இங்கிலாந்து 8 விக்கெட்களால் தோல்வி

எதிர் பங்களாதேஷ் 8 விக்கெட்களால் வெற்றி

எதிர் மே. தீவுகள் 8 விக்கெட்களால் வெற்றி

 

https://www.virakesari.lk/article/116956

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் உலகக் கிண்ண கனவை தகர்த்தது அவுஸ்திரேலியா ! இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது !

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் வெற்றி அலையை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன் பாகிஸ்தானின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கனவையும் இறுதிநேரத்தில் தகர்த்த அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

Marcus Stoinis and Matthew Wade were involved in a half-century stand, Australia vs Pakistan, T20 World Cup, 2nd semi-final, Dubai, November 11, 20211

பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வீறுநடைபோட்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 5 விக்கெட்களால் வெற்றிபெற்று 11 வருடங்களின் பின்னர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட சற்று கடினமான 177 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

13 ஆவது ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே அவுஸ்திரேலியா பெற்றிருந்ததால் அவ்வணிக்கு வெற்றிவாய்ப்பு இல்லை என்றே எண்ணத் தோன்றியது.

ஆனால், புதன்கிழமை நடைபெற்ற முதலாவது அரை இறுதியில் போன்றே கடைசி ஓவர்களில் மார்க்ஸ் ஸ்டொய்னிஸும் மெத்யூ வேடும் 40 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை வெற்றிபெறச் செய்தனர்.

அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது வேட் கொடுத்த சற்று கடினமான பிடியை ஹசன் அலி தவறவிட்டமை ஆட்டத்தில் திருப்பு முனையாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து வேட் 3 சிக்ஸ்களை தொடர்ச்சியாக விளாசி பாகிஸ்தானின் இறுதி ஆட்ட வாய்ப்பை தவிடுபொடியாக்கினார்.

மெத்யூ வேட் 17 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ஆரம்ப ஓவரிலேயே அணித் தலைவர் ஆரொன் பின்ச்சின் விக்கெட்டை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும் டேவிட்  வோர்னருடன் ஜோடி சேர்ந்த மிச்செல் மார்ஷ் 2ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷடாப் கானின் பந்துவீச்சில் மார்ஷ் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்துவந்த முன்னாள் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காமல் 5 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

தாகசாந்திக்குப் பின்னர் ஷதாப் கான் வீசிய முதல் பந்தில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து டேவிட் வோர்னர் (49) ஆட்டமிழந்ததார். வோர்னர் ஆட்டமிழந்ததாக மத்தியஸ்தர் தீர்ப்பு வழங்கியபோதிலும் 'அல்ட்ரா எஜ்' சலன அசைவுகளில் பந்து துடுப்பிலிருந்து விலகிச் செல்வதாகவே தென்பட்டது.

சற்று நேரத்தில் அதிரடி வீரர் க்ளென் மெக்ஸ்வெல் (7), 'ரிவேர்ஸ் ஸ்வீப் ஷொட்' அடிக்க விளைந்து ஆட்டமிழந்த போது. 

அவுஸ்திரேலியாவின் தோற்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டொய்னிஸ் வேட் ஜோடி அபாரமாகத்  துடுப்பெடுத்தாடியதன் பலனாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதர்த்தாட அவுஸ்திரேலியா தகுதிபெற்றுக்கொண்டது.

இதன்படி 14 வருட இருபது 20 உலகக் கிண்ண வரலாற்றில் புதிய அணி ஒன்று சம்பியனாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான், எதிரணி பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த இருபது 20 உலகக் கிண்ண போட்டியில் ஆரம்பத்திலிருந்து அபரிமிதமாக பிரகாசித்துவந்த அணித் தலைவர் பாபர் அஸாம், மொஹமத் ரிஸ்வான் ஆகிய இருவரும் நேற்றைய போட்டியிலும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி முதலாவது விக்கெட்டில் 10 ஓவர்களில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அஸாம் 39 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மொஹம்மத் ரிஸ்வான் 4 சிக்ஸ்கள், 3 பவுண்ட்றிகளுடன் 67 ஓட்டங்களைப் பெற்றார். இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண போட்டியில் ரிஸ்வான் பெற்ற 3ஆவது அரைச் சதம் இதுவாகும்.

பக்கார் ஸமானும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 32 பந்துகளில் 4 சக்ஸ்கள், 3 பவுண்ட்றிகளுடன் 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். உலகக் கிண்ணப் போட்டியில் ஸமான் பெற்ற முதலாவது அரைச் சதம் இதுவாகும்.

 

எவ்வாறாயினும் அவர்கள் நால்வரினதும் அபார துடுப்பாட்டங்கள் மெத்யூ வேட், மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோரின் அதிரடிகள் வீண் போனதுடன் பாகிஸ்தானின் இறுதி ஆட்ட வாய்ப்பும் பறிபோனது.

 

https://www.virakesari.lk/article/117004

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் Vs ஆஸ்திரேலியா: இறுதிபோட்டிக்குத் தகுதி பெறாமல் பாகிஸ்தான் வெளியேறுவது ஏன்? ஆஸ்திரேலியா வென்றது எப்படி?

  • விவேக் ஆனந்த்
  • பிபிசி தமிழ்
9 மணி நேரங்களுக்கு முன்னர்
ஆஸ்திரேலியாவின் வேட் & ஸ்டாய்னிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஆஸ்திரேலியாவின் வேட் & ஸ்டாய்னிஸ்

இங்கிலாந்தை தொடர்ந்து பாகிஸ்தான் அணியும் குரூப் 12 சுற்றில் தமது பிரிவில் முதல் இடத்தை பிடித்தபோதும் டி20 உலகக்கோப்பை அரை இறுதியில் தோல்வியடைந்துள்ளது.

மூன்று பந்துகளில் மூன்று மிரட்டல் சிக்ஸர்களை விளாசி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும், கோப்பை வெல்லும் கனவையும் தவிடுபொடியாக்கியது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது அரை இறுதிப்போட்டி கிட்டதட்ட நியூசிலாந்து - இங்கிலாந்து போட்டியை நினைவுபடுத்துவதாகவே அமைந்தது.

இங்கிலாந்து, பாகிஸ்தான் இரு அணிகளும் டாஸில் தோற்றன. சேஸிங்கின் போது ஆட்டத்தின் 15 - 16ஆவது ஓவர் வரை ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. இரு அணிகளும் 19வது ஓவரின் கடைசி பந்தில் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தன. இரு அணிகளுமே ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தன.

அது போக மற்ற இரு சுவாரசிய புள்ளிவிவரம் என்னவென்றால் ஆஸ்திரேலியா இதுவரை உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை, அதே போல ஐக்கிய அரபு எமிரேட்டில் 16 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வலம்வந்தது பாகிஸ்தான். இந்த இரு சாதனைகளில் எதாவது ஒன்று முறியடிக்கப்படும் என்பதால் இரண்டாவது அரை இறுதி போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறியது.

இந்த உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் ஒரு போட்டியில் கூட தோற்காத ஒரே அணி பாகிஸ்தான் அணிதான் என்பதும் நினைவுகூரத்தக்கது. இத்தகைய சூழலில், துபாய் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அபாரமாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு ரிஸ்வான் - பாபர் இணை 71 ரன்களைக் குவித்தது. பவர்பிளேவில் விக்கெட்டை இழக்கவில்லை, நடுவரிசை ஓவர்களில் ரன்குவிப்பில் தேக்கமில்லை, இறுதி ஓவர்களில் ஃபகர் ஜமான் ரசிகர்களை குதூகலிக்க வைக்க தவறவில்லை. இரு பேட்ஸ்மேன்கள் அரை சதம் விளாசினர். ஃபகர் 32 பந்துகளில் 4 சிக்ஸர்கள், மூன்று பௌண்டரிகளை விளாசி 55 ரன்கள் எடுத்தார்.

ஷதாப் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஷதாப் கான்

ஆஸ்திரேலியாவுக்கு 177 ரன்கள் எனும் வலுவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் சேஸிங்கின் போது, முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஃபின்ச்சை டக் அவுட் ஆக்கினார் ஷாஹீன் அஃப்ரிடி.

நடுவரிசை ஓவர்களில் ரன்களை ஓரளவு கட்டுப்படுத்தியதோடு சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுத்தார். டேவிட் வார்னர், மிச்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் என ஆஸ்திரேலியாவின் பேட்டிங் படையை மொத்தமாக காலி செய்தார்.

இப்படி பாகிஸ்தான் அணி ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. ஆனால் எல்லாம் 15வது ஓவருக்கு பிறகு மாறியது.

அப்போது ஆஸ்திரேலியாவுக்கு 30 பந்துகளில் 62 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது இலக்கு. கைவசம் ஐந்து விக்கெட்டுகள் தான். ஒரு விக்கெட் விழுந்தால் கூட சிக்கல் எனும் நிலைமை. விக்கெட் கீப்பர் மாத்யூ வேட் மற்றும் ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் களத்தில் இருந்தனர்.

நான்கே ஓவர்களில் அந்த 62 ரன்களை எடுத்து மிரட்டல் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. அது எப்படி?

ஆட்டத்தின் 16வது ஓவரை வீசிய ஹசன் அலி, ஒரு நோ பால் வீசியது உட்பட 12 ரன்கள் கொடுத்தார். ஹாரிஸ் ராஃப் வீசிய 17ஆவது ஓவரில் 13 ரன்களை பறிபோயின. 17ஆவது ஓவரை ஹாரிஸ் ராஃப் வீசினார், ஒரு சிக்ஸர் ஒரு பெளண்டரி உட்பட 13 ரன்கள்.

அதுவரை மாத்யூ வேட் 9 பந்துகளில் எட்டு ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆட்டத்தின் 18வது ஓவரை ஹசன் அலி கையில் கொடுத்தார் பாகிஸ்தான் கேப்டன். அவரது ஓவரில் வேட் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி அடிக்க ஆஸ்திரேலியா 15 ரன்களை குவித்து வெற்றி வாய்ப்பை அதிகரித்தது.

கடைசி இரு ஓவர்களில் 22 ரன்கள் இலக்கு. அதுவரை அபாரமாக பந்து வீசி மூன்று ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த ஷாஹீனை அழைத்தார் பாபர்.

முதல் பந்தை எதிர்கொண்டார் ஸ்டாய்னிஸ் - ரன் இல்லை. இரண்டாவது பந்தில் பை மூலம் ஒரு ரன். இப்போது மாத்யூ வேட் ஸ்ட்ரைக்குக்கு வந்தார். 10 பந்துகளில் 21 ரன்கள் என்பது இலக்கு. மூன்றாவது பந்தை வைட் வீசினார் ஷாஹீன். ஆஸ்திரேலியாவுக்கு மேலும் ஒரு ரன் கிடைத்தது.

ஹசன் அலி தவறவிட்ட கேட்ச்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஹசன் அலி தவறவிட்ட கேட்ச்

மீண்டும் மூன்றாவது பந்தை விளாசினார் வேட். அந்த பந்தை கேட்ச் பிடிக்காமல் நழுவவிட்டார் ஹசன் அலி. அது பாகிஸ்தான் அணிக்கு பேரிடியாக அமைந்தது.

நான்காவது பந்தை ஸ்கூப் ஷாட் மூலம் ஒரு சிக்ஸ், ஐந்தாவது பந்தை 96 மீட்டர் நீளத்தில் ஒரு மெகா சிக்ஸர், ஆறாவது பந்தை மீண்டும் ஸ்கூப் ஷாட் மூலம் ஃபைன் லெக் திசை மேல் இரு சிக்ஸர் என மிரட்டல் ஆட்டம் ஆடினார் மாத்யூ வேட்.

மூன்றே பந்தில் ஆட்டம் முடிந்தது. தனது கடைசி ஓவரில் மட்டும் 22 ரன்கள் கொடுத்தார் ஷாஹீன்.

முன்னதாக பாகிஸ்தான் பேட்டிங்கின்போது, மொஹம்மது ரிஸ்வான் நேற்று ஆடிய ஆட்டத்தை கிரிக்கெட் நிபுணர்கள் புகழந்து தள்ளினர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் ரிஸ்வானை ஒரு போராளி என குறிப்பிட்டார். ஏனெனில் போட்டி நாளுக்கு முந்தைய இரவு நுரையீரல் பிரச்சனையால் அவர் மருத்துவமனையில் இருந்ததாக ஹைடன் குறிப்பிட்டார்.

முகமது ரிஸ்வானின் அபாரமான ஆட்டம், ஃபகர் ஜமானின் அதிரடி சரவெடி ஆட்டம், ஷாஹீன் வீசிய திரில்லிங்கான ஓபனிங் ஸ்பெல், சூழல் வலையில் ஆஸ்திரேலியாவை திணறடித்த ஷதாப், அணியை முன்னின்று வழிநடத்திய பாபர் ஆசம் என அத்தனை பேரின் உழைப்பும், பாகிஸ்தான் அணியின் கோப்பை கனவும் சில பந்துகளில் சுக்கு நூறானது.

மேத்திவ் வேட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மேத்திவ் வேட்

ஆஸ்திரேலியா, கோப்பைக்கான பந்தயத்தில் நுழைந்தது எப்படி?

ஆஸ்திரேலிய அணி இந்த உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு வந்தது பலருக்கும் ஆச்சர்யமானதாக அமைந்திருக்கக்கூடும். முன்னதாக கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஆஸ்திரேலியாவுக்கு நிபுணர்கள் முன்னுரிமை தரவில்லை.

ஏனெனில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய ஐந்து டி20 தொடர்களில் ஐந்திலும் தோற்றது. இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசத்துடன் தொடரை இழந்தது.

வங்கதேச அணியுடனான தொடரில் 62 ரன்களுக்கு ஆல் அவுட். தொடரை 1 - 4 என படுமோசமாக தோல்வியை சந்தித்தது. உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவிடம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்திடம் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது மட்டுமல்லாமல் 12ஆவது ஓவரிலேயே தோற்றது.

இத்தனை படுதோல்விகளுக்கு பிறகு சுதாரித்து வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளை அபாரமாக வென்று, ரன்ரேட் மூலம் தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றி அரை இறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா.

பாகிஸ்தான் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாகிஸ்தான் அணி

இந்த போட்டியிலும் கடைசி நேர சரவெடி ஆட்டம் மூலம் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது. சூழலுக்கு சாதகமான மைதானங்கள் என கருதப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்டில் டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்துக்கு ஒரு ஆசிய அணி கூட தகுதிபெறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு இரவு நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா.

முன்னதாக 2015ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வென்று சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா.

2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தன்னை தோற்கடித்த இங்கிலாந்தை, இம்முறை அரைஇறுதியோடு வெளியேற்றியது நியூசிலாந்து. அதேபோல 2015 ஆஸ்திரேலியாவுடனான தோல்விக்கு நியூசிலாந்து பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஐசிசி தொடர்களில் இன்னமும் டி20 உலகக் கோப்பையை வெல்லாத குறை ஆஸ்திரேலியாவுக்கு இருக்கிறது. நியூசிலாந்தோ முதன்முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. புதிய சாம்பியன் யார் என்பதற்கான கேள்விக்கு வரும் ஞாயிறு இரவு விடை தெரியும்.

https://www.bbc.com/tamil/sport-59257465

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருபதுக்கு -20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடாது வெளியேறும் நியூசிலாந்து விக்கெட் காப்பாளர்

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து விக்கெட் காப்பாளர் டெவன் கொன்வோய் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் அவர் விளையாடமாட்டார் என நியூஸிலாந்து அணி முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

Devon_Conway.jpg

இங்கிலாந்துக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தின் வெற்றியில் முக்கிய பங்களாற்றியவர்களில் ஒருவரான டெவன் கொன்வோயின் கையில் சுண்டு விரல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

வியாழனன்று நடத்தப்பட்ட எக்ஸ் ரே பரிசோதனையில் இது உறுதிசெய்யப்பட்டது. இப்போதைக்கு அவர் தொடர்ந்து விளையாடமாட்டார் என தலைமைப் பயிற்றுநர் கெறி ஸ்டெட் தெரிவித்தார்.

'நியூஸிலாந்து அணிக்காக விளையாடுவதை மேலானது என டெவன் கொன்வே கருதுகின்றார். எனினும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் தொடர்ந்து விளையாட முடியாமல் போனதையிட்டு மிகவும் வேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளார். 

எனவே அவருக்கு ஆறுதல் அளிக்க நாங்கள் அனைவரும் முயற்சித்துவருகின்றோம்' என கெறி ஸ்டெட் கூறினார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 46 ஓட்டங்களைப் பெற்ற டெவன் கொன்வோய், ஆட்டநாயகன் டெரில் மிச்செலுடன் 3ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியில் பங்காற்றியிருந்தார்.

 

https://www.virakesari.lk/article/117047

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பான இறுதிப் போட்டியில் சமபலம் பொருந்திய இரு அணிகள் ! கிண்ணத்தை கைப்பற்றுவது யார் ?

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

இருபது 20 உலக கிண்ண கிரிக்கெட் 7ஆவது அத்தியாயத்தின் உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.

அங்குரார்ப்பண உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதலாவது சம்பியனான நியூஸிலாந்தும் ஐந்து தடவைகள் 50 ஓவர் கிரிக்கெட்டில் உலக சம்பியனான அவுஸ்திரேலியாவும் இருபது 20 உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக சம்பியனாகும் கங்கணத்துடன் இன்றைய இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

AUS_NEZ.JPG

இந்த இறுதிப் போட்டி நியூஸிலாந்தின் பந்துவீச்சுக்கும் அவுஸ்திரேலியாவின் துடுப்பாடத்துக்கும் இடையிலான போட்டியாக அமையும் என கிரிக்கெட் விமர்சர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும் இரண்டு அணிகளும் சகலதுறைகளிலும் சமபலம்கொண்டவையாகவே தென்படுகின்றன.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தரவரிசையில் முதலிரண்டு இடங்களில் உள்ள இங்கிலாந்தையும் பாகிஸ்தானையும் அரை இறுதிப் போட்டிககளில் முறையே நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் வெற்றிகொண்டிருந்தன.

இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியின் கடைசி கட்டத்தில் 23 பந்துகளில் 60 ஓட்டங்களைக் குவித்து நியூஸிலாந்தும், பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியின் கடைசிக் கட்டத்தில் 40 பந்துகளில் 81 ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலியாவும் வெற்றிகொண்டே இன்றைய இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

14 வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்த இரண்டு அணிகளும் சம்பியனானதில்லை. மேற்கிந்தியத் தீவுகளில் 2010 இல் நடைபெற்ற 3ஆவது அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது. 

நியூஸிலாந்து இறுதிப் போட்டியில் விளையாடவிருப்பது இதுவே முதல் தடவையாகும். ஆகையால், இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் புதிய அணி ஒன்று சம்பியனாவது உறுதியாகியுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் நேருக்கு நேர் மோதிய 14 சந்தர்ப்பங்களில் அவஸ்திரேலியா 9 - 4 என்ற ஆட்டங்கள் கணக்கில் முன்னிலையில் இருக்கின்றது. சமநிலையில் முடிவடைந்த மற்றைய போட்டியில் சுப்பர் ஓவரில் நியூஸிலாந்து வெற்றிபெற்றது.

இருபது 20 உலகக் கிண்ண அரங்கில் இரண்டு அணிகளும் மோதிய ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் நியூஸிலாந்து வெற்றிபெற்றது. இந்தியாவில் 2016 இல் நடைபெற்ற அப் போட்டியில் நியூஸிலாந்து 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. (நியூஸிலாந்து 142 - 8 விக். அவுஸ்திரேலியா 134 - 9 விக்.)

இன்றைய இறுதிப் போட்டியில் விளையாடுபவர்களில் நியூஸிலாந்து அணியில் டெரில் மிச்செல் (197 ஓட்டங்கள்), மார்ட்டின் கப்டில் (180), கேன் வில்லியம்சன் (131), ட்ரென்ட் போல்ட் (11 விக்கெட்கள்), இஷ் சோதி (9), டிம் சௌதீ (8) ஆகியோர் முக்கிய வீரர்களாக இடம்பெறுவதுடன் இஷ் சோதி, க்ளென் பிலிப்ஸ், டிம் சீபேர்ட், லொக்கி பேர்குசன் ஆகிய சிறந்த வீரர்களும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்

அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வோர்னர் (236 ஓட்டங்கள்), ஆரொன் பின்ச் (130), மிச்செல் மார்ஷ் (108), அடம் ஸம்ப்பா (12 விக்கெட்கள்), மிச்செல் ஸ்டார்க் (9), ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகியோர் பிரதான வீரர்களாக இடம்பெறுவதுடன் ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மெக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், பெட் கமின்ஸ் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

மேலும், 12 வருடங்களுக்கு முன்னர் மேற்கு அவுஸ்திரேலியாவில் ஸ்கார்பரோ அணியில் ஒன்றாக கல்வி பயின்றவர்களும் வீரர்களுமான டெரில் மிச்செல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய இருவரும் இன்று எதிரும் பதிருமாக விளையாடவுள்ளமை சுவாரஸ்யமான விடயமாகும்.

இந்த இரண்டு அணிகளினதும் வீரர்களை ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுப்பார்த்தால் இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவையாகவே தென்படுகின்றன.

இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்தி உலக சம்பியனாக முயற்சிப்பதால் இன்றைய இறுதிப் போட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு அணிகளும் கடந்து வந்த பாதை

 

நியூஸிலாந்து

 

எதிர் பாகிஸ்தான் 5 விக்கெட்களால் தோல்வி

எதிர் இந்தியா 8 விக்கெட்களால் வெற்றி

எதிர் ஸ்கொட்லாந்து 18 விக்கெட்களால் வெற்றி

எதிர் நமிபியா 53 ஓட்டங்களால் வெற்றி

எதிர் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்களால் வெற்றி

அரை இறுதி

எதிர் இங்கிலாந்து 5 விக்கெட்களால் வெற்றி

அவுஸ்திரேலியா

 

எதிர் தென் ஆபிரிக்கா 5 விக்கெட்களால் வெற்றி

எதிர் இலங்கை 7 விக்கெட்களால் வெற்றி

எதிர் இங்கிலாந்து 8 விக்கெட்களால் தோல்வி

எதிர் பங்களாதேஷ் 8 விக்கெட்களால் வெற்றி

எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட்களால் வெற்றி

அரை இறுதி

எதிர் பாகிஸ்தான் 5 விக்கெட்களால் வெற்றி
 

 

https://www.virakesari.lk/article/117126

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தை முதல்தடவையாக முத்தமிட்டது அவுஸ்திரேலியா

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

14 வருட இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியா முதல் தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

Image

நியூஸிலாந்துக்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இரவு மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 7 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியதன் மூலம் அவுஸ்திரேலியா ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

Justin Langer, Steven Smith, David Warner and Aaron Finch react as the winning runs are hit, Australia vs New Zealand, T20 World Cup final, Dubai, November 14, 2021

50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 5 தடவைகள் சம்பியனான அவுஸ்திரேலியா, இருபது 20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது இதுவே முதல் தடவையாகும்.

மறுபுறத்தில் இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முதல் தடவையாக பங்குபற்றிய உலக டெஸ்ட் சம்பியன் நியூஸிலாந்து இரண்டாம் இடத்தைப் பெற்று திருப்தி அடைந்தது.

David Warner is congratulated by his IPL team-mate Kane Williamson, Australia vs New Zealand, T20 World Cup final, Dubai, November 14, 2021

சம்பியனான அவுஸ்திரேலியாவுக்கு பணப்பரிசாக 16 இலட்சம் அமெரிக்க டொலர்களும் ( இலங்கை ரூபாவில் 323,264,960) நியூஸிலாந்துக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்களும் (இலங்கை ரூபாவில் 161,632,480 ) பணப்பரிசாக ஐசிசியினால் வழங்கப்படும்.

Agony and ecstasy: Tim Southee and Glenn Maxwell display contrasting emotions after the game, Australia vs New Zealand, T20 World Cup final, Dubai, November 14, 2021

அவுஸ்திரேலியாவின் இன்றைய வெற்றியில் ஜோஷ் ஹேஸ்ல்வூடின் துல்லியமான பந்துவீச்சு, மிச்செல் மார்ஷ், டேவிட் வோர்னர் ஆகியோரின் அதிரடியுடன்கூடிய துடுப்பாட்டங்கள் என்பன முக்கிய பங்காற்றியிருந்தன.

நியூஸிலாந்து சார்பாக அணித் தலைவர் கேன் வில்லியம்சன் தனி ஒருவராக துடுப்பாட்டத்தில் பிரகாசித்தபோதிலும் அது இறுதியில் பலனற்றுப் போனது.

Mitchell Marsh runs towards Adam Zampa and Marcus Stoinis to celebrate the win, Australia vs New Zealand, T20 World Cup final, Dubai, November 14, 2021

நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 173 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 18.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களை அடைந்து சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தது.

அணித் தலைவர் ஆரோன் பின்ச் வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை வெறும் 15 ஓட்டங்களாக இருந்தது.

Glenn Maxwell and Mitchell Marsh go up in celebration after the winning runs, Australia vs New Zealand, T20 World Cup final, Dubai, November 14, 2021

இந் நிலையில் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த டேவிட் வோர்னரும் மிச்செல் மார்ஷும் 59 பந்துகளில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை பலப்படுத்தினர்.

வோர்னர் 38 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

The Australian team celebrates winning the title, Australia vs New Zealand, T20 World Cup final, Dubai, November 14, 2021

மறுமுனையில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய மிச்செல் மார்ஷ் இருபது 20 உலகக் கிண்ண இறுதி ஆட்ட வரலாற்றில் அதிவேக அரைச் சதத்தைக் குவித்து சாதனையாளரானார். 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய அவருக்கு 31 பந்துகளே தேவைப்பட்டது.

இதே போட்டியில் கேன் வில்லியம்சன் 32 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்திசெய்திருந்தார்.

Kane Williamson goes aerial, Australia vs New Zealand, T20 World Cup final, Dubai, November 14, 2021

மிச்செல் மார்ஷ், க்ளென் மெக்ஸ்வெல் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

Mitchell Marsh and David Warner stitched a fifty partnership, Australia vs New Zealand, T20 World Cup final, Dubai, November 14, 2021

மிச்செல் மார்ஷ் 50 பந்துகளில் 6 பவுண்ட்றிகள், 4 சிக்ஸ்களுடன் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களைக் குவித்ததுடன் க்ளென் மெக்ஸ்வெல் 4 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 4 ஓவரக்ளில் 18 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Mitchell Marsh packs some power into his cut, Australia vs New Zealand, T20 World Cup final, Dubai, November 14, 2021

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து, அணித் தலைவர் கேன் வில்லியம்ஸின் அபார துடுப்பாட்;ட உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 172 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த மொத்த எண்ணிக்கையில் ஏறத்தாழ அரைவாசி ஓட்டங்களை கேன் வில்யம்சன் குவித்திருந்தார்.

களம் புகுத்தது முதல் மிகவும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய கேன் வில்லியம்சன் 48 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 85 ஓட்டங்களைக் குவித்தார்.

நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கை 4ஆவது ஓவரில் 28 ஓட்டங்களாக இருந்தபோது டெரில் மிச்செல் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

Daryl Mitchell works the ball away, Australia vs New Zealand, T20 World Cup final, Dubai, November 14, 2021

அவரைத் தொட்ந்து மார்ட்டின் கப்டிலுடன் இரண்டாவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் 48 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மார்ட்டின் கப்டில் 28 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதன் பின்னர் க்ளென் பிலிப்ஸுடன் 3ஆவது விக்கெட்டிலும் கேன் வில்லியம்சன் 37 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தினார். ஆனால், பிலிப்ஸின் பங்களிப்பு வெறும் 18 ஓட்டங்களாக இருந்தது.

Martin Guptill punches through the off side, Australia vs New Zealand, T20 World Cup final, Dubai, November 14, 2021

நான்கு ஓட்டங்கள் கழித்து 18ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 148 ஓட்டங்களாக இருந்தபோது கேன் வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார்.

ஜேம்ஸ் நீஷாம் 13 ஓட்டங்களுடனும் டிம் சீவேர்ட் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 4 ஓவர்களில் 16 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: மிச்செல் மார்ஷ், தொடர்நாயகன்: டேவிட் வோர்னர்.
 

https://www.virakesari.lk/article/117157

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.