Jump to content

நம்முடைய வாழ்க்கையை மீண்டும் தொடங்க முடியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நம்முடைய வாழ்க்கையை மீண்டும் தொடங்க முடியுமா?

spacer.png

முனைவர் சகுப்பன் 

கோவிட் 19 எனும் நச்சுயிரின் பாதிப்பானது உலகின் அனைத்து நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்திவிட்டது, குறிப்பாக இந்தியாவிலும் இந்த தொற்றுநோயின் பாதிப்பினால் அடுத்தடுத்து நெருங்கிய நண்பர்கள் / குடும்ப உறவினர்கள் போன்றவர்களின் உயிரிழப்பு பற்றிய அதிர்ச்சிகரமான செய்தியைப் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து கேட்டிருப்பார்கள். அதோடு அவ்வாறு இழந்து தவித்திடுபவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்குக்கூட நேரில் செல்லமுடியாதநிலையில் நம்மில் பெரும்பாலானோர் தொலைபேசியின் வாயிலாக மட்டுமே தொடர்பு கொண்டு ஆறுதல் கூறுகின்ற அவலச் சூழலுக்கு ஆளாகிவிட்டோம். மேலும், இந்த நச்சுயிரானது சூறாவளி போல வந்து, அதன் பாதையில் இருந்த ஒருசிலரின் உயிரைப் பறித்து பூமியிலிருந்தே துடைத்து எறிந்துவிட்டது. அதோடு அவ்வாறான உயிரிழப்பால் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையையே சிதைத்துவிட்டது. அதன் பிறகு நடைப்பிணங்களாக அதற்கான சாட்சியாக மட்டுமே நம்மில் பலர் வாழ்ந்து வருகின்ற மோசமான சூழலுக்கு ஆளாக்கி விட்டது. மிக முக்கியமாக இந்த கோவிட் -19 எனும் நச்சுயிர் தாக்கத்தினாலும் அதனால் உருவான பயத்தினாலும் நம்முடைய மக்களின் பெரும்பாலானவர்களின் வாழ்வு மிக மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது.

மேலும் இவ்வாறான நச்சுயிர் தாக்கத்தினால் சில மருந்துகளால் தீர்வுசெய்ய முடியாத அரிய நோய்கள் வந்து இறந்துவிடும் நிலை வந்துவிடுமோ என்ற பயம் பலரை மனச்சோர்வடையுமாறு செய்துவிட்டது. அதைவிட இதன் தாக்கத்தினால் தனிநபர்களின் உயிரிழப்பு மட்டுமல்லாது மாணவச்செல்வங்கள் கல்வி கற்பதற்காக நேரடி வகுப்பில் கலந்து கொள்ள முடியாமல் இணையத்தின் வாயிலான மெய்நிகர் வகுப்பில் மட்டுமே கலந்து கொள்ள முடியும் எனும் மாற்றத்தினால் ஆசிரியர்கள் , வகுப்புத் தோழர்கள் ஆகியோர்களுடனான தொடர்பை முற்றிலும் இழந்தனர்.

அதுமட்டுமல்லாது அனைத்து தொழில் வல்லுநர்களும் தத்தமது வீட்டிலிருந்தவாறே தம்முடைய பணியைச் செய்தனர். அதனால் நண்பர்களின் தொடர்பையும் சமூக தொடர்களையும் அறவே இழந்தனர். மேலும் பழைய தலைமுறையினர் தனிமையை மறப்பதற்காக தங்களுடைய நண்பர்களுடன் நேரடியாகச் சந்தித்து உரையாட முடியாமல் தொலைபேசிகளில் ஒட்டிக்கொண்டனர்.

மிக முக்கியமாக உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் பெரும்பாலானவர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் இணையவழியிலான வாட்ஸ்அப், ஜூம் போன்ற பயன்பாடுகளின் வாயிலாக மட்டுமே சந்தித்தனர். மேலும், இவ்வாறான பயன்பாடுகளின் உதவியுடனான காணொலி காட்சி தொடர்பு வாயிலாக மட்டுமே உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் தங்களுடைய மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பரிமாறிக் கொண்டனர். ஆனாலும்கூட, இந்த வசதி வாய்ப்புகளை தொழில்நுட்ப ஆர்வலர்களும், வசதி வாய்ப்புள்ளவர்களும் மட்டுமே அனுபவித்தனர். ஏழை எளியவர்கள் இவ்வாறான வசதி வாய்ப்புகளைப் பற்றிய செய்திகளை மட்டுமே அறிந்து கொண்டனர். நடைமுறையில் அவற்றை பெற முடியாத அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர்

கோவிட் -19 ஆனது மனிதர்களை இயந்திர மனிதர்களாக மாற்றுவதில் பெரும் வெற்றி பெற்றுவிட்டது, அதாவது மக்கள் அனைவரையும் தனிமையில் வாழுமாறு தண்டித்தது. அதே நேரத்தில் மனித தொடர்பின் நன்மையை அனைவரும் உணர்ந்துகொள்ளுமாறு கற்றுக்கொடுத்தது.

இந்த கோவிட் -19 நச்சுயிரின் தாக்கத்தினால் குழந்தைகள் மட்டுமே மிகப்பெரிய அளவில் உளவியல் அழுத்தங்களை எதிர்கொண்டு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடைய முழு அனுபவமும் அவர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. இருந்தபோதிலும் அவர்களில் பெரும்பாலானோர் இதனுடைய அச்சத்துக்கு அடி பணியவில்லை என்பது ஓர் அதிசயமாகும். ஆனாலும் இந்த நச்சுயிர் பாதிப்பின் வடுக்கள் கட்டாயம் அவர்களிடம் இருக்கக்கூடும்.

இந்த பாதிப்பானது சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மக்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை மிக மோசமாக ஆக்கிவிட்டது. அவர்களுள் கீழ்மட்ட நிலையினரின் குழந்தைகள் இணையத்தின் வாயிலான வகுப்புகளில்கூட கலந்து கொள்ள இயலாத சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தத் தொற்றுநோய் தாக்கியதால் அவர்களின் பெற்றோர்களை வேலையில்லாத சூழலுக்குத் துரத்திவிட்டது. அதனால் அவர்கள், மேல்நிலையிலுள்ள வசதியானவர்களைப் போன்றில்லாமல், தங்களுடைய வாழ்வின் நிச்சயமற்ற தன்மையையும் தனிமையையும் எதிர்கொண்டனர்.

துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. ஏனெனில், அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளுக்காகவே போராடுகின்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதாவது, பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பே இல்லாத சூழலை இந்த நச்சுயிர் உருவாக்கிவிட்டது என்பதே உண்மையான களநிலவரமாகும்.

பொதுமுடக்க அறிவிப்பினால் நகர்ப்புறத்தில் வாழ்கின்ற அன்றாடம் கூலி வேலை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற அவலநிலையிலுள்ள அத்துகூலிகளான அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் அடிப்படைத் தேவையான உணவுப்பொருட்கள் நகர்ப்புறத்தில் கிடைக்காததால் தத்தமது கிராமத்துக்குச் சென்றால் அரை வயிறு, கால் வயிறு உண்பதற்கான உணவு ஏதாவது கிடைக்காதா என்ற நப்பாசையினால் கிராமத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கியபோது பொதுமக்களின் போக்குவரத்துக்காகப் பயன்படுகின்ற தொடர்வண்டி, பேருந்து ஆகிய எதுவுமே பயன்பாட்டிலிருந்து நிறுத்தம் செய்துவிட்டதால் தங்களுடைய கிராமத்துக்கு நடந்தே சென்று விடுவோம் எனப் புறப்பட்டனர்.

ஆனாலும் வழியில் அவர்களுக்குத் தேவையான உணவு இல்லாமல் பசி பட்டினியுடன் பலர் நடந்து செல்கின்ற பாதையிலே வீழ்ந்து மடிந்தனர். அவ்வாறான சூழலில் தன்னுடைய தாய் இறந்ததுகூட அறியமுடியாத பச்சிளம் குழந்தை, தன்னுடைய வயிற்றுப்பசிக்காக அல்லாடிய அவலநிலை உருவானது.

spacer.png

ஆராய்ச்சியாளர்கள் இந்த கோவிட் -19 நச்சுயிரின் தாக்கத்தினால் இளம்சிறார்களின் மன ஆரோக்கியம் மிகவும் மோசமாக பாதித்திருக்கலாம் என்றும் சமூக தொடர்பு இல்லாததன் விளைவாக இளம் வயதினர் மன அழுத்தத்துக்கு ஆளானதாகவும் கூறுகின்றனர். மேலும் குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோர்களிடையே அதிகப்படியான சமூக தனிமைப்படுத்திடும் செயலானது அவர்களின் உடல்நலனையும் நல்வாழ்வையும் பாதிக்கக்கூடும் எனக் கூறுகின்றனர். குறிப்பாக, இந்தியாவைப் போல முன்பதிவு செய்யப்படாத சமூக தொடர்புகளுடன் கூடிய சமூகத்தில் இதுவே உண்மை நிலவரமாகும் .

ஒரு மருத்துவர் இந்த நச்சுயிரின் பாதிப்பானது அவரது தொழில் வாழ்க்கையை பாதித்தது மட்டுமல்லாமல், அவர் இப்போது இணையத்தின் வாயிலாக மட்டுமே நோயாளிகளுக்கான ஆலோசனைகளை வழங்குவதாக ஒப்புக்கொண்டார்

‘Nature’எனும் அறிவியல் ஆய்வு இதழின் இந்தத் தொற்றுநோய் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வயதானவர்களைவிட இளைஞர்களின் சமூக தொடர்புகளின் தேவை தற்போது வலுவாக இருப்பதால் அவர்கள் , அதிக அளவில் உளவியல் ரீதியான துயரங்களால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்று காட்டுவதாகவும், இவ்வாறானவர்கள் கவலை, மன அழுத்தம், குறிப்பாக தற்கொலை எண்ணங்கள் போன்ற மனநலப் பிரச்சினைகளுடனான ஆபத்தில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறது..

சமுதாய இணையதளமான ட்விட்டரில் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை மில்லியன் கணக்கான ட்வீட்களின் உரையாடல்களில் பயன்படுத்தப்படும் பிரபலமான ஹேஷ்டேக்குகளான #GoodHealth , #MentalHealthMatters ஆகியவற்றின் வாயிலாக இந்த கோவிட் -19இன் பாதிப்பு பொதுமக்களின் மனதில் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளன என்பதை அறிந்துகொள்ளலாம்

முடிவாக அறிவியல் ஆய்வின் மூலம் இந்த கோவிட் -19ஐத் தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளும் தடுப்பு மருந்துகளும் கண்டறியப்பட்டு வருகின்றன. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களானவை அவ்வாறான அறிவியல் ஆராய்ச்சியின் பயனால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளைக் கொண்டும் வழிமுறைகளைப் பின்பற்றியும் இந்த கோவிட்-19 நச்சுயிரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, பாதுகாப்பது மட்டுமல்லாமல் மற்ற பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகத் தடுப்பூசிகள், பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை மனிதநேயத்துடன் செயல்படுத்துதன் வாயிலாக இந்த நச்சுயிர் மேலும் பரவாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இருந்தபோதிலும் பிளேக், டெங்கு, சிக்குன்குனியா, பெரியம்மை, மலேரியா போன்ற நச்சுயிர்களின் பாதிப்பினை ஏற்றுக்கொண்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் வாயிலாக அவற்றுக்கான தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டு அவற்றுடன் வாழக் கற்றுக்கொண்டோம்.

அதேபோன்று இந்த கோவிட் -19 எனும் நச்சுயிர் பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் உருவாகக்கூடும் என இதைத் தடுப்பதற்காக தடுப்பூசி போடுவது, நெரிசலான இடங்களில் ஒன்று சேருவதைத் தவிர்ப்பது, பொதுமக்கள் அதிக அளவில் கூடுகின்ற குழுவான தொடர்புகளைத் தவிர்ப்பது, எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிவதோடு ஒருவருக்கொருவர் மூன்றடி இடைவெளி கடைப்பிடிப்பது, வெளியில் சென்று வீடு திரும்பினால் சோப்புடன் கைகால்களைக் கழுவியபின் உள்நுழைவது, கைகளால் கண், மூக்கு, வாய் ஆகிய உடலுறுப்புகளை அடிக்கடி தொடுவதைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த கோவிட் -19 நச்சுயிரின் பாதிப்புகளைத் தடுப்பது நமது பொறுப்பாகும். இந்த எளிய சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றினால், நம்முடைய வாழ்வின் வழக்கமான நிலையை மீட்டெடுக்க முடியும்.

பிரிட்டிஷ் எழுத்தாளரான சோமர்செட் மாக்ஹாம் என்பவர், “பயத்தில் வாழும் மக்கள் வாழ்வதில்லை. அவர்கள் வெறுமனே பொம்மையைப் போன்று இருக்கிறார்கள்” எனக் கூறியதைப் பொய்யாக்கி இந்த கோவிட் -19 எனும் நச்சுயிரினால் நமக்கு ஏற்பட்டுள்ள பயத்தை அறவே விரட்டிவிட்டு மீண்டும் நம்பிக்கையுடன் நம்முடைய வாழ்க்கையை வாழத் தொடங்கிடுவோம்.

கட்டுரையாளர்: 

முனைவர் சகுப்பன். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள பொ.மெய்யூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பயன்படுத்தப்படும் நிர்வாக கணக்கியல் முறை (Management Accounting Practice in Tamil Nadu Co-operative Sugar Mills) பற்றிய முனைவர் பட்ட ஆய்வைப் செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

1996 முதல் 2018 வரை பல்வேறு சர்க்கரை அலைகளில் கணக்கராகவும் நிறுமச் செயலராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது www.vikupficwa.wordpress.com என்ற இணையதள முகவரியில் எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்களைத் தினமும் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டு வருகிறார். 
 

https://minnambalam.com/politics/2021/09/30/5/can-we-start-our-living-alike-our-past

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.