Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

விண்வெளி தொடர்பான சில அடிப்படை கலைச்சொற்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

மக்களே.... எழுத்துலகில் விண்வெளி தொடர்பான கட்டுரைகளில் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொல் அறியாமல் பல பேரும் பலவிதமான சொற்களை கையாண்டு வருகின்றனர் என்பது வருத்தமளிக்கும் விதயமாக உள்ளது. இது செந்தரப்படுத்தாமையால வந்த விளைவு. இது தொடர்ந்தால் மொழிச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது; இதனால் பொருள் பிரளும். ஆகவே அதைப் போக்கும் விதமாக இதை எழுதுகிறேன்.

 

 1. Rocket(Space) - ஏவூர்தி
 2. Rocket(Weapon)- உந்துகணை/ தெறிப்பு
  1. தெறிப்பு - பழைய ஈழப் புத்தகம் ஒன்றில் இச்சொல் இப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 3. Missile - ஏவுகணை
 4. Satellite - செய்மதி(ஈழ.வழ.), செயற்கைக்கோள் (தமி.வழ)
  1. இதில் நான் செய்மதி என்பதையே என்னுடைய விடைகளில் கையாள்கிறேன். என்னைப் பொறுத்தவரை செய்மதியே மிகவும் பொருத்தமான சொல்.
 5. Galaxy - பேரடை
 6. Universe - புடவி/ அண்டம்
 7. Constellation - விண்மீன் குழாம்/ தாராகணம்
  1. தாராகணம் - பண்டைய தமிழ்ச்சொல்
   1. "தரித்திருந்தேனாகவே தாராகணப்போர்‌”(திவ இயற்‌, சான்று: 63)
 8. Cluster - கொத்தணி
 9. Warm hole - சுரைவழி
 10. System - மண்டலம்/ குடும்பம்
 11. space shuttle - விண்ணோடம்
 12. spacecraft - விண்கலம்
 13. spaceplane - விண்ணூர்தி
 14. spaceship - விண்கப்பல்
 15. space probe - விண் துருந்தி
  1. துருந்துதல் என்றால் தமிழில் துளையிட்டு தேடுதல், புத்தாய்வு(explore) என்று பொருள். எனவே இதை நாம் Probe-க்கு துருந்தி என்று வழங்கலாம்
 16. விண்வெளியில் உளவு பார்க்கும் கலன் - விண்ணுளவி
 17. Rover - திரிசாரணம்
 18. Jet - தாரை
 19. Exoplanet - புறக்கோள்
 20. Earth-like planet - கோள்மீன் / கோள்
 21. Dawrf planet- குறுங்கோள்
 22. All-stars - விண்மீன்/ வான்மீன்/ வெள்ளி/ நாள்மீன்/ உடு/ சிதம்/ சுதை/ தாரா/ தாரை/ தாரம் / தாரகம்/ தாரகை
 23. Comet - புகைக்கொடி/ எரி/ வால்மீன்
  1. இந்த வால்மீன் என்பது தற்காலத்திய சொல். புகைக்கொடி தான் பண்டைய சொல்
 24. Asteroid - சிறுகோள்
 25. Meteoroid -விண்கல் (விண்வெளியில் சுற்றித் திரிவது)
 26. Meteor - உற்கை/ சுக்கை/ எரிகல்/ எரிமீன்(வானிலேயே எரிந்து போவது)
 27. Meteorite - விண்வீழ்கொள்ளி/ கொள்ளிமீன்/ வீழ்மீன் (புவியினுள் நுழைந்து எரிந்தாலும் கெத்தா தரையைத் தொடுவது)

 

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விண்வெளி விஞ்ஞானத்தில் Cluster என்ற பதம் பல விரிவான அர்த்தங்களில் வரக்கூடும்.
உதாரணமாக கோள்கள், நட்சத்திரங்கள், நட்சத்திர கூட்டங்கள், நட்சத்திர கூட்டங்களின் கூட்டங்கள் இப்படி எது ஆயினும் அவை  தொகையாக சேர்ந்து ஒரே ஈர்ப்பு விசை மண்டலத்துள் இருந்து இயங்கும்போது cluster என அழைக்கப்படும்.

Warm hole என்பதை பட்டியலில் சேர்த்தது போலவே Black hole யும் உங்கள் பட்டியலில் சேர்த்திருக்கலாம்.

நீங்கள் Dawrf என எழுதியிருப்பது குள்ளம் என பொருள்படும் Dwarf என்று நினைக்கிறேன். இதையும் சரிபார்த்து கொள்ளவும்.

பாதை மாறிய ஒரு meteoroid பூமியின் ஈர்ப்பு மண்டலத்தால் கவரப்பட்டு  புவியை நோக்கி மிகை ஒலி வேகத்தில் வரும்போது வளிமண்டலத்தின் உராய்வு காரணமாக மித வெப்பமாகி ஆகாயத்தில் (பூமியின் மேற்பரப்பிலிருந்து 125 கிலோமீட்டருக்கும் குறைவான உயரத்திலேயே) எரிந்துபோவது meteor எனப்படும்.

Meteor shower என்பதையும் பட்டியலில் சேர்க்கலாம் என நினைக்கிறேன்.

இணையத்தில் பல இடங்களில் Rover என்பதற்கு திரிசாரணன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
2 hours ago, vanangaamudi said:

விண்வெளி விஞ்ஞானத்தில் Cluster என்ற பதம் பல விரிவான அர்த்தங்களில் வரக்கூடும்.
உதாரணமாக கோள்கள், நட்சத்திரங்கள், நட்சத்திர கூட்டங்கள், நட்சத்திர கூட்டங்களின் கூட்டங்கள் இப்படி எது ஆயினும் அவை  தொகையாக சேர்ந்து ஒரே ஈர்ப்பு விசை மண்டலத்துள் இருந்து இயங்கும்போது cluster என அழைக்கப்படும்.

Warm hole என்பதை பட்டியலில் சேர்த்தது போலவே Black hole யும் உங்கள் பட்டியலில் சேர்த்திருக்கலாம்.

நீங்கள் Dawrf என எழுதியிருப்பது குள்ளம் என பொருள்படும் Dwarf என்று நினைக்கிறேன். இதையும் சரிபார்த்து கொள்ளவும்.

பாதை மாறிய ஒரு meteoroid பூமியின் ஈர்ப்பு மண்டலத்தால் கவரப்பட்டு  புவியை நோக்கி மிகை ஒலி வேகத்தில் வரும்போது வளிமண்டலத்தின் உராய்வு காரணமாக மித வெப்பமாகி ஆகாயத்தில் (பூமியின் மேற்பரப்பிலிருந்து 125 கிலோமீட்டருக்கும் குறைவான உயரத்திலேயே) எரிந்துபோவது meteor எனப்படும்.

Meteor shower என்பதையும் பட்டியலில் சேர்க்கலாம் என நினைக்கிறேன்.

இணையத்தில் பல இடங்களில் Rover என்பதற்கு திரிசாரணன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

தங்கள் கருத்துக்களுக்கு எனது முதற்கண் நன்றி...

//Cluster//

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி... மாற்றியுள்ளேன்(கொத்தணி).

 

//black hole//

ஐயா, நான் அது அனைவரும் அறிந்தது என்பதால் சேர்க்கவில்ல்லை.  

 

//Dwarf//
ஐயா குறுங்கோள்கள் என்பவை எம்முடைய சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்மீன்களினதும் அளவினைக் காட்டிலும் மிகச் சிறியவையாக இருப்பவையே. ஆதலால்தான் அவை குறுங்கோள்கள் எனப்படுகின்றன. நேரடி மொழிபெயர்ப்பு முடிந்தளவு தவிர்த்தல் வேணும்.

 

//Meteor shower//

நாம் இச்சொல்லினை அவ்வளவாக பயன்படுத்துவதில்லையாதலால் அதை நான் சேர்க்கவில்லை. ஆனால் இதற்கான தமிழ்ச் சொல் உண்டு!

 

 

//இணையத்தில் பல இடங்களில் Rover என்பதற்கு திரிசாரணன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.//

இது நல்ல சொல். ஆனால் இதில் சில மாற்றல்கள் செய்யப்பட வேண்டும். அதாவது திரிசாரணன் என்பதில் உள்ள அன் விகுதி நீக்கப்பட்டு அம் விகுதி சேர்க்கப்பட வேண்டும். அம் விகுதி ஒரு கருவிப் பொறுளீறு மற்றும் பெயரீறு ஆகும். அப்போதுதான் இது உயிரற்ற பொருளைக் குறிக்கும். திரிசாரணன் என ஊர்தியினைக் குறிக்க வழங்கினால் அது பொருளற்ற இலக்கணப்படி மிகப் பிழையான சொல்லாகிவிடும். ஆதாலால் திரிசாரணம் என வழங்குவோம். அடியெடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி🙏

 

 

 

(நான் தமிழ்வழியில் கற்றதில்லை. மேலும் எமது நாட்டில் தமிழில் புழங்கும் சொற்களும் அறியேன், இந்தியாவில் கற்கைநெறி மேற்கொண்டதால்!) 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.