Jump to content

மீண்டு வரும்... "பட்டியடைத்தல்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of tree, nature, grass and sky
 
May be an image of nature
 
 
மீண்டு வரும்...  "பட்டியடைத்தல்"
 
இன்று பின்னேரம் விளான் வீதியால் செல்லும் போது பட்டியடைக்கும் காட்சி கண்டு வயலுக்குள் இறங்கினேன்.
அங்கு நிண்ட அளவெட்டியை சேர்ந்த சேனாதிராஜா ஐயாவிடம் கதையளக்கத் தொடங்கினேன்.
 
🔴ஐயா உதுக்க என்ன கட்டப்போறியள் ?
🔘செம்மறியாடு
🔴என்னத்துக்கு ?
🔘இந்த முறை உரம் வராதாம் அதான் பசளைக்காக கட்டுறம்.
🔴உங்கட வயலோ ?
🔘இல்லை. நாங்கள் தான் "பட்டி" கட்டுறம்.
🔴எத்தனை ஆடு கட்டப்போறியள்?
🔘700 ஆடு
🔴இதுல எத்தனை பரப்பிற்கு "பட்டி" அடைச்சிருக்கிறியள்?
🔘7 பரப்பில.
🔴பட்டி கட்ட எவ்வளவு காசு?
🔘ஒரு இரவு இந்த 700 செம்மறி ஆட்டையும் "பட்டி அடைக்க" 5000 ரூபா எடுப்போம். இதுகள் வயலுக்கு சலத்தையும், புழுக்கையையும் பசளையா குடுக்கும்.
🔴எப்படிக் கட்டுவீங்கள் ?
🔘உழுத வயல் நிலத்தில வெயில் தாழ்ந்த பின் அடைப்பினுள் செம்மறிகளை கட்டி விடுவோம். பட்டி அவிழ்த்த பின்னர் விவசாயிகள் மீண்டும் மண்ணை உழுது விடுவார்கள்.
🔴என்ன இன செம்மறி ஆடுகள் வைச்சிருக்கிறீங்கள் ?
🔘"மெட்ராஸ் வெள்ளை"
🔴எங்களுக்கும் பட்டியடைக்க வருவீங்களா ஐயா ?
🔘எங்களுக்கு 15 ஆம் திகதி வரை 'புக்கிங்' இருக்கு.
கண்களுக்கு புலப்படமால் களனிகளில் மிகப்பெரும் மாற்றமொன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் உரங்களைத் தவிர்த்து இப்படி ஒரு மாற்றம் வருவது நல்லது ......!  👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.