Jump to content

இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடிக்கொண்டிருக்கிறார்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடிக்கொண்டிருக்கிறார்-பா.உதயன்

அனைவருக்குமான அரசு தாம் என்று சொல்பவர்கள் எந்த அபிவிருத்தியும் முதலீடும் செய்ய வேண்டுமானால் முதலில் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். ( winning the hearts and minds of tamil people ) யுத்த வடுக்கள், காயங்கள், காணாமல் போனோருக்கான நீதிகள் இப்படி அடிப்படை உரிமைகளையாவது கொடுக்க முன்வர வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மையை (Political Stability) அன் நாட்டில் முதலில் கட்டி எழுப்பவேண்டும்.

இவை ஒன்றும் இல்லாமல் எவரையும் பேச்சுக்கு அழைப்பதும் அபிவிருத்தி செய்ய வாருங்கள் என்பதும் இலங்கையில் முதலீடு செய்யுங்கள் என்பதும் வெறும் கண்துடைப்பாகும். சர்வதேச சமூகத்தையும் அத்தோடு அப்பாவித் தமிழரை ஏமாற்றும் செயலுமாகும். சிங்கள மக்களின் மனங்களை நாமும் வென்றாக வேண்டும் என்றால் இரு இனங்களுக்கு இடையிலான பாலத்தை ஆளும் வர்க்கம் நல்லிணக்கத்தின் ஊடாக அமைக்க வேண்டும். இவை இல்லாமல் எதுகும் இலங்கையில் நகராது. அந்த மக்களுக்கான நீதியை வழங்காமல் எந்த ஒரு நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.( without justice, there is no reconciliation ) என்ற உண்மையை உண்மையாகவே ஆழமாக சிந்தித்து சமாதானத்தை விரும்பும் அந்த மக்களும் உள்நாட்டு வெளி நாட்டு அரசியல் வாதிகளும் உணர வேண்டும். 

பொய்யான கோட்பாடுகளை பிரச்சாரங்களை வாக்குறுதிகளை சிங்கள மக்களுக்கு வழங்கி இரு இனங்களுக்கு இடையிலான குரோதத்தை வளர்த்து பேரினவாதம் என்ற பெரும் பூதத்தை வளர்த்து விட்ட ஆளும் வர்க்க அரசியல் தலைவர்களும் இவர்களுக்கு முண்டு கொடுத்து நிற்கும் போலி இடது சாரிகளும் இனி மேலும் சரியான பாதையில் நடப்பார்களா என்பது இனியும் சந்தேகமே. ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லிக்கொண்டு யுத்த வெற்றி என்று சொல்லிக்கொண்டு கொண்டாடுவதும் அதே தேசத்தில் வாழும் இன்னும் ஒரு இனத்தை கண்ணீரொடு அவல வாழ்வு வாழ பார்த்திருப்பதும் மாக இருந்ததன் பலனை இன்று இந்த தேசம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி அனுபவித்துக் கொண்டிரு ப்பதை பார்க்கிறோம். 

எமது விடுதலைப் போராடத்தில் நாம் கூட எல்லாம் சரியாகத் தான் கொண்டு சென்றவர்கள் அல்ல எம்மிலும் பல பிழைகள் இருந்தன. இதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உரியது என்றபோதும் நாம் செய்யும் விமர்சனம் கூட சரியாக செய்ய வேண்டும். நாம் செய்யும் விமர்சனங்கள் எதிரிக்கு பலமாக இருக்கக் கூடாது. சில தமிழர்கள் அரசியல் வாதிகள் கூட தாயகத்திலும் வெளியிலும் எதிரிக்கு சாதகமாகவே தமது விமர்சனங்களை கருத்துக்களை வைப்பதை பார்க்கிறோம். இது எம்மையே நாம் காட்டிக் கொடுப்பது போல் ஆகிவிடும். எவ்வளவு தூரம் தமிழர் ஒற்றுமை தமிழர் வாழும் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் சிதைக்கப்படுகிறதோ அவ்வளவு தூரம் சிங்கள தென் இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு வெற்றியே. இதை தமிழர் உணராது போனால் மீண்டும் மீண்டும் தோல்விகளையே சந்திக்க நேரிடும்.

இன்று இலங்கையில் உள்ள நிர்வாக நீதிமன்றங்களில் கூட மொத்த ஊழல் மற்றும் நேர்மை இல்லாமை மற்றும்  சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து உயர்கல்வி அறிவு சார்ந்த சரியான பொருளாதாரக் கொள்கை அமைக்க தவறியதும் இன்றைய நிலைமைக்கு காரணமாகும். உண்மையான சமாதானத்தை விரும்பும் தலைவர்கள் இலங்கையில் இருந்திருந்தால் எந்த வித வெளி உலகத் தலையீடும் இன்றி நாமாகவே பேசி நமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும். உள் நாட்டிலேயே அந்த தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் பேசி எல்லாத் தீர்வையும் கண்டிருக்க முடியும். எத்தனையே கொடுத்த வாக்குறுதிகளை கடந்த காலங்களில் எந்த சிங்கள தலைவர்களும் நிறைவேற்றவில்லை.13ம் சரத்து கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கியுளது இதனால் சில தளர்வுகளை ஏற்படுத்தி மேற்குலத்தை தனத பக்கம் திருப்பி இதில் இருந்து மீள்வதற்காக புலம் பெயர் தமிழருடனும் பேசத் தயார் என்ற அறிவிப்பானதில் உண்மை தன்மை இருக்குமா என்பது சந்தேகமே. அதே வேளை போர்க்கால நீதி விசாணையில் வெளி உலக தலையீட்டில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு யுத்தியாகவும் இதை பயன்படுத்த காய்களை கட்சிதமாக நகர்த்தப் பார்க்கிறது. இதை சரியான முறையில் புலம் பெயர் தமிழர்களும் அரசியல் வாதிகளும் புரிந்து விளங்கி அதில் உள்ள சூட்சுமம் அறிந்து காய்களை நகர்த்த வேண்டும் அணுக வேண்டும்.

ஒரு காலம் புலிகள் தான் பேச்சுவார்த்தைக்கும் தீர்வுக்கும் தடையாக இருக்கிறார் என்றவர்கள் இன்று எதையுமே வழங்க தயார் இல்லை. எவரினது அழுத்தமும் பலம் உள்ள நாடுகளின் மத்தியஸ்தமும் இல்லாமல் எந்த ஒரு காயையும் இலங்கையோடு நகர்த்த முடியாது எந்தக் கொம்பனாலும். இலங்கையின் இனப்பிரச்சினைக் கான இந்தப் 13 ம் சரத்துத் தீர்வும் இந்தியாவின் அழுத்தத்தினால் இரு இனங்களுக்கிடையிலான திணிப்பினால் வந்ததே தவிர இலங்கை தானாக தந்ததல்ல. அதுகும் வந்தது அப்போ தமிழர் பேரம் பேசக்கூடிய பலத்ததோடு இருந்ததனால் தான். இப்போ இருந்த ஒற்றுமையையும் தொலைத்து விட்டு உடைந்து சிதறி உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் இப்போ எதுகும் தமிழரிடம் இல்லை என்றாகியபின் எதைத் தான் தானாகத் தருவார்கள். எல்லாமே அவர் அவர் நலனுக்குகேற்ப உலகம் என்றாகிய பின் எங்கே அறமும் தர்மமும் மனிதாபிமானமும் இருக்கப் போகிறது. அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு இன்னும் இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

பா.உதயன்✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, uthayakumar said:

புலிகள் தான் பேச்சுவார்த்தைக்கும் தீர்வுக்கும் தடையாக இருக்கிறார் என்றவர்கள் இன்று எதையுமே வழங்க தயார் இல்லை

இவர்கள் ஒரு பச்சோத்திகள், என்றுமே இப்படிதான் இருப்பார்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.