Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

குடும்பிமலை வேறு; தொப்பிக்கல் வேறு, குழம்ப வேண்டாம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

மூலம்:   https://www.facebook.com/TrincoAid/posts/334149313677151/

(தடித்த எழுத்துக்களுக்கு மாற்றியவர் நன்னிச் சோழன் ஆவார்)

---------------------------------------------------------------------------

 

 

குடும்பிமலை எதிர் தொப்பிக்கல்

 

 

கல் தோன்றிய காலத்தில் இருந்தே இந்தப் பிரதேசத்தில் இருக்கும்

 1. குசலான மலை,
 2. கேவர் மலை,
 3. தொப்பிகல் மலை,
 4. கார் மலை,
 5. குடும்பி மலை,
 6. நாகம்பு மலை,
 7. ரெண்டு கல் மலை,
 8. படர் மலை,
 9. மண் மலை

போன்ற பல மலைகளில் இதுவும் ஒன்று. பெரிய மலைகள் என்று இல்லாமல், மலைக் குன்றுகள் என்றே சொல்லலாம். இன்று நிலஆக்கிரமிப்பின் அடையாளமாக தொப்பிகல் மலையும், குடும்பி மலையும் விளங்குகின்றன.

A-15 திருமலை வீதியில் மட்டக்களப்பில் இருந்து 24வது கிலோமீட்டர் தூரத்தில் வரும் கிரான் சந்தியில் இருந்து, புலி பாய்ந்தகல் வீதியில் வடமுனையை நோக்கிச் செல்லும் பாதையில் 26வது கிலோமீட்டர் பிரிந்து 6-7 கிலோமீட்டர் சென்றால் குடும்பி மலைக் கிராமம் இருக்கின்றது.

 


வரலாற்று சிறப்பு மிக்க எந்த தடயங்களும் இல்லா விட்டாலும், அண்மைக்கால வரலாற்றில் இடம்பிடித்து விட்ட ஒரு மலையாகவும், பெயராகவும் இந்த தொப்பிக் கல் மலைப் பிரதேசம் இடம் பெற்று விட்டது. தொப்பிக்கல் மலை சம்பந்தமாக மயக்கமான தெளிவற்ற நிலை பலரிடமும் இருக்கின்றது.

1977ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கள அரசினதும், பாதுகாப்பு படைகளினதும் பேசு பொருளாக இந்த மலை இருந்து வருகின்றது.

திடீர் என்று 2006ஆம் ஆண்டு இந்த தொப்பிக் கல் மலைப் பிரதேசம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்ததோடு (google) வலைதளத்திலும் தேடப்படும் ஒரு பொருளாக இந்தப் பிரதேசம் மாறியது. அத்தோடு உள்ளூரிலும், அண்டைய நாடுகளில் இருந்தும் இந்தப் பிரதேசத்தை எல்லோரும் ஆவலோடும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

என்ன நடக்கின்றது? எப்படி நடந்ததது? என்ற பல கேள்விகள் எல்லோருடைய மனங்களையும் கிளறிக் கொண்டு இருந்தது. போதாக்குறைக்கு இலங்கை அரசாங்கமும், இராணுவத்தினரும், அரச ஊடகங்கள் ஊடாக தொப்பிக் கல் மலைப் பிரதேசம் பற்றியே பேசிக் கொண்டு இருந்தது.

main-qimg-aaaddc1029a4f7161a9cdccf7802491a.jpg

'குடும்பிமலை என்ற குன்றை தொப்பிக்கல் என்று மாற்றிப் புனைந்து வெளியிடப்பட்ட தாள்'🤬

அத்தோடு இலங்கை மத்திய வங்கியும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து தொப்பிக்கல் மலை என்று, குடும்பி மலையின் படத்தை 1000ஆம் ரூபா நாணயத்தாளில் பதிவிட்டு அந்தப் பிரதேசத்தில் அரச படையினர் சிங்கள கொடியைப் பறக்க விடுவது போன்று அதி தீவிரமாக ஏற்றிக் கொண்டிருப்பதாக சாட்சிப்படுத்தி இருந்தது. இது ஒரு முக்கியத்துவம் மிக்க வரலாற்றுப் பதிவாக சிங்கள அரசு பதிவிட்டிருந்தது.

இந்தக் கொடி ஏற்றப்படுவதற்கு முன் இங்கே இந்தப் பிரதேசத்தில் பறந்து கொண்டிருந்த 'புலிக் கொடி' பற்றியும், அதன் வரலாற்று தடம் பற்றியும் ஆய்வாளர்களை தேடிப் பார்க்க தூண்டிய ஒரு நிகழ்வாக இதைப் பார்க்கலாம். முதலில் தொப்பிக்கல் மலை, குடும்பி மலை இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தூரம் என்பவற்றைப் பார்ப்போம்.

 


 • குடும்பி மலை:

main-qimg-558218fcd0f38271a3e4efc926967132.jpg

Kudumpi malai.jpg

இந்தக் குடும்பி மலை, கிரான் சந்தியில் இருந்து 26ஆவது மைல்கல்லில் இருந்து குறுக்காக 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. சாதாரணமாக ஒரு சூடு நெல் கதிர்களை அறுத்து குவித்து வைப்பது போன்று தோற்றத்தில் இருக்கும்.

அடி வாரம் அகன்றும், விரிந்தும், வட்டமாகவும், உச்சியில் ஒரு கல்லும் உடையாது, இந்த உச்சிக்கல் தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு குடும்பியைப் போல (பிராமணர்கள் கட்டும் குடும்பியைப் போல) இருக்கும். இந்த தோற்றத்தை தூரத்தில் இருந்து பார்த்தல் தெளிவாகத் தெரியும்.

 


 • தொப்பிக்கல் மலை:

main-qimg-6426e40a2c2c9aa03ce794cb1f991f6d.jpg

Thoppikkal malai.jpg

தொப்பிக்கல் மலை என்பது அதே பாதையில் மியான் குளச்சந்தியில் இருந்து 30ஆவது கிலோமீட்டரில் பிரிந்து தென் கிழக்குப் பக்கமாக 5 கிலோமீட்டர் சென்று பெரிய மியான் கல் வழியாக வெள்ளைக் கல் மலை, பால வட்டவான், மயிலத்த மடு, மாதவணை போன்ற காட்டுப் பிரதேசங்களை அண்டியதாக கிரானில் இருந்தது சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது.

அதே போல் செங்கலடிச் சந்தியில் இருந்து பதுளை வீதியில் சென்று மேற்குப் பக்கமாக, மாவடி ஓடை, புலுட்டு மான் ஓடை, வழியாகவும் (சரியான பாதை இல்லை) செல்லலாம். பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு - திருமலை வீதியில் மன்னப்பிட்டிச் சந்தி ஊடாக அருகம்பல என்ற சிங்கள கிராமத்தை தாண்டி கிழக்குப் பக்கமாக, மாந்தலை ஆற்றரைக் கடந்தும் தொப்பிக்கல் மலைக்குப் போகலாம்.

இது வட்ட வடிவம் அல்லாத முன் பக்கத்திற்க்கு மட்டும் முனை வைத்த ஒரு தொப்பியை வைத்தது போன்று தோற்றத்தில் இருக்கும், இந்தப் பிரதேசத்தில் இன்னும் ஒருவரும் குடியேறவில்லை. (2017 ஆம் ஆண்டு நிலவரப்படி)

ஆனால் நீண்ட காலமாக வந்தாறு மூலை, சித்தாண்டி, கிரான் போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பருவ காலத்தில் மாடுகள் தங்கள் கால் நடைகளை மேய்ப்பதற்காக இங்கு வருவார்கள். இந்தப் பகுதி நீண்ட காலமாக தமிழர்களின் கால் நடைகள் மேய்க்கும் மேய்ச்சல் தரையாகவே பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் யுத்தம் முடிந்த பிறகு பெரும்பான்மை இனத்தவர்கள் மியான் கல், மாந்தலை ஆற்றைக் கடந்தது வந்து இந்த பிரதேசத்தில் இருந்த காடுகளை அழித்து நெல்லும், வேறு உப உணவுப்பயிர்களும் செய்தார்கள். அத்தோடு இங்கு உள்ள தமிழர்களின் கால் நடைகளை துப்பாக்கியால் சுட்டும், சுருக்கு வைத்துப் பிடித்தும் அநியாயம் செய்தார்கள். இதைக் கேட்கச் சென்ற தமிழர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள். கால் நடைகளை கட்டி வைத்து நட்ட ஈடும் அறவிட்டார்கள். இவர்கள் காடுகளை அழித்த போது வன இலாக்காவினர் கண்டு கொள்ளவில்லை. இவர்களுக்கு உதவியாகவும், பாதுகாப்பாகவும், மாந்தலை ஆற்று ஓரத்தில் முகாம் அமைத்து பாதுகாப்புப் படையினர் இருந்தார்கள்.

இந்த மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கும், அத்து மீறிய குடி யேற்றத்துக்கும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் நீண்ட காலமாக பல முயற்சிகளை எடுத்து பல தரப்பினர்களிடம் பேசி தற்போது ஒரு முடிவுக்கு வத்திருக்கின்றார்கள். இதன் படி ஒரு பெரிய காவலரண் அமைக்கப்பட்டதோடு, இங்குள்ள கால் நடை வளர்ப்போருக்கு பாதுகாப்பும், கால் நடைகளுக்கான குடிநீர் குளமும் அமைக்கப்பட்டுள்ளது.


 

இந்த இரண்டு மலைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களே, தொப்பிக்கல் மலையின் மறுபெயர் தான் குடும்பி மலை என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த மயக்கத்தை ஏற்படுத்தியது இலங்கை அரசாங்கமும், படைகளுமே ஆகும்.

குடும்பி மலையைச் சுற்றி மீரானக் கடவை, சின்ன மியான்கல், பெரிய மீயான்கள் குளம், கிரான் வட்டை, அசுரவணச் சோலை போன்ற பல கிராமங்கள் இருக்கின்றன.

1960 ஆண்டு காலப் பகுதியில் சித்தாண்டி, கிரான், சந்திவெளி, போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள்இ காடுகள் வெட்டி சேனைப் பயிரும் வேளான்மையும் செய்து வந்தார்கள். 1970 ம் ஆண்டு காலப் பகுதியில் தேக்கு மரம் நாட்டும் அரசாங்கத்தின் திட்டத்தின் படி பலருக்கு இங்கே குடியேற வாய்ப்புக்கள் கிட்டியது.

1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு பௌத்த பிக்குவின் தலைமையில் ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் இப்பகுதியில் கொண்டு குடியேற்றப்பட்டு தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு தமிழர்கள் எல்லாம் விரட்டி அடிக்கப்பட்டார்கள். இந்தக் குடியேற்றத்திற்கு பொலன்னறுவை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அதி தீவிரமாக செயல்பட்டார். அத்தோடு அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பும் இருந்தது. இந்தக் காலப்ப் பகுதியில் “பொடியன்களின் ” ஆத்திரம் மேலோங்கியதால், இந்தக் குடியிருப்புக்கள் தீயிட்டு அழிக்கப்பட்டதோடு, குடியேற்றவாசிகளும் விரட்டி அடிக்கப்பட்டார்கள்.

குடுப்பி மலையை அண்டிய கிராமங்களில் - சின்ன மீயான்கல், பெரிய மீயான்கல் - ஆகியவற்றில் 69 குடும்பங்களும் எனயா பகுதிகளில் எல்லாம் சேர்த்து மொத்தம் 169 குடும்பங்களைச் சேர்ந்த 774 பேர் குடியிருக்கின்றார்கள். குடும்பி மலைக் குமரன் வித்தியாலயத்தில் 14 இற்கம் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றார்கள். இது ஒரு ஆரம்பப் பிரிவுப் பாடசாலையாகும். இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த, கோவிந்தமூர்த்தி பிரசாகினி, பரமகுமார் யசாஜினி, பொன்னுத்துரை சரோஜினி, சற்குணாந்தம் சுலக்சனா ஆகியோர் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மடுவடிப் பிள்ளையார், முத்துமாரி அம்மன், கண்ணகி அம்மன், வேங்கையடி முருகன் போன்ற ஆலயங்களையும் கட்டி வழிபட்டு வருகின்றார்கள் . மியான் கல் குளம் 1600 ஏக்கர் வயல் நிலத்திற்கு நீர் பாய்ச்சக் கூடிய குளமாகும். இங்கு தொண்டு நிறுவனங்களினால் குளத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டிருக்கின்றது.

போர்க் காலத்தில் விடுதலைப் போராட்டத்தோடு இந்த மக்கள் இரண்டறக் கலந்திருந்தார்கள். பல போராளிகளையும், மாவீரர்களையும் தந்த மண், இந்த மண். போரழிவுகளின் தடங்களையும் இன்றும் இங்கே காணலாம்.

போர் முடிந்த பின்னர் இந்தப் பகுதி ஒரு ஆக்கிரமிப்புப் பிரதேசமாகவே இருக்கின்றது. மீயான் கல் குளச்சந்தியில் பெரியதொரு இராணுவ முகாமும், வசதிகளுடன் கூடிய உல்லாச விடுதியும் இருக்கின்றது. இந்த விடுதியை இராணுவத்தினரே நடத்தி வருகின்றார்கள்.

கிரான் ஆற்று ஓரம் இருந்து, புலி பாய்ந்த கல், தரவை, நெடும் பாதை எங்கும் இராணுவ முகாம்களும், காவல் அரண்களும் இன்று இங்கு இருப்பதைக் காணலாம். இவ்வாறு சிங்கள பெளத்த பேரினவாத அரச இயந்திரத்தின் நில ஆக்கிரமிப்பின் அடையாளமாக குடும்பிமலையும், தொப்பிக்கல் மலையும் காணப்படுகின்றது.

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

மேற்கண்ட இரு மலைகளின் அமைவிடம்:

 • குடும்பிமலை: கரடியனாறுபக்கம் உள்ளது
 • தொப்பிகல்: உகந்தை பக்கம், குமணை சரணாலயம் கிட்டவாக உள்ளது

 

தகவல் வழங்குநர்:

@goshan_che

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நன்னிச் சோழன் said:

மேற்கண்ட இரு மலைகளின் அமைவிடம்:

 • குடும்பிமலை: கரடியனாறுபக்கம் உள்ளது
 • தொப்பிகல்: உகந்தை பக்கம், குமணை சரணாலயம் கிட்டவாக உள்ளது

 

தகவல் வழங்குநர்:

@goshan_che

உங்கள் கட்டுரையை வாசித்த பின் எனக்கும் குழம்பி விட்டது நன்னி. 

@தனிக்காட்டு ராஜா @அக்னியஷ்த்ரா உறுதி செய்யுங்க அப்பு.

உன்னிச்சை போன நேரம் தூரத்தில் குடும்பிமலையும், உகந்தை முருகனை பாக்கபோன நேரம் தூரத்தில் தொப்பிகல்லும் தெரிந்த நியாபகம். 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
25 minutes ago, goshan_che said:

உங்கள் கட்டுரையை வாசித்த பின் எனக்கும் குழம்பி விட்டது நன்னி. 

@தனிக்காட்டு ராஜா @அக்னியஷ்த்ரா உறுதி செய்யுங்க அப்பு.

உன்னிச்சை போன நேரம் தூரத்தில் குடும்பிமலையும், உகந்தை முருகனை பாக்கபோன நேரம் தூரத்தில் தொப்பிகல்லும் தெரிந்த நியாபகம். 

 

 

அண்ணை இது நான் எழுதியது அன்று... வேசுபுக்கில் புல்லு மேஞ்சு கொண்டு போகும் போது ஆணி குத்துவது போல கிடைத்தது. அப்படியே கொண்டு வந்து இங்கு போட்டு விட்டேன். 

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2021 at 01:22, goshan_che said:

உங்கள் கட்டுரையை வாசித்த பின் எனக்கும் குழம்பி விட்டது நன்னி. 

@தனிக்காட்டு ராஜா @அக்னியஷ்த்ரா உறுதி செய்யுங்க அப்பு.

உன்னிச்சை போன நேரம் தூரத்தில் குடும்பிமலையும், உகந்தை முருகனை பாக்கபோன நேரம் தூரத்தில் தொப்பிகல்லும் தெரிந்த நியாபகம். 

 

உகந்தைக்கு போகும் வழியில் இருப்பதும் குடும்பி மலை தான் ,தொப்பிஹல  என சிங்களத்தில் சொல்வார்கள்,

உன்னிச்சை போகும் வழியில இருப்பதும் குடும்பி மலைதான் ஆனால் இந்த மலைதான் பிரபலமான மலைப்பகுதி புலிகள் இருந்த காலத்தில் ராணுவம் கிழக்கை கைப்பற்றிய போது பாரிய முகாமிட்டுள்ளது இதனால் இப்போது தொப்பிஹல என்றே அழைக்கப்படுகிறது .

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
On 3/10/2021 at 15:25, நன்னிச் சோழன் said:

மேற்கண்ட இரு மலைகளின் அமைவிடம்:

 • குடும்பிமலை: கரடியனாறுபக்கம் உள்ளது
 • தொப்பிகல்: உகந்தை பக்கம், குமணை சரணாலயம் கிட்டவாக உள்ளது

 

தகவல் வழங்குநர்:

@goshan_che

இந்த தகவல் தவறானது என்பதையும் மேலே கட்டுரையில் உள்ளதே சரியானது என்பதையும் வாசகருக்கு நான் தெளிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

இந்த தகவல் தவறானது என்பதையும் மேலே கட்டுரையில் உள்ளதே சரியானது என்பதையும் வாசகருக்கு நான் தெளிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நன்றி நன்னி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

நன்றி நன்னி

🙏🙏

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By நவீனன்
   மட்டக்களப்பில் வீழ்ச்சியை சந்திக்கப் போகும் தமிழரசுக் கட்சி?
    
   தீரன்
   நடைபெறவுள்ள தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கி மிக மோசமான சரிவைச் சந்திக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
   தமிழரசுக் கட்சி தோல்வியை சந்திக்குமா? என்ற கேள்விக்கு அப்பால் தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில் பெற்ற வாக்கு எண்ணிக்கையில் இம்முறை பாரிய சரிவைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் அதன் ஆதரவாளர்கள் மற்று பொது மக்கள் மத்தியில் மிகுந்த விமர்சனத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
   உட்கட்சி பூசல்!
   மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை தீர்மானிக்கும் அதிகாரம் இரண்டு பேரிடம் மட்டுமே உள்ளது என்றும் அவர்கள் ஏனையவர்களை கலந்தாலோசிப்பதோ அல்லது மதித்து நடப்பதோ இல்லை என்ற கருத்து வேறுபாடுகள் அதிகரித்து காணப்படுகிறது.
   குறிப்பாக இவர்கள் இருவரும் தமிழரசுக் கட்சியின் ஆதரவு தளத்தை அதிகரிப்பதற்கு அப்பால் தங்களுடைய ஆதரவு தளத்தை அதிகரிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக செயற்படுகின்றனர். இதில் மிக முக்கியமானவர் தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் மற்றையவர் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இவர்கள் இருவரின் செயற்பாடுகள் தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.
   உட்கட்சி ஜனநாயகம் இன்றி ஒருமித்து செயற்படாது நான் பெரிது நீ பெரிது என்ற மமதையில் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதும் ஒருவரை பற்றி ஒருவர் சம்பந்தனிடம் போட்டுக் கொடுப்பதுமே உட்கட்சி ஜனநாயகமாக உள்ளது.
   கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படும் யோகேஸ்வரன்!
   தமிழரசுக் கட்சியில் இருந்து மிகவும் சூட்சுமமாக திட்டமிட்டு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஓரங்கட்டப்படுகின்றார்.
   யோகேஸ்வரன் அவர்களை கட்சியின் தலைமையிடம் இருந்து பிரிப்பதற்கு துரைராஜசிங்கம் மற்றும் சிறினேசன் ஆகிய இருவருமே காரணம் என தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பல தீர்மானம் மிக்க விடயங்களில் யோகேஸ்வரன், வியாளேந்திரன் போன்றவர்கள் ஓரங்கட்டப்பட்டு சிறிநேசனின் தன்னிச்சையான முடிவுகள் பல அரங்கேற்றப்பட்டுள்ளது.
   இதற்கு பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் மிகமுக்கிய காரணமாக யோகேஸ்வரன் இந்து குருக்கள் என்பதும் அவர் இந்தியாவுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளார் என்பதற்காக  யோகேஸ்வரனை ஒதுக்கி செயற்படுகின்றார்கள். மட்டக்களப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரன் அவர்களை அதே கட்சியை சேர்ந்தவர்கள் மதவாதி என வெளிப்படையாக ஊடகங்களில் விமர்சிக்கும் அளவுக்கு யோகேஸ்வரன் குறித்த தவறான அறிவூட்டல்களை தமிழரசு கட்சி தலைவர்களிடம்  விதைத்தது யார்? என்பது கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
   யோகேஸ்வரன் தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றார் என சம்பந்தன் அவர்களிடம் கூறி யோகேஸ்வரனை மதவாதியாக காட்டி சம்பந்தனிடம் நெருங்கவிடாது தடுப்பது யார்? என்பதும் அனைவரும் அறிந்ததே.
   இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண கட்சி தொண்டனுக்கு நிலமை எவ்வாறு இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.
   தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் சாதனை?
   மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் சாதனை என்பது துரைராஜசிங்கம் அவர்களின் சாதனையே. தமிழரசுக் கட்சியின் செயலாளரான துரைராஜசிங்கம் அவர்கள் அரசாங்கத்தினால் தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளார்.
   அதாவது தமிழ் இளைஞர்கள் கட்டமைப்பு ரீதியாக வளர்ச்சி அடையக் கூடாது, தாங்கள் விடும் தவறுகளை தட்டிக் கேட்க கூடாது, தங்களுக்கு மேலான தலைமைத்துவம் வளர்ச்சி பெற கூடாது என்பதில் மிகவும் திட்டமிட்டு செயற்பட்டவர் தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஐயா அவர்கள்.
   இதனால் அக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சேயோனை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இளைஞர் அணியின் செயற்பாடுகளை முடக்கி வைத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் செயற்பாடுகள் பூச்சியமாகவே அமைந்துள்ளது என்றால் அதற்கு காரணம் துரைராஜசிங்கம் ஐயாவின் இராஜதந்திரமே.
   கதிரைக்காக காத்திருக்கும் ஊமைகள்…
   மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழரசுக் கட்சியில் சீட் வாங்குவது என்றால் அது யுத்த நேரத்தில் இராணுவத்திடம் பாஸ் வாங்குவதை விட மோசமானது. இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக வருபவர்களை தீர்மானிக்கும் சர்வாதிகாரம் அதன் செயலாளர் துரைராஜசிங்கம் ஐயாவிடமே உள்ளது.
   கட்சியில் என்னதான் தீர்மானங்கள் எடுத்தாலும் துரைராஜசிங்கம் ஐயாவினை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்களின் அரசியல் கனவு நிறைவேறாது என்பதால் கட்சியில் கடந்த காலங்களில் வீர வசனம் பேசியவர்கள் எல்லாம் பெட்டிப் பாம்பாய் அடங்கி கிடக்கின்றனர். அவர்கள் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி மோதல் குறித்தோ தன்னிச்சையான முடிவுகள் குறித்தோ தவறான செயற்பாடுகள் குறித்தோ விமர்சித்தால் தமக்கு கட்சியில் சீட் கிடைக்காது என்று கருதி இன்று வரை ஊமையாகவே உள்ளனர் .
   கட்சி ஆதரவாளர்களின் ஆதங்கங்கள், தமிழரசுக் கட்சிக்காக காலம் காலமாக அடிமாடாய் உழைத்த தொண்டர்கள் , ஆதரவாளர்களின் கருத்துக்கள் எதிர்பார்ப்புக்கள் கட்சியில் புதிதாக இணைந்து கொண்டவர்களுக்காக புறக்கணிக்கப் படுவதாகவும் தங்களை எதிர்கட்சியில் இருந்து தாக்கியவர்களை தங்களது கட்சி தற்போது வேட்பாளர்களாக இணைத்துள்ளதாகவும் ஆதங்கப்படுகின்றனர்.
   இதைவிட கட்சியில் மிக நீண்ட காலமாக இருந்து செயற்பட்ட மூத்தவர்களின் கருத்துக்கு கட்சி தலைமைகள் மதிப்பளிப்பதில்லை என்றும் குறிப்பிட்ட சிலரது கருத்துக்கள் மாத்திரமே திணிக்கப்படுவதாக ஆதங்கப்படுகின்றனர்.
   முஸ்லீம்களிடம் அடகு வைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை
   தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையில் பெற்றுக்கொண்ட 11 ஆசனங்களை முஸ்லீம் காங்கிரசிற்கு வழங்கி கிழக்கு மாகாண ஆட்சியை முஸ்லீம்களிடம் கொடுத்து கிழக்கு தமிழர்களின் அபிவித்தி, வேலைவாய்ப்பு , பூர்வீக காணிகளை முஸ்லீம்களுக்கு தாரைவார்த்து கொடுத்ததுதான் மிச்சமாக அமைந்துள்ளன.
   இன்று அரசுடன் இணைந்த பங்காளிகளாக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று அரச கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது என அடம்பிடித்து கிழக்கு தமிழர்களை அடகு வைத்துவிட்டனர். இது குறித்து பேசினால் நாங்கள் மட்டுமா செய்தோம் பிள்ளையான் செய்யவில்லையா என்று கொக்கரிக்கின்றார்கள். 
   பிள்ளையானை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒப்பிட முடியாது பிள்ளையானின் கட்சி உருவாக்கம் அதன் அங்கத்தவர்கள் குறித்து பார்க்கும் போது மலைக்கும் மடுவுக்கும் ஒப்பானதாக இருக்கும்.
   உள்ளூராட்சி தேர்தலும் மட்டக்களப்பு மாவட்டமும்
   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உடைவுக்கு காரணம் யார்? தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு காலம் காலமாக அரசாங்க மேற்கொண்டு வந்த முயற்சிகளுக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது.
   தமிழரசு கட்சியின் சில சிரேஷ்ட தலைவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆயுதம் தாங்கிய குழுக்களின் ஆதிக்கம் இருக்க கூடாது அவ்வாறு இருந்தால் தமிழரசுக் கட்சியை தனியாக பிரிந்து செயற்பட வைக்க வேண்டும் என்ற முடிவை இன்று நிறைவேற்றி உள்ளனர்.
   இவர்கள் கட்சிக்குள் வந்தது எவ்வாறு? இவர்களை செயற்பட வைப்பது யார்? இவர்களின் கடந்தகால பாத்திரம் என்ன? போன்ற பல்வேறு விடயங்களை அடுத்து வரும் பத்தியில் எழுத உள்ளேன்.
   (தொடரும்…)

   http://www.samakalam.com/செய்திகள்/மட்டக்களப்பில்-வீழ்ச்சி/
  • By sudaravan
   மட்டக்களப்பு - வாழைச்சேனை - கோரலைப்பற்று பகுதியில் உள்ள மயிலங்கரைச்சல் கிராமத்தின் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் சிங்கள குடும்பங்களுக்கு பிரித்தளிக்கப்படவுள்ளன.
   சிறிலங்காவின் இராணுவத்தினரும் காவற்துறையினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
   தமிழர்களுக்கு சொந்தமான இந்த காணிகள் 1990ம் ஆண்டு பலவந்தமாக சுவீகரிக்கப்பட்டு பாதுகாப்பு தரப்பின் கீழ் காணப்படுகிறது.
   இதனை மீட்கவும், மீள்குடியேறவும் காணி உரிமையாளர்களான தமிழர்கள் பாரிய முயற்சிகளை ஈடுபட்டு அநாதராவான நிலையில் உள்ளனர்.
   எனினும் அவர்களின் காணிகளை அண்மையில் இந்த பகுதியில் குடியேற்ற நவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.http://www.pathivu.com/news/42254/57//d,article_full.aspx
  • By sudaravan
   தேர்தலை புறக்கணிப்பதாக தீர்மானித்துள்ளதாக கிழக்கிலும் காணாமல் போனோரது உறவுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து இன்று கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
   திருகோணமலை மாவட்ட சிவில் சமூகம் மற்றும் திருகோணாமலை மாவட்ட காணாமல் போனோர் சங்கத்தினால் இக்கவனயீர்ப்பு போராட்டம் திருகோணமலை சிவன் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது. புதிய அரசாங்கம் காணாமல்போனோர் தொடர்பில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.தமது உறவுகளை மீட்பதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறும், தமது கோரிக்கை தொடர்பில் விரிவான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது. பல அரசியல்வாதிகள் காணாமல்போனோர் தோடர்பில் கதைக்கின்ற போதிலும் இதுவரை காலமும் எந்தவிதமான முடிவுகளையும் பெற்றுத்தரவில்லை. எனவே இம்முறை தேர்தலை புறக்கணிப்பதாக தீர்மானித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
   இப்போராட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு ,வவுனியா, அம்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து உறவுகளை இழந்தவர்கள் பங்கேற்றனர். போராட்டகாரர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சந்தித்து பேசிய போதும் கூட்டமைப்பினர் எவரும் எட்டியும் பார்த்திருக்கவில்லையென கூறப்படுகின்றது.
   http://www.pathivu.com/news/42033/57//d,article_full.aspx
    
  • By sudaravan
   மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ கண்காணிப்பு நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
   அங்கு செயற்படும் சமுக அமைப்புகள் இதனைத் தெரிவிக்கின்றன.
    மட்டக்களப்பில் உள்ள 14 மாவட்ட செயலக பிரிவுகளிலும் இவ்வாறான கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
   ஆலய நிகழ்வுகள்இ சமுக கூட்டங்கள் என அனைத்து பகுதிகளிலும் புலனாய்வாளர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
   இதன் காரணமாக மக்களின் நடமாட்ட மற்றும்ஒன்று கூடல் சுதந்திரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமுக அமைப்புகள் தெரிவிக்கின்றன.
   கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.http://www.pathivu.com/news/41153/57//d,article_full.aspx
 • Topics

 • Posts

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.