Jump to content

தமிழ்க் கட்சிகளும் ஒற்றுமைக்கான அழைப்பும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ்க் கட்சிகளும் ஒற்றுமைக்கான அழைப்பும்

புருஜோத்தமன் தங்கமயில்

தமிழ்த் தேசிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளதாக திருமலை ஆயர், தென் கயிலை ஆதீனம் ஆகியோரின் தலைமையிலான குழுவொன்று, கடந்த வாரம் அறிவித்தது. 

பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அரசியல் கட்சிசாரா பிரபல சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க உள்ளதாகவும் அந்தக்குழு குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு, ஊடகங்களில் ஒருநாள் செய்தியாக மட்டுமே இடம்பெற்றிருந்தது. அதற்கு மேல் அந்த அறிவிப்புக்கான முக்கியத்துவத்தை, அரசியல் கட்சிகளோ ஊடகங்களோகூட வழங்கியிருக்கவில்லை.

தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஒற்றுமையையும், அதன் ஊடாக ஒருங்கிணைவையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன், உளப்பூர்வமாக யார் ஈடுபட்டாலும் அது வரவேற்கக் கூடியது. 

ஆனால், தமிழ் அரசியல் பரப்பில் ‘ஒற்றுமை’, ‘ஓரணி’, ‘ஒருங்கிணைவு’ என்கிற சொற்களுக்கான அர்த்தம், அரசியல்வாதிகளாலும் சில சிவில் அமைப்புகளாலும் அரசியல் ஆய்வாளர்களாலும் மலினப்படுத்தப்பட்டுவிட்டன. 

தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தளவில் கட்சிகள், தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையிலான ஒருங்கிணைவும் அதனூடான தொடர் ஊடாட்டமும் அவசியமான ஒன்று. 

தமிழ்த் தேசிய அரசியலில் தனியாவர்த்தனம் என்பது, கட்சிகளுக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்காது. வேண்டுமென்றால், ஒருசில நபர்களுக்கு  தனிப்பட்ட இலாபங்களை வழங்கலாம்.

அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகள், தலைவர்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கான அழைப்பு என்பது, கவனிக்கப்பட வேண்டியது. ஆனால், அவ்வாறான நிலையொன்று திட்டமிட்ட ரீதியாக, இன்று இல்லாமல் செய்யப்பட்டு இருக்கின்றது என்பதுதான் பெரும் வேதனையானது. 

தமிழ்த் தேசிய அரசியலில் தனியாவர்த்தனம் செய்து கொண்டிருந்த கட்சிகள், பெரும்பான்மையினக் கட்சிகளிடம் தோற்றுப்போக ஆரம்பித்த தருணங்களில் எல்லாம், ஒற்றுமையாக ஓரணியில் இணைந்திருக்கின்றன. அதன்மூலம், தமிழ்த் தேசிய அரசியலை உறுதிப்படுத்தி இருக்கின்றன. 

தமிழர் விடுதலைக் கூட்டணியாக தமிழரசுக் கட்சியும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸும் அப்படித்தான் ஆரம்பத்தில் இணைந்தன. 

அதுபோல, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கமும் தமிழ்த் தேசியத்தைப் பேசும் கட்சிகளை பாராளுமன்றத்துக்குள் பலப்படுத்தும் நோக்கிலேயே நிகழ்ந்தது. தமிழ்த் தேசிய அரசியலில் நிகழ்ந்தப்பட்ட இருபெரும் ஒருங்கிணைவுகள் என்றால், தமிழர் விடுதலைக் கூட்டணியினதும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினதும் உருவாக்கம்தான்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஓர் அங்கமாக மாறிய தமிழர் விடுதலைக் கூட்டணி, வீ. ஆனந்தசங்கரியின் நிலைப்பாடுகளின் நிமித்தம் அதிலிருந்து வெளியேற, கூட்டணிக்குப் பதிலாக தமிழரசுக் கட்சியை தூசு தட்டிக் கொண்டுவந்து கூட்டமைப்புக்குள் இணைத்தார்கள். 

இன்றைக்கு தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய பரப்பில் முதன்மைக் கட்சியாகத் தாக்கம் செலுத்துவதற்கும், அதன் கட்சிக் கட்டமைப்பை அடிமட்டத்திலிருந்து பேணுவதற்கும் கூட்டமைப்பின் உருவாக்கம் பாரிய பங்களிப்பைச் செய்தது.

அதுபோல, கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறிய போது, கூட்டமைப்புக்குள் இருந்து பல தரப்புகளும் காலத்துக்கு காலம் பிரிந்து சென்றன. இன்றைக்கு, கூட்டமைப்புக்கு வெளியிலுள்ள தமிழ்த் தேசிய கட்சிகள், அந்தக் கட்சிகளின் மூலம் பாராளுமன்றம் சென்றவர்கள் எல்லோரும் கூட்டமைப்பில் இருந்தவர்கள்தான்.

கூட்டமைப்புக்குள் இருந்து, தமிழரசுக் கட்சித் தலைவர்களின் நிலைப்பாடுகளில் அதிருப்தியுற்று வெளியேறிய தரப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து, பலமான மாற்று அணியொன்றை அமைக்கும் முயற்சிகள், 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னரான நாள்களிலேயே ஆரம்பித்துவிட்டன.

தமிழ் சிவில் சமூக அமையமும் அதன் இணக்க சக்திகளும் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியை அமைப்பதில் குறிப்பிட்டளவு வெற்றியை, தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்ததன் மூலம் எட்டின. 

ஆனால், பேரவையோ, மாற்று அணியை அமைப்பதற்குப் பதிலாக, சி.வி.விக்னேஸ்வரனுக்கான அரசியல் எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதில் அக்கறை காட்டியதால், பேரவையில் புதிய நம்பிக்கையோடு ஆரம்பத்தில் இணைந்த கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஒரு கட்டத்தில் விலகி விட்டது. 

பின்னரான நாள்களில், விக்னேஸ்வரன் தலைமையில் சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் இன்னும் சில உதிரிக் கட்சிகளும் இணைந்து, ஒரு கூட்டணியை அமைத்தன. அந்த அணி, யாழ்ப்பாணத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை வெற்றி கொண்டது.

தமிழ்த் தேசிய அரசியலுக்குள் புது இரத்தம் பாய்ச்சி, நம்பிக்கையை விதைக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு வந்த பேரவை, ‘எழுக தமிழ்’ என்கிற எழுச்சிப் பேரணிகளை வடக்கு - கிழக்கில் பெருமெடுப்போடு நடத்தியும் காட்டியது.

‘எழுக தமிழ்’ பேரணிகளில் கட்சி ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடுகளைத் தாண்டி, தமிழ் மக்கள் பங்கெடுத்தார்கள். ஆனால், பேரவையும் அதன் முக்கியஸ்தர்களும் ஒரு சில தனிநபர்களின் அரசியல் எதிர்காலத்துக்காக இயங்கி, தமிழ் மக்களின் நம்பிக்கையைச் சிதைத்தன. 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்துக்குப் பிறகு, தமிழ் மக்கள் பேரவையிலேயே தமிழ்த் தேசிய கட்சிகள் பலவும் ஓரணியில் இணைந்தன. ஆனால், அவ்வாறான அரிய வாய்ப்பை, சில மாதங்களுக்குள்ளேயே பேரவை வீணடித்தது. 

இன்றைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று தமிழ்த் தேசிய கட்சிகள், பாராளுமன்ற அங்கத்துவத்தைப் பெற்றிருக்கின்றன. ஆனால், பெரும்பான்மையினக் கட்சியான சுதந்திரக் கட்சி, சில தசாப்தங்களுக்குப் பின்னர் ஆசனமொன்றை வெல்வதற்கும் அது குறிப்பிட்டளவு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. 

கூட்டமைப்புக்கு மாற்றான அணியொன்றை, பேரவையில் உருவாக்கும் நோக்கமாவது, உருப்படியாக முன்னெடுக்கப்பட்டிந்தால், தமிழ்த் தேசிய வாக்குகள் கூட்டமைப்பு, மாற்று அணி என்கிற இரண்டு அணிகளுக்கு இடையில் மாத்திரமே பகிரப்பட்டிருக்கும்; தமிழ்த் தேசிய வாக்குகளின் திரட்சி, குறிப்பிட்டளவு காக்கப்பட்டிக்கும். 

ஆனால், அவ்வாறான நிலை ஏற்படவில்லை. கூட்டமைப்பு, முன்னணி, விக்னேஸ்வரன் அணி என்று, மூன்று அணிகளாகப் பிரிந்து நின்றபோது, பெரும்பான்மையினக் கட்சிகளுக்கும், அதன் இணைக் கட்சிகளுக்கும், அது சாதகமாக அமைந்துவிட்டது.  

பேரவையினது உருவாக்கம், எதைச் சாதித்தது என்றால், இவ்வாறான நிலையை ஏற்படுத்தியதைச் சொல்லலாம்.

அதுதவிர்ந்து, ஒற்றுமை, ஓரணி போன்ற கோரிக்கைகளை மலினப்படுத்தியதைச் சொல்ல முடியும். 

மக்களுக்கான நோக்கம் என்பது, தனிநபர்கள் சார்ந்து உருவாக்கப்பட முடியாது. விக்னேஸ்வரனைத் தனி ஆளுமையாக முன்னிறுத்திக் கொண்டு பேரவை செயற்பட்டதும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும்தான் இதுவாகும். 

தமிழ் சிவில் சமூக அமையத்தின் அங்கத்தவர்கள், அதன் ஆலோசகர்கள் உள்ளிட்ட தரப்பினர்தான்,  பேரவையின் உருவாக்கத்தில் இருந்தார்கள். கிட்டத்தட்ட தமிழ் சிவில் சமூக அமையத்தின் பெயர் மாற்றப்பட்ட அமைப்பாகவே பேரவை செயற்பட்டு மறைந்தது. மக்கள் திரட்சிக்கான நம்பிக்கைகள் எல்லாவற்றையும் சிதைத்துவிட்டு ஒதுங்கிவிட்டார்கள்.

கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும், தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் (பாராளுமன்ற பதவிகளை இழந்த) தலைவர்களும் பிறிதொரு தருணத்தில் டெலோவும் முன்னெடுத்தன. 

மாவை அணி  முன்னெடுத்த ஒற்றுமைக்கான அழைப்பை நிராகரித்த டெலோ, சில நாள்களின் பின்னர், தானே அப்படியான அழைப்பொன்றை விடுத்தது. 

இந்த இரண்டு அழைப்புகளுக்குள்ளும் தனிப்பட்டவர்களின் பதவி ஆசை, தங்களை முன்னிறுத்தும் நோக்கங்கள் ஆகியவையே முனைப்புப் பெற்று இருந்தன. அதனால், அவ்வாறான முயற்சிகள் ஆரம்பத்திலேயே பிசுபிசுத்துப் போய்விட்டன. 

இவ்வாறான நிலையில்தான், திருமலை ஆயர் மற்றும் தென் கயிலை ஆதீனம் ஆகியோர் தலைமையிலான குழுவின், ஒற்றுமைக்கான அழைப்பும் மதிக்கப்படாமல் போயிருக்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியல், தேர்தல் அரசியலுக்குள் சுருங்கிய பின்னர், பதவி, பகட்டு போன்றவற்றுக்காக அலையும் கும்பல், தமிழ்த் தேசிய அரசியலை ஆக்கிரமித்துவிட்டது. 

அதனால்தான், அர்த்தமுள்ள ஒற்றுமையும் ஒருங்கிணைவும் கானல் நீராகிவிட்டன. அந்த நிலையை மாற்றுவது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்க்-கட்சிகளும்-ஒற்றுமைக்கான-அழைப்பும்/91-282227

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை Apr 14, 2024 20:04PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. மத்திய சென்னையில் மகுடம் சூடப் போவது யார் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் ப.பார்த்தசாரதி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.கார்த்திகேயன் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்குமற்றும் அண்ணா நகர் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்   திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 52% வாக்குகளைப் பெற்று மீண்டும் மத்திய சென்னை தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் ப.பார்த்தசாரதி 23% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.கார்த்திகேயன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, மத்திய சென்னை தொகுதியில் இந்த முறையும் தயாநிதி மாறன் வெற்றி பெற்று திமுகவின் கொடிபறக்கவே  வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-dhayanidhi-maran-wins-central-chennai-dmdk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பொள்ளாச்சியில் யார் ஆட்சி? Apr 15, 2024 08:00AM IST  2024 மக்களவை தேர்தலுக்காக  தமிழ்நாடு முழுவதும் மின்னம்பலம், மக்களை சந்தித்து கருத்து கணிப்பு நடத்திய நிலையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான பொள்ளாச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கேள்விக்காக இயற்கை எழில் சூழ்ந்த பொள்ளாச்சியில் களமிறங்கினோம்.   இந்த தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வசந்தராஜன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் நா.சுரேஷ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிற சூழலில்…  பொள்ளாச்சியில் யார்  ‘ஆட்சி’ அமைக்கப் போகிறார்?  மக்களின் வாக்குகள் யாருக்கு? போன்ற கேள்விகளை பரவலாக பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  பொள்ளாச்சி,  கிணத்துக்கடவு,  தொண்டாமுத்தூர்,  வால்பாறை (தனி),  உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 45% வாக்குகளைப் பெற்று பொள்ளாச்சி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 35% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 14% வாக்குகளைப் பெறுகிறார்.   நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நா.சுரேஷ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார்  என்று மக்களின் குரல் மூலம் தெரியவருகிறது . 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…,பொள்ளாச்சி தொகுதியில் இந்த முறை திமுகவின் ஈஸ்வரசாமி வெற்றி பெறுவார் என்பதே மக்களின் கணக்காக இருக்கிறது.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-eswarasamy-won-pollachi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி…. வெற்றிச் சாரல் யார் மீது? Apr 15, 2024 09:00AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நமது மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த வகையில் தென் மாவட்டத்தின் முக்கியமானதும் இயற்கை வளம் மிக்கதுமான தென்காசி தொகுதியில் களமிறங்கினோம். தென்காசி தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணி  சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி சார்பில்தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் இசை மதிவாணன் போட்டியிடுகிறார். டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் என இரு ஆளுமைகள் எதிரெதிரே நிற்கும் இத்தொகுதியின் மீது தென் மாவட்டங்கள் மட்டுமல்ல தமிழகத்தின் கவனமும் ஒரு சேர பதிந்துள்ளது. தென்காசி களத்தின் நிலவரம் என்ன?   உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினைபரவலாக தென்காசி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  தென்காசி,  கடையநல்லூர்,  இராஜபாளையம்,  சங்கரன்கோயில் (தனி),  வாசுதேவநல்லூர் (தனி) மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 44% வாக்குகளைப் பெற்று தென்காசி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக கூட்டணியில்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக  கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்ஜான் பாண்டியன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 10% வாக்குகளைப் பெறுவார் என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தென்காசி தொகுதியில் இந்த முறை ராணி ஸ்ரீகுமாரை நோக்கியே வெற்றிச் சாரல் வீசுகிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-rani-sreekumar-won-tenkasi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்? Apr 15, 2024 10:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான அண்ணா பிறந்த, கோயில்கள் நிறைந்த என அரசியல், ஆன்மிகம் என இரு வகைகளிலும் முக்கியத்துவம் பெற்ற காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார்? ஆய்வில் இறங்கினோம். இந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி.யான செல்வம் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ராஜசேகர் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.சந்தோஷ்குமார் போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் சில கேள்விகளை  முன்வைத்தோம். இந்த மக்களவைத்தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வுசெய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்தகருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட   6 சட்டமன்றத் தொகுதிகளான  செங்கல்பட்டு,  திருப்போரூர்,  செய்யூர் (தனி),  மதுராந்தகம் (தனி),  காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகியவற்றில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வம் 46% வாக்குகளைப் பெற்று மீண்டும் காஞ்சிபுரம் தொகுதியில் முன் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, காஞ்சிபுரம் தொகுதியில் இந்த முறையும் செல்வம் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-kanchipuram-constituency-dmk-candidate-selvam-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்? Apr 15, 2024 11:49AM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? நாமக்கல் தொகுதியில் வெற்றிநடை போடுவது யார் ? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில் மாதேஷ்வரன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தமிழ்மணி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் க.கனிமொழி போட்டியிடுகிறார். கொ.ம.தே.க, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன ? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாமக்கல் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சங்ககிரி,  இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஷ்வரன் 45% வாக்குகளைப் பெற்று நாமக்கல் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 36% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.கனிமொழி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, நாமக்கல் தொகுதியில் இந்த முறை மாதேஷ்வரன் வெற்றி பெற்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/kmdk-candidate-madheswaran-won-namakkal-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/
    • ஈரான் என ஒரு நாடே இல்லாமல் போனாலும் பரவாயில்லை, இஸ்ரேல் ஒழிந்தால் போதும் என முல்லாக்கள் முடிவு செய்தால் நீங்கள் சொன்னது போல் நடக்கலாம். ஆனால் முல்லாக்கள் அந்தளவு முட்டாள்கள் இல்லை. ஈக்குவானத்தை புட்டின் தலையில் கட்டி விடும் அளவாவது அவர்களுக்கு அறிவுள்ளது🤣. இது பகிடி. பிறகு ஏதோ புட்டின்-புருசன் மாரி என்னை வந்து சேட் கொலரில் பிடிக்க வேண்டாம்🤣 மருமோன், தயவு செய்து குடும்ப ரகசியத்தை பரகசியமாக்கா வேண்டாம்🤣 இத பார்த்த கண்டனம் மாரி தெரியேல்லையே🤣
    • வெய்யில் பிடித்த இடம் எல்லாம் கறுத்து  இருக்கு. 😂
    • அங்கிள் என்பதற்கு என் கண்டனங்கள் 🤪
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.