Jump to content

ஒரு குமரை கரை சேக்கிறது….- டாக்குத்தர் கோபிஷங்கர்


Recommended Posts

ஒரு குமரை கரை சேக்கிறது…..

நீளமான ஒரு மட்டப் பலகை , சின்ன கைபிடி போட்ட மட்டப் பலகை ( மணியாஸ் கட்டை), சாந்தேப்பை மற்ற எல்லாச் சாமாங்களையும் எடுத்துக்கொண்டு வயிரவர் கோயிலடிக்கு வந்து ,”இண்டைக்கு பத்துப்பேராவது வேணும் எண்டனான் சின்ராசு “எண்டு நான் ஞாபகப்படுத்த , ஓம் எடுபிடிக்கும் இன்னுமொருத்தன் புதுசா வாறான்” எண்டார் சின்ராசு .

புதுசா வாறவன் கீழ மட்டும் வேலை செய்யட்டும் நல்லாப் பழகும் வரை சாரத்தில ஏற விட வேண்டாம் . அவனுக்கும் சேத்து அரை றாத்தல் பாண் வாங்கும் எண்டு சொல்லி புது வரவை apprentice ஆக சேத்துக்கொண்டு வேலைக்கு வெளிக்கிட விடிய ஆறு மணி தாண்டீட்டு. 

கல்லுண்டா வெளியால கஸ்டப் பட்டு எதிர்க்காத்தில சைக்கிள் உழக்கி கட்டிற வீட்டடிக்கு வர ,அராலி மேசன் மார் எண்டால் மேசன் மார் தான் எண்டு கட்டிற வீட்டுக்கு கண் படுற கதை கதைக்கிறாக்களின்டை கதையை கேட்டு கர்வப்பட்டு ஆனாலும் ,போன உடனயே கட்டிற வீட்டை தெரியாம கட்டின முன் படங்கை கொஞ்சம் உயத்திக் கட்டீட்டு கண் திருஸ்டி வெருளியும் இருக்குதா எண்டதை பாத்திட்டுத்தான் வேலையை தொடங்கினன், நான் கந்தசாமி. 

எண்பதுகளில வீடு கட்டேக்க Draughtsman கீறின படத்துக்கு , நிறைய சாத்திர முறைகளும் சில வாஸ்து முறைகளும் பாத்து ,நாள் பாத்து அத்திவாரம் , நாள் பாத்து சாமியறை நிலை எண்டு நிறைய நாள் பாத்து காசுக் கணக்குப் பாத்து , மனிசீன்டை ஆசை பாத்து பெருமையோடு தான் ஒவ்வொரு சாஐகான்களும் வீடு கட்டுறவை.

வேலை துடங்க முதல் கட்டிடத்தின்டை நிலையங்கள் எடுக்கிறது வழமை .அதுக்கும் ஒரு நல்ல நாள் பாத்து நிலையம் எடுக்கிறவர் வந்து இடம் அளவுகள் எல்லாம் குறிச்சுத் தருவார் . அப்ப அளவெட்டி விநாசித்தம்பியர் தான் இதில கெட்டிக்காரர். நிலையம் எடுக்கிறது எண்டால் அதில கன விசயம் இருக்கு . ஒழுங்கை , ரோடு இருக்கிற பக்கம் , வீட்டு வாசல் பாக்கிற திசை , மண் , நீர் வாட்டம், பக்கத்தில இருக்கிற கோயில் குளம் எல்லாத்தையும் பாத்து தான் நிலையம் சொல்லுவினம் . வீட்டு வாசல் , சாமியறை , அடுப்படி வாற அக்கினி மூலை , கிணறு எண்டு எல்லாத்தையும் குறிச்சு தருவினம் . குசினீல இருந்து பாத்தா சாமியறை விளக்கு தெரியவேணும். சாமி அறை தான் பெரிய அறையா இருக்கும், அதிண்டை அகலத்திலும் பாக்க எந்த அறையும் விறாந்தையும் அகலத்தில கூடப்பிடாது இப்பிடி பல சம்பிரதாயங்கள் இருந்தது.

அப்ப இஞ்சினியர் மார் கனபேர் civil தான் படிச்சவை . ஆனாலும் அப்ப படிச்ச எந்த இஞ்சினியர் மாரும் ஊரில வேலை செய்ததாகவோ வீடு கட்டினதாகவோ தெரியேல்லை . எண்ணெய் எடுக்கிறம் எண்டு எல்லாரும் வெளிக்கிட்டு போயிட்டினம் . பொம்பிளை குடுக்கேக்க டாக்குத்தர், அப்புக்காத்து, accountant , clerk எண்டு தான் பாக்கிறவை educated மேசன் மாருக்கு பெரிய கேள்வி இல்லை. இப்பவும் தானே எண்டு யாரோ கேக்கிறது மாதிரி இருக்கு. இஞ்சினியர் மார் என்னதான் படத்தை கீறி , டேப்பை பிடிச்சு அளந்தளந்து இடிச்சு இடிச்சுக் கட்டினாலும், அப்ப சாத்திரியர் நிலையத்தை எடுத்து தர கண்மட்டத்தில தூக்குக்குண்டும் நீர் மட்டமும் வைச்சு கட்டின கட்டிடம் எல்லாம் இப்பவும் அப்பிடியே இருக்குது. 

வீடு கட்ட முதல் கிணறு வெட்டி, தண்ணி கண்டு பட்டை கட்டித்தான் வீடு கட்ட தொடங்கிறது. 

வெட்டின தும்புத்தடி துண்டுகளை அடிச்சு இறுக்கி ,சீமெந்து நூலை இழுத்துக் கட்டிப்போட்டு தான் அத்திவாரம் வெட்டத்தொடங்கிறது. அதோட கல்லரியிற வேலையும் தொடங்கும் , அப்ப ஆறு இஞ்சி , அஞ்சிஞ்சி தான் கல்லு ( அப்பவே செல்லடிப்பாங்கள் எண்டு தெரியும் போல). 

அத்திவாரம் வெட்டி , நாள் பாத்து அதை கட்டி பிறகு கல்லு வைச்சு சிவரை கடகட வெண்டு கட்டிக்ககொண்டர ஆசாரி மார் கதவு நிலை யன்னல் அளவுகளை கொண்டு வருவினம் . முதல்ல வைக்கிறது சாமி அறை நிலை , யன்னல் தான் . எல்லாத்துக்கும் நாள் பாத்து காரியம் செயிறதுக்கு காரணம்இருந்தது. அட்டமி நவமீல புது வேலை தொடங்கிறேல்லை எண்ட படியால வேலை காரருக்கு leave கிடைக்கும் . நாள் வேலை செய்யேக்க பொங்கல் படையல் வைக்கிறதால வேலை காரருக்கு சாப்பாடும் கிடைக்கும் .

அப்ப எல்லாம், நாள் கூலிதான் . எட்டு மணிக்குள்ள வந்து உடுப்பு மாத்தீட்டு வேலை தொடங்கீடுவம். கடகம், சீமெந்து வாளி, சீமைந்தை வைச்சு பூச barrel ன்டை அடித்தட்டு எல்லாத்தையும் எடுத்து வைச்சட்டு மேல ஏறி நிண்டு கட்டி இருக்கிற சாரமரங்களை check பண்ணினாப்பிறகு தான் வேலை தொடங்கும். அண்டைக்குரிய வேலைக்கு ஏத்த மாதிரி தேவையான கலவை mixture ஐ சொல்ல பழைய பெயின்ற் வாழியில தண்ணியை கொண்டுவந்த சீமெந்தை குழைக்கத் தொடங்க வேலை சூடு பிடிக்கும். அத்திவாரத்துக்கு , சுவருக்கு, பூச்சுக்கு எண்டு கலவை mixture எல்லாம் மனக்கணக்கு தான். கண்டாவளை மண், நாகர் கோவில் மண் , பூநரி மண் , அரியாலை மண் எண்டு ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு தேவைக்கு இருக்கும்.

பத்து மணிக்கும் மூண்டு மணிக்கும் ரீ பிரேக் . அலுமினியக் கேத்தில் பிளேன் ரீ ஓட நாலு டம்ளர் கழுவாமலே சுத்த , அதோட ஒரே பீடி பலவாய்க்குள்ள போய் வரும் . மத்தியானம் கொண்டந்ததை கலந்து சாப்பிட்டிட்டு சீமெந்து பாக்குக்கு மேல கொஞ்சநேரம் சரிஞ்சிட்டு திருப்பி வேலை தொடங்கி, பின்னேரம் நாலரைக்கு சாமாங்கள் எல்லாம் கழுவி எடுத்து வைச்சிட்டு உடுப்பு மாத்தி வெளிக்கிட மணி ஐஞ்சாகீடும். காத்தோடு சேந்து உழக்கி காசீன்டை கள்ளுக்கொட்டிலில கொஞ்சம் நிண்டிட்டு வீட்டை வர ஏழு தாண்டீடும்.

ஒவ்வொரு கிழமையும் வாங்கின வாங்கப்போற சாமாங்ககளுக்கு கணக்குப்பாத்து , சம்பளம் வாங்கி கொந்திறாத்து காசை எடுத்து கூலிக்கணக்கை பிரிச்சுக் குடுத்திட்டு ஞாயித்துக் கிழமையில காசிக்கும் லீவு விட்டிட்டு வீட்ட வேளைக்கு போய் பிள்ளைகளை நித்திரையாக்கீட்டு , மனிசியை தொட முதல்ல புது சீமெந்து பாக் மாதிரி இறுக்கமாக இருந்த மனிசி , நான் கொஞ்சம் இறுக்க, குழைச்ச சீமெந்து மாதிரி இளகத்தொடங்கினா. 

காலமை எழும்பி மறக்காம போய் புதுசா வந்தவன்னடை தாயிட்டை கூலிக்காசை குடுத்திட்டு என்னவாம் மோன் எண்டு விசாரிச்சிட்டு வேலைக்கு வெளிக்கிட, சின்னராசு வந்து வேலீக்க நிக்குது . “அம்மாவுக்கு சேடம் இழுக்குது ,ஏதும் எண்டால் உடன எடுக்கவும் வேணும்” எண்டு தலையை சொறிய, எனக்கெண்டு பிடிச்சு வைச்ச கொந்திறாத்து காசில கொஞ்சம் எடுத்து குடுத்திட்டு ஒரு எட்டுப் போய் கிழவியை பாத்திட்டு ஏதும் எண்டால் சொல்லி அனுப்பு எண்டிட்டு நான் வேலைக்கு வர கொஞ்சம் பிந்தீட்டு . சின்ராசின்டை தாய்க்கு கடுமையாம் எண்டு கொஞ்சம் முதலே வந்த சின்னவன் சொன்னவன் , எண்டு வீட்டக்கா நான் பிந்தினதுக்கு அவவே காரணம் சொல்ல , மீண்டும் வேலை தொடங்கினன். 

அண்ணை சின்னவன் குழைக்க கேக்கிறான் விடட்டே , எண்டான் மோகன் . சரி நான் பாத்துக்கொள்ளுறன் நீ இந்தா இப்பிடி கம்பியை வளை எண்டு குடுத்திட்டு பூச்சை பாக்க போனன். ஒரு வருசமாவது முட்டாள் வேலை செய்தாத்தான் அவன் வேலை பழகி மேசன் வேலை தொடங்கலாம் . திடீரெண்டு சின்ராசின்டை நினைப்பு வந்தது. அவன் நல்ல வேலைகாரன் இருந்தால் எல்லாரையும் நல்லா வேலை வாங்குவான் . “ அடுத்த வீட்டுக்கு அவனை தலைமேசனாத் தனிய விடவேணும் “ , எண்டு யோச்சபடி பூச்சை தொடர்ந்தேன் . 

வாறகிழமை சுவர் எழும்பீடும், கோப்புசம் போடச் சொல்லீட்டன் மரத்துக்கு காசு கேக்கிறான் , ஒட்டிசுட்டானில இருந்து லொறி ஒண்டு வருதாம் நல்ல தேக்கும் இருக்குதாம் எண்டு ஐயா பின்னேரம் வர சொன்னன். முதலே தெரிஞ்ச மாதிரி கொண்டந்த காசைத் தந்திட்டு , “நாள் வைச்சிட்டன் வைகாசி எங்கடை அம்மன்டை பொங்கலுக்கு நானும் பால் காச்சோனும் “ எண்டார். 

பங்குனி பிறக்க அடுத்த வீட்டின்டை நாள் வேலை தொடங்க வேணும் அப்ப தான் அடுத்த மழைக்கு முதல் மற்ற வேலையை முடிக்கலாம் எண்டு அடுத்த குமரைப்பற்றியும் யோச்சுக்கொண்டிருக்க , “அண்ணை இன்னும் ரெண்டு சீமெந்துப் பக்கற் குழைக்கட்டா எண்டு “ சின்னவன் கேட்டான் . வேலயை கெதியண்டு முடிக்ககோணும் எண்ட யோசனையோட ஓம் போடு எண்டு சொல்லி வீட்டை நிமிந்து பாக்க , கலியாணத்தை வைச்சிட்டு நாள் கிட்டக்கிட்ட வர வாற மாதிரி உள்ளுக்குள்ள ஒரு பயம் வரத்தொடங்கிச்சு .

கோப்புசமும் மூலைக்கையும் வைக்கேக்க கொழுக்கட்டை படையல் போட்டு , ஒவ்வொரு அடி உயரத்துக்கும் ஆறு இஞ்சி சரிவை கூரைக்கு வைச்சு ,கூரை வேலை முடிக்கேக்க தான் நம்பிக்கை வந்திச்சு நேரத்துக்கு வேலை முடிக்கலாம் எண்டு. இந்தியாவில இருந்து வாற நந்தி ஓடு தேடி வாங்கி அடுக்கிப் போட்டு சிலாகையால தட்டி இடைவெளி இல்லாமல் இறக்கிப்போட்டு முகட்டு ஓட்டை பூச வெளிக்கிட்டன். குசினிக்க கிழக்க பாக்கிற மாதிரி அடுப்பைக்கட்டி ,புகைக்கூட்டை கூரைக்கு மேல உயத்திக் கட்டி முடிக்க, 

நிலத்தில பெட்டி அடிச்சு கம்பி அடுக்கி சீமெந்து போட்டு இறுக்கி மூண்டு பிளட் ( flat) செய்யிறது புகைக்கூட்டுக்கு மேல போட. அதை கயித்தக்கட்டி ஏத்தி மேல வைக்கஒரு பெரிய வேலை முடிஞ்சுது . மேல் வேலை எல்லாம் முடிச்சிட்டு தான் நிலம் இழுக்கிறது. 

இரும்பு மொங்கான் போட்டு இறுக்கி, வாட்டம் வைச்சு நிலம் பூச்சிழுத்திட்டு மட்டம் பாத்து கதவுகள் சீவிப்போடத்தொடங்க வீட்டுக்காரர் வந்து சாந்தி செய்யிறதை பற்றிச் சொன்னார். கிணத்தடி வக்கில காவியை போட்டு வீட்டு சிவருக்கு வெள்ளையும் , புகைக்கூடுக்கும் முன் சிவருக்கும் மஞ்சள் கலந்து அடிச்சு முடிக்க தான் வீட்டுக்கு களை வந்திச்சுது.

கிணத்தை இறைச்சு வீட்டைக்கழுவி வீடு குடிபூர வீட்டுக்காரர் ஆயத்தமாக , பொம்பிளைப்பிள்ளைக்கு கலியாணம் முடிஞ்சாப் பிறகு கால் மாறிப்போகேக்க அவளை மாப்பிள்ளை வீட்டை விட்டுட்டு வெளிக்கிட்டு வரேக்க அப்பாமாருக்கு வாற சந்தோசம் கலந்த கண்ணீரோட அந்த புதுவீட்டை விட்டிட்டு வந்து அடுத்த குமரை கரைசேக்கிறதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினன். 

 

பி.கு:

கல்யாணத்தை கட்டிப்பார் வீட்டைக்கட்டப்பார் எண்டு ஊரில சொல்லிறவை , நான் நினைச்சன் கட்டிறதிலை இருக்கிற கஸ்டத்தை சொல்லினம் எண்டு, இல்லை கட்டினதை maintain பண்ணிற கஸ்டத்தை தான் எண்டு ரெண்டையும் கட்டினாப்பிறகுதான் விளங்கிச்சு.

Dr. T. Gobyshanger 

யாழ்ப்பாணம்

 • Like 2
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அவர் சொல்வதை நீங்கள் விழங்கிக் கொள்ளவில்லை. அவர் சொல்வதன் அர்த்தம். இனிமேல் என்னால் பேச முடியாது. கடிதத்தில் தொடர்பு கொள்வோம் என்பது தான்.
  • தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு: திருமணம் உறவில் சேர்ந்து வாழ்வதை போலவே பிரிவையும் இயல்பாக்க வேண்டியது ஏன்? ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர்   பட மூலாதாரம்,INSTAGRAM- @AISHWARYAA_R_DHANUSH நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிவதாக நேற்று இரவு தங்களது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தனர். பிரிவை அறிவித்த தனுஷ்- ஐஸ்வர்யா நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004ம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். 18 ஆண்டுகள் திருமண பந்தத்திற்கு பிறகு இருவரும் பிரிகிறோம், எங்கள் முடிவிற்கு மதிப்பளிக்க வேண்டுகிறோம் என இருவரும் தனித்தனியாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் நேற்று இரவு பதிவிட்டார்கள். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இந்த தம்பதியினரின் எதிர்பாராத இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இருவர் திருமண பந்தத்தில் இணைவது எப்படி இயல்பான ஒன்றோ அது போன்றே பிரிவதும் இயல்பான ஒன்றாக்க வேண்டும் எனவும் குழந்தைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர்கள் தவிர்த்திருக்கலாம் என்றும் கலவையான பதிவுகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. தனுஷ்: சினிமாவிலும் வாழ்க்கையிலும் வளர்ந்தது எப்படி? தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை என்ன? மேலும் ரஜினிகாந்திற்கு ஆறுதல் கூறியும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் 'WE ARE WITH YOU DHANUSH', 'WE LOVE DHANUSH' என்ற ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விவாகரத்து இயல்பானதாக்க வேண்டும் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவை போலவே சமந்தா - நாக சைதன்யா தம்பதி கடந்த வருடத்தில் பிரிவை அறிவித்த போதும் 'Normalising Divorce' என்ற கருத்தை அதிகம் சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. உண்மையில் நம் சமூகத்தில் விவாகரத்து எப்படி பார்க்க படுகிறது, அதன் பின்னுள்ள அழுத்தம் என்ன இதை எப்படி கையாள வேண்டும் என்பது தொடர்பாக எழுத்தாளர் கொற்றவையிடம் பிபிசி தமிழுக்காக பேசினேன்,   பட மூலாதாரம்,FACEBOOK- KOTRAVAI N   படக்குறிப்பு, எழுத்தாளர் கொற்றவை "இன்று நான் பார்த்த பல பதிவுகளிலுமே இவர்களது பிரிவு குறித்து எதிர்மறையான கருத்துகளைத்தான் பார்த்தேன். 'இருவரும் சேர்ந்து வாழ முடியவில்லை என்றால் எதற்கு திருமணம் செய்து கொள்கிறார்கள், குழந்தைகள் பற்றி யோசிக்க மாட்டார்களா? குழந்தைகள் தவித்து போவார்கள்' என்ற ரீதியிலான பதிவுகள்தான் அதிகம். இவை அனைத்துமே முட்டாள்தனமான பதிவுகள் என்பேன். இருவர் சேர்ந்து வாழ்வதும், பிரிவதும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை. ஆனால் இங்கு குடும்பம் என்பது சமூகத்திற்காக என்று மாறிவிட்ட நிலையில் எல்லாரும் அதில் கருத்து சொல்லி கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன புரியவில்லை என்றால் நம் வாழ்வின் நோக்கமே திருமணம் மற்றும் அதன் பிறகு குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்பதுதான் என்று கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது. திருமணம் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே," என்கிறார் கொற்றவை. காணொளிக் குறிப்பு, வயதில் சிறிய தனுஷை காதல் திருமணம் முடித்த ஐஸ்வர்யா குழந்தைகளை காரணம் காட்டுவது சரியல்ல "அதில் நமக்கு பொருந்தக்கூடிய துணைகளோடு மட்டும்தான் வாழ முடியும். எப்பொழது அது பொருத்தமாக இல்லை என்று நினைக்கிறோமோ அப்போது பிரிவது என்பது மிக இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று. இங்கு எல்லோரும் குழந்தைகளை காரணமாக காட்டுகிறார்கள். அம்மா அப்பா சண்டை போட்டு கொண்டு மகிழ்ச்சி இல்லாத குடும்பமாக இருந்தால் அந்த சூழ்நிலைதான் குழந்தைகளுக்கு இன்னும் கடினமான ஒன்று." "அம்மா அப்பா மகிழ்ச்சியாக இல்லை, அவர்களுக்குள் ஏதோ பிரச்னை என்பதை எல்லாம் குழந்தைகள் மிக எளிதாக புரிந்து கொள்வார்கள். அப்படியான சூழ்நிலை அவர்களுக்கு ஆரோக்கியமானது கிடையாது. அதற்கு பதிலாக குழந்தைகளுக்கு சூழ்நிலையை புரிய வைத்து, கணவன் மனைவியாகதான் நாங்கள் பிரிகிறோம் அம்மா அப்பாவாக எப்பொழுதும் குழந்தைகளை வளர்க்க முடியும் என்ற புரிதலை அவர்களுக்கு கொடுக்க முடியும். என்னுடைய வாழ்க்கையே அதற்கு உதாரணம். " "இதுபோன்ற ஒரு முடிவு எடுத்ததற்காக எப்பொழுதும் என் மகள் என் மீது வருத்தம் கொள்ளவில்லை. இந்த முடிவு பற்றி அவளிடம் கேட்டபோது கூட, 'உனக்கு எது மகிழ்ச்சியோ அதை செய்' என்றுதான் சொன்னாள். அந்த அளவுக்கு குழந்தைகள் தயாராகி விடுகிறார்கள். இதுபோன்ற பிரிந்த பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள் இன்னும் சுந்தந்திரமாக, பக்குவப்பட்டவர்களாகவே வளர்கிறார்கள். ஆனால் சமூகம் இன்னும் பழங்கால கதைகளையும் ஆணாதிக்க சிந்தனைகளையும் திணித்து கொண்டிருக்கிறது." தனுஷ் - ஐஸ்வர்யா: "கூடினோம், வாழ்ந்தோம், பரஸ்பரம் பிரிகிறோம்" தனுஷ்: சமையல் கலைஞர் ஆக ஆசைப்பட்டவர் திரைக்கலைஞர் ஆன கதை பெண்களுக்கே பாதிப்பு அதிகம் இதுபோன்ற கட்டாய சூழ்நிலைகளில் வாழ்வதால் குறிப்பாக பெண்களுக்கு அதிகம் மனநிலை தவறிய சம்பவங்களும் உண்டு. இது மட்டுமில்லாமல் பயம், மன அழுத்தம், உடல் ரீதியிலான கொடுமைகள் என அனைத்தும் நடக்கிறது. இதற்கெல்லாம் சமூகம் என்ன பொறுப்பெடுத்து கொள்ளும்? ஒத்து வரவில்லை என்றால் பிரிவதுதான் ஆரோக்கியமான விஷயம் என்பதை இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் இது போன்ற பிரபலங்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும். அதன் காரணமாகவே அவர்கள் உடனடியாக இந்த முடிவு எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட மாட்டார்கள். தங்களுக்குள்ளேயே சரி செய்துவிடதான் முனைவார்கள். பின்பு முடியாது என்ற சூழலில் பிரிந்து விடுகிறார்கள். இங்கு யாருமே சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை குறித்து யோசிக்காமல், குடும்பம் என்ற கட்டமைப்பை புனிதப்படுத்துவதைதான் நோக்கமாக கொண்டிருக்கிறார்கள். பிரிவை ஏற்று கொள்ள முடியாமல் அந்த உறவில் சேர்ந்திருந்து குழந்தைகளுக்கு வருங்காலத்தில் உன்னுடைய துணையை இப்படியும் நடத்தலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை தான் காட்டுவோம். அதற்கு புரிதலோடு பிரியும் போது இபப்டியும் உன் துணையை சந்தோஷமாக நடத்தலாம் என அந்த குழந்தை கற்கும். இவ்வளவு விஷயங்கள் இதில் இருக்கிறது. பிரபலங்கள் பிரிவிலே கூட பெரும்பாலும் பெண்ணையே குற்றம் சொல்லும் சமூகத்தில் சாதாரண தம்பதிகள் பிரிவிலும் இங்கு அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. 'படித்து வேலைக்கு செல்லும் திமிரு' என காரணம் வேறு சம்பந்தமே இல்லாமல் சொல்வார்கள். முன்பெல்லாம் குடும்பங்கள் பிற்போக்குத்தனமாக இருந்து பெண்கள் ஆண்களை சார்ந்தே இருந்ததால் விவாகரத்துக்கு பயப்பட்டார்கள். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டதால் பெண்கள் துணிச்சலாக அந்த முடிவை எடுக்கிறார்கள். அதனால் ஓர் உறவை பிரிந்த பின்பு எப்படி நண்பர்களாகவும், குழந்தைகளுக்கு நல்ல அம்மா அப்பாவாக பயணிக்க முடியும் என்பதைதான் பார்க்க வேண்டும். எல்லா வீடுகளிலும் அம்மா அப்பா 24 மணி நேரமும் சேர்ந்தேவா இருக்கிறார்கள். கல்யாணம் முடித்து அப்பா வேறு ஓர் ஊரில் கூட வேலை செய்யலாம். அதனால், இந்த பழமைவாத சிந்தனைகளை தவிர்த்து விட்டு குடும்பத்திற்குள் தலையிடுவதை சமூகம் நிறுத்த வேண்டும். பிரிவையும் இயல்பாக்க வேண்டும் " என்கிறார். https://www.bbc.com/tamil/arts-and-culture-60036721
  • ஒம் சம்பந்தன் ஐயா......எல்லாம் செய்து பாத்தாச்சுது இனி குங் பூ ஒண்டுதான் மிச்சம்...
  • பிரஞ்சு ஓப்பன்,விம்பிள்டன் எல்லாம் சறுக்கும் போல கிடக்கு.... வெளி உலகத்துக்குத்தான் தலைக்கனம் பிடிச்சவர். ஆனால்  சொந்த நாட்டுக்குள் கொடைவள்ளல்,தெய்வம் போன்றவராம்.பாடசாலைகளுக்கும் சிறுவர் பாடசாலைகளுக்கும் செய்யாத உதவிகள் இல்லையாம்.பல இடங்களில்  பாடசாலைகளுக்கு இவர்தான் சம்பளமே வழங்குகின்றாராம். இவர் நினைத்திருந்தால் போலியான தடுப்பூசி பத்திரமும் காட்டியிருக்கலாம் எல்லோ? 😂
  • நல்லாய் படிக்காமல் என்ன தோட்டம் கொத்தப்போறியோ எண்டு கேட்டு வெருட்டுவினம் 🤣
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.