Jump to content

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறிஞ்சியியல்(Montology) தொடர்பான கலைச்சொற்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

main-qimg-88acff1a073f337672313c9618e143af-lq.jpg

 

குறிஞ்சித்திணைப் பாடல்களில் இவை காணப்படுவதால் புவியியல், வேதியல் என்பன போன்று மலையும் மலை சார்ந்தவற்றையும் குறிஞ்சியியல் (credit: திருவள்ளுவன் இலக்குவனார் ) என்றே நாம் தனியியல் கண்டு பல கலைச்சொற்களைப் புதுப்பிக்க இயலும்.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலையியல் தொடர்பான கலைச் சொற்கள் :

 1. அடிவாரம், தாள், வெற்பு - மலையின் அடிப்பகுதி (spur / Foot of a hill/mountain)
 2. அடுக்கம் - பன்மலை வரிசை (a complex mountain range.)
 3. அறைவாய், கணவாய், கண்டி - (mountain pass)
 4. ஆரிப்படுகர் - (very difficult mountain path with ascents and descents) அரிதின் முயன்று ஏறியும் இறங்கியும் செல்லும் கடிய மலை வழி
 5. கது, கிழிப்பு, பிளப்பு, விடர், விடரளை, விடம்பு, விடப்பு, மறுமாடி- mountain cleft
 6. கமர் - chasm
 7. கவான் - கவைந்து கிடக்கும் பக்க மலை
 8. கோடு - இரு குவடுகள் சேருமிடம் (joining place of two summits)
 9. கல்லளை, விடரகம், அளை, குகரம், முடுக்கர், விடப்பு, விடர், முகை, போன், கெவி - mountain caves
 10. கன்முழை, கற்பாழி, காண்டை, முழை - large mountain cave
 11. பொறை அருப்பம், சுவல், பறம்பு, பொற்றை, பொச்சை, அரி - hillock, hummock, knoll
 12. குறும்பொறை - பொறையை விடச் சிறியது; பரந்துபட்ட கற்பாறை எனவும் கொள்ளலாம்.
 13. கொடுமன் - slope & side together
 14. கொடுமுகம் - steep face
 15. கொடுமுனை- precipice
 16. கோடு, முகடு, மோடு - ridge
 17. சமவெளி, தாவு, துறவை - plain
 18. சரி - மலைவழி- mountain way
 19. சரி, சரிவு - declivity
 20. சென்னி, குடுமி, உச்சி, முடி - peak of a mountain/ hill - மலையுச்சி
 21. சிமை, மீமிசை, அறை, கூடம், குவடு - summit of a mountain/ hill - உச்சி மலை
 22. சிமையம், கொடுமுடி - உச்சிச் சிகரவுச்சி (topmost tip of the peak)
 23. சிலம்பு, அரைமலை - ஒரு உயரமான மலைச்சரிவில், இடையே அமைந்த ஒரு சிறிய சமவெளிப்பகுதி.
 24. சிறு மலை, குன்று, அரி, குன்றம், மிசை, ஏந்தல் - hill
 25. சூழி - மலையில் உள்ள குளம்
 26. ledge = ?
 27. படுகுழி, அகத்தியா - abyss
 28. பள்ளத்தாக்கு, கொல்லி, தாவு - valley, vale
 29. பிலம், கெவி- cavern
 30. புறத்தெற்றிடறு - Promontory (புறத்தெற்றிய திடறு)
 31. மணற்குன்று/ தகர் / எக்கர் / எக்கல்/ இடுமணல்/ பதுக்கை- sand hill / dune
 32. மரிசு - edge of ridge
 33. மோடு - eminence
 34. பிட்டி- mound
  1. திட்டு - திட்டாக இருக்கும் நிலம்
  2. திடல் - தரையில் இருந்து மெலிதாக உயர்ந்த நிலம்
  3. திடர் - இப்படி உயர்ந்த நிலம் சற்று பருத்திருந்தால்
  4. திடறு - நன்கு உயர்ந்து பருத்து இருந்தால்
  5. திப்பை - பருத்த மேடு
  6. குவால் - குவிந்தமலை போன்ற தோற்றத்தோடு இருக்கும் பிட்டி
 35. மிசைத்திட்டை - Mesa
  1. சொல் உருவான முறை - மிசை என்றால் தமிழில் உயர்ச்சி, மேலிடம், மேடு என்று பொருள்; திட்டை என்றால் மேடு, திண்ணை என்று பொருள். அதாவது மேடு போன்று உயரத்தில் அமைந்துள்ள சமதரையான(மேலிடம்) திண்ணை போன்ற நிலம். (மெசா உண்மையிலே ஒரு வகையான திண்ணைதான்)
 36. வற்புலம், பீடபுவி - plateau
 37. வரை - மலை முகட்டின் பக்கம் (side of a summit)
 38. வாரம், கடறு, சாரல், கடம், பொருப்பு- மலையின் ஒரு பக்கம் (side/ slope of a mountain)
 39. வட்டமரி - knob (வட்டமான(round) அரி(குன்று, குறும்பொறை))
 40. நெடும்பொறை - butte - இவற்றின் உயரமானது அகலத்தை விடவும் கூடுதலாக இருக்கும். மேலும் பொறை என்றாலே எமக்குள் ஓர் பாறை என்னும் உள்ளுணர்வு தோன்றி விடும். ஆதலால் அதனோடு நெடும் என்னும் உயரத்தைக் குறிக்கும் சொல்லினையும் சேர்த்து நெடும் பொறை என்னும் சொல்லினை உருவாக்கியுள்ளேன்.

 


 • அறை, துறுகல் - சிறுபாறை
 • இகுப்பம், கேளிதம் - சீரான பெரிய பாறை(boulders)
 • உலம் - திரண்ட கல் (round stone rock, large pebble.)
 • கக்கான்கல் - kankar, limestone, an impure concretionary carbonate of lime.
 • கரடு - கற்பாங்கான பெருந்திடல்
 • கல்/கன், அதிரி- stone
 • காழ் - gravel
 • குண்டுக் கல் - (undressed stone, rubble) வேலை செய்து செப்பனிடாத கல்
 • பரல், கூழாங்கல் - small pebbles
 • பருக்கை - சிறு கூழாங்கல்
 • பாறை, பாறாங்கல், முரஞ்சு, பெருங்கல், முரம்பு, கற்பாறை, சிலை, பார் - rock
 • முரம்பு - பருக்கைக் கல்லுள்ள மேட்டு நிலம்;
  mound of gravel or stone.

 


கலாநிதி குணராசா என்பவர் எழுதிய 'இடவிளக்கவியற் படங்கள்' என்னும் புத்தகத்தில் இருந்து…..

 

 • மென்சாய்வு- Gentle slope

main-qimg-418b15b965f45af64d29928f46ede99a.png

 • குத்துச்சாய்வு - Steep slope

main-qimg-667d71db1b763972e368398cf91454a3.png

 • குழிவுச்சாய்வு -Concave slope

main-qimg-da33a8f3b54ccb46475a0ce7fd985a75.png

 • குவிவுச்சாய்வு - Convex slope

main-qimg-bf37c829794ee68af59530b885b705b6.png

 • சமச்சீரான பள்ளத்தாக்கு -

main-qimg-018296faf59d3e2e1822e10892cf338c.png

 • சமச்சரில் பள்ளத்தாக்கு -

main-qimg-8aac8a906ebdde64559b081f03c014a1.png

 • நெடுக்குப் பள்ளத்தாக்கு -

main-qimg-ccf7c809f0c4f1fd2531f569c3523fa3.png

 • குறுக்குப் பள்ளத்தாக்கு - ஒரு பிரதேசத்தின் பாறைப் போக்குகளுக்கு குறுக்காகப் பாறைத் தொடர்களை ஊடறுத்து அமைந்திருப்பவை குறுக்குப் பள்ளத்தாக்குகள் எனப்படும்.

main-qimg-891ab0e26f8ab59414a878f88188e4ce.png

 • மேட்டு நிலம் - உயர் நிலமொன்றின் உச்சியில் அகன்று தட்டையாக அமைந்த ஒரு பரப்பே மேட்டுநிலம் எனப்படும். இதிலி சமவுயரக்கோடுகள் உயர்நிலத்தைக் காட்ட அமைந்திருக்கும். ஆனால் உச்சியில் சமவுயரக்கோடுகள் காணப்படா.

main-qimg-87a307ca6211fe1da53c12df213aac21.png

 


 1. கணவாய் - இரு பாறைத் தொட்களுக்கு இடையே அமைந்த கழுத்துப் போன்ற தாழ்ந்த பகுதியே கணவாய் எனப்படும். இதில் சமவுயரக் கோடுகள் பாறைத் தொடர்களினி அமைப்பைப் பிரதிபலிப்பனவாய் இருக்கும். இருபாறைத் தொடர்களைச் சுற்றி வளைத்து வேறு தாழ் சமவுயரக் கோடுகள் அமைந்திருக்கும். கணவாய்கள் பல்வேறு உயரங்களிற் காணப்படலாம்.
 2. உயர்கணவாய் சேணக்கணவாய் - இரு மலைத்தொடகளுக்கு இடையே அமைந்த இரு பள்ளத்தாக்குகளை இணைக்கும் கழுத்தே உயர் கணவாய் அல்லது சேணக் கணவாய் எனப்படும். கணவாயின் இரு பக்கமும் உயர் நிலம் காணப்பட சேணக்கணவாயின் இரு புறமும் பள்ளத்தாக்குகள் காணப்படும்.
 3. கடகம்/ மலையிடுக்கு - gorge - ஒரு பள்ளத்தாக் குவழக்கத்தைவிட ஆழமாயும், ஒடுங்கிய தாகவும், ஒருபுறம் கணவாய் அமைப்பிலும், மறுபுறம் படிப்படியாக உயர்ந்தும் சமவுயரக் கோடுகளைக் கொண்டு அமையும்போது அதனை மலையிடுக்கு என்பர். கணவாய் ஒன்றிற்கும் மலையிடுக்கிற்கும் இடையில் வேறுபாடுகளுள்ளன. மலையிடுக்கு, பெயருக்கு ஏற்ப ஒரு பாறைத் தொடரில் ஆழமான, ஒடுங்கிய இடுக்காகக் காணப்படும். இடவிளக்கவியற் படங்கள். கணவாயை ஒரு புறத்தில் இருந்து ஏறிக்கடக்கும் போது முதலில் படிபடியாக ஏற்றம் உயர்ந்து, பின்னர் படிப்படியாக இறங்கிக் காணப்படும். ஆனால் மலையிடுக்கு அவ்வாறன்று. ஒரு புறம் படிப்படியாக உயர்ந்து, மறுபுறம் அந்த உயரம் படிப்படியாக உயர்ந்து செல்லும். படம் 3.18 - இல் சமவுயரக் கோடுகளின் அமைப்பினை அவதானிக்க. கணவாய் போன்று சமவுயரக்கோடுகள் இருபுறமும் உயரத்தை 'நோக்கி V” வளைவாக அமையவில்லை. ஒருபுறம் உயரும் அப்பள்ளத்தாக்கு, மறுபறமும் உயர்ந்து செல்கின்றது. பொதுவாக மலையிடுக்குகள் குத்தான பக்கங்களைக் கொண்டனவாயும், ஒடுங்கியனவாயும், ஆழமானவையாயும் காணப்படும். ஒருவகையில் இவை ஒடுங்கிய குறுக்குப் பள்ளத்தாக்கை ஒத்தன. (படம்: 3.18)

main-qimg-f9e376e7bbce689d06e69eb2ecf85dfc.png

 


 1. சரிவுப்பறை - குத்துச் சாய்வான பாறைச்சாய்வு ஒன்று சுவர் போன்று வெகுதூரம் நீண்டமையும்போது, அதனைச் சரிவுப்பறை என்பர். இவை பொதுவாக மேட்டுநிலங்களை உருவாக்கும் சாய்வுகள் சரிவுப்பாறைகளாகக் காணப்படுகின்றன.
 2. சுவடு -ஒரு உயர் நிலத்தினின்றும் அல்லது ஒரு பாறைத்தொட ரினின்றும் வெளியே நீட்டிக்கொண்டு காணப்படும் உறுப்பே சுவடு ஆகும். அதாவது பாறைத்தொடர் ஒன்று நெடுக்காக அமைந்திருக்க அப்பாறைத்தொடரில் ஒரு கிளை குறுக்காகச் சற்று நீண்டிருக்கில் அதுவே சுவடு. இதில் சமவுயரக்கோடுகள் தாழ்நிலத்தை நோக்கி வளைந்து சுருண்டு அமைந்திருப்பன. பள்ளத் தாக்கிற்கும் சுவடிற்குமிடையே சமவுயரக்கோடுகளிடையே வேறுபாடு காண்பதில் தவறு நேரலாம்.
 3. வெளிக்கிடை - பாறைகளினால் சூழப்பட்ட பாறைத் திணிவொன்றே வெளிக்கிடை எனப்படும். இது பாறைத் தொடரினின்றும் பிரிவுற்று அமைந்திருக்கும். இதில் சமவுயரக்கோடுகள் அருகமைந்த உயர்நிலத்தோடு இணையாது தனித்து, கூம்பு வடிவிலோ வேறு அத்தகைய சிறு வடிவிலோ அமைந்து காணப்படும். சுவடுகளுக்கு அருகே அமைந்திருக்கும் குன்று வெளிக்கிடையாகும்.
 4. நீர்ப்பிரிமேடு - interfluve
 5. சிறுகுன்று - small hill - சிறுகுன்றுகள், ஏறத்தாழ 500m நீளத்திற்குட்பட்டனவாகக் காணப்படும்.
 6. நீள்குன்று - சிறு குன்றிலும் பார்க்க நீளமானவை நீள் குன்றுகள் எனப்படுகின்றன. அவை ஏறத்தாழ 1 - 2 km நீளமானவையாகக் காணப்படும். ஒன்றிற்கு மேற்பட்ட உச்சிகளைக் கொண்டனவாக இருக்கும்.
 7. கூம்புக் குன்று - கூம்பு வடிவினதாய் அமைந்திருக்கும் ஒரு குன்றே கூம்புக் குன்றம் ஆகும்.
 8. பாறைத் தொடர் - நீள்குன்றிலும் பார்க்க நீளமானவை பாறைத்தொடர்களாகும். இவை 3-8 km வரை நீளமானவையாகக் காணப்படும். 2-3 km அகலமானவையாகவும் காணப்படும். பல சிகரங்களை இப்பறைத் தொடர்கள் கொண்டிருக்கும்.
 9. மீள்நுழை (re-entrant) - இரண்டு வெற்புகளுக்கு(spurs) இடையே உருவாகும் தாழ்நிலம்.
 10. ஓங்கல் - (cliff) அதிக குத்தாக உயர்ந்து அமைந்த பாறை முகமே ஓங்கல் எனப்படும். இது கடற்கரைகளில் அல்லது உள்நாட்டில் காணப்படலாம். இதில் சமவுயரக்கோடுகள் ஓரிடத்தில் வந்து தொடராது ஒரே கோட்டில் நின்று விடும்.
 11. தனியாக்கப்பட்ட குன்று- ஒரு இடத்தில், ஏனைய உயர் நிலத்தோடு இணையாது பிரிந்து அமைந்து நிற்கும் குன்றைத் தனியாக்கப்பட்ட குன்று என்பர்.

main-qimg-df12f29cd41133b39eceab87ff95db50.png

 

 


 • மலையிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கனமான கருப்பு நிறக் கல்- black rock; granite- கருங்கல் / மலைக்கல்

 

 

மேலும் பார்க்க :

 

என்னும் கேள்விக்காக நானெழுதிய விடையினுள்ளும் கொஞ்ச கலைச்சொற்கள் உள்ளன.... அவற்றினையும் படித்து மகிழ்க !

மேலுள்ள சொல் ஒவ்வொன்றுமே கலைச்சொல் என்பதை உணர்ந்து உரிய துறை ஆசிரியர்கள் இவற்றைப் பயன்படுத்தி நூல்கள் எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள் _/\_

 

உசாத்துணை:

தொகுப்பு & வெளியீடு :

நன்னிச் சோழன்

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • நன்னிச் சோழன் changed the title to சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறிஞ்சியியல்(Montology) தொடர்பான கலைச்சொற்கள்
 • கருத்துக்கள உறவுகள்+

குழந்தைகளுக்கு இதை படம்போட்டுக் காட்டலாம். இலகுவாக தமிழ் படிப்பினம்

 

 

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.