Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறி 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!

 

எல்லா(hello),

வணக்கம் மக்களே!

உங்கள் எல்லோரையும் மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் சந்திப்பதில் மகிழ்சியடைகிறேன். இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ வான்படையான வான்புலிகளால் அணியப்பட்ட சீருடைகள், வில்லைகள்(badges) மற்றும் பறனை உடுப்புகள்(flight suits) என்பனவற்றைப் பற்றித்தான். வான்புலிகள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நாட்டின் வான்படையாக திகழ்ந்தனர் என்பதற்கு மற்றுமொரு ஆதாரமாக இவ்வாய்வுக் கட்டுரை தமிழ்ப்பரப்பில் விளங்குமென நினைக்கிறேன். 

 


 

main-qimg-31357e61c981f65dc8607bd67deb79cf

'புலிகளின் வான்படையின் இலச்சினை | படிமப்புரவு: EelamView '

 

  • வான்புலிகளின் சீருடை:

முதலாவதாக வான்புலிகளின் சீருடை பற்றிக் காண்போம். இவர்கள் இளநீல வண்ணத்திலான வரிப்புலிச் சீருடையை அணிந்திருந்தனர். அது அதிவெளிறிய இளநீலம், வான்நீலம் மற்றும் சாம்பல் நீலம் என நீலக் குடும்பத்தினைச் சேர்ந்த மூன்று நிறங்களைக் கொண்ட வரிப்புலிச் சீருடையாக இருந்தது. இச்சீருடை எப்போது முதற்தடவையாக அணியப்பட்டது என்பது பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை. தோராயமாக 2001/2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்துவாக இருக்கலாம் என்பது என் துணிபு. முன்குறிப்பிட்ட காலத்தில் இருந்து 2009 இறுதிப்போர் வரை அணிந்திருந்தனர். இறுதிப்போரில் எப்போது கடைசியாக அணிந்தனர் என்பது அறியில்லை. ஆனால் அவர்கள் வான்கரும்புலிகளாக செல்வதற்கு முன்னர் இதனை அணிந்திருந்தால், 2009 பெப்ரவரி எனக் கொள்ளலாம். (அதன் பிறகு வானூர்திக்கான தேவை எழவில்லை.) ஆனால் இவ்விரண்டு தேதிகளும் என்னுடைய துணிபு மட்டுமே. துல்லியமானவை அறியில்லை.

 

  • வானோடிகளின் வில்லைகள்:

அடுத்து இவர்கள் அணிந்த வில்லைகள் பற்றிப் பார்ப்போம். இவர்கள் இரண்டு விதமான வில்லையினை தமது மார்பினில் குத்தியிருந்தனர். வானோடிகள் வலது பக்க மார்பில் வானோடி என்னும் வாசகம் கொண்ட வில்லையினையும் இடது பக்கத்தில் பறப்பர் வில்லையினையும் (aviator badge) குத்தியிருப்பர்.

main-qimg-5d7d9de3c2eb98be70098099592c42a2

'வானோடி என்னும் வாசகம் கொண்ட வில்லை(badge) - வலது மார்பு'

main-qimg-74442cecc626f4d3391ad2f3a81711e1

'பறப்பர் வில்லை(Aviation badge) - இடது மார்பு'

(கீழே உள்ள 4 படத்திலும் வெவ்வேறு தமிழீழ வானோடிகள் , துணை வானோடிகள் மற்றும் வான்கலவர்(airmen) உள்ளனர்... இப்படங்களில் உள்ள வானோடிகளில் ஒருவரைத் தவிர்த்து ஏனைய 3 வானோடிகளும் வீரச்சாவடைந்து விட்டனர்)

main-qimg-c9ba48b04f86e6931ba4f9fd3df003cf

main-qimg-ece6efc196d274eb47b9d384ff7ae282

'வானோடிகளின் மார்பில் அந்தக் கறுப்பு நிறத்தில் தெரிபவை வில்லைகளைக் குத்துவதற்கான பிணையொட்டிகள்(velcro) ஆகும்.'

main-qimg-6813d6c99b2fadbe25011b1a57b320ef

main-qimg-bdc909a395e5bcc88b82723e1de278f2

 

 

  • வானோடிகளுக்கான விருதுகள்:

ஈழப்போரில் விடுதலைப்புலிகளால் தமிழீழ வானோடிகளுக்கென தனித்துவமான ஒரு விருது வழங்கப்பட்டது. அதன் பெயர் "நீலப்புலி" என்பதாகும். இது ஐந்து தடவை தொடர்ந்து வானேறி வெற்றிகர வான்தாக்குதல் மேற்கொண்ட வானோடிகளிற்கு வழங்கப்படும் விருதாகும். 

 

main-qimg-434aaf8cd538fbad5e6e2ebfd89a8827

'நீலப்புலி விருது'

இது வான்புலிகளில்,

  • வான்கரும்புலி வானோடி பேரரையர்(Col) ரூபன்(மாவீரர்)
  • வான்கரும்புலி வானோடி இள பேரரையர் (Lt. Col.) சிரித்திரன்(மாவீரர்)
  • வானோடி (நிலை இல்லை) தெய்வீகன்/தேவியன் (மாவீரர்)

ஆகியோரிற்கு வழங்கப்பட்டன. மேலும் துணைவானோடிகளாக செயற்பட்டோரிற்கு 'மறவர்' என்ற விருதும் வழங்கப்பட்டது. இதனைப் பெற்றோரின் பெயர்க் குறிப்புகள் அறியில்லை. இவற்றைப் பெற்றோரின் படிமங்களைக் காண இங்கே சொடுக்கவும்:

 

 

  • வான்புலி வானோடிகளின் பறனை உடுப்புகள் (Pilots Flight Suits) :

உலகில் இருக்கும் ஒவ்வொரு நாடும் தன்னுடைய வான்படைக்கென பறனை உடுப்புகள் வழங்குவது வழக்கம். இவை கூடுதலாக பாசிபச்சையும் சாம்பல் நிறமும் கலந்த நிறத்தில் இருப்பது வழக்கம். நமது பண்டாக்கள் அணிவதும் இந்நிறத்திலான உடுப்பினையே. 

இதே போன்றே எமது வான்படை வானோடிகளும் பறனை உடுப்பினை அணிந்திருந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ம்ம். சிலபேர் அறிந்திருப்பீர்கள்; பலபேர் அறிந்திருக்கமாட்டீர்கள். எனவே நாம் அடுத்ததாக எம்மவர் அணிந்திருந்த இந்த பறனை உடுப்பினைப் பற்றிக் காண்போம். 

வான்புலிகளின் முதற்பறப்பு மூன்றாம் ஈழப்போர் காலத்தில்தான். அவர்கள் பறந்த ஆண்டு - என்னிடம் இருக்கிற தகவல்களின் அடிப்படையில் - தோராயமாக 1998 ஆம் ஆண்டு என வைக்கிறேன். இதன் அடிப்படையில் அவர்கள் இச்சீருடையினை முதன் முதலில் அணிந்தது 1998 ஆம் ஆண்டாக இருக்கலாம் எனக் கணிக்கிறேன்(மாதம், நாள், நேரம், தாரகை எல்லாம் நான் அறியேன் மக்காள்).  

இந்த 1998 ஆம் ஆண்டில் அவர்கள் இரு நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்திருந்தனர். 

 

  --> 1998இல் கொச்சு இலகு கீழிதை(Micro Light Glider) ஓட்டிய வானோடிகள் அணிந்திருந்தது:

இந்த ஆண்டில் கீழிதையினை ஓட்டிய வானோடிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக நின்ற இன்னொரு அண்ணா என மொத்தம் மூன்று பேர் ஒரு வெளிறிய இளநீல நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்திருந்தனர். இவர்கள் பராக்குடையோ அல்லது தேவையான பாதுகாப்பு அணியங்களோ(accessories) அணிந்திருக்கவில்லை. ஆனால் வானோடிகள் இருவரும் தலைக் கவசமாக ஒரு வெள்ளை நிறத்திலான வானோடி தலைச்சீரா அணிந்திருந்தனர்.  இவை யாவும் கீழ்வரும் படிமங்கள் மூலம் அறியப்பட்டவையே.

main-qimg-0ab30d600c338d322087d23c8a6e2db5

main-qimg-06f4cc3c5d71d1510496435c89775cb4

LTTE second flight of MIcro Light glider, 3 Sky Tiger cadre with with flight suit on their body..jpg

'இடது பக்கத்தில் நிற்கும் வான்கலவரும் இப்பறனை உடுப்பினை அணிந்துள்ளதை கவனிக்குக. ஆக மொத்தம் மூன்று பேர் இப்பறனை உடுப்பினை அணிந்துள்ளனர், 1998இல்.'

 

 --> 18 செப்ரெம்பர், 1998இல் ஒட்டுசுட்டானில் வான்புலிகளின் தற்சுழல்பறனை(Gyroplane) பறப்பின் போது:

இந்த ஆண்டில் தற்சுழல்பறனை ஓட்டிய வானோடிகள் இருவரில் ஒருவர் மட்டும் (அச்சுதன் அவர்கள்) அக்காலத்தில் சிங்கள வானோடிகளின் பறனை உடுப்பு நிறமான பாசிப்பச்சை நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்திருந்தார். இவர் பராக்குடையோ(parachute) அல்லது தேவையான பாதுகாப்பு அணியங்களோ அணிந்திருக்கவில்லை. ஆனால் வானோடிகள் இருவரும் அதே பாசிப்பச்சை நிறத்திலான முந்தையதைக் காட்டிலும் தொழில்நுட்பம் கொஞ்சம் முன்னேறியதாக உள்ள ஒரு தலைச்சீராவினை அணிந்திருந்தனர்.  இவை யாவும் கீழ்வரும் படிமங்கள் மூலம் அறியப்பட்டவையே.

42560438_2465144060170069_779436543025610752_n.jpg

'இடமிருந்து வலமாக: பேரரையர்(Col) சங்கர் , மற்றும் அச்சுதன் அவர்கள்'

 

fs.png

'இடமிருந்து வலமாக: இள பேரரையர்(Lt. Col.) குசந்தன், பெயர் அறியா வான்கலவர் மற்றும் அச்சுதன் அவர்கள்'
 

Born in Jaffna, in 1972 Sivarasa Pirundaban alias Achchudan.png

 

 

  --> 2005< சிலின் சி 143(Zlin Z 143) மற்றும் செசுனா வித(Cessna type) வானூர்தி ஆகியவற்றை ஓட்டிய வானோடிகள் அணிந்தவை:

vaanoodikal.png

இடமிருந்து வலமாக: சிரித்திரன் அவர்கள், தெய்வீகன்/தேவியன் அவர்கள் மற்றும் ரூபன் அவர்கள் ஆகியோர் தாக்குதல் வானூர்தியாக மாற்றப்படாத சிலின் 143 இற்கு முன்னால் நிற்கின்றனர்.

இவ்வானூர்திகள் 2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் விடுதலைப் புலிகளால் ஓட்டப்பட்டவை ஆகும்(என்னிடம் இருக்கின்ற வான்புலிகளின் 10 படிமங்களின் காலம் 03/04/2005 ஆகும்). இக்காலத்தில் இதனை ஓட்டிய தமிழீழ வானோடிகள் இரண்டு நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்திருந்தனர். ஒன்று கறுப்பு மற்றொன்று கடுநீலம் ஆகும். இவை இரண்டையும் நீங்கள் மேலுள்ள படிமத்தினை நன்கு அண்மையாக்கி ஒளியினை அதிகரிப்பதன் மூலம் காணலாம். 

மேலுள்ள படிமத்தில், இள பேரரையர்(Lt. Col.) சிரித்திரன் மற்றும் தேவியன்(நிலை இல்லை) ஆகியோர் கறுப்பு நிற பறனை உடுப்பினை அணிந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் அணிந்துள்ள வான்படை கஞ்சுகத்தின் கழுத்துப்பட்டையில் நீல நிற உடுப்பு ஒன்றின் கழுத்துப்பட்டை தெரிகிறது. அது யாதென எனக்குத் தெரியவில்லை. இவர்களில் மூன்றாமவரான பேரரையர்(Col.) ரூபன் அவர்கள் நீல நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்துள்ளார். அதேநேரம் இவர்கள் மூவரும் தத்தமது பறனை உடுப்பின் மேல் கறுப்பு நிற வான்படை கத்தனம்(Air Force jacket) ஒன்றினையும் அணிந்துள்ளனர். 

மேலும் மேற்கண்ட படிமத்தில் வானோடி தேவியன் அவர்கள் கையில் பச்சை நிற கைமேசினை(gloves) அணிந்துள்ளதையும் கவனிக்குக.

 

  • சிங்களம் கைப்பற்றிய பறனை உடுப்பும் கொளுத்திய வெடியும்:

இவ்வுடுப்பினில் ஒன்றினை சிங்களப் படைகள் இறுதிப் போரில் கைப்பற்றி இருந்தன. கைப்பற்றிய உடுப்பு விடுதலைப் புலிகளினதுதான், ஆனால் அதில் குத்தப்பட்டிருந்த இரு வில்லைகளும் விடுதலைப் புலிகளினது இல்லை. ஏனெனில் புலிகளினால் வெளியிடப்பட்ட பறப்பர் வில்லை மற்றும் 'வானோடி' என எழுதப்பட்ட வாசகம் கொண்ட வில்லை ஆகிய இரண்டிலும் புலிச் சின்னம் இருப்பதோடு அவை தமிழிலும் உள்ளன. ஆனால் இந்த உடுப்பில் குத்தப்பட்டுள்ள வில்லைகளில் புலிச்சின்னமும் இல்லை, வானோடி என்ற வாசகம் தமிழிலும் இல்லை! பகரமாக 'Pilot' என்ற ஆங்கில வாசகமே உள்ளது. தமிழ் கொண்டு ஆண்ட நாட்டின் படையில் ஆங்கிலமா? வாய்ப்பேயில்லை! அத்துடன் அவற்றினது வடிவமும் தோற்றமும் புலிகளால் வெளியிடப்பட்ட வில்லையில் இருந்து முற்றாக வேறுபடுகிறது.

மேலும், இந்த உடுப்பானது வில்லைகள் குத்தப்பட்ட நிலையில்தான் சிங்களத்தால் மீட்கப்பட்டுள்ளது. இதுதான் மிகப் பெரிய சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது. ஏனெனில் எந்தவொரு வானோடியும் தனது உடையில் வில்லையினை குத்திவைத்த நிலையில் புதைத்துவிட்டுச் செல்ல மாட்டான். ஆனால் இங்கு சிங்களமோ அப்படியே புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இருந்து கிளப்பி எடுத்ததாக அறிவித்திருக்கிறது. நான் எண்ணுவது யாதெனில் உங்கள் மனதில் இப்போது தோன்றுவதே. ஓம், எடுத்த பின்னர் ஊடக்கத்திற்காக இப்படி ஏதேனும் குத்திவிட்டிருக்கலாம் என்பது என் துணிபு.

ஆக, இந்த பறனை உடுப்பு வான்புலிகளினதுதான், ஆனால் அதில் குத்தப்பட்டிருக்கும் வில்லைகள் வான்புலிகளினது அல்ல! அவை புலிகளினது பொருள் ஒன்றினை கைப்பற்றி விட்டோம் என சிங்கள மக்களுக்கு தெரிவித்து சிங்கள மக்களை உற்சாகப்படுத்துவதற்காக சிங்களம் செய்த உத்தியே ஒழிய இது புலிகளினது வில்லைகள் அன்று.

main-qimg-967460dbf47f8cec182df8f86e5af9b0

'கைப்பற்றப்பட்ட புலிகளின் கடுநீல நிற பறனை உடுப்பு'

 

வான்புலிகளின் பறனை உடுப்பு - LTTE's Sky Tigers flight suit - From Sri Lankan Military wartime report.jpg

 '13-மே-2009 அன்று சிங்களத்தால் கைப்பற்றப்பட்டு உலகிற்கு புலிகளின் பறனை உடுப்பு என அறிவிக்கப்பட்டது | படிமப்புரவு: யூடியூப் & ITN News| மூன்று திரைப்படிப்புகளை ஒன்றாக ஒட்டி இப்படிமத்தை உருவாக்கியுள்ளேன்'  

 

  • தமிழரின் பறனை உடுப்பில் குத்தப்பட்டிருக்கலாம் என நான் கணிக்கும் வில்லைகள்:

மேலே சிங்களம் கொழுத்திய வெடியை வைத்துப் பார்க்கும்போது எம்முடைய வானோடிகளின் பறனை உடுப்பில் வலது மார்புப் பக்கத்தில் நான் மேலே கூறியுள்ளது போன்ற 'வானோடி' என்ற வாசகம் கொண்ட மஞ்சள் நிற வில்லை குத்தப்பட்டிருந்திருக்கலாம்; இடது பக்கத்தில் 'நீலப்புலி' என்ற பறப்பர் வில்லை குத்தப்பட்டிருந்திருக்கலாம்; இரு தோட்களிலும் தோள்மணை(Shoulder boards) மேலுள்ளது போல குத்தப்பட்டிருந்திருக்கலாம். அந்த தோள்மணையில் குறுக்குப்பாட்டிற்கு - இனமறியா பொருளால் ஆன - ஒன்றிணைக்கப்பட்ட மூன்று வெண்ணிற பட்டைகள் பிணைக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன். மாறாக இவ்வில்லைகளை குத்தாமல் வெறுமனே அணிந்திருக்கவும் வாய்ப்புண்டு.

இந்த வில்லைகள் குத்தப்பட்டிருக்கலாம் என்பது வெறும் கருதுகோள் மட்டுமே. ஆனால் வான்புலிகள் இப்பறனை உடையினை அணிந்திருக்கின்றனர் என்பது வரலாறு எமக்குச் சொல்லும் செய்தி, அந்தப் படிமம் மூலமாக!

 

 

உசாத்துணை:

படிமப்புரவு:

  • dossier on LTTE
  • Tamilnet.com
  • eelamview.com
  • ஏனையவை திரைப்பிடிப்புகள் ஆகும் (youtube.com, eelam.tv)

 

ஆக்கம் & வெளியீடு

நன்னிச்சோழன்

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to வான்புலிகளின் சீருடைகள் மற்றும் பறனை உடுப்புகள்(flight suit) - ஆவணம்
  • நன்னிச் சோழன் changed the title to வான்புலிகளின் சீருடை மற்றும் பறனை உடுப்புகள்(flight suits) - ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்+

மேலும் வாசிக்க:

 

 

 

இதுபோல இன்னும் பல ஆவணங்களை வாசிக்க:

இவற்றை சும்மா வாசித்து விட்டுப் போக வேண்டாம். நீங்களும் ஒரு படி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், விரும்பினால்.

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

    • By நன்னிச் சோழன்
      "தோற்றிடேல், மீறி 
      தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"
      -நன்னிச் சோழன்
       
      எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!  
      எல்லா(hello),
      வணக்கம் மக்களே!
      உங்கள் எல்லோரையும் மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் சந்திப்பதில் மகிழ்சியடைகிறேன். இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ வான்படையான வான்புலிகளிடம் இருந்த வானூர்திகளைப் பற்றியே... சரி அதற்கு முன்னால் புலிகளிடம் எத்தனை வானூர்திகள் இருந்தன என்பதைப் பற்றி ஏதேனும் ஊகம்?...ம்ம்..
      2...இல்லை..
      5.. இல்லை....
      7.. இல்லை…
      உங்கள் ஊகம் காணும், நிறுத்துங்கள்! நானே சொல்கிறேன்.
      சான்றோடு உறுதிப்படுத்தப்பட்ட வானூர்திகள் மொத்தம் 11 (87 நடு - 2009 பெப்ரவரி 21) ஆகும்..
      சரி , எனக்கு ஆலாவட்டம் போடத் தெரியாது… வாருங்கள் நேரடியாக கட்டுரைக்குள் தாவுவோம்!
      இங்கு நான் எழுதும் அனைத்தும் இறுதிப்போரில் சிங்களப்படைகள் வெளியிட்ட படங்கள், மற்றும் ஓர் நெடும்தொடராக வெளிவந்த ஆராச்சிக் கட்டுரை ஆகியவற்றில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டே எழுதுகிறேன். இற்றைய தேதிவரை உலகில் இருந்த எ இருந்துள்ள அனைத்து அமைப்புகளிலும் எ நடைமுறையரசுகளிலும் தமிழீழ நிழலரசை நடாத்திய த.வி.பு. மட்டுமே சொந்தமாக வானூர்தி கட்டுமான திறனை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்தவர்கள், அதுவும் அந்தக்காலத்திலேயே!
      .
      புலிகளிடம் பறக்கக்கூடிய நிலையில் இருந்த மொத்த வானூர்திகள் (சான்றோடு உறுதிப்படுத்தப்பட்டவை): 11 கொச்சு இலகு கீழிதைகள் (micro light gliders) - 2 தற்சுழல் பறனை(Gyroplane) - 1 இரொபின்சன் R-44 இலகு உலங்கு வானூர்தி(Robinson R-44 light helicopter) - 1 சிலின் Z 143 இலகு வானூர்திகள்(Zlin Z 143 Light Aircrafts) - 5 → செம்மைப்படுத்திய Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2 வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (radio controlled model aircraft)- 2 .
      கடலில் வைத்து அழிக்கப்பட்ட புலிகளின் அறியில்லா வானூர்திகள் - 3 நான்காம் ஈழப்போரில், 7 ஒக்டோபர் 2007 அன்று சிங்கள சிறீலங்காக் கடற்படையால் தாட்டப்பட்ட(sunk) விடுதலைப் புலிகளின் கப்பல் பிரிவிற்குச் சொந்தமான படையேற்பாடு(logistics) கப்பலான எம்.வி.மற்சுசிமா இல் இலகு வானூர்திகள் இருந்த உளவுத் தகவல்கள் தமக்கு கிடைத்திருந்ததாக சிறீலங்கா கடற்படையின் முன்னாள் சேர்ப்பன்(Admiral) 'சயந்த கொலம்பக' செவ்வி ஒன்றின் போது தெரிவித்துள்ளார். அந்த வானூர்திகளின் எண்ணிக்கை மொத்தம் மூன்று என்று சிங்கள புலனாய்வாளர் 'ரொகான் குணரத்ன' தனது ஆய்வுக் கட்டுரையில் பதிவிட்டுள்ளார். ஆனால் இவை எதற்கும் பூதியல்(Physical) ஆதாரங்கள் இல்லை. அனைத்தும் வாய்மொழியே! →ஆதாரம்:Rohan_Gunarathne.pd
      (கப்பலுக்குள் இருந்ததோ இல்லையோ... எது எப்படி பார்த்தாலும் வான்கரும்புலி வானூர்தியாக போனவற்றைத் தவிர மேலும் மூன்று இருந்துள்ளது.)
       
      புலிகளிடம் பறக்கக்கூடிய நிலையில் இருந்த மொத்த வானூர்திகள் (ஐயமிருந்தும் சான்றோடு உறுதிப்படுத்தப்பட முடியாதவை): செசுனா வித வானூர்தி - 1  
      புலிகளால் கட்டி முடிக்கப்படாத வானூர்தி விதமறியா கொச்சு இலகு வானூர்தி (unknown type micro light aircraft )- 1  
      87 களில் வெள்ளோட்டம் விடப்பட்ட வானூர்தி (தோல்வி) உலகப்போர்-II வானூர்தி வடிவ வானூர்திகள் - 2  
       
      புலிகளின் வானூர்தி கட்டுப்பாட்டு அறை:

       
       
      87 இருந்தே நான் கணக்கைத் தொடங்குகிறேன்..
       
      1) உலகப்போர்-II வானூர்தி வடிவ வானூர்தி
      உருவாக்கியவர்: இள பேரரையன்(லெப்.கேணல்). அப்பையா இருப்பு எண்ணிகை - 2 → புலிகளின் முதல் விமானம் -(இக்கட்டுரையானது புலிகள் காலத்தில் எழுதப்பட்டமையால் நம்பத் தகுந்தது . எனவே வாசித்துப் பாருங்கள்.. )
      இவ்வானூர்தியானது 1987 'லிபரேசன் நடவடிக்கை'யின் போது வல்வெட்டித்துறையில் இருந்த புலிகளின் படைத்தளத்தில் வைத்து கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் அறிவித்திருந்தது. இதுவே அக்காலத்தில் ஆதாரத்தோடு வெளிவந்த புலிகளின் முதல் வானூர்தி. இதே போன்று மற்றுமொரு வானூர்தியும் அங்கிருந்ததாகவும் மேற்சுட்டியுள்ள கொழுவியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

      'படிமப்புரவு: ஈழ ஆதரவு வலைத்தளம் ஒன்றில் இருந்து'
      இந்த வானூர்தியின் தோற்றமானது பார்ப்பதற்கு இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வானூர்தி போன்றுள்ளது. இது புலிகளின் உள்நாட்டு மானுறுத்தமாகவும் (indigenous manufacture) அறியப்படுகிறது. படத்தின் பின்னணியில் தெரிவது அழிந்துபோன ஓர் கட்டடம். அவ்வலைத்தளத்திலும் ஓர் தொழிற்சாலையில் வானூர்திகள் தரித்து நின்றபோதுதான் அழிந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.. இது கொழுவியின் தகவல்களை உறுதிப்படுத்துவதுடன் இரண்டும் ஒரேலுகிறதல்லவா? (synchronize). இது என் துணிபு!
       
      2) கொச்சு இலகு கீழிதை (micro light glider) :
      →கொச்சு- சேர நாட்டு வழக்கு (எ.கா: கொச்சு வள்ளம்.. இருப்பதிலேயே சிறிய வள்ளம்)
      இதே போல் புலிகளிடம் மொத்தம் இரண்டு வானூர்திகள் இருந்ததாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
      இருப்பு எண்ணிகை - 2 → கீழிதை - 1

      'இடது புறத்தில் நிற்பவர் பேரரையன் (கேணல்) சங்கர் ஆவார். இவர்தான் வரலாற்றுக் காலத்தில் தமிழர் வான்படையின் முதல் கட்டளையாளர்(Commander) என அறியப்படுபவர் ஆவார்..'

      'கீழிதையின் உடல்'

      'கீழிதையின் பின்பக்கம். வெள்ளை நிறத்தில் தெரிவதுதான் அதன் சுழலி'

      'கீழிதையின் பக்கவாடு. '
      → கீழிதை - 2
      இரண்டாவது கீழிதை ஒன்று புலிகளிடம் இருந்ததாக சிங்களம் தான் கூறுகிறது.. ஆனால் இருந்தமைக்கான பூதியல் ஆதாரம் எதையும் இன்று வரை சிங்களம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
       
       
      3) தற்சுழல் உலங்கூர்தி/தற்சுழல் பறனை (Gyrocopter/Gyroplane)
      இருப்பு எண்ணிகை - 1
      'தற்சுழல் பறனையின் உடல் மேல் சுழலியைப் பொருந்துவதைக் காட்டும் படம்'

      'மூலைப் பார்வை'

      'முன்பக்க பார்வை'

      'தோழர்கள் புடைசூழ கொடிஞ்சியில்(cockpit) 2 வானோடிகள் அமர்ந்திருக்கின்றனர்.'
      மேற்கண்ட திரைப்பிடிப்பில் நெகிழ்வான மகுடக்கவி(Floppy hat) அணிந்திருப்பவர் ஒரு வானோடியே. அவர்தான் பின்னாளில் வான்புலிகளின் துணைத் கட்டளையாளராய் ஆகியவர். அவருடைய இயக்கப்பெயர் இள பேரரையன் (லெப்.கேணல்) முல்லைச்செல்வன்(குசந்தன் என்று பொதுவாக அறியப்படுபவர்) என்பதாகும்.  அந்தக் கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பவர் அச்சுதன் எ சுரேஸ் ஆவார். எனக்கு இவரைப் பற்றி ஏதும் தெரியாது. சிங்கள புலனாய்வுத் துறையின் அறிக்கைகள் மூலம்தான் இவரும் ஒரு வானோடி என்று அறிந்தேன். இவர்தான் பின்னாளில் வான்புலிகளின் கட்டளையாளராய் செயற்பட்டவர் என்று சிங்கள புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

      'தற்சுழல் பறனையின் வால்பகுதி'

      'தற்சுழல் பறனையின் பின்பக்கச் சுழலி'
       
      4) இரொபின்சன் R-44 இலகு உலங்கு வானூர்தி(Robinson R-44 light helicopter)
      இது புலிகளிடம் இருந்ததாகவும் தொண்ணூரகளின் பிற்பகுதியில் வீழ்ந்து நொறுங்கிவிட்டதாகவும் சிறீலங்கா அரசாங்கம் (புலிப்பகைவர்) சொல்கிறது.. படம் ஏதும் எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. ஆனாலும் சிங்களமே அத்தகவலை வெளியிட்டுள்ளதால் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இங்கு இணைக்கின்றேன்.
      ஆதாரம்: dossier on LTTE → பக்- 80, பத்தி -2.
       
      4) புலிகளின் வான்படை வானூர்தியொன்றின் பொறி.. எதனது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மேலுள்ளவற்றினது மட்டும் இல்லை என்று உறுதியாத் தெரிவித்துக்கொள்கிறேன். இது சிறிய வகை இலகு வானூர்திகளிற்கான பொறியாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.
      பொறி: 80 குதிரைவலு எஃவ்-30 காற்றால் குளிராகும் பொறி (80 HP F-30 air cooled engine)

      'பின்பக்கத் தோற்றம்'

      'பக்க வாட்டுத் தோற்றம்'
       
      5) சிலின் Z 143 இலகு வானூர்திகள்(Zlin Z 143 Light Aircrafts) - 5

      செம்மைப்படுத்திய Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2 இதுதான் புலிகளின் குண்டுதாரி வானூர்தி. இது செக் குடியரசின் உண்டாக்கல்(made) ஆகும். இவற்றில் களத்தில் 2 உம், தருவிக்கப்பட்டு புலத்தில் (ஓர் ஐரோப்பிய நாட்டில்) தரித்த நிலையில் மூன்றும் இருந்தன. இந்த ஐந்து வானூர்திகளும் புலிகளிடம் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இதைப் புலிகளே உறுதிப்படுத்தும் விதமாக வான்கரும்புலித் தாக்குதல் முடிந்த பின்னர் வெளியிட்டிருந்த அறிக்கையில் தம்மிடம் மேலும் மூன்று வானூர்திகள் இருப்பதாக கூறியிருந்தனர் என்பது இங்கு நினைவுகூறத் தக்கது.
      வான்கரும்புலி வானூர்தியாக(kamikaze aircraft) மாறிய புலிகளின் வானூர்திகளின் செங்குத்து நிலைப்படுத்திகளில்(vertical stabilizer) இரண்டு தொடரிலக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. முறையே: 905, 906

      'தாக்குதல் வானூர்தியாய் மாற்றும் முன்னர் எடுக்கப்பட்ட நிழற்படம்'

      'தாக்குதல் வானூர்தியாய் மாற்றிய பின்னர் எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட(edited) நிழற்படம்'

      (விதப்பங்கள்- specifications, பெருமம்- maximum, சில்லுத் தடம் - wheel track, நெடுக்கம் - range, ஏறோட்டம்- Take-off run, இறங்கோட்டம்- Landing run)
       

      'சிலின் 143-இன் கொடிஞ்சி (cockpit)'
       

      (மானுறுத்தம் - manufacture)

      'வான்புலிகளின் வானூர்தித் தீக்குடுக்கை'
      இது போன்ற குண்டுகளை அந்தக் காலத்தில் தீக்குடுக்கை என்று சொல்வார்கள். இதுவே மிகவும் பொருத்தமானச் சொல். ஆனால் இது இன்று வழக்கொழிந்துவிட்டது.
      குண்டின் நீளம் : 114cm-127cm குண்டின் விட்டம்: 10-12" குண்டின் மொத்த எடை : 66 கி.கி. வெடிபொருள் நிறை : 55 கி.கி, வெடிபொருள் வகை : C-4 குண்டுச்(ball) சிதறல்களுடன் .
      'குண்டுச்(ball) சிதறல்கள் கோர்வையாய்  | தீக்குடுக்கையின் முன்பகுதி '
       

      'குண்டுச்(ball) சிதறல்கள் ஒற்றையாய்'
       

      'வான்புலிகளின் வான்கலவர்களால்(airmen) சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில்(electric bomb track) வழிகாட்டப்படாத குண்டுகள் (unguided bombs) பொருத்தப்படுகின்றன.'
       


      'சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில்(electric bomb rack) ஆற்றப்படாத குண்டுகள் (unguided bombs) பொருத்தப்பட்டுள்ளன.'
       

      'சிலின் குண்டுதாரியின் அடிப்பக்கம்'
       

      "வன்னியில் இருந்த ஓர் வான்பொல்லத்தில் (air strip) இருந்து சிலின் மேலெழும்புவதற்காக இரவு நேரத்தில் ஓடுதளத்தில் ஓடியபோது"
      → கடைசியாய் வான்கரும்புலித் தாக்குதலிற்குச் சென்ற வான்கரும்புலி வானோடி இள பேரரையர் (லெப்.கேணல்) சிரித்தரன் அண்ணாவிற்கு கையிலும் நெஞ்சிலும் வெடி விழுந்ததாகவும், அதனால்தான் இவரால் மேற்கொண்டு ஓட்ட முடியாமல்போய் விழுந்தார் என்றும், நான் இரணப்பாலையில் இருந்தபோது (தாக்குதல் நடந்த 2 ஆம் நாள் - அப்போது எனக்கு 9 வயது) எனக்கு ஒருவர்(அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை) தெரிவித்தார்.
      → அறியில்லா இரண்டு வான்புலிகளின் துணைவி/மனைவி-களின் மனை திருவையாறு(கிளி.) SSLR மிதிவண்டி கடைக்கு('SSLR சைக்கிள் கடை' என்றால் எல்லோருக்கும் தெரியும்) இடது பக்கமாக போகும் ஒழுங்கையில் 2008 வரை இருந்தது. இருவரும் சிங்களத்திதான். அந்த வீடு ஒருமாடி கட்டடம் ஆகும்.
       
       
      6) ஆறாவது வானூர்தியொன்று புலிகளிடம் இருந்தது என்று நாந்தான் சொல்கிறேன். ஆனால் அதற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. எதனால் அப்படிச் சொல்கிறேன் என்றால் புலிகளின் ஓர் பரப்புரை நிகழ்படத்தில் தமிழீழ வான்பரப்பில் மூன்று வானூர்திகள் பறப்பில் ஈடுபட்டிருப்பது போலக் காட்டியிருந்தார்கள். அந்த நிகழ்படம்(video) இதோ.
      https://eelam.tv/watch/க-த-த-ட-டம-ப-ட-ட-kuththattam-pooduda-ltte-aircrafts-வ-ன-ப-ல-கள-வ-ன-ர-த-கள-zlin-143-cessna_h61ppM57pLJjoNG.html
      'பரப்புரை நிகழ்படம்'
       

      'பறப்பில் உள்ள புலிகளின் 3 வானூர்திகள்'
       

      'பறப்பில் உள்ள புலிகளின் வானூர்திகள்'
       

      'பறப்பில் உள்ள புலிகளின் வானூர்திகள். இந்த வானூர்திகளின் இறக்கைகளைப் பாருங்கள், ஒரே மாதிரியாக உள்ளது'
       

      'மேலே காட்டப்பட்டுள்ள அதே வானூர்திகள், முகிலின் கீழே பறக்கும் போது'
      மேலே மூன்று சிலின்கள் பறப்பில் ஈடு்பட்டுளதை நீங்கள் காணலாம். இதில் இரண்டு சிலின்கள் வான்கரும்புலி வானூர்தியாக மாறி அழிந்துபோய் விட்டன. அந்த மூன்றாவது சிலினிற்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் வான்கரும்புலிகளால் கொண்டு செல்லப்பட்டதைக் காட்டிலும் இன்னொன்று இருந்தமைக்கான மற்றொரு ஆதாரமாக நான் வைப்பது யாதெனில் மே 13, 2009 அன்று சிங்களப் படைகளால் கண்டெடுக்கப்பட்ட இன்னொரு பிலிறுந்தியே (Propeller) ஆகும்.
      இதோ உங்களின் பார்வைக்காக…

      'புதைகுழியில் இருந்து பிலிறுந்தி வெளியில் கொண்டுவரப்படுகிறது'

      'இரண்டு படத்திலும் உள்ள பிலிறுந்தியும் ஒன்றே. இரண்டாவது படத்தில் பிலிறுந்தியின் நடு மூடி திறந்து வைக்கப்பட்டுள்ளது'
       
      அதேநாளில் சிங்களப் படைகள் இன்னுமொன்றைக் கண்டெடுத்தன. அதுதான் கீழுள்ள சில்லாகும். இது ஒரு இலகு வானூர்திக்கான சில்லாகும். ஆகவே இது புலிகளிடம் இருந்த அந்த சிலினிற்கானதாகவும் இருந்திருக்கலாம், அல்லாமல் கீழே கூறியுள்ள செசுனா வித வானூர்திக்கானதாகவும் இருக்கலாம்.

      'சிங்களப் படைகளால் கண்டெடுக்கப்பட்ட ஒற்றைச் சில்லு'
       
      இனிவரும் படங்களில்தான் ஒரு விதப்பான விதயம் (specific info/matter) உண்டு; படங்களை உத்துப் பாருங்கள். இந்தப் படங்கள் மேற்கண்ட நிகழ்படத்தில் செசுனா வித வானூர்திகள் குண்டுவீசுவது போல ஓர் படம் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் வருகிறது.

      'பறப்பில் உள்ள புலிகளின் வானூர்திகள்'
       

      'பறப்பில் உள்ள புலிகளின் வானூர்திகள்'
      பறப்பில் உள்ள புலிகளின் வானூர்திகள். இந்த வானூர்திகளின் இறக்கைகளைப் பாருங்கள், நடுவில் உள்ளதன் இறக்கையானது ஏனைய இரண்டினதுமுடனிருந்து வேறுபடுகிறது; வால்பகுதியும் அருகில் பறக்கும் வானூர்திகளிடம் இருந்து வேறுபடும் விதமாக ஒல்லியாக சற்று நீளமாக உள்ளது.

      நடுவில் பறக்கும் வானூர்தியினின் இறக்கை வேறுபாடு நன்கு தெரிகிறது பாருங்கள். இவ்வானூர்தியின் இறக்கையானது வானூர்தியின் கொடிஞ்சியின் (cockpit) மேற்புறத்தில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இது செசுனா (Cessna) வித வானூர்தியாக இருக்கலாம் என்பது என் துணிபு. இருந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும்.

      அந்த நடுவில் உள்ள வானூர்தி செசுனா என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் செசுனாவிற்கான சாளர அமைப்பு இதில் உண்டு. அதாவது வானோடி இருக்கைக்கு அருகில் உள்ள சாளரம் மற்றும் பின்னால் உள்ள பாந்தர்(passenger) சாளரம்(window) ஆகிய இரண்டும் இரண்டு கறுப்புச் சதுரப் புள்ளிகளாகத் தனித்தனியாகத் தெரிகின்றன. நன்கு அண்மையாக்கிப் பார்த்தீர்களென்றால் இது தெளிவாகத் தெரியும். மேலும், இறக்கையானது கொடிஞ்சியின் மேற்புறத்தில் இருந்தே வானூர்தியுடன் இணைக்கப்பட்டிருப்பது நன்கு தெரிகிறது.

      'செசுனா வானூர்தியின் தோற்றம் | படிமப்புரவு: Hobby World'

      மேற்கண்ட படத்தில் வானூர்தியின் இறக்கை உடலோடு பொருந்தும் குழைச்சில் இறக்கையின் நிழலானது கொடிஞ்சி மீது விழுவது கறுப்பாகத் தெரிகிறது பாருங்கள். ஆனால் மற்றைய இரண்டிலும் அவ்வாறு நிகழவில்லை.

      'அதே அந்த நடுவில் பறப்பில் உள்ள வானுர்திக்கு மட்டும் உருமறைப்பு வண்ணம் பூசப்படவில்லை. வெண்மையாய்த் தெரிகிறது பாருங்கள்; அதேநேரம் அருகில் பறக்கும் இரண்டிலும் உருமறைப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது.'
      மேலே நான் கொடுத்திருக்கின்ற படங்களையும் ஏரண விளக்கங்களையும் வைத்துப் பார்க்கும் போது புலிகளிடம் செசுனா வகை வானூர்தியுடன் மேலும் ஒரு வானூர்தியும் இருந்திருக்க வேண்டும் என்பது என் முடிவு! (10/15/2021 அன்று செசுனா தொடர்பான மற்றுமொரு ஆதாரம் கிடைக்கப்பெற்று அது கீழே தனியான மறுமொழிப்பெட்டியினுள் கொடுக்கப்பட்டுள்ளது.)
       
      குறிப்பு: எழிலன்புரம், புதுக்குடியிருப்பு மற்றும் முருகண்டியில் உள்ள நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, விடுதலைப்புலிகளிடம் செசுனா இசுகை மாசுரர் விதத்தைச் சேர்ந்த வானூர்தி ஒன்று இருப்பதாகவும் அது அடிக்கடி வானில் பறப்பதை சாட்சி நேரில் கண்டதாகவும் ஜூலை 28, 2006 அன்று சுவீடனை தற்போதைய தளமாகக் கொண்ட ஆசிய ட்ரிப்யூன்(Asian Tribune) என்ற மின்-செய்தித்தாளானது செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  
       
      7) வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (radio controlled model aircraft )
      இவ்வானூர்திகளைப் புலிகள், தமது உளவு சேவைக்காகவோ அல்லது புலிகளின் வலவனில்லா வானூர்திகளின் முன்மாதிரி வானூர்தியாகவோ இருப்பதற்கு தருவித்திருக்கலாம் என்பது என் துணிபு.
      → (1) இந்த வண்டு கடந்த 2007 ஆம் ஆண்டு சிங்களப் படைகளால் கடற்புலிகளின் வழங்கல் அணியிடம் இருந்து கைப்பற்றப்பட்டது ஆகும்.
      உடல் நீளம்: 5.5அடி இறக்கை நீட்டம்(wing span): 13 அடி (தோராயமாக)
      அதற்கான வானலை கட்டுப்படுத்தி(radio controller)

      செசுனா N739RF (Cessna N739RF) இது சீகல் மாதிரியைச்(seagull model) சேர்ந்த KIT விதமான வானூர்தியாகும்.
      உடல் பகுதிகள் உதிரிகளாக:

       

       
      அதற்கான வானலை கட்டுப்படுத்தி (radio controller):-

       
      அதை ஒன்று சேர்ப்பதற்கான கையேடு:

       
      கொச்சு இலகுவானூர்தி (micro light aircraft) இவ்வானூர்தி கைப்பற்றப்பட்ட இடம் பார்ப்பதற்கு வானூர்தி பழுதுபார்க்கும் பட்டறை போன்று இருந்தது என்கிறது சிங்களம். அது தொடக்கநிலையிடமாக இருந்தாலும், அங்குள்ள கட்டுமானங்களானவை புலிகள் தமது சொந்த சரக்குகளை உருவாக்க, பராமரிக்க மற்றும் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர் என்பதைக் குறிக்கிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களினுள் பரவலான அறிவியல் இதழ் மற்றும் பல வானூர்தியியல் பொறியியல் புத்தகங்கள் இருந்தன. இவற்றுடன் அங்கு எளிய ‘நீரே செய்யும் (do it yourself)’ புத்தகங்கமும் இருந்துள்ளது. இப்புத்தகத்தில் உள்ள வழிகாட்டலின்படி பெருவங்க விங்களம் (aluminum alloy) / உலோகத் தாள்களைக் (metal sheet) கோத்திணைக்க(fabricate) கடைசல் எந்திரம்(lathe) உட்பட பல எந்திரங்கள் அங்கிருந்தன.

      'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தியின் எச்சம்'
       

      'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தியின் எச்சம்'

      'எரியூட்டப்பட்ட வானூர்தியின் மையப்பகுதி'
       

      'வானூர்தி மாதிரிப்படம்'
       

      'வானூர்தி மாதிரிப்படம்'
      மேற்கண்ட வானூர்தி பற்றிய செய்திகள் இந்நிகழ்படத்தில்(video) உண்டு. மேலும் நான் மேற்கூறியிருந்த அந்த வானூர்திப் பட்டறையையும் புத்தகங்களையையும் இதில் காணலாம்.
       
       
       
      புலிகளின் வான்படை அணியங்கள்(accessories) தேவிபுரத்தில், 'தெறுவைக்குளம்' என்ற சிற்றூரில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சிங்களப் படைகளால் தோண்டியெடுக்கப்பட்ட புலிகளின் வான்படை அணியங்கள்(accessories):-

      'பயிற்சி பாவனையாக்கி (training simulator)'

      'பறப்பு பாவனையாக்கி (flying simulator)'

      'ஓடுதள மின்சூழ்கள்'

      'நீல நிறத்தில் தெரிவது  பறனை உடுப்பு ஆகும்'

       

      'வட்டைகள்(tires) மற்றும் ஒருசில கோப்புகள்'

      'ஒன்றன் மேல் ஒன்றாக உள்ளது தொடர்பாடல் கரணங்கள் (communication device) என்று நினைக்கின்றேன். மற்றையது கதிவீ காட்சியக கரணமாக (RADAR display device) இருக்கலாம் என்று நினைக்கின்றேன், சரியாகத் தெரியவில்லை.'







       
      சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்ட 12 வானூர்தி வட்டைகள்:


       
      2 முதன்மைச் சில்லுகள்:

       
      பிற்சேர்க்கை (14/10/2020)
      'வான்கரும்புலி வானோடி பேரரையர்(கேணல்) ரூபன் அவர்கள் பரக்குடையில்(parachute) குதித்து எழுந்தபோது.' | படிமப்புரவு: Rajarata, Flickr
       
      பிற்சேர்க்கை (2/6/2021):  
      உறுதிப்படுத்தப்பட்ட உயிரோடு உள்ள தமிழீழ வானோடிகள்:
      'இள பேரரையர்(லெப். கேணல்) முல்லைச்செல்வன் (குசந்தன் என்றால் பலருக்கும் தெரியும்)'

      '(நிலை தெரியாது) சுரேஸ் எ அச்சுதன்'
       
      உசாத்துணை:
      Air Tigers of LTTE Full Documentary with Video (Air Tigers of LTTE Full Documentary with Video) Dossier on ltte- pdf (read airforce section) YouTube /watch?v=PRecveMQQpc&list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w&index=12 http://dailymotion.om (http://dailymotion.om) (/video/x6x8v3z) Tiger aircraft rockets Palaly base, curfew in Jaffna Sri Lanka rebels say suicide air raids successful) Zlín Z-143 – Wikipedia (Zlín Z-143 – Wikipedia) (Navy Recovered a remote controlled air craft from Sea Tiger Boat (Update)) (Partially burnt 2 LTTE aircraft found in Puthukkudiyirippu- Mullaittivu) Hamilton, Dwight. "Terror Threat: International and Homegrown terrorists and their threat to Canada", 2007 ARF, PNP, RTF, RTR - What Does It All Mean? Seagull Cessna - Kits Ex-Sri Lankan navy chief describes how US helped destroy LTTE floating armories - NewsIn.Asia http://galledialogue.lk/assets/template/research_papers/2010/Prof_Rohan_Gunarathne.pdf வான் புலிகளின் சூரரைப் போற்று - ஜூட் பிரகாஷ் http://eelabarathi.blogspot.com/2006/07/blog-post_115435098311053391.html https://eelam.tv/watch/sky-tigers-aircraft-accessories-வ-ன-ப-ல-கள-zlin-z-143-propeller-aircraft-tires-flight-simulat_nNjn4vd8q28u2rJ.html http://sankathi24.com/news/ஒப்ரேசன்-டபிள்-எட்ஜ்-மடையுடைக்கும்-இரகசியங்கள்-14 http://sankathi24.com/news/ஒப்ரேசன்-டபிள்-எட்ஜ்-மடையுடைக்கும்-இரகசியங்கள்-19 படிமப்புரவு:
      Double vie de Prabhakaran Album n°5 EelamView Dossier on ltte- pdf ruupabaahini TV YouTube /watch?v=PRecveMQQpc&list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w&index=12) http://dailymotion.om (/video/x6x8v3z) Sri Lanka Guardian eelamtv.com தொகுப்பு & வெளியீடு
      நன்னிச்சோழன்
    • By நன்னிச் சோழன்
      "தோற்றிடேல், மீறி 
      தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"
      -நன்னிச் சோழன்
       
      எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!  
      விடுதலைப்புலிகளின் வான்புலிகளிடம் இருந்த மொத்த வான்பொல்லங்களின் (airstrip) எண்ணிக்கை 9.
      அவற்றின் அமைவிடங்கள் ஆவன..
      1) பனிக்கன்குளம் வான்பொல்லம்
      A9 சாலையின் மேற்குப் புறத்தில் அமைக்கப்பட்டிருந்தது
      கீல் கல்வீதிப்பாவு(Tarmacadam) நீளம்: 500m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m
       
      2) நிவில் பகுதி வான்பொல்லம்.
      B-69 பூநகரி பரந்தன் சாலையில் உள்ள நிவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
      கீல் கல்வீதிப்பாவு நீளம்: 200m

       
      3)அம்பகாமம் தென்கிழக்கு வான்பொல்லம்
      இரணைமடுக் குளத்திற்கு தென்கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
      கீல் கல்வீதிப்பாவு நீளம்: வடக்கில் இருந்து கிழக்காக 350m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 25m
       
      4) கேப்பாப்புலவு வான்பொல்லம்
      முள்ளியவளை நகரத்தின் மத்தியில் இருந்து 6.5 km மற்றும் முல்லைத்தீவு களப்பில் இருந்து தெற்காக 5 km தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
      மொத்த நீளம்: 2.5km
      கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.5km கீல் கல்வீதிப்பாவு அகலம்: 100m இவ்வான்பொல்லத்தில் வானூர்திகள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதற்கு 2 பறவாடி(Hangar) அமைக்கப்பட்டிருந்தன.

      பறவாடி:

      பறவாடி உட்புறம்:
       
      பறவாடியின் உறுப்புகளை விளக்கும் விளக்கப்படம்:

      படிமப்புரவு: dossier on ltte weapons. pdf
       



       
      5)அம்பகாமம் கிழக்கு வான்பொல்லம்
      இரணைமடுக் குளத்திற்கு கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது
      மொத்த நீளம்: 1.2km கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.2km கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m கட்டப்பட்டது: 2002-2003 ஆம் ஆண்டு
      'வான்புலிகளின் சிலின் 143 வானூர்தியில் இருந்து எடுக்கப்பட்ட படம்'
      புலிகளின் காலத்தில் எடுக்கப்பட்ட வான்பொல்ல நிகழ்படம்:
      https://eelam.tv/watch/அம-பக-மம-க-ழக-க-வ-ன-ப-ல-லம-ampakaamam-east-airstrip-ltte-sky-tigers-வ-ன-ப-ல-கள-ன-ஓட-ப-த_7FT2Zb82ojZSQbu.html
       
      6) அம்பகாமம் வடகிழக்கு வான்பொல்லம்
      இரணைமடுக் குளத்தின் வடகிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
      கீல் கல்வீதிப்பாவு நீளம்: 300m


       
      7)பிரபந்தனாறு வான்பொல்லம்
      மொத்த நீளம்: 2km கீல் கல்வீதிப்பாவு நீளம்: 350m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m கீல் கல்வீதிப்பாவு மொத்தம் 16 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது.

       
      நிலவரையில் (in maps) மேலே உள்ள வான்பொல்லங்கள் எண்வரிசையில் ….

       
       
      பிற்சேர்க்கை (08/12/2020): புலன கிட்டிப்பு(credit): புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan)
      மேலும் இரண்டு வான் பொல்லங்கள்(air strips) புலிகளின் வான்புலிகளிடம் இருந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.. இவை எதையும் சிறீலங்கா இராணுவம் கைப்பற்றும் வரை கண்டு குண்டு வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். அவையாவன..
      8 )புத்துவெட்டுவான் கிழக்கு வான்பொல்லம் 
      இது வான்பயிற்சிக் கூடமாக இருந்தது.
      கீல் கலவீதிப்பாவு நீளம்: 800 m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50 m 9)மன்னகண்டல் மேற்கு வான்பொல்லம்
      இது புதுக்குடியிருப்பு முத்தையன்கட்டு வீதியில் மன்னகண்டல் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
      கீல் கல்வீதிப்பாவு நீளம்: 650 m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 35 m  
      இவற்றில் வான்புலிகளின் தளமாக இயங்கியது இரண்டுதான். மீதி அனைத்தும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சில வான் பயிற்சிகளை மேற்கொள்ளவும் எதிரிகளை ஏமாற்றவும் வடிவமைக்கப்பட்டவை. இதில் சிறப்பு என்னவென்றால் இறுதிவரை இலங்கை படைத்துறை உண்மையான வான்பொல்லத்தை அடையாளம் கண்டு தாக்குதல்தல் நடத்தவே இல்லை! அத்தனை சிறப்பாக உருமறைக்கப்பட்டிருந்தன.
      புலன கிட்டிப்பு(credit): புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan), விடுதலைப் போராட்ட வீரர்
       
       
      "வானூர்திகள்... ஓட்டி வந்த
      வீரர்களை...ப் பார்த்துப் பார்த்து...
      விசிலடித்து... ஆடுகிறோம்...😎
      மாலைகளை...க் கழுத்தில் போட்டு😥"
      --குத்தாட்டம் போடுடா பாடலிலிருந்து.
      ---------------------------------------------
      உசாத்துணை:
      YouTube Sri Lanka troops seize rebel airstrip, refugees flee Troops capture LTTE's last airstrip in Mullaitivu Iranamadu Airport - Wikipedia https://idsa.in/TWIR/9_5_2008_SriLanka Strip ( படிமப்புரவு(Image courtesy)
      YouTube நிகழ்படம்(video)
      YouTube eelam.tv ஆக்கம் & வெளியீடு
      நன்னிச் சோழன்
    • By நன்னிச் சோழன்
      இரவு 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பில் இருந்து புறப்பட்ட விமானங்கள் ஏறத்தாள ஒரு மணிநேரத்தின் பின்னர் கொழும்பை அடையும் வரையிலும் அவற்றின் பாதைகளை கண்டறிந்து தாக்குவதற்கு சிறீலங்கா வான்படையினால் முடியாது போனதும், பெரும் சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. வான்புலிகளின் விமானங்கள் 300 அடி உயரத்திலும் குறைவான உயரத்தில் பறந்ததனால் வான்படை விமானங்களால் அவற்றை தாக்கமுடியவில்லை என படைத்தரப்பு கூறிவருகின்றது.
      வான்புலிகளின் இந்த உத்திகளால் வான்படையினாரின் ராடார் திரைகளிலும் விமானங்கள் தொடர்ச்சியாக அவதானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
      கொழும்பு வான்பரப்பை அடைந்த விமானங்களில் ஒன்று வான்படை தலைமையகத்தையும், மற்றயது கட்டுநாயக்கா வான்படை தளத்தினையும் தாக்க முனைந்துள்ளன.
      முன்னைய பறப்புக்களை போலல்லாது விமானங்கள் தமது இலக்கினை நோக்கி தாழ்வாக பறந்துள்ளன. இந்த பறப்புக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் எதிரியின் செறிவான பீரங்கி மற்றும் துப்பாக்கி சூடுகளில் அவை சிக்கி கொள்ளும் ஆபத்துக்கள் அதிகம்.சிறீலங்கா படையினர் கொழும்பின் அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பெரும்பாலான உயரமாக கட்டங்களில் எல்லாம் விமான எதிர்ப்பு பீரங்கிகளை நிறுவியுள்ளனர். ஹில்டன் ஆடம்பர விடுதியில் கூட அவர்களின் பீரங்கி நிலைகள் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று முன்னர் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
      கேணல் றூபன் ஒட்டிச்சென்ற விமானம் வான்படை தலைமையகத்திற்கு எதிராக உள்ள உள்நாட்டு வரித்திணைக்களத்தின் 12 ஆவது மாடிக்கும் 13 ஆவது மாடிக்கும் இடையில் மோதி வெடித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்த 210 கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்தின் தாக்கத்தினால் அந்த கட்டடத்தொகுதி பலத்த சேதமடைந்ததுடன், அருகில் இருந்த வான்படை தலைமையகம், ரான்ஸ் ஏசியா ஆடம்பர விடுதி என்பன உட்பட பல கட்டங்கள் சேதமைடந்துள்ளன. இருந்த போதும், வான்படை தலைமையகத்தை சூழவுள்ள அதியுயர் பாதுகப்பு வலையப்பகுதிக்குள் இருந்த நான்கு மாடி கட்டடம் ஒன்று முற்றாக தகர்ந்து போயுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் அரசின் இறுக்கமான ஊடகத்தடை காரணமாக இது தொடர்பான முழு தகவல்களையும் பெறமுடியவில்லை.
      இதனிடையே லெப். கேணல் சிரித்திரன் ஒட்டிச்சென்ற 905 இலக்கமுடைய சிலின்-143 விமானம் கட்டுநாயக்கா வான்படை தனத்தினை அண்மித்த போது சிறீலங்கா படைத்தரப்பு விமானத்தை நோக்கி ஏவுகணையை ஏவியிருந்தது. ஆனால் ஏவுகணையின் தாக்குதலில் இருந்து தப்பும் பொருட்டு விமானத்தின் இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்திவிட்டு வான்படை தளத்தினை நோக்கி விழ எத்தனித்த போது அருகில் இருந்த தென்னைமரம் ஒன்றில் விமானம் மோதியதனால் அது நிலை தடுமாறிய சமயம் துப்பாக்கி சூடுகளுக்கும் இலக்காகி உள்ளது.http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SaCppnNpP4I/AAAAAAAAE4Y/xRfnNemaFeQ/s400/abt.jpg
      12.7 மி.மீ கனரக இயந்திர துப்பாக்கி சன்னங்கள் விமானியின் இடது கரம் மற்றும் இடது மார்பு பகுதிகளை தாக்கியுள்ளன. அந்த விமானம் பின்னர் வான்படை தளத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள வளவு ஒன்றில் வீழ்ந்துள்ளது. விமானத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை அருகில் இருந்த நீர்த்தொட்டியில் மோதி வெடித்ததாக படை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
      விமானம் வீழந்த வேகத்தில் அதன் இயந்திரப்பகுதி முற்றாக சிதைந்த போதும் அதில் இருந்த வெடிமருந்துகள் வெடிக்கவில்லை. ஆனால் இந்த விமானம் வான்படை தளத்திற்குள் வீழ்ந்து வெடித்திருந்தால் பேரனர்த்தம் ஏற்பட்டிருந்கும் என வான்படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
      வான்புலிகளின் விமானங்கள் முன்னர் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குண்டுதுளைக்காத கவசதகடுகள் பொருத்தப்பட்ட நிலையில் தாக்குதலில் ஈடுபட்டதுடன், அவை 50 - 75 கிலோ குண்டுகளையும் சுமந்து வந்திருந்தன. ஆனால் தற்போது அதிக எடை கொண்ட குண்டுகளை கொண்டுவருவதற்கு ஏதுவாக அவர்கள் விமானத்தின் கவசத்தகடுகளை அகற்றியிருப்பதாக தாம் கருதுவதாக படைத்துறை தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.
      மேலும் கடந்த 20 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர்கள் கடந்த ஊதாகதிர்களை குழம்பும் சாதனங்கள்,ராடார் கதிர்களை குழப்பும் சாதனங்கள் போன்றவற்றை பயன்படுத்தவில்லை எனவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.
      இந்த தாக்குதல்களில் இருந்து படைத்தரப்பு தப்பி பிழைத்து கொண்ட போதும், அரசிற்கு இது பலத்த பின்னடைவாகும். விடுதலைப்புலிகளின் கதை முடிந்து வருவதாக அரசு தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகையில் சிறீலங்காவின் தலைநகரத்தினை சில மணிநேரம் வான்புலிகள் செயலிழக்க செய்தது அரசின் பிரச்சாரத்திற்கு பலத்த அடி என்பது மட்டுமல்ல சிறீலங்காவின் பொருளாதாரதிற்கும் இது பலத்த பின்னடைவை ஏற்படுத்த வல்லது.
      ஏற்கனவே வீழச்சி கண்டுள்ள உல்லாசப்பயணத்துறையை இது மேலும் பாதிப்பதுடன், முதலீட்டாளர்களையும் சிறீலங்காவை விட்டு விலகி நிற்கவே செய்யும். விடுதலைப்புலிகளுக்கு இருப்பதற்கே இடமில்லை என்ற தொனியில் அரசின் பிரச்சாரம் அமைந்திருந்த வேளையில் வான்புலிகள் எங்கிருந்து புறப்பட்டு வந்தார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
      இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக ஊடகம் ஒன்று விடுதலைப்புலிகளின் கதை முடியும் தறுவாயில் உள்ளதாக அரசு தெரிவித்து வருகின்ற போது மேற்கொள்ளப்பட்ட வான்புலிகளின் தாக்குதலின் பரிமாணம் பெரிதாகும் என தெரிவித்துள்ளது. வான்புலிகளின் விமானங்கள் ஒவ்வொன்றும் 210 கிலோ எடை கொண்ட அதிசக்தி வாய்ந்த வெடிமருந்தை காவிச் செல்லும் ஏவுகணைகளைவே தற்போது கருதப்படுகின்றன.
      அவை சிறீலங்காவின் தலைநகரத்தினை அடையும் வரை அரசினால் தடுக்க முடியாது போனது அரசிற்கும் பலத்த பின்னடைவு. தலைநகரத்தினை அடைந்த பின்னர் அவை எங்கு வீழந்தாலும் அரசிற்கு அது இழப்புத்தான். அவை படைத்துறை ரீதியாக இருக்கலாம், பொருளாதார ரீதியாக இருக்கலாம், அரசியல் ரீதியாக இருக்கலாம்.புதிதாக தோன்றியுள்ள இந்த அச்சுறுத்தல் தலைநகரத்திற்கு மட்டுமானது என அரசு நிம்மதி அடைந்துவிட முடியாது.
       
       
      கட்டுரைக்காலம்:  February 28, 2009
      - வேல்ஸிலிருந்து அருஸ்  
      நன்றி: ஈழமுரசு
       
    • By உடையார்
      எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்
       
      கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அருண் ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
      தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 22.10.2007 அன்று “எல்லாளன் நடவடிக்கை”யின் போது சிறிலங்காவில் உள்ள அனுராதபுர வான்படைத்தளத் தளத்தில் ஊடுருவி கரும்புலிகளும் – வான்புலிகளும் தகர்த்தழித்த வரலாற்றுச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அருண் ஆகிய 21 கரும்புலி மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

      தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும்.
      தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பாதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம்.
      தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை.
      அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமான நிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சூட்டுவிழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
      தமிழர் தேசம் தலைநிமிரச்செய்த இந்த காவிய நாயகர்களை என்றும் நெஞ்சில் சுடரேற்றி வணங்குவோம்.
            தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் தேசத்தின் புயல்கள்…

      தேசப்புயல்களின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களும், தமிழீழ தேசமும்…




      தமிழீழ இலட்சியக் கனவுகளுடன் வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு புயலான தேசத்தின் புயல்கள்…

      கரும்புலி லெப். கேணல் இளங்கோ
      அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது.
      வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலம் உள்ளே நுழைந்த படையணியில் அவனது தலைமையிலும் ஓரணி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் களமிறங்கியிருந்தது. கேணல் பால்ராஜ் தலைமையில் நிலையெடுத்திருந்த விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் பலமுனைகளில் முன்னேறிவந்த எதிரியுடன் கடும்சமர் இடம்பெற்றது.
      எதிரியின் கவசவாகனத்தைத் தாக்கி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை கைப்பற்றி, அதன்மூலம் எதிரியின் மீதே தாக்குதலை நடத்திய இளங்கோவின் வீரம் அன்று அந்தச் சமர்க்களத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்தது.
      விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம், பல்வேறு சிறப்பு பணிகளில் ஈடுபட்டவன். ஆனால் ஒவ்வொரு பணியிலும் அவனது முழுமையான ஈடுபாடு இருக்கும்.
      உள்ளகப் புலனாய்வுப்பணி தொடக்கம் ஊடுருவிதாக்குதல் வரை அவனது பணிகள் நீண்டவை. அவனது அந்த அனுபவங்களே எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பு அணியின் பொறுப்பாளனாக நியமிக்கப்படும் அளவுக்கு அவனைப் புடம்போட்டது.
      சிறப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறிய அணிகளே பொருத்தமானவை. அதன் மூலமே சாதகமான மறைப்பை பயன்படுத்தி எதிரிக்குப் பேரழிவைக் கொடுப்பதுடன் – நெருக்கடியான நிலைமைகளின் கீழ் – அணியை ஒழுங்கமைப்பதும் இலகுவானது.
      21 பேர் கொண்ட பெரிய அணியையும் அதற்குத் துணையான வேறு அணிகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டி பெருந்தலைவன் அளித்த பணியைச் சிறப்பாகவே அவன் முடித்து வைத்தபோது – சிங்கள தேசமே ஆட்டங்கண்டது.

      கரும்புலி லெப். கேணல் வீமன்
      பாலா அண்ணை ஊருக்கு வந்தால் இவன்தான் அவருக்கு மெய்ப்பாதுகாப்பாளன். தேசியத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவனை தலைவரேதான் பாலா அண்ணையின் பாதுகாப்பாளராக நியமித்தார்.
      மிக இளவயதில் போராட்டத்தில் இணைந்த வீமன் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப்பள்ளியில் கல்வி பயின்றான். 1995 இன் இறுதிக்காலப்பகுதியில் – யாழ்.குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றவென சிறிலங்காப்படைகள் மும்முரமாக முயன்றுகொண்டிருந்த காலப்பகுதியில் படைத்துறைப்பள்ளியிலிருந்து சிறப்பு இராணுவப் பயிற்சிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடரமுடியாத வண்ணம் போர் நிலைமைகள் மாறின. புலிகள் யாழ்.குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிக்கு வந்தபோது அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன.
      வன்னிக் காடுகளில் மாறிமாறி வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட வீமனும் அவனது அணியும் மீண்டும் தமது சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். பின்னர் வன்னியின் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த கேணல் வசந்தன் மாஸ்டரின் மேற்பார்வையில்தான் அப்போது வீமனும் அவனது அணியும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றனர். பல தற்காப்புக் கலைகள் உட்பட சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று அந்த அணி புடம்போடப்பட்டது.
      இந்நிலையில்தான் தலைவரின் மெய்ப்பாதுகாப்புப் பணியில் வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டான். வீமன் சிறந்த சமையலாளனாயும் விளங்கினான்.
      வீமன் பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டான். எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் வீமன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். பாலா அண்ணை வன்னிக்கு வருகை சந்தர்ப்பங்களில் வீமனே அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டான். அது யுத்தநிறுத்த காலப்பகுதியா அமைந்தபோதும் வீமனுக்கும் மற்றவர்களுக்கும் அது நிம்மதியான காலமன்று. அந்தக்காலப்பகுதியில் பாலா அண்ணையையும் தலைவரையும் தாக்குவதற்கென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் எதிரியின் நீண்டதூர ஊடுருவித்தாக்கும் அணிகள் வன்னிக்குள் நகர்ந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அந்நேரத்தில் புலிகளின் படையணிகள் முக்கிய சாலைகள் முழுதும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை வன்னியில் வாழ்ந்த மக்கள் நன்கறிவர்.
      அந்த இக்கட்டுக்குள்ளும் வீமனும் அவனது அணியும் தளராமல் பணியாற்றினார்கள். சரியான தூக்கமின்றி, உணவின்றி, ஓய்வின்றி தமது கடமையைச் செய்தார்கள். வீமன் மேல் கொண்ட நம்பிக்கையால்தான் தலைவர் வீமனை பாலா அண்ணையின் பாதுகாப்பாளனாக நியமித்தார்.
      பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்துகொண்ட வீமன் எல்லாளன் நடவடிக்கையில் இளங்கோவின் உதிவிப் பொறுப்பாளனாகத் தேர்வு செய்யப்பட்டான். கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து ஏனையோரோடு லெப்.கேணல் வீமனும் கண்மூடினான்.

      கரும்புலி லெப். கேணல் மதிவதனன்
      என்னேரமும் கலகலப்பாகவே இருப்பான். அவனது கலகலப்பும் துடியாட்டமும் எல்லோரிடமும் அவனை நெருக்கமாக வைத்திருந்தது.
      அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர் வெவ்வேறு பணிகளைச் செய்து இறுதியில் வந்து சேர்ந்தது கனரக ஆயுதப் பயிற்சியாசிரியனாக. சில விமான எதிர்ப்புப் பீரங்கிகள், கடற்சண்டைக்கான ஆயுதங்கள் என்பவற்றுக்கான பயிற்சியாளனாக இவன் தேர்வானான். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமாக இருந்த லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பயிற்சிக்கெனச் சென்ற இவனின் திறமை இறுதியில் இவனைப் பயிற்சியாளனாக்கியது.
      பின்னர் வன்னியின் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கருணாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த மதிவதனன் பின்னர் தனித்துப் பயிற்சியளிக்கும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டான். கருணாகரன் வேறு கடமைக்கென பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறியபின்னர் மதிவதனனே அவ்விடத்தையும் நிரப்பினான். தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் போராளிகள் பலரைத் திறம்பட வளர்த்துவிட்டவன் மதிவதனன். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்து எல்லாளன் சிறப்பு நடவடிக்கைக்கான அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். தரப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து ஏனையவர்களோடு தன்னையும் வெற்றிக்காக ஆகுதியாக்கிக் கொண்டான்.

      கரும்புலி மேஜர் இளம்புலி
      இம்ரான் பாண்டியன் படையணியில் மருத்துவப் போராளியாய் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தவன். இவனும் நல்ல கலகலப்பாகவும் துடியாட்டமாகவுமே இருப்பான். அனேகமான பயிற்சி முகாம்களில் மருத்துவப் போராளியாகப் பணியாற்றியிருந்தான். சில போர்க்களங்களில் இவனின் பங்களிப்பு மற்றவரிடையே இவனைப் பிரபலப்படுத்தியது.
      இவனது நீண்டநாள் விரும்பத்தின்படி கரும்புலிகள் அணியில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அந்நடவடிக்கையில் புலிக்கொடியோடு சென்று தான் நினைத்ததைச் சாதித்து வீரகாவியமானான்.
      இவர்களோடு…,

      கரும்புலி மேஜர் சுபன்
      என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன்,

      கரும்புலி மேஜர் காவலன்
      என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன்,

      கரும்புலி மேஜர் எழில்இன்பன்
      என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன்,

      கரும்புலி மேஜர் கனிக்கீதன்
      என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி,

      கரும்புலி கப்டன் தர்மினி
      என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா,

      கரும்புலி கப்டன் புரட்சி
      என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன்,

      கரும்புலி கப்டன் கருவேந்தன்
      என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார்,

      கரும்புலி கப்டன் புகழ்மணி
      என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன்,

      கரும்புலி கப்டன் புலிமன்னன்
      என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார்,

      கரும்புலி கப்டன் அன்புக்கதிர்
      என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார்,

      கரும்புலி கப்டன் சுபேசன்
      என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ்,

      கரும்புலி கப்டன் செந்தூரன்
      என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ்,

      கரும்புலி கப்டன் பஞ்சீலன்
      என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன்,

      கரும்புலி கப்டன் ஈழப்பிரியா
      என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி,

      கரும்புலி கப்டன் அறிவுமலர்
      என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா,

      கரும்புலி கப்டன் ஈழத்தேவன்
      என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன்,

      கரும்புலி லெப். அருண்
      என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
      நீளும் நினைவுகளாகி….



      தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
      “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
      https://thesakkatru.com/memorial-day-of-black-tigers-soldiers-who-died-in-the-operation-ellalan/
  • Topics

  • Posts

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.