Jump to content

சிறுமியின் சாபம் - Geethappriyan Karthikeyan Vasudevan


Recommended Posts

May be an illustration

1876- 1878 ஆண்டுகளில் மதுரை மிக மோசமான பஞ்சத்தை சந்தித்தது, எங்கள் பாட்டி வீடு 19 கீழ் அனுமந்தராயன் கோவில் தெருவில் 137 ஆம் வயதில் இன்னும் உள்ளது, இந்த தெருவில் மாற்றம் காணாத பழைய வீடென இது மட்டுமே எஞ்சியுள்ளது,
இந்த வீட்டிற்கு ஒரு துயரமான சாபம் உண்டு ,அது ஒரு சிறுமியின் சாபம்., நவராத்திரி சமயத்தில் பட்டுப்பாவாடை அணிந்து அக்கம் பக்கம் சுற்றி விளையாடிய சிறுமி அன்று நெல் களஞ்சியத்தின் கதவு திறந்து வைத்திருப்பதைக் கண்டதும் அதன் உள்ளே உள்ள உயரமான பானைகளில் ஒன்றில் சென்று ஒளிந்து கொள்கிறாள்,பின்னர் உறங்கியும் போகிறாள்.
 
மகாபஞ்சத்தின் எதிரொலியால் மக்கள் அந்தந்த பருவங்களில் என்ன உணவு தானியங்கள் கிடைக்கிறதோ? அதை வாங்கி சேர்த்து வைக்கத் துவங்கியிருந்த காலம் அது, அதற்கேற்ப குயவர்களிடம் சொல்லி இது போல பெரிய வஞ்சிகளை செய்து வீட்டின் தென்மேற்கிலோ வடமேற்கிலோ நிரந்தரமாக பதித்து வைத்து அதில் தானியங்களை நிரப்பி பல மாதங்கள் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சமையலறையில் வைத்து தினப்படி சமையல் உபயோகத்திற்கு நெல்லை குத்தி பொங்கியிருக்கின்றனர்.
 
எங்கள் தாத்தாவின் அப்பா சோழவந்தானில் இருந்து மதுரை டவுனுக்குள் வந்து இந்த திண்ணை வைத்த காரை வீட்டை கட்டி ஐந்து சிறிய போர்ஷன்கள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார், அவரின் மகள் தான் இந்த பட்டுப்பாவாடைச் சிறுமி ,அன்று சோழவந்தானில் இருந்து குத்தகைக்காரர் மாட்டு வண்டியில் நெல் கொண்டு வந்து படியளந்திருக்கிறார் , அவர் வந்து நிரப்புவதற்கு தோதாக வாசல் பக்கம் இருந்த தானிய கிடங்கு கதவை அன்று திறந்து வைத்திருக்கிறார் தாத்தா, நெல் படியளப்பவர், உமிக்கு தப்புவதற்காக கண்கள் மட்டும் சிறிதாக தெரியும் படி காதுகளைக்கூட துண்டால் இறுக்க கட்டிக்கொண்டு நெல்லை மரக்காலில் அளந்து கொட்டி நிரப்பியிருக்கிறார், காதுகளை துண்டால் மூடியிருந்தபடியால் அவருக்கு சிறுமியின் வீறிடல் கேட்கவில்லை, காலையில் பால் குடித்து விளையாடப் போனச் சிறுமியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, ஐநூறு அடியில் உள்ள மீனாட்சி கோயில் பிரகாரம், திருப்பாவை மண்டபம், நன்மை தருவார் கோவில், ஆடிவீதி,வளையல்காரத்தெரு, ஆயிரங்கால் மண்டபம், முழுக்க சல்லடை போட்டு தேடிவிட்டனர், கிடைக்கவில்லை, யாராவது பிள்ளை பிடிப்பவர்கள் பிடித்துப் போயிருக்க வேண்டும், அல்லது வடக்கே இருந்து இராமேஸ்வரம் வந்தவர்கள் சிறுமியை கண்டெடுத்து தூக்கிப் போயிருக்க வேண்டும் என நினைத்திருந்திருக்கின்றனர்.
 
இந்த நான்கு பானைகளில் இருந்த நெல்லை வடமிருந்து இடமாக எடுத்தாண்டு வந்திருக்கிறார் தாத்தாவின் அம்மா, அந்த மூன்று பானைகள் தீர ஒன்பது மாதங்களாக , இந்த நான்காவது பானையில் இருந்து நெல்லை எடுத்தாளத் துவங்குகிறார், இந்த வஞ்சியில் இருந்து நெல் தீர மூன்று மாதங்கள் ஆகிவிடுகிறது, அடுத்த நவராத்திரியே வந்து விடுகிறது, கடும் மழையால் நெல்லில் ஈரம் பாய்ந்ததால் பத்து படி நெல் மீதம் இருப்பதை என் தாத்தா சிறுவன் அவரை உள்ளே இறக்கி அள்ளித் தரச் சொல்லியிருக்கிறார், அவர் அள்ளுகையில் நெல் உமி வாடையுடன் சேர்ந்து கெட்ட நாற்றம் கிளர்ந்து எழ,அவர் மேலே ஏறி வந்துவிடுகிறார், இவர்கள் ஏதோ பெருச்சாளி இறந்திருக்கலாம் என்று நினைத்து சுத்தம் செய்ய ஆளை வரவழத்து எஞ்சிய நெல்லை வார, அங்கே பட்டுப்பாவாடையில் சுற்றியபடி எலும்புக்கூட்டை வெளியே எடுத்திருக்கின்றனர், எங்கள் பாட்டிக்கு மயக்கமாகி விழுந்துவிட்டார்,ஆணோ பெண்ணோ புத்திர சோகம் மிகவும் கொடியது, ஏற்கனவே நடைபிணமாக இருந்தவர்கள் நொடிந்து தான் போயினர்,கன்னியா சிறுமியாக இறந்து போனதால் எந்த காரியமும் கிடையாது, என்றாலும் அந்த மூச்சு முட்டி இறந்த மரணம் இவர்களை காலத்துக்கும் நெஞ்சில் ரணமாக வேதனைப்படுத்தியிருக்கிறது.
 
எங்கள் பாட்டி இந்த அறைக்கு மேலே மச்சில் வைத்து தன் கையில் கிடத்தி இரவு தூங்க வைக்கையில் எத்தனையோ கதை சொன்னாலும், இந்த துயரக்கதையை மட்டும் சொன்னதில்லை,அவர் பார்க்காத ஒரு நாத்தனாருக்கு அவருக்கு எப்போதும் ஒரு வாஞ்சையும் பயமும் இருந்தது, வீட்டில் எந்த சுபகாரியம் நடந்தாலுமே அவர் ஒரு ஐந்து வயது சிறுமிக்கு பட்டுப்பாவாடை தைத்து அணிய வைத்து இலையில் அமர்ந்து சாப்பிடச் செய்வார், எங்கள் அத்தை பாட்டி இப்படி கன்னியா சிறுமியாக இறந்து போனதால் அவருக்கு எப்போதும் நவராத்திரிக்கு கொலு வைக்கத் தோன்றியதில்லை.
 
மதுரையில் கொலு மிகவும் விசேஷமானது, அந்நாட்களில் பதினோரு படிகள் கொலு வைத்த வீடுகள் எல்லாம் பார்த்துள்ளேன், எங்கள் ஸ்டோரில் மீனாட்சி அம்மன் கோவிலில் குருக்களாக இருந்த ஐந்து குடும்பங்கள் வசித்தனர், அவர்கள் வீட்டில் நவராத்திரி அப்படி களைகட்டும், எங்கள் வீட்டில் கொலு வைக்காதது ஏன் என எத்தனை முறை கேட்டும் அவருக்கு இந்த உண்மையைச் சொல்ல வார்த்தைகளில்லை, எங்கள் பாட்டி தாத்தாவுக்கு என் அம்மா மூன்றாம் குழந்தை, அவருக்கு ஒரு மூத்த சகோதரி , ஒரு சகோதரர் உண்டு, இம்மூவருக்கு முன் ஏழு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன, இராமேசுவரம் சென்று திலஹோமம் செய்து தான் அதன் பின் பிறந்த குழந்தைகள் பிழைத்து நின்றிருக்கின்றனர்.
பின்னாட்களில் அந்த நெல்வஞ்சியை துக்க மிகுதியால் இடித்துப்போட்டு விட்டார் என் தாத்தா , அந்த இடத்தில் முன்பு 85 ஆம் ஆண்டு வரை ஒரு லாண்டரி கடை வாடகைக்கு விடப்பட்டு இருந்தது, பின்னாளில் அக்கடையை பெரும் தொகை தந்து காலி செய்த என் சிறிய தாய்மாமா டெய்லர் கடை துவங்கினார், அது செழிக்கவில்லை,
அதனை ஒட்டி இருந்த கடைப்பரப்பில் மதுரையின் பெரிய custom order டெய்லர் கடை இயங்குகிறது, என் முதல் தாய்மாமா மற்றும் நடு தாய்மாமாவிடமிருந்து மற்றவர்கள் சம்மதம் இல்லாமல் வாங்கிய பாகங்கள் அந்த சிறுமி சாபம் கொண்ட நெல்வஞ்சி அனைத்தும் இன்று அந்த மேற்படியான் வசம் போய்விட்டது,
என் சிறிய தாய் மாமாஅருமையானகதைசொல்லி, அவர் ஆல்பாஸ் காலம் துவங்குவதற்கு முந்தைய எட்டாம் வகுப்பு,எந்த கதையை அவர் மதுரை பாஷையில் சொன்னாலும் அப்படி கேட்கலாம், அக்கம் பக்கம் கூட்டம் கேட்கிறதென்றால் அவருக்கு குஷி அதிகமாகிவிடும், இன்னும் சத்தமாக கதை சொல்வார், அடுத்த முறை பார்க்கையில் அவர் முன்பு சொன்ன அதே கதையை அதே போல துவக்கி அதே போலவே முடிப்பார், ஒரு வார்த்தை அதிகம் ஒரு வார்த்தை குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.
 
அவர் சொன்ன கதைகள் ஒவ்வொன்றாக எழுதி ஆவணப்படுத்த எண்ணமுள்ளது.
 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆழத்தில் புதைந்த சிறுமி........ஆழ்ந்த சோகம் கொண்ட கதை.....!

நன்றி நிழலி .....!

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அப்பாடா வெய்ட் பண்ணிக்கொண்டிருந்த வெளியுறவுக் கொள்கை மற்றும் கையாளும் உத்திகளை கொண்ட ஆய்வாளர்களுக்கு ஒரு துப்பு கிடைத்து விட்டது! இனி யென்ன தரனன்ன தரனன்னா தான்👀
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்   பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, ஜெஃப் பெசோஸ் கொரோனா பெருந்தொற்று, உலக பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியுள்ளது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான மக்களை வறுமையின் கோரப் பிடியில் தள்ளியிருக்கிறது என ஆக்ஸ்ஃபாம் (Oxfam) அமைப்பு தன் அறிக்கையில் கூறியுள்ளது. மார்ச் 2020 முதல், உலகின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது. பொதுவாக, டாவோஸ் நகரத்தில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தின் தொடக்கத்தில், ஆக்ஸ்ஃபாம் தன் உலகளாவிய சமத்துவமின்மை குறித்த அறிக்கையை வெளியிடுகிறது. அந்த நிகழ்வில் பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பிரசாரகர்கள், பொருளாதார வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கானவர்கள் சுவிஸ் ஸ்கை ரிசார்ட்டில் குழு விவாதங்கள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்காகக் கூடுகிறார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக இக்கூட்டம் இரண்டாவது ஆண்டாக இணையத்தில் நடத்தப்படுகிறது. கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் பணத்தை மேஜையில் கொட்டிய பா.ஜ.க பிரமுகர் ஆன்லைன் மோசடி: பணத்தை இரட்டிப்பாக்க ஆசைப்பட்டு ஏமாற்றப்பட்ட கிராம மக்கள் தொற்றுநோய், தடுப்பூசி, ஆற்றல் ஆகியவற்றின் எதிர்கால பாதை ஆகியவை குறித்து இந்த வாரம் விவாதிக்கப்பட உள்ளது. ஆக்ஸ்ஃபாம் கிரேட் பிரிட்டனின் முதன்மைச் செயல் அதிகாரி டேனி ஸ்ரீஸ்கந்தராஜா, பொருளாதார, வணிக மற்றும் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் டாவோஸ் நகரத்தில் நடக்கும் கூட்டத்தோடு ஒத்துப்போகும் வகையில், அறிக்கை வெளியிடப்படுவதாகக் கூறினார். "இந்த ஆண்டு, என்ன நடக்கிறது என்பது முக்கியமில்லை," என்றும் அவர் கூறினார். "இந்த பெருந்தொற்று காலத்தில், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கோடீஸ்வரர் உருவாக்கப்பட்டுள்ளார். மறுபக்கம் உலக மக்கள் தொகையில் 99% பேர் பொதுமுடக்கம் காரணமாக மோசமான பிரச்னைகளை எதிர்கொண்டனர். குறைந்த அளவிலான சர்வதேச வர்த்தகம், சரிந்த சர்வதேச சுற்றுலா ஆகியவற்றின் காரணமாக மோசமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் விளைவாக 16 கோடி மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர்" "நம் பொருளாதார அமைப்பில் ஏதோ ஆழமான குறைபாடு உள்ளது," என்று அவர் கூறினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, பாலின சமத்துவமின்மை ஆக்ஸ்ஃபாம் தொண்டு நிறுவனம் மேற்கோள் காட்டிய ஃபோர்ப்ஸ் புள்ளிவிவரங்களின்படி, ஈலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பத்தினர், பில் கேட்ஸ், லாரி எலிசன், லாரி பேஜ், செர்ஜி பிரின், மார்க் ஸுக்கர்பெர்க், ஸ்டீவ் பால்மர் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோர் தான் உலகின் டாப் 10 பணக்காரர்கள். மார்ச் 2020 மற்றும் நவம்பர் 2021க்கு இடையில் அவர்களின் சொத்துகள் 700 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்திருந்தாலும், அவர்களுக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. ஈலோன் மஸ்கின் சொத்து மதிப்பு, மேலே குறிப்பிட்ட காலத்தில் 1,000 சதவீதத்துக்கும் அதிகமாக வளர்ந்துள்ளது, அதே நேரத்தில் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 30% உயர்ந்துள்ளது. உலகப் பணக்காரர்களின் செல்வம் பொதுவாக அவர்களது பங்குகளோடு தொடர்புடையதாக உள்ளது. கடந்த மார்ச் 2020ல் பங்குச் சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்தது, அங்கிருந்து இந்த அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொற்றுநோய் தொடங்குவதற்கு சற்று முன்பிருந்து ஆக்ஸ்ஃபாம் சொத்து மதிப்பை கணக்கிட்டிருந்தால் கூட, வளர்ச்சி குறைவாகவே இருந்திருக்கும். "2020 பிப்ரவரி மத்தியில் நீங்கள் கோடீஸ்வரர்களின் செல்வத்தை எடுத்துக் கொண்டால் கூட, உலகின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பின் உயர்வு 70 சதவீதமாக இருந்திருக்கும். அப்போதும் அது வரலாறு காணாத மிகப் பெரிய உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு வளர்ச்சியை நாம் இதற்கு முன் கண்டதில்லை என பிபிசியிடம் கூறுகிறார் அவ்வறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான மேக்ஸ் லாசன்.   பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, இந்திய கரன்சி உலக வங்கியின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸ்ஃபாமின் அறிக்கை, சுகாதாரம், பசி, பாலின அடிப்படையிலான வன்முறை, காலநிலை பிரச்னை ஆகியவை காரணமாக ஒவ்வொரு நான்கு நொடிகளுக்கும் ஒரு மரணத்திற்கு பங்களித்ததாகக் கூறுகிறது. கொரோனா தொற்றின் தாக்கம் இல்லாமல் இருந்ததை விட, 16 கோடி மக்கள் ஒரு நாளைக்கு 5.50 டாலருக்கும் குறைவான பணத்தோடு வாழ்கின்றனர் என்கிறது அவ்வறிக்கை. உலக வங்கி நாள் ஒன்றுக்கு $5.50 டாலர் என்பதை உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வறுமையின் அளவீடாகப் பயன்படுத்துகிறது. பெருந்தொற்று, வளரும் நாடுகளின் கடன்களை அதிகரிப்பதால், சமூக செலவீனங்களைக் குறைக்க கட்டாயப்படுத்துகிறது. பாலின சமத்துவம் பின்தங்கியுள்ளது, 2019ஆம் ஆண்டில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண்களை விட 1.3 கோடி பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பள்ளிக்குச் மீண்டும் திரும்ப முடியாத அபாயத்தில் 200 லட்சம் பெண் குழந்தைகள் உள்ளனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் இன ரீதியிலான சிறுபான்மையினர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் பிரிட்டன் மற்றும் வங்கதேசமும் அடக்கம். அமெரிக்க கருப்பின மக்களும் அடக்கம். உலகளாவிய நெருக்கடியின் போது கூட, நம் நியாயமற்ற பொருளாதார அமைப்புகள் பணக்காரர்களுக்கு சாதகமாகவும், ஏழைகளைப் பாதுகாக்கவும் தவறுகிறது" என்று ஸ்ரீஸ்கந்தராஜா கூறினார். "நாம் சென்று கொண்டிருக்கும் மோசமான பொருளாதாரப் பாதையை மாற்ற" தைரியமான பொருளாதார முடிவுகளை எடுக்க அரசியல் தலைவர்களுக்கு இப்போது ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார். கொரோனா தடுப்பூசிகளின் அறிவுசார் சொத்துரிமைகளை விலக்கிக் கொண்டு, பரந்த உற்பத்தி மற்றும் விரைவான விநியோகத்தை செயல்படுத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளது ஆக்ஸ்ஃபாம். இந்த மாத தொடக்கத்தில், உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், உலகளாவிய சமத்துவமின்மை அதிகரித்து வருவது, பணவீக்கத்தின் தாக்கம் மற்றும் அதைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் ஏழை நாடுகளுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று வாதிட்டார். "பலவீனமான நாடுகளுக்கான கண்ணோட்டம் இன்னும் மேலும் மேலும் பின்தங்கியுள்ளது," என்றும் அவர் கூறினார். https://www.bbc.com/tamil/global-60031638
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.