Jump to content

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்கிறேன் – குமரன் பத்மநாதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்கிறேன் – குமரன் பத்மநாதன்

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்பதாக தெரிவித்த அவர், இந்த வாய்ப்பை நழுவவிடாமல் படிப்படியாக கைகோர்த்து பயணிக்க வேண்டும் என புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்த காலத்தில் தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்த போது தன்னிடம் எந்த சொத்தையும் புலிகள் வழங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார். அவ்வாறு சொத்து இருத்திருந்தால் இந்த அழிவில் இருந்து மக்களை காப்பாற்றி இருப்பேன் என கிளிநொச்சி – செஞ்சோலையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)

 

 

http://www.samakalam.com/புலம்பெயர்-தமிழ்-மக்களுக/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளையும் கோத்தா போட்டு தள்ளியிட்டார்  என்றார்கள் ஆள் இருக்கிறார் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

இறுதி யுத்த காலத்தில் தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்த போது தன்னிடம் எந்த சொத்தையும் புலிகள் வழங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார்

சாதாரண அரசியல் கைதிகள் இன்னும் சிறையில் விடிவிற்காக காத்திருக்க, இவர்மட்டும் எப்படி வெளியில் சுதந்திரமாய் இருந்து கருத்து வெளியிடுகிறார்? அன்றைய காலகட்டத்தில் எதிர்க்கட்ச்சிகள் இவரிடம் இருந்து பெற்ற பணத்திற்கு என்ன நடந்தது?  இவரிடம் இருந்து பெற்ற பணத்திற்காகவே இவரை தண்டனையில்லாமல் வெளியே விட்டிருக்கிறார்கள் என்று கேள்வியும் எழுப்பியிருந்தனர். எல்லாம் திட்டம் போட்டு வலையில் விழுந்துவிட்டு, இப்போ பரம சாதுபோல் கதைக்கிறார் இவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல்யமான புலி தலைவர்கள் (சரணடைந்தவர்கள்) இன்று வரை எங்கே என்று தெரியாது. அண்ணை மட்டும் தானாய் பிடி படுகிறாராம். தானாய் கருத்து சொல்கிறாராம். 

 

இவர் புலிகளின் பணத்தை கோத்தபாயவிடம் கொடுத்து உயிர்பிச்சை எடுத்துள்ளார். புலிகளை றோவுக்கு காட்டியும் கொடுத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை, அவை இருந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருப்பேன் – கேபி

புலிகளால்... எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை, அவை இருந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருப்பேன் – கேபி

யுத்தம் முடிவடைந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் தனக்கு எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை என புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – செஞ்சோலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இறுதி யுத்த காலத்தில் தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்த போது தன்னிடம் எந்த சொத்தையும் புலிகள் வழங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

அவ்வாறு சொத்து இருத்திருந்தால் இந்த அழிவில் இருந்து மக்களை காப்பாற்றி இருப்பேன் என்றும் குமரன் பத்மநாதன் குறிப்பிட்டார்.

இதேவேளை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்பதாக தெரிவித்த அவர், இந்த வாய்ப்பை நழுவவிடாமல் படிப்படியாக கைகோர்த்து பயணிக்க வேண்டும் எனவும் என்றும் தெரிவித்தார்.

https://athavannews.com/2021/1243792

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிகளையும், கருத்து தெளிவு இல்லாதவர்களையும், தன்மானம் அற்றவர்களையும், பாசாங்கு அரசியல் வித்தைகளை செய்யும் அரசியல் அயோக்கியர்களும் உங்களை போன்றோரை நம்புவார்கள்.


அதோட உங்களின் தொழில் ரகசியத்தை சொன்னால் நம்புவார்கள் முடிந்தால் தெரியப்படுத்துங்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்பொழுது கே பியை ஏச வேண்டும்? அவர் தன்னல் முடித்ததை சிறுவர் இல்லத்தில் இருந்து செய்கின்றார் 
இவர் குப்பி கடித்திருந்தால் தியாகியாக்ப்படிருப்பாரா? வெளினாட்டில் புலிகளின் சொத்துக்களை ஆட்டையை போட்டவர்கள் காரில் போகும் போது ஏன் தட்டிக் கேட்க கூடாது? 

இப்படி எழுதுவதனால் நான் சிங்கள்வனுக்கு சப்போர்ட் அல்ல‌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

ஏன் இப்பொழுது கே பியை ஏச வேண்டும்? அவர் தன்னல் முடித்ததை சிறுவர் இல்லத்தில் இருந்து செய்கின்றார் 
இவர் குப்பி கடித்திருந்தால் தியாகியாக்ப்படிருப்பாரா? வெளினாட்டில் புலிகளின் சொத்துக்களை ஆட்டையை போட்டவர்கள் காரில் போகும் போது ஏன் தட்டிக் கேட்க கூடாது? 

இப்படி எழுதுவதனால் நான் சிங்கள்வனுக்கு சப்போர்ட் அல்ல‌

நல்ல கேள்விகள், ஆனால் பிழையான இடத்தில் கேட்கிறீர்கள்!

புலம் பெயர் நாடுகளில் இன்னும் சொத்துக்களைப் பதுக்கி வைத்திருப்போரைப் பற்றிப் பேசினால் இங்கே சில உறுப்பினர்களுக்கு அலர்ஜியாகி விடும்!

ஆனால்,  சிறிதளவாவது நல்ல காரியம் செய்து கொண்டிருக்கும் கே.பி யைத் திட்ட வரிசையில் வருவர்! அங்க நிக்கிறான் எங்கள் புலம்பெயர்ந்த தமிழன்!😎

Link to comment
Share on other sites

17 hours ago, satan said:

அன்றைய காலகட்டத்தில் எதிர்க்கட்ச்சிகள் இவரிடம் இருந்து பெற்ற பணத்திற்கு என்ன நடந்தது? 

இவ்வளவு உறுதியாக இப்படி பணம் மாற்றப்பட்டது பற்றி நீங்கள் எழுதுவதால் எனக்கு வரும் சத்தேகம் அந்த பணத்தை ஏப்பம் விட்டவர் நீங்களோ அல்லது உங்கள் உறவினரா என்பதாகவே இருக்கிறது. இதனை ஆதாரத்துடன் உங்களால் மறுக்க முடியுமா? நீங்கள் மறுக்க முடியாது என்பதே எனது முடிவு.

17 hours ago, kalyani said:

இவர் புலிகளின் பணத்தை கோத்தபாயவிடம் கொடுத்து உயிர்பிச்சை எடுத்துள்ளார். புலிகளை றோவுக்கு காட்டியும் கொடுத்துள்ளார்.

இந்த புலிகள் பணத்தை கையாண்டதில் உங்கள் பாகத்தையும் எழுதுங்கள்.

12 hours ago, MullaiNilavan said:

அதோட உங்களின் தொழில் ரகசியத்தை சொன்னால் நம்புவார்கள் முடிந்தால் தெரியப்படுத்துங்கள்.
 

அவரின் தொழில் இரகசியத்தை கேட்பதில் இருந்து வெளியாவது நீங்களும் அந்த தொழில் செய்வதாகவே தெரிகிறது.

6 hours ago, Justin said:

புலம் பெயர் நாடுகளில் இன்னும் சொத்துக்களைப் பதுக்கி வைத்திருப்போரைப் பற்றிப் பேசினால் இங்கே சில உறுப்பினர்களுக்கு அலர்ஜியாகி விடும்!

அதற்கான காரணம் இந்த அலர்ஜியாபவர்கள் அந்த பதுக்கலில் பங்காளிகளாக இருப்பதே. அதில் சந்தேகமே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கற்பகதரு மற்றவர்களிடம் ஆதாரம்  கேட்கும் தாங்கள் அந்த கனடா விசயத்தை மறந்திட்டீங்க

கேபி என்ன செய்தார் என்பது வெள்ளிடை மலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேபியின் தகவல்கள் மூலம் புலிகள் பயன்படுத்திய பல கப்பல்கள் இலங்கை துறைமுகம்வரை இழுத்து வரபட்டபோதே அனைத்துமே தெளிவாகிவிட்டது புலிகள் சொத்து தொடர்பான விஷயங்களில் என்னதான் முடிவில் ராஜபக்ச சகோதரர்களுக்கும் கேபிக்கும் இடையில் நடந்திருக்கும் என்பது.

இறுதி போரின் பின்னர் புலிகளின் சார்பில்  கேபி வசமிருந்த   பெரும் பண பரிமாற்றங்கள் அனைத்தும் ராஜபக்ச குடும்பம் பக்கம் திருப்பிவிடப்பட்டுவிட்டது, அதற்கு சன்மானமாகவே கேபியின் உயிர் விட்டு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை பாமரனும் அறிவான்.

இது தவறா சரியா என்பதுக்கான விவாதம் எல்லாம் நடத்த முடியாது, சூழ்நிலை கைதியாக ஆகிவிட்ட ஒரு மனிதன் இப்படித்தான் இருப்பான்.

சூழ்நிலை கைதியாக இல்லாமல் இருந்தபோதே ராஜபக்ச குடும்பம் உட்பட்ட சிங்கள ஆதிக்கவாதிகளுடன் கைகோர்த்த முன்னாள் புலி தளபதிகளைவிட கேபி ஒன்றும் அவ்வளவாக பெரிய குற்றம் செய்துவிட்டதாக தெரியவில்லை.

புலிகள் எனும் இயக்கம் முளைவிட தொடங்கியபோது அதை வீரம் பொருளாதாரம் ஆயுத கொள்வனவு என்று  முக்கோண வடிவில் தாங்கியவர்கள் மூவர்.

தலைவர் ஒன்று என்றால், எம்ஜிஆர் அடுத்தது, மற்றையது கேபி.

மட்டுவிலிருந்து மணலாறு வழியாக இயக்கம் முல்லைதீவுவரை வந்த பாதையை எல்லாம் சிங்களவருக்கு போட்டு கொடுத்து,

தலைநகரிலிருந்த புலிகளின் புலனாய்வு கட்டமைப்புகளையெல்லாம் காட்டி கொடுத்து,

பிரிந்து சென்றபோது பல்லாயிரம் ஆயுதங்களை தீமூட்டி கொழுத்தி,

ஒரு இயக்கத்தின் சாம்ராஜ்ஜியத்தையே சின்னா பின்னமாக்கிய புலிகளின் முன்னாள் தளபதிகளைவிட கேபி ஒப்பீட்டளவில் அப்படியொன்றும் பெரிதாய் துரோகமிழைத்ததாய் நினைக்கவில்லை.

குதிரைகள் ஓடிவிட்டன இனி லயன்களை பூட்டி பயன் இல்லை .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேபியின் துரோகம் கருணாவின் துரோகத்திற்கு சற்றும் குறைந்ததல்ல. இவர் சிங்களத்திடம் சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்தது கனடாவிலுள்ள ஒருவரே. வெளிநாட்டுக் கட்டமைப்புக்கள் எல்லாவற்றிலும் சிங்கள இந்திய முகவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததற்கு இவர்கள் இருவருமே காரணம்.

நாடுகடந்த அரசை பின்னால் இருந்து இயக்குவது இவர்கள் இருவருமே. உருத்திரகுமாரன் வெற்று முகமூடி மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

@கற்பகதரு மற்றவர்களிடம் ஆதாரம்  கேட்கும் தாங்கள் அந்த கனடா விசயத்தை மறந்திட்டீங்க

கேபி என்ன செய்தார் என்பது வெள்ளிடை மலை. 

Escape GIF - Escape Bye Moving Out - Discover & Share GIFs

இந்த ஆதாரத்தை.... கேட்டவுடன், அவர்  "எஸ்கேப்" ஆயிடுறார்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கற்பகதரு said:

 

இந்த புலிகள் பணத்தை கையாண்டதில் உங்கள் பாகத்தையும் எழுதுங்கள்.

 

நீங்கள் இப்ப தான் பிறந்து இருக்கிறீர்கள் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கற்பகதரு said:

அவரின் தொழில் இரகசியத்தை கேட்பதில் இருந்து வெளியாவது நீங்களும் அந்த தொழில் செய்வதாகவே தெரிகிறது.

நாங்களும் அவற்றை தொழில் தான் முதல்ல செய்தம். அவரை நம்பியும் இருந்தோம்.

ஐயா நடேசன் மே 16ஆம் தேதி அவரை சர்வதேச பொறுப்பாளராக நியமிக்கும்போது பொங்கியும் இருந்தோம்.

எங்களிடம்  குறையே தகவல்களை சரி பார்ப்பதும் இல்லை, பரந்துபட்ட  ஆய்வுகளை மேற்கொள்வதும் இல்லை. அதுவே பின்னாளில் எங்களின் தோல்விக்கு   காரணமாகப் போய்விட்டது.

எல்லாத்தையும் நம்புவது.

 "நான்" முதன்மை பெற்று "செய்வேன்", "முடிப்பேன்", "நடத்துவேன்" ,"வருவேன்", "போவேன்", "வெல்வேன்".

 

இந்த இடத்தில் அவதானம் வேண்டும். என் தாய்மொழி கூறுகிறது/  சொல்கிறது  "ஏன்"  என்பது சுட்டி நிற்கும்.

வினாவைத் தோற்றுவிக்கும், பதிலைத் தரும்.

நாங்கள் கற்றுக் கொண்டது.

ஆனால்,

"செய்வோம்"  "முடிப்போம்" "நடத்துவோம்" "வருவோம்" "போவோம்" "வெல்வோம்".

 தமிழ் சொல்கிறது "ஓம்" சுட்டி நிக்கும். அங்கே பல பேர்  கருத்தும் வந்து மோதும், தெளிவு பிறக்கும், விடை கிடைக்கும்.

அங்கே "ஏன்" அங்கே இழுத்துச் சென்றது.

 "ஓம்" வலுவிழந்தது, நாதியற்று கிடந்தது. தற்பொழுது கவனிப்பாரற்று,  பிழைப்பு / உழைப்பு வாதம் செய்ய அவ்வபோது துளிர்விடுகிறது  மீண்டும் கருகி போய்விடுகிறது.

 இதையே அந்நாளில் "ஓம"ன சொல்லிவந்த பிராமணன் கோயிலில் வரிசையாய்நிற்க வைக்கிறார்கள்.

நாங்கள் எப்படி அதை நம்பினோம்? இப்பவும் இப்படி நம்பி கதைகள், கட்டுரைகள் எழுதுகிறோம்.

தாய்மொழி எங்களைப் பார்த்து சிரிக்கிறது, தமிழ்மொழி சொல்லுகிறது வரலாறு. ஆனால் உணர தெரியவில்லை. எல்லாம் எங்கள் தலையெழுத்து.

உணராத வரைக்கும் அவர்கள் காடுகளில் நல்ல மழை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச பொறுப்பாளராக கே. பி அவர்களை நியமித்தது நடேசன் அவர்கள் என்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் மூலம அந்த நியமனம் கிடைக்கவில்லையா?

கே.பியை விட அனுபவம், திறமை, ஆளுமை, நேர்மை, ஊக்கம் கொண்ட பல தலைவர்கள் யாழ் கருத்து களத்திலேயே உள்ளார்கள் போல் தோன்றுகின்றது. ஆனால், மக்கள் பிரச்சனைகள்தான் தீர்ந்தபாடில்லை.

அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து விட்டது இலங்கையில். இப்போது உரிமை இல்லாமல் அபிவிருத்தி தேவை இல்லை என்று ஓர் புது கோசமும் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நடத்துங்கள்.

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகளின் சொத்துக்கள்?

நீண்ட காலத்திற்கு பின்னர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் பேசியிருக்கின்றார். விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்பில் ஊடகவிலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, எந்தவொரு சொத்தும் என்னிடமில்லை. அவர்கள் (விடுதலைப் புலிகள் அமைப்பு) எவ்வாறான சொத்துக்களை விட்டுச் சென்றனர் என்று எனக்கு தெரியாதென்றும் அவர் பதிலளித்திருக்கின்றார்.

12 வருடங்களுக்கு முன்னர், 2009 ஓகஸ்ட் மாதம், கே.பி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வைத்து, கைதுசெய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது, பல சர்வதேச ஆங்கில ஊடகங்களில், விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்றே செய்திகள் வெளியாகிருந்தன.

ஒரு வேளை, கே.பி வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்திருந்தால், அவர் உண்மையிலேயே விடுதலைப் புலிகளின் புதிய தலைவராகத்தான் இருந்திருப்பார். இன்றிருக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்திருக்கும். ஏனெனில் கே.பிக்கு உத்தரவிடக் கூடியளவிற்கு வேறு எந்தவொரு தகுதியான மூத்த உறுப்பினரும் உயிரோடு இல்லை. கே.பியால் பிள்ளையார் சுழியிடப்பட்ட நாடு கடந்த அரசாங்கம்தான், இப்போது விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் இயங்கிவருகின்றது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாரன் உயிரோடு இருக்கின்ற போதே, அவரது கையெழுத்துடன் சர்வதேச விவகாரங்களை கையாளுவதற்காக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்ட ஒரேயொரு நபரென்றால் அது கே.பி மட்டும்தான். இந்த பின்புலத்தில் நோக்கினாலும், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருப்பதற்கான முழுத் தகுதியும் கே.பிக்கு மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் இன்று கே.பி இலங்கை அரசின் கைதி. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்க் குற்றங்கள் விசாரிக்கப்படுமாயின், கே.பியையும் விசாரிக்க முடியும். அப்படியொரு விசாரணை இடம்பெற்றால்.

கே.பி கைது செய்யப்பட்ட போது, அவரிடம் பெருந்தொகையான பணம் இருப்பதாக ஒரு கதை உலவியது. ஆனால் நாட்கள் வாரங்களாக, மாதங்களாக  கழிந்துசென்ற போது, அவரது கட்டுப்பாட்டின் கீழ் எதுவுமில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. ஒரு வேளை கே.பியின் கட்டுப்பாட்டில் பெரும்தொகை பணம் இருந்திருந்தால், புலம்பெயர் அமைப்புக்கள் பலவும் கே.பியை விமர்சிக்கவோ, தள்ளிவைக்கவே துணிந்திருக்காது. கே.பியுடன் இணைந்து பணியாற்றிய பலர் அரசியலிருந்தே ஒதுங்கி, தற்போது முகவரியை தொலைத்தவர்களாகவே வெளிநாடுளில் வாழ்ந்துவருகின்றனர். ஒரு காலத்தில், கே.பியுடன்  நாங்கள் தொடர்பிலிருந்தோம், என்று சொல்லுவiயே, இப்போது பலரும் விரும்புவதில்லை.

ஆனால் விடுதலைப் புலிகளின் பெரும் தொகை நிதி சிலரிடம் முடங்கியிருக்கும் என்பதில் அதிச்சியடைய ஒன்றுமில்லை. அவ்வாறானவர்கள் எவருமே அந்த நிதியை தாயக மக்களின் நல்வாழ்விற்காக வழங்கப் போவதுமில்லை. அப்படியான  தமிழ் தேசிய பொறுப்புணர்வுடன், அவர்கள் செயற்பட்டதற்கான எந்தவொரு சான்றையும் இதுவரை காணமுடியவில்லை.

மனிதநேயமுள்ள பல புலம்பெயர் உறவுகள், வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திருக்கின்றனர். இப்போதும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் இப்படியான சிறிய உதவிகளை கொண்டு தாயக மக்களை பொருளாதார ரீதியாக தூக்கிவிட முடியாது. வடக்கு கிழக்கின் பொருளாதாரத்துக்கு வலுவான அடித்தளத்தை போட முடியாது. மாகாண சபை நிர்வாகத்தோடு புலம்பெயர் சமூகம் கைகோர்த்து செயற்பட்டால், பொருளாதார ரீதியில் நல்ல விடயங்களை செய்ய முடியும்.

ஆனால், கடந்த 12 வருடங்களில், புலம்பெயர் அமைப்புக்கள் அல்லது தனிநபர்கள், வடக்கு கிழக்கில் பெருந்தொகை நிதியில் தொழிற்முயற்சிகளை மேற்கொண்டதாக, எந்தவொரு தகவலுமில்லை. பெருந்தொகை என்பது நூறு, இரு நூறு கோடிகளை முதலீடாகக் கொண்ட திட்டங்கள். விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் என்பது அடிப்படையில் தாயக மக்களின் சொத்துக்கள். அவற்றை கோருவதற்கான முழு உரிமையும் தாயகத்திலுள்ள ஒவ்வொரு தமிழ் குடிமகனுக்கும் உண்டு.

யாழில் இருந்து வெளிவரும் 'ஈழநாடு' நாளேட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (12.10.2021) வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nirmalan said:

கே.பியால் பிள்ளையார் சுழியிடப்பட்ட நாடு கடந்த அரசாங்கம்தான், இப்போது விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் இயங்கிவருகின்றது

ஐயா,

எழுத்தாளர்களே இதுவும் ஒரு அயல்நாட்டு அமைப்பினுடைய  தந்திரோபாய சித்து விளையாட்டு. இதற்கு அடிகோலியவர் களை நன்கு அடையாளம் காண உங்களால் முடியும். முடிந்தால் அதனுடைய வரலாற்றை சற்று ஆராய்ந்து பாருங்கள்.

47 minutes ago, nirmalan said:

12 வருடங்களுக்கு முன்னர், 2009 ஓகஸ்ட் மாதம், கே.பி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வைத்து, கைதுசெய்யப்பட்டார்

ஒரு சில மணி நேரத்துக்கு முன்பாக, மறைந்த ஐயா ஐயா நடேசன் அவர்களின்  புதல்வருடன் புதல்வர் நடந்த விடயத்தை அவரிடமே  கேட்டு வையுங்கள்.  வாசகர்களாகிய நாங்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றோம்.

50 minutes ago, nirmalan said:

விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்பில் ஊடகவிலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, எந்தவொரு சொத்தும் என்னிடமில்லை.

இதற்குரிய விடை நீங்கள் குறிப்பிட்டது போல விசாலமான சிந்தனையைத் தூண்டி  விவாதம் செய்து பாருங்கள்.

"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாரன் உயிரோடு இருக்கின்ற போதே, அவரது கையெழுத்துடன் சர்வதேச விவகாரங்களை கையாளுவதற்காக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்ட ஒரேயொரு நபரென்றால் அது கே.பி மட்டும்தான்."

இதனை மையமாக வைத்து உங்களுக்குள், வினாக்களை  எழுப்புங்கள் விடை தெரியும்.

54 minutes ago, nirmalan said:

கே.பி இலங்கை அரசின் கைதி

 உங்களின் கட்டுரை வாயிலாக, நீங்கள் கேபி அவர்களுக்கு காவடி தூக்குவது புலப்படுகிறது. உங்களுடைய வேலையை நீங்கள் சரிவர செய்கிறீர்கள். 

நீங்களே  பந்தியில் குறிப்பிட்டதுபோல் நாங்கள் "நண்டுகள்" ஆகிவிட்டோம். அதனால் குழுக்களாக வெளிநாடுகளில் பனிப்போர், கருத்துப் போர், காட்டிக் கொடுத்தல் நடந்து கொண்டிருக்கின்றது .

ஆனால்

பாவம் அந்த மக்கள் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப்படுவதற்கு பலப்பல வருடங்கள் முன்பே 90களில் Interpol சிகப்பு பட்டியலில் கே.பி வந்து விட்டார். இன்டர்போல் தனது இணையத்தளம் தொடங்கிய காலத்திலேயே கே.பி படம், தகவலுடன் Most Wanted Listஇல் பிரசுரம் செய்ய தொடங்கிவிட்டது. 

எந்த நேரமும் கைதாகலாம் எனும் நிலையில் வாழ்ந்த ஒருவரிடமா விடுதலைப்புலிகள் அமைப்பின் வெளிநாட்டு சொத்துக்கள் முடங்கின என கூறப்படுகின்றது?

இரகசிய வங்கி கணக்குகளின் சொந்தக்காரர் யார் என்பது விடுதலை புலிகளுக்கு மட்டும் தெரிந்த உண்மை.

கடைசியாக விடுதலைப்புலிகள் தலைவர் மாவீரர் தின அறிக்கை 2008 இல் வெளியாகியது. இதையே சாதாரண பொதுமக்கள் நம்பிக்கைக்கு கடைசி தொடர்பாடலாக செய்தியாக எடுக்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

கைது செய்யப்படுவதற்கு பலப்பல வருடங்கள் முன்பே 90களில் Interpol சிகப்பு பட்டியலில் கே.பி வந்து விட்டார். இன்டர்போல் தனது இணையத்தளம் தொடங்கிய காலத்திலேயே கே.பி படம், தகவலுடன் Most Wanted Listஇல் பிரசுரம் செய்ய தொடங்கிவிட்டது. 

எந்த நேரமும் கைதாகலாம் எனும் நிலையில் வாழ்ந்த ஒருவரிடமா விடுதலைப்புலிகள் அமைப்பின் வெளிநாட்டு சொத்துக்கள் முடங்கின என கூறப்படுகின்றது?

இரகசிய வங்கி கணக்குகளின் சொந்தக்காரர் யார் என்பது விடுதலை புலிகளுக்கு மட்டும் தெரிந்த உண்மை.

கடைசியாக விடுதலைப்புலிகள் தலைவர் மாவீரர் தின அறிக்கை 2008 இல் வெளியாகியது. இதையே சாதாரண பொதுமக்கள் நம்பிக்கைக்கு கடைசி தொடர்பாடலாக செய்தியாக எடுக்க முடியும். 

உங்கள் வெகுளித்தனத்தை பார்க்க ஆச்சரியமும் கவலையுமாக இருக்கிறது.

😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கைது செய்யப்படுவதற்கு பலப்பல வருடங்கள் முன்பே 90களில் Interpol சிகப்பு பட்டியலில் கே.பி வந்து விட்டார். இன்டர்போல் தனது இணையத்தளம் தொடங்கிய காலத்திலேயே கே.பி படம், தகவலுடன் Most Wanted Listஇல் பிரசுரம் செய்ய தொடங்கிவிட்டது. 

 

On 11/10/2021 at 23:55, kalyani said:

நீங்கள் இப்ப தான் பிறந்து இருக்கிறீர்கள் போல.

ஒரு பழமொழி சொல்வார்கள், "தன்ர பல்லின் ஊத்தையை குத்தி மற்றவர் மூக்கில் வைப்பது" என்று. நான் இங்கு கூறியது: இலங்கை  அரசால் குற்றவாளி என்று கருதப்பட்டு, அவரை கைது செய்வதற்கு  சர்வதேச பொலிஸாரின் உதவி கோரப்பட்டு, இரகசியமாக  தனி விமானம் மூலம் சென்று கைது செய்த ஒருவரை, எந்த விசாரணையுமின்றி நடமாட விட்டதன் காரணம் என்ன? அவரிடமிருந்து பெறப்பட்ட பணமே அதற்கு காரணம். அந்த பணத்திற்கு என்ன நடந்தது? இறுதிப்போரின்போது  புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகைகளுக்கு என்ன நடந்தது? என்று எதிர்க்கட்சிகள் மஹிந்த மாத்தையாவிடம் கேட்ட போது, மஹிந்தாவே பதிலளிப்பதை தவிர்த்துவிட்டார். அதை நான் இங்கு குறிப்பிட்டதற்கு இங்கு ஒருவர் குறுகுறுப்பதன் காரணம் என்ன? ஒன்று, நான் எழுதியதை விளங்கிக்கொள்ள அவரால் முடியவில்லை, அடுத்தது இவரின் மடியில் கனம் அதிகம். அவரை அப்படியே விடுங்கள். அவர் தன்னை மறைத்துக்கொள்ளட்டும். நாம் எதற்கு பதிலளிக்க வேண்டும்? இது எனக்குரிய கடிதமல்ல, அனுப்பியவருக்கே திரும்பி செல்லட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

உங்கள் வெகுளித்தனத்தை பார்க்க ஆச்சரியமும் கவலையுமாக இருக்கிறது.

😔

உங்கள் வெகுளித்தனத்தை பார்க்க எனக்கு அனுதாபம் பிறக்கின்றது. 

செவி வழி கதைகளை கேட்டு நம்பினால் அது உங்கள் வெகுளித்தனமே. கதை சொல்ல பலர் உள்ளார்கள். 

தலைவரை அமெரிக்கா பிளேனில் ஏத்தி சென்று பாதுகாப்பாக வைத்து உள்ளார்கள் என்று நம்பவும் ஆட்கள் உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2021 at 04:26, நியாயத்தை கதைப்போம் said:

உங்கள் வெகுளித்தனத்தை பார்க்க எனக்கு அனுதாபம் பிறக்கின்றது. 

செவி வழி கதைகளை கேட்டு நம்பினால் அது உங்கள் வெகுளித்தனமே. கதை சொல்ல பலர் உள்ளார்கள். 

தலைவரை அமெரிக்கா பிளேனில் ஏத்தி சென்று பாதுகாப்பாக வைத்து உள்ளார்கள் என்று நம்பவும் ஆட்கள் உள்ளார்கள்.

என்னால் கூறப்படுபவை செவிவழி வந்தவையல்ல. இவற்றிற்கு நானே சாட்சி. 

இதைவிட வேறு என்ன வேண்டும் உங்களுக்கு.. ? 

சர்வதேச பொலிசாரால் தேடப்படும் ஒருவர், அதுவும் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டு  தேடப்படும் ஒருவர், இலங்கையிலேயே பாதுகாப்பாய் நடமாடுகின்றார். ஆனால் சாதாரண பொது மக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர்.  அது எப்படிச் சாத்தியமாகும் ? 

இதனைக்கூட புரிந்துகொள்ள முடியாத  ஒருவருடன் கருத்தாடுதல் நகைச்சுவைக்குரியதாகவே இருக்கும் ஆதலினால் .. 🙏 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.