Jump to content

நல்லூர் கோயில் நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலமானார்.


Recommended Posts


May be an image of 1 person, standing and outdoors

கழுத்தில் தங்கச்சங்கிலி கிடையாது கையில் தங்க மோதிரமும் கிடையாது. எளிமையான மனிதர் மட்டுமல்ல அவரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை இன்னும் நிறையவே உண்டு என்பதையும் விட்டுச்சென்றிருக்கிறார். எந்த மன்னாதிமன்னனாயினும் மேலங்கி இல்லாமல்த்தான் கோவிலுள் நுழையலாம் என சட்டம் வைத்தவர் 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, zuma said:


May be an image of 1 person, standing and outdoors

கழுத்தில் தங்கச்சங்கிலி கிடையாது கையில் தங்க மோதிரமும் கிடையாது. எளிமையான மனிதர் மட்டுமல்ல அவரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை இன்னும் நிறையவே உண்டு என்பதையும் விட்டுச்சென்றிருக்கிறார். எந்த மன்னாதிமன்னனாயினும் மேலங்கி இல்லாமல்த்தான் கோவிலுள் நுழையலாம் என சட்டம் வைத்தவர் 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

நல்லூர் முருகன் கோவில் தானே?

Link to comment
Share on other sites

  • zuma changed the title to நல்லூர் கோயில் நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலமானார்.
3 minutes ago, Nathamuni said:

நல்லூர் முருகன் கோவில் தானே?

ஆமாம். தலையங்கத்தை மாற்றியுள்ளேன்.

Link to comment
Share on other sites

கோவிலையும் அதன் சுற்றாடலையும் சுத்தமாக பராமரித்தமை, ஆலய நிகழ்வுகளில் நேரந்தவறாமை என்று மற்றைய கோவில்களில் இல்லாத விசேட தன்மை  இவரது நிர்வாகத்தில் நெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டது இவரது சிறப்பு அம்சங்களில் ஒன்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான மனிதர்.....இறைவனடி சேர்ந்து விட்டார் ......அண்ணாரது ஆத்மா அங்கேயே இளைப்பாறட்டும் .......!

கண்ணீர் அஞ்சலிகள்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் செயல்பட்டவர் என அறிந்தேன்.
அஞ்சலிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தேதியில் இலங்கைத்தீவில் மிக அதிகமான வருமானத்தையீட்டும் கோவில் நல்லூர் கந்தசுவாமி கோவிலாகும் ஆனால் அதனது உரிமையாளர்களிடம் எதுவித சலனத்தையும் காணமுடியாது.

 இக்கோவிலின் சுற்றாடலிலேயே நான் சிறுவயதுமுதல் வளர்ந்து வந்தேன். அங்கு எழுபதுகளிலிருந்து அப்பிரதேசத்தில் நடந்த ஒவ்வொரு மாற்றங்களும் எனக்கு நினைவில் இருக்கு முதலில் அந்தக்கோவிலுக்கு பெரிய காண்டாமணிக் கோபுரம் அமைப்பதிலிருந்து இவரது பணி ஆரம்பமாகியது நினைவு. இதற்கு முன்பாக இவரது அண்ணஙாரன் ரகுநாத மாப்பாண முதலியார் கோவிலை நிர்வாகித்தார். இவரது கிட்டடி உறவினர் ஒருவர் எனது வகுப்புத்தோழன் ஆனால் அவர் எக்காரணம்கொண்டும் நான் நல்லூர் நிர்வாகியின் உறவு எனச்சொல்லியதில்லை அந்தக்குடும்பமே அப்படித்தான். கோவில் காண்டாமணி அமைப்புக்குப் பின்பு நடந்த மாறுதல் முன் முகப்பு மண்டபம் அதற்கு முப்பு குடாநாட்டில் அப்படி ஒரு மண்டபம் எந்தக்கோவிலிலும் இருந்ததில்லை அதன்பின்பே எல்லாக்கொவில்களும் அதைக்கொப்பி எடுத்ததுபோல் கட்டினார்கள்-

இப்போதுள்ள மண்டபத்துக்கு முதல் ஓடுபோட்ட மண்டபம் ஒன்று இருந்தது அதன் வடக்குப்பக்க மூலையில் காக்காப்பழ மரமும் மகிழ மரமும் நின்றது. 

முன்ன மணிக்கோபுரத்தின் அடிப்பகுதியில் உள்பக்கம் 

பரம்பொருளின் பெரும்புகழைப்பாடிப் பணிதலன்றி
பிறவார்த்தை எதுவும் பேசாதீர் இவ்வாலையத்தில் 

என எழுதப்பட்ட பலகை தொங்கிக்கொண்டிருக்கும்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து மூலஸ்தானத்துக்கு வடக்குப்பக்கத்தில் பென்டுலத்துடஙூடிய மணிக்கூடு ஒன்று சுவரில் பதியப்பட்டிருக்கும் இப்போதும் அது அதே இடத்தில் இருப்பதாக நினைவு.

முன்னம் கேணிக்கும் கோவிலுக்கும் இடையால பருத்தித்துறை வீதி ஊடறுத்துப்போகும் 751 பருத்தித்துறை பேரூர்ந்து சும்ம பிச்சுக்கொண்டு அதன் வழியே போவது இப்போதும் நினைவிலிருக்கு.

இதைவிட  முக்கியமான ஒரு விடையம்

திலீபன் எனும் பசியோடு இருந்த பார்த்திபனது இறுதி மூச்சு அந்தச்சுற்றாடலை விட்டு இன்னமும் அகலவில்லை என்வே நான் அங்குபோனால் நினைத்துக்கொள்வேன்.

என்னமோ தெரியவில்லை

மேலே உள்ள படத்தைப் பார்க்கும்போது கொண்டாவில் சுற்றாடலில் எழுபதுகளில் குடியிற்சாமி எனும் சித்தர் சுத்தித்திரிந்தார் சிறீமாவின் காலம் அவரை நான் பார்த்திருக்கிறேன் கடையிற் சாமிக்குப்பின்பு எம்மிடையே வாந்த சித்தர் என்பது பொருந்தும் அதைவிட செலவச்சன்னதியில் யேர்மன் சாமி என்பவரும் வாழ்ந்தார் அவர் ஜேர்னனியில இருந்து வந்தவர் தனது சமாதியை அமைத்து அதற்குமேல் பலகை போட்டு அங்குதான் தூங்குவார் இருப்பார் எல்லாமே.

படத்தைப்பார்க்கும்போது குடைச்சாமியப்பார்ப்பதுபோல் உள்ளது 

இவரது ஆன்மா வீடு பேறடையட்டும். 

இனிமேல் நல்லூருக்குப்போனால் ஒரு விடையம் மிஸ்ஸிங். 

கொசுறாக ஒரு செய்தி.

சென்றுக்கடை நவரத்தினம் என்பவர் ஆதீனத்துக்குப் பக்கத்தில் வாசனைத்திரவியங்கள் விற்கும் கடை வைத்திருந்தார் ஒரு முறை சப்பறத்தின் வடக்கயிறு தங்களது கடைக்குள் வந்துவிட்டது எனக்கோவப்பட்டு சோடாப்போத்தல்களால் சப்பறம் இழுத்தவர்களுக்கு எறிந்து கலைத்தவர் காலப்போக்கில் அவர்களது பெயர்சொல்ல இப்போது ஒருவருமே இல்லை.

இவர்கள் அந்தக்கலத்து சாதி வேளாளர் சண்டியர்கள் யாரோ கிணத்தில் தண்ணி அள்ளியதுக்காக கிணத்துக்குள்ள பொலிடோடை ஊத்தியவர்கள். இப்ப அட்றஸ் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Elugnajiru said:

இன்றைய தேதியில் இலங்கைத்தீவில் மிக அதிகமான வருமானத்தையீட்டும் கோவில் நல்லூர் கந்தசுவாமி கோவிலாகும் ஆனால் அதனது உரிமையாளர்களிடம் எதுவித சலனத்தையும் காணமுடியாது.

 நல்லூர் என்பது ஆன்மீகம் அரசியல் ரீதியாக இலங்கை முழுவதும் பிரபல்யமானது என்று தெற்கு சிங்களவர்கள்கூட அறிந்து வைத்திருப்பார்கள்.

ஒரு விளக்கத்திற்காகதான் கேக்கிறேன் காலம் காலமாக பெரும் வருமானமீட்டியதாக கூறப்படும்  நல்லூர் கந்தன் ஆலயம் அந்த வருமானத்தை ஏதும் பொது விஷயங்களுக்கு செலவிட்டார்களா அல்லது நகர சபைக்கு கொடுத்தார்களா அல்லது நிர்வாகத்தினர் பகிர்ந்து கொண்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கோவிலுக்கு அர்ச்சனை செய்வதற்குரிய சீட்டு... 
அன்றிலிருந்து.. இன்று வரை, ஒரு ரூபாய்தான்.

ஒரு ரூபாய்க்கு இலங்கையில், ஏதாவது பொருள் வாங்க முடியுமா என்று தெரியவில்லை.
ஆனாலும் அதில், மாற்றம் கொண்டு வரமால் இருப்பது சிறப்பு.
அப்படி இருந்தும்... பணக்கார கந்தன் என்னும் பெருமையை நல்லூர் கந்தன் பெற்றுள்ளார்.

சமாதான ஒப்பந்த காலத்தில், ரணில் இந்தக் கோவிலுக்கு வந்து...
தங்க வேல் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்தவர்.
அதனை.... கோவிலுக்குள் வைப்பது, ஆகம விதிக்கு முரணானது என்று,
அந்த வேலை... தீர்த்தக் கேணி பகுதியில் வைத்தவர்.  

ரணில், மகிந்த.. என்று அரச உயர் பதவிகளில் இருந்து, 
எவர் வந்தாலும்... மேலாடையை கழட்டி விட்டு உள்ளே சென்ற படங்களையும்,
நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அந்த அளவுக்கு... கட்டுப்பாட்டை  கடைப்பிடிக்க வைத்தவர்.

அன்னாரின்  மறைவுக்கு... ஆழ்ந்த அஞ்சலிகள்.


பிற்குறிப்பு: நல்லூர் கோவில் முகப்பு, ஓடு போட்டிருந்த காலத்தில்..
அதன் வாசலில் பார்வையற்ற ஒருவர் எந்த நேரமும்... வயலின் வாசித்துக் கொண்டு இருப்பார்.
சிறு வயதில், அவரை... நான் யாழ்.பாடி என்று நினைத்ததுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, valavan said:

 நல்லூர் என்பது ஆன்மீகம் அரசியல் ரீதியாக இலங்கை முழுவதும் பிரபல்யமானது என்று தெற்கு சிங்களவர்கள்கூட அறிந்து வைத்திருப்பார்கள்.

ஒரு விளக்கத்திற்காகதான் கேக்கிறேன் காலம் காலமாக பெரும் வருமானமீட்டியதாக கூறப்படும்  நல்லூர் கந்தன் ஆலயம் அந்த வருமானத்தை ஏதும் பொது விஷயங்களுக்கு செலவிட்டார்களா அல்லது நகர சபைக்கு கொடுத்தார்களா அல்லது நிர்வாகத்தினர் பகிர்ந்து கொண்டார்களா?

அக்கோவில் தனிப்பட்ட ஒருவருடைய சொத்து தவிர ஒரு ரூபா கொடுத்து நீங்கள் உங்களது பெயர் நட்சத்திரம் சொல்லி அர்சனை செய்து விபூது சந்தனம் தீர்த்தம் வாங்கலாம் தட்சனை அங்கு கிடையாது. அக்கோவிலின் நடக்கும் திருத்தவேலைகளுக்காக மாதச்சம்பளத்தில் பத்துப்பேருக்குமேல் வேலை செய்கிறார்கள். தவிர பெரிய திருத்தவேலைகளுக்குச் செலவிடும் பணத்துக்கான கடனை எதிர்வரும் அண்டுத்திருவிழாவில் சேரும் பணத்தில்தான் கொடுத்து முடிக்கிறார்கள். 

ஒவ்வொரு நாளும் சண்முக அர்சனை நடக்கும் நான் அறிய வர்கள் 150 ரூபாகள்தான் முன்பு வாங்கினார்கள் இப்போ கொஞ்சம் கூட எனக்கேள்விப்பட்டன் ஆனால் அவர்கள் கொடுக்கும் பட்டியலில் உள்ள பொருதள் அனைத்தும் வாங்க்கிகொடுக்கவேண்டும் அனைத்தும் திரும்பவும் பிரசாதமாக உங்கள் வீட்டுக்கெ வரும்.

இப்படித்திருத்தமாக எந்தக்கோவிலும் எங்கும் நிர்வாகம் செய்ததில்லை. 

பொதுக்காரியம் செய்கிறதென்றால் அங்கு பிரச்சனைதான் வரும் அதனால் அவர்கள் ஒதுங்கி வாழ்கிறார்கள். வருமானம் முழுவது அவர்கள் செலவுசெய்கிறார்கள் உண்பதற்கு உணவும் உடுக்க உடையும் தங்க வீடுமே போதும் என அவர்கள் வாழ்கிறார்கள் லண்டன் திர்க்கை அம்மன் கோவில் உரிமையாள்ரைப்போல் இரண்டு பெண்டாட்டி வைத்து தங்கச்சரிகையில் அவர்கள் உலாவரவில்லை.

அவர்கள் அரசியலோ அன்றேல் பொதுவிடையங்களையோ பேசுவதில்லை.

சரி நாம் தெரிவுசெய்த எமது அரசியல் தலைவர்களிடம் இல்லாத சொத்து யாரிடம் இருக்கு பொதுச்சேவை செய்யவந்தவர்கள் சொத்தை வித்து பொதுமக்களுக்குச் செலவளிகலாம்தானே ஏன் அவர்களிடம் இதை கெழுங்கோவன்.

ப்போது ஆறுமுகசாமியின் கோவில் கோபுரத்துக்கு தங்க்கவசம் போட்டார்கள் ஆனால் யாரிடமும் அவர்கள் போய் ஒரு ரூபாய்கூட அறவிடவில்லை.

 

உங்கட ஊரில ஆளில்ல கோவிலுக்கு ஆயிரத்தெட்டு அடுக்கெடுத்து தேர் இழுக்க முடியாது ஆமிக்காரனைக்கூப்பிட்டு இழுக்கிறாங்கள் அதை முதலில கேழுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, valavan said:

 நல்லூர் என்பது ஆன்மீகம் அரசியல் ரீதியாக இலங்கை முழுவதும் பிரபல்யமானது என்று தெற்கு சிங்களவர்கள்கூட அறிந்து வைத்திருப்பார்கள்.

ஒரு விளக்கத்திற்காகதான் கேக்கிறேன் காலம் காலமாக பெரும் வருமானமீட்டியதாக கூறப்படும்  நல்லூர் கந்தன் ஆலயம் அந்த வருமானத்தை ஏதும் பொது விஷயங்களுக்கு செலவிட்டார்களா அல்லது நகர சபைக்கு கொடுத்தார்களா அல்லது நிர்வாகத்தினர் பகிர்ந்து கொண்டார்களா?

கோவில் வருமானத்தை.. பொது விடயத்துக்காக செலவிட்டதை நான் அறியவில்லை.
மாறாக... அந்தப் பணத்தை, ஒவ்வொரு வருடமும்...  
ஆலயத்தை மாற்றி அமைப்பதில், செலவு செய்துள்ளதாக நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஆழ்ந்த அஞ்சலி, ஐயாவிற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எளிமையான மனிதருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

அண்மையில் இந்திய பிரதமர் மோடி நல்லூருக்கு வந்திருந்த போது 

ஆண்கள் மேலாடையுடன் உள்புக முடியாது என்று தெரிந்தும் மோடியை மேலாடையுடன் அனுமதிக்குமாறு எவ்வளவோ அழுத்தங்கள் கொடுத்தும் நல்லூர் நிர்வாகம் எதுக்கு மசிந்து கொடுக்காமல் துணிந்து நின்றதை இந்த நேரத்தில் நினைவு கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தின் அதிக வளம் கொண்ட, தனியார் நிறுவனங்களில் ஒன்றின் கண்டிப்பான கண்ணியம் மிக்க உரிமையாளர் காலமாகியதற்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

இவர் தனது நிறுவனத்தின் நிர்வாகத்திலும் அந்த நிறுவனத்தை மேம்படுத்துவதிலும் அயராது உழைத்தார் என கேள்வி படுகிறேன். தவிரவும் அவரின் நிறுவனம் பணம் கொழிக்கும் அமைப்பாக இருந்தாலும் வெளிப்பார்வைக்கு பகட்டில்லாமல் வாழ்ந்தார் என்றும் அறிகிறேன்.

குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

பிகு

நான் கோயில் போகாதவன். ஆனால், லண்டன் கனகதுர்க்கை அம்மன் நிர்வாகிகள் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தாலும், சண்டைகள் வந்தாலும், அது ஒரு ஜனநாயக அமைப்பு, உறுப்பினர்கள் வாக்களிப்போரே பதவிக்கு வரலாம். யாரும் உறுப்பினர் ஆகலாம். யூகே Charity Commission மேற்பார்வையில் இயங்குகிறது. இது ஒரு குடும்ப சொத்தல்ல.

2009 க்கு முன் நிகர வருமானத்தில் 1/3 பங்கை வடகிழக்குக்கு அனுப்பியவர்கள் என நினைகிறேன். தத்து எடுத்தல் உட்பட பல நல்ல விடயங்களை முன்னெடுத்தவர்கள்.

20 minutes ago, Elugnajiru said:

லண்டன் திர்க்கை அம்மன் கோவில் உரிமையாள்ரைப்போல் இரண்டு பெண்டாட்டி வைத்து தங்கச்சரிகையில் அவர்கள் உலாவரவில்லை

கோவில் பெயரை தவறாக சொல்கிறீர்கள் என நினைக்கிறேன் நொச்சி. நீங்கள் சொல்வது வேற கோயில் துர்க்கை அம்மன் அல்ல.

6 minutes ago, ஈழப்பிரியன் said:

எளிமையான மனிதருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

அண்மையில் இந்திய பிரதமர் மோடி நல்லூருக்கு வந்திருந்த போது 

ஆண்கள் மேலாடையுடன் உள்புக முடியாது என்று தெரிந்தும் மோடியை மேலாடையுடன் அனுமதிக்குமாறு எவ்வளவோ அழுத்தங்கள் கொடுத்தும் நல்லூர் நிர்வாகம் எதுக்கு மசிந்து கொடுக்காமல் துணிந்து நின்றதை இந்த நேரத்தில் நினைவு கொள்ள வேண்டும்.

உண்மை. யாருக்காகவும் தமது விதிகளை மாற்றிகொள்ளாமல் இருந்தார் என்பது போற்றுதலுக்குரியதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Elugnajiru said:

சரி நாம் தெரிவுசெய்த எமது அரசியல் தலைவர்களிடம் இல்லாத சொத்து யாரிடம் இருக்கு பொதுச்சேவை செய்யவந்தவர்கள் சொத்தை வித்து பொதுமக்களுக்குச் செலவளிகலாம்தானே ஏன் அவர்களிடம் இதை கெழுங்கோவன்.

நான் அந்த அர்த்ததில் தங்களிடம் வினவவில்லை.

1 hour ago, Elugnajiru said:

இன்றைய தேதியில் இலங்கைத்தீவில் மிக அதிகமான வருமானத்தையீட்டும் கோவில் நல்லூர் கந்தசுவாமி கோவிலாகும்

இப்படி கூறியிருந்தீர்கள், பெரும் வருமானமீட்டும் கோயில்கள் சில அதில் ஒருபங்கை பொதுகாரியங்களிற்கு பயன்படுத்துவதை அறிந்திருக்கிறேன் அதனால் கேட்டேன்.

பின்பு நீங்கள் அளித்த விளக்கத்தை பார்க்கும்போது இலங்கை தீவிலேயே பெரும் வருமானமீட்டிய கோவிலாக தெரியவில்லை, கையுக்கும் கணக்குக்கும் சரியாக போயிருக்கிறது என்று தெரிகிறது.

மற்றும்படி நீங்கள் சொல்வதுபோல்தான் அடுத்தவர் வருமானத்தை பிறருடன் பகிரவேண்டுமென்பது கட்டாயபடுத்தபட முடியாத ஒன்று , அது ஆன்மீகமாயிருந்தாலும் சரி அரசியல்வாதிகளாயிருந்தாலும் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உண்மை. யாருக்காகவும் தமது விதிகளை மாற்றிகொள்ளாமல் இருந்தார் என்பது போற்றுதலுக்குரியதே.

யாழ் மாகாணத்தாரிடம் உள்ள வைராக்கிய குணம். மரண தறுவாயிலும் கொண்ட கொள்கையிலிருந்து விலகமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.