Jump to content

அக்டோபர் 9, சர்வதேச புரட்சியாளன் சே குவேராவின் நினைவு தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அக்டோபர் 9, சர்வதேச புரட்சியாளன் சே குவேராவின் நினைவு தினம் – பேரா. எஸ். மோகனா

spacer.png

உலகின் எங்கு ஏகாதிபத்தியம் என்றாலும் எழும் சே

”உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” – சே

.. “உண்மையில் நான் அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவன் மேலும் கியூபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவைச் சேர்ந்தவன், ஆசியாவைச் சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவைச் சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கப்படுவதைத்தான் நான் விரும்புகிறேன்”… எர்னெஸ்டோ சே குவேரா

எந்த நாட்டின் விடுதலைக்கு என் உயிர் தயார்.. சே

“நான் அர்ஜெண்டினாவில் பிறந்தேன். அது ஒன்றும் ரகசியமல்ல, நான் ஒரு அர்ஜென்டிணன், ஒரு கியூபன், அதே சமயம் அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளின் தேச பக்தனாகவும் உணர்கிறேன். யாருடைய வேண்டுகோளும் இன்றி, இதில் எந்த ஒரு நாட்டின் விடுதலைக்காகவும் நான் என் உயிரைத் தரவும் தயாராக இருக்கிறேன்”… சே .

October 9 is the anniversary of the international revolutionary Che Guevara - Prof. S. Mohana. சர்வதேச புரட்சியாளன் சே குவேராவின் நினைவு தினம்

புரட்சியாளன் எர்னெஸ்டோ சே குவரா, மருத்துவர்

வரலாற்று நாயகன், நமக்கெல்லாம் ஆதர்ச புருஷராகவும், உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் போராளியாகவும் உள்ள, நம்மால் செல்லமாக சே என்று அன்போடும் தோழமையோடும் அழைக்கப்படும் சேவின் பெயர், எர்னஸ்டோ சே குவேரா. எர்னஸ்டோ சே குவேராவின் வீரம் செறிந்த புரட்சிக் குரல் ஒலிக்க என்றும் நம்மிடையே வாழ்கின்ற சேவின் நினைவு தினம் அக்டோபர் 9 , (Ernesto “Che” Guevara June 14,1928 – October 9, 1967). புரட்சியாளர் எர்னஸ்டோ சே குவரா அர்ஜெண்டினாவின் மார்க்சிய புரட்சியாளர், மருத்துவர், ஒரு கட்டுரையாளர், அறிவுஜீவி, கொரில்லாப் போராளி & ராணுவ புரட்சியாளர். கியூபாவின் புரட்சியில், ஜனநாயக அமைப்பில் சேவின் பங்கு ஏராளம், சே என்ற அர்ஜெண்டினா பேருக்கு நண்பர்/ தோழர் என்று பொருளாம். சே என்பது சாதாரண பெயர்ச்சொல் அல்ல, ஒரு இயக்கம்.. போராட்ட குணமுள்ள மனிதர்களின் அடையாளம். கியூபப் புரட்சியின் முக்கிய கதாநாயகன்.

தாயிடம் அன்பு பொழிந்த சே

தன் சிறுவயதில் தாயிடம் ஏராளமான அன்பு வைத்திருந்தவர். தாயிடம் மிகவும் நெருக்கம் உள்ளவராகவும் இருந்தார். நோய்வாய்ப்பட்டதால் அதிகமாகப் புத்தகம் படிப்பதும், சிறு வயதிலேயே அறிவுக்கருத்துக்களால் நிரம்பிய சிந்தனைவாதியாகவுமே காணப்பட்டார். புத்தகம் படிப்பதில் அடங்காத அறிவுப்பசியுடன் வளர்ந்தார் எர்னஸ்டோ சே. ஆஸ்துமாவின் அழுத்தத்தினால் 9 வயதிலேயே அதிகம் பாதிக்கப்பட்டவர் சே. எனவே அன்னைக்குச் சேயின் மேல் அதீத அன்பு. வீட்டிலேயே தாயின் கவனிப்பில் படித்தார் சே. 2 & 3வது வகுப்புகள் மட்டுமே முறையாகப் பள்ளிக்கூடத்தில் கற்றார்.

சிறுவயதில் போர் செய்தி சேகரிப்பு

சேவின் 9வது வயதில் ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. அவரது மாமா அர்ஜெண்டினாவில் ஒரு பத்திரிக்கைக்கு போர்ச்செய்திகள் சேகரித்தார். அப்போது சே சிறுவயதிலேயே போர் தொடர்பான நேரடி செய்திகளை மாமாவிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டார் எர்னெஸ்டோ. அங்கிருந்து துவங்கியதுதான் எர்னெஸ்டோவின் அரசியல் பாடத்தின் அரிச்சுவடி.. அது முதல் சேவை இந்த அலை சமூகத்தின் அவலங்களைத் தேட வைத்தது.

October 9 is the anniversary of the international revolutionary Che Guevara - Prof. S. Mohana. சர்வதேச புரட்சியாளன் சே குவேராவின் நினைவு தினம்

ஆஸ்துமாவும், ரக்பி விளையாட்டும்

இளம் வயதில் இவரைப் பாதித்த ஆஸ்துமா நோய் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தது. இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

மோட்டார் சைக்கிள் பயணமும், புரட்சியும்

தனது வயதில் 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிக்கச் சென்றார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பிலிருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் தன் நண்பருடன் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையிலிருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்தார். இதற்காகத் தீர்வுகளை யோசித்த சே “பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்குப் புரட்சி மூலமே தீர்வு காணமுடியும்” என நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாத்தமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.

இயற்கை ஈடுபாடும் பயணம், கவிதையும்

சே-வின் மனம் மக்களின் பாதிப்பில் மூழ்கினாலும் மனம் சில சமயம் இயற்கையுடன் கொஞ்சியது. எர்னெஸ்டோவும், ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி வேகமாக மனிதர்கள், மரங்கள், புல்வெளிகள், அழுத்தமான காற்று என காற்றில் பறக்கும் புரவியாக பறந்தது. மனம் அவர்களை விட்டு வெளியேறியது. கடந்து செல்லும் காட்சிகளுக்கு ஏற்ப கவிதை, சிந்தனை என எர்னெஸ்டோவின் மனம் சிறகடித்து பறந்துகொண்டே இருந்தது. இயற்கை அழகை அள்ளி தனக்குள் மறைத்து வைத்திருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலும், காதோரம் கிழித்து செல்லும் காற்றும் எர்னெஸ்டோவை கவர்ந்தது. பல மணிநேரங்களில் சந்திக்க இருக்கும் தனது மனம் கவர்ந்த காதலியை நினைத்தபடியே எர்னெஸ்டோ காற்றில் மிதப்பார்.

சே மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது, எடுத்த குறிப்புக்களை வைத்து “மோட்டார் சைக்கிள் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூல் எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாக அது தேர்வு செய்யப்பட்டது.

October 9 is the anniversary of the international revolutionary Che Guevara - Prof. S. Mohana. சர்வதேச புரட்சியாளன் சே குவேராவின் நினைவு தினம்

புரட்சியின் குரல் சே

தனது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து போராட்டங்களையும், போர்களையும் இடைவிடாமல் சந்தித்து வெற்றிகண்ட அயர்விலா போராளி சே..!
சே என்ற ஒரு சொல் ஒரு தனி மனிதரைக் குறிக்கவில்லை. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும், அடிமைப்பட்ட மக்களின் மனசாட்சி அது..!
அனைத்து உலக மக்களின் புரட்சியின், போராளியின் சின்னம் சே..!

சேகுவேரா பிறப்பால் ஒரு அர்ஜென்டினராக இருந்தாலும் கியூபாவின் விடுதலைக்காக தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். 1959 ல் கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றது. இங்கு சேவுக்கு பெரிய பதவிகள் தரப்பட்டன. ஆனால் அதற்குப் பின் பொலிவியாவில் போராட்டம் நடப்பதாக அறிந்து கியூபாவை விட்டு, அனைத்துப் பதவிகளையும் துறந்து, 1965 ல் தனியாளாக கியூபாவை விட்டு வெளியேறி பொலிவியா சென்றார். அங்கே அடர்ந்த காட்டினூடே படைகளைத் திரட்டினார்.

சமரசமில்ல போராளி சே யின் கொலை

கொரில்லா போர் பற்றி எர்னெஸ்டோ பல நூல்கள் எழுதியுள்ளார். சமரசமில்லாத போராளி சே. பொலிவியாவில் கொரில்லாப் போரின் போது காலிலும் தொழிலும் குண்டு பட்டு அவதிப்பட்டார் எர்னஸ்டோ. ஆனால் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தில் ஒரு இராணுவ நடவடிக்கையின்போது சே கைது செய்யப்படுகிறார். பொலிவிய இராணுவத்தின் அதிகாரியான மரியா டெரான் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் எர்னெஸ்டோ சே குவாராவை அக்டோபர் 9-1967 இல் சுட்டுக் கொல்கிறான். அதற்கு முன்பே, அமெரிக்க உளவுத்துறை அதிகாரியான பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவனும் சே -வைக் கொல்ல ஆணை பிறப்பிக்கிறான். இதானால் மரியா டெரான் ஆணவமும், அதிகார வெறியும் கொண்டு, தன் பிறந்த நாளில் அருந்தியிருந்த மதுவின் போதையில் எர்னெஸ்டோ சே குவாராவை சுட்டுக் கொல்கிறான்.

October 9 is the anniversary of the international revolutionary Che Guevara - Prof. S. Mohana. சர்வதேச புரட்சியாளன் சே குவேராவின் நினைவு தினம்

மரணிப்பு நிரூபிக்க மணிக்கட்டுக்கள் துண்டாடல்

தன் நெஞ்சில் சுடப்படுவதற்கு முன், டெரானைப் பார்த்து அனல் கக்கும் வார்த்தைகளைக் கக்குகிறார் சே. என்னை நீ சுடப்போகிறாய் என்று தெரியும், சுடு குள்ள நரியே ..! நீ ஓர் ஆண்மகனைக் கொல்லப் போகிறாய் என்றதுதான் தாமதம், உடனே சே -வின் உடல் துப்பாக்கி குண்டுகளால் சல்லடைத் துளையாக்கப்பட்டது. உடலை சின்னாபின்னமாக சிதைக்கின்றனர் ராணுவத்தினர். சே -வுடன் இன்னும் 6 புரட்சியாளர்களும் கொல்லப்பட்டனர். சே கொல்லப்பட்டதை , வெளி உலகுக்குச் சொல்ல, நிஜமாகவே இறந்து விட்டார் என்பதை உறுதி செய்ய, அவரின் கை ரேகைகளைப் பதிக்க ஏர்னஸ்டோவின் கைகளை மணிக்கட்டுடன் வெட்டி கொண்டு போகின்றனர் பாவிகள்.

எழுந்து நின்று சுடச்சொன்ன சே

பின்னர் எர்னெஸ்டோவின் கைகள் கியூபா அரசுக்கு வந்து சேர்ந்தன. உடலினை இராணுவம் விமானத்தின் ஊடு தளத்தில் புதைத்தது. சாட்சிகள் மற்றும் கொலையில் பங்கு பெற்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது. கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்ற போராளி, அஞ்சா நெஞ்சர் எர்னெஸ்டோ. தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார். (காலில் அப்போது குண்டடிபட்டிருந்தது)

கொன்றவன் வாக்கு மூலம் & எலும்புகள கண்டுபிடிப்பு

சே குவேராவின் இறப்பு பற்றி பின்னர் 1997 ம் ஆண்டு, அமெரிக்க உளவாளி ரோட்ரிக், உத்தரவிட்ட பிராடோ மற்றும் கொலை செய்த மரியா டெரான் வாக்கு மூலம் அளித்தனர். 30 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் புதைக்கப் பட்டிருந்த எர்னஸ்டோவின் புதைவிடம் தோண்டப்பட்டது. புதை பொருள் ஆய்வாளர்களால் விமான ஊடு பாதையிலிருந்து எடுத்த அந்த 7 எலும்புகளும் இனம் காணப்பட்டன. 1967 ம் ஆண்டு, அக்டோபர் 10 ம் நாள் எழுதிய பிரேத சோதனையின் குறிப்புகளிலிருந்தும், வெட்டி எடுத்து வைத்திருந்த மணிக்கட்டுடன் கூடிய கைகளிலிருந்தும், கிடைத்த தடயங்களான மணிக்கட்டின் அமைப்பு, பற்களின் அமைப்பு, துப்பாக்கி சூட்டின் தழும்புகள் ஆகியவற்றைக் கொண்டு ஏழு பேரின் எலும்புகளும் அடையாளம் காணப்பட்டன. தேசிய எல்லைகளை உடைத்த சர்வதேச புரட்சியாளர்கள் என அவர்களின் பெயர்கள் சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

October 9 is the anniversary of the international revolutionary Che Guevara - Prof. S. Mohana. சர்வதேச புரட்சியாளன் சே குவேராவின் நினைவு தினம்

மரியாதை செய்யப்பட சே வின் எலும்புகள்

1997 ல் சேவின் எலும்புகளுக்கு மரியாதை செலுத்தும் மக்கள்

புரட்சியாளர்களின் எலும்புகள் இராணுவ மரியாதையுடன் 1997 , ஜுலை 2 ம் நாள் பொலிவியாவுக்கு சிறப்பு விமானம் மூலம் வருகிறது. 30௦ ஆண்டுகள் கழிந்த பின் பொலிவியாவின் ஹவான புரட்சி மாளிகையின், சர்வதேச புரட்சியாளர்களின் எலும்புகள் மரக் கலசத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. 40 லட்சம் மக்களின் கண்ணீர் அன்பளிப்புகளுடன் , அவர்கள் சாந்தா கிளாரா என்ற இடத்தில் கல்லறையில் வைக்கப்பட்டனர். அமைக்கப்பட்டது.

நினைவுச் சின்னம்

அக்டோபர் 17 ம் நாள் அந்த இடத்தில் அவர்களது நினைவுச் சின்னம் கியூபாவில் நிறுவப்பட்டது. அந்த இடம்தான் கியூபாவில் எர்னெஸ்டோ போரிட்ட கியூபாவின் போர்க் கொத்தளம். அவன் வென்ற இடம். சே வெற்றி பெற்ற இடத்திலேயே இன்று மீளா ஆழ்துயிலில் இருக்கிறார்.

துப்பாக்கி குண்டின் முன்னே சே யின் கவிதை பிடலுக்கு

துப்பாக்கி குண்டுகள் நெஞ்சைத் துளைக்க வந்தபோது, எர்னெஸ்டோ சொன்ன கவிதை பிடலுக்கு ஒரு பாடல் என்று.:

“எம் வழியில் ஈய ரவை குறுக்கிடுமேயானால்
நாம் கேட்பதெல்லாம்
எமது கொரில்லா எலும்புகளை மூட,
அமெரிக்கக் வரலாற்றுத் திசை வழியில்
கியூபக் கண்ணீரில் ஒரு மூடுதுணி
வேறெதுவும் வேண்டேன்”.

இன்று புரட்சிப் பூவின் நினைவு நாள். அவருக்காக இந்த கட்டுரை.
மோகனா.

 

https://bookday.in/october-9-is-the-anniversary-of-the-international-revolutionary-che-guevara-prof-s-mohana/

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலம்பெயர் தமிழர் எல்லாம் ஜேர்மன், ஏனைய ஐரோப்பிய நாடுகள், பலர் இங்கிலாந்தில் எந்த மொழி பேசினார்களோ - அந்த மொழியில் என ஊகிக்கிறேன். ஆனால் இவர்களுக்கு மொழி ஒரு பெரிய தடை என்கிறது அந்த பதிவு. இந்தியாவில் ஒருத்தரை சண்டை பிடிக்கும் பகுதியில் கிளீனர் என அழைத்துப்போய் - சண்டையே பிடிக்க வைத்துள்ளார்களாம்.
    • அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!
    • சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்! ”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது. மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378433
    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா? பிற்சேர்க்கை ஒலிப்பதிவை கேட்டேன், இதில் சிலாகிக்கபடுவது கிட்டதட்ட முழுவதும் ரஸ்யா போனவர்கள் பற்றியே. எனிலும் உக்ரேனுக்கும் இப்படி போவதாக இரெண்டு இடத்தில் சொல்லவும் படுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.