Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

லடாக் பகுதியில்... சீன இராணுவத்தினர் நீடித்தால், இந்திய இராணுவமும் நீடிக்கும் – இராணுவத்தளபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லடாக் பகுதியில் சீன இராணுவத்தினர் நீடித்தால் இந்திய இராணுவமும் நீடிக்கும் – இராணுவத்தளபதி

லடாக் பகுதியில்... சீன இராணுவத்தினர் நீடித்தால், இந்திய இராணுவமும் நீடிக்கும் – இராணுவத்தளபதி

கிழக்கு லடாக் பகுதியில் சீன இராணுவத்தினர் நீடித்தால், இந்திய இராணுவமும் அப்பகுதியில் நீடிக்கும் என இராணுவத்தளபதி நரவனே உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா, இராணுவக் கட்டமைப்பையும் உள்கட்டமைப்பையும் மேம்படுத்தி வரும் நிலையில், நரவனே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ கட்டமைப்பை சீனா மேம்படுத்துவது, அவர்கள் அங்கு நீடிப்பதையை காட்டுகிறது என தெரிவித்த நரவனே, நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உட்கட்டமைப்பு மேம்பாடு, போதியளவில் தளபாடங்கள் உள்ளிட்ட இந்தியப் படைகளின் விரைவான செயற்பாட்டால், சீன இராணுவத்தினரால் எதையும் சாதிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் அண்மையில் தீவிரவாதிகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு கவலை தெரிவித்த அவர், இந்த செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் கூறியுள்ளார்.

https://athavannews.com/2021/1244067

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2021 at 05:44, தமிழ் சிறி said:

 

லடாக் பகுதியில்... சீன இராணுவத்தினர் நீடித்தால், இந்திய இராணுவமும் நீடிக்கும் – இராணுவத்தளபதி

 

முந்திச் சின்னப்பொடியள் பள்ளிக்கூடத்திலை ஏதும் பிரச்சினையென்றாலும் பேசாமல் வீடுவரை கதைத்துக்கொண்டு வருவார்கள். வீட்டடி வந்ததும் முதுகிலே அடித்துவிட்டு ஓடிவிடுவார்கள். மீண்டும் மறுநாள் காலையிலே பழையபடி ஓடிப்பிடித்து விளையாடுவோம். அப்படியா இருக்கிறது கிந்தியன்(எல்லை) போடர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

முந்திச் சின்னப்பொடியள் பள்ளிக்கூடத்திலை ஏதும் பிரச்சினையென்றாலும் பேசாமல் வீடுவரை கதைத்துக்கொண்டு வருவார்கள். வீட்டடி வந்ததும் முதுகிலே அடித்துவிட்டு ஓடிவிடுவார்கள். மீண்டும் மறுநாள் காலையிலே பழையபடி ஓடிப்பிடித்து விளையாடுவோம். அப்படியா இருக்கிறது கிந்தியன்(எல்லை) போடர்.

இபோதெல்லாம் மேலைத்தேய நாடுகளில் தொலைக்காட்சி நாடகங்களில் கிந்தியர்களையே காமெடியர்களாக நடிக்க வைக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிவாங்கியே சாவப் போறானுகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாருங்கள் இவரது ஆய்வை. சீனாவுக்கு கொடுக்கிற அடியிலை சிறீலங்கா கால்லைவிழுந்தாலும் ஆச்சரியப்படடடடடடடடடடடடமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nochchi said:

 

பாருங்கள் இவரது ஆய்வை. சீனாவுக்கு கொடுக்கிற அடியிலை சிறீலங்கா கால்லைவிழுந்தாலும் ஆச்சரியப்படடடடடடடடடடடடமுடியாது.

இவர் சொல்லுறதை பார்த்தால்...
இந்த முறை, சீனாவுக்கு... பயங்கர அடி விழும் போலை கிடக்கு. 🤣

கட்டாயம் இந்த காணொளியை பார்த்து, மகிழ்வாக இருங்கள்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

இவர் சொல்லுறதை பார்த்தால்...
இந்த முறை, சீனாவுக்கு... பயங்கர அடி விழும் போலை கிடக்கு. 🤣

கட்டாயம் இந்த காணொளியை பார்த்து, மகிழ்வாக இருங்கள்.   :grin:

இவர் என்ன சொல்லவருகின்றார் என்றே புரியவில்லை.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்கள சின்ராசுகள்????? யார் அவர்கள்? அதாவது நீங்களும் உங்கள் அருவருடிகளும் மகா ராஜாக்கள் அப்படித்தானே? 1988 ஈழத்தில் பாடசாலை விட்டு நான் வரும் வழியில் நான்கு தமிழர்களின் கொல்லப்பட்ட உடலங்கள் வீதியில் சிதைந்து கிடந்தது. அப்போது ஒரு பெரியவர் சொன்னார் தம்பி இப்போதுதான் இறந்த ஒருவரின் உடலை ட்ரக்கில் கட்டி இழுத்துப்போகிறார்கள் என்று. ..அந்த இந்திய இராணுவத்தின் தளபதிதான் இவர்..  
    • றோ உளவுப்பிரிவு தனது நலனுக்காக எதையும் செய்யும். விடுதலைப்புலியாக மாறும் கரும்புலியாக மாறும். சிங்கள அரசியல்வாதிகளை தற்கொலை போராளி கொண்டு கொலை செய்யும். விடுதலைப்புலிகளுக்குள்ளும் வேறு இயக்கங்கள் பெயரில் படு கொலைகளை நடத்தும். இன்னும் பற்பல......
    • இது இன்னுமொரு ஈஸ்ரர் தாக்குதலாக இருக்கலாம் மும்பைத் துறைமுகத்தில் ஒரு கடற்படை நீர்மூழ்கி தாக்கி மூழ்கடிக்கப்பட்டது அப்போது விபத்து எனப் பூசி மொழுகிவிட்டார்கள் இல்லையேல் பங்குச்சந்தையில் தடாலடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதுபோல் இதையும் பூசி மெழுகிவிடுவார்கள். ஆனால் சுப்பிரமணியம் சுவாமி சீனாக்காரன் செய்தவேலை என அறிக்கை விட்டிருக்கிறார். துட்டகெமுனுவின் நிலை இந்தியாவுக்கு வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் பாகிஸ்தான் சொல்லவே தேவை இல்லை காஸ்மீர் என்றும் புகையும் விடையம் இப்போ வங்காள விரிகுடாவின் இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கம் அம்பாந்தோட்டயிலிருந்து அட்டை வளர்ப்புவரை அங்கெங்கிலாதபடி அவர்கள்பாடுதான். கெமுனுக்கு ஒருபக்கம் கடலாவது இருந்தது இவர்களுக்கு கடலுக்கு அப்பாலும் சீனாக்காரன் நிக்கிறான். சிலவேளை யாராவது அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத்தமிழன்மீது பாரத்தைப்போட்டு விடுதலைப்புலி எனக்கூறினாலும் கூறலாம். 
    • மாசிகருவாட்டுக் குழம்பும் சோறும் அருமையான காம்பினேஷன்.......!  👍
    • இது நடைபெறுவதைத் தடுப்பது எங்கணம்? ஒரே வழிதான். சிங்கள பெளத்த பேரினவாத அரசு தொடர்ந்தும் இயங்குவதை முடக்குவது. இன்றிருக்கும் அதன் அதிகார பலத்தினை உடைத்து, அது கம்பீரமாக நிற்கும் வெற்றிமமதையிலிருந்து கீழே வீழ்த்தி தமிழருடன் சமரசத்தில் ஈடுபடுவதன்மூலம், அவர்களின் கோரிக்கைக்கு உடன்படுவதே ஒரே வழியெனும் நிலையினை உருவாக்குவது.  நாட்டினை தொடர்ந்து கொண்டுநடாத்துவதற்குத் தேவையான வருவாய்களை பேரினவாதம் பெற்றுக்கொள்ளும் வழிகளைத் தடுப்பது. உல்லாசப் பயணத்துறை, கைத்தொழில்ப் பேட்டைகள் மூலம் கிடைக்கும் வருவாய்களை முற்றாக முடக்குவது. பொருளாதார ரீதியில் தோல்வியடைந்த நாடாக மாற்றுவது.  இதனைச் செய்ய தமிழர்கள் தமக்கு முன்னால் இருக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவது அவசியமானது. அந்த வழிகள் என்னவென்று கண்டுபிடிப்பது இப்போதைக்குத் தேவையானது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.