Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பூஸ்டர் தடுப்பூசிக்கு... உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து பரிசீலனை :WHO அறிவிப்பு!

பூஸ்டர் தடுப்பூசிக்கு... உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை.

கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது.

சினோபோர்ம் மற்றும் சினோவக் தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு பைசர் அல்லது மடர்னா போன்ற தடுப்பூசிகளில் இருந்து மூன்றாவது டோஸ் வழங்குமாறு நிபுணர் ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

சினோபோர்ம் மற்றும் சினோவக் தடுப்பூசிகள் செயலற்ற வைரஸால் தயாரிக்கப்படுகின்ற அதே நேரத்தில் பைசர் மற்றும் மடர்னா தடுப்பூசிகள் வைரஸின் குரோமோசோம் மாதிரியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.

டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ. போன்ற ஒரு குரோமோசோம் தடுப்பூசியை, செயலற்ற வைரஸால் தயாரிக்கப்படும் தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு வழங்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் காட்டியுள்ளனர்.

இதற்கிடையில், குறைபாடுள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் அழைப்பு விடுத்துள்ளது.

தடுப்பூசி போட்டாலும் கூட, டெல்டா மாறுபாடு போன்ற வகைகளின் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்பதே இதற்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1244409

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மேற்கு முனையம் மாத்திரமல்ல ஏனைய உட்கட்டமைப்புகளிலும் கூட்டாண்மை - கௌதம் அதானி (எம்.மனோசித்ரா) கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக, அதானி குழுமம் ஏனைய உட்கட்டமைப்பு கூட்டாண்மைகளை ஆராயும் என்று அதானி குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் பிரபல வர்த்தகருமான கௌதம் அதானி குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடனான இந்தியாவின் வலுவான பிணைப்பு பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று உறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கௌதம் அதானி குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ள கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் அதானி குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் பிரபல வர்த்தகருமான கௌதம் அதானி நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 'இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ராஜபக்ஷவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக, அதானி குழுமம் ஏனைய உட்கட்டமைப்பு கூட்டாண்மைகளை ஆராயும். இலங்கையுடனான இந்தியாவின் வலுவான பிணைப்பு பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று உறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.' என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். பிரத்தியேக இரண்டு விமானங்களில் கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தனர். இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கௌதம் அதானி, மேற்கு முனைய அபிவிருத்தி மாத்திரமின்றி, எரிசக்தி துறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக 'த இந்து'  செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் செவ்வாயன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்ட போது , ' இலங்கைக்குள் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதற்காக செயற்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகள் அத்தியாவசியமானவையாகும். நாம் எதிர்கொள்ளும் டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வாகவும் , நாட்டின் அபிவிருத்திக்காகவும் குறித்த முதலீடுகளை பெற்றுக் கொள்வது விசேட காரணியாகும். தற்போது காணப்படுகின்ற நிலைமைகளின் கீழ் உலக நாடுகள் பலவற்றுடன் செயற்படும் போது முதலீட்டார்கள் குறைவாகக் காணப்படுகின்ற நாடு இலங்கை என்ற நிலைமையை சீராக்கி , நாட்டுக்கு முதலீட்டார்களை வரவேற்பது அவசியமாகும். அதற்கான வாய்ப்பினை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.' என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண பதிலளித்தார். இந்நிலையில் துறைமுகம், எரிசக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டம் தொடர்பில் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கௌதம் அதானி கலந்துரையாடவுள்ளதாகவும் த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.  இதனிடையே, இந்திய வர்த்தகர்கள் சிலர் செவ்வாய்கிழமை மாலை மன்னாருக்கு சென்றுள்ளனர். இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால ஆகியோரும் அவர்களுடன் அங்கு சென்றிருந்தார். கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்கை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலேயே அவரது விஜயம் அமைந்துள்ளது.  அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார வலயத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியான கௌதம் அதானியின் மகன், அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதற்கு முன்னர் இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டுத் திட்டமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டிருந்தது. தற்போதைய அரசாங்கம் அந்தத் திட்டத்தை நிறுத்தி, மேற்கு முனையத்தை அதானி குழுமம் தலைமையிலான கூட்டுத் திட்டத்திற்கு வழங்கியது.   https://www.virakesari.lk/article/116088  
    • மேற்கிந்தியத்தீவுகளை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தியது தென்னாபிரிக்கா மேற்கிந்தியத்தீவுகளை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தியது தென்னாபிரிக்கா தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (26) சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற இருபது 20 உலகக் கிண்ண குழு 1க்கான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தென் அபிரிக்கா 8 விக்கெட்களால் அமோக வெற்றிபெற்றது. தத்தமது முதலாவது போட்டிகளில் தோல்விகளைத் தழுவிய நிலையில் இன்றைய போட்டியில் வெற்றியை இலக்குவைத்து விளையாடிய இந்த இரண்டு அணிகளில் தென் ஆபிரிக்கா அதனை நிறைவேற்றிக்கொண்டது. ட்வெய்ன் ப்ரிட்டோரியஸின் துல்லியமான பந்துவீச்சு, ஏய்டன் மார்க்ராம், ரெசி வென் டேர் டுசென் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தன. இன்றைய போட்டியில் தென் ஆபிரிக்க அணியிலிருந்து முற்றிலும் எதிர்பாராதவிதமாக கடைசி நேரத்தில் தனிப்பாட்ட காரணத்துக்காக தானகவே நீங்கிக்கொள்வதாக குவின்டன் டி கொக் அறிவித்தார். அவருக்குப் பதிலாக ரீஸா ஹெண்ட்றிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டதுடன் ஹெய்ன்ரிச் க்ளாசென் விக்கெட் காப்பாளராக விளையாடினார். கறுப்பினத்தவரின் உயிர்களும் முக்கியம் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் முழந்தால்படியிட மறுத்த பின்னரே அவர் அணியிலிருந்து நீங்கிக்கொள்வதாக அறிவித்தார். இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 144 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 18.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. மொத்த எண்ணிக்கை வெறும் 4 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரரும் அணித் தலைவருமான டெம்பா பவுமா 2 ஓட்டங்களுடன் முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததும் தென் ஆபிரிக்கா சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ரெஸி வென் டேர் டுசென் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு பலம் சேர்தனர். ஹெண்ட்றிக்ஸ் 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரெசி வென் டேர் டுசென், ஏய்டன் மார்க்ராம் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச்செய்தனர். வென் டேர் டுசென் 43 ஓட்டங்களுடனும் ஏய்டன் மார்க் ராம் 26 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகள் அடங்கலாக 51 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள், எவின் லூயிஸ் குவித்த அதிரடி அரைச் சதத்தின் உதவியுடன் 20 ஒவர்களில் 8 விக்கெட்களை இழந்து 143 ஒட்டங்களைப் பெற்றது. எவின் லூயிஸ் 35 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸ்கள், 3 பவுண்ட்றிகளுடன் 56 ஓட்டங்களைக் குவித்தார். இவரை விட கீரன் பொலார்ட் (26), லெண்ட்ல் சிமன்ஸ் (18), நிக்கலஸ் பூரண் (12), கிறிஸ் கேல் (12) ஆகியோரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். இவர்களுடன் மற்றைய அதிரடி ஆட்டக்காரர்களான அண்ட்ரே ரசல், ஷிம்ரன் ஹெட்மியர், ட்வேன் ப்ராவோ ஆகியோர் துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டனர். தென் ஆபிரிக்க பந்துவீச்சில் சாதிக்க வல்லவர் என கருதப்பட்ட தப்ரெய்ஸ் ஷம்சி 37 ஓட்டங்கள் கொடுத்து விக்கெட் எதனையும் வீழ்த்தவில்லை. மாறாக 32 வயதான ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் திறமையாக பந்துவீசி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் கேஷவ் மஹாராஜ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.   (என்.வீ.ஏ.) https://www.virakesari.lk/article/116066    
    • கொரோனா போகவே மாட்டேன் என்கிறது  என்று பலர் பேச தொடங்கிவிட்டனர். அதை கவிதையாக தந்துள்ளீர்கள்.
    • 1971 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போர் : இந்தியாவுக்கு சாதகமாக அதிகார சமநிலையை சாய்த்தது - சிவசங்கர் மேனன் 1971 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போர், பங்காளதேசத்தை உருவாக்கியது. துணைக் கண்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக அதிகார சமநிலையை சாய்த்தது.  இவ்வாறான புறசூழலுக்கு  மத்தியில் இருமுனைப் போரின் மூலம் இந்தியாவை அச்சுறுத்தும் திறனை பாகிஸ்தான் இழந்து விட்டதாக முன்னாள் வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். தனிநபர் வருமானம் மற்றும் மனித வளர்ச்சிக் குறிகாட்டிகளின் அடிப்படையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை முந்தியதால் பங்களதேசம் இன்று வளர்ச்சி நாடாக உள்ளது.  இந்திய துணைக் கண்டத்தில், இருமுனைப் போரின் மூலம் இந்தியாவை அச்சுறுத்தும் திறனை பாகிஸ்தான் இழந்ததோடு, பல ஆண்டுகளாக வழக்கமான போரைத் தொடங்குவதற்கான நம்பிக்கையையும் இழந்துள்ளது.  இதன் விளைவு இந்தியாவுக்கு ஆதரவாக அதிகார சமநிலையை சாய்த்துள்ளது. 1971 ஆம் ஆண்டு போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங்கின் கீழ் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் இராஜதந்திரியான சிவசங்கர் மேனன் மேலும் குறிப்பிடுகையில்,  கார்கிலில் தோல்விக்கு பின்னர்  பாரம்பரியப் போரில் இந்தியாவுடன் ஒப்பிட முடியாது என்பதுடன் சீனா அல்லது அமெரிக்காவின் தலையீட்டை நம்ப முடியாது என்பதை இந்தப் போர் பாகிஸ்தானுக்குக் வெளிப்படுத்தியது. இதன் விளைவாக, பயங்கரவாதம் மற்றும் ஜிகாதி கொள்கையாகப் பயன்படுத்தி, வழக்கத்திற்கு மாறான வன்முறை வழியை பாகிஸ்தான் கையில் எடுத்தது.   பாகிஸ்தான் அதை ஒரு வழக்கமான அரச கொள்கையாக மாற்றியுள்ளது. குறிப்பாக 1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யாவிற்கு எதிரான ஜிஹாத் தனது செயற்பாட்டின் முறையை முழுமையாக்கியது எனவும் குறிப்பிட்டார். (இந்துஸ்தான் டைம்ஸ்)   https://www.virakesari.lk/article/116062  
    • நான் பௌத்தத்திற்கு எதிரானவன் அல்ல October 27, 2021   நான் பௌத்த மதத்திற்கு எதிரானவனும் அல்ல  மதவாதியும் அல்ல என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார் யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது. அதன் போது, நாக விகாரையின் விகாராதிபதி ஆரிய குளத்தின் புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு கோரி மாநகர முதல்வருக்கு, அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் சபையில் முதல்வர் தெரிவிக்கும்  போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நான் ஒரு மதவாதி அல்ல , அத்தோடு பௌத்த மதத்துக்கு எதிரானவும்அல்ல. நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன். அதனால் ஏனைய மதங்களுக்கு எதிரானவன் அல்ல. என்னை மதவாதி என சித்தரிக்கும் வகையில் நாகவிகாரை விகாராதிபதியினால் யாழ் மாநகர முதல்வர் என எந்தவித மரியாதையும் வழங்காது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே என்னை தவறான புரிதலுடன் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்கள் என விகாராதிபதிக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.  அப்பகுதி புனிதபிரதேசமாக இருக்க வேண்டும் நான் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் அந்த வகையில் நாம் எதிர்காலத்தில் அடையகூடிய தமிழ் தேசியத்தை ஒரு மதச் சார்பற்ற இடமாக அனைத்து மத மக்களும் தாம் விரும்பிய மதத்தை வழிபடுகின்ற அல்லது தங்களுடைய மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்ற இடமாக தமிழ்த்தேசம் கட்டி அமைக்கப்படும் என்றார்.   https://globaltamilnews.net/2021/167765    
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.