Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

முஸ்லிங்கள் மீதான தமிழ் தலைமைகளின் பாசம் வடகிழக்கை இணைக்க போடும் வேசமே.. Madawala News 5 hrs ago


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

PicsArt_10-12-11.23.30.jpg

மாளிகைக்காடு நிருபர்
தமிழ் பேசும் மாநிலங்களான வடக்கும் கிழக்கும் இணைந்ததான

 தீர்வொன்றினைத் தவிர வேறு எதனையும் ஏற்கமாட்டோம் என சம்பந்தன் அந்நேரத்தில் கூறியதும் இப்போது பாசம்காட்டி வேசமிட்டு கழுத்தறுக்க புதிய தமிழ் தலைமைகள் நினைப்பதும் அவர்கள்  இன்னமும் பாசிசப் புலிகளின் சித்தார்ந்தத்தில் இருந்து விடுபடவில்லை என்பதனை தெளிவாகக் காட்டுகிறது. தமிழ் பேசினாலும், நாங்கள் முஸ்லிம்கள் என்பதனை முதலில் தமிழ் தலைமைகள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், முஸ்லிங்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு மொழி, கலாச்சாரம் என்பன தமிழ் கலாச்சாரத்திலிருந்து வேறானதொன்றாகும் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். 
 
இன்று காலை அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு சமீபத்தைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், பெரும்பான்மை சிங்கள மக்களால், சிறுபான்மையாக வாழ்ந்த தமிழ் மக்கள் எவ்வாறான துன்பங்களை அனுபவித்தர்களோ, அதனை விட அதிகமான துன்பங்களை வடக்கில் வாழும் பெரும்பான்மை தமிழ் மக்களினால் முஸ்லிம் மக்கள் அனுபவித்தார்கள் என்பதனை தமிழ் தலைமைகளினால் மறுக்க முடியுமா? இனியும் முஸ்லிங்களினால் தமிழ் தலைமைகளை நம்ப முடியாது. நம்பி இன்னுமொரு முறை சோதித்துப் பார்க்க முஸ்லிங்கள் முட்டாள்களில்லை. 
 
இரவோடு இரவாக வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது இன்றுள்ள அனைத்து தமிழ் தலைமைகளும் இறந்து போகாமல் உயிருடன்தான் இருந்தனர், அவர்களில் ஒருவர் கூட இது தவறு முஸ்லிம்களும் எமது சகோதரர்கள் தான் என கூற நாவு துடிக்காமல் போனதன் மூலம் தமிழ் தலைமைகளின் வரண்டுபோன இதயத்தைக் காட்டுகிறது.  அதனைவிடவும் அங்கு வாழ்ந்த முஸ்லிம்களுக்கு குறைந்தது ஒரு தமிழ் நண்பர் இருந்திருந்தால் கூட 5000 தமிழ் நண்பர்கள் இருந்திருப்பார்கள், இவர்களில் 5 பேராவது வெளியில் வந்து பசித்த வயிறோடும், கோர வெயிலில் வெறும் காலோடும் நின்று கொண்டிருந்த தமது முஸ்லிம் நண்பர்களுக்கு குடிக்க தண்ணீராவது கொடுத்தார்களா? என்பதை வரலாற்றை மீட்டிப்பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். 
 
அன்றைய நாட்களில் முஸ்லிங்களிடமிருந்து சூறையாடப்பட்ட விலை உயர்ந்த பொருட்களையெல்லாம் மறுநாள் புலிகள் ஏலத்தில் விட்டபோது முண்டியடித்துக் கொண்டு வாங்க முற்பட்டது தமிழ் நண்பர்கள்தான் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. முஸ்லிம் மக்கள் பட்ட துயரை கண்டும் காணாதது போல் கண்பொத்தி வாய்மூடி மௌனியாக இருந்த தமிழ் மக்களை இறைவன் தண்டிக்காமல் இல்லை. எங்கள் பகுதிகளில் மிருகங்களைக்கூட கம்புகளை நாட்டி இரண்டு வரியில் கம்பி இட்டு அடைத்து வைப்பர், ஆனால் வடக்கு தமிழ் மக்களை மெனிக் பாமில் 9 பட்டுக் கம்பியால் சுத்தப்பட்ட கூண்டுக்குள் மிருகங்களை விடவும் மோசமாக அடைத்து வைத்திருன்தனர், இதனை நான் சுட்டிக் காட்டுவது அம்மகளை நோவினை செய்வதற்காக அல்ல கண்முன்னே அநீதி நடந்தும் கண்கெட்டவர்கள்போல் இருந்தமையின் விளைவுகளால் ஏற்பட்ட வரலாற்றை புதிதாக வேடமிடுபவர்களுக்கு நினைவுபடுத்தவே விரும்புகிறேன். .
 
தமிழ் தலைமைகள் வரலாறுகளை திரும்பிப் பார்க்கவேண்டும். அவர்களின் முன்னாள் நிறைய துரோக சம்பவங்கள் உள்ளதை அறிந்துகொள்வார்கள்.  பள்ளிவாயல்களுக்குள் முஸ்லிம்கள் சுடப்பட்டது, வயல் காணிகளுக்கு கப்பம் அறவிட்டது, முஸ்லிம் வீடுகளுக்குள் புகுந்து கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என மூச்சு விடாமல் எங்களால் வரலாற்றில் நடந்த கோர சம்பவங்களையும் கூற முடியும். அப்போதெல்லாம் வாய்மூடி மௌனியாக இருந்த தமிழ் தலைமைகளை பற்றி நாங்கள் அறிந்து கொண்டோம். அவர்கள் மின்னுவது போன்று  தங்கமல்ல. ஆகவே போலியை இன்னுமொருமுறை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
 
கடல் நீர் என்ற அடிப்படையில் கருங்கடலும் செங்கடலும் ஒட்டி இருந்தாலும் இரண்டற கலக்காமல் தனித்தனியாக இருப்பது போன்று இருக்கவே முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர், அதனால் தான் விருப்பத்துக்கு மாற்றமாக இணைக்கப்பட்ட வடகிழக்கை சட்டரீதியாக பிரித்தனர்.  வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பது என்பது தமிழ் தலைமைகளின் கனவாக இருந்துவிட்டுப்போகட்டும். மாறாக இணைப்பதற்கு முற்பட்டால் அதனை தடுத்து நிறுத்த வடக்கு கிழக்கு முஸ்லிங்கள் தயாராக இல்லை என்றார்.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதுகள் கிணத்துத் தவளைகள்.....

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Posts

  • இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 35 000 கண்கள் யாருடையவை? சர்ச்சை பதிவு! கண் தானமாக இலங்கையிடமிருந்து 35,000 விழிவெண்படலங்களை பாகிஸ்தான், பெற்றதாக அந்நாட்டின் மருத்துவர் ஒருவர் கூறியிருந்தார். சியால்கோட்டில் இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமார தியவதனவை ஒரு குழுஅடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரங்கல் தெரிவிக்கையில் குறித்த கண் மருத்துவர் இத்தகவலை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 35 000 கண்கள் யாருடையவை என மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன்  பதிவொன்றினை தனது முகநூலில் இட்டுள்ளார். https://jvpnews.com/article/35-000-eyes-were-donated-sri-lanka-to-pakistan-1638793766   இந்நிலையில் அவரது  இப்பதிவானது பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
  • கொல்லப்பட்டவர் கிறிஸ்தவராக, இலங்கையராக  இருப்பினும் கண்டிக்க மனம் வரவில்லை.  கீழுள்ள சம்பவம் தான் கண்முன்னே வந்து செல்கிறது  
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • பறவைகளின் உலகம் விசித்திரமானது அதிலும் காகங்கள் இன்னும் புத்தி கூர்மையானவை மூன்றாய் இருந்த எண்ணிக்கையை பத்துக்கு  மேல் கொண்டுவந்துள்ளேன் இந்தவிடயத்தில் விவசாயி விக்குக்கு நன்றி சொல்லணும் . தொண்டமானறு வெளிக்கள நிலையத்தில் ஒருவாரம் தங்கி இருக்க வேண்டி வந்தது ஒவ்வொரு விடியலும் சொர்க்கம் மறு  ஆண்டு ஆமி ஆக்கிரமித்தது அங்கிருந்த அரிதான பொருட்களை இடைக்காடில் உள்ள நாட்சார் வீடொன்றில் கொண்டுபோய் அடுக்கியது நியாபகம் உள்ளது .ஆனால் காட்டுக்கூட்டம் போல் இடை ஆறுதல் தேடிவந்த பறவையை என் கண்பார்வையில் யாரும் கொல்லவில்லை  கொல்லவும்  விடவில்லை .
  • இந்தியாவில் போனை அணைத்துவிட்டு குப்புறப்படுத்துகிடந்துவிட்டு  தமிழர்களுக்கு தீர்வு வாங்கித்தரவந்த கூத்தாடி Proxy க்களை அப்போதே அடித்து திரத்தாமல்  அவர்களோடு சேர்ந்து 11 வருடங்களாக கூத்தாடிய அனைவரும் இந்தப்பலவீனமான நிலைக்கு காரணம்  அதாவது யானை தன்மீதே மண்ணை வாரியிறைத்தது போல..... ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்  என்று சிந்திய இரத்தச் சூடு அடங்கும் முன் கூத்தாடிகளுடன் சேர்ந்து  கூத்தாடி யுத்தக்குற்றவாளி  பொன்சேகாவுக்கு குத்தோ குத்து என்று குத்தினோமோ அன்றோடு எல்லாமே கம்மாஸ். தேசியமெல்லாம் ஜஸ்டு புஸ்வாணம், ICU இல் மூச்சை இழுக்கும் 13 இற்கு இந்திய ,அமெரிக்க  CPR கொடுத்து கொஞ்சம் எழுப்பி பார்க்கலாம் அம்புட்டுத்தே ,பார்த்து  13 இற்கு மூச்சு வருதாம் என்ற விடயம்  இலங்கை அரசு காதில் விழுந்தாலே போதும்  பியூஸயே புடுங்கிடும். 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.