Jump to content

கடவுளை நம்புபவன்


Recommended Posts

கடவுளை நம்புகிறான்
சாஸ்திரத்தை நம்புகிறான் 
சோதிடத்தை நம்புகிறான்

விதியை நம்புகிறான்
செய்வினையை நம்புகிறான்

தேசிக்காயை நம்புகிறான்
பூசணிக்காயை நம்புகிறான்

சாமியாரை நம்புகிறான்
சிறு துண்டு கயிற்றை நம்புகிறான்

ஆனால்! அவன்,

உன்னையும் நம்புவதில்லை
என்னையும் நம்புவதில்லை

ஏன்?

அவன் தன்னையும் நம்புவதில்லை

இப்படி இருக்கையில் அவனுக்கு
எப்படிக்கிடைக்கும் நிம்மதி
எப்போ மலரும் புன்னகை?

                 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, tulpen said:

கடவுளை நம்புகிறான்
சாஸ்திரத்தை நம்புகிறான் 
சோதிடத்தை நம்புகிறான்

விதியை நம்புகிறான்
செய்வினையை நம்புகிறான்

தேசிக்காயை நம்புகிறான்
பூசணிக்காயை நம்புகிறான்

சாமியாரை நம்புகிறான்
சிறு துண்டு கயிற்றை நம்புகிறான்

ஆனால்! அவன்,

உன்னையும் நம்புவதில்லை
என்னையும் நம்புவதில்லை

ஏன்?

அவன் தன்னையும் நம்புவதில்லை

இப்படி இருக்கையில் அவனுக்கு
எப்படிக்கிடைக்கும் நிம்மதி
எப்போ மலரும் புன்னகை?

                 

கடவுள் என்றாலே “சைவம் / இந்து “ என்று ஏற்றுக் கொண்டீர்களே அந்த மனசு தான் ஐயா இறைவனின் அருள்.

எல்லாம் வல்ல ஆடல்வல்லான் அம்பலத்தரசன் திருப்பெருந்துறையுறை சிவனின் அருளாசிகள் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் கிட்டட்டும் - சிவாய நம - மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

அன்பே சிவம் 🙏, வாழ்க வளமுடன்.

Link to comment
Share on other sites

1 hour ago, MEERA said:

கடவுள் என்றாலே “சைவம் / இந்து “ என்று ஏற்றுக் கொண்டீர்களே அந்த மனசு தான் ஐயா இறைவனின் அருள்.

எல்லாம் வல்ல ஆடல்வல்லான் அம்பலத்தரசன் திருப்பெருந்துறையுறை சிவனின் அருளாசிகள் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் கிட்டட்டும் - சிவாய நம - மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

அன்பே சிவம் 🙏, வாழ்க வளமுடன்.

நன்றி என்னை வாழ்த்தியதற்கு நன்றிகள். நீங்கள் தனியவே அந்த வாழ்த்தை தெரிவித்திருந்தால் இன்னும் மகிழ்சசியடைந்திருப்பேன். 

கடவுள் என்றால் சிவன் மட்டும் தான் என்று நீங்கள் நம்புவதால் இந்த சாஸ்திரம், செவ்வாய் தோசம், ஏழரைச்சனி, பரிகாரம், எங்கோ இலங்கையில் குழந்தை பிறந்தால் இங்கு துடக்கு கோவிலுக்கு செல்லக்கூடாது , எள் எண்ணெய் எரித்தால் satun  வந்து help பண்ணும்  போன்ற சைவம்/ இந்து கூறிய  மடைத்தனங்களை நம்பாமல் சிவனை மட்டுமே நம்ப உங்களுக்கும்  எனது வாழ்ததுக்கள். 

இது எல்லா மதங்களும் கூறும் மூடத்தனங்களை நம்புபவர்களுக்கும் பொருந்தும். 

Link to comment
Share on other sites

30 minutes ago, tulpen said:

கடவுள் என்றால் சிவன் மட்டும் தான் என்று நீங்கள் நம்புவதால் இந்த சாஸ்திரம், செவ்வாய் தோசம், ஏழரைச்சனி, பரிகாரம், எங்கோ இலங்கையில் குழந்தை பிறந்தால் இங்கு துடக்கு கோவிலுக்கு செல்லக்கூடாது , எள் எண்ணெய் எரித்தால் satun  வந்து help பண்ணும்  போன்ற சைவம்/ இந்து கூறிய  மடைத்தனங்களை நம்பாமல் சிவனை மட்டுமே நம்ப உங்களுக்கும்  எனது வாழ்ததுக்கள். 

இது எல்லா மதங்களும் கூறும் மூடத்தனங்களை நம்புபவர்களுக்கும் பொருந்தும். 

நமக்கு தெரிந்தது கைமண்ணளவு, தெரியாதது உலகளவு. நமக்கு புரியாதவற்றை மூடத்தனம் என்ற முடிவுக்கு வருவது சரியானதல்ல. Cosmology பற்றி படியுங்கள் - சிவபெருமானை காண்பீர்கள். இலத்திரன்கள் புரோத்தனை சுற்றுவதற்கும் புரோத்தோனுக்குள் குவாக்குகள் சுற்றுவதற்கும், கோள்கள் சூரியனை சுற்றுவதற்கும், அண்டசராசரங்கள் சுற்றுவதற்கும், அணுக்களால் பொருட்கள் அமைந்திருப்பதற்கும்  உள்ள ஒற்றுமையை கண்டால் எங்களை பக்ரீரியாக்களின் அளவில் பார்க்கும், அண்டசராசரங்களை கற்களாக காணும் இன்னுமொரு பரிமாணத்தில் இறைவனை காண்பீர்கள்.

Link to comment
Share on other sites

5 minutes ago, கற்பகதரு said:

நமக்கு தெரிந்தது கைமண்ணளவு, தெரியாதது உலகளவு. Cosmology பற்றி படியுங்கள் - சிவபெருமானை காண்பீர்கள். இலத்திரன்கள் புரோத்தனை சுற்றுவதற்கும் புரோத்தோனுக்குள் குவாக்குகள் சுற்றுவதற்கும், கோள்கள் சூரியனை சுற்றுவதற்கும், அண்டசராசரங்கள் சுற்றுவதற்கும், அணுக்களால் பொருட்கள் அமைந்திருப்பதற்கும்  உள்ள ஒற்றுமையை கண்டால் எங்களை பக்ரீரியாக்களின் அளவில் பார்க்கும், அண்டசராசரங்களை கற்களாக காணும் இன்னுமொரு பரிமாணத்தில் இறைவனை காண்பீர்கள்.

ஆக மொத்தம் வாழ்ககையை சுய அறிவுடன் ஜாலியாக enjoy பண்ணி வாழாமல் பைத்தியமாகி ஜாலியாக வாழவேண்டும்.  அப்படி தானே? (இமயமலை சாரலில் சிவமூலிகை -கஞ்சாபுகைத்து  ஜாலியாக வாழ்பவர்கள் போல)

😂😂😂😂😂

Link to comment
Share on other sites

5 hours ago, tulpen said:

ஆக மொத்தம் வாழ்ககையை சுய அறிவுடன் ஜாலியாக enjoy பண்ணி வாழாமல் பைத்தியமாகி ஜாலியாக வாழவேண்டும்.  அப்படி தானே? (இமயமலை சாரலில் சிவமூலிகை -கஞ்சாபுகைத்து  ஜாலியாக வாழ்பவர்கள் போல)

😂😂😂😂😂

சின்ன சின்ன கேள்விகள்:

  1. உங்களுடைய தற்போதைய அறிவு சுய அறிவா, அல்லது Cosmology போன்ற பல துறைகளலும் ஊட்டப்பட்ட சுயமற்ற அறிவா?
  2. உங்களுக்கு இப்போது பைத்தியமில்லை என்று நீங்கள் நினைப்பது சரியானதா?

 

Link to comment
Share on other sites

3 minutes ago, கற்பகதரு said:

சின்ன சின்ன கேள்விகள்:

  1. உங்களுடைய தற்போதைய அறிவு சுய அறிவா, அல்லது Cosmology போன்ற பல துறைகளலும் ஊட்டப்பட்ட சுயமற்ற அறிவா?
  2. உங்களுக்கு இப்போது பைத்தியமில்லை என்று நீங்கள் நினைப்பது சரியானதா?

 

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை என்று கூறிவிட்டு,   “என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை”, என்று பெரிய பெரிய ஆசைகளை கூறியது போல் சின்ன சின்ன கேள்விகள் என்று பெரிய கேள்விகளை  கேட்டுள்ளீர்கள். உங்கள் கேள்விக்கு  பதில் கூறும் வல்லமை எனக்கில்லை. stephen hawking  எழுதிய brief answers to the big questions என்ற புத்தகத்தில் உங்கள் கேள்விகளுக்கு பதில் கூற அவர் முயற்சித்துள்ளார்.  அதனை வாசித்து முழுமையாக புரியும் ஆற்றலும் எனக்கில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

சிவனை மட்டுமே நம்ப உங்களுக்கும்  எனது வாழ்ததுக்கள். 

சம்பந்தர் தேவாரத்தில் கோளறு(கோள் அறு) பதிகம் இதையே சொல்கிறது. " என் ஐயன் சிவனின் அருள் இருக்கையில் சனி முதலான கோள்கள் என்னை என்ன செய்ய இயலும் ?"  என்பதே கோளறு பதிகத்தின் கருப்பொருள். (இறை மறுக்கும் நான் இதன் மூலம் சைவத்தைப் போதிக்கிறேன் என்று பொருளில்லை. 'சிவன் ஒருவனே உங்களுக்குப் போதும்; கோள்களைக் கட்டி அழ வேண்டியதில்லை' என்று சம்பந்தர் மூலமாக சைவ சமயத்தவர்க்குச் சொல்வதாய்க் கொள்ளலாம்).

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது.  2019  மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார்.  போட்டி என்பதே இருக்காது😂
    • ஏது முதல் இலங்கைத் தமிழரா?  டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁 இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதானலை பெரிசா போட்டுக்காட்டுராங்கள்.  வேறொன்டுமில்லை!
    • சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣
    • அப்ப நீங்களும் நம்ம கேஸ்...ஆ  😂 திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽 
    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.