Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நிற்க நேரமில்லாமல் உழைத்ததற்கு கிடைத்த வெற்றி: முதல்வர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிற்க நேரமில்லாமல் உழைத்ததற்கு கிடைத்த வெற்றி: முதல்வர்!

spacer.png


மக்கள் மத்தியில் ஐந்தாண்டில் கிடைக்க வேண்டிய நம்பிக்கை 5மாதத்தில் கிடைத்துவிட்டது என்று உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, இரண்டு நாட்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 2 மணிக்கு மேல் முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வரையிலான நிலவரப்படி,

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம்: தி.மு.க. - 70, காங்கிரஸ் - 6. அ.தி.மு.க-0

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம்: தி.மு.க. - 700, அ.தி.மு.க. - 144, சி.பி.ஐ. - 3, சி.பி.எம். - 4, பா.ஜ.க. - 7, தே.மு.தி.க. - 1, காங்கிரஸ் - 30, ம.தி.மு.க. - 14, அ.ம.மு.க. - 4, பா.ம.க. - 32, வி.சி.க. - 11, சுயேச்சைகள் - 72.

தேர்தல் முடிவு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், “ ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான மாபெரும் வெற்றியைப் பெற்று வரும் செய்தி, கடந்த ஐந்து மாத திமுக ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்தபோது ஒருபக்கம் மருத்துவ நெருக்கடி - இன்னொரு பக்கம் பொருளாதார நெருக்கடி. இரண்டும் சூழ்ந்த இக்கட்டான காலகட்டத்தில் திமுக அரசு அமைந்தது. எனினும் அனைத்துத் தரப்பினரின் தேவைகளையும் அறிந்து நிறைவேற்றிக் கொடுத்தோம்.

ஆட்சிப் பொறுப்பேற்கும்போது இருந்த நிதி நெருக்கடி என்பது சொற்களால் சொல்ல முடியாதது ஆகும். கஜானா காலியான நிலை மட்டுமல்ல, கடனுக்கு மேல் கடன் வாங்கியதன் மூலமாக வட்டிக்கு மேல் வட்டி கட்ட வேண்டிய நிலையில் ஆட்சியை வைத்துவிட்டுப் போயிருக்கிறது கடந்தகால அதிமுக அரசு. அதற்காக நிதிநெருக்கடியைக் காரணமாகக் காட்டி தப்பிக்கப் பார்க்க வில்லை.

மிகக்கடுமையான நிதிநெருக்கடி இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளில் 200்க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டினோம்; நிறைவேற்றியும் வருகிறோம்.

நிற்க நேரமில்லை என்கிற அளவுக்கு நானும், அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் உழைத்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இருந்த செல்வாக்கை விட, இந்த ஐந்து மாத காலத்தில் செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது என்பதை நான் சொல்லி வந்தேன். இது ஏதோ எனது அனுமானம் அல்ல, நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பதை ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நாட்டுக்குக் காட்டி இருக்கிறது.

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது திமுக அரசு என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம். தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் கொடுத்துள்ள வெற்றி எங்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. ஊக்கமளிப்பதாக உள்ளது. மேலும் உங்களுக்காக உழைக்கத் தூண்டுகிறது.

ஐந்தாண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதத்தில் பெற்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன்.

இந்த மாபெரும் வெற்றிக்காக உழைத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர், அனைத்துக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சக்கணக்கான உடன்பிறப்புகள், தொண்டர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சத்தின் அடியாழத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி உங்கள் உழைப்பால், வியர்வையால் கிடைத்ததாகும்.

அரசின் திட்டப்பணிகளைக் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத்தான் இருக்கிறது. எத்தகைய நல்ல திட்டங்களை கோட்டையில் இருந்து உத்தரவிட்டாலும் அதனைக் குக்கிராமத்தில் வாழும் மக்களின் வாசலில் நிறுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளே; அதன் பிரதிநிதிகளான நீங்கள்தான். அதனை நெஞ்சில் வைத்து நீங்கள் அனைவரும் மக்களுக்காக உழைக்க வேண்டும். வெற்றிக் கொண்டாட்டங்கள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தா வகையில் அமையட்டும்” என்று கூறியுள்ளார்.
 

https://minnambalam.com/politics/2021/10/13/22/local-body-election-cm-stalin-statement

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்.. அப்பர் விடுதலைப்புலிகள் தன்னை கொல்லப் பார்க்கிறார்கள் என்று வைகோ வெளில தூக்கி எறிந்தார்.. புலிகளை தமிழ் மக்களை அழித்து குடும்ப அரசியல் செய்தார்... இவர் புலிப் புத்துயிர்ப்பு பூச்சாண்டி காட்டி ஒரு இனத்தின் வலிமீது சவாரி செய்து கொண்டு மிகக் கீழ்த்தரமான அரசியல் செய்வதெல்லாம்.. நிற்க நேரமில்லாத உழைப்புத்தான். இருந்து கொண்டு போனைப் போட்டு சொன்னாலே போதும்.. ஏஜென்டுகள்.. இவர்களுக்கு தேவையானதை செய்து.. செய்தியாக்கிவிடுவார்களே. 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாணக்கியன்... நம்பிக்கைக்கு உரியவர் அல்ல – டக்ளஸ் குற்றச்சாட்டு! தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நம்பிக்கையில்லாத ஒருவர்  என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தியக் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற எல்லை தாண்டிய அத்துமீறிய சட்ட விரோத தொழில்முறைக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இழுவை வலை தடைச் சட்டம் பயன்படுத்தப்படாமையினாலேயே இந்தியக் கடற்றொழிலாளர் அதிகளவில் எல்லை தாண்டி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த கடற்றொழில் அமைச்சர், குறித்த சட்டத்தினை உருவாக்கியபோது, மூன்றிலிரண்டு பெரும்பாண்மையை பெற்றுக் கொள்வதற்காக ஈ.பி.டி.பி. கடசியும் ஆதரவளித்திருந்தமையை சுட்டிக்காட்டினார். மேலும், தம்மால் உருவாக்கப்பட்ட ஆட்சிக் காலத்தில் குறித்த சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள், தமது ஆட்சிக் காலத்தில் இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக குறித்த சட்டத்தினை பிரயோகிக்கவில்லை எனவும் தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இழுவை வலைச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் சுமார் 100 இற்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்ட போதிலும், அவைக்கு எதிராக இழுவை வலைத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். எனினும், தற்போது குறித்த சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில், தமிழரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அவர்களின் ஆதரவாளர்களும் இணைந்து முல்லைத் தீவில் இருந்து பருத்திதுறை வரை மேற்கொண்ட கடற் பயணம் தொடர்பாக அலட்டிக் கொள்ளவில்லை எனவும் அது தோல்வியில் முடிவடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது அந்தோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஒரு நம்பிக்கை அற்றவர் எனவும் அவர் கடந்த காலங்களில் எங்கு இருந்தார், தற்போது எங்கு இருக்கிறார், நாளை எங்கு செல்வார் என்பது  அனைவருக்கும் தெரியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார் https://athavannews.com/2021/1245744
    • "குஷிநகர்" விமான நிலைய திறப்பு – நாமல் உள்ளிட்ட குழுவினர் அடங்கிய முதல் விமானம் இந்தியாவுக்குப் பயணம்! இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான முதலாவது விமானம் இலங்கையிலிருந்து இன்று அதிகாலை 5.20 மணியளவில் புறப்பட்டுச் சென்றுள்ளது. ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 1147 என்ற விமானமே இவ்வாறு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த விமானத்தில், அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தின் 95 பௌத்த தேரர்கள் சென்றுள்ளனர். அவர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பயணத்தில் பங்கேற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2021/1245771
    • கறுவா ஒரு கிலோகிராம் 3 ஆயிரத்து 400 ரூபாயாக அதிகரிப்பு கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையும் உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளன. அதற்கமைய, உள்நாட்டுச் சந்தையில் 500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த மிளகு கிலோவொன்றின் விலை தற்போது 900 ரூபாயாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதுதவிர, கறுவா ஒரு கிலோகிராம் 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும் கிராம்பு ஒரு கிலோகிராம் ஆயிரத்து 400 ரூபாயாகவும் அதிகரித்துள்ளன. அத்துடன், ஒரு கிலோகிராம் கோப்பி ஆயிரத்து 250 ரூபாயாக அதிகரித்துள்ளதோடு, ஒரு கிலோ பாக்கு ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2021/1245778
    • கிரிப்டோ நல்ல முதலீடு தான் ,நான் doge coin  0.09 $ வாங்கினேன் அது கிட்டதட்ட .50$ வரை ஏறி இப்போது இறங்கி இருக்கிறது ,நான் குறைந்த விலையில் வாங்கி இருந்ததனால் லாபமே, இப்போது shiba inu coin வாங்கி உள்ளேன் ,ஒரு 50யூரோ. / பவுண்/ டொலர் நட்டம் ஆனால் கூட பரவாயில்லை போனால் போகட்டும் என மன நிலை இருப்போர்  50 ற்கு இதை வாங்கி பாருங்கள் 0.1ற்கு இந்த வருட இறுதியில் வரும் என்கிறார்கள் 
    • பாகிஸ்தானில்... இந்திய நீர்மூழ்கி கப்பல், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு! பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரங்கள் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கடற்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த 2016 மற்றும் 2019இல் இந்திய இராணுவத்தின் இது போன்ற ஊடுருவல் முயற்சியை பாகிஸ்தான்  கடற்படை முறியடித்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1245786
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.