Jump to content

நிற்க நேரமில்லாமல் உழைத்ததற்கு கிடைத்த வெற்றி: முதல்வர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிற்க நேரமில்லாமல் உழைத்ததற்கு கிடைத்த வெற்றி: முதல்வர்!

spacer.png


மக்கள் மத்தியில் ஐந்தாண்டில் கிடைக்க வேண்டிய நம்பிக்கை 5மாதத்தில் கிடைத்துவிட்டது என்று உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, இரண்டு நாட்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 2 மணிக்கு மேல் முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வரையிலான நிலவரப்படி,

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம்: தி.மு.க. - 70, காங்கிரஸ் - 6. அ.தி.மு.க-0

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம்: தி.மு.க. - 700, அ.தி.மு.க. - 144, சி.பி.ஐ. - 3, சி.பி.எம். - 4, பா.ஜ.க. - 7, தே.மு.தி.க. - 1, காங்கிரஸ் - 30, ம.தி.மு.க. - 14, அ.ம.மு.க. - 4, பா.ம.க. - 32, வி.சி.க. - 11, சுயேச்சைகள் - 72.

தேர்தல் முடிவு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், “ ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான மாபெரும் வெற்றியைப் பெற்று வரும் செய்தி, கடந்த ஐந்து மாத திமுக ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்தபோது ஒருபக்கம் மருத்துவ நெருக்கடி - இன்னொரு பக்கம் பொருளாதார நெருக்கடி. இரண்டும் சூழ்ந்த இக்கட்டான காலகட்டத்தில் திமுக அரசு அமைந்தது. எனினும் அனைத்துத் தரப்பினரின் தேவைகளையும் அறிந்து நிறைவேற்றிக் கொடுத்தோம்.

ஆட்சிப் பொறுப்பேற்கும்போது இருந்த நிதி நெருக்கடி என்பது சொற்களால் சொல்ல முடியாதது ஆகும். கஜானா காலியான நிலை மட்டுமல்ல, கடனுக்கு மேல் கடன் வாங்கியதன் மூலமாக வட்டிக்கு மேல் வட்டி கட்ட வேண்டிய நிலையில் ஆட்சியை வைத்துவிட்டுப் போயிருக்கிறது கடந்தகால அதிமுக அரசு. அதற்காக நிதிநெருக்கடியைக் காரணமாகக் காட்டி தப்பிக்கப் பார்க்க வில்லை.

மிகக்கடுமையான நிதிநெருக்கடி இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளில் 200்க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டினோம்; நிறைவேற்றியும் வருகிறோம்.

நிற்க நேரமில்லை என்கிற அளவுக்கு நானும், அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் உழைத்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இருந்த செல்வாக்கை விட, இந்த ஐந்து மாத காலத்தில் செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது என்பதை நான் சொல்லி வந்தேன். இது ஏதோ எனது அனுமானம் அல்ல, நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பதை ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நாட்டுக்குக் காட்டி இருக்கிறது.

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது திமுக அரசு என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம். தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் கொடுத்துள்ள வெற்றி எங்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. ஊக்கமளிப்பதாக உள்ளது. மேலும் உங்களுக்காக உழைக்கத் தூண்டுகிறது.

ஐந்தாண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதத்தில் பெற்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன்.

இந்த மாபெரும் வெற்றிக்காக உழைத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர், அனைத்துக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சக்கணக்கான உடன்பிறப்புகள், தொண்டர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சத்தின் அடியாழத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி உங்கள் உழைப்பால், வியர்வையால் கிடைத்ததாகும்.

அரசின் திட்டப்பணிகளைக் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத்தான் இருக்கிறது. எத்தகைய நல்ல திட்டங்களை கோட்டையில் இருந்து உத்தரவிட்டாலும் அதனைக் குக்கிராமத்தில் வாழும் மக்களின் வாசலில் நிறுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளே; அதன் பிரதிநிதிகளான நீங்கள்தான். அதனை நெஞ்சில் வைத்து நீங்கள் அனைவரும் மக்களுக்காக உழைக்க வேண்டும். வெற்றிக் கொண்டாட்டங்கள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தா வகையில் அமையட்டும்” என்று கூறியுள்ளார்.
 

https://minnambalam.com/politics/2021/10/13/22/local-body-election-cm-stalin-statement

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்.. அப்பர் விடுதலைப்புலிகள் தன்னை கொல்லப் பார்க்கிறார்கள் என்று வைகோ வெளில தூக்கி எறிந்தார்.. புலிகளை தமிழ் மக்களை அழித்து குடும்ப அரசியல் செய்தார்... இவர் புலிப் புத்துயிர்ப்பு பூச்சாண்டி காட்டி ஒரு இனத்தின் வலிமீது சவாரி செய்து கொண்டு மிகக் கீழ்த்தரமான அரசியல் செய்வதெல்லாம்.. நிற்க நேரமில்லாத உழைப்புத்தான். இருந்து கொண்டு போனைப் போட்டு சொன்னாலே போதும்.. ஏஜென்டுகள்.. இவர்களுக்கு தேவையானதை செய்து.. செய்தியாக்கிவிடுவார்களே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.