Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஆயுத கடத்தலுடன் முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பு: உதவி கோருகிறது இந்தியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ஹெரோய்ன் கடத்தலில் ஈடுபட்டுள்ள தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மீதான விசாரணையை முன்னெடுப்பதற்கு, இலங்கை அரசாங்கத்தின் உதவியை நாட இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் கீழ், சந்தேக நபர்கள் குறித்த தகவல்களைப் பெறுமாறு, அந்த நிறுவனம் இலங்கை அராங்கத்துக்கு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்திருப்பதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம், பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஹெரோய்ன் ஆகியவற்றுடன் மீன்பிடி கப்பலுடன் ஆறு இலங்கையர்கள், இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவரும் மூன்று இலங்கையர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறான கட்டத்தல்கள் மூலம் பெறப்படும் பணத்தை, புலிகள் அமைப்பை புத்துயிர் அளிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் மற்றொரு புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும் தொடர்புபட்டிருப்பதாகவும், இந்திய புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, தற்போது இலங்கையில் இருப்பதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்குமாறு, இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு, இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவிய போது, இது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு  விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

Tamilmirror Online || ஆயுத கடத்தலுடன் முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பு: உதவி கோருகிறது இந்தியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

இவ்வாறான கட்டத்தல்கள் மூலம் பெறப்படும் பணத்தை, புலிகள் அமைப்பை புத்துயிர் அளிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் மற்றொரு புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும் தொடர்புபட்டிருப்பதாகவும், இந்திய புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த கதையை பார்த்து கோத்தா விழுந்து விழுந்து சிரிக்கப்போறார் .

அப்துல்கலாம் சொன்னது போல் கனவு கண்டால் இந்தியா வல்லரசாக்கலாம் என்றது போல் இந்திய புலனாய்வு துறை சம்பளத்தை வாங்கிவிட்டு கனவு காண்கிறார்கள் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.