Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இப்படியும் நடக்கலாம்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

large.De-aarde-CC0-Pixabay.jpg.d85b6e647ee6f291a788ecfe7676fddb.jpg

 

என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. 

எனி வரும் காலம் பற்றி முளித்திருக்கவே வந்த கனவிது.

 

இப்படியும் நடக்கலாம்..!

*****************

வேலை ரோபோக்கள் வீடெங்கும் திரியலாம்

விரும்பிய சமையலறை காணாமல் போகலாம்

மூன்று வேளையுணவும் மாத்திரையாகலாம்

முளித்திருக்க கதிர்வீச்சால் உறுப்பும் திருடலாம். 

 

சந்திரன் செவ்வாய்க்கு ரொக்கட் பறக்கலாம்

சரித்திர தேடல்கள் குழி வெட்டிப்புதைக்கலாம்

சுவாசிக்கும் காற்றும் காசுக்கு விற்கலாம்-எம்

சுயசரிதை சொல்ல சிப்பொன்றும் வைக்கலாம்.

 

பிறப்பு வீதத்தை ஐம்பதால் குறைக்கலாம்

பிறந்த பின் வீரத்தை கோழையாய்யாக்கலாம்

வயோதிப மரங்களை ஊசியால் சாய்க்கலாம்

வயது வரமுன்னே பெரியவர் போலாக்கலாம்.

 

ஓரினச் சேர்க்கைக்கு ஊதியம் கொடுக்கலாம்

உலக வரைபடம் உருமாற்றிக் கீறலாம்

நாட்டு எல்லைகள் இல்லாமல் போகலாம்

நலிந்த இனங்களை நசுக்கியே கொல்லலாம்.

 

புத்தகபடிப்புகள்  பொசுக்கி எரியலாம்

புதுப்புது நோய் செய்து போரும் நடத்தலாம்

காட்டு விலங்குபோல் மனிதனைஆக்கலாம்

காசு முதளைகள் உலகத்தை ஆளலாம்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி.

13.10.2021

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கற்பனை இன்னும் வளரட்டும் 😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு முதலைகளும் செல்லாக்காசாய் போய் விடுவார்கள் ........காரணம் நோய், மூப்பு, மரணம் இதை யாராலும் தவிர்க்க முடியாது......!

சராசரி 50 ஆண்டுக்கு மேல் கண்ணாடி அணிதல், பாக்கு, எலும்பு என்று கடித்து துப்பிய பற்கள் பக்கோடா கடிக்க நானும், மூட்டுகள் எல்லாம் முடியல்ல என்று கெஞ்சும் இதெல்லாம் என்னவென்று நினைக்கிறீங்கள் மரணம்  நீ காலாவதியாகிக் கொண்டிருக்கிறாய் என்று நினைவூட்டும் கடிதங்கள்......!

கவிதைக்கு நன்றி கோபி......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2021 at 21:37, பசுவூர்க்கோபி said:

 

large.De-aarde-CC0-Pixabay.jpg.d85b6e647ee6f291a788ecfe7676fddb.jpg

 

என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. 

எனி வரும் காலம் பற்றி முளித்திருக்கவே வந்த கனவிது.

 

இப்படியும் நடக்கலாம்..!

*****************

வேலை ரோபோக்கள் வீடெங்கும் திரியலாம்

விரும்பிய சமையலறை காணாமல் போகலாம்

மூன்று வேளையுணவும் மாத்திரையாகலாம்

முளித்திருக்க கதிர்வீச்சால் உறுப்பும் திருடலாம். 

 

சந்திரன் செவ்வாய்க்கு ரொக்கட் பறக்கலாம்

சரித்திர தேடல்கள் குழி வெட்டிப்புதைக்கலாம்

சுவாசிக்கும் காற்றும் காசுக்கு விற்கலாம்-எம்

சுயசரிதை சொல்ல சிப்பொன்றும் வைக்கலாம்.

 

பிறப்பு வீதத்தை ஐம்பதால் குறைக்கலாம்

பிறந்த பின் வீரத்தை கோழையாய்யாக்கலாம்

வயோதிப மரங்களை ஊசியால் சாய்க்கலாம்

வயது வரமுன்னே பெரியவர் போலாக்கலாம்.

 

ஓரினச் சேர்க்கைக்கு ஊதியம் கொடுக்கலாம்

உலக வரைபடம் உருமாற்றிக் கீறலாம்

நாட்டு எல்லைகள் இல்லாமல் போகலாம்

நலிந்த இனங்களை நசுக்கியே கொல்லலாம்.

 

புத்தகபடிப்புகள்  பொசுக்கி எரியலாம்

புதுப்புது நோய் செய்து போரும் நடத்தலாம்

காட்டு விலங்குபோல் மனிதனைஆக்கலாம்

காசு முதளைகள் உலகத்தை ஆளலாம்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி.

13.10.2021

அருமையான கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..💐

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.