Jump to content

ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்-அனந்தி சசிதரன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்-அனந்தி சசிதரன்

ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம் ஈடுபட்டுள்ளதாக ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ananthy-sasi.jpg
கம்சி குணரட்ணம் நோர்வேயில் 2009 க்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் உந்துதலோடு நோர்வேயின் அரசியலுக்குள் சேர்க்கப்பட்டவர். அரசியற் தலைவரான மறைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையில் பேச்சுவார்த்தைக்குழு ஐரோப்பா சென்றுவந்த 2002ம் ஆண்டுக்குப் பின்னான காலங்களில், அங்கு அரசியலில் இளம் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பங்கேற்பதை ஊக்குவித்துவந்தார். அந்தக் காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலுக்கான பரப்பை விரிவாக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்த புலம்பெயர் இளைய தமிழ்ச் செயற்பாட்டாளரே கம்சி. இன அழிப்புப் போர் நடந்தபோது பொதுவெளியில் போராட்டங்களில் இவர் பங்குபற்றியதும், பகிரங்கமாகக் குரல்கொடுத்ததும், செய்திகளைத் துல்லியமாகப் பின்பற்றியவர்களுக்குத் தெரியும்.
ஆனால், இவரது அரசியல் வாழ்க்கை பின்னர் ஒரு திசைதிருப்பத்தைக் கண்டிருக்கிறது. பலரும் இந்தத் திருப்பத்தை காணத் தவறிவிட்டனர். இந்தத் திருப்பத்தின் பின்னர் தற்போது இவர் ஈழத்தமிழர் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவில்லை. மாறாக, ஈழத்தமிழர் போராட்டத்தில் இருந்து, தான் வேறுபட்டவர் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கிவருகிறார்..
கம்சி சிலவருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து முன்னாள் ஜனாதிபதி சிறிசேன போன்றவர்களைச் சந்தித்துவிட்டு விடுதலைப் புலிகளை விமர்சித்தது மட்டுமல்ல, தற்போது இலங்கை அரசின் தற்போதைய ஜனாதிபதியையும் அவரது அரசையும் சர்வதேசம் புறக்கணிக்கும் அரசியலில் தனக்கு உடன்பாடில்லை என்ற போதனையை தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுக்குள் கொண்டுவருவதற்கான முகவராகவும் மாறியிருக்கிறாரோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது.
ஏற்கனவே விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை அணியில் பெண்களுக்குச் சமபங்கு கொடுக்கவில்லை என்று தவறான காரணத்தைத் தேடிப்பிடித்துக் கூறியிருந்தார். இதனால், உலகளாவிய தமிழர் சமூகத்திடம் இருந்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். ஏனெனில், பேச்சுவார்த்தைக் காலத்தில் விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்தில் பல வேலைத் திட்டங்களில் அதிகளவு பெண்கள் பங்குபற்றியதைச் சர்வதேசமே அறியும். அதுமட்டுமல்ல விடுதலைப்புலிகள் அரசியற்குழுவின் வெளிநாட்டுப் பயணங்களிலும் சந்திப்புகளிலும் பெண்கள் நேரடியாகப் பங்கேற்றிருந்தார்கள் என்பது நான் மட்டுமல்ல முழு உலகுமே அறிந்த உண்மை.
2011ம் ஆண்டுக்குப் பிறகு, நோர்வேயில் தமிழர் ஆதரவுக்கு அப்பால் அரசியலுக்கு வரக்கூடிய ஓர் அரசியல்வாதியாக இவர் உருவெடுத்திருக்கிறார். ஒஸ்லோ நகரின் துணைமேயராக இருந்த இவர் தற்போது நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார். இவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியே நோர்வேயின் ஆளும் தரப்பாக தற்போது அரசாங்கத்தை அமைக்கவுள்ளது.
எரிக் சொல்கைம் முன்னர் சொல்லிவந்ததற்கும் கம்சி தற்போது சொல்லத் தலைப்பட்டிருப்பதற்கும் அதிக வேறுபாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது தொடர்பாக, கடுமையான அதிருப்தியை அவருக்கும், அவர் சார்ந்த தமிழர் குழாத்தினர் எவரும் இருந்தால் அவர்களுக்கும், பதிவுசெய்யவேண்டிய கடமை ஈழத்தமிழர் அரசியலில் ஈடுபடும் பெண்ணாக எனக்கு இருக்கிறது.
தமிழ் மக்களும் அவர்களது ஊடகங்களும் மேற்படி கம்சி மேற்கொள்ளும் முகவர் அரசியல் குறித்து ஆய்வுநிலை நின்று ஆழமாக அவதானித்து தம் கருத்துகளை வெளியிடவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
kamzi-guna1-300x225.jpg
ஜி. எஸ். பி. பிளஸ் போன்ற சலுகைகளை ஐரோப்பா இலங்கை அரசுக்கு வழங்குவது சரியல்ல, இலங்கை அரசு மீது புறக்கணிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்திவரும் இந்தக் காலத்தில், கம்சி இலங்கை அரசுமீது புறக்கணிப்புகளை நோர்வே மேற்கொள்ளக்கூடாது என்பதைத் தனது கருத்தாகவும் தனது அரசியற் கட்சியின் கருத்தாகவும் முன்வைத்து வருகிறார். இதையே நோர்வேயின் வெளிநாட்டுக் கொள்கையாகவும் இவர் எதிர்பார்க்கிறார்.
அதேவேளை இலங்கைத் தீவில் போரின் இறுதிநாட்களில் நடைபெற்ற குற்றங்களைச் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவது எதிர்கால நல்லிணக்கத்துக்கு நல்லது என்ற மட்டுப்படுத்தப்பட்ட கருத்தையும் முன்வைத்திருக்கிறார். ஓர் ஈழத்தமிழ்ப் பெண்ணாக, இன அழிப்புக்கு உட்பட்ட ஈழத்தமிழரின் புலம் பெயர் முனைப்பின் காரணமாக அரசியலுக்குள் நுழைந்த இவர், இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை யைக் கோருவதற்குப் பதிலாக, இங்கே நடைபெற்ற போரை விசாரிக்கவேண்டும், போரின் இறுதிநாட்களில் நடைபெற்ற குற்றங்களை விசாரிக்கவேண்டும் என்று ஐ. நா. மட்டுப்படுத்தி முன்வைக்கும் கருத்து நிலையை மட்டுமே தானும் முன்வைக்கிறார்.
இந்த அடிப்படையில் மட்டுமே இவர் சர்வதேச விசாரணை நல்லதென்ற கருத்தையும் வெளிப்படுத்துகிறாரே அன்றி, இத்தீவில் நடைபெற்றது இன அழிப்பு, அதற்கும் மேலாக, இன அழிப்புப் போராக அது முன்னெடுக்கப்பட்டது என்ற கருத்தை ஈழத்தமிழர் புலம்பெயர் சமூகத்தின் சார்பாக 2009 இல் தான் எடுத்திருந்த கருத்துநிலையில் மடைமாற்றம் கண்டு தற்போது பின்னடித்திருக்கிறார். அதாவது ஈழத்தமிழரின் கோரிக்கைக்குப் பதிலாக, சர்வதேசம் மட்டுப்படுத்தி முன்வைக்கும் இணக்க அரசியலுக்கே இவர் குரல்கொடுக்கிறார்.
புலம்பெயர் ஈழத்தமிழ்ப் பெற்றோரின் பிள்ளையாக, அதுவும் ஈழத்தமிழர் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட இவர், ஈழத்தமிழர்களுக்கான நீதியான நிலைப்பாட்டை முன்னெடுக்காதுவிட்டாலும், எதிர்மறையான கருத்தியலை ஈழத்தமிழர்களுக்கும் சர்வதேசத்துக்கும் முன் வைக்காது விட்டாலே போதுமானது.
குறிப்பாக, சிறீலங்கர்களாக ஒருங்கிணையுங்கள் என்று அவர் எம்மைப்பார்த்துச் சொல்லத் தலைப் பட்டிருக்கிறார். இலங்கை அரசோடு பேசவும் தயார் என்று இவர் சொன்னதாக சில செய்திகள் ஊடகங் களிலும் வெளியாகியுள்ளன. இந்த வார்த்தையை வேறு சில புலம்பெயர் அமைப்புகளும் சொல்வதாக சர்வதேச சக்திகள் ஊக்குவித்துவருவதும் தெரிகிறது.
ஈழத்தமிழர்கள் ஒரு மக்களாகத் திரட்சியடைந்தவர்கள். ஒரு தேசிய இனமாக எழுந்து நிற்பவர்கள். முதுகெலும்பு முறிக்கப்பட்டாலும் எமது தேசியத் தன்மையை உடைய விடமாட்டோம் என்ற அரசியலை ஜனநாயக வழியில், சர்வதேச நீதிகோரி முன்னெடுத்துவருபவர்கள். அவர்களின் வாரிசாக கம்சி மாறவேண்டும். அதற்கு அவருக்கு அறிவு தேவையென்றால் அதை வழங்க ஈழத்தமிழர் அரசியலில் ஈடுபடும் பெண்ணாக நான் தயாராக உள்ளேன்.
இந்த நேரத்தில் தான், நோர்வேயின் தற்போதைய பெண் பிரதமரான ஆர்ணா சூல்பேர்க்கிற்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். வலது சாரிக் கட்சியின் தலைவராக இருந்தபோதும் ஈழத்தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தாமல் அவர் தனது நிலைப்பாட்டை இதுவரை முன்னெடுத்துவந்திருக்கிறார். ஆனால், ஆட்சிக்கு வரவுள்ள தொழிலாளர் கட்சி, தான் எடுத்திருக்கவேண்டிய நிலைப்பாட்டுக்கு மாறாக ஓர் இணக்க அரசியலை முன்னெடுப்பதற்குப் பின்னால் ஏதோ ஒரு குந்தகமான காரணி இருப்பதாக எனக்குப் படுகிறது.
அப்படி ஏதாயினும் இருக்கிறதா என்பதை நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர் அரசியல் அமைப்புகள், அவர்களது ஊடகங்கள், ஆராய்ந்து விரைவாகத் தெளிவுபடுத்தவேண்டும் என்ற வேண்டுகோளையும் இங்கு முன்வைக்கிறேன்.
இந்த அடிப்படையில், பெண் அரசியல் ஆர்வத்தோடும் ஈழத்தமிழர் நிலைப்பாடு குறித்தும் மிகுந்த ஆர்வமெடுத்து கம்சியின் மடைமாற்றம் கண்ட அரசியற் பின்னணி குறித்து நான் ஓர் ஆய்வை மேற் கொண்டுவருகிறேன். அதிலே கிடைக்கும் தரவுகளை அனைவருக்கும் பொது விளக்கத்திற்காக முன்வைக்கவும் தயாராக இருக்கிறேன்.

 

https://thinakkural.lk/article/143011

 

Link to comment
Share on other sites

அனந்தியின் கருத்துக்களில் இறுதி நேரப் போர்க்குற்றங்கள் சர்வதேச கவனத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், இறுதி நேரப் போர்க்குற்றங்களை விசாரிப்பது என்று வந்து விட்டால் அதனுள் சிங்களப் படைகளின் அட்டூழியங்களும் உள்ளடங்கும் என்று யோசிக்க மறுக்கிறார். 

தாயக தமிழர், புலம்பெயர் தமிழர் எடுக்கும் அதே நிலைப்பாடுகளை ஹம்சி எடுக்க வேண்டும், இல்லா விட்டால் நம்மிடம் "அறிவு" பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது பல இடங்களில் ஒலிக்கும் அதே பல்லவியாகத் தான் தெரிகிறது.
 

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

தமிழ் மக்களும் அவர்களது ஊடகங்களும் மேற்படி கம்சி மேற்கொள்ளும் முகவர் அரசியல் குறித்து ஆய்வுநிலை நின்று ஆழமாக அவதானித்து தம் கருத்துகளை வெளியிடவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

 

அதாவது நோர்வே பாராளுமன்றம் சென்றுள்ள இலங்கையில் பிறந்த பெண்மணி மீது சேரடிப்பு செய்யுமாறு பகிரங்கமாக அறிக்கை விடுகின்றீர்கள்? சேரடிப்பு செய்வது பற்றி ஒன்றும் கவலை கொள்ள வேண்டாம். அதை செய்வதற்கு பலர் உள்ளார்கள். ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள். 

6 hours ago, Justin said:

அனந்தியின் கருத்துக்களில் இறுதி நேரப் போர்க்குற்றங்கள் சர்வதேச கவனத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், இறுதி நேரப் போர்க்குற்றங்களை விசாரிப்பது என்று வந்து விட்டால் அதனுள் சிங்களப் படைகளின் அட்டூழியங்களும் உள்ளடங்கும் என்று யோசிக்க மறுக்கிறார். 

தாயக தமிழர், புலம்பெயர் தமிழர் எடுக்கும் அதே நிலைப்பாடுகளை ஹம்சி எடுக்க வேண்டும், இல்லா விட்டால் நம்மிடம் "அறிவு" பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது பல இடங்களில் ஒலிக்கும் அதே பல்லவியாகத் தான் தெரிகிறது.
 

 

அம்மாவுக்கு யாரோ நல்லாய் ஓதி விட்டார்கள். கேட்கப்பட்டதை செய்கின்றார்.

 • Like 1
Link to comment
Share on other sites

அனந்தி அக்கா 
வெளி நாட்டு அரசியல் விவகாரங்களுக்குள் மண்டையை ஓட்டாமல், தன்னுடைய தலையாய பொறுப்பான 
காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விவகாரத்தில் ஐ நா வின் துணையுடன் தீர்வினை கொண்டுவர இன்னும் இறங்கி வேலைசெய்வது நன்று,நோர்வே  ஹம்ஸிக்கு நீங்கள் இலங்கையிலிருந்து  அரசியல் சொல்லிக்கொடுக்காமல் அரசியல் என்ற பெயரில் நீங்கள் செய்யும் ஒன்றில் கரை சேர பாருங்கள்    

 • Like 2
Link to comment
Share on other sites

அனந்தி அக்காவுக்கு ஆமைக்கறி அண்ணன் போல் எல்லாவற்றிலும் தானே தலைமையில் நிற்க வேண்டும் ஆலோசகராக இருக்க வேண்டும் என்ற பேராசை. அதாவது குறுகிய சிந்தனை. கம்சியை தமிழ்ச்செல்வன் அவர்களின் நல்லெண்ணம் அரசியலில் வர காரணம் என்று தேவையில்லாமல் தன் வாயைக் கொடுத்து தன் பணியை மறந்துவிட்டார். 

அக்காபோன்ற மனநிலையில் தான் எங்கள் அரசியல்வாதிகள் உட்பட தேசியவாதிகள் மனமும்.

 

Edited by shanthy
 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சசிதரனின் மோசமான அறிக்கைக்கு சரியான நேரத்தில் வந்து  சாந்தி அக்கா கண்டணம் தெரிவித்துள்ளார் 👍

 • Thanks 1
Link to comment
Share on other sites

6 hours ago, shanthy said:

அனந்தி அக்காவுக்கு ஆமைக்கறி அண்ணன் போல் எல்லாவற்றிலும்

சாந்தி அக்கா என்ன திடீரெண்டு அனந்தியக்காவை ஆமையாரின் லெவலுக்கு இறக்கிவிட்டீர்கள் 
அனந்தி ஆமையை பிடிச்சி கொடுக்க வெளிக்கிட்ட ஆள் எலுவா...? என்ன இருந்தாலும் அனந்தியை  இப்படியா தரை லெவலுக்கு இறக்கி கழுவுவது,  

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
கம்சி என அழைக்கப்படும் கம்சாயினி நோர்வே நாட்டில் தமிழ் பின்புலமுள்ள ஒரு அரசியல்வாதி மட்டுமே. மற்ற அரசியல்வாதிகளைப்போலவே இவரும் தேர்தலில் வென்று தெரிவு செய்யப்பட்டுள்ளார் இவரை நோர்வே தமிழர்தான் தெரிவு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தார்கள் என்றோ தமிழர்களை மட்டுமே இவர் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றோ  கூறமுடியாது. நாடாளுமன்ற பிரதிநிதியாக அவருக்கு என ஒரு அரசியல் பாதை இருக்கும் அது இலங்கையின் இன பிரச்சனையை கரிசனையில் எடுக்காமலும்  இருக்கலாம். கொஞ்சம் பொறுத்திருந்தால் காலம் பதில் சொல்லும்.

தொழில்கட்சி சார்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றுக்கு முதல்தரமாக சென்றுள்ள இவரை எழுந்தமானமாக அனந்தி விமர்சிப்பது எனக்கு புத்திசாலித்தனமாக படவில்லை. கம்சி நாடாளுமன்றத்தில் பதவி பிரமாணம் எடுத்திருப்பாரோ தெரியவில்லை. கம்சியின் வெற்றி இலங்கை தமிழ் இனத்துக்கும் அதற்கும் மேலாக தமிழ் தேசியம் பேசும் இலங்கை தமிழ் அரசியவாதிகளுக்கும் நோர்வே நாடாளுமன்றத்தில் பின்புற கதவை திறந்துவிடும் என எண்ணுவதும் ஜதார்தமாகது.
 
கம்சி ஒரு அரசியல்வாதி, அவர் தனது கட்சியின் சார்பில் அவர் புலம்பெயர்ந்து வாழும் நாட்டுக்கும் சேவையாற்றவே அங்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் தனது கட்சி சொன்ன பாதையில் தான் பயணிக்கவேண்டும். தனது கட்சியுடன் முரண்பட்டுவிட்டு பின் ஓடிபோய் தனிக்கட்சி ஆரம்பிப்பதும் அந்த நாட்டில் வழக்கமில்லை. அவர் சரியாக செயல்படவில்லை என்றால் மக்களே அவரை அடுத்த தேர்தலில் நிராகரித்துவிட்டுபோவார்கள். உங்களுக்கு என்ன வந்தது.

இலங்கையில் நடைமுறை வேறு. அங்கு உள்கட்சி பூசல், ஊழல், சுயநலம், உறவினருக்கு முன்னுரிமை, பதவி மோகம், குடும்ப அரசியல் இப்படி நடைமுறையிலிருக்கும் ஜனநாயக விரோத அரசியல் கலாச்சாரங்களை வரிசையாக அடிக்கிக்கொண்டே போகலாம். அப்படி பார்த்தல் அனந்திக்கு உள்நாட்டுக்குள்ளேயே நிறைய வேலையிருக்கும் என்பதையும் அவர் எண்ணிப் பார்க்கவேண்டும்.
 
அனந்தியின் இதுபோன்ற காட்டமான விமர்சனங்களுக்கு இலங்கை நோர்வே ஆகிய இரண்டு நாடுகளுக்கிடையிலான வேறுபட்ட அரசியல் கலாச்சார பார்வைதான் காரணமாக இருக்கமுடியும். நோர்வே அரசாங்கம் இலங்கை தமிழர் பிரச்சினையை எப்படி கையாளும் என்பதை கம்சி தீர்மானிக்க முடியாது. இவை எல்லாவற்றிகும் மேலாக நோர்வேயின் வெளிநாட்டு கொள்கை அந்நாட்டு அரசில்வாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும்.
 
கட்சியின் கொள்கையை முன்வைத்து விட்டுகொடுப்புகளுடன்  ஜனநாயக கோட்பாடுகளை மதித்து ஒன்றுகூடி நாட்டின் பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என விடைதேடுவது அங்குள்ள அரசியல் கலாச்சராம். சுயநலத்தை முன்னிறுத்தி நாட்டையும் தான் சார்ந்த மக்களையும் மறந்து விட்டுகொடுப்பு எதுவுமின்றி பிரச்சினைக்கு தான் சொன்ன தீர்வே சரி என்று  வாதாடுவது இலங்கை போன்ற நாடுகளின் அரசியல் கலாச்சாரம்.
 
கம்சாயினிக்கு அரசியலில் பாடம் எடுக்க நினைப்பது அனந்தியின் அரசியல் அறியாமையின் உச்சம். உண்மையில் அனந்தி இப்படி ஒரு அறிக்கையை விட்டாரா அல்லது இது ஊடகங்களின் சிண்டு முடியும் குல்மாலா என்பதும் தெரியவேண்டும்.
 • Like 4
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
On 14/10/2021 at 11:39, அக்னியஷ்த்ரா said:

சாந்தி அக்கா என்ன திடீரெண்டு அனந்தியக்காவை ஆமையாரின் லெவலுக்கு இறக்கிவிட்டீர்கள் 
அனந்தி ஆமையை பிடிச்சி கொடுக்க வெளிக்கிட்ட ஆள் எலுவா...? என்ன இருந்தாலும் அனந்தியை  இப்படியா தரை லெவலுக்கு இறக்கி கழுவுவது,  

உண்மையில் அனந்தியை தரையில் இறக்கவில்லை. எனது ஆதங்கத்தை கேட்டிருக்கிறேன். 

நீங்கள் எனக்கு அடிவாங்கி தர நிக்கிறியள்🤭

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.