Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்-அனந்தி சசிதரன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்-அனந்தி சசிதரன்

ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம் ஈடுபட்டுள்ளதாக ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ananthy-sasi.jpg
கம்சி குணரட்ணம் நோர்வேயில் 2009 க்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் உந்துதலோடு நோர்வேயின் அரசியலுக்குள் சேர்க்கப்பட்டவர். அரசியற் தலைவரான மறைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையில் பேச்சுவார்த்தைக்குழு ஐரோப்பா சென்றுவந்த 2002ம் ஆண்டுக்குப் பின்னான காலங்களில், அங்கு அரசியலில் இளம் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பங்கேற்பதை ஊக்குவித்துவந்தார். அந்தக் காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலுக்கான பரப்பை விரிவாக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்த புலம்பெயர் இளைய தமிழ்ச் செயற்பாட்டாளரே கம்சி. இன அழிப்புப் போர் நடந்தபோது பொதுவெளியில் போராட்டங்களில் இவர் பங்குபற்றியதும், பகிரங்கமாகக் குரல்கொடுத்ததும், செய்திகளைத் துல்லியமாகப் பின்பற்றியவர்களுக்குத் தெரியும்.
ஆனால், இவரது அரசியல் வாழ்க்கை பின்னர் ஒரு திசைதிருப்பத்தைக் கண்டிருக்கிறது. பலரும் இந்தத் திருப்பத்தை காணத் தவறிவிட்டனர். இந்தத் திருப்பத்தின் பின்னர் தற்போது இவர் ஈழத்தமிழர் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவில்லை. மாறாக, ஈழத்தமிழர் போராட்டத்தில் இருந்து, தான் வேறுபட்டவர் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கிவருகிறார்..
கம்சி சிலவருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து முன்னாள் ஜனாதிபதி சிறிசேன போன்றவர்களைச் சந்தித்துவிட்டு விடுதலைப் புலிகளை விமர்சித்தது மட்டுமல்ல, தற்போது இலங்கை அரசின் தற்போதைய ஜனாதிபதியையும் அவரது அரசையும் சர்வதேசம் புறக்கணிக்கும் அரசியலில் தனக்கு உடன்பாடில்லை என்ற போதனையை தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுக்குள் கொண்டுவருவதற்கான முகவராகவும் மாறியிருக்கிறாரோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது.
ஏற்கனவே விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை அணியில் பெண்களுக்குச் சமபங்கு கொடுக்கவில்லை என்று தவறான காரணத்தைத் தேடிப்பிடித்துக் கூறியிருந்தார். இதனால், உலகளாவிய தமிழர் சமூகத்திடம் இருந்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். ஏனெனில், பேச்சுவார்த்தைக் காலத்தில் விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்தில் பல வேலைத் திட்டங்களில் அதிகளவு பெண்கள் பங்குபற்றியதைச் சர்வதேசமே அறியும். அதுமட்டுமல்ல விடுதலைப்புலிகள் அரசியற்குழுவின் வெளிநாட்டுப் பயணங்களிலும் சந்திப்புகளிலும் பெண்கள் நேரடியாகப் பங்கேற்றிருந்தார்கள் என்பது நான் மட்டுமல்ல முழு உலகுமே அறிந்த உண்மை.
2011ம் ஆண்டுக்குப் பிறகு, நோர்வேயில் தமிழர் ஆதரவுக்கு அப்பால் அரசியலுக்கு வரக்கூடிய ஓர் அரசியல்வாதியாக இவர் உருவெடுத்திருக்கிறார். ஒஸ்லோ நகரின் துணைமேயராக இருந்த இவர் தற்போது நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார். இவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியே நோர்வேயின் ஆளும் தரப்பாக தற்போது அரசாங்கத்தை அமைக்கவுள்ளது.
எரிக் சொல்கைம் முன்னர் சொல்லிவந்ததற்கும் கம்சி தற்போது சொல்லத் தலைப்பட்டிருப்பதற்கும் அதிக வேறுபாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது தொடர்பாக, கடுமையான அதிருப்தியை அவருக்கும், அவர் சார்ந்த தமிழர் குழாத்தினர் எவரும் இருந்தால் அவர்களுக்கும், பதிவுசெய்யவேண்டிய கடமை ஈழத்தமிழர் அரசியலில் ஈடுபடும் பெண்ணாக எனக்கு இருக்கிறது.
தமிழ் மக்களும் அவர்களது ஊடகங்களும் மேற்படி கம்சி மேற்கொள்ளும் முகவர் அரசியல் குறித்து ஆய்வுநிலை நின்று ஆழமாக அவதானித்து தம் கருத்துகளை வெளியிடவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
kamzi-guna1-300x225.jpg
ஜி. எஸ். பி. பிளஸ் போன்ற சலுகைகளை ஐரோப்பா இலங்கை அரசுக்கு வழங்குவது சரியல்ல, இலங்கை அரசு மீது புறக்கணிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்திவரும் இந்தக் காலத்தில், கம்சி இலங்கை அரசுமீது புறக்கணிப்புகளை நோர்வே மேற்கொள்ளக்கூடாது என்பதைத் தனது கருத்தாகவும் தனது அரசியற் கட்சியின் கருத்தாகவும் முன்வைத்து வருகிறார். இதையே நோர்வேயின் வெளிநாட்டுக் கொள்கையாகவும் இவர் எதிர்பார்க்கிறார்.
அதேவேளை இலங்கைத் தீவில் போரின் இறுதிநாட்களில் நடைபெற்ற குற்றங்களைச் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவது எதிர்கால நல்லிணக்கத்துக்கு நல்லது என்ற மட்டுப்படுத்தப்பட்ட கருத்தையும் முன்வைத்திருக்கிறார். ஓர் ஈழத்தமிழ்ப் பெண்ணாக, இன அழிப்புக்கு உட்பட்ட ஈழத்தமிழரின் புலம் பெயர் முனைப்பின் காரணமாக அரசியலுக்குள் நுழைந்த இவர், இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை யைக் கோருவதற்குப் பதிலாக, இங்கே நடைபெற்ற போரை விசாரிக்கவேண்டும், போரின் இறுதிநாட்களில் நடைபெற்ற குற்றங்களை விசாரிக்கவேண்டும் என்று ஐ. நா. மட்டுப்படுத்தி முன்வைக்கும் கருத்து நிலையை மட்டுமே தானும் முன்வைக்கிறார்.
இந்த அடிப்படையில் மட்டுமே இவர் சர்வதேச விசாரணை நல்லதென்ற கருத்தையும் வெளிப்படுத்துகிறாரே அன்றி, இத்தீவில் நடைபெற்றது இன அழிப்பு, அதற்கும் மேலாக, இன அழிப்புப் போராக அது முன்னெடுக்கப்பட்டது என்ற கருத்தை ஈழத்தமிழர் புலம்பெயர் சமூகத்தின் சார்பாக 2009 இல் தான் எடுத்திருந்த கருத்துநிலையில் மடைமாற்றம் கண்டு தற்போது பின்னடித்திருக்கிறார். அதாவது ஈழத்தமிழரின் கோரிக்கைக்குப் பதிலாக, சர்வதேசம் மட்டுப்படுத்தி முன்வைக்கும் இணக்க அரசியலுக்கே இவர் குரல்கொடுக்கிறார்.
புலம்பெயர் ஈழத்தமிழ்ப் பெற்றோரின் பிள்ளையாக, அதுவும் ஈழத்தமிழர் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட இவர், ஈழத்தமிழர்களுக்கான நீதியான நிலைப்பாட்டை முன்னெடுக்காதுவிட்டாலும், எதிர்மறையான கருத்தியலை ஈழத்தமிழர்களுக்கும் சர்வதேசத்துக்கும் முன் வைக்காது விட்டாலே போதுமானது.
குறிப்பாக, சிறீலங்கர்களாக ஒருங்கிணையுங்கள் என்று அவர் எம்மைப்பார்த்துச் சொல்லத் தலைப் பட்டிருக்கிறார். இலங்கை அரசோடு பேசவும் தயார் என்று இவர் சொன்னதாக சில செய்திகள் ஊடகங் களிலும் வெளியாகியுள்ளன. இந்த வார்த்தையை வேறு சில புலம்பெயர் அமைப்புகளும் சொல்வதாக சர்வதேச சக்திகள் ஊக்குவித்துவருவதும் தெரிகிறது.
ஈழத்தமிழர்கள் ஒரு மக்களாகத் திரட்சியடைந்தவர்கள். ஒரு தேசிய இனமாக எழுந்து நிற்பவர்கள். முதுகெலும்பு முறிக்கப்பட்டாலும் எமது தேசியத் தன்மையை உடைய விடமாட்டோம் என்ற அரசியலை ஜனநாயக வழியில், சர்வதேச நீதிகோரி முன்னெடுத்துவருபவர்கள். அவர்களின் வாரிசாக கம்சி மாறவேண்டும். அதற்கு அவருக்கு அறிவு தேவையென்றால் அதை வழங்க ஈழத்தமிழர் அரசியலில் ஈடுபடும் பெண்ணாக நான் தயாராக உள்ளேன்.
இந்த நேரத்தில் தான், நோர்வேயின் தற்போதைய பெண் பிரதமரான ஆர்ணா சூல்பேர்க்கிற்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். வலது சாரிக் கட்சியின் தலைவராக இருந்தபோதும் ஈழத்தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தாமல் அவர் தனது நிலைப்பாட்டை இதுவரை முன்னெடுத்துவந்திருக்கிறார். ஆனால், ஆட்சிக்கு வரவுள்ள தொழிலாளர் கட்சி, தான் எடுத்திருக்கவேண்டிய நிலைப்பாட்டுக்கு மாறாக ஓர் இணக்க அரசியலை முன்னெடுப்பதற்குப் பின்னால் ஏதோ ஒரு குந்தகமான காரணி இருப்பதாக எனக்குப் படுகிறது.
அப்படி ஏதாயினும் இருக்கிறதா என்பதை நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர் அரசியல் அமைப்புகள், அவர்களது ஊடகங்கள், ஆராய்ந்து விரைவாகத் தெளிவுபடுத்தவேண்டும் என்ற வேண்டுகோளையும் இங்கு முன்வைக்கிறேன்.
இந்த அடிப்படையில், பெண் அரசியல் ஆர்வத்தோடும் ஈழத்தமிழர் நிலைப்பாடு குறித்தும் மிகுந்த ஆர்வமெடுத்து கம்சியின் மடைமாற்றம் கண்ட அரசியற் பின்னணி குறித்து நான் ஓர் ஆய்வை மேற் கொண்டுவருகிறேன். அதிலே கிடைக்கும் தரவுகளை அனைவருக்கும் பொது விளக்கத்திற்காக முன்வைக்கவும் தயாராக இருக்கிறேன்.

 

https://thinakkural.lk/article/143011

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அனந்தியின் கருத்துக்களில் இறுதி நேரப் போர்க்குற்றங்கள் சர்வதேச கவனத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், இறுதி நேரப் போர்க்குற்றங்களை விசாரிப்பது என்று வந்து விட்டால் அதனுள் சிங்களப் படைகளின் அட்டூழியங்களும் உள்ளடங்கும் என்று யோசிக்க மறுக்கிறார். 

தாயக தமிழர், புலம்பெயர் தமிழர் எடுக்கும் அதே நிலைப்பாடுகளை ஹம்சி எடுக்க வேண்டும், இல்லா விட்டால் நம்மிடம் "அறிவு" பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது பல இடங்களில் ஒலிக்கும் அதே பல்லவியாகத் தான் தெரிகிறது.
 

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

தமிழ் மக்களும் அவர்களது ஊடகங்களும் மேற்படி கம்சி மேற்கொள்ளும் முகவர் அரசியல் குறித்து ஆய்வுநிலை நின்று ஆழமாக அவதானித்து தம் கருத்துகளை வெளியிடவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

 

அதாவது நோர்வே பாராளுமன்றம் சென்றுள்ள இலங்கையில் பிறந்த பெண்மணி மீது சேரடிப்பு செய்யுமாறு பகிரங்கமாக அறிக்கை விடுகின்றீர்கள்? சேரடிப்பு செய்வது பற்றி ஒன்றும் கவலை கொள்ள வேண்டாம். அதை செய்வதற்கு பலர் உள்ளார்கள். ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள். 

6 hours ago, Justin said:

அனந்தியின் கருத்துக்களில் இறுதி நேரப் போர்க்குற்றங்கள் சர்வதேச கவனத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், இறுதி நேரப் போர்க்குற்றங்களை விசாரிப்பது என்று வந்து விட்டால் அதனுள் சிங்களப் படைகளின் அட்டூழியங்களும் உள்ளடங்கும் என்று யோசிக்க மறுக்கிறார். 

தாயக தமிழர், புலம்பெயர் தமிழர் எடுக்கும் அதே நிலைப்பாடுகளை ஹம்சி எடுக்க வேண்டும், இல்லா விட்டால் நம்மிடம் "அறிவு" பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது பல இடங்களில் ஒலிக்கும் அதே பல்லவியாகத் தான் தெரிகிறது.
 

 

அம்மாவுக்கு யாரோ நல்லாய் ஓதி விட்டார்கள். கேட்கப்பட்டதை செய்கின்றார்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அனந்தி அக்கா 
வெளி நாட்டு அரசியல் விவகாரங்களுக்குள் மண்டையை ஓட்டாமல், தன்னுடைய தலையாய பொறுப்பான 
காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விவகாரத்தில் ஐ நா வின் துணையுடன் தீர்வினை கொண்டுவர இன்னும் இறங்கி வேலைசெய்வது நன்று,நோர்வே  ஹம்ஸிக்கு நீங்கள் இலங்கையிலிருந்து  அரசியல் சொல்லிக்கொடுக்காமல் அரசியல் என்ற பெயரில் நீங்கள் செய்யும் ஒன்றில் கரை சேர பாருங்கள்    

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அனந்தி அக்காவுக்கு ஆமைக்கறி அண்ணன் போல் எல்லாவற்றிலும் தானே தலைமையில் நிற்க வேண்டும் ஆலோசகராக இருக்க வேண்டும் என்ற பேராசை. அதாவது குறுகிய சிந்தனை. கம்சியை தமிழ்ச்செல்வன் அவர்களின் நல்லெண்ணம் அரசியலில் வர காரணம் என்று தேவையில்லாமல் தன் வாயைக் கொடுத்து தன் பணியை மறந்துவிட்டார். 

அக்காபோன்ற மனநிலையில் தான் எங்கள் அரசியல்வாதிகள் உட்பட தேசியவாதிகள் மனமும்.

 

Edited by shanthy
 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சசிதரனின் மோசமான அறிக்கைக்கு சரியான நேரத்தில் வந்து  சாந்தி அக்கா கண்டணம் தெரிவித்துள்ளார் 👍

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, shanthy said:

அனந்தி அக்காவுக்கு ஆமைக்கறி அண்ணன் போல் எல்லாவற்றிலும்

சாந்தி அக்கா என்ன திடீரெண்டு அனந்தியக்காவை ஆமையாரின் லெவலுக்கு இறக்கிவிட்டீர்கள் 
அனந்தி ஆமையை பிடிச்சி கொடுக்க வெளிக்கிட்ட ஆள் எலுவா...? என்ன இருந்தாலும் அனந்தியை  இப்படியா தரை லெவலுக்கு இறக்கி கழுவுவது,  

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
கம்சி என அழைக்கப்படும் கம்சாயினி நோர்வே நாட்டில் தமிழ் பின்புலமுள்ள ஒரு அரசியல்வாதி மட்டுமே. மற்ற அரசியல்வாதிகளைப்போலவே இவரும் தேர்தலில் வென்று தெரிவு செய்யப்பட்டுள்ளார் இவரை நோர்வே தமிழர்தான் தெரிவு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தார்கள் என்றோ தமிழர்களை மட்டுமே இவர் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றோ  கூறமுடியாது. நாடாளுமன்ற பிரதிநிதியாக அவருக்கு என ஒரு அரசியல் பாதை இருக்கும் அது இலங்கையின் இன பிரச்சனையை கரிசனையில் எடுக்காமலும்  இருக்கலாம். கொஞ்சம் பொறுத்திருந்தால் காலம் பதில் சொல்லும்.

தொழில்கட்சி சார்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றுக்கு முதல்தரமாக சென்றுள்ள இவரை எழுந்தமானமாக அனந்தி விமர்சிப்பது எனக்கு புத்திசாலித்தனமாக படவில்லை. கம்சி நாடாளுமன்றத்தில் பதவி பிரமாணம் எடுத்திருப்பாரோ தெரியவில்லை. கம்சியின் வெற்றி இலங்கை தமிழ் இனத்துக்கும் அதற்கும் மேலாக தமிழ் தேசியம் பேசும் இலங்கை தமிழ் அரசியவாதிகளுக்கும் நோர்வே நாடாளுமன்றத்தில் பின்புற கதவை திறந்துவிடும் என எண்ணுவதும் ஜதார்தமாகது.
 
கம்சி ஒரு அரசியல்வாதி, அவர் தனது கட்சியின் சார்பில் அவர் புலம்பெயர்ந்து வாழும் நாட்டுக்கும் சேவையாற்றவே அங்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் தனது கட்சி சொன்ன பாதையில் தான் பயணிக்கவேண்டும். தனது கட்சியுடன் முரண்பட்டுவிட்டு பின் ஓடிபோய் தனிக்கட்சி ஆரம்பிப்பதும் அந்த நாட்டில் வழக்கமில்லை. அவர் சரியாக செயல்படவில்லை என்றால் மக்களே அவரை அடுத்த தேர்தலில் நிராகரித்துவிட்டுபோவார்கள். உங்களுக்கு என்ன வந்தது.

இலங்கையில் நடைமுறை வேறு. அங்கு உள்கட்சி பூசல், ஊழல், சுயநலம், உறவினருக்கு முன்னுரிமை, பதவி மோகம், குடும்ப அரசியல் இப்படி நடைமுறையிலிருக்கும் ஜனநாயக விரோத அரசியல் கலாச்சாரங்களை வரிசையாக அடிக்கிக்கொண்டே போகலாம். அப்படி பார்த்தல் அனந்திக்கு உள்நாட்டுக்குள்ளேயே நிறைய வேலையிருக்கும் என்பதையும் அவர் எண்ணிப் பார்க்கவேண்டும்.
 
அனந்தியின் இதுபோன்ற காட்டமான விமர்சனங்களுக்கு இலங்கை நோர்வே ஆகிய இரண்டு நாடுகளுக்கிடையிலான வேறுபட்ட அரசியல் கலாச்சார பார்வைதான் காரணமாக இருக்கமுடியும். நோர்வே அரசாங்கம் இலங்கை தமிழர் பிரச்சினையை எப்படி கையாளும் என்பதை கம்சி தீர்மானிக்க முடியாது. இவை எல்லாவற்றிகும் மேலாக நோர்வேயின் வெளிநாட்டு கொள்கை அந்நாட்டு அரசில்வாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும்.
 
கட்சியின் கொள்கையை முன்வைத்து விட்டுகொடுப்புகளுடன்  ஜனநாயக கோட்பாடுகளை மதித்து ஒன்றுகூடி நாட்டின் பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என விடைதேடுவது அங்குள்ள அரசியல் கலாச்சராம். சுயநலத்தை முன்னிறுத்தி நாட்டையும் தான் சார்ந்த மக்களையும் மறந்து விட்டுகொடுப்பு எதுவுமின்றி பிரச்சினைக்கு தான் சொன்ன தீர்வே சரி என்று  வாதாடுவது இலங்கை போன்ற நாடுகளின் அரசியல் கலாச்சாரம்.
 
கம்சாயினிக்கு அரசியலில் பாடம் எடுக்க நினைப்பது அனந்தியின் அரசியல் அறியாமையின் உச்சம். உண்மையில் அனந்தி இப்படி ஒரு அறிக்கையை விட்டாரா அல்லது இது ஊடகங்களின் சிண்டு முடியும் குல்மாலா என்பதும் தெரியவேண்டும்.
 • Like 4
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2021 at 11:39, அக்னியஷ்த்ரா said:

சாந்தி அக்கா என்ன திடீரெண்டு அனந்தியக்காவை ஆமையாரின் லெவலுக்கு இறக்கிவிட்டீர்கள் 
அனந்தி ஆமையை பிடிச்சி கொடுக்க வெளிக்கிட்ட ஆள் எலுவா...? என்ன இருந்தாலும் அனந்தியை  இப்படியா தரை லெவலுக்கு இறக்கி கழுவுவது,  

உண்மையில் அனந்தியை தரையில் இறக்கவில்லை. எனது ஆதங்கத்தை கேட்டிருக்கிறேன். 

நீங்கள் எனக்கு அடிவாங்கி தர நிக்கிறியள்🤭

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By பிழம்பு
   (எம்.மனோசித்ரா)
   இலங்கையில் நிச்சயம் போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை எனில் அதுவே பாரியதொரு குற்றமாக கருதப்படும் என்று நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.
   கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளதாகவும் ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.
   நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

   கேள்வி : இலங்கை தமிழர்கள் தமக்கான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இன்னமும் சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனை நீங்கள் எவ்வாறு அவதானிக்கிறீர்கள் ?
   பதில் : இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பலர் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். மீண்டும் அதனை சரி செய்வது இலகுவானதல்ல. எனினும் இலங்கை மக்கள் தமக்கான தீர்வை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதனை எம்மால் கூற முடியாது. இலங்கை எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற பாதையை அமைத்துக் கொடுப்பது அந்நாட்டு மக்களின் கைகளிலேயே உள்ளது.
   என்னால் இங்கிருந்து அதற்கான வழிகளைக் கூற முடியாது. மாறாக எனது பயிற்சிகளை மாத்திரமே பகிர்ந்து கொள்ள முடியும். எனவே மக்கள் அது தொடர்பான அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது அரசியலில் ஈடுபட வேண்டும்.
   கேள்வி : இலங்கை தமிழ் மக்கள் தங்களின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச ஈடுபாடு மிகவும் அவசியம் என்று கருதுகின்றனர். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு ?
   பதில் : நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்ந்தும் பேணும். ஆனால் அதனை எவ்வாறு செய்வது என்பதை தற்போது விளக்கமாகக் கூற முடியாது. எனினும் யுத்த குற்ற விசாரணைகள் நிச்சயம் இடம்பெற வேண்டும். அந்த விசாரணைகளை முன்னெடுக்காமல் எம்மால் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. நல்லிணக்கம் , வெளிப்படைதன்மை மற்றும் ஜனநாயகத்திற்கு இது மிகவும் அத்தியாவசியமானதாகும்.
   எனவே நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்வதோடு , இலங்கையில் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு விடயங்களையும் நான் வலியுறுத்துகின்றேன். யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனில் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும். காரணம் சகலருக்கும் உண்மையை கண்டறிதலே தேவையாகவுள்ளது.
   கேள்வி : இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு சர்வதேச பொறிமுறையின் கீழ் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இலங்கை வம்சாவளி நோர்வே பாராளுமன்ற உறுப்பினரான உங்களின் பங்களிப்பு எவ்வாறு அமையும் ?
   பதில் : இலங்கையின் விவகாரத்தில் சர்வதேச ரீதியில் சில விடயங்களைச் செய்ய முடியும். ஆனால் இலங்கையிலுள்ள மக்களே இதில் அதிக அவதானம் செலுத்த வேண்டும். சமூகம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் சர்வதேசம் என்ற ரீதியில் எமக்கும் பொறுப்புக்கள் உள்ளன. அதற்கமைய இலங்கையுடனான நட்புறவை தொடர்தல் மற்றும் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளோம்.
   கேள்வி : புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
   பதில் : கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளேன்.
   முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இலங்கைக்கு விஜயம் செய்து அவரை சந்தித்த போது பெண்களின் பிரச்சினைகள் , பெண்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பெண்களுடன் தொடர்புடைய விடயங்களையே அவரிடம் வலியுறுத்தினேன். அதே போன்று தற்போதைய ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவரிடமும் அரசியலில் பால் நிலை சமத்துவத்தை வலியுறுத்துவேன்.
   கேள்வி : யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள நீங்கள் , அவை உள்வாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா? அல்லது வெளிவாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?
   பதில் : வெளிவாரியான யுத்த குற்ற விசாரணைகளையே நாம் வலியுறுத்துகின்றோம். உள்வாரி விசாரணைகளை வைத்து என்ன செய்வது? இலங்கை அரசாங்கம் தவறிழைத்திருந்தால் அதனை அவர்களே விசாரணை செய்வது பொறுத்தமானதாக இருக்குமா?
   கேள்வி : இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினத்தவர்கள் ஆவர். எனவே அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலும் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதிலும் சில நெருக்கடிகள் உள்ளன. இது குறித்து உங்கள் நிலைப்பாடு?
   பதில் : இலங்கையில் வெளிப்படை தன்மையான ஜனநாயகம் காணப்படுகிறது என்பதை காண்பிப்பதற்கு அரசாங்கம் சில செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்றால் அதுவும் பாரியதொரு குற்றமாகவே கருதப்படும். இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் என்மனதில் எப்போதும் இடமுண்டு.
   இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஹம்ஷாயினி | Virakesari.lk
  • By கிருபன்
   கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு!

   இலங்கை வம்சாவளியான கம்ஷாஜினி குணரத்னம் நோர்வேயின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
   நோர்வேயின் தொழிற்கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார்.
   அவர் 2015 ஆம் ஆண்டில் ஒஸ்லோவின் பிரதி மேயராக செயற்பட்டிருந்தார்.
   மூன்று வயதில் பெற்றோருடன் நோர்வேயில் குடியேறிய கம்ஸி, தமிழ் இளையோர் அமைப்பின் ஊடாக அரசியலில் பிரவேசித்துள்ளார்.
   பின்னர் தொழிற்கட்சியின் ஒஸ்லோ இளைஞரணியில் இணைந்த அவர், அதன் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார்.
   19 வயதில் (2007) ஒஸ்லோ மாநகர சபையின் பிரதிநிதியாகப் பெரும் ஆதரவுடன் தெரிவான கம்ஸி, 2015 முதல் ஒஸ்லோ மாநகர சபையின் துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
   -(3)
   http://www.samakalam.com/கம்ஷாஜினி-குணரத்னம்-நோர்/
  • By Athavan CH
   இவ்வார மின்னல் நிகழ்ச்சியில்
   கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்ட மின்னல் நிகழ்சி உங்களுக்காக
    
   http://www.tamilkingdom.com/2017/04/456_18.html
  • By sudaravan
   தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்றவர்களை நிராகரித்து தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதி கொண்டவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென  வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

   தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் தொடர்பில் பகிரங்கமாகவே நான் பல தடவைகள் தெரிவித்திருக்கின்றேன். அதே போன்று அவர்களை மக்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே கிடைத்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்த் தேசியத்தைக் காக்கின்றவர்களிற்கு வாக்களிக்க வேண்டும்.

   யாழ் சுழிபுரத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தேர்தலில் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.

   அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,

   நீண்ட நெடிய போரில் என்னைப் போல இழப்புகளுக்கு முகம் கொடுத்த உறவுகளுக்காக எனது தெரிவைப் பயன்படுத்திக் குரல் கொடுப்பேன் என்ற வாக்கை நான் மக்களுக்கு முற்கூட்டியே வழங்கியிருந்தேன். அது மட்டுமல்ல, எனது கணவரான எழிலன் தனது தேசிய அரசியல் கடமையை எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் செய்தார் என்பதையும் எமது மக்கள் அறிந்திருந்தார்கள்.பதிவு இணைய செய்தி

   மாவிலாறில் போரை சிறிலங்கா அரசு பெரும் எடுப்புடன் ஆரம்பிக்கும் இறுதிக்கணம் வரை சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்களுடன் எழிலன் எவ்வாறு ஒத்துழைத்து அந்தப் போரை தடுக்க முயன்றார் என்பதற்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக இறுதியாக இருந்தசுவீடன் நாட்டைச் சேர்ந்த உல்(க)ப்ஹென்றிக்சன் போன்றவர்களே நேரடிச் சாட்சியம்.பதிவு இணைய செய்தி

   போரின் போக்கை ஒரு இன அழிப்புப் போராக சிறிலங்கா அரசு மாற்றியதற்கும், அந்தப் போரின் முடிவின் இறுதிக் கணங்களில் கூட காயமடைந்தவர்களைப் பராமரித்துக் கொண்டிருந்த எனது கணவர் எவ்வாறு நடந்து கொண்டார். அவருக்கு நடந்தது என்ன, எம்மைச் சுற்றியிருந்த மக்களுக்கு நடந்தது என்ன என்பதற்கு நான் ஒரு சாட்சியமாக எனது தேச மக்களுக்கு எனது கடமையைச் செய்வது என்ற நோக்கத்தோடு இன அழிப்புக்கெதிரான விசாரணையைச் சர்வதேசம் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை ஐ.நா. மனித உரிமைச் சபையில் முன் வைத்தேன்.பதிவு இணைய செய்தி

   உண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும், வடமாகாண சபை சார்பாகவும் முதன் முதலில் ஐ.நா மனித உரிமைசபையில் நேரடியாக இனஅழிப்புக்கான சர்வதேச விசாரணையை நான்கோரும் வரைவேறு எந்ததமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரோ, மாகாணசபை உறுப்பினரோஅங்கு கலந்து கொண்டு அதைக் கோரியிருக்கவில்லை.பதிவு இணைய செய்தி

   என்னைக் கூட இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோரக் கூடாது என்று திரு.சுமந்திரன் அவர்கள் தடுத்தார் என்பதை கடந்த வருடமே நான் ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தியிருந்தேன்.

   இன அழிப்புப் போரின் தாக்கத்தை நேரடியாகத் தரிசித்தவள் என்ற வகையில் என்னோடு சர்வதேச பிரநிதிகள் பலரும் நேரடியாக மனம் திறந்து பேசும் வாய்ப்புக்கள் உருவாகின.பதிவு இணைய செய்தி

   ஜெனிவாவில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த போது என்னிடம் ஒரு நாட்டின் பிரதிநிதி திரு.சுமந்திரன் அவர்கள் இன அழிப்புக்கெதிரான சர்வதேச விசாரணையை சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் நேரடியாக ஏன் வலியுறுத்தவில்லை என்று கவலையுடன் தெரிவித்திருந்தார்.

   உங்களைப் போல ஏன் ஏனைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேரடியாக கலந்து கொண்டு இன அழிப்பு விசாரணையை வலியுறுத்தத் தவறுகிறார்கள் என்றும் என்னிடம் அவர்கள் கேட்டார்கள்.

   மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் அண்ணையும் ஜெனிவாவில் இதேவிதமான கோரிக்கையை நேரடியாக கலந்து கொண்டு முன் வைத்தார்.

   உண்மையில், மாகாண சபையில் இன அழிப்பு குறித்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அடிகோலுபவர்களாக சிவாஜி அண்ணையையும் என்னையும் போன்ற சில உறுப்பினர்கள் தொடர்ச்சியாக உழைத்தோம். எமது உழைப்பிற்கு மேலாக எதிர்பாராத பலனாக முதலமைச்சர் மாண்புமிகு விக்கினேஸ்வரன் அவர்கள் இந்த வருடத்தின் ஆரம்பதத்தில் நிறைவேற்றிய தீர்மானம் ஒருவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், சர்வதேச சக்திகளுக்கு நாம் தெளிவாக அந்த விடயத்தை எடுத்துச் சொல்லி விட்டோம்.பதிவு இணைய செய்தி

   ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச விசாரணை கோரப்படவில்லை. இது ஒரு அப்பட்டமான அநீதி என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.பதிவு இணைய செய்தி

   முதலமைச்சர் போரின் சாட்சியங்களுக்கூடாக, மக்களின் அபிலாசைகளை விளங்கிய நிலையில் தழுவிய ஒரு தீர்மானத்தை, வடமாகாணசபை ஏகமனதாக வாக்களித்து நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை தனது விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்ளாமல் விடப்பட்டிருப்பதன் பின்னணியை எமது மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.பதிவு இணைய செய்தி

   எமது மக்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று சர்வதேச சக்திகளிடையேயும் குழப்பமானநிலை இருக்கிறது. ஐ.நா.சபைக்கு உள்ளேயே அதன் செயலாளர் பான்கிமூனின் அலுவலகத்துக்கு உள்ளே இருந்து கொண்டே சில சக்திகள் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை என்ற எமது கோரிக்கையை முடக்கி ஒரு உள்ளகவிசாரணையை இலங்கைக்கு உள்ளேயே நடாத்திவிட வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான இன்றைய சூழலில் எமது குரலாக, எமது கோரிக்கையாக எது ஒலிக்க வேண்டும், யார் தெரிவாக வேண்டும் என்பது முக்கியமாகிறது.

   அதே போல எமக்குள் இருந்து எந்தக் குரல், எந்தக் கோரிக்கை ஒலிக்கக் கூடாது என்பதும் முக்கியமாகிறது.

   இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோராது. வித்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளைச் செலுத்த வேண்டாம். அவர்களை உள்ளிருந்தே தோற்கடிக்கயாருக்கு முடியுமோ அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளைத் தவறாது செலுத்துங்கள்.

   வேறு வகைகளில் குழப்பமானாவர்களாக நீங்கள் சிலரைக் கருதினாலும், இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைத் தான் கோருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்தக்கோரிக்கை தவிர்க்கப்பட்டதை தான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் முதலமைச்சரின் கைகளைப் பலப்படுத்துவதே காலத்தின் கட்டாயம் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் தெளிவாக யார் உரைக்கிறார்களோ அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்கைத் தயவு செய்து செலுத்துமாறு கூட்டமைப்புக்கே எமது வாக்கு என்று தீர்மானித்திருக்கும் அனைவரையும் நான் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.பதிவு இணைய செய்தி

   இன அழிப்பில் ஆகுதியாக்காப்பட்ட எமது ஆன்மாக்களின் குரலாக நான் இதை வேண்டுகிறேன்.

   முதலமைச்சர் அவர்கள் கூட, நடுநிலை நின்று, ஆனால் பூடகமாக யாரை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும் என்று தனது நிலைப்பாட்டைக் கூறியிருக்கிறார். நான் அதைக் கொஞ்சம் விளக்கமாகவே இப்போது சொல்லியிருக்கிறேன்.பதிவு இணைய செய்தி

   இலங்கைப் பாராளுமன்றின் கதிரைகளை யார் நிரப்பினாலும் பரவாயில்லை ஆனால், தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணையை சில சிக்கலான சக்திகளுடன் சேர்ந்து ஒத்துழைத்து குழி தோண்டிப் புதைப்பவர்களை மக்கள் ஆணை பெற்றவர்களாகத் தயவு செய்து தேர்ந்தெடுக்க வேண்டாம்.

   இறுதியாக நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

   நான் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளிருந்தவாறே பங்குபற்ற விரும்பினேன். இதற்கான காரணம் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையை மேலும் பலப்படுத்துவதற்காகச் செயற்பட வேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காகவே.

   பல இன்னல்களையும் சவால்களையும் சந்தித்து இன அழிப்புப் போருக்கு ஊடாக தமது வாழ்வைத் தொடரும் எமது உறவுகளுக்கு தன்மானத்துடனான, நீதியான வாழ்வையும் உரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கு தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்பதும் எனது நோக்கமாக இருந்தது.

   எனது குரலுக்குச் செவிசாய்க்கும் நட்பு உள்ளங்களை சர்வதேசப் பரப்பில் எனது கடந்த இரண்டு வருட அரசியல் வாழ்வில் நான் கண்டது எனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.

   நான் பல பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டவாறு தான் மாகாணசபை உறுப்பினராக இருந்தவாறு எனது அரசியல் பணியை மேற்கொண்டிருக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் ஆகினால் அது எனது பாதுகாப்புக்கு மேலும் சாதகமாக அமையும் என்றும் நான் நினைத்திருந்தேன். ஆனால், இந்த வாய்ப்பு முழுமையாக நிராகரிக்கப்பட்டது. அதற்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

   நான் எனது கட்சியை விட்டும், கூட்டமைப்பை விட்டும் வேறு அணியில் சார்வதற்கோ, சுயேட்சையாக நிற்பதற்கோ ஒரு துளியும் திட்டமிட்டு இருக்கவில்லை.பதிவு இணைய செய்தி

   சுயேட்சையாக நிற்பது போன்ற ஒரு அழுத்தத்தையும் நான் பிரயோகித்துப் பார்த்தேன். ஆனால், அந்த அழுத்தமும் பலனளிக்கவில்லை. என்னில் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை நான் இங்கு சொல்கிறேன்.பதிவு இணைய செய்தி

   தற்போது இருக்கும் சூழலில், இனஅழிப்புத் தீர்மானத்தை சரியாக நிறைவேற்றிய மாகாணசபையும் அதன் முதலமைச்சரும் தமிழ்மக்களின் அபிலாசைகளைக்காக குரல் கொடுக்கும் தார்மீகத்தைக் கொண்டிருப்பதால் அந்தக்கட்டமைப்புக்குள் இருந்தவாறே தொடர்ந்தும் நாங்கள் செல்ல வேண்டிய திசையைத் தீர்மானிப்போம்.பதிவு இணைய செய்தி

   ஆனால், சர்வதேச அரங்கில் நேர்மையில்லாமல் செயல்படும், இரண்டு நாக்குப் போக்குள்ளவர்களை பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓரம் கட்டும் பொறுப்பு வாக்காளர்களாகிய உங்களுக்கு உண்டு என்பதையே இந்தத் தேர்தலுக்கான இறுதியும் உறுதியுமான எனது செய்தி.

   மிகுதி மக்களான உங்கள் கைகளில் உள்ளது. என்றுள்ளது.
    
   http://www.pathivu.com/news/42040/57//d,article_full.aspx
  • By sudaravan
   வடமாகாண சபைத் தேர்தலில் இரண்டாவது நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அனந்தி சசிதரன், இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளபோதும் கட்சி தலைமை அதனை நிராகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து கட்சி தலைமைக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர் மாற்று தரப்பிற்கு பகிரங்க ஆதரவினை வழங்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

   போரினால் பாதிக்கப்பட்ட பெண் என்பதனாலும், இறுதிப் போரின் முக்கிய சாட்சி என்ற வகையிலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இலங்கையின் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களில் நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் குரல் கொடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே தன்னை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதனை கருதுவதாக அனந்தி சசிதரன் கூறியிருந்தார்.

   இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஏற்கனவே தான் கோரியிருப்பதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்தார். எனினும், அது தொடர்பில் இன்னும் தனக்கு முடிவு எதனையும் சம்பந்தன் தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர், தனக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படமாட்டாது என்று தமிழரசுக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார தன்னை தேர்தலில் போட்டியிடுமாறு தனது ஆதரவாளரகள் கோரி வருவதாகவும், தமிழரசுக் கட்சியில் இல்லாவிட்டாலும், வேறு கட்சியின் ஊடாகவாவது தேர்தலில் போட்டியிடுமாறு அவர்கள் வலியுறுத்துவதாகவும் தெரிவித்த அவர், இது குறித்து தான் இன்னும் முடிவு எதனையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.

   எனினும் இறுதியாக நடந்த சமரசப்பேச்சுக்களினையடுத்து மாற்று தரப்பிற்கு இறுதி நாட்களினில் ஆதரவு கோரி அனந்தி களமிறங்குவாரென தெரியவருகின்றது.http://www.pathivu.com/news/41374/57//d,article_full.aspx
 • Topics

 • Posts

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.