Jump to content

சீனாவின் பருவநிலைக் கொள்கை பற்றி உலகம் ஏன் கவலைப்படவேண்டும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் பருவநிலைக் கொள்கை பற்றி உலகம் ஏன் கவலைப்படவேண்டும்?

சீன மின் நிலையமும் கொடியும்.

சீனாவின் கார்பன் உமிழ்வு அதிவேகமாக அதிகரிக்கிறது. மற்ற நாடுகளின் கார்பன் உமிழ்வு அளவு மிக சாதாரணமாகத் தோன்றும் அளவில் இது உள்ளது.

சீனாவின் கார்பன் உமிழ்வு அளவில் பெரிய அளவு குறையாமல் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் உலகம் வெல்ல முடியாது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

2030க்கு முன்பாக தங்கள் கார்பன் உமிழ்வு அளவு உச்சபட்ச அளவை எட்டிவிட வேண்டும் என்றும் 2060ல் கார்பன் சமநிலையை எட்டிவிட வேண்டும் என்பதும் சீனாவின் இலக்கு என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளார். ஆனால், மிக அதீதமான இந்த இலக்கை சீனா எப்படி எட்டும் என்று அவர் கூறவில்லை. 

காற்றுமண்டலத்தில் உமிழப்படும் கார்பன் அளவும், காற்று மண்டலத்தில் இருந்து மரங்கள் உள்ளிட்டவை உறிஞ்சிக்கொள்ளும் கார்பன் அளவும் சம நிலையில் இருப்பதுதான் கார்பன் சமநிலை எனப்படுகிறது. 

அதிவேக வளர்ச்சி

எல்லா நாடுகளுக்குமே தங்கள் கார்பன் உமிழ்வு அளவை குறைப்பது சிக்கலாக உள்ளது. சீனா இதில் மிகப்பெரிய சவாலையே எதிர்கொண்டுள்ளது. 

ஒரு சராசரி அமெரிக்கரால் உமிழப்படும் கார்பனைப் போல பாதி அளவு கார்பன்தான் ஒரு சராசரி சீனரால் உமிழப்படுகிறது. 

ஆனால், சீனாவில் உள்ள 140 கோடி மக்கள் தொகையும், அதிவேக பொருளாதார வளர்ச்சியும் சேர்ந்து நாட்டின் ஒட்டுமொத்த உமிழ்வு அளவை மற்ற நாடுகளைவிட அதிகரித்துள்ளன. 

 

உலகிலேயே கரியமில வாயுவை அதிகம் உமிழும் நாடாக 2006ல் ஆனது சீனா. தற்போது உலகெங்கிலும் உமிழப்படும் மொத்த பசுமை இல்ல வாயுக்களில் கால் பங்கு சீனாவில் இருந்துதான் வெளியாகிறது. 

பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடக்கவுள்ள சிஓபி26 என்று பெயரிடப்பட்ட ஐ.நா. பருவநிலை உச்சி மாநாட்டில் சீனாவின் உமிழ்வு விஷயம் தீவிர பரிசீலனைக்கு உள்ளாகும் என்று தெரிகிறது. 

அதாவது இந்த உமிழ்வுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான சீனாவின் வாக்குறுதிகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 

2015ம் ஆண்டின் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிற நாடுகளைப் போலவே, தொழில்மயமாக்கலுக்கு முந்தைய நிலையை ஒப்பிட உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல் தடுப்பதற்குரிய மாற்றங்களை செய்வதாக சீனா ஒப்புக்கொண்டுள்ளது. 

2020ம் ஆண்டில் சீனா மேலும் வலுவான வாக்குறுதியை அளித்தது. ஆனால், பருவநிலை மாற்றம் தொடர்பான அந்த இலக்குகளை அடைய சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மிகவும் போதுமானவை அல்ல என்று கூறுகிறது 'கிளைமேட் ஆக்ஷன் டிராக்கர்' என்ற அமைப்பு. உலக அளவிலான விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வல்லுநர்களைக் கொண்டது இந்த அமைப்பு. 

spacer.png

 

நிலக்கரியில் இருந்து விலகல்

சீனாவின் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது சாத்தியம்தான் என்று கூறும் வல்லுநர்கள் ஆனால், அதற்கு தீவிரமான மாற்றங்கள் தேவை என்கிறார்கள். 

அந்நாட்டின் முக்கிய ஆற்றல் மூலாதாரமாக நிலக்கரியே நீண்ட காலமாக உள்ளது. 

spacer.png

நிலக்கரி பயன்பாட்டை 2026ல் இருந்து படிப்படியாக குறைத்துக்கொள்வதாகவும், வெளிநாடுகளில் நிலக்கரி மூலம் இயங்கும் திட்டங்களை கட்டமைக்கப்போவதில்லை என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறுகிறார். ஆனால், அரசாங்கங்களும், செயற்பாட்டாளர்களும் இந்த நடவடிக்கை போதுமானது அல்ல என்கிறார்கள். 

மின்சார உற்பத்திக்கு நிலக்கரியைப் பயன்படுத்துவதை 2050 வாக்கில் முழுமையாக சீனா நிறுத்திவிடவேண்டும். அதற்குப் பதிலாக அணுசக்தி அல்லது புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆகியவற்றைப் பயன்படுத்தவேண்டும் என்று பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

ஆனால், நிலக்கரி மூலம் இயங்கும் மின்சார நிலையங்களை மூடுவதற்குப் பதிலாக 60க்கும் மேற்பட்ட இடங்களில் நிலக்கரி மூலம் இயங்கும் புதிய அனல் மின் நிலையங்களை சீனா அமைத்துவருகிறது. இந்த புதிய மின் நிலையங்கள் பலவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட உலைகள் அமைக்கப்படுகின்றன. 

spacer.png

புதிதாக கட்டப்படும் அனல் மின் நிலையங்கள் பொதுவாக 30-40 ஆண்டுகளுக்கு செயல்படும். 

எனவே கார்பன் உமிழ்வை சீனா குறைக்கவேண்டுமானால், புதிய நிலக்கரி அனல் மின் நிலையங்களின் திறனைக் குறைக்கவேண்டும்; பழைய நிலையங்களை மூடவேண்டும் என்கிறார் ஆய்வாளர் பிலிப்பி சியாய்ஸ். பாரிசில் உள்ள 'இன்ஸ்டிடியூட் ஆஃப் என்விரோன்மென்ட் அன்ட் கிளைமேட் சயின்ஸ்' கல்வி நிலையத்தை சேர்ந்தவர் இவர். 

சில மின் நிலையங்களில் புதிய தொழில்நுட்பங்களின் உதவியோடு மின் உற்பத்தித் திறனை அதிகரித்து, கார்பன் உமிழ்வு அளவை குறைக்க முடியும். ஆனால், இதை பெரிய அளவில் செய்வதற்கான தொழில்நுட்பம் இப்போதுதான் உருவாகிவருகிறது. 

கரியமில வாயுவை அதிகம் உமிழ்வதன் மூலம் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தி வறுமையைக் குறைப்பது என்ற மேற்கத்திய நாடுகள் கடந்த காலத்தில் பின்பற்றிய உத்தியைப் பின்பற்ற தங்களுக்கு உரிமை உள்ளது என்கிறது சீனா. 

குறுகிய காலக் கண்ணோட்டத்தில், வரும் குளிர்காலத்தில் மின்வெட்டு வருவதைத் தவிர்ப்பதற்காக நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது சீனா. கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக பல கனரகத் தொழில்களில் தேவை அதிகரித்துள்ளதை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

பசுமை ஆற்றலுக்கு மாறும் சீனா

2050 வாக்கில் 90 சதவீத மின்சாரம் அணு சக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலங்கள் வழியாக வரவேண்டும் என்கிறார்கள் சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். 

அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் சோலார் பேனல், பெரிய பேட்டரிகள் போன்ற பசுமை தொழில்நுட்பங்களில் சீனா காட்டும் முனைப்பு உதவியாக இருக்கும். 

பல சீன நகரங்களில் இருக்கும் காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்துவதற்காகவே சீனா இந்த பசுமைத் தொழில்நுட்பங்களை நோக்கிச் சென்றது சீனா. 

ஆனால், இந்த புதிய தொழில்நுட்பங்கள் மூலம் லட்சக்கணக்கான சீனர்களுக்கு வேலைவாய்ப்பும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்பும் இருப்பதாக சீன அரசு நம்புகிறது. இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் எண்ணெய், எரிவாயு இவற்றை நம்பி இருப்பதையும் குறைக்கலாம் என்று நினைக்கிறது அரசாங்கம். 

உலக அளவில் ஆற்றல் துறையில் ஏற்பட்டுவரும் இத்தகைய மாற்றங்களில் சீனா முன்னிலையில் இருக்கிறது என்கிறார் ஓவர்சீஸ் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த யூ கோ. "மேலும் மேலும் குறைந்த விலையில் பசுமை தொழில்நுட்பத்தை நாம் வழங்க முடிவதற்கான காரணங்களில் ஒன்று சீனா," என்கிறார் அவர். 

spacer.png

உலகில் எந்த நாட்டைவிடவும் அதிகமான சூரியவிசை மின்சாரத்தை தயாரிக்கிறது சீனா. அந்நாட்டின் மிக அதிகமான மக்கள்தொகையை வைத்துப் பார்க்கும்போது அது ஒன்றும் ஆச்சரியமான ஒன்று அல்ல. ஆனால், நாடு எதைநோக்கிச் செல்கிறது என்பதைக் காட்டுவதற்கான குறியீடு அது. 

2020 ஆண்டு நிலவரப்படி உலகின் வேறு எந்த நாட்டைவிடவும் மூன்று மடங்குக்கும் அதிகமான காற்றாலைகளைக் கொண்டுள்ளது சீனா. 

2030ல் பெட்ரோலியம் முதலிய நிலப்படிவு எரிபொருள் அல்லாத ஆற்றல் மூலங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு மொத்த மின் உற்பத்தியில் 25 சதவீதம் இருக்கவேண்டும் என்கிறது சீனா. இந்த இலக்கினை முன்னதாகவே சீனா அடையும் என்று பல பார்வையாளர்களும் கூறுகிறார்கள். 

மின்சார வண்டி முனைப்பு

கார் விற்பனையில் மின்சார வண்டிகளின் விகிதம் எவ்வளவு உள்ளது என்ற அடிப்படையில் கணக்கிட்டால் உலகில் சீனா 7வது இடத்தில் உள்ளது. ஆனால், உண்மையான எண்ணிக்கையில் பார்த்தால், சீனாவில் உற்பத்தியாகிற, விற்பனையாகிற மின்சார கார்களின் எண்ணிக்கை வேறு எந்த நாட்டைவிடவும் மிகவும் அதிகம். 

தற்போது சீனாவில் விற்பனையாகும் 20 கார்களில் ஒன்று மின்சார கார். 

2035ம் ஆண்டில் சீனாவில் விற்பனையாகும் எல்லா கார்களும் முழுவதும் மின்சாரத்தில் இயங்குவதாகவோ அல்லது மின்சாரத்திலும், எண்ணெயிலும் இயங்குவதாகவோ இருக்கும் என தொழில்துறை பிரநிதிகளும், அரசு அதிகாரிகளும் கூறுகிறார்கள். 

spacer.png

கார்கள் மின்சாரத்தில் இயங்குவதாக மாறுவது எந்த அளவுக்கு கார்பன் உமிழ்வை குறைக்கும் என்பதை நேரடியாக சொல்லிவிட முடியாது. உற்பத்தி, கார்களை சார்ஜ் செய்வதற்கு எந்தவிதமான மின்சாரம் பயன்படுகிறது என்பதை எல்லாம்வைத்துதான் இதற்கான விடை இருக்கும். 

எப்படி இருந்தாலும், ஒரு மின்சார வண்டி தன் வாழ்நாளில் வெளியிடும் கார்பன் உமிழ்வின் அளவு பெட்ரோல், டீசல் வண்டிகளின் உமிழ்வு அளவைவிட குறைவுதான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

மொத்த கார்பன் உமிழ்வு அளவில் கால் பங்குக்கு வண்டிகள் எண்ணெயை எரித்து வெளியிடும் புகையே காரணம் என்பதால் இந்த மாற்றம் மிக முக்கியமானது. அதிலும் சாலையில் செல்லும் வண்டிகளே பெரிய அளவில் உமிழ்கிறவை. 

மீதம் உள்ள உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து உற்பத்தி செய்யும் பேட்டரி திறனைப் போல இரு மடங்கு மொத்த திறன் உள்ள பேட்டரிகளை 2025ல் சீனா உற்பத்தி செய்யும். 

இதன் மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவில் புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலம் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தை சேமித்துவைத்துப் பயன்படுத்த முடியும் என்று பார்வையாளர்கள் கூறுகிறார்கள். 

பசுமையாகும் சீனாவின் நிலம்

பசுமை இல்ல வாயுகளை உமிழும் நிகர அளவு பூஜ்ஜியத்தை அடையும் என்று கூறுவதன் மூலம் சீனா உமிழ்வுகளே செய்யாது என்று பொருள் அல்ல. 

தம்மால் முடிந்தவரை உமிழ்வுகளை சீனா கட்டுப்படுத்தும். மீதம் உள்ளவற்றை தாமே உறிஞ்சிக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யும். பல்வேறு அணுகுமுறைகளை இணைத்து இந்த இலக்கை சீனா அடையும்.

தாவரங்கள் கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ளும் என்பதால், செடிகொடிகள் சூழ்ந்த பசுமைப் பரப்பின் அளவை அதிகரிப்பது நிகர உமிழ்வு அளவை குறைப்பதில் உதவும். 

இந்த விஷயத்திலும் சீனாவில் இருந்து வரும் செய்தி உற்சாகம் தருகிறது. மற்ற எந்த நாட்டைவிடவும் சீனா அதிவேகமாக பசுமையாகி வருகிறது. மண் அரிப்பு, மாசுபாடு ஆகியவற்றைக் குறைப்பதற்கான பல்வேறு காடுவளர்ப்புத் திட்டங்களின் மூலம் இது பெருமளவு சாத்தியமாகியுள்ளது. 

spacer.png

வயல்களில் ஆண்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட போகங்கள் விளைவிப்பதும் இதற்கு ஒரு காரணம். இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட போகம் விளைவதால் ஆண்டின் நீண்ட காலப்பகுதி நிலத்தில் பசுமை சூழ்ந்திருக்கும். 

அடுத்து என்ன?

இந்த முயற்சிகளில் சீனா வெற்றியடையவேண்டும் என்பதே உலகின் எதிர்பார்ப்பு. 

"சீனா கார்பன் அளவை குறைக்காவிட்டால் நம்மால் பருவநிலை மாற்றத்தை வெல்ல முடியாது," என்கிறார் லேன்செஸ்டர் சுற்றுச்சூழல் மையத்தை சேர்ந்த பேராசிரியர் டேவிட் டைஃபீல்டு. 

நீண்டகால உத்திகளை செயல்படுத்துவதிலும், பெரிய அளவு மூலதனத்தை திரட்டுவதிலும் சீனாவுக்கு சில பெரிய சாதகங்கள் உள்ளன. ஆனால், இவற்றை செயல்படுத்துவதில் சீன அதிகாரிகள் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர்.

 

https://www.bbc.com/tamil/global-58913566

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.