Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன்… இது, 200’வது பதிவை தொட்டுள்ளது. 😁

சீமான் என்றாலே… கெத்து தான். 👍🏼

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பிரபா சிதம்பரநாதன்

நீங்கள் சொல்வது போல தந்தையை பிரிந்திருந்திருந்த நாட்களையும் தாங்களை மற்றவர்கள் பார்த்த விதங்களையும் கூறிய பாடல்.. மேலும், அந்த பாடலில்  ”උතුරත් දකුණත් යා කල බල සෙන් නිරින්දා” வடக்கையும் கிழக

Sasi_varnam

வணக்கம் விளங்க நினைப்பவர், இது பொதுவாக சொல்லப்பட்ட கருத்து உங்களையோ அல்லது யாரையும் குறிப்பிட்டு அல்ல. 🙏 சீமான், ஜாமான், தேசியம், ஜோசியம் எல்லா திரிகளுக்கும் இது பொருந்தும். யாழ்கள நிபந்தனைகளில்

Justin

நாதம் இன்னும் கள விதிகளைப் படிக்கவில்லைப் போல: ஒருவர் உங்கள் கருத்துக்குப் பதில் எழுதிய பின்னர் மீளப் போய் உங்கள் கருத்தை மாற்றுவது தவறு! பொதுவான திரியில் "எனக்கு முதுகு சொறி அல்லது விலகிப்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

கோஷான்,

தமிழ் ரசிகர்களால் புகழ்ந்து பாராட்டப்பட்ட  'மெனிக்கே மகே ஹித்தே...' என்ற பாடல் சிங்கள இராணுவத்தை புகழ்ந்து பாடப்பட்ட பாடல் அல்ல. அது ஒரு பெண்ணைப் பற்றிய சாதாரண பாடல்.

சிங்கள இராணுவத்தை புகழ்ந்த வரிகளைக் கொண்ட பாடல் பெரியளவில் பிரபலமாகவில்லை. மெனிக்கே பாடலின் பின் தான் அவர் முன்னர் பாடிய பாடல்களை தேடிப் பார்த்து கேட்க முனைகின்றனர்.

மெனிக்கே பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே உள்ள இணைப்பில் உள்ளது.

 

 

https://www.lyricstrip.com/manike-mage-hithe-lyrics-english-translation/

தெளிவாக்கியமைக்கு நன்றி நிழலி. இந்த பாடல் வெளி வந்ததும் ஒருக்கா சில வரிகள் கேட்டேன் குரல் manufactured pop போல செயற்கையாக இருந்தது நூத்து விட்டேன்.

பிறகு பிரசன்ன சில்வாவின் மகள் என வாசித்தேன். அத்தோடு அதை விட்டு விட்டேன். பின்னர் பொஎன்சேக்கா கூறியதை பற்றி வாசித்தேன்.

அவர்கள் அப்படித்தனே இருப்பார்கள் என நினைத்து கடந்து போனேன். 

மேலே சசி எழுதியதை இந்த பாடலில்ன் வரிகள் என தவறாக புரிந்து கொண்டேன்.

ஆனால் என் பார்வையில் மாற்றம் இல்லை.

பிரசன்ன சில்வாவின் மகள் இந்த நிலைப்பாட்டில் இருப்பது, கோட்டவுக்கு பாடி காட்டுவது அதிசயம் இல்லை. இதற்கு மாறான நிலைப்பாட்டில் அவர் இருந்தால்தான் அதிசயம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விளங்க நினைப்பவன் said:

தான் கொடுத்த கடிதத்திற்கு பிரான்ஸ் டென்மார்க் சுவிஸ்லாந்து நாடுகள் குடியுரிமை கொடுக்கின்றது என்ற முழுமையான பொய்  பாடல் இசையால் திசைமாறியது சீமானுக்கு நல்ல  நிம்மதி😂

வணக்கம் விளங்க நினைப்பவர்,
இது பொதுவாக சொல்லப்பட்ட கருத்து உங்களையோ அல்லது யாரையும் குறிப்பிட்டு அல்ல. 🙏

சீமான், ஜாமான், தேசியம், ஜோசியம் எல்லா திரிகளுக்கும் இது பொருந்தும். யாழ்கள நிபந்தனைகளில் அனைத்து விடயங்களும் தெளிவாக விளங்கப்படுத்தியும் மீண்டும் மீண்டும் ஆரோக்கியமற்ற கருத்துகளும் பதில்களுமாக இருப்பதும், அதுவே தனிநபர் தாக்குதல்களாக மாறுவதும் கவலைக்குரியதாகவே உள்ளது. 
யாழ்களம்  பக்க சார்பான செய்திகள் இட்டு, கள உறவுகளிடையே கருத்து மோதல்களை வளரவிட்டு சுகம் காணும் 3ஆம் தர களமல்ல. இதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள்.

இந்தப் போக்கு நீடித்தால் நிச்சயமாக யாழ்களத்தை காலவோட்டத்தில்  மூட வைக்கும் அபாயம் உள்ளது. இது பற்றி நிர்வாகம் ஓரளவுக்கு புரிந்தும் கொண்டிருக்கும். 
ஒரு சிறு குழுவாக இருந்து கள உறுப்பினர்கள் தமக்குள் தேவையற்று தொடர்ச்சியாக அடிபடுவதும், பாவம் மட்டுறுத்தினர்கள்  தங்கள் பொன்னான நேரத்தை இக்குழுவாதங்களை கண்காணிப்பதற்கும், மட்டுறுத்துவதற்கும்  மினக்கெடுவதும் தொடர்ந்து சாத்தியப்படாது. 
எனவே இவற்றை புரிந்து கொண்டு ஆக்கபூர்வமாக கருத்தாடல் செய்வோம்.

எமக்கிருக்கும் ஒரு நல்ல தளத்தையும் வலுவிழக்கப்பண்ணாமல் இருப்பது நமது கடமை இல்லையா? 🙏

  • Like 6
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sasi_varnam said:

சீமான், ஜாமான், தேசியம், ஜோசியம் எல்லா திரிகளுக்கும் இது பொருந்தும்.

இதுல சில நல்ல திரியள நான் மிஸ் பண்ணிட்டன் போல இருக்கே🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2021 at 01:13, goshan_che said:

நிச்சயமாக இல்லை துல்பன்.

உண்மையிலேயே உங்களுக்கு ஒரு சாதாரண சிங்கள பாடகியின் ஏதோ ஒரு பாட்டுக்கும், ஒரு படைதளபதியின் மகள் தன் தந்தையை, அவரின் படைகளை புகழ்ந்து glorify பண்ணி பாடிய பாட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

@goshan_che @பிரபா ஏற்கனவே நிழலி கூறியபடி நான் குறிப்பிட்டது “மெனிக்கே மஹே ஹித்தா” என்ற ஜனரஞ்சக பாடலை மட்டும் தான். தமிழ் ரசிகர்களும் அந்த பாடலின் இசையை மட்டுமே ரசிக்கின்றனர். விரும்பிய இசையை ரசிக்கும் ரசிகர்களிடம் இந்த இசையை ரசி, இதை ரசிக்காதே என்று எப்படி கூறமுடியும்.  

ரவுடி பேபி உட்பட பல தமிழ் ஜனரஞ்சக பாடல்கள் சிங்கள ரசிகர்களிடம் பிரபல்யம். சிங்கள தொலைக்காட்சி நிகழ்வுகளில் கூட தாம் ரசித்த தமிழ் பாடலை பாடுவதும் நடனம் ஆடுவதும் நடக்கிறதே. 70 களில் எத்தனையோ ரி எம் எஸ் இன் எம்ஜிஆர் பாடல்கள் சிங்களத்தில் பிரபல்யம். 

 தாம் ரசிக்கும் இசையை கொண்டாடுவது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் இயல்பு. இந்த இயல்பிற்கு தமிழ் ரசிகர்கள் விதிவிலக்காக இருக்க மாட்டார்கள் தானே. 

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.