Jump to content

சீனப் பெருஞ்சுவரை விட அதிகமாக குவிந்த மின்னணு கழிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனப் பெருஞ்சுவரை விட அதிகமாக குவிந்த மின்னணு கழிவுகள்

  • விக்டோரியா கில்
  • அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்
39 நிமிடங்களுக்கு முன்னர்
வீணாகிப் போன செல்போன்கள்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

உலக அளவில் உற்பத்தியாகும் மின்னணு கழிவுகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான கழிவுகளே மறு சுழற்சி செய்யப்படுகின்றன என்கிறார்கள் வல்லுநர்கள்.

மின்னணு கழிவுகள் உலக அளவில் ஒரு தலைவலியாகவே உருவெடுத்துள்ளன. 2021ம் ஆண்டில் மட்டும் தூக்கி எறியப்பட்ட பழைய மின்னணுப் பொருள்களின் எடை 5.7 கோடி டன் இருக்கும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளார்கள்.

5.7 கோடி டன் என்பது சீனப் பெருஞ்சுவரின் எடையைவிட அதிகம்.

இதுவரை புவியில் செயற்கையாகப் படைக்கப்பட்ட பொருள்களிலேயே அதிக எடை கொண்டது சீனப்பெருஞ்சுவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் போன்கள், குளிர்சாதனப் பெட்டிகள், கெட்டில்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மின்னணு பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் போன்றவை இந்தக் கழிவுப் பொருள்களில் அடக்கம்.

தூக்கி வீசப்பட்ட அந்த மின்னணு கழிவுகளின் மதிப்பு பிரும்மாண்டமானது என்கிறது அந்த வல்லுநர் குழு.

உலக மின்னணு கழிவுப் பொருள்களின் மதிப்பு 62.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்கிறது வேர்ல்டு எக்கனாமிக் ஃபோரம் வெளியிட்ட ஓர் அறிக்கை. இது பெரும்பாலான நாடுகளின் ஆண்டு மொத்த உற்பத்தி மதிப்பைவிட அதிகம்.

"ஒரு டன் வீசியெறியப்பட்ட மொபைல் போன்களில் 1 டன் தங்கத் தாதுவில் இருப்பதைவிட அதிகம் தங்கம் இருக்கும்," என்கிறார் ஐ.நா. நீடித்த நிலைத்த சுழற்சித் திட்டத்தின் இயக்குநர் ரியூடிஜெர் கியூயர்.

குவியும் சாதனங்கள்

இ-கழிவுகள் என்று கூறப்படும் இந்த மின்னணு கழிவு உற்பத்தி ஒவ்வோர் ஆண்டும் 2 மில்லியன் டன் அதிகரிக்கிறது. மொத்த உற்பத்தியில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே மறுசுழற்சிக்கு உள்ளாகிறது.

குறைவான ஆயுளும், சீர் செய்வதற்கான குறைவான வாய்ப்புகளும் உள்ள பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் இந்த இ-கழிவுகள் அதிகரிப்பதற்கு உற்பத்தியாளர்கள் காரணமாக இருக்கிறார்கள் என்று மின், மின்னணு கழிவுப் பொருள்களைக் கையாள்வதற்கான வல்லுநர் குழுவின் தலைமை இயக்குநர் பாஸ்கல் லெராய் குறிப்பிடுகிறார்.

பிரிட்ஜ், டிவி, பிற மின்னணு கழிவுகளின் குவியல்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பிரிட்ஜ், டிவி, பிற மின்னணு கழிவுகளின் குவியல்.

"மொபைல் போன்களில் அதிவேகமாக செய்யப்படும் வளர்ச்சிகளால் பழை போன்களை மாற்றவேண்டிய நிலை சந்தையில் ஏற்பட்டுள்ளது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தங்கள் தனிப்பட்ட மின்னணு சாதனங்களை மறுசுழற்சி செய்வதற்கு நுகர்வோரிடமும் தயக்கம் இருக்கக்கூடும். பிரிட்டனில் 4 கோடி பயன்படுத்தப்படாத சாதனங்கள் வீட்டில் உறங்குவதாக ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி 2019ல் செய்த ஓர் ஆய்வில் தெரியவந்தது. திறன் பேசிகளை செய்வதற்குத் தேவையான சில அரிதான, மதிப்பு மிக்க தனிமங்களின் சப்ளையில் இது பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு நூற்றாண்டில் தீரப்போகும் இத் தனிமங்கள் செல்போன் செய்யத் தேவை

  • கேலியம் (Gallium): மருத்துவ வெப்பமானிகள், எல்.இ.டி.கள், சோலார் பேனல்கள், டெலஸ்கோப்புகள் ஆகியவற்றில் பயன்படும். புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
  • ஆர்சனிக் (Arsenic): பட்டாசுகளில் பயன்படும்.
  • வெள்ளி (Silver): கண்ணாடிகளில், எதிர்வினையாற்றும் லென்ஸ்களில், பாக்டீரியா எதிர்ப்பு துணி மற்றும் கையுறைகளில் பயன்படுகின்றன.
  • இரிடியம் (Indium): டிரான்சிஸ்டர், மைக்ரோ சிப், தீயணைப்பதற்கான நீர் தூவும் இயந்திரம், ஃபார்முலா 1 கார்களுக்கான பால் பேரிங்குகள், சோலார் பேனல்களுக்கான மேல்பூச்சு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
  •  
  • யிட்ரியம் (Yttrium): வெள்ளை எல்.இ.டி. விளக்குகள், கேமரா லென்ஸ்கள், சில வகை புற்றுநோய் சிகிச்சைகளில் பயன்படும்.
  • டான்டலம் (Tantalum): அறுவை சிகிச்சைகளில் உள்ளே வைக்கப்படும் இம்ப்ளான்டுகள், நியான் விளக்குகளின் எலக்ட்ராடுகள், டர்பைன் பிளேடுகள், ராக்கெட் நாசில்கள், சூப்பர்சானிக் விமானங்களின் நோஸ் கேப்புகள், காது கேட்கும் கருவிகள், பேஸ் மேக்கர்கள் போன்றவற்றில் பயன்படுகிறது.
திறன்பேசிகளில் 30 வகை தனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில புவியில் வேகமாகத் தீர்ந்துவருகிறவை.

பட மூலாதாரம்,ROYAL SOCIETY OF CHEMISTRY

 
படக்குறிப்பு,

திறன்பேசிகளில் 30 வகை தனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில புவியில் வேகமாகத் தீர்ந்துவருகிறவை.

"சரியானதை செய்ய நுகர்வோர் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான தகவல்கள் தெரிவிக்கப்படவேண்டும். அத்துடன் இ-கழிவுகளை சரியான முறையில் அகற்றுவது சமூக நெறியாக மாறுவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் வேண்டும்," என்கிறார் பாஸ்கல் லெரோய். மின்னணு பொருள்களை தூக்கி வீசாமல் அவற்றை மறுசுழற்சி செய்வதன் மூலம் பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வும் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு டன் மின், மின்னணு கழிவுகளை மறு சுழற்சி செய்வதன் மூலம் இரண்டு டன் கரியமில வாயு உமிழ்வைத் தடுக்க முடியும். எனவே பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டுக்கு நமது அரசுகள் செல்லும் நிலையில், கார்பன் உமிழ்வை குறைக்க இந்த நடவடிக்கை முன்னெப்போதையும்விட முக்கியம்" என்கிறார் அவர்.

பிரிட்டனில் உள்ள மெட்டீரியல் ஃபோகஸ் என்ற நிறுவனம் அஞ்சல் குறியீட்டை அடிப்படையாக வைத்து மக்களுக்கு அவர்களுக்கு அருகே உள்ள இ-கழிவு மறுசுழற்சி மையம் குறித்த தகவல்களை அளிக்கிறது.

https://www.bbc.com/tamil/global-58925076

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.