Jump to content

ஜனாதிபதி வழக்கறிஞர் எம்.ஏ.சுமந்திரனுக்குப் பகிரங்க மடல்-

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஜனாதிபதி வழக்கறிஞர் எம்.ஏ.சுமந்திரனுக்குப் பகிரங்க மடல்-
கிளிநொச்சி கண்டாவளையில் பெரும்போக விதைப்பில் ஈடுபட்ட நீங்கள்------
அரசியலில் குறிப்பாக ஜெனீவா மனித உரிமைச் சபை பற்றிக் கூறும் உங்கள் கருத்துக்கள் பொய்யானவை, அதாவது ஜெனீவா நடைமுறைகள் தெரிந்திருந்தும் இருட்டடிப்புச் செய்து அரசாங்கத்துக்கு ஏற்றாற்போல், நீங்கள் வாதிடுகிறீர்கள் என்பதை உங்கள் நெல்விதைப்பு வீடியோக் காட்சி காண்பிக்கின்றது.
முதலில் நெல்விதைப்புப் பற்றிய விளக்கம் உங்களுக்கு உண்டா?
நெல்விதைப்பு மூன்று வகைப்படும்
ஒன்று- புழுதி விதைப்பு
இரண்டாவது- சேற்று விதைப்பு (பலகையடித்தல்)
முன்றாவது- நாற்று நடுதல்
ஓன்று-- மாட்டு உழவில் ஈடுபடும் மாடுகள் சால் கட்டி உழும் (நேராகச் சாலில் செல்லும்) சால் தவறாமல் உழுது மறு உழவு உழுது நிலம் பண்படுத்தப்பட்ட பின்பே நெல் விதைக்கும் முறை புழுதி விதைப்பு எனப்படும். அதாவது மழைகாலம் ஆரம்பிக்கும் முன்.
இரண்டாவது- மழை பெய்யத பின்னர் வயலில் நீர் தேங்கி நிற்பின் சேற்று உழவு செய்து விதைப்பது மற்றுமொரு முறை. (அதாவது சேற்று விதைப்பு எனப்படும்)
மூன்றாவது-- மழைகாலம் தொடர்ச்சியாகத் ஆரம்பித்துவிட்டதெனில் நாற்றுநடுவது நாற்று விதைப்பு எனப்படும்.
இந்த முன்று முறைகளையும்விட மரபுரீதியாக, வெறும் தரையாக, அதாவது களைகள் இல்லாத தரையாக அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக புல் வளர்ந்துள்ள தரையில் நெல்லை விதைத்த பின்னர் உழுது மறுத்து உழது விடுவதுமுண்டு.
ஆகவே மேற்கூறிய மூன்று முறைகளும் மற்றும் மரபு விதைப்புக்கும் உட்படாத புதிய விதைப்பொன்றை நீங்கள் விதைக்கிறீர்கள்.
நீங்கள் உழுத மாடுகள் சால் கட்டி உழவில்லை. உங்களுக்கு மேழியைப் பொருத்தமாகப் பிடிக்கவும் தெரியவில்லை. கலப்பையை மாடுகள் வேகமாக இழுத்துச் செல்லும்போது கலப்பை விலகுமானால், கலைப்பையின் கொழு மாட்டின் குதியில் (காலின் அடிப்பாதத்தில்-குழம்பு) படுமானால் மாட்டின் கால் சிதைவடையும் அந்த விளக்கமும் உங்களுக்கு இல்லை.
உழுவதற்கு மாட்டைக் கையில் கொடுத்தவர் பாய்ந்து ஓடி வந்து பிடித்து, அது போற போக்கில் போகட்டும் நீங்கள் வீடியோவுக்கு நின்றால் போதும் என்றார்.
ஆனால் உழவு வேலையே தெரியாத ஒருவருக்கு நன்றாக உழுது பழகிய மாடுகளிடம் கொடுக்கப்பட்டால்கூட, அந்த மாடுகள் சால் வழியே அதாவது நேராகச் சென்று உழும்.
சாதாரணமாக ஒரு பெண்பிள்ளைகூட உழவு பழகிய மாடுகளாயின் மேழியைப் பிடித்தாலே போதும், அம் மாடுகள் சால் வழியே உழும்.
ஆனால் நீங்கள் உழவு செய்யும் அந்த மாடுகள் தறிகெட்டு ஓடி வயலில் உழுது கொண்டிருந்த உங்களையும் இழுத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி ஓடியதைப் காணொளியில் அவதானிக்க முடிந்தது.
உண்மையில் உழவு மாடுகள் சால்கட்டியே உழும். சுற்றிச் சுற்றி ஓடாது.
ஆனால் நீங்கள் உழுத மாடுகள் சுற்றிச் சுற்றி ஓடியதால் அந்த மாடுகள் சாவாரி மாடுகள் என்றே தெரிகிறது.
இதன் பின்பு உங்கள் விதைப்பு நடைபெறுகிறது-
ஆனால் நிலம் பண்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. மேற்கூறிய மூன்று நெல் விதைப்பு முறைகளும் அல்லது மரபு முறை அதற்குள் அடங்கவுமில்லை.
மாறாக--வயல் நிலம் புல் மண்டிக் கிடக்கிறது. வரம்புகள் கட்டப்படவில்லை. வரம்புகளிலும் வயலிலும் புல் நிறைந்த பகுதிகளில் நீங்கள் நெல்லை எறிகிறீர்கள். (நெல்லை விதைக்கவில்லை)
அவ்வாறு வீசி எறிந்தபோது உங்களுக்குப் பின் நின்று ஒருவர் வழிகாட்டுகிறார். அதாவது நேராகச் சென்று விதையுங்கள் என்று சொல்கிறார். ஆனால் அவர் கூறியதையும் நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை.
நீங்கள் உழுத மாடுகள் வீடியோ காட்சிகாக ஒழுங்காக உழவில் ஈடுபடாத புஷ்டியான மாடுகளாகத் தெரிகிறன. (புஷ்டியான மாடுகள் உழவில் ஈடுபடுவதுமுண்டு. ஆனால் உங்கள் மாடுகள் அப்படியாகத் தெரியவில்லை)
சுமந்திரன் அவர்களே---
வீடியோ காட்சிக்காக இதனை எடுத்திருந்தாலும் ஒழுங்காக வயல்வேலை தெரிந்தவர்களிடம் கேட்டல்லவா செய்திக்க வேண்டும்.
உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களை எப்படி ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா?
போரினால் பாதிக்கப்பட்டு அரசாங்கத்தின் உரிய உதவிகள் இன்றி தத்தம் நிலங்களில் இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி விதைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளின் தொழிலை நீங்கள் கொச்சைப்படுத்தியிருக்கிறீர்கள்.
நெல் விவசாயம் என்பது மக்களின் வாழ்வியலோடு பிணைந்தது. அதற்குச் சற்றும் பொருந்தாத முறையில். உங்களது செயற்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
உங்களுக்கு அங்கு விவசாயக் காணி இருப்பது என்பதைக் காண்பிப்பதற்காகவும், நானும் ஒரு மக்கள் தொண்டன் (விவசாயி) என்ற கோணத்திலும் நீங்கள் இவ்வாறு செய்ய முனைந்தாலும், உங்கள் புதிய சாரக் கட்டு (பேச்சு வழங்கில் சாறம்) நீங்கள் அவ்வாறானவர் இல்லை என்பதையே வெளிப்படுத்தியிருந்தது.
நீங்கள் இந்த வீடியோக் காட்சியை எடுக்க முற்பட்டமை மக்களோடு இருக்கிறேன் என்பதை வெளிக்காட்டவே என்று நீங்கள் கருதினாலும், மக்களின் இயல்பான இயற்கையோடு இணைந்த வாழ்வியலுக்கு மாறாகவும் யதார்த்தத்திற்கு எதிராகவுமே அது அமைந்துள்ளது என்பதை நீங்கள் அறியாதவரல்ல.
அத்துடன் நெல் விவாசயம் செய்யும் பூமியொன்றில் அதுவும் விவசாயத்தையே நன்கு கற்றுத் தேர்ந்த மக்கள் முன்னிலையிலேயே நீங்கள் விவாசயம் செய்யும் முறையைப் பிழையாகக் காண்பித்திருக்கிறீர்கள்.
அத்தோடு விவசாயிகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டுள்ளேன் எனவும் வாகனம் ஒன்றில் பயணித்தவாறு நேர்கணால் வழங்குகிறீர்கள்.
ஆகவே நெல் விவசாயம் தெரிந்த மக்களையே பகிரங்க வெளியில் முட்டாள்களாக்கிய நீங்கள், அரசியலிலும் இந்த மக்களுக்கு விளக்கமில்லை என்பதை வேண்டுமென்றே பகிரங்கமாகச் சொல்வதுபோல அமைந்துள்ளதல்லவா?
----உங்களுக்கு ஆதரவு என்று கூறிக் கொண்டு உங்களுக்குப் பின்னால் திரியும் சில தொண்டர்களும், வேறு சில ஊடகவியலாளர்களும் உங்களை வேண்டுமென்றே முட்டாளாக்குகின்றனர் என்பதை நீங்கள் அறியாமல் இருப்பதுதான் வேடிக்கை--
(குறிப்பு--நெல் விவசாயம் பற்றிய தகவல்களை அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டு அறிந்து சுருக்கமாக எழுதியுள்ளேன்)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிக்சன் சும்மா ஒரே பழைய கதையை எழுதப்படாது. 

இது அவுஸ்ரேலிய விதைப்பு முறை.

சுமந்திரன் மொனாஷ் யூனியில் கற்கும் போது அறிந்து வந்து இங்கே அறிமுகம் செய்கிறார்.

இந்த முறையில் பெரிதாக உழத்தேவையில்லை.

விதைக்க கூட தேவையில்லை.

புது சாறன் ஒன்றை கட்டியபடி, “கமெராவில் வந்தால் போதும்”. 

விளைச்சல் அமோகமாய் இருக்கும்.

1 hour ago, பெருமாள் said:

உத எழுதினவருக்கு உந்த உலகம் எங்க போயிருக்கெண்டு இன்னும் தெரியாது போல.. 🤣

ஏராலயும் உழலாம், ரக்ரறாலயும் உழலாம் எண்டிருக்கேக்க, உந்த மனுசன் வலுக்கட்டாயமா வயலில இறங்கேக்க உந்த பேஸ்புக் அறிவாளிக்குத் தெரியேல்லயா உவர் என்னத்துக்கு உழுறார் எண்டு..😩

ஆரோடையும் சோறியோணுமெண்டா வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்திடுவாங்கள். ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

உத எழுதினவருக்கு உந்த உலகம் எங்க போயிருக்கெண்டு இன்னும் தெரியாது போல.. 🤣

ஏராலயும் உழலாம், ரக்ரறாலயும் உழலாம் எண்டிருக்கேக்க, உந்த மனுசன் வலுக்கட்டாயமா வயலில இறங்கேக்க உந்த பேஸ்புக் அறிவாளிக்குத் தெரியேல்லயா உவர் என்னத்துக்கு உழுறார் எண்டு..😩

ஆரோடையும் சோறியோணுமெண்டா வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்திடுவாங்கள். ☹️

இதை எழுதினவர் கனடிய ஊடகம் cmr ன் இலங்கைக்கான செய்தியாளர் அண்மையில் கூட டெல்லி அதிகார பீடம் இவரிடம்  போனில் விசாரிப்புகளை மேற்கொண்டு இருந்தது .

உண்மையில் சிமனிசம்  திராவிடம்  பெரியார் போன்ற வழக்கமான யாழ் கொள்ளுபாடுகளை விட இலங்கை அரசியல் பெரும் கொதி நிலையில் உள்ளது ஆனால் அறிவிக்கப்படாத செய்தி தணிக்கை சொறிலங்காவில் இருப்பதால் அந்த கொதி நிலையின் சூடு யாழ் பக்கம் நெருங்கவில்லை போல் உள்ளது இதுபற்றி குணாகவியழகன்  சுட்டிக்காட்டிய போதும் ஏனோ அமைதி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.