Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அரசியலாகிய ஒரு பாடகி! - நிலாந்தன்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அரசியலாகிய ஒரு பாடகி! - நிலாந்தன்.

spacer.png

ஒரு வைரஸ் காலத்தில் “வைரலாகிய” ஒரு குரல் யொகானியின் உடையது. அந்தப் பாடலை அவர் கரகரத்த குழந்தைக் குரலில் பாடத் தொடங்குகிறார். நோகாமல் அதிகப் பிரயத்தனமின்றி லேசாக தலையை அசைத்து பாடுகிறார். காணொளியின் முழு சட்டகத்துக்குள்ளும் அவருடைய முகம் குழந்தை பிள்ளைத்தனமாக சிரித்துக்கொண்டு நிறைகிறது.

அது அப்படியொன்றும் உன்னதமான, நுட்பமான பாடல் அல்ல. அவர் பாடிய எனைய பாடல்களும் உன்னதமானவை என்று கூற முடியாது. எனினும் அது ஒரு எளிமையான பாடலாக இருந்தபடியால் எளிதில் வைரல் ஆகியது. சமூக வலைத்தளங்களின் காலத்தில் வைரலாகும் விடயங்கள் எல்லாமும் ஆழமானவைகளாக, உன்னதம் ஆனவைகளாக இருக்க வேண்டும் என்றில்லை. அதன் ஜனரஞ்சகப் பண்பு; அது வெளிவரும் காலம் ; அதைக் கொண்டாடும் பிரபலங்கள் போன்ற பல விடயங்கள் அது வைரலாகும் தன்மையை தீர்மானிக்கின்றன. அமரர் நெவில் ஜெயவீர மதிக்கப்படும் ஒரு சிவில் அதிகாரி. அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பொருளியல் நோக்கு சஞ்சிகையில் பின்வருமாறு கூறியிருந்தார்” புத்திசாலித் தனத்திற்கும் ஜனரஞ்சகத்திற்கும் பொதுவாகப் பொருந்தி வருவதில்லை” என்று. நடிகர் தனுஷின் “வை திஸ் கொலவெறி” பாடலுக்கு அது தான் நடந்தது. யொகானிக்கும் அதுதான் நடந்தது.

அவருடைய பாடலை பல தமிழர்கள் விரும்பி ரசித்தார்கள். கொண்டாடினார்கள். சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார்கள். சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரு தமிழ் ஒளிப்படக் கலைஞர் முகநூலில் அவருடைய பாடலை அறிமுகப்படுத்திய போது நான் யொகானியைத் தேடி அவருடைய ஏனைய பாடல்களுக்குள் போனேன். அவை என்னைப் பிரமிக்க வைக்கவில்லை. அவருடைய குடும்ப விவரத்தை தேடினேன். அவருடைய தந்தை ஒரு ராணுவ அதிகாரி என்று தெரிந்தது. அவர் ஒரு கீழ்நிலை அதிகாரியாக இருந்திருக்க முடியாது என்ற ஊகம் எனக்கு தொடக்கத்திலேயே இருந்தது. யொகானி வெளிநாடுகளுக்கு போகக்கூடிய வளம் பொருந்திய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. அவருடைய தாயார் ஒரு விமான பணிப்பெண் என்று கூறப்பட்டது. அதனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று யோசித்தேன். ஆனால் ருவிற்றரில் புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் அவருடைய சர்ச்சைக்குரிய பாடல் ஒன்றின் காணொளித் துண்டைப் பகிர்ந்த போது அவரைப் பற்றிய பின்னணி மெல்ல மெல்ல தெரியத் தொடங்கியது. இது தொடர்பில் ருவிற்றரில் நீண்ட வாதப்பிரதிவாதங்களும் நடந்தன. நடந்து கொண்டிருக்கின்றன. அவர் தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கிறார். தனது தந்தையின் தரப்பை வடக்கையும் கிழக்கையும் இணைத்த வீரர்கள்; கதாநாயகர்கள் என்று புகழ்கிறார்.

சர்ச்சைக்குரிய அப் பாடலின் நறுக்கப்பட்ட காணொளித் துண்டு தமிழ் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவத் தொடங்கியது. தமிழ்த் தரப்பில் அவருக்கிருந்த ஆதரவு குறையத் தொடங்கியது. அவருடைய தகப்பனார் யார் என்பதை கண்டுபிடித்து போரில் அவருடைய பங்களிப்பு என்ன என்பதை கண்டுபிடித்து புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பில் இருந்து வரும் ஊடகங்கள் வெளிப்படுத்தத் தொடங்கின. எனினும் யொகானி உலகப் பிரபல்யம் அடைந்துவிட்டார். இசையின் மகத்துவம் அதுதான். அது ஒரு உன்னதமான பாடல் இல்லை என்ற போதும் அதன் எளிமையும் ஜனரஞ்சகத் தனமும் சமூகவலைத்தளங்களின் காலமும் அவருடைய பாடலை வைரல் ஆக்கின. சரத் பொன்சேகா அவரை புகழும்போது அவருடைய தந்தையையும் சேர்ந்துக் கொண்டாடினார். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மாவிலாற்றில் முதலாவது பாடத்தை கற்பித்தது அவருடைய தந்தை என்று கூறினார். உலகம் முழுவதும் வைரலாகிய ஒரு பாடகியை அவர் தன்னுடைய ராணுவச் சட்டகத்துக்குள், யுத்த வெற்றி வாதத்துக்குள் சுருக்கினார். அங்கேதான் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் குறுக்கம் தெரிந்தது.  உலகம் முழுவதும் தெரியவந்த ஒரு பாடகியை அவர்கள் எப்படி உரிமை கோரினார்கள் ? என்பது.

அது ஒரு உன்னதமான பாடல் இல்லை என்ற போதிலும் இசைக்கு மொழி இல்லை, இனம் இல்லை, மதம் இல்லை,அது உலகளாவிய ஒரு மொழி என்பதனால் அந்த பாடலுக்கு அத்தனை பிரபலம் கிடைத்தது. எனினும் யொகானியின் அரசியல் நிலைப்பாடு அல்லது அவருடைய அரசியல் சாய்வு தமிழ் மக்கள் மத்தியில் அந்தப் பாடலுக்குள்ள கவர்ச்சியைக் குறைத்துவிட்டது. அவர் தனது தந்தையின் மகளாக ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுப்பது அவருடைய தெரிவு. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிப்பதும் தன் தந்தையின் தரப்பை வீரர்களாக சித்தரிப்பதும் அவருடைய தெரிவு. ஆனால் அவருடைய பாடலை கொண்டாடுவதா இல்லையா என்பதும் தமிழ் மக்களின் தெரிவு. ஓரு கலைஞரின் அரசியல் நிலைப்பாடு என்பது இந்த இடத்தில் கவனிப்புக்குரியதாகிறது. அதிலவருடைய ஆறம் சார்ந்த நிலைப்பாடு எது என்ற கேள்வி எழுகிறது.

தனது பாடல் இப்படி வைரலாக மாறும் என்று யொகானி நிச்சயமாக நம்பியிருக்க மாட்டார். அவருடைய எனைய பாடல்களை பார்க்கும் யாரும் அதை ஊகிக்கலாம். ஆனால் அந்தப் பாடல் உலகம் முழுவதும் பார்க்கப்படும் ஒரு நிலைமை வந்தபோதுதான் அவருடைய அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களும் மேலெழுந்தன. இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயாரற்ற ஒரு படைத் தரப்பை வெற்றி வீரர்களாக கொண்டாடும் ஒரு பாடகியை போர்க்குற்றங்களுக்கு எதிராக போராடுவோரும், மனித குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராகப் போராடுவோரும் இனப்படுகொலைக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் மக்கள் கூட்டங்களும் கொண்டாடுவார்களா?

படைப்பாளியும் புலமைமையாளருமான எனது நண்பர் ஒருவர் கேட்டார் ” யொகானியின் அரசியலைப் பற்றி எதுவும் தெரியாமல் அவரை ரசிப்பவர்கள் ஒருபுறமிருக்கட்டும். இந்தியா அவருக்கு ஏன் ஒரு கலாச்சார தூதுவர் அந்தஸ்தை கொடுத்தது? அப்படி கொடுக்கும்போது இந்தியாவுக்கு யொகானியின் தகப்பனுடைய பின்னணி பற்றித் தெரியாமல் இருந்திருக்குமா ?” என்று.

ஆனால் யொகானி அவ்வாறு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாச்சார தூதுவராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. வைரலாக மாறிய அவருடைய பாடலை புகழ்ந்து கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் செப்டம்பர் 18ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் எழுதிய குறிப்பில் “மிகப் புதிய கலாச்சாரத் தூதுவர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும் அது நாட்டின் உத்தியோகபூர்வ பிரகடனம் அல்லவென்றும் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக இந்தியா ஏ.ஆர்.ரகுமானை ஒரு கலாச்சார தூதுவராக உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்திருக்கிறது. ஆனால் கொழும்பில் உள்ள இந்திய தூதரகமோ அல்லது கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலோ அவ்வாறு யோகானியை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார தூதுவராக உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. தூதரகத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் காணப்பட்ட மிகப் புதிய கலாச்சார தூதுவர் என்ற வார்த்தையை வைத்து நெற்றிசன்கள் அதை இந்தியாவின் உத்தியோகபூர்வ பிரகடனமாக பிரசித்தப்படுத்தி விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

எனினும், இந்த இடத்தில் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும். அவர் எந்த அடிப்படையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மிகப்புதிய கலாச்சார தூதுவர் ஆனார் ? வைரல் ஆகிய ஒரே காரணத்துக்காகவா?அவரை அவ்வாறு அழைப்பதன் மூலம் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் சிங்கள மக்களுக்கு உணர்த்த முயலும் “கனெக்ரிவிற்றி” என்ன? தமிழ் மக்களுக்கு உணர்த்த முயலும் “கனெக்ரிவிற்றி” என்ன?
 

https://athavannews.com/2021/1245227

 

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அண்மைய நாட்களாக பிரபலம் பெற்ற யொஹானி

spacer.png

அண்மைய நாட்களாக உலக பிரபலம் பெற்ற யொஹானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேற்றைய தினம் சந்தித்தித்து கலந்துரையாடியுள்ளார்.கடந்த சில காலமாக உலகம் முழுவதும் அவர் பிரலபல்யமாகி வரும் அவர் இந்தியவிற்கான கலாசார தூதுவராகவும் நியமியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன்போது மெகா ஹிட் ஆனா பாடலான “மெனிகே மகே ஹிதே”வை பாடிக் காட்டியுள்ளார்.இதன்போது ஜனாதிபதி மற்றும் அவருடைய பாரியார் ஆகியோர் தங்களின் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.(15)

 

http://www.samakalam.com/அண்மைய-நாட்களாக-பிரபலம்/

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2021 at 21:40, கிருபன் said:

அவரை அவ்வாறு அழைப்பதன் மூலம் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் சிங்கள மக்களுக்கு உணர்த்த முயலும் “கனெக்ரிவிற்றி” என்ன? தமிழ் மக்களுக்கு உணர்த்த முயலும் “கனெக்ரிவிற்றி” என்ன?

அப்பே ஒக்கம எக்காய் என இந்தியா சொல்ல பார்க்கினம் ....ஆனால் சிங்களவர்கள் தெளிவா இருக்கினம் ....

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By கிருபன்
   உயரும் விலைகள் – வெடிக்கும் அடுப்புக்கள்! நிலாந்தன்.
   கடந்த வாரம் கால் கிலோ 60 ரூபாய்க்கு வாங்கப்பட்ட மரக்கறிகளை இந்த வாரம் 90 ரூபாய்க்கே வாங்கக் கூடியதாக உள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உரப் பிரச்சினையால் ஒரு போக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இது நெல்லின் விலையில் தாக்கம் செலுத்தும். அரசாங்கம் செயற்கை உரத்துக்கான மானியத்தை நிறுத்தியிருப்பதோடு செயற்கை உர இறக்குமதியை தனியாரிடம் ஒப்படைத்திருக்கிறது. எனவே இனி தனியார் வைத்ததுதான் உரத்தின் விலை. இது காரணமாகவும் அரிசியின் விலை அதிகரிக்கலாம். எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் பொருட்களின் விலை அதிகரிப்பை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. வைரஸ் தொற்று தொடங்கியதிலிருந்து விலைகள் எகிறிக்கொண்டே போகின்றன. எந்த ஒரு பொருளின் விலையையும் அரசாங்கத்தால் குறைக்க முடியவில்லை. கடந்த மாதத்தோடு நாட்டின் பணவீக்கம் 9.9 வீதமாக அதிகரித்திருக்கிறது. இது கடந்த 13 ஆண்டுகளின் பின் ஏற்பட்ட அதிகரிப்பு என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
   போதாக்குறைக்கு புதிய வைரஸ் பற்றிய அச்சுறுத்தல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அரசாங்கம் ஒவ்வொரு பிரச்சினையாக தீர்க்க முயற்சிக்கின்றது. ஆனால் ஒன்றை தீர்க்க இன்னொன்று மேலெழுகிறது. அல்லது புதிதாக ஒன்று கிளம்புகிறது.
   முதலில் வெளியுறவுப்பரப்பில் அரசாங்கம் தன்னை சுதாகரித்துக் கொள்ள முற்பட்டது. அமைச்சர்களை மாற்றி புதிய தூதுவர்களை அனுப்பி வெளியுறவுப் பரப்பில் தன்னை சுதாகரித்துக் கொண்டது. அதே காலப்பகுதியில் தடுப்பூசிகளை விரைவாக ஏற்றி வைரஸ் தொற்று வேகத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி நாட்டை சமூக முடக்கத்திலிருந்து விடுவித்தது. அதன்பின் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் போராட்டத்துக்கும் விவசாயிகளின் போராட்டத்துக்கு பணிந்தது. ஆனால் இந்த சுதாகரிப்புக்களின் மூலமும் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. போதாக்குறைக்கு எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது தொடர்பான செய்திகள் மக்களை பீதியுற வைக்கின்றன. உண்மையில் இதுவரை கிடைக்கப்பெற்ற பெரும்பாலான செய்திகளில் சிலிண்டர்கள் வெடிக்கவில்லை. அடுப்புகள் தான் வெடித்திருக்கின்றன. ஆனால் அது சிலிண்டர் வெடிப்பாகத்தான் காட்டப்படுகிறது. இதுவரையிலும் அவ்வாறான வெடிப்புச் சம்பவங்களில் ஒரே ஒரு பெண்தான் கொல்லப்பட்டிருக்கிறார். சிலர் காயமடைந்திருக்கிறார்கள். எனினும் விவகாரம் நாட்டு மக்களை பீதியுறவைக்கும் ஒன்றாக மாறியிருக்கிறது.
   ஜனாதிபதி யுத்தத்தை வென்றதில் மட்டும்தான் கெட்டிக்காரர். ஏனைய விடயங்களில் அவர் கெட்டித்தனமானவரல்ல என்ற அபிப்பிராயம் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
   ஆனால் நாட்டை ஆளும் சகோதரர்கள் நம்புகிறார்கள் யுத்த வெற்றியை திரும்பத் திரும்ப சிங்கள மக்கள் மத்தியில் நினைவுபடுத்துவதன் மூலம் ஆட்சியைத் தக்க வைக்கலாம் என்று. அதுமட்டுமல்ல அந்த வெற்றியை முதலீடாக வைத்து வம்ச ஆட்சி ஒன்றை நாட்டில் ஸ்தாபிக்கலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலேயே அந்த கனவு அவர்களிடம் காணப்பட்டது. அம்பாந்தோட்டை மையமாகக் கொண்ட ஒரு வம்ச ஆட்சியை உருவாக்குவதே அக்கனவு ஆகும். இதுவரையிலும் நாட்டை ஆட்சி செய்த வம்சங்கள் கண்டி மைய சிங்கள உயர் குழாத்தைச் சேர்ந்தவை. கண்டி மைய சிங்கள உயர் குழாத்தைச் சேர்ந்தவர்களால் போரை வெல்ல முடியவில்லை;புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க முடியவில்லை. அதை ராஜபக்ஷ வம்சம்தான் சாதித்து காட்டியது. எனவே அந்த சாதனையின் மீது அம்பாந்தோட்டையை மையமாகக் கொண்ட ஒரு வம்ச ஆட்சியை ஸ்தாபிக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். போர் வெற்றியை ஒரு குடும்பத்துக்கு உரியதாக மாற்றி அதை ஒரு கட்சிக்கு உரியதாக மாற்றி தாமரை மொட்டு கட்சியை அவர்கள் உருவாக்கிவிட்டார்கள். அக்கட்சியை மிகக் குறுகிய காலத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறும் ஒரு வளர்ச்சிக்கு கொண்டுவர முடிந்த மைக்கு காரணம் போர் வெற்றிகளும் ஈஸ்டர் குண்டுவெடிப்பின் விளைவுகளும் தான்.
   எனவே அம்பாந்தோட்டையை மையமாகக் கொண்ட ஒரு வம்ச ஆட்சியை உருவாக்குவது என்று சொன்னால் போர் வெற்றியை சிங்கள மக்கள் மறந்து விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதி தன்னுடைய ஆட்சியின் இரண்டாவது ஆண்டு முடிவையொட்டி திறந்துவைத்த தாதுகோபுரம் அப்படிப்பட்ட ஒரு நோக்கத்தைக் கொண்டதுதான். அது யுத்த வெற்றியை வணக்கத்திற்கு உரியதாக மாற்றுகிறது. இவ்வாறு அம்பாந்தோட்டை மையச் சிந்தனையின் அடுத்த கட்ட வளர்ச்சியாகத்தான் ஒரு புதிய யாப்பை அவர்கள் உருவாக்கத் திட்டமிடுவதாக தென்னிலங்கை மைய ஊடகவியலாளர்கள் நம்புகிறார்கள். இலங்கைத்தீவில் இதுவரையிலும் உருவாக்கப்பட்ட எல்லா யாப்புக்களும் கண்டிச் சிங்கள உயர்குழாத்தின் தயாரிப்புக்கள். எனவே அம்பாந்தோட்டையை மையமாகக் கொண்ட ஒரு புதிய யாப்பை உருவாக்கி அதில் தமது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்றும் அவர்கள் சிந்திப்பதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு புதிய யாப்புக்குரிய முதல் வரைபு வெளிவந்துவிடும் என்று மகிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.
   அப்படியொரு யாப்பு வந்தால் அதற்குள் என்ன இருக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. சுமந்திரனை அமெரிக்காவில் சந்தித்த அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் அது தெரியுமோ தெரியவில்லை. அல்லது இந்தியாவுக்கு அதைப்பற்றி ஏதும் தெரிந்திருக்குமோ தெரியவில்லை. அந்த யாப்புக்குள் தமிழ் மக்களுக்குரிய தீர்வாக எப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படும் என்பது குறித்தும் யாரிடமும் எந்த ஊகமும் கிடையாது. இப்படிப்பட்டதொரு பின்னணிக்குள் அந்த யாப்பானது அம்பாந்தோட்டைமைய சிந்தனையின் விளைவாக வரலாம் என்று ஊகித்தாஸ் அது யுத்த வெற்றியை அடுத்தகட்டத்துக்கு ஸ்தாபிக்கும் ஒரு நோக்கத்தைக் கொண்டதாகவே அமையக்கூடும். அதாவது கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதைப் போல யுத்த வெற்றியை ஓர் அரசியல் வெற்றியாக மாற்றி தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் தோற்கடிப்பது. இந்த அடிப்படையில்தான் ஒரு புதிய யாப்பு வெளிவரலாம் என்று ஓர் எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்து வருகிறது. அந்த யாப்பானது ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாகாண கட்டமைப்பை ஒன்றில் இல்லாமல் செய்யலாம் அல்லது அகற்றலாம் என்ற ஊகங்களும் அதிகரித்து வருகின்றன.
   இந்த ஊகங்களின் பின்னணியில்தான் இந்தியா கூட்டமைப்பை டெல்லிக்கு வருமாறு அழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செய்திகளின்படி கூட்டமைப்பின் தூதுக் குழு சில நாட்களுக்குள் இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டும். ஆனால் அப்பயணம் கூட்டமைப்பினரால் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு.
   ராஜபக்ச சகோதரர்களின் யாப்பு எப்படி அமையப் போகிறது என்பது ஒருபுறமிருக்க அவர்களுடைய அம்பாந்தோட்டை மையச் சிந்தனையின்படி அவர்கள் வேறு ஒரு விடயத்தை குறித்தும் சிந்திப்பதாக ஊகிக்கப்படுகிறது. அது என்னவெனில் அம்பாந்தோட்டையையை மையமாகக் கொண்ட ஒரு புதிய புத்தமத பீடத்தை உருவாக்குவது. ஏற்கனவே உள்ள பௌத்த மத பீடங்களுடன் சேர்ந்து புதிதாக ஒரு பீடத்தை உருவாக்கி அதையும் தமது வம்ச ஆட்சிக்கு ஒரு பலமாக கட்டியெழுப்புவதற்கு அவர்கள் சிந்திப்பதாக ஓர் ஊகம் தென்னிலங்கையில் காணப்படுகிறது.
   இவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தல், அவர்களிடம் புராதன மன்னர்களைப் போல ஒரு வம்ச ஆட்சியை உருவாக்கும் மிகத்தெளிவான உள் நோக்கங்கள் இருப்பதாகவே சந்தேகிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக 20ஆவது திருத்தச்சட்டம் எனப்படுவது ஜனாதிபதியை ஒரு மன்னனுக்கு நிகரான அதிகாரம் உடையவராக மாற்றுகிறது. அவர்கள் ஒரு புதிய யாப்பை உண்மையாகவே உருவாக்க விரும்பினால் அதில் அந்த மன்னருக்குரிய அதிகாரங்களை அனுபவிக்கும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை அகற்றுவார்களா என்ற கேள்விக்கு விடை முக்கியம். அவ்வாறு நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி முறைமையைப் பேணும் ஒரு யாப்பைத்தான் அவர்கள் கொண்டுவருவார்களாக இருந்தால் அது நிச்சயமாக நாட்டில் நல்லிணக்கத்தை பாதுகாக்கும் அதாவது பல்லினச் சூழலைப் பாதுகாக்கும் ஒரு கூட்டாட்சி யாப்பாக இருக்குமா?
    
   https://athavannews.com/2021/1254344
    
  • By கிருபன்
   மேலும் ஒரு போராட்டத்துக்கு பணிந்த அரசாங்கம்! நிலாந்தன்.
    
   அரசாங்கம் மேலும் ஒரு போராட்டத்திற்கு பணிந்திருக்கிறது அல்லது தனது தவறான முடிவுகளை மிகவும் பிந்தியேனும் மாற்றியிருக்கிறது. கடந்த வாரத்திற்கு முதல் வாரம் அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்திற்கு அரசாங்கம் பணிந்தது. மிக நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தொழிற்சங்கங்களோடு ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அதைப் போலவே கடந்த புதன்கிழமை அரசாங்கம் செயற்கை உரம் தொடர்பான தனது முடிவை மாற்றியிருக்கிறது.
   இயற்கை உரத்தைத்தான் பாவிக்க வேண்டும்.  அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் சுற்றுச்சூழல் தொடர்பான இதுபோன்ற விவகாரங்களை எடுத்த எடுப்பில் அமுல்படுத்த முடியாது.  இது முதலாவது. ஒரு தொற்றுநோய் காலகட்டத்தில் இதுபோன்ற பசுமைப்புரட்சி விடயங்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த முடியாது. இது இரண்டாவது.  மூன்றாவது, இன நல்லிணக்கத்தை பேண முடியாத ஓர் அரசாங்கம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியாது.  ஏன் என்றால் மனிதர்களை நேசித்தால்தான் பூமியை நேசிக்கலாம்.மண்ணை நேசிக்கலாம்.  சுற்றுச்சூழலை நேசிக்கலாம். மனிதர்களை நேசிப்பது என்பது இந்த அழகிய தீவை பொறுத்தவரை சக இனங்களை நேசிப்பது.  இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது. இறந்த காலத்துக்கு பொறுப்புக் கூறுவது. அதன்மூலம் நிகழ்காலத்துக்கு பொறுப்புக் கூறுவது.
   செயற்கை உரப்பாவனையை நிறுத்த வேண்டும் என்பதில் இக்கட்டுரைக்கு மறு கருத்து கிடையாது. ஆனால் அரசாங்கம் இயற்கை உரம் என்ற கோஷத்தை முன்வைத்த காலகட்டம்தான் பிழையானது. அதை அமுல்படுத்திய விதம்தான் பிழையானது. இதற்கு முன் இருந்த எல்லா அரசாங்கங்களும் வாக்கு வேட்டைக்காக தொடர்ச்சியாக வழங்கிவந்த வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணான ஓர் அரசியல் தீர்மானத்தை இந்த அரசாங்கம் எடுத்தது.
   விவசாயிகளுக்கு மானிய விலையில் உரத்தை வழங்குவதாக வாக்குறுதி அளித்தே முன்னிருந்த பல அரசாங்கங்கள் விவசாயிகளின் வாக்குகளை கவர முற்பட்டன. அதிகம் போவானேன், ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மஹிந்தவும் அதைத்தான் செய்திருக்கிறார். மண்ணை நஞ்சாக்கும் ஒரு விடயத்தில் விவசாயிகளுக்கு மானியத்தை வழங்குவதன்மூலம் தமது வாக்கு வங்கியை பெருக்கிக் கொள்ளும் அரசியல்வாதிகள் நிறைந்த ஒரு நாட்டில் திடீரெண்டு செயற்கை உர இறக்குமதியை நிறுத்தியபோது அது எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியது. விவசாயிகள் போராடத் தொடங்கினார்கள். அதுமட்டுமல்ல உரம் இன்மையால் வேளாண்மை பாதிக்கப்பட்டது. குறிப்பாக அரசாங்கம் மிகவும் பிந்தி தனது முடிவை மாற்றிக் கொள்வதற் கிடையில் ஒரு போகம் கடந்துவிட்டது. இதன் விளைவை எதிர்காலத்தில் நுகர்வோர்தான் சுமக்க வேண்டியிருக்கும்.
   அதுமட்டுமல்ல அரசாங்கம் இப்பொழுது உர இறக்குமதியை தனியாரிடம் ஒப்படைத்திருக்கிறது. தனியார் இறக்குமதி செய்யும் உரத்தின் விலையை அவர்களே தீர்மானிக்கப் போகிரார்கள். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் அரசாங்கம் விலைக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அதனால் வணிகர்களே விலைகளை தீர்மானிக்க தொடங்கினார்கள். இனி உரத்தின் விலைமையும் அப்படித்தான். இது எங்கே கொண்டுபோய் விடும்? உரத்தின் விலை அதிகரித்தால் விவசாய விளை பொருட்களின் விலையும் அதிகரிக்கும். அது இறுதியிலும் இறுதியாக மக்களின் சாப்பாட்டில் கை வைக்கும். எனவே நெருக்கடிகள் இப்பொழுதும் முற்றாக தீர்ந்து விட்டன என்று இல்லை.
   ஆசிரியர் அதிபர்களின் போராட்டத்துக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கும் அரசாங்கம் பணிந்திருக்கிறது. இது ஏனைய தரப்புகளின் போராட்டத்தை ஊக்குவிக்கும்.இப்பொழுது போராடிக்கொண்டிருக்கும் ஏனைய தொழிற்சங்கங்கள் மேலும் ஆவேசமாக போராடக்கூடிய வாய்ப்புகள் அதிகமுண்டு. அதுமட்டுமல்ல அரசாங்கத்துக்கு எதிராக சாதாரண ஜனங்களின் போராட்டங்களும் இனி அதிகரிக்கக்கூடும். இது எதிர்க்கட்சிகளுக்கு அதிகம் வாய்ப்பானது. அரசாங்கத்துக்கு எதிராக அதிகரித்த போராட்டங்களுக்கான ஒரு எதிர்காலம் காத்திருக்கிறது.
   எனினும் எல்லா எதிர்ப்புகளையும் மடைமாற்றவும் திசை திருப்பவும் இருக்கவே இருக்கிறது இனமுரண்பாடு.அவர்கள் அதனை வெற்றிகரமாக கையாளலாம்.யுத்தத்தை வென்றதுதான் இந்த அரசாங்கத்துக்குள்ள ஒரே அடிப்படைத் தகுதி. அதனால் யுத்த வெற்றியை அடிக்கடி அவர்கள் சிங்கள மக்களுக்கு நினைவுபடுத்தி வருகிறார்கள். அந்த நினைவுகளை சிங்கள மக்கள் மறந்து விடக்கூடாது என்பதில் அரசாங்கம் அதிகம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஓர் ஆயுதப் போராட்டத்தை திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் தமது ஆதரவுத் தளத்தை பாதுகாக்கிறார்கள்.
   கடந்தவாரம் அனுராதபுரத்தில் திறந்து வைக்கப்பட்ட போர் வீரர்களுக்கான நினைவுத்தூபியும் அவ்வாறான ஒரு நோக்கத்தைக் கொண்டதுதான். தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமை மறக்கப்படும் ஒரு மாதத்தில் அரசாங்கம் தனது போர் வீரர்களை நினைவு கூர்ந்து ஒரு நினைவுத்தூபியை திறந்து வைத்திருக்கிறது.இந்த நினைவுத்தூபி தொடர்பாக கருத்து தெரிவித்த பேராசிரியர் அகலகட சிறீசுமண தேரர் பின்வருமாறு கூறியுள்ளார்…..”போர் வெற்றிகளை நினைவுகூர நினைவிடங்களை நிர்மாணிக்கக்கூடாது. சந்தஹிரு சேய தாதுகோபுரம் போர் வெற்றியை நினைவுக்கூரும் நினைவுத் தூபியாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
   இது ஆரம்பிக்கப்பட்ட போதே நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன் .குறித்த நினைவிடங்களை நிர்மாணிப்பது தோல்வியடைந்த தமிழ் தரப்பினர் மத்தியில் ஆத்திரத்தை உருவாக்கும் என்றும் அப்படியான மனநிலை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. போரில் வென்றவர்கள் திருப்தியும் பெருமையும் அடைவார்கள். ஆனால் தோல்வியடைந்தவர்களுக்கு துன்பமும், துயரமும் அதிகம் என்பதுடன் தோல்வியடைந்தவர்கள் ஆத்திரமடைவார்கள் என்றும் இதனை நிர்மாணித்ததால், சிங்கள பௌத்தர்கள் சிலரும், இராணுவத்தினர் சிலரும் மாத்திரமே மகிழ்ச்சியடைவர்”
   ஆனால் அரசாங்கம் தனது வெற்றியை தொடர்ந்தும் சிங்கள மக்கள் மத்தியில் நினைவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பெற்ற வெற்றியை தொடர்ந்து நினைவு படுத்துவது என்பது அதன் எல்லாவிதமான விளைவுகளையும் கருதிக் கூறின் இன முரண்பாடுகளை தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்திருப்பதுதான்.நிச்சயமாக இன நல்லிணக்கத்தை உருவாக்க அது உதவாது. நிச்சயமாக பல்லினத் தன்மை மிக்க ஒரு யாப்பை கட்டியெழுப்புவதற்கு அது எதிரானது.
   ஒரு புதிய யாப்பை உருவாக்க போவதாக அரசாங்கம் தொடர்ச்சியாக கூறிவருகிறது. குறிப்பாக இந்த ஆண்டின் இறுதிக்குள் அப்புதிய யாப்புக்கான வரைவு வெளிவந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் மாகாணசபைத் தேர்தல்களையும் நடத்தப் போவதாக அரசாங்கம் கூறி வருகிறது. ஜெனிவா கூட்டத் தொடர்களைச் சமாளிப்பதற்கும் இந்தியாவை சமாளிப்பதற்கும் மேற்குநாடுகளை சமாதானப்படுத்துவதற்கும் இவ்வாறான அறிவிப்புக்கள் அவர்களுக்கு உதவக்கூடும். எனினும் அரசாங்கம் தனது அறிவிப்புகளில் இதயசுத்தியோடு இல்லை என்பதை கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய லக்ஸ்மன் கிரியல்ல வெளிப்படுத்தியிருக்கிறார்.
   அதாவது 13வது திருத்தத்தை அகற்றுவதுதான் அரசாங்கத்தின் இறுதி இலக்கு என்று தெரிகிறது. மாகாணக் கட்டமைப்பு எனப்படுவது இந்தியாவின் நிர்ப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்வு என்று அவர்கள் நம்புகிறார்கள். அது தமிழ் மக்களுக்கு ஒரு சட்டசபையைப் பெற்றுக் கொடுத்து விட்டது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். 2009 ஆம் ஆண்டு யுத்தத்தில் பெற்ற வெற்றிகளின்பின் தமிழ் மக்களுக்கு இனி அப்படிப்பட்ட தீர்வு எதுவும் தேவையில்லை என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.2009ஆம் ஆண்டு போர்க்களத்தில் பெற்ற வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றுவது என்பது அவர்களைப் பொறுத்தவரை மாகாணசபையை அகற்றுவதுதான். அவ்வாறு மாகாணசபையை அகற்றுவதையே தமது நோக்கமாகக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம் எப்படிப்பட்ட ஒரு புதிய யாப்பைக் கொண்டுவரும்? மேலும் மாகாணசபை தேர்தல்களை நடத்துமா?
   புதிய யாப்பு ஏன் தேவை? ஏற்கனவே இருக்கின்ற யாப்பு இனப்பிரச்சினையை தீர்க்க தவறியபடியால்தானே?ஆனால் அரசாங்கம் நம்புகிறது போரில் தமிழ் தரப்பை தோற்கடித்ததன் மூலம் இனப்பிரச்சினையும் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று. எனவே இனி வரக்கூடிய ஒரு புதிய யாப்பில் ஏற்கனவே தமிழ் மக்களின் போராட்டத்தின் மூலம் கிடைத்த மாகாண சபையை அகற்றுவதுதான் தாங்கள் பெற்ற யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக முழுமையடையச் செய்யும் என்று அவர்கள் நம்புகிறார்கள் போல் தெரிகிறது. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியும் அந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதுதான் என்று கருத இடமுண்டு.எனவே அரசாங்கம் மெய்யாகவே ஒரு யாப்பை கொண்டுவருமாக இருந்தால் அது தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கும் நோக்கிலானதாகவே இருக்க முடியும். இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால், யுத்த வெற்றியை ஒரு அரசியல் வெற்றியாக முழுமையடையச் செய்வது. அதன் மூலம் அவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தலாம். முதலாவது மாங்காய் தமிழ் மக்களை நிரந்தரமாக தோற்கடிப்பது.இரண்டாவது மாங்காய் அரசாங்கத்துக்கு எதிராக அதிருப்தியோடும் கோபத்தோடும் காணப்படும் சிங்கள வாக்காளர்களை திசை திருப்பலாம். அவர்களுடைய கோபத்தை தமிழ் மக்களுக்கு எதிராகவும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் மடைமாற்றி விடலாம்.
   https://athavannews.com/2021/1252726
  • By கிருபன்
   வெளியுறவுக் கொள்கை இல்லாத ஈழத்தமிழர்கள் ? நிலாந்தன்.
   November 28, 2021

   ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி முன்வைக்க முயற்சிக்கின்றன. இம்முயற்சியில் முஸ்லிம் கொங்ரஸையும் மனோ கணேசனின் கட்சியையும் ஒருங்கிணைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள மிகப் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியை ஒருங்கிணைக்க முடியவில்லை. இது ஒரு ஓட்டம்.
   அதேசமயம் சுமந்திரன் தலைமையிலான ஒரு சட்டவாளர் குழு அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர்கள் சென்றதாக சம்பந்தரும் சுமந்திரனும் கூறுகிறார்கள். ஆனால் அக்குழுவில் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல அப்படி ஒரு குழு போகவிருப்பதுபற்றி தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு தெரியாது. எனவே அக்குழுவை கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ குழுவென்றோ அல்லது தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ குழுவென்றோ கூறுவது பொருத்தமாக இருக்காது. இது இன்னொரு ஓட்டம்.
   இந்த இரு ஓட்டங்களுக்குள்ளும் இணையாது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனித்து நிற்கிறது. ஆனால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பூகோள மற்றும் புவிசார் அரசியலைக் கையாள வேண்டும் என்று அதிகமாகப் பேசியது அக்கட்சிதான்.
   இவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் வெளியுறவு அணுகுமுறை தொடர்பில் மூன்று ஓட்டங்கள் காணப்படுகின்றன.
   இந்தியா தமிழ்க்கட்சிகளிடமிருந்து ஒரு கூட்டுக் கோரிக்கை வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்று சொன்னால் அதன் பொருள் இந்தியா இனப்பிரச்சினையில் ஏதோ ஒரு விதத்தில் தலையிட முனைகிறது என்பதுதான். இந்திய அமைதிகாக்கும் படையினரை பிரேமதாசாவும் விடுதலைப்புலிகள் இயக்கமும் இணைந்து வெளியேறுமாறு கேட்டார்கள். எந்த இரண்டு தரப்புக்களுக்கு இடையில் சமாதானம் செய்வதற்காக அமைதிகாக்கும் படை இலங்கைக்குள் இறங்கியதோ அதே இரண்டு தரப்புக்களும் அப்படையை வெளியேறுமாறு கேட்டபோது அமைதிப்படைக்குரிய மக்கள் ஆணை காலாவதி ஆகியது. இவ்வாறான ஒரு பின்னணியில் கொழும்புடன் இணைந்து தன்னை வெளியே போகுமாறு கேட்ட தமிழ்மக்கள் மத்தியில் இருந்து தன்னை திரும்பவும் தலையிடுமாறு கேட்கும் ஒரு கூட்டுக்கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கின்றதா?
   அதேசமயம், அமெரிக்கா தமிழ் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுகிறது என்றால் அதன் பொருள் இனப்பிரச்சினையை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி கொழும்பின் மீதான தனது பிடியை பலப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது என்பதுதான்.
   எனவே தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாக தெரிகிறது. பிராந்தியப் பேரரசும் உலகப் பேரரசும் கொழும்பின் மீது அழுத்தத்தை பிரயோகிப்பதற்கு தமிழ்த்தரப்பை கையாள வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் தமிழ்த்தரப்பு என்ன செய்ய வேண்டும்? எவ்வளவுக்கு எவ்வளவு வெளித்தரப்புக்களின் அழுத்தத்தை கொழும்பின் மீது பிரயோகிக்க வைக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ்மக்கள் பெறக்கூடிய தீர்வின் பருமனும் அதிகரிக்கும்.
   மூன்றாவது தரப்பு ஒன்றின் நிர்ப்பந்தம் இன்றி சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் தீர்வுக்கு உடன்படாது. 2016இல் மன்னாரில் “தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்?” என்ற கருத்தரங்கில் இக்கருத்தை நான் வலியுறுத்திப் பேசிய பொழுது சம்பந்தர் கூறினார் “அது ஒரு வறண்டவாதம் வரட்டுவாதம்” என்று. ஆனால் இனப்பிரச்சினையின் பல தசாப்தகால அனுபவத்தை தொகுத்துப் பார்த்தால் எது சரி என்பது மிகத் தெளிவாக தெரியும். இது கடந்த பல தசாப்த கால இலங்கைத்தீவின் வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட ஒரு பேருண்மை.
   இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை தொடர்பில் இதுவரை எழுதப்பட்ட எல்லா உடன்படிக்கைகளிலும் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் நீடித்தவை மூன்று உடன்படிக்கைகள். முதலாவது இந்திய-இலங்கை உடன்படிக்கை. இரண்டாவது ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை. மூன்றாவது நிலைமாறுகால நீதிக்கான ஐநா தீர்மானம். இம்மூன்று உடன்படிக்கைகளின் போதும் மூன்றாவதுதரப்பின் பிரசன்னம் இருந்தது. இந்திய-இலங்கை உடன்படிக்கையை அமுல்படுத்த இந்திய அமைதிகாக்கும் படை இறங்கியது. ரணில்-பிரபாகரன் உடன்படிக்கையின் போது ஸ்கண்டிநேவிய யுத்தநிறுத்த கண்காணிப்பாளர்கள் இறங்கினார்கள். ஐநா தீர்மானத்தின் பின் இலங்கைத்தீவை கருக்குழு நாடுகளும் ஐநாவின் சிறப்புத் தூதுவர்களும் தொடர்ச்சியாகப் பின் தொடர்ந்தார்கள். எனவே ஒரு மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடையாது. இப்பொழுது கேள்வி யார் அந்த மூன்றாவது தரப்பு ? என்பதுதான்.
   மேற்கண்ட மூன்று தீர்வு முயற்சிகளின் போதும் இரண்டு தரப்புகள் மத்தியஸ்தம் வகித்தன. இந்திய-இலங்கை உடன்படிக்கையில் இந்தியா. பின் வந்த இரண்டு ஏற்பாடுகளிலும் மேற்கு நாடுகள். 2000 ஆண்டு விடுதலைப் புலிகளின் காலத்திலிருந்து தொடங்கி இன்றுவரையிலுமான கடந்த 21ஆண்டுகளில் மேற்கு நாடுகளே ஒன்றில் அனுசரணை புரிகின்றன அல்லது மத்தியஸ்தம் வகிக்கின்றன.
   இதில் முதலாவது கட்டம் 2009 வரையிலுமானது. மேற்கு நாடுகள் மற்றும் ஜப்பானின் பின்பலத்தோடு முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளின் போது நோர்வே சமாதானத்துக்கான அனுசரணையாளராக செயற்பட்டது. அந்நாட்டின் விசேஷ தூதுவரான சொல்ஹெய்ம் சமாதான நடவடிக்கைகள் தொடர்பான எல்லா விடயங்களையும் இந்தியாவுக்கு தொடர்ச்சியாக அப்டேட் செய்து வந்தார். இது முதலாம் கட்டம்.
   இரண்டாம் கட்டம் 2009 க்குப் பின்னரான ஜெனிவா மைய அரசியல். அதன் ஒரு கட்ட விளைவே 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம். அது இலங்கைத்தீவுக்கு நிலைமாறுகால நீதியை பரிந்துரைக்கின்றது.அதேசமயம் ஐநா தீர்மானங்களில் 13வது திருத்தம் ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. அதாவது ஐநா மைய சமாதான முயற்சிகளிலும் இந்தியாவின் 13வது திருத்தம் ஒரு பேசுபொருளாக இருக்கிறது என்று பொருள்.
   எனவே 2000ஆண்டிலிருந்து தொடங்கி மேற்குமைய சமாதான முயற்சிகள் எல்லாவற்றிலும் இந்தியா நேரடியாகவோ மறைமுகமாகவோ செல்வாக்குச் செலுத்தி வருகிகிறது. அதுதான் இலங்கை இனப்பிரச்சினையின் புவிசார் அரசியல் யதார்த்தமாகும். இந்தியாவை மீறி எந்த ஒரு வெளிச்சக்தியும் இனப்பிரச்சினைக்கான தீர்வைத்தர முற்படாது என்பதுதான் கடந்த 20 ஆண்டுகால மேற்குமைய அனுசரணை முயற்சிகளின்மூலம் கற்றுக்கொள்ளப்பட்ட பாடம் ஆகும். இதை இப்படிக்கூறுவதன் மூலம் இக்கட்டுரையானது இப்புவிசார் அரசியல் யதார்த்தத்தை நோக்கி தமிழர்கள் தமது கனவுகளை வளைக்கவேண்டும் என்று கூறவரவில்லை. மாறாக தமது கனவுகளை நோக்கி இப்புவிசார் அரசியல் யதார்த்தத்தை வளைத்தெடுப்பதற்குரிய பொருத்தமான ஒரு வெளியுறவுத் தரிசனம் தமிழ் மக்களுக்குத் தேவை என்பதே இக்கட்டுரை அழுத்திக்கூற முற்படும் விடயமாகும்.
   அதற்கு முதலில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரு பொதுவான வெளியுறவு அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக ஓடக்கூடாது. குறுக்கோட்டமும் கூடாது. அவ்வாறு பொதுவான ஒரு வெளியுறவு அணுகுமுறைக்கு ஒரு பொதுவான வெளியுறவுக் கொள்கை அவசியம். ஒரு பொதுவான வெளியுறவு கட்டமைப்பு அவசியம். அவ்வாறான பொருத்தமான வெளியுறவுக் கட்டமைப்பு இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் தமிழ்க்கட்சிகள் மத்தியில் மூன்று வேறு போக்குகள் காணப்படுகின்றன.
   அமெரிக்க விஜயத்தின்பின் கனடாவில் உரை நிகழ்த்திய சுமந்திரன் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க சந்திப்புகளின் பின் அங்கே என்ன பேசப்பட்டன என்பவற்றை வோஷிங்டனில் உள்ள இந்திய தூதுவருக்கும் நியூயோர்க்கில் உள்ள ஐநாவுக்கான இந்திய பிரதிநிதிக்கும் தான் எடுத்துரைத்ததாக சுமந்திரன் கனடாவில் வைத்து கூறியுள்ளார். நோர்வேயின் சிறப்புத் தூதுவர் சொல்ஹெய்ம் வன்னியில் என்ன பேசப்பட்டது என்பதை ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு அப்டேட் செய்ததும் சுமந்திரன் அமெரிக்க விஜயத்தில் பேசப்பட்டவற்றை இந்தியாவுக்கு அப்டேட் செய்வதும் ஒன்றல்ல. ஏனென்றால் சொல்ஹெய்ம் ஒரு ராஜதந்திரி அனுசரணையாளர் விஷேஷ தூதுவர். ஆனால் சுமந்திரன் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பின் பிரதிநிதி. அவர் தனது மக்களின் நோக்கு நிலையில் இருந்து ஒரு வெளியுறவுக் கொள்கையின் பிரகாரம் செயற்பட வேண்டியவர்.
   ஆனால் அப்படி ஒரு பொதுவான வெளியுறவுக் கொள்கை ஏதும் தமிழ் கட்சிகள் மத்தியில் கிடையாது. குறைந்தபட்சம் அமெரிக்க விஜயத்திற்கு முன்பு தமிழரசுக்கட்சியின் உயர்மட்டத்திலோ அல்லது கூட்டமைப்பின் உயர்மட்டத்திலோ அதுதொடர்பாகக் கலந்துரையாடப்படவில்லை. ஒரு பொது முடிவு எடுக்கப்படவில்லை. மாறாக சிறிய பங்காளிக் கட்சியின் முன்னெடுப்பு ஒன்றை வெட்டியோடும் முனைப்பே தெரிகிறது. இவை வெளிவிவகார நோக்கு நிலையிலிருந்து தீர்மானிக்கப்பட்ட தந்திரோபாய ஓட்டங்கள் அல்ல. மாறாக நான் பெரிதா நீ பெரிதா என்ற அகந்தையின் பாற்பட்ட ஓட்டங்களாகவே தெரிகின்றன. இந்த அகந்தை காரணமாக மூலோபாய நோக்கு நிலையிலிருந்து முடிவெடுக்கப்பட வேண்டிய ஒரு விவகாரம் தமிழ் மக்களுக்கு படங்காட்டும் ஒரு விவகாரமாக குறுக்கப்பட்டு விட்டதா?
   சீனா ஒரு பிராந்திய பேரரசு என்ற நிலையிலிருந்து பூகோளப் பேரரசு என்ற ஒரு வளர்ச்சியை நோக்கிப் போக முற்பட்டதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்று மற்றதில் தங்கியிருக்கும் பூகோளப் பங்காளிகளாக மாறிவிட்டன. சீனாவை எதிர்கொள்வதற்கு இப்பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா தேவை. அதேபோல உலக அளவில் இந்தியாவுக்கும் அமெரிக்கா தேவை. covid-19 சூழலானது இத்துருவமயப்படலை கூர்மைப்படுத்தியிருக்கிறது. எனவே அமெரிக்காவை எப்படித்தான் கெட்டித்தனமாகக் கையாண்டாலும் இறுதியிலும் இறுதியாக அமெரிக்கா இந்தியாவிடந்தான் கொண்டு போய்விடும் என்பதுதான் இப்போதுள்ள புவிசார் அரசியல் யதார்த்தமாகும்.
   ஆனால் இப்பூகோளப் பங்காளிகளை கூட்டமைப்பின் இரு வேறு தரப்புக்கள் தனித்தனியாக அணுகுவதே இதிலுள்ள வேடிக்கையான ஒரு விடயமாகும். சுமந்திரனின் குழு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சந்திப்புகளை முன்னெடுக்கும் அதே காலப்பகுதியில் டெலோ அமைப்பு கொழும்பிலுள்ள மேற்கத்திய தூதுவர்களை சந்தித்து வருகிறது. இசந்திப்புகள் கூட்டமைப்பின் சந்திப்புக்களாக செய்திகளில் சித்தரிக்கப்படுகின்றன. ஒரு சிறியதீவில் ஒரு சிறிய மக்கள்கூட்டத்தின் மொத்தம் 13 பிரதிநிதிகள் அவர்களுடைய வெளிவிவகார அணுகுமுறைகளில் ஒற்றுமையாக இல்லை. தமிழ்க்கட்சிகள் இறந்த காலத்திலிருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை.
   https://globaltamilnews.net/2021/169438
  • By கிருபன்
   ஆயர்களின் அறிக்கை – நிலாந்தன்!
   November 21, 2021

   2019 இலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் நான்கு தமிழ் ஆயர்களும் இணைந்து வடக்கு கிழக்கு கத்தோலிக்க ஆயர் மன்றம் என்ற பெயரில் ஓர் அணியாக செயல்பட்டு வருகிறார்கள். வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளை அதிகம் பிரதிபலிக்கும் விதத்தில் இவ்வாறு தமிழ்ப்பகுதி ஆயர்கள் ஓரணியாக நிற்பது வரவேற்கத்தக்கதே. தெற்கில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஓரினச் சாய்வுடையவராக பார்க்கப்படும் ஒரு சூழலில் நான்கு வடகிழக்கு ஆயர்களும் ஒன்றிணைந்து முடிவெடுப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் உடையது. கர்தினால் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தும் கருத்துக்கள் சர்ச்சைக்குரியவை. ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு உள்நாட்டில் உள்ள சில சக்திகள் ஈஸ்டர் குண்டுவெடிப்பை பயன்படுத்தியதாக அவர் நம்புவது தெரிகிறது. அதேசமயம் ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பில் நீதி கோரி குரலெழுப்பும் கர்தினால் தமிழ் பகுதிகளில் நிகழ்ந்த குறிப்பாக தமிழ் கத்தோலிக்கர்களுக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்களைக் குறித்து அந்தளவுக்கு குரல் எழுப்பவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு.
   கத்தோலிக்க திருச்சபை ஈழப் போராட்டத்தோடு அதிகம் நெருக்கமாக காணப்பட்டது. இலங்கைத்தீவில் இன முரண்பாட்டை அதிகம் பிரதிபலித்த ஒரு திருச்சபையும் கத்தோலிக்க திருச்சபைதான். எவ்வாறெனில் பெரும்பாலான தமிழ் கத்தோலிக்கர்கள் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தார்கள். அது காரணமாகவே  சில கத்தோலிக்க மதகுருமார் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிலர் காணாமல் போகச் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேசமயம் சிங்களப் பகுதிகளில் கத்தோலிக்கத் திருச்சபையானது பெருமளவுக்கு சிங்கள கூட்டு உளவியலையே பிரதிபலித்தது.
   கத்தோலிக்க திருச்சபை எவ்வாறு இன முரண்பாட்டை பிரதிபலித்தது என்பதற்கு ஒரு கூர்மையான உதாரணம் கூறப்படுவதுண்டு. பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்டியங்கிய வெரித்தாஸ் வானொலி முன்பு யுத்த காலங்களில் ஒலிபரப்பிய அதன் செய்திகளில் தமிழ் இயக்கங்களை தமிழ் செய்திகளில் போராளிகள் என்று விழித்தது. அதே சமயம் சிங்களச் செய்திகளில் ரஸ்தவாதிகள் அதாவது பயங்கரவாதிகள் என்று விழித்தது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு.
   இவ்வாறான ஒரு பின்னணியில் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நான்கு ஆயர்களும் இணைந்து ஓர் ஆயர் மன்றமாக செயற்படுவது என்பது ஒருவிதத்தில் தவிர்க்க முடியாத தர்க்ககபூர்வ வளர்ச்சிதான். குறிப்பாக 2009க்கு பின் தோல்வியினாலும் அச்சத்தினாலும் ஒடுங்கிப்போய் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் ஓங்கி ஒலித்த ஒரே குரல் முன்னாள் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையுடையது. குரலற்ற தமிழ் மக்களின் குரலாக அவர் ஒலித்தார். பெரும்பாலான மதத்தலைவர்கள் வாய் திறக்கப் பயப்பட்ட ஓர் அரசியல் சூழலில்  ஆயர் ராயப்பு ஜோசப் அவர்கள் துணிந்து குரல் கொடுத்தார். தமிழ் கத்தோலிக்கர்கள் தமிழ் மக்களுக்குரிய நீதியின் பக்கம்தான் நிற்பார்கள் என்ற செய்தியை ஓங்கி ஒலித்த குரல் அது. இவ்வாறான ஒரு பின்னணியில்தான் 2019இலிருந்து நான்கு தமிழ் ஆயர்களும் இணைந்து செயற்படுவதும் முக்கியமான விடயங்களில் பொது முடிவை எடுப்பதும் வரவேற்கத்தக்கதே.
   கடந்த மே 18ஐ முன்னிட்டு அவர்கள் ஓர் அறிக்கையை வெளியிட்டார்கள். அதில் நடந்தது இனப்படுகொலையே என்று துணிச்சலோடு எடுத்துரைத்தார்கள்.. அந்த அறிக்கையில் இனப்படுகொலையை கத்தோலிக்க வளாகங்களில் நினைவுகூர வேண்டும் என்று அறிவுறுத்தல்களையும் வழங்கினார்கள். நான்கு ஆயர்கள் இணைந்து நடந்தது இனப்படுகொலை என்று சொன்னது தென்னிலங்கையில் கத்தோலிக்க வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அங்குள்ள கத்தோலிக்க ஆயர்கள் மத்தியில் இதுதொடர்பாக விமர்சனங்களும் எழுந்தன. தமிழ் ஆயர்களின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும் வடக்கு-கிழக்கு ஆயர்கள் அது இனப்படுகொலையே என்ற நிலைப்பாட்டில் விட்டுக்கொடுப்பின்றி காணப்பட்டார்கள். தமிழ்மக்கள் மத்தியிலுள்ள பெரும்பாலான மதத்தலைவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கத் தயங்கும் ஒரு நிலைப்பாடு அது
   ஆனால்,அதே நான்கு ஆயர்களும் ஐந்து மாதங்களின் பின் அண்மையில் நினைவுகூர்தல் தொடர்பில் வெளியிட்ட ஓர் அறிக்கை சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கத்தோலிக்கர்களை பொறுத்தவரை நொவம்பர் மாதம் எனப்படுவது இறந்தவர்களை நினைவு கூர்வதற்கான ஒரு பொதுவான மாதமாகும். பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்க திருச்சபையால் உலகம் முழுவதிலும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழமை அது. இம்மாதம் முழுவதிலும் இறந்துபோன கத்தோலிக்கர்களை அவர்கள் நினைவு கூருகிறார்கள். அதாவது இந்துக்களின் வார்த்தைகளில் சொன்னால் ஒரு பொதுவான ஆண்டுத் திவசம். இவ்வாறு நொவம்பர் மாதத்திற்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையிலுள்ள உறவின் பின்னணியில் நான்கு ஆயர்களும் போரில் கொல்லப்பட்ட மக்களையும் போரில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்தவர்களையும் ஒன்றாக நினைவுகூரும் ஒரு காலகட்டத்தையும் நாளையும்  அறிவித்திருக்கிறார்கள். அது வாதப் பிரதிவாதங்களை எழுப்பியுள்ளது. 
   ஒருபுறம் தமிழ்மக்கள் மத்தியில்  மத முரண்பாடுகளை ஊக்குவிக்கும் தரப்புக்கள் அதனை தங்களுக்கு சாதகமாக வியாக்கியானம் செய்கின்றன. இன்னொருபுறம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய பசுமை இயக்கம் போன்ற அரசியல் கட்சிகள் அந்த அறிவிப்புக்கு பதில்வினை ஆற்றியுள்ளன.
   இது தொடர்பில் திருமலை மறைமாவட்டத்தின் ஆயர் தெரிவித்த கருத்து சர்ச்சையை தணிக்கப் போதுமானதாக இல்லை. அண்மை ஆண்டுகளில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளும் உட்பட சிவில் சமூக செயற்பாடுகளில் ஒப்பீட்டளவில் தீவிரமாக செயல்படுகிறார் திருமலை ஆயர். முன்னாள் மன்னார் ஆயரின் தொடர்ச்சியாக ஆனால் அமைதியாக செயற்படும் ஒரு மதத் தலைவரான அவர் கூறுகிறார் கத்தோலிக்க சமூகத்தை நோக்கியே அந்த அறிக்கை வெளியிடப்பட்டது என்று. ஆனால் அந்த அறிக்கையில் அப்படிப்பட்ட தெளிவான குறிப்புகள் எதுவும் கிடையாது என்று அதை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். 
   தமிழ்த்தரப்பில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள் ஒவ்வொன்றும் தமக்கென்று தனித்தனியாக தியாகிகள் நாளை அனுஷ்டித்து வருகின்றன. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கு நாட்டில் சட்டரீதியாக நெருக்கடிகள் உண்டு. ஏனைய தியாகிகளின் நாட்களை அனுஷ்டிப்பதற்கு தடைகள் ஏதும் கிடையாது. அதேசமயம் போரில் உயிர்நீத்த அனைவரையும் நினைவு கூரும் நாளாக அதாவது இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாக மே18 கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதற்கும் நெருக்கடிகள் உண்டு.
   இவ்வாறானதொரு அரசியல் பின்னணியில் சட்டரீதியாக தடுக்கப்படக்கூடிய ஒரு நினைவு நாளை,போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவுகளோடு இணைத்து, உலகளாவிய கத்தோலிக்கர்களின் நினைவு கூரும் மாதத்துக்குள் பொத்தாம் பொதுவான ஒரு நினைவு கூர்தலாக வகைப்படுத்தியதுதான் சர்ச்சைகளுக்கு காரணம் என்று அந்த அறிக்கையை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
   ஆயர்களின் அறிக்கை மாவீரர் நாளை அனுஷ்டிக்க வேண்டும் என்பதனை மறைமுகமாக வெளிப்படுத்துகின்றது. உலகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்கர்கள் இறந்தவர்களை நினைவு கூரும் ஒரு காலகட்டத்தில் மாவீரர்களையும் நினைவு கூருமாறு ஆயர்கள் மறைமுகமாக அழைப்பு விடுக்கிறார்கள். அதை நேரடியாகச் சொல்ல அவர்கள் தயங்குகிறார்கள். கடந்த மாவீரர் தினத்தின்போது விளக்கேற்றியதற்காக ஒரு மதகுரு கைது செய்யப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் அவர்கள் அதிகம் முன்னெச்சரிக்கையோடு சிந்திப்பதாக தெரிகிறது. எனவே அவர்கள் நேரடியாக அரசியல் பேச விரும்பவில்லை என்று தெரிகிறது.
   ஆனால் இங்கேயுள்ள விவகாரம் என்னவென்றால் நினைவுகூர்தல் என்பது ஓர் அரசியல் உரிமை ஆகும். அது ஒரு பண்பாட்டு உரிமை. அது ஒரு குணப்படுத்தல் செய்முறை. பண்பாடு சார்ந்தும் அரசியல் சார்ந்தும் அனைத்துலகச் சட்டங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கூட்டு உரிமை. எனவே ஓர் அரசியல் உரிமை சார்ந்த விவகாரத்தில் அதன் அரசியல் உள்ளடக்கத்தை நீக்குவதற்கு பதிலாக அந்த அரசியலின் பாற்பட்ட கூட்டு உரிமைக்காக குரல் எழுப்புவதற்கு மதத்தலைவர்கள் ஏன் தயங்க வேண்டும்? அதனை ஒரு மதத்துக்கு உரியதாகவோ ஒரு இனத்துக்கு உரியதாகவோ கருதத் தேவையில்லை. மாறாக மனிதர்களாகப் பிறந்த எல்லாருக்குமான ; பொதுவான; உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கூட்டு உரிமை அது. ஆயர்களின் அறிக்கையானது நினைவு கூர்வதற்கான தமிழ்மக்களின் கூட்டு உரிமையை வலியுறுத்தி வெளிவந்திருந்தால் இப்படி சர்ச்சைகள் எழுந்திருக்காது. பதிலாக அது கத்தோலிக்க நோக்கு நிலையிலிருந்து கத்தோலிக்க பாரம்பரியம் ஒன்றின் மறைப்புக்குள் நினைவு கூருமாறு கேட்கப்பட்டமைதான் ஒரு விவகாரமாக மேலெழுந்திருக்கிறது.
   எனவே உலகளாவிய, அங்கீகரிக்கபட்ட ஒரு ஆன்மீக பேரரசாகிய கத்தோலிக்க திருச்சபையின் நான்கு ஆயர்களும் இந்த விடயத்தில் துணிச்சலாக முடிவெடுத்து நினைவு கூர்தலுக்கான கூட்டு உரிமையை வலியுறுத்தி அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கலாம். ஆயர்கள் யாருக்கு பயப்படவேண்டும்? கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துக்களைக் கூறி வருகிறார். ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு நீதிகேட்டு அனைத்துலக சமூகத்தை அணுகவும் அவர் தயாராக காணப்படுகிறார். நடந்தது இனப்படுகொலையே என்பதனை தமக்குரிய அறத்தோடு வெளிப்படுத்திய நான்கு ஆயர்களும் அதன் அடுத்தகட்ட தர்க்கபூர்வ வளர்ச்சியாக தமது மக்களுடைய கூட்டு உரிமையை வலியுறுத்துவதே அதிகம் பொருத்தமாயிருக்கும். 
    
    
   https://globaltamilnews.net/2021/169002
  • By கிருபன்
   வாலில்லாத காளை மாடும் இலையான்களும் - நிலாந்தன்
   கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் ஒரு சூம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பரந்துபட்ட ஒரு மக்கள் இயக்கத்துக்கான குறிக்கோள்கள் குறித்து அதில் ஆராயப்பட்டன. பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம உட்பட முஸ்லிம் தமிழ் வளவாளர்கள் உரையாற்றினார்கள். தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் அதில் பங்குபற்றினார்கள்.
   இது நடந்து கிட்டத்தட்ட மூன்று கிழமைகளின் பின் இம்மாதம் மூன்றாம் திகதி ஒரு சந்திப்பு யாழ்ப்பாணத்தில் யு எஸ் ஹோட்டலில் இடம் பெற்றது. பேராதனை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்குபற்றினார்கள்.பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள புத்திஜீவிகளோடு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, புத்திக பத்திரன போன்றோரும் அங்கே வந்திருந்தார்கள். யாழ் பல்கலைக்கழகத்தின் சில புத்திஜீவிகளும் உட்பட சுமார் முப்பது பேர் அச்சந்திப்பில் கூடியிருந்தார்கள். அரசுக்கு எதிராக நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் ஒரு புத்திஜீவிகளின் அமைப்பை கட்டி எழுப்புவதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. அவ்வாறான புத்திஜீவி அமைப்பொன்றை கட்டியெழுப்பும் வேலைகள் ஏற்கனவே பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கிவிட்டன. அப்பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பு துறைக்குப் பொறுப்பான ஒரு புலமையாளரே அவ்வமைப்புக்குப் பொறுப்பாய் இருக்கிறார்.
    

   கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இந்த மாதத்தோடு இரண்டு ஆண்டுகள் முடிகின்றன. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கிய ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து பரந்துபட்ட ஒரு மக்கள் இயக்கத்தை குறித்தும் நாடு முழுவதுக்குமான புத்திஜீவிகளின் ஒன்றிணைந்த எதிர்ப்பை குறித்தும் சிந்திக்க வேண்டிய ஒரு நிலைமை ஏன் ஏற்பட்டிருக்கிறது? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜபக்ஷக்களுக்கு இந்த நாட்டு மக்கள் வழங்கிய மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதன் பொலிவை இழக்க தொடங்கிவிட்டதை அது நமக்கு உணர்த்துகின்றதா?
   அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக எதிரிகள் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பொழுது தமிழ் மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு மட்டும்தான் இந்த அரசாங்கத்துக்கு இருந்தது. அந்த எதிர்ப்பை தனது மூன்றில் இரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மைக்கு கிடைத்த ஒரு வெகுமதியாக அரசாங்கம் காட்டிக் கொண்டது. அதன் விளைவாகவே தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியில் இணைந்து தமது எதிர்ப்பை காட்டினார்கள். அப்பொழுது சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்த எதிர்ப்பு எழவில்லை.
   ஆனால் பெருந்தொற்று நோய் அரசாங்கத்தின் தேர்தல் வெற்றிகளை நிர்வாணமாக்கி விட்டது. அதன் விளைவாக ஒருபுறம் வைரஸ் நெருக்கடி; இன்னொருபுறம் பொருளாதார நெருக்கடி ; மூன்றாவது முனையில் வெளியுறவு நெருக்கடி என்பவற்றோடு சேர்ந்து நாட்டுக்கு உள்ளேயும் ஆளும் கட்சிக்கு உள்ளேயும் புதிது புதிதாக எதிர்ப்புகள் கிளம்பின.
   அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை ராணுவ மயப்படுத்தி நோய் தொற்றும் வேகத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கிறது. அதேபோல வெளியுறவு அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி மேற்கு நாடுகள், ஐநா, இந்தியா போன்றவற்றோடு ஒப்பீட்டளவில் உறவுகளை சுமூகமாக்கிக் கொண்டது. ஆனால் நாட்டுக்குள்ளும் ஆளுங்கட்சிக்குள்ளும் எதிர்ப்புக்கள் புதிது புதிதாக கிளம்பிக் கொண்டே இருக்கின்றன.தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர் தொழிற்சங்கத்தின் விட்டுக்கொடுப்பற்ற போராட்டம் கடந்த புதன்கிழமை அரசாங்கத்தைப் பணிய வைத்திருப்பதாக தோன்றுகிறது. ஆசிரியர்கள் அதிபர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதன்மூலம் நடுத்தர வர்க்கத்தின் எதிர்ப்பை குறைக்கலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. இது விடயத்தில் ஜனாதிபதியைவிடவும் அவருடைய தமையனார் மஹிந்த ராஜபக்சவே சமரசம் செய்யத் தகுந்தவர் என்று கருதி அவருக்கூடாகவே அந்தப்போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது அரசாங்கத்தில் ஜனாதிபதியை விடவும் மகிந்த ராஜபக்சவே ஜனவசியம் மிக்கவராக உள்ளார் என்ற செய்தியை அழுத்தமாக உணர்த்துகின்றது.
   எனினும் ஒரு தொழிற்சங்கத்தின் போராட்டம்தான் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆசிரியர்கள் பெற்ற வெற்றி ஏனைய தொழிற்சங்கங்களுக்கு உற்சாகமூட்டும் முன்னுதாரணமாக அமையும். இது தொழிற்சங்கங்களின் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தக்கூடும். அதாவது அரசாங்கத்துக்கு மேலும் நெருக்கடிகள் காத்திருக்கின்றன என்று பொருள். இது ஒருபுறம்.
   இன்னொருபுறம் வைரஸ் தொற்று காரணமாகவும் பொருளாதார வீழ்ச்சி காரணமாகவும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கிடைக்கிற பொருட்களுக்கும் விலை உயர்கிறது. ஏற்கனவே உயர்ந்த விலைகள் இறங்கவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட உரப்பாவனை காரணமாக அடுத்தடுத்த போக விவசாய உற்பத்திகள் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதனால் எதிர்காலத்தில் மரக்கரிகளுக்குத் தட்டுப்பாடு வரலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
   அதாவது அரசாங்கம் ஆட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பலமுனை நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தருணத்தில் எதிர்க்கட்சிகளும் புத்திஜீவிகளும் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக பரந்துபட்ட எதிர்ப்பை காட்டுவதற்கு முற்படுகிறார்கள். வரும் 16ஆம் திகதி எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக பெரியளவிலான ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றன. அரசாங்கம் தனிமைப்படுத்தற் சட்டங்களை முன்னிறுத்தி அப்போராட்டத்தை தடுக்கக்கூடுமா?
   ஒரு நாடு எவ்வளவுக்கு எவ்வளவு ராணுவ மயப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பரந்துபட்ட அளவிலான சிவில் எதிர்ப்பும் தேவைப்படும். இந்த அடிப்படையில் சிந்தித்தால் பரந்துபட்ட ஒரு மக்கள் இயக்கத்துக்கான தேவை இப்பொழுது அதிகம் உண்டு. இலங்கைத்தீவின் நவீன வரலாற்றைத் தொகுத்துப் பார்த்தால் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை தோற்கடிப்பதற்கு மூன்று இன மக்களும் இணையும் பொழுது மட்டுமே வெற்றி கிடைத்திருக்கிறது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தில் இது நிரூபிக்கப்பட்டது. எனவே இப்போதிருக்கும் அரசாங்கத்தை மூன்று ஆண்டுகளின் பின்னராவது தோற்கடிப்பது என்று சொன்னால் அதற்கு மூன்று இனத்தவர்களின் ஒன்றிணைவு அவசியம். இந்த அடிப்படையில் சிந்தித்தால் நாடு முழுவதுக்குமான ஒரு பரந்து பட்ட மக்கள் இயக்கம் தேவை. ஆனால் இங்கே பிரச்சினை என்னவென்றால் அப்படி ஒரு மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்பும் பொழுது அதனை எந்த அடிப்படையில் கட்டியெழுப்புவது என்பதுதான்.
   இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட சூம் சந்திப்பின்போது அது சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு பரந்துபட்ட மக்கள் இயக்கம் எனப்படுவது மூன்று இன மக்களையும் ஒருங்கிணைப்பது. அவ்வாறு ஒருங்கிணைக்க வேண்டுமென்றால் அது இலங்கைத்தீவின் பல்லினத் தன்மையை கட்டியெழுப்புவதற்கு உரிய தெளிவான வாக்குறுதிகளை அதன் இறுதி இலக்குகளாக கொண்டிருக்க வேண்டும். இந்த நாட்டை பல்லினத்தன்மை மிக்கதாக கட்டி எழுப்புவது என்றால் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களை இச்சிறிய தீவின் சக பங்காளிகளாக ஏற்றுக்கொண்டு ஒரு யாப்பை உருவாக்குவதுதான் ஒரே வழி. அதாவது கூரான வார்த்தைகளில் சொன்னால் இப்போதிருக்கும் ஓரினத் தன்மைமிக்க:ஒரு மதத்தை மேலுயர்த்துகின்ற: ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குப் பதிலாக பல்லினத்தன்மை மிக்க பல சமயப் பண்புமிக்க இரு மொழிகளை ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு கூட்டாட்சிக்குரிய யாப்பை உருவாக்க வேண்டும். எனவே ஒரு பரந்துபட்ட மக்கள் இயக்கத்தை குறித்தோ அல்லது நாடு முழுவதற்குமான புத்திஜீவிகளின் எதிர்ப்பியக்கத்தை குறித்தோ சிந்திக்கும் எல்லா தரப்புக்களும் முதலில் தமிழ்மக்களுக்கு தரவேண்டிய வாக்குறுதி என்னவென்றால் ஒரு கூட்டாட்சி யாப்பை உருவாக்க தயார் என்பதுதான்.
   ஆனால் கொடுமை என்னவென்றால் அப்படி ஒரு யாப்பை குறித்த வாக்குறுதி எதையும் தருவதற்கு சிங்களமக்கள் மத்தியில் உள்ள எதிர்க் கட்சிகளும் தயாரில்லை. பெரும்பாலான லிபரல் ஜனநாயகவாதிகளும் தயாரில்லை. அல்லது பெரும்பாலான முற்போக்கு சக்திகளும் தயாரில்லை. இது விடயத்தில் பல்லினத்தன்மை மிக்க ஒரு கூட்டாட்சிக் கட்டமைப்பை ஏற்றுக் கொள்பவர்கள் யார் என்று பார்த்தால் அது சிங்கள பெரும்பான்மைக்குள் காணப்படும் மிக மிகச்சிறிய ஒரு சிறுபான்மைதான்.
   அச்சிறுபான்மை மிகவும் பலவீனமானது. அது சிங்கள பௌத்த பெருந் தேசிய வாதத்தின் கூட்டு உளவியலில் சிறு சலனத்தையோ அல்லது சிறு நொதிப்பையோ ஏற்படுத்தும் சக்தியற்றது. அப்படிப்பட்டதொரு மிகப் பலவீனமான சிறுபான்மையோடு இணைந்து தமிழ்மக்கள் சிங்கள பவுத்த பெருந் தேசியவாதத்தை தோற்கடிக்க முடியாது.
   எனவே இப்பொழுது விடயம் மிகத் தெளிவாக தெரிகிறது. பரந்துபட்ட அளவிலான மக்கள் எதிர்ப்பு என்று பார்த்தால் அது முகமூடி அணிந்திராத இனவாதத்துக்கு எதிராக மனித முகமூடி அணிந்த இனவாதத்தோடு கூட்டுச் சேர்வதன் மூலம் மட்டும்தான் ஒப்பீட்டளவில் சாத்தியமாகக் கூடிய ஒன்றாகும். இதை இன்னும் தெளிவாகச் சொன்னால் சிங்கள பௌத்த ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத அல்லது மாற்றத்தை ஏற்படுத்த விரும்பாத ஒரு மக்கள் இயக்கத்தைத்தான் பரந்துபட்ட அளவில் கட்டி எழுப்பலாம். அப்படி ஒரு மாற்றத்தைத்தான் மூவின மக்களும் சேர்ந்து 2015இல் ஏற்படுத்தினார்கள். ஆனால் மூன்று ஆண்டுகளே நீடித்த அந்த மாற்றமானது ஓரு நகைச்சுவை நாடகமாக முடிவடைந்தது. இப்பொழுது மறுபடியும் சிவில் சமூகங்களோடு இணைந்து ஒரு கூட்டு எதிர்ப்பை குறித்து சிந்திக்கப்படுகிறது.

   அரசாங்கத்துக்குள் இருக்கும் அதிருப்தியாளரான அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார் அரசாங்கம் இப்பொழுது வாலில்லாத ஒரு காளை மாடு என்று. மாட்டின் பலம் அதன் வாலில்தான் உண்டு என்று கூறப்படுவதுண்டு. அதேசமயம் வாலில்லாத மாடு இலையான்களையும் நுளம்புகளையும் கலைக்க முடியாது. இப்போதுள்ள நிலைமைகளின்படி அரசாங்கம் ஒரு பலமிழந்த காளை மாடா? அல்லது எதிர்க்கட்சிகள் இலையான்களா?
    
   http://www.samakalam.com/வாலில்லாத-காளை-மாடும்-இல/
 • Topics

 • Posts

  • அப்படியானால் தமிழர்களின் எதிர்காலம் என்ன? நிச்சயமாக நடக்கப்போவது இவைதான் 1. தமிழர்களின் தாயகம் இன்று வடக்கென்றும் கிழக்கென்றும் பிரிக்கட்டிருப்பதுபோல, இன்னும் சிறிதுகாலத்தில் கிழக்கிலும், வடக்கிலும் பகுதிகள் சிறிது சிறிதாக அரித்தெடுக்கப்பட்டு பெருத்துவரும் சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்படும். 2. தமிழரின் அருகிவரும் தாயகத்தில் சிங்களத்தின் ராணுவமும், கடற்படையும், வான்படையும், காவல்த்துறையும், புலநாய்வு அமைப்புக்களும் தொடர்ச்சியாக நிலை நிறுத்தப்படுவதோடு, அவற்றின் பிரசன்னமும் விஸ்த்தரிக்கப்படும். 3. தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களத்தின் அதிகாரிகளும், அவர்களின்குடும்பங்களும் பெருமளவில் குடியமர்த்தப்படும். 4. தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்கள் சிங்களத்திற்குள் ஊல்வாங்கப்படும் (உடனடியாக இல்லாவிட்டாலும்கூட இன்னுமோர் 50 - 60 வருடங்களில் இது சாத்தியமே).  5. அருகிவரும் தமிழரின் மொழி, கலசார விழுமியங்கள், ச்மய அடையாளங்கள் சிறிது சிறிதாக தொல்பொருள் காத்தல் எனும் பெயரிலும், "முன்னைய சிங்கள பெளத்த சின்னங்கள் " எனும் பெயரிலும் அபகரிக்கப்படும். அப்படி அபகரிக்க முடியாத தமிழரின் தொல்லியல் சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுதலோ அல்லது வேண்டுமென்றே பராமரிப்பின்றி விடப்படும், இன்று வன்னியின் பல பகுதிகளிலும் அழிந்துவரும் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட பல தொன்மைவாய்ந்த கட்டிடங்கள் இதற்கு உதாரணம். 6. தொடர்ச்சியான ராணுவ அடக்குமுறைக்கும், நில அபகரிப்பிற்கும் முகம் கொடுக்கும் தமிழினம் ஒன்றில் நாட்டைவிட்டு வெளியேறி சிங்கள் ஆக்கிரமிப்பினை இலகுவாக்கும், அல்லது தனது அடையாலம் துறந்து சிங்களுத்தினுள் உள்வாங்கப்படும்.  7. இன்னொரு நூற்றாண்டில் முழு நாடும் சிங்கள மயமாகும். 
  • அடுத்தது கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் கூட்டு. சம்பந்தன் - சுமந்திரன் கூட்டிற்கு எதிராக தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கக்கூடியவர்கள் என்று மக்களால் கருதப்பட்டவர்கள். ஆனால், தாந்தோன்றித்தனமான நடவடிக்கைகளாலும், சுயநல அரசியலைனாலும் கூடவிருந்தவர்களின் நம்பிக்கையினை இழந்து பலர் வெளியேறக் காரனமாகவிருந்தவர்கள். கூட்டமைப்பின் தலைமைக்கு மட்டுமல்லாமல், இதர கட்சித் தலைமைகளுக்கும் எதிரான பிடிவாதமான அரசியல் நிலைப்பாட்டினால் இன்றுவரை தமிழ்த் தேசியப் பரப்பில் பல கட்சிகள் ஒன்றுபடுவதை விரும்பாதவர்கள். கூட்டமைப்பிலிருந்து பிரிந்ஹ்டு வந்ததன் பின்னர் தமக்குள் மோதுண்டு, மணிவண்ணன் வெளியேறவும், அரசுக்குச் சார்பான துனைராணுவக் குழுவின் உறுப்பினர்களுடன் சேர்ந்து அரசியல் செய்யவும் காரனமானவர்கள். பாராளுமன்றத்தில் ஆக்ரோஷமாகக் கதைப்பதே அரசியல் எனும் நிலைப்பாட்டில் வாழ்பவர்கள்.  சித்தார்த்தன், அடைக்கலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டு. முன்னாள் அரச ராணுவத் துனைக்குழுக்களின் தளபதிகள் அல்லது தலைவர்கள். இந்திய ராணுவம் மற்றும் இலங்கை ராணுவத்துடன் நேரடியான தொடர்பை நெடுங்காலம் பேணிவந்தவர்கள். பல தமிழர்களின் படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புகொணடிருந்தவர்கள். தொடர்ச்சியாக இந்திய ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்துவரும் இவர்கள், சம்பந்தன் - சுமந்திரன் கூட்டிற்கு எதிரானவர்கள். தமது அரசியல் எதிர்காலமே இவர்களின் ஒரே இலக்கு. தொடர்ந்து அரச ராணுவ குழுக்களாக இயங்கமுடியாத பட்சத்தில் தமது இருப்பிற்காக அரசியலைத் த்ர்ரெந்தெடுத்தவர்கள்.  அடுத்தது விக்னேஸ்வரன். சம்பந்தன் - சுமந்திரன் கூட்டிற்கு பதிலாக தமிழ் மக்களால் தலைவராகப் பார்க்கக்கூடியவர் எனும் மாயையினை ஏற்படுத்தியவர். ஆரம்பத்தில் நம்பிக்கையினைத் தந்து பல மேடைகளில் தமிழரின் இழப்புக்கள் குறித்து வெளிப்படையாகப்பேசியவர். ஆனால், கூடவிருக்கும் இதர அரசியல்வாதிகளினதும், ஆதரவாளர்களினது பேச்சிற்கு அடிபணிந்து, இலக்கு மாறி இன்று பத்தோடு  பதினொன்றாக நிற்பவர்.   சிறிதரன். கிளிநொச்சி மக்களால் முன்னர் ஆதரிக்கப்பட்டவர். வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் தமிழரசுக் கட்சியூடாக பாராளுமன்ற ஆசனம் என்பதைத்தவிர இவரின் அரசியல் அதிக தூரம் செல்வதில்லை. ஒரு சில பாராளுமன்ற உரைகளும், மாவீரர்களுக்கான வணக்கமும் தன்னைத் தொடர்ந்தும் அரசியலில் வைத்திருக்க உதவும் என்று நம்புபவர். இவர்கள் எவராலும் தமிழருக்கான விடிவு கிடைக்கப்போவதில்லை. இது இவர்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரியும், ஆனாலும் தமது அரசியல் எதிர்காலத்திற்காக, வருவாய்க்காக அதனைச் செய்கிறார்கள்.  தமது சொல்கேட்டு, தமது சுரண்டல்களை ஏற்றுக்கொன்டு, தமது பிராந்திய நலன்களுக்கான பகடைகளாகவிருந்து தமக்கு சலாம்போடும் அமைப்பாக புலிகள் இருக்கவேண்டும் என்று இந்தியாவும், மேற்குலகும் எதிர்பார்த்தது. அப்படி புலிகள் இருக்காதவிடத்து அவர்களை அழித்து நாடு முழுவதையும் சிங்களப் பேரினவாதிகளிடம் கொடுப்பதன்மூலம் மொத்த நாட்டையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து தமக்குத் தேவையானதை அடைந்து கொள்ளலாம் என்று இந்த அந்நிய சக்திகள் விரும்பியதன் விளைவே எமது மக்களின் அழிப்பும், போராட்டத்தின் வீழ்ச்சியும். இன்று தமிழருக்கான தீர்வு எதனையும் கொடுக்கவேண்டிய தேவை இந்த சக்திகளுக்கு இல்லை. தமக்குத் தேவையானவற்றை சிங்களமே கொடுத்துவரும்வேளையில், சிங்களத்திற்கு எதிராகச் சென்று எதுவுமேயற்ற தமிழர்களை ஆதரிக்க இந்த சக்திகளுக்கு தேவையென்று ஒன்றில்லை. ஆகவேதான் இன்றுவரை தமது பிணாமிகளாக தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகளைக் குழுக்களாகப்பிரித்து தம்பாட்டிற்கு இயக்கி வருகிறார்கள். மனிதவுரிமை மீறள்கள், போர்க்குற்ற விசாரனைகள், சிறுபான்மையினங்களுக்கான அரசியல் பாதுகாப்பு, சிறுபான்மையினக் குழுக்கள் என்று வார்த்தை ஜாலங்களைப் பாவித்து கானல்நீரைப் போன்று இன்றுவரைத் தமிழர்களை நம்பிக்கையுடன் ஏங்கவைத்து தமது நலன்களை மட்டுமே பார்த்துக்கொள்ளும் சக்திகள். இந்தியாவென்றும், அமெரிக்காவென்றும், ஐரோப்பாவென்றும் தொடர்ச்சியாக தமது பிணாமிகளை வரவழைத்து தமிழர்களை "அரசியல்த் தீர்வு ஒன்று வரப்போகிறது" எனும் மாயைக்குள் அடைத்துவைத்திருப்பவர்கள். பலமுறை தாம் பாவித்து வெற்றிபெற்ற "தமிழர்களின் நலன்களைக் காவுகொடுத்து தமது நலன் பேணல்" எனும் அதே கைங்கரியத்தை இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கத் தயங்காத சுத்த சுயநல சக்திகள்.  இவர்களாலும் தமிழருக்கென்று தீர்வொன்றும் கிடைக்கப்போவதில்லை.   
  • கோப்பிக் கோப்பையில் பூத்த கலைவண்ணம்........!  😂
  • கண  சிற்சபேசனின் அங்கதமான பேச்சு.......!  🌹
  • இன்றிருக்கும் தமிழரின் அரசியத் தெரிவுகள் யார்? 1. அரசுக்குச்சார்பானவர்கள் 2. அரசையும் சாராமல், தமிழ் மக்களையும் சாராமல் ஆனால் தமிழ்த் தேசியம் எனும் பெயரில் அரசியல் செய்பவர்கள் அரசுக்குச் சார்பானவர்கள்  டக்கிளஸ், கருணா, பிள்ளையான், வியாழேந்திரன், ஆனந்த சங்கரி போன்றவர்கள்.  இவர்களால் தனித்து ஒரு முடிவினையோ, தமிழ் மக்கள் நலன் சார்ந்து ஒரு தீர்வினையோ எடுக்க முடியாது. சிங்கள பேரினவாதத்திற்குச் சேவகம் செய்யும் இவர்களினால் இவர்களுக்கும், இவர்களோடு கூடவிருக்கும் ஒரு சில தமிழருக்கும் நண்மைகள் கிடைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இவர்களால் தமிழருக்கு ஏற்பட்டுவரும் இழப்புக்கள் மிகவும் பாரதூரமானவை. போர்க்காலத்தில் மக்களினதும், போராட்டத்தினதும் அழிவோடும் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த இவர்கள், போரின் பின்னரான அரசின் எஜென்ட்டுகளாக செயற்பட்டு வருகின்றனர். இவர்களைப் பயன்படுத்தி தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பிலும், வளங்களைச் சூறையாடுவதிலும் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அத்துடன் சர்வதேசத்தில் இவர்களைக் காட்டியே தான் தமிழ் மக்களுக்கு அரசியலில் சம அந்தஸ்த்தினை வழங்கிவருவதாகவும் அரசினால் காட்ட முடிகிறது. உள்நாட்டில் தமிழரின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை சிறிது சிறிதாகக் குரைத்து, தமிழர்களின் அரசியல்ப் பலத்தினை அழிப்பதில் இவர்களை முன்னிறுத்தியே அரசு செயற்பட்டு வருகிறது. தமிழர்கள் என்பதற்கு அடையாளமாக பெயர்களை மட்டுமே கொன்டிருப்பதைத்தவிர இவர்களால் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் என்று எவையுமே இல்லை.   2. தமிழ்த் தேசியம் பேசும் ஏனைய அரசியல்வாதிகள். சுமந்திரன், சம்பந்தன், சிறிதரன், அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன், மணிவண்ணன், சித்தார்த்தன் போன்றவர்கள். புலிகளால் தமிழ்த்தேசிய அரசியலுக்கு அழைக்கப்பட்டவர்கள் இவர்கள். அன்று எதற்காக அழைக்கப்பட்டார்களோ, அதற்கு நேர்மாறாக தமிழ்த் தேசிய அரசியலை, அதன் பலத்தை சிறு சிறு துண்டுகளாக உடைத்து நொறுக்குவதில் மட்டுமே தமது நேரத்தையும் வளங்களையும் பாவித்து வருபவர்கள். எடுப்பார் கைப்பிள்லைகளாக பிரிந்து நின்று உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் நூற்பொம்மைகளாக ஆளாளுக்கென்று ஒவ்வொரு திசையில் பயணிப்பவர்கள். சம்பந்தன் சுமந்திரன் கூட்டு செய்யும் அரசியல் தமிழ்த் தேசியத்திற்கு அமைவானதில்லை என்பது கண்கூடு. புலிகளை விமர்சிப்பதிலும், அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவத்ன் மூலம் மட்டுமே சிங்களவர்களௌக்கு தமிழரின் பிரச்சினைகளை எடுத்துரைக்கமுடியும் என்று நம்புபவர்கள். இந்தியாவினதும், மேற்குலகினதும் தேவைகளுக்காகவும், ஆசைகளுக்காகவும் தமிழரின் உண்மையான கோரிக்கைகளைக் கைவிடவும், அல்லது விட்டுக் கொடுக்கவும் தயங்காதவர்கள். ஐ தே க கட்சியுடனான இவர்களின் நெருக்கத்தினைப் பாவித்து  2015 இலிருந்து 2019 வரையான காலப்பகுதியில் தமிழருக்குச் செய்யக்கூடிய சிறு உதவிகளான கைதிகளை விடுவித்தல், மாகாணசபை தேர்தலினை நடத்துதல், அரசியலமைப்பினை மாற்றுதல் ஆகிய எந்தவித முயற்சியினையும் எடுக்க விரும்பாது வாளாவிருந்தவர்கள். இன்றுவரை இவர்களின் பின்னால் நின்று ஆட்டுவிக்கும் சக்தியெது என்பதை மிகவும் லாவகமாக மறைத்து அரசியல் செய்பவர்கள்.  இவர்களுடன் அண்மையில் அணிசேர்ந்திருக்கும் சாணக்கியனின் அரசியல் பின்புலம் அலாதியானது. அரச ராணுவத்தின் துனைக்குழுவான பிள்லையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக, பிள்லையானின் பேச்சாளராக தனது அரசியலை ஆரம்பித்தவர் இவர். தனது முன்னைய நிலைப்பாட்டிலிருந்து 180 பாகை திரும்பி தமிழ்த் தேசிய அரசியலினையும், முஸ்லீம்களுடனான நட்பையும்பற்றிப் பேசும் கெட்டிக்காரன். சிங்கலத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் பரீட்சயமுள்ள இவர் செய்யும் அரசியல் தனக்கானது மட்டும்தான். கிழக்கு மாகானசபை அல்லது இணைந்த வட - கிழக்கு மாகாணசபை முதல்வராகும் கனவில் வாழ்பவர்.   
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.