-
Tell a friend
-
Topics
-
0
By ஏராளன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
தமிழையும், ஈழத்தையும் நேசிக்கும் அருமையான மனிதர். விரைவில் நலம் பெற பிரார்த்திக்கின்றோம். 🙏 -
By கிருபன் · பதியப்பட்டது
டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை! மின்னம்பலம்2022-05-24 உடல்நலக் குறைவு காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தரை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்ல அவசர ஆலோசனை நடந்து வருகிறது. தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர் டி.ராஜேந்தர். நடிப்பு, இசை, இயக்கம் என பன்முகத் தன்மை கொண்டவர். தீவிரமாக அரசியல் களத்தில் குதித்த டி.ராஜேந்தர் தமிழ்நாடு எங்கும் திமுகவிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்தவர். திமுகவில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். லட்சிய திமுகவை உருவாக்கி தலைவராக செயல்படுகிறார். இவ்வாறு பல துறைகளிலும் போராடி தனக்கென தனி இடத்தை பிடித்த டி.ராஜேந்தர், மது, சிகரெட் என எதையும் தொடாமல் தனி மனித ஒழுக்கத்திலும் சிறந்தவர். இரண்டு நாட்களுக்கு முன்பு டி.ராஜேந்தருக்கு திடீரென நெஞ்சில் வலி ஏற்பட்டது. உடனடியாக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த டி.ராஜேந்தர் ரத்த சோகையால் சோர்வுடனே காணப்பட்டார். வயிறு வலியும் ஏற்பட்டது. தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்படவே ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஐசியுவில் தீவிர சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்திருக்கு வயிறு தொடர்பான சிகிச்சையில் சிறப்பானவரான மருத்துவர் பாலசிங்கம் சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவர் பாலசிங்கம், வயிற்று வலி உள்ளவர் நடந்து வரும் போதே அவருக்கு என்ன பாதிப்பு இருக்கிறது என்பதைக் கண்டறியும் அளவுக்கு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர். இந்நிலையில் அவருடைய அறிவுறுத்தலின் பேரில் ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் டி.ராஜேந்தருக்கு வயிற்றில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே டி,ராஜேந்தருக்கு இதயத்தில் பிளாக் இருக்கும் நிலையில், தற்போது புற்றுநோயும் கண்டறியப்பட்டதால் அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மருத்துவர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். https://minnambalam.com/politics/2022/05/24/20/T-Rajender-going-to-US-for-cancer-treatment -
By ஏராளன் · பதியப்பட்டது
தைராய்டு நோய் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன? - உலக தைராய்டு தினம் ரவி குமார் பனங்கிப்பள்ளி பிபிசி தெலுங்கு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAMMED HANEEFA NIZAMUDEEN / GETTY IMAGES தைராய்டு சுரப்பி குறைபாட்டால் இந்தியாவிலுள்ள பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோய் உடையவர்கள். தைராய்டு நோய் உண்டானவர்களுக்கு இருக்கும் பிரச்னை என்னவென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது. இது அதிகம் பெண்களிடையே நிலவுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு மகப்பேறுக்கு பிந்தைய முதல் மூன்று மாத காலத்தில் 44.3 சதவீதம் பேருக்கு தைராய்டு சுரப்பி குறைபாடு உண்டாகிறது. தைராய்டு என்றால் என்ன? தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது. உடல் தனக்குக் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளவும் கதகதப்புடன் வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. ஒரு வகையில் மனித உடலுக்கு தைராய்டு சுரப்பி ஒரு பேட்டரி போன்றது. ஒருவேளை இந்த சுரப்பி ஹார்மோன்களை குறைவாகவோ கூடுதலாகவோ சுரந்தால் தைராய்டு நோய்க்கான பிரச்னை உண்டாகிறது என்கிறார் ஆந்திர பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற உள்சுரப்பியியல் நிபுணர் (Endocrinologist) மருத்துவர் பெல்லம் பரணி. எப்போதும் இளமையாக இருப்பது எப்படி? - முதுமை 'நோயை' போக்க வழி உலக நாடுகளில் பரவும் குரங்கம்மை: அறிகுறிகள் என்ன? வைரஸ் என்றால் என்ன? 21ஆம் நூற்றாண்டை அதிர வைத்த சில வைரஸ் தாக்குதல்கள் மனித உடலுக்குத் தேவையான அளவு ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் சுரக்கப்படாவிட்டால் இது ஹைப்போ-தைராய்டிசம் (Hypo-thyroidsim) எனப்படுகிறது. சொல்லப்போனால் பொம்மையில் பேட்டரி தீர்ந்து போனது போலத்தான். ஹைபோ-தைராய்டிசம் வந்தால் மனித உடலில் எந்த அளவு ஆற்றலுடன் இயங்க முடியுமா அதை விடக் குறைவாகவே இயங்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் அயர்ச்சி அடைந்துவிடுவார்கள். ஒருவேளை தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் அது ஹைப்பர்-தைராய்டிசம் (Hyper-thyroidism) எனப்படுகிறது. இவர்கள் அதிகளவில் 'காஃபைன் ' எடுத்துக் கொண்டவர்களைப் போன்றவர்கள். அதாவது அதிக பசி, அதிக வியர்வை போன்றவை உண்டாகும். பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY மூன்றாவது பாதிப்பு தைராய்டு சுரப்பி வீக்கமடைவது. 'கழுத்துக் கழலை' எனும் இந்தக் குறைபாடு 'Goiter' என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. மருந்துகளால் தீர்க்க முடியாவிட்டால் இதற்கு நிச்சயம் அறுவை சிகிச்சை தேவை. தைராய்டு நோய்க்கான அறிகுறிகள் என்ன? ஹைப்போ-தைராய்டிசம் அறிகுறிகள்: உடல் பருமன் அடைவது, முகம், கால்கள் ஆகியவை வீக்கமடைவது, சோர்வாகவும் சுறுசுறுப்பின்றியும் உணர்வது, பசி இல்லாமல் போவது, அதீத தூக்க உணர்வு, அதிகமாகக் குளிர்வது போன்ற உணர்வு, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், முடி உதிர்தல் பிரச்னை போன்றவை ஹைப்போ-தைராய்டிசம் நோய்க்கான அறிகுறிகள். ஹைப்பர்-தைராய்டிசம் அறிகுறிகள்: போதுமான அளவு பசியிருந்தும் நல்ல உணவுகளை உட்கொண்டாலும் உடல் எடை குறைதல், கை - கால் நடுக்கம், திடீர் திடீரென மனநிலை மாறுவது, கொஞ்சம் வெயில் அடித்தாலும் தாங்கிக் கொள்ள முடியாமல் போவது, உறக்கத்தின்போது மூச்சு சீரற்று இருப்பது, இதயத்துடிப்பு சீரற்று இருப்பது, கண் பார்வை மங்குவது, மூளை மூட்டம் உள்ளிட்டவை ஹைப்பர்-தைராய்டிசம் குறைபாட்டின் அறிகுறிகள் என்று மருத்துவர் பரணி கூறுகிறார். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் போனால் அதைக் கண்டுபிடிக்க, அதற்கென குறிப்பிட்ட அறிகுறிகள் என்று எதுவும் தனியாக இல்லை. தைராய்டு சுரப்பிக்கு உண்டாகும் நோய்களில் இதுதான் முக்கியமான பிரச்னை என்று ஸ்பானிஷ் சொசைட்டி ஆஃப் எண்டோக்ரைனாலஜி எனும் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் பிரான்சிஸ் சேவியர் சாண்டா மரியா முன்னதாக பிபிசியிடம் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு: ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறா? - அரசின் ஆய்வு எழுப்பும் சந்தேகங்கள் ஆஸ்துமா பரம்பரை நோயா? தடுக்கும் வழிமுறைகள் என்ன ? மேஜிக் காளான்களில் உள்ள சைலோசிபின் மன அழுத்தத்திற்கு மருந்தாக பயன்படுகிறதா? எடுத்துக்காட்டாக ஹைப்போ-தைராய்டிசம் இருப்பவர்களுக்கு, நாள்பட்ட மன அழுத்தம் இருப்பதாகத் தவறாக நோய் கண்டறியப்படலாம். ஹைப்போ-தைராய்டிசம் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமலே இருக்க வாய்ப்புண்டு. அவர்களுக்குத் தாமதமாகவே சிகிச்சை தொடங்கப்படுகிறது. தைராய்டு குறைபாடு உள்ளவர்களில் 10 சதவீதம் பேருக்கு ஹைப்போ-தைராய்டிசம் இருக்கும். ஆனால் அவர்களில் பாதி பேருக்குத் தான் அப்படியொரு குறைபாடு இருப்பதே தெரியவருகிறது. ஆண்கள், பெண்கள் ஆகிய இருவருக்குமே இதற்கான அறிகுறிகள் ஒன்றாக இருந்தாலும் பெண்களுக்கே விரைவில் இந்த நோய் கண்டறியப்படுகிறது. வழக்கமாக 80 முதல் 90 சதவீதம் தைராய்டு நோயாளிகள் சிகிச்சைக்குப் பின்பு குணமடைகிறார்கள். ஆனால், சிலருக்கு இது முற்றிலும் குணமாவதில்லை. சிலருக்கு நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கும். ஹைப்போ-தைராடிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கு பின்னரும் 'ஆட்டோ-இம்யூன் ரெஸ்பான்ஸ்' (நோய் கிருமிகளைத் தாக்காமல் உடல் உறுப்புகளையே நோய் எதிர்ப்பு மண்டலம் தாக்குவது) தாமாகவே உள்ளுறுப்புகளைத் தாக்குவது தொடரும் என்று மருத்துவர் சாண்டா மரியா கூறுகிறார். பட மூலாதாரம்,ASHISH KUMAR / GETTY IMAGES படக்குறிப்பு, தைராய்டு பிரச்னை ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் உண்டாகிறது. (சித்தரிக்கும் படம்) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் போல தைராய்டில் எந்த அளவு குறைபாடு இருக்கிறது என்று துல்லியமாக நிர்ணயிக்க முடியாது என்று மருத்துவர் பரணி கூறுகிறார். T3, T4, TSH ஹார்மோன்கள் - தைராய்டு நோயுடன் என்ன தொடர்பு? ஹைபோ தைராய்டிசம் என்றால் T3 (ட்ரை-அயோடோதைரோனைன்), T4 (தைராக்சின்) ஆகிய ஹார்மோன்கள் குறையும் என்று பொருள். அதே சமயத்தில் TSH (தைரோட்ரோபின்) ஏனும் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். பிற ஹார்மோன்கள் எவ்வாறு செயலாற்றுகின்றன என்பதை இந்த ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது என்பதால் இது தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (TSH) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஒரு லிட்டர் ரத்தத்தில் 0.5 முதல் 5 மில்லி வரை தைராய்டு இருக்க வேண்டும் என்பது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. ரத்தத்தில் டி.எஸ்.ஹெச் அளவு என்பது தைராய்டு சுரப்பி சரியாக இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். ஆனால் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என ஆளுக்கு ஆள் இந்த அளவு மாறுபடும். அதாவது வயதைப் பொருத்த வரையில் கூட இந்த அளவு மாறுபடுகிறது. குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு குறைபாடு இருந்தால் அவர்கள் குழந்தைகளுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவர் பரணி. கொளுத்தும் வெயில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? – எப்படி தற்காத்துக் கொள்வது? திரவ உணவு முறை என்றால் என்ன? அது பாதுகாப்பானதா? ஆனால், இதைத் தடுப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லை. பிரச்னை உண்டான பின்னரே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும் என்று அவர் கூறுகிறார். இது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதா? ஹைப்போ-தைராடிசம் உண்டானால் தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் அதிகம் சுரக்கப்படும் என்பதால் இதயத்துடிப்பு விகிதத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். இதன் காரணமாக பல பிரச்னைகள் உண்டாகும். இதேபோல ஹைப்போ-தைராய்டிசம் சரியான நேரத்தில் கண்டறியப்படவில்லை என்றால் சில நேரங்களில் மூளையில்கூட பிரச்னை உண்டாகும். அது மட்டுமல்லாமல் உடலில் சோடியம் அளவு குறைந்து பாதிக்கப்பட்ட நபர் கோமா செல்வதற்கும் கூட வாய்ப்புண்டு. குழந்தைகள் பிறந்த உடனேயே அவர்களுக்கு பிரச்னை இருந்து அது கண்டறியப்படாமல் விட்டால் அவர்களது மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். இதனால், அவர்களது ஐ.க்யூ அளவும் (அறிவாற்றல்) குறையும். மிகவும் எளிதாக சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய இந்த பிரச்னை கண்டுகொள்ளப்படாமல் விட்டால் குழந்தைகளின் எதிர்காலமே சிக்கலுக்கு உள்ளாகி விடும். தைராய்டு பிரச்னை பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளுக்கு உண்டாக வாய்ப்புண்டு. குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் அவர்களது உடல் உயரம் போதிய அளவு இல்லாமல் போகும். ஹைப்போ-தைராய்டிசம், ஹைப்பர்-தைராய்டிசம் ஆகியவை சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்காமல்விட்டால் சில நேரங்களில் அவை உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியவையாக மாறும். https://www.bbc.com/tamil/science-61565224 -
By தமிழ் சிறி · Posted
தமிழக மக்கள் அனுப்பிய நிவாரண உதவி... இந்திய நிவாரண உதவியாக மாறி விட்டது. அதனை... தமிழகம் என்று உச்சரிக்கக் கூட... சிங்களத்துக்கு கசக்குது. போற போக்கிலை... அரிசி சாக்கிலை, ஏன்... சிங்களத்தில் எழுதவில்லை, என்று பேசப் போகிறார்கள். 😎 -
By தமிழ் சிறி · Posted
கவி அருணாசலம் நடக்கப் போகும்... நிகழ்வை, கருத்துக் படம் மூலம் விளக்கி உள்ளீர்கள். அதிலும்... கடந்த 18´ம் திகதி உங்கள் வீட்டில் துக்க நிகழ்வு நடந்திருந்தும், தொடர்ந்து... கருத்தோவியங்களை யாழ்.களத்திற்கு வழங்கிக் கொண்டு இருந்த உங்கள் பொறுப்புணர்விற்கு... தலை வணங்குகின்றோம். 🙏
-
Recommended Posts
Please sign in to comment
You will be able to leave a comment after signing in
Sign In Now