Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அனைத்துலக வறுமை ஒழிப்புத் தினத்தில் ஈழத்தமிழர் வறுமை ஒழிப்புக்கான சில சிந்தனைகள் – சூ.யோ.பற்றிமாகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக வறுமை ஒழிப்புத் தினத்தில் ஈழத்தமிழர் வறுமை ஒழிப்புக்கான சில சிந்தனைகள் – சூ.யோ.பற்றிமாகரன்

October 18, 2021

 

ஈழத்தமிழர் வறுமை ஒழிப்புக்கான சில சிந்தனைகள்

– சூ.யோ.பற்றிமாகரன்

அனைத்துலக வறுமை ஒழிப்புத் தினத்தில் ஈழத்தமிழர் வறுமை ஒழிப்புக்கான சில சிந்தனைகள்: வாய்ப்புக்கள் மறுக்கப்படுதல், வளர்ச்சிகள் தடுக்கப்படுதல் வறுமை அதனை அரசாங்கமே திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளல் மனிதகுல அழிப்பு இதை மாற்றிடப் புலம்பதிந்த தமிழர் குடைநிழல் அமைப்பு நிறுவப்படல் அவசியம்.

உலக வறுமை ஒழிப்பு தினம்

அக்டோபர் 17ஆம் திகதியை உலக வறுமை ஒழிப்பு தினமாக ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடி வருகிறது. வறுமை என்றதுமே உடனடியாக நாளாந்த வாழ்வுக்கான நிதிவளப் பற்றாக்குறை அல்லது நிதியின்மை என்றே கருதப்படுவது வழமை. உண்மையில் வறுமை என்பது, ஒரு மனிதன் தன்னுடைய திறமைகளைக் கொண்டு தனக்கான வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுதல் என்பதாக அமைகிறது.

விளக்கமாகச் சொல்வதனால், மனிதனுடைய இயல்பு வளர்ச்சிகள் அகப் புறக்காரணிகளால் தடுக்கப்படுதல், அவனை வறுமையடையச் செய்கிறது. குடும்ப –  சமுதாய வழமைகளாக்கப்பட்டுவிட்ட  சாதி, மத, மொழி, நிற, இன வேறுபாடுகளும், உள்ளவர் இல்லாதவர், படித்தவர் படியாதவர் நகரத்தவர் கிராமத்தவர் என்னும் பாகுபாடுகளும், பொருளாதாரச் சமபகிர்வு இன்மைகளும், ஆசாரம், தீட்டு, துடக்கு என்னும் ஆன்மிக அடக்குமுறைகளும் என்பனவும் ஒரு மனிதனின் சிந்தனையை அடிமைப்படுத்தும், தனிமைப்படுத்தும் முயற்சிகள் ஆகின்றன. இவற்றின் வழி  தோன்றுகிற மனித சமத்துவமின்மை மூலவளப் பகிர்வின்மை வறுமைக்கான மூல காரணிகளாகின்றன. சுருக்கமாகச் சொன்னால், மனித சுதந்திரம் மறுக்கப்படுதல் அல்லது தடுக்கப்படுதல் வறுமை நிலைக்கு ஒரு மனிதனைத் தள்ளுகிறது. இதனைப் பண்பாகக் கொண்ட சமுதாயம் அடிமைச் சமுதாயமாகிறது.

ஈழத்தமிழர் வறுமை ஒழிப்புக்கான சில சிந்தனைகள்ஒரு மனிதனின் மேல் தனது மேலாதிக்கத்தைச் செலுத்தி, அவனை ஒடுக்கி, அவனுடைய உழைப்பை, உரிமைகளை, உணர்வைச் சுரண்டுகிற சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மிக வேறுபாடுகளை உருவாக்குபவர்களே வறுமையைத் தோற்றுவிக்கும் உற்பத்தியாளர்கள். மனிதன் பலவிதமான புறக்கணிப்புக்களால் தனிமைப்படுத்தப்பட்டு, அவனுடைய மனதில் வாழ்வதற்கான நம்பிக்கை திட்டமிட்ட முறையில் பலவீனப்படுத்தப்படும் பொழுது, அம்மனிதன் வறுமை என்னும் வெறுமைக்குள் சிக்குப்படுவான்.

வெறுமை உள்ளத்தில் உருவாக்கப்பட்டாலே ஒருவருக்கு அவருடைய அருமைகளைப் பெருமைகளை இயல்பான செயற்பாட்டுத் திறமைகளை மறக்க வைக்க முடியும். இதன்வழியாக அவரைத் தங்கி வாழ்தல் நிலைக்குள் தள்ள முடியும். தங்கி வாழும் மனிதன் தன் சுதந்திரத்தை அதாவது தன்னுடைய திறமைகளைப் பயன்படுத்தி, தான் வாழ்வதற்கான கட்டற்ற அகப் புறச் சூழலை இழந்து விடுவான். இதுவே ஆள்பவர்களை ஏற்றுப் பணியும் அடிமை நிலைக்கு அல்லது, ஆள்பவர்களைத் தொழுது, மனதில் அழுது வாழும் அவல நிலைக்கு அவனை இட்டுச் செல்கிறது.  இது அந்த ஆள்பவர்கள் தனக்குச் செய்யும் அதே அடிமைப்படுத்தலைத் தான் பிறர்க்குச் செய்து, தன்னை நிலைநிறுத்த வேண்டுமென்கிற உந்துதலை அவனுக்கு அளித்து, ஒவ்வொரு நிலையிலும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை பணத்தால், அதிகாரத்தால் அடிமைப்படுத்தி வாழும் இன்றைய வாழ்வியலை உருவாக்குகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதனைச் சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக்கி, வாழ்வைச் சமப்படுத்தி ஆளவேண்டிய அரசுகளே சட்டத்தின் ஆட்சியை மறுத்து, வறுமையை மக்கள் வாழ்வாக்குகின்றன.  இதற்குத் தலைசிறந்த உதாரணம் சிறிலங்கா அரசு. இலங்கைத்தீவில் ஈழத்தமிழ் மக்களை இனஅழிப்பின் மூலம் அடிமைப்படுத்த கடந்த 49 ஆண்டுகளாக ஈழத்தமிழர்களுக்குச் சிங்களவர்களுடன் சட்டத்தின் முன்  அவர்கள் சமனென்ற சட்ட ஆட்சியை சிங்கள அரசுகள்  மறுத்து, ஈழத்தமிழர்களை வறுமைப்படுத்தி வருகின்றன.

22.05.1972 இல் சிங்கள பௌத்தக் குடியரசு ஆட்சிப் பிரகடனத்தால் ஈழத்தமிழர்களை ஆளும் சட்ட உரிமையை இழந்து விட்ட சிறிலங்கா அரசாங்கம், அவர்களை நாடற்ற தேச இனமாக்கியது. அரசற்ற நிலையில் உள்ள ஈழத்தமிழர்கள் தங்களின் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தித் தங்களுக்கான நடைமுறை அரசை உருவாக்கித் தம்மைத் தாமே ஆள்கின்ற சட்ட ஆட்சியை நிறுவிய பொழுது, அதனைத் தொடர்ச்சியான இனஅழிப்பு நடவடிக்கைகளால் அழித்து ஒழித்து வந்த சிறிலங்கா,  18.05. 2009 முதல் இன்று வரை ஈழத்தமிழர்களின் வறுமை வாழ்வுக்கு – வெறுமை மனநிலைக்கு மூல காரணமாகிறது.

இலங்கை அரசாங்கம் என்னும் பிரித்தானிய காலனித்துவம் உருவாக்கிய சோல்பரி அரசியலமைப்பின் வழியான ஆட்சி முறைமையிலும் 02.04.1948 முதல் 22.05. 1972 வரை கால் நூற்றாண்டு காலம் தமிழர்களின் நிலவளங்களை, கடல்வளங்களை, காட்டு வளங்களை ஆக்கிரமித்தல், தமிழர்களின் தொழில் வளங்களை, வர்த்தக முயற்சிகளை முடக்கல்,  மூளைப்பல ஆற்றல்களை கல்விக்குத் தரப்படுத்தலைக் கொண்டு வந்து சிதைத்தல், என்னும் ஆட்சி முறைமையே வெளிப்பட்டு ஈழத்தமிழர்களை வறுமைக்கும் வெறுமைக்கும் உள்ளாக்கியது.  இந்தக் காலகட்டத்தின் அரசியல் தலைவராக விளங்கிய எஸ். ஜே வி செல்வநாயகம் அவர்கள் 1975இல் பாராளுமன்றத்தில் இன்றைய சிறிலங்கா அரசாங்கம் என்பதில் இருந்து ஈழத்தமிழர்கள் வெளியேறி தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே உருவாக்கிட வேண்டுமென்ற உறுதியான முடிவை உலகுக்கு வெளிப்படுத்தினார்.

1972 முதல் 2009 வரை தேசியத் தலைவராக விளங்கிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், தந்தை செல்வநாயகம் உருவாக்க அழைத்த ஈழத்தமிழர்களுக்கான அரசியல் எதிர்காலத்தை உருவாக்கும் பணியைப் பெறுப்பேற்று, தமிழீழம், தமிழீழ மக்கள், என்னும் தேச இனத்துவ அடையாளப்படுத்தல்களுடன் கூடிய நடைமுறை அரசை, ஒரு அரசுக்குரிய பாதுகாப்பான அமைதியைப் பேணுவதற்கான சீருடை தாங்கிய முப்படையினர், நாட்டை முகாமைத்துவப்படுத்தும் நிர்வாகக் கட்டமைப்புக்கள், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் சட்டநீதிமன்ற அமைப்புக்கள் என்பவற்றுடன் நடத்தி, அதற்கான உலக ஆதரவை வேண்டி நின்றார்.

 

https://www.ilakku.org/world-poverty-alleviation-day/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா சபை ... எல்லாவற்றுக்கும் ஒரு தினம் வைத்திருக்கினம் ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை.....

மனித உரிமை விடயத்தில் இந்த சபை எப்படி அரசியல் செய்கின்றது என்பது ஈழத்தமிழர்கள் இன்று நன்றாகவே அறிந்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.