Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸை நியமித்ததில் சதி உள்ளது - மனோ கணேசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை  நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது என முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 

Mano_ganeshan.jpg

 

திங்கட்கிழமை ( 18 ) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

எங்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் குரல் கொடுப்பேன். வடக்கு மீனவர்கள் பிரச்சனை என்பது பெரும் பிரச்சனை அவர்கள் ஏற்கனவே துன்பத்தை சந்தித்தவர்கள் யுத்தத்தை நாம் விரும்பவில்லை யுத்தத்தை செய்தவர்களிடம் தர்க்க ரீதியிலான கருத்து இருந்தது. வடக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு  உள்ள தடையை அகற்ற வேண்டும்.

இந்திய மீனவர்கள் 30 வருடகாலமாக இலங்கை கடல்வளத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவில் தற்போது இலங்கை வளத்தை பயன்படுத்திய  ஓர் தலைமுறையே உருவாகி விட்டது. இந்தியாவில்கூட  மாநிலம் மாறி வேறு மாநிலத்தில் மீன்பிடிக்க முடியாத நிலையில் இலங்கை எல்லைக்குள் வருவதும்  பிரச்சினைக்குரிய விடயம்.

இதற்கு இலங்கை மீனவர்களிற்கு பாரிய கப்பல்களை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். கடற்றொழில் அமைச்சராக டக்ளசை நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது.

இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ டக்ளஸிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது. இதனை வெறும் மீனவர்கள் பிரச்சனையாக மட்டும் அல்ல தமிழர்களின் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என அரசியல் தலைவர்களை கோர விரும்புகிறேன் என்றார்.

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸை நியமித்ததில் சதி உள்ளது - மனோ கணேசன்  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

இந்திய மீனவர்கள் 30 வருடகாலமாக இலங்கை கடல்வளத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவில் தற்போது இலங்கை வளத்தை பயன்படுத்திய  ஓர் தலைமுறையே உருவாகி விட்டது. இந்தியாவில்கூட  மாநிலம் மாறி வேறு மாநிலத்தில் மீன்பிடிக்க முடியாத நிலையில் இலங்கை எல்லைக்குள் வருவதும்  பிரச்சினைக்குரிய விடயம்.

சரியான கருத்து.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் ஆடாவிட்டாலும் தசை ஆடுமென்பார்களே அது இது தான்!

அப்ப 30 வருசமா களவெடுத்துப் பழகிட்டினம் இனி அந்தத் திருட்டுப் புத்தியை மாத்தேலாது என்று வக்காலத்து வாங்கிறாராகும் மனோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வாலி said:

அப்ப 30 வருசமா களவெடுத்துப் பழகிட்டினம் இனி அந்தத் திருட்டுப் புத்தியை மாத்தேலாது என்று வக்காலத்து வாங்கிறாராகும் மனோ

இந்தியாவில் அவர்கள் பக்கத்து மானிலத்திற்கே போய் மீன் பிடிக்க முடியாமல் இருக்கும் போது 30 வருடங்களாக இலங்கையின் கடல் வளத்தை கொள்ளை அடித்து வந்திருக்கிறார்கள் என்ற ஒப்புதல் தான்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.