Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாழ். வடமராட்சியில் பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் அகழ்வு - சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம.ஏ சுமந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.

IMG-20211020-WA0048-1.jpg

இன்றைய தினம் பருத்தித்துறை மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக  சட்டவிரோதமான மணல் கொள்ளை இந்த பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக நான் ஒரு முறை எனது வாகனத்தில் வரும் போது கடத்தல்காரர்கள் என்னை கண்டதும் தமது வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றதை நான் நேரடியாக கண்டேன்.

அதேபோல் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளார்கள் அதாவது சட்டவிரோத மணல் அகழ்வு தனியார் காணிகளில் இடம்பெற்று வருகின்றது.

IMG-20211020-WA0050-1.jpg

சட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்பில் பொலிசாரிடம் தகவல் வழங்கும் போது அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள்.

ஆனால் அவ்வாறு முறையிடும்போது மணல் கடத்தல்காரர்களிடமிருந்து போலீசாரிடம் முறையிட்டவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது அவ்வாறு தான் தற்போதைய நிலை காணப்படுகின்றது.

எனவே பொலீசாருடன் இணைந்தே இந்த சட்டவிரோத மணல் கொள்ளை ஈடுபடுவது என்பது நிரூபணமாகின்றது எனவே இந்த குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

யாழ். வடமராட்சியில் பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் அகழ்வு - சுமந்திரன் | Virakesari.lk

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.