Jump to content

பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா


Recommended Posts

14 hours ago, கிருபன் said:

பார்த்தேன்.. போடுகிற அளவுக்கு ஒன்றுமில்லை😛

போடுகிற அளவுக்கு ஒன்றுமில்லை என்று எதை கூறியிருப்பார் கிருபன் அவர்கள்🤔😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மறுத்தான் said:

போடுகிற அளவுக்கு ஒன்றுமில்லை என்று எதை கூறியிருப்பார் கிருபன் அவர்கள்🤔😜

அதுதான் போடுற அளவுக்கு ஒன்றுமில்லை என்பதால் அந்தக் கறுமத்தை அவரும் போடாமல் விட்டுட்டார் இவரும் போடாமல் விட்டுட்டார்.......!  😂 

11 hours ago, Justin said:

வாய்ப்பேயில்லை ராஜா..! இது சூரிய கிரகணம் மாதிரி  அரிதாக நடப்பது - கொண்டாடுங்கள்!😂

அதுதானே, நான் கொஞ்சம் பயந்திட்டன் இப்படியே தொடர்ந்து பயணித்து விடுவார்களோ என்று.......இப்பதான் நிம்மதி......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

பார்த்தேன்.. போடுகிற அளவுக்கு ஒன்றுமில்லை😛

எங்கை ஒருக்கால் வீடியோவை போடுங்கோ பாப்பம் 😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மறுத்தான் said:

போடுகிற அளவுக்கு ஒன்றுமில்லை என்று எதை கூறியிருப்பார் கிருபன் அவர்கள்🤔😜

எல்லாரும் இன்ரெலிஜென்ற் ஆயிட்டாங்கள்😁 கிரிப்ரிக்காக எழுதினாலும் பிடிக்கிறாங்கள்😂

8 hours ago, குமாரசாமி said:

எங்கை ஒருக்கால் வீடியோவை போடுங்கோ பாப்பம் 😷

ஏற்கனவே பார்த்திருப்பீங்கள்தானே. பிறகு ஏன்?

17 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

மார்புகச்சையும் மார்பக புற்றுநோயும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை என கூறப்படுகின்றது. எனவே, தகுந்த விழிப்புணர்வு தேவை. பெண்களை சாவடிக்கும் உயிர்கொல்லிகளில் மார்பக புற்று நோய்க்கு முக்கிய பங்கு உண்டு.

கட்டுரையைப் படியுங்க நியாயம்!

On 20/10/2021 at 20:35, கிருபன் said:
பலரும் பிரா அணிவது பெண்களுக்கு நலன் பயக்கக் கூடியது என்று கூறுகின்றனர். அதற்குப் பல மருத்துவக் காரணங்களைக் கூறுகின்றனர். பெண்கள் பிரா அணியாமல் இருந்தால், மார்பகப் புற்றுநோய் வரும் என்கின்றனர். மேலும் பிரா அணியாவிட்டால், கூப்பர் தசைநார்கள் (Cooper Ligaments) பாதிக்கப்படும். மார்பகங்கள் தளர்வுற்று தொய்வடையும் என்கின்றனர். இவற்றில் ஏதேனும் உண்மை உள்ளதா ?
கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 15 ஆண்டுகால ஆய்வு முடிவுகளில், பிரா அணிவதால் எந்த நன்மையும் இல்லை என்று கூறப்படுவதோடு கூடுதலாக, அவை மார்பகங்களை ஆதரிக்கும் தசைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளரும் விளையாட்டு அறிவியல் வல்லுநருமான ஜீன்-டெனிஸ் ரூலியன் பிரான்ஸ் இத்தகவலை பிரெஞ்சு வானொலி நெட்வொர்க்கிடம் நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும், இளம் பெண்கள் பிரா அணிவதை நிறுத்தும்போது அவர்களின் மார்பகங்களின் தன்மை மோசமடையாது என்பதையும் ஆய்வு முடிவுகளில் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கிறார், ரூலியன்.
அதே போல, பிரா என்பது பெண்களின் ஆடையில் ஒரு பகுதியே அன்றி அது மருத்துவ சாதனம் அல்ல என்று “ஜீன் ஹெய்ல்ஸ்” மகளிர் சுகாதார அமைப்பின் மருத்துவர் அமண்டா நியூமன் கூறுகிறார்.
அடுத்ததாக, பிரா அணியாமல் இருப்பதால் மார்பகப் புற்றுநோய் அபாயம் இருப்பதாக சொல்லப்படுவதைப் பற்றி பார்க்கலாம். பிரா அணிவதால் புற்றுநோயை தடுக்க முடியும் என்று எந்த ஆய்வுகளும் இல்லை. இதற்கு எந்தவிதத்திலும் அறிவியலில் இன்றுவரை எந்தச் சான்றுகளும் இல்லை.
பிரா அணிவது அல்லது அணியாமல் இருப்பது மற்றும் மார்பக புற்றுநோயை வளர்ப்பது ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை நிரூபிக்கும் நம்பகமான ஆராய்ச்சி இல்லை. இதனை ஆஸ்திரேலியாவின் புற்றுநோய் கவுன்சில் தனது வலைத்தளத்தில் பதியப்பட்டுள்ளது.
பிரா அணிவது மார்பக தொய்வைக் குறைப்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்றால் அதற்கும் இல்லை என்பதே பதில். மார்பகங்கள் இயற்கையாக இருக்கின்ற விதம் அல்லது அதன் தளர்ச்சி போன்றவை மரபியல், ஹார்மோன்கள் மற்றும் எடையுடன் அதிக அளவில் தொடர்புடையதாக இருப்பதாகவும் மருத்துவர் அமண்டா நியூமன் கூறுகிறார். பிரா அணிந்தால் மார்பகங்களின் வளர்ச்சி குறைந்துவிடும் என்று நிலவும் சில கருத்துக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என்கிறார் மருத்துவர் அமண்டா நியூமன்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கட்டுரையைப் படியுங்க நியாயம்!

 

 

மார்பு கச்சைக்கும் மார்பக புற்று நோய்க்கும் தொடர்பு உள்ளது என்பதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது.

தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.