Jump to content

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கோரிக்கை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கோரிக்கை

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் துரத்தியபோது மூழ்கியது.

இதன்போது, அதிலிருந்து மூன்று மீனவர்களில் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், ஏனையவர் உயிரிழந்தார்.

இந்த நிலையிலேயே, இதுபோன்ற துயர சம்பவங்கள் நீண்டகாலமாக தொடர்ந்து நிகழ்ந்து வருவதால், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://athavannews.com/2021/1245964

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பகுதிக்குள் போகாதேயுங்கோ என்று கூறி, அதைச் செயலில் காட்டினால் பிரச்சனை முடிந்தது..😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலே அனைத்துலகக் கடற்பரப்புத் தொடர்பான விதிமுறைகளை இருபகுதியினரும் கடைப்பிடிப்பதோடு, புரிந்துணர்வின் அடிப்படையிற் செயற்படுவதே இருதரப்புக்கும் நன்மை. போராட்டத்தின் பின்தளமாக இருந்து தார்மீக ஆதரவைத்தந்த தமிழக மக்கள்திரளை அரைவேக்காட்டுத்தனமான அரசியலோடு ஒப்பீடு செய்து முடிவுகளை எட்டுதல் சாத்தியமற்றது. இருபகுதினரும், குறிப்பாக மீனவத் தொழிற்றுறையினர் ஒருசேர மேசையில் இருந்து உரையாடி கடலமைப்புமுதல் பாவிக்கவேண்டிய கருவிகள்வரையான வரையறைகளைப் பகிர்ந்து இருபகுதிக்குமானதொரு பொதுப்பிரகடனத்தை உருவாக்கிப் பின்பற்றுவதில் ஏதாவது தடைகள் இருக்கின்றதா? மொழியாலும் பண்பாட்டாலும் ஒன்றாக இருக்கும் நாம் சிங்கள மற்றும் கிந்திய சதிவலைக்குள் வீழ்ந்துவிடாது கடல் பிரித்தாலும் கரைகளால் இணைந்து பயணிக்கச் சிந்தைகொள்வதே சிறப்பாகும்.  முதல்வர்  ஸ்ராலினவர்கள் வெறும் அறிக்கை வீரராக இல்லாமல் ஆக்கபூர்வமாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம்கொடுத்து செயலாக்க வேண்டாம். கடல் தொடர்பான பிணக்குத் தனியே சட்டங்களால் மட்டும் தீர்த்துவிட முடியாதென்பதற்கான அண்மைய எடுத்துக்காட்டாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய மீன்பிடித்தல் விவகாரம் உள்ளதையும் நாம் காணலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

தானாடா விட்டாலும் தன் தசையாடும் என்பார்கள். எங்களைப் பொறுத்த வரையில் ஒன்றுமே ஆடவில்லை! ஏன்? வெறும் விரல்கள் கூட ஆடவில்லை!  எந்த் விதமான உடன்பாடும் அவசியமில்லை என்பதே எனது கருத்து! அத்துடன் கஞ்சா அபின் போன்றவையும் மிகவும் அதிகரித்துக் கொண்டு போகின்றது! இருப்பையாவது தக்க வைத்துக் கொள்வோமே.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

தானாடா விட்டாலும் தன் தசையாடும் என்பார்கள். எங்களைப் பொறுத்த வரையில் ஒன்றுமே ஆடவில்லை! ஏன்? வெறும் விரல்கள் கூட ஆடவில்லை!  எந்த் விதமான உடன்பாடும் அவசியமில்லை என்பதே எனது கருத்து! அத்துடன் கஞ்சா அபின் போன்றவையும் மிகவும் அதிகரித்துக் கொண்டு போகின்றது! இருப்பையாவது தக்க வைத்துக் கொள்வோமே.. 

உண்மைதான். எந்த ஒப்பந்தங்களுமின்றி தமிழீழத்திற்கான அத்தியாவசியமான பொருட்கள் முதல் வாகனங்கள்வரை கொண்டுவரப்பட்ட காலமொன்றைக் கொண்டிருந்தபோது, நடைமுறை அரசும் நலிவுறா நேர்மையான பார்வையுமுள்ள தமிழீழத் தலைமையின் வழிகாட்டலில் செம்மை இருந்தது. இன்று அப்படியா? தமிழகத் தமிழரையும் தமிழீழத் தமிழரையும் பல்வேறுகூறுகளாக்கிச் சிதைத்ப்பதற்கான வழிகளில் ஒன்றாக இந்த மீனவர் விடயம் சிறிலங்கா – கிந்திய அரசுகளால் கொம்புசீவி விடப்படுகிறது. அதேவேளை  அபின், கஞ்சா கடத்தலில் ஈடுபடுவது பெருமுதலைகள். அது இருபகுதியிலும் உள்ளார்கள். அரசுகளின் அனுசரிப்பும் பெரும் பணக்கைமாறல்களுடன் மில்லியன்களில் நடைபெறும் „டீல்கள்' இவை. அன்றாடம்காய்ச்சிகளாய் கடலிலே காயும் மீனவர்களின் வாழ்வு மட்டுமே கருகிப்போகிறது. அவர்களுக்கான (தீர்வு) வாழ்வுதான் என்ன என்பது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும்.  
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.