Jump to content

லண்டன் லூசியம் பகுதியில் பிரபல தமிழ் வர்த்தகரின் வீட்டில் திருட்டு! வெளியானது வீடியோ காட்சிகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் லூசியம் பகுதியில் வசித்து வரும் பிரபல தமிழ் வர்த்தகரின் காரொன்று அண்மையில் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர் தனது காரினை விற்பனை செய்வதற்காக இணையத்தளம் ஊடாக விளம்பரம் செய்துள்ளார்.

இந்த விளம்பரத்தை பார்வையிட்ட மூவர் காரினை வாங்குவதாக கூறி குறித்த வர்த்தகரை நாடியுள்ளனர்.

குறித்த காரினை பார்வையிடுவதற்காக வர்த்தகரின் வீட்டுக்கு வந்த மூன்று பேர் காரினை பார்வையிட்டப் பின்னர் அதன் மேலதிக இணைப்புச் சாவியை எவரும் காணாத சமயம் லாவகமாக எடுத்துள்ளனர்.

அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த பிறிதொரு சாவியை வைத்தும் சென்றுள்ள போதும் இதனை யாரும் அறிந்திருக்கவும் இல்லை.

அதன் பின்னர் இரவு நேரத்தில் மீண்டும் அங்கு வருகை தந்த சந்தேகநபர்கள் மேலதிக இணைப்பு சாவியை வைத்து காரை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவமானது சிசிடிவி கமராவில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் குறித்த காணொளியும் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் வாகன விற்பனைக்காக இணையத்தளங்களில் விளம்பரங்கள் செய்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் திருடப்படுகின்ற வாகனங்களுக்கு பதிலாக காப்புறுதி நிறுவனங்களால் புதிய வாகனங்கள் வழங்கப்படுகின்றதால் வாகனங்களுக்கான அடுத்த வருடத்திற்கான காப்புறுதி தொகை அதிகரிக்கிறது.

இதனால் வாகனங்களை பறிகொடுப்பவர்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

அத்துடன் இவ்வாறான வாகனங்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை போட்ட பின்னர் அதனை பார்த்து கொள்வனவு செய்வதற்காக வருபவர்களில் ஒரு சிலர் வாகனத்தின் இரண்டாவது இணைப்பு சாவியையும் (Spare Key), காரினுடைய புத்தகத்தையும் மிகவும் லாவகமாக திருடிச் செல்கின்றனர். இந்த இடத்தில் தான் வாகனத்தின் உரிமையாளர்கள் இராண்டாவது இணைப்பு சாவி மற்றும் வாகன புத்தகம் ஆகிய இரு விடயங்களிலும் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்த சம்பவம் பல்வேறு விடயங்களை எமக்கு பல்வேறு விடயங்களை எமக்கு பாடமாக கற்றுத் தந்திருக்கிறது. இவ்வாறு விற்பனைக்கான விளம்பரங்கள் செய்பவர்கள் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

குறிப்பாக புலம்பெயர்ந்து பிற தேசங்களில் வாழும் மக்கள் அதீத கஸ்டங்களுக்கு மத்தியில் உழைத்து தங்களுக்கான பொருட்களை ஈட்டும்போது அவை தொடர்பான அதீத கவனம் தேவை என்பது வலியுறுத்தப்படுகின்றது.

எப்பொழுதும் புலம்பெயர் நாடுகளிலன் காப்புறுதிகள் வைத்திருக்கிறோம் என்பதற்காக திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட விடயங்களை கவனயீனமாக எடுக்காமலம் இவ்வாறான விடயங்களில் அவதானமாக இருத்தல் கட்டாயமாகும். 

https://tamilwin.com/article/car-theft-cctv-footage-1634728837

Link to comment
Share on other sites

மேலதிக சாவியை இவர்கள் ஏன் காருக்குள் வைத்து இருந்தனர்? அல்லது ஏன் இவர்களுக்கு அதை காட்டினர்?

ஆனாலும் லண்டன் கார் திருடர்கள் கொஞ்சம் பழைய முறைகளை பயன்படுத்துகின்றனர். இங்கு கனடாவில் வாகனக் களவு உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடக்கின்றது. வீட்டுக்குள் இருக்கும் வாகனங்களின் key fobs இல் இருந்து வரும் சிக்னல்களை அவர்கள் கொண்டுவரும் Receiver களின் மூல பெற்று அதன் மூலம் வாகன கதவுகளை திறந்தும் ஸ்ரார்ட் பண்ணியும் வாகனத்தை திருடுகின்றனர். அல்லது வாகனத்தில் தெளிவாக தெரியும் VIN number இனை பெற்று, தாம் கொண்டு வந்திருக்கும் மென்பொருள் மூலம் அதை குளோனிங் (Cloning) செய்து வாகனத்தை இயக்கி திருடுகின்றனர்.

வாகனம் களவாகி சில மணி நேரங்களில் துண்டு துண்டுகளாக பிரிக்கப்பட்டு ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்ப தயார் செய்யப்படுகின்றது இங்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

இந்த 2 மாதத்தில் மட்டும் எனது 3 தமிழ் நண்பர்களின் புத்தம் புதிய லெக்சஸ் RX350  வாகனங்கள், நீங்கள் மேலே சொன்னது போலவே அபேஸ் செய்யப்பட்டன.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரெக்சிட்டுக்கு பிறகும் லண்டன்லை கார் களவு போகுது எண்டால்........? 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பிரெக்சிட்டுக்கு பிறகும் லண்டன்லை கார் களவு போகுது எண்டால்........? 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

வீடியோவில் இருப்பவர்கள் கிழக்கு ஐரோப்பியர்கள் பிரிவுக்கு முன் ஐந்து வருடங்கள் இங்கிலாந்து வந்தவர்கள் இங்கேயே தங்கிவிட்டார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பிரெக்சிட்டுக்கு பிறகும் லண்டன்லை கார் களவு போகுது எண்டால்........? 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

அப்போ லண்டனகரார் களவு எடுப்பதில்லையா? மேலும் யூரோவில் இணைய முதல் லண்டனில் களவு இடம்பெறவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

அப்போ லண்டனகரார் களவு எடுப்பதில்லையா? மேலும் யூரோவில் இணைய முதல் லண்டனில் களவு இடம்பெறவில்லையா?

இஞ்சை பாருங்கோ கந்தையர்! 
லண்டன்காரர் சேரக்கு முதலும் களவு இருந்தது
லண்டன்காரர் சேர்ந்த பிறகும் களவு இருந்தது
லண்டன்காரர் பிரிஞ்ச பிறகும் களவு இருக்குது
ஆனால் லண்டன்காரர் களவெடுக்கிறேல்லை....இதுதான் மெயின் பொயின்ற் 😎

ஏதாவது விளங்கிச்சா😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ கந்தையர்! 
லண்டன்காரர் சேரக்கு முதலும் களவு இருந்தது
லண்டன்காரர் சேர்ந்த பிறகும் களவு இருந்தது
லண்டன்காரர் பிரிஞ்ச பிறகும் களவு இருக்குது
ஆனால் லண்டன்காரர் களவெடுக்கிறேல்லை....இதுதான் மெயின் பொயின்ற் 😎

ஏதாவது விளங்கிச்சா😉

வெள்ளையா இருக்கிறவன் பொய்சொல்லமாட்டான் சாமியர்.. அதுமாதிரிதான் பிரிட்டிஸ்காரர் களவெடுக்கமாட்டான்.. களவு எல்லாம் உந்த யூரோப்பிய ஒன்றியத்தால வந்தது..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ கந்தையர்! 
லண்டன்காரர் சேரக்கு முதலும் களவு இருந்தது
லண்டன்காரர் சேர்ந்த பிறகும் களவு இருந்தது
லண்டன்காரர் பிரிஞ்ச பிறகும் களவு இருக்குது
ஆனால் லண்டன்காரர் களவெடுக்கிறேல்லை....இதுதான் மெயின் பொயின்ற் 😎

ஏதாவது விளங்கிச்சா😉

வெள்ளைக்காரனுக்கு... வெள்ளை அடிக்கும் வேலை நடக்கும் போது...
ப்ளீஸ்.... நீங்கள், குழப்பாதீர்கள்.  🤣

6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெள்ளையா இருக்கிறவன் பொய்சொல்லமாட்டான் சாமியர்.. அதுமாதிரிதான் பிரிட்டிஸ்காரர் களவெடுக்கமாட்டான்.. களவு எல்லாம் உந்த யூரோப்பிய ஒன்றியத்தால வந்தது..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலுமெண்டா என்ர காரை எடுக்கட்டும் பார்ப்பம்.திறப்பை கதவிலேயே விடுறன் ஒரு பய தொடுறானா பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

ஏலுமெண்டா என்ர காரை எடுக்கட்டும் பார்ப்பம்.திறப்பை கதவிலேயே விடுறன் ஒரு பய தொடுறானா பார்ப்பம்.

இப்ப என்ன......லண்டன்லை கள்ளர் இல்லை எண்டு சொல்ல வாறியள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் ரெஸ்லா.. பெராரி.. லம்பகினியை கூட ரோட்டில விட்டிட்டு.. கம்முன்னு போறான். இது ஒரு டப்பாக்காருக்கு...??! பெரிய பில்டப்பு.

நம்மாக்களே லண்டனில திருடி.. பாகம் பாகமாக்கி.. விக்கிறாங்கள்.. இதில... கள்ளனை வெளில வேற தேடுறாய்ங்களாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இப்ப என்ன......லண்டன்லை கள்ளர் இல்லை எண்டு சொல்ல வாறியள் 🤣

என்ர பழைய காரை யாலும் தொடமாட்டார்கள்.பளபளப்பாய் கார் வைச்சு மினுக்கினால் கைவைக்காமல் விடுவாங்களா. என்ர காரைத்தூக்கினால் காசைக் கட்டித்தான் நெரிக்க வேண்டும்'.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2021 at 19:19, குமாரசாமி said:

பிரெக்சிட்டுக்கு பிறகும் லண்டன்லை கார் களவு போகுது எண்டால்........? 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

சொன்னால் நம்பமாட்டியள் உந்த கிழக்கு ஐரோப்பா காரரை 2000 க்கு பிறகுதான் உள்ள விட்டது - அதுக்கு முதல் £50 பவுண் கட்டு கட்டா ரோட்டில கிடந்தாலும் சனம் எடுத்து கொண்டு போய் பொலிசில கொடுக்கும்🤣.

இப்பவும் எங்கட சிறிலங்கன் சனம்? மேலே கையால தாங்கள் இன்னொரு £50 தாளை சேர்த்துதான் பொலிசில கொடுப்பது வழமை🤣.

On 21/10/2021 at 22:39, Kandiah57 said:

அப்போ லண்டனகரார் களவு எடுப்பதில்லையா? மேலும் யூரோவில் இணைய முதல் லண்டனில் களவு இடம்பெறவில்லையா?

On 21/10/2021 at 22:47, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ கந்தையர்! 
லண்டன்காரர் சேரக்கு முதலும் களவு இருந்தது
லண்டன்காரர் சேர்ந்த பிறகும் களவு இருந்தது
லண்டன்காரர் பிரிஞ்ச பிறகும் களவு இருக்குது
ஆனால் லண்டன்காரர் களவெடுக்கிறேல்லை....இதுதான் மெயின் பொயின்ற் 😎

ஏதாவது விளங்கிச்சா😉

16 minutes ago, புலவர் said:

என்ர பழைய காரை யாலும் தொடமாட்டார்கள்.பளபளப்பாய் கார் வைச்சு மினுக்கினால் கைவைக்காமல் விடுவாங்களா. என்ர காரைத்தூக்கினால் காசைக் கட்டித்தான் நெரிக்க வேண்டும்'.

பழசெண்டாலும் கட்டலிக் கொன்வேட்டர் இருந்தா கழட்டி போடுவாங்கள். 

எனக்கு ஒரு உண்மையை யாரும் விளங்க படுத்த முடியுமே ?

பிரபலம் என்றால் எல்லாருக்கும் தெரிந்த என்று அர்த்தம்? உந்த வர்த்தகர் ஏப்படி “பிரபலம்” என்ற வரையறைக்குள் வாறார்? 

ரிச்சர் பிரான்சன், அலன் சுகர் அட்லீஸ்ட் லைக்கா ஓனர் பிரபலம் எண்டால் ஓகே, புண்ணாக்கு யாவாரி எல்லாம் பிரபலம் எண்டால் என்ன கதை🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டலிக் கொன்வேட்டர் கழட்டிறதுக்கு 3 நிமிடம் போதுமாம்.அது மின்சாரத்தில் ஓடும் அல்லது கைபிறிட் கார்களுக்களுக்குத்தான் அதைக்கழட்டுவார்கள். நம்ம கார் நோ சான்ஸ்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சொன்னால் நம்பமாட்டியள் உந்த கிழக்கு ஐரோப்பா காரரை 2000 க்கு பிறகுதான் உள்ள விட்டது - அதுக்கு முதல் £50 பவுண் கட்டு கட்டா ரோட்டில கிடந்தாலும் சனம் எடுத்து கொண்டு போய் பொலிசில கொடுக்கும்🤣.

இப்பவும் எங்கட சிறிலங்கன் சனம்? மேலே கையால தாங்கள் இன்னொரு £50 தாளை சேர்த்துதான் பொலிசில கொடுப்பது வழமை🤣.

மட்டை போட்டு இழுக்கிற பணம் எல்லாம் களவுக்குள் அடங்காதா?அது கை ரெக்னோலொஜிக்குள் அடங்குமாம்.இந்தியர்களும் தமிழர்களும் கள்ள மட்டை பேட்டு விட்டு(எல்லோரும் அல்ல)ஐரோப்பியர்களை கள்ளர்என்பது விந்தை. அவர்களில் பலர் கடின உழைப்பாளிகள்.ஒரு சிலர் களவெடுப்பதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் கள்ளர் என்பது ஏற்புடையதாகுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புலவர் said:

👆🏼இதை சொன்னால் - கோஷான் தமிழர்களை இளக்காரமாக எழுதுகிறார் என்று பிராது வாசிக்கிறாங்க எசமான்🤣.

21 minutes ago, புலவர் said:

கட்டலிக் கொன்வேட்டர் கழட்டிறதுக்கு 3 நிமிடம் போதுமாம்.அது மின்சாரத்தில் ஓடும் அல்லது கைபிறிட் கார்களுக்களுக்குத்தான் அதைக்கழட்டுவார்கள். நம்ம கார் நோ சான்ஸ்.
 
வடிவா தெரியேல்லா ஆனால் 95 க்கு பிறகு வந்த அநேக காரில் இருக்கு எண்டு நினைகிறன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

👆🏼இதை சொன்னால் - கோஷான் தமிழர்களை இளக்காரமாக எழுதுகிறார் என்று பிராது வாசிக்கிறாங்க எசமான்🤣.

ஆம் மிக உண்மை. தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்துவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பழசெண்டாலும் கட்டலிக் கொன்வேட்டர் இருந்தா கழட்டி போடுவாங்கள். 

1 hour ago, புலவர் said:

கட்டலிக் கொன்வேட்டர் கழட்டிறதுக்கு 3 நிமிடம் போதுமாம்.அது மின்சாரத்தில் ஓடும் அல்லது கைபிறிட் கார்களுக்களுக்குத்தான் அதைக்கழட்டுவார்கள். நம்ம கார் நோ சான்ஸ்.
 
இங்கும் பரவலாக 2010 க்கு உள்பட்ட கொண்டா வாகனத்தில் அறுத்தெடுக்கிறார்கள்.

அதற்குள் கூடுதலான பிளாட்டினம் இருப்பதாக சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

கட்டலிக் கொன்வேட்டர் கழட்டிறதுக்கு 3 நிமிடம் போதுமாம்.அது மின்சாரத்தில் ஓடும் அல்லது கைபிறிட் கார்களுக்களுக்குத்தான் அதைக்கழட்டுவார்கள். நம்ம கார் நோ சான்ஸ்.
 
எனது இரண்டு ஹைபிரிட் காருக்கும் சென்ஸரோடு சேர்த்து வெட்டினவங்கள். முதலாவது ஜோன் லூயிஸ் கார்ப் பார்க்கில். கிறிஸ்மஸ் பிரசண்ட் வாங்கப்போன 15 நிமிஷத்தில நடந்தது.

அடுத்தது இன்னும் மோசமானது.. கிறிஸ்மஸுக்கு முதல் ஒரு வெள்ளி பின்னேரம் வீட்டு டிரைவேயில் காரைப் பார்க் பண்ணிவிட்டு உள்ளே வந்து சில நிமிடங்களில் வெளியே வேஸ்ற்பின்னை யாரோ மூவ் பண்ணுவது மாதிரி இருக்க, வெளியே போய்ப் பார்த்தால் ஒருத்தரையும் காணவில்லை. காரையெல்லாம் சுத்திப் பார்த்துவிட்டு ரிலாக்ஸாக சனிக்கிழமை வெளியே போகாமல் இருந்துவிட்டு ஞாயிறு காரை ஸ்ரார்ட் பண்ணத்தான் கற்றலிக் கொன்வேட்டரை வெட்டினது தெரியும்.🤬

இரண்டுக்கும் சேர்த்து 1200 பவுண்ட்ஸ் தண்டம். இவைகளுக்கு சில வருடங்களுக்கு முதல் வீட்டில் பின்பக்கமாக ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகைகள்,  வேலை லாப்டப், பல ஃபோன்கள், எனது Gucci சன்கிளாஸ்,  Oxford Street Selfridges இல் வாங்கிய தொப்பி (அது ஒன்று மட்டும்தான் அங்கு வாங்கியது!) என்று கொள்ளைபோனது. பக்கத்து வீட்டுக்காரி கிழக்கு ஐரோப்பியன் வெளியேறியதைப் பார்த்தும் இருந்தார்! இவையும் நான் Brexit க்கு ஆதரவாக வாக்களிக்கக் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சொன்னால் நம்பமாட்டியள் உந்த கிழக்கு ஐரோப்பா காரரை 2000 க்கு பிறகுதான் உள்ள விட்டது - அதுக்கு முதல் £50 பவுண் கட்டு கட்டா ரோட்டில கிடந்தாலும் சனம் எடுத்து கொண்டு போய் பொலிசில கொடுக்கும்🤣.

இப்பவும் எங்கட சிறிலங்கன் சனம்? மேலே கையால தாங்கள் இன்னொரு £50 தாளை சேர்த்துதான் பொலிசில கொடுப்பது வழமை🤣.

Latest No Comment GIFs | Gfycat

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில காலங்கள் முன்னர்வரை....ஏன் இன்றும் கூட சில இடங்களில் 

கார் ஓடியோ செட் திருட்டு , வங்கி தானியங்கி இயந்திரங்களில்  திருட்டு, எரிபொருள் நிலையங்களில் திருட்டு, சீட்டு காசு திருட்டு , கடன் அட்டை திருட்டு, வீடுகளில் நகை திருட்டு, கள்ள அட்டையில் உயர் ரக எலெக்ரோனிக் சாதனங்கள் கொள்வனவு திருட்டு,

கள்ள போன் காட் திருட்டு .நிதி நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்களில் திருட்டு, போலி விபத்து இழப்பீடுகள் கோரல் திருட்டு..... வேலை பார்க்கும் பண்ணை, உணவங்களின் களஞ்சியஙளில் திருட்டு..சிகரெட், உயர் ரக மது போத்தல்கள் திருட்டு.. ஆரம்ப காலத்தில் பாரீஸ் போன்ற நாடுகளில் போதை பொருள் விற்பனையிலும் கொடிகட்டி பறந்தவர்கல் தமிழர்கள் என்று ஒரு கதை உண்டு.

இப்படி கனடா மற்றும் ஐரோப்பா உட்பட்ட புலம் பெயர் நாடுகளில் வகை வகையாக திருட்டில் உலக இனங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர்கள் ஈழ தமிழர்கள் என்பதை பெருமையோடு நினைத்து பார்க்க வேண்டிய தருணமிது.

நாம் எமது தற்பெருமை பேசாத ஒரு இனம் என்பதால் எம் சாதனைகள் கடலுக்குள் அடிச்ச ஒண்ணுக்கு போல் ஊருக்கு தெரியாமல் மறைஞ்சு போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

எனது இரண்டு ஹைபிரிட் காருக்கும் சென்ஸரோடு சேர்த்து வெட்டினவங்கள். முதலாவது ஜோன் லூயிஸ் கார்ப் பார்க்கில். கிறிஸ்மஸ் பிரசண்ட் வாங்கப்போன 15 நிமிஷத்தில நடந்தது.

அடுத்தது இன்னும் மோசமானது.. கிறிஸ்மஸுக்கு முதல் ஒரு வெள்ளி பின்னேரம் வீட்டு டிரைவேயில் காரைப் பார்க் பண்ணிவிட்டு உள்ளே வந்து சில நிமிடங்களில் வெளியே வேஸ்ற்பின்னை யாரோ மூவ் பண்ணுவது மாதிரி இருக்க, வெளியே போய்ப் பார்த்தால் ஒருத்தரையும் காணவில்லை. காரையெல்லாம் சுத்திப் பார்த்துவிட்டு ரிலாக்ஸாக சனிக்கிழமை வெளியே போகாமல் இருந்துவிட்டு ஞாயிறு காரை ஸ்ரார்ட் பண்ணத்தான் கற்றலிக் கொன்வேட்டரை வெட்டினது தெரியும்.🤬

இரண்டுக்கும் சேர்த்து 1200 பவுண்ட்ஸ் தண்டம். இவைகளுக்கு சில வருடங்களுக்கு முதல் வீட்டில் பின்பக்கமாக ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகைகள்,  வேலை லாப்டப், பல ஃபோன்கள், எனது Gucci சன்கிளாஸ்,  Oxford Street Selfridges இல் வாங்கிய தொப்பி (அது ஒன்று மட்டும்தான் அங்கு வாங்கியது!) என்று கொள்ளைபோனது. பக்கத்து வீட்டுக்காரி கிழக்கு ஐரோப்பியன் வெளியேறியதைப் பார்த்தும் இருந்தார்! இவையும் நான் Brexit க்கு ஆதரவாக வாக்களிக்கக் காரணம்.

அடபாவமே. இப்படி பறிகொடுத்தா கடுப்பு வரத்தான் செய்யும் ஜி, ஆனால் அதுக்காக ஒரு நாட்டவரையே குற்றம் சொல்வது, அதனடிப்படையில் வாக்களிப்பது யூதருக்கு ஹிட்லர், எங்களுக்கு இனவாதிகள் செய்த மாரி வேலைதானே? Racial stereotyping.

நல்ல வேளையாக நான் ஹைபிரிட் இதுவரை வாங்கவில்லை.

எனக்கு மைக்கள் சூமாக்கர் எண்ட நினைப்பு 🤣. அதனால் எப்பவும் பதிவான கார்தான், அதனாலோ என்னமோ இன்னும் கைவைக்கவில்லை.

கூச்சி சன்கிளாசில நீங்கள் அன்பே வா எம் ஜி ஆர் போல இருந்திருப்பியள் என்ன🤣.

Link to comment
Share on other sites

நல்ல காலம்  எமக்கு இப்படியான அனுபவங்கள் இல்லை. நண்பர்கள் மட்டத்திலும் இப்படியெல்லாம் கேள்விப்படவில்லை. அதற்காக அறவே இல்லை என்று கூறமுடியாது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.