Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இலங்கை அரசு தமிழ்நாடு மீனவர்களையும், இலங்கை தமிழ் மீனவர்களையும் மோதவிடும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது. கவிஞர் காசி ஆனந்தன் சாடல்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு தமிழ்நாடு மீனவர்களையும், இலங்கை தமிழ் மீனவர்களையும் மோதவிடும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது. கவிஞர் காசி ஆனந்தன் சாடல்! .

இந்திய அரசுக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையில் உள்ள நட்புறவைச் சிதைத்தழிக்கும் நோக்கோடு தமிழ்நாடு மீனவர்களையும், இலங்கை தமிழ் மீனவர்களையும் மோதவிடும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது சிறிலங்கா அரசு என ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்தார்.

மீனுக்கு அல்ல இலங்கையில் வாழும் மீனவர்களுக்குத் தூண்டில் போடப்படுகிறது. ஏன் அவர்கள் தூண்டில் போடுகிறார்கள் என்பதை மறந்து சிங்கள சிறிலங்கா அரசுக்குத் துணை போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,received_433433928123304-214x300.jpeg?6b

received_268816515141156-213x300.jpeg?6b

 

https://www.meenagam.com/இலங்கை-அரசு-தமிழ்நாடு-மீ/

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு கவிஞரே!

ஒரு சூழ்ச்சியும் இல்லை!

 • Like 6
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, புங்கையூரன் said:

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு கவிஞரே!

ஒரு சூழ்ச்சியும் இல்லை!

 

மனுசரை கொலை செய்யலாம்  ஆனால் மாடுகளை அறுக்க கூடாது

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

மனுசரை கொலை செய்யலாம்  ஆனால் மாடுகளை அறுக்க கூடாது

புத்தனுக்கு கெளதம புத்தரைத் தெரியும் என்பது எனக்குத் தெரியும், ஆனால் சிங்கள புத்த பிக்குகளைத் தெரியாதென்பது எனக்கும் தெரியாது. 😲 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு கவிஞரே!

ஒரு சூழ்ச்சியும் இல்லை!

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு அதை செய்யாதீர்கள் என்று தமிழக மீனவரிடம் வேண்டுகோள் விட கண்டிக்க முடியாத ஒரு கவிஞர் 🤦‍♂️

Link to comment
Share on other sites

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு அதை செய்யாதீர்கள் என்று தமிழக மீனவரிடம் வேண்டுகோள் விட கண்டிக்க முடியாத ஒரு கவிஞர் 🤦‍♂️

பிறகு சாப்பாட்டுக்கு சிங்கி அடிக்க வேண்டி வருமே?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு அதை செய்யாதீர்கள் என்று தமிழக மீனவரிடம் வேண்டுகோள் விட கண்டிக்க முடியாத ஒரு கவிஞர் 🤦‍♂️

அடுத்தவன் வளவா....?வரலாறு அப்படிச் சொல்லவில்லையே....?? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு அதை செய்யாதீர்கள் என்று தமிழக மீனவரிடம் வேண்டுகோள் விட கண்டிக்க முடியாத ஒரு கவிஞர் 🤦‍♂️

யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே - கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

காசி ஆனந்தன் அவர்கள் தானாகவே இலங்கை திரும்ப முடிவெடுத்தாலும் சென்னை பரங்கிமலயிலுள்ள தமிழக காவல்துறையின் வெளிநாட்டுப்பிரிவில் சட்டவிரோதக் குடியேறி எனும் பட்டப்பெயருடன் லோக்கல் போலீஸ் ஸ்ரேசன் துண்டையும் காவிக்கொண்டு கால்கடுக்க நிற்கவேண்டும் தவிர சென்னை சாஸ்திரி பவனிலும் காயவேண்டும் மத்திய புலனாய்வுத்துறையிடம் நோ ஒப்ஜெக்சன் சான்றிதழ் வாங்குவதற்கு அவன் சொல்லுவான் நீ வீட்டுக்குப் போ அங்க நான் வந்து விசாரிக்கிறன் எனச்சொல்லிப்போட்டு மாதக்கணக்கில் வரமாட்டான் ஆனால் கியூ பிராஞ்ச் வரும் விசாரிக்கும்.

பில்ரர் வில்ஸ் சிகரட்டும் கமலா ஆரஞ்சும் வாங்க்கி கொடுக்கவேணும் சிலவேளை பர்மா பயாரில் விற்கும் வெளிநாட்டுச்சரக்கும் கேட்பாங்கள் அதையும் அழவேண்டும்.

அப்ப காசி அண்ணர் சொல்லுவார் எல்லாம் சட்டப்படிதான் நடக்குது என ஆனால் கோமணத்துண்டு போல ஒரு கடல் அதில சிங்களவன் மறிச்சுக்கட்டினது போக எஞ்சியதில் மீன்பிடிக்க வேணும் அதுக்குள்ள சீனாக்காரன் அட்டை வளர்க்கிறான். வயித்தில அடிச்சால் பறுவாயில்லை கடலையே இரட்டை மடிப்பு வலைபோட்டுப் பவளப்பாறைகளை அழிக்கிறான் தவிர எமது மீனவர்களது வலைகளை அழிக்கிறான் அடியும் போடுறான் 

இவர் மறுகன்னத்தைக் காட்டச்சொல்லுகிறார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

இவர் மறுகன்னத்தைக் காட்டச்சொல்லுகிறார்.

மறுகன்னம் வேறு எதுக்கு இருக்கு - உச்சா வாங்க என்று நினைத்தீர்களா? தருமஅடி கிடைக்குமே? 😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே - கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது.

சிலருக்கு சௌக்கியமடான இடத்தில் தாங்கள் இருப்பதால் களவு, கொள்ளைகளினால் பாதிக்கபடுபவர்களின் வேதனைகள் விளங்குவது இல்லை. அவர்களது கனவு உலகம்.

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கடமையைச் செய். பலனை எதிர்பாராதே.  அப்பிடீன்னு நா சொல்லலீங்க. கிருஸ்ண பரமாத்மா சொன்னாருன்னு சொல்றாங்க.  இது புரீதா...?
  • சைக்கிள் அனுபவங்கள் பற்றி சொல்லப் போனால் சொல்லி மாளாது, நேரம் காலமின்றி நண்பர்களாக சேர்ந்து  கீரிமலைக்கு குளிக்கப் போவது, அவர்களின் முக்கியமான வேலை கூவிலுக்கு போய் கள்ளுக் குடிப்பது, நான் கருப்பணி மட்டும் குடிப்பேன்.....!  😁 நல்ல நினைவுகள் நன்றி புத்ஸ்.....!  
  • Dr Nadarajah Muhunthan and his family faced deportation to Sri Lanka where he experienced torture   Nadarajah and Sharmila Muhunthan with their three children. Photograph: Aneta Pruszyńska/The Guardian   Diane Taylor Tue 30 Nov 2021 14.48 GMT             The Home Office has U-turned on plans to deport a leading scientist carrying out groundbreaking research into affordable forms of solar energy and allowed him and his family to remain in the UK. Initially, the Home Office rejected the asylum claim lodged by Dr Nadarajah Muhunthan, 47, who has been living in the UK since 2018 with his wife, Sharmila, 42, and their three children, aged 13, nine and five.   Muhunthan, who is working on thin-film photovoltaic devices used to generate solar energy, was given a prestigious Commonwealth Rutherford fellowship. The award allowed him to come to the UK for two years to research and develop the technology. He was based at the University of Bristol. His wife got a job caring for elderly people in a nursing home. The couple’s eldest daughter, Gihaniya, has received outstanding school reports in the UK with a 100% attendance rate and been particularly praised for her achievements in science. She hopes to study to be a doctor when she is older. The family are Tamils, a group that has experienced persecution in Sri Lanka. However, just weeks after the Guardian highlighted the case, the Home Office changed its mind and has now granted Muhunthan and his family refugee status. Muhunthan thanked the Home Office for their decision. “The Home Office has saved my life and my family’s lives. Now I will be able to continue my research without fear,” he said. After reading the previous Guardian article about the case, Prof David J Firmin, head of the electro-chemistry and solar team at the University of Bristol where Muhunthan was conducting research into ways to make solar energy panels more effective and affordable, wrote to the Home Office at the end of October expressing his “deepest concern”. He said Muhunthan’s work was making a significant contribution to efforts to decarbonise the energy generation sector. In November 2019, Muhunthan returned to his home country for a short visit to see his sick mother. While he was there, he was arrested and persecuted by the Sri Lankan government. He managed to escape and returned to the UK, where he claimed asylum on the basis of what he had experienced on his visit to Sri Lanka. After his scholarship expired in February 2020, neither he nor his wife were permitted to continue working. The family’s lawyer, Naga Kandiah of MTC solicitors, welcomed the Home Office’s change of heart. He said:“This is an important victory which recognises there is systematic torture of Tamils going on in Sri Lanka. This scientist and his family will all be assets to the UK.” https://www.theguardian.com/uk-news/2021/nov/30/home-office-u-turn-on-sri-lankan-scientists-asylum-claim முக்கியமான வெற்றிதான் சில மாற்றம்களை ஏற்படுத்தும் என்று நம்பலாம் .
  • முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளது என்கின்றது இராணுவம் அண்மையில் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராணுவத் தலைமையகம், ஊடகவியலாளர் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும் கூறியுள்ளது.இலங்கை இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ வீரர்களுடன் பேசியவாறு பின்னோக்கிச் சென்றவேளை, ஊடகவியலாளர் தனது மோட்டார் சைக்கிளின் மீது மோதி, கம்பி வேலி பொருத்தப்பட்டிருந்த இடத்தில் விழுந்தார் என இராணுவம் கூறியுள்ளது.இதனை அடுத்து அங்குவந்தவர்களினால் வீதியோரத்திலுள்ள பெயர் பலகையை படமெடுக்கும் போது இராணுவ வீரர்களால் அவர் மிருகத்தனமாக தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டார் எனக் கூறும் அளவுக்கு வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டன என்றும் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. பல்வேறு சமூக ஊடக தளங்கள் மற்றும் நாட்டின் சில அச்சு ஊடகங்கள் என்பன இந்த சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத, உறுதிப்படுத்தப்படாத மிகைப்படுத்தப்பட்ட மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டன.மேலும் முட்கம்பியால் சுற்றப்பட்ட பனைக் குச்சியால் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் எனவே சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் விடுக்கப்பட்ட அழைப்பு தவறானது என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பாதுகாப்புப் படையினர், கடந்த இரண்டு வருடங்களில் மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஆரோக்கியமான நல்லிணக்கம் மற்றும் நல்ல நல்லெண்ண உணர்வுகளின் சைகைகளின் காரணமாக, சந்தர்ப்பவாத மற்றும் இனவாத எண்ணம் கொண்ட சக்திகளால் ஏமாற்றப்படாமல் ஒரு நேர்மறையான முறையில் ஈர்க்கக்கூடிய வகையில் வளர்ந்துள்ளனர். வடக்கிலும் சரி, வேறு இடங்களிலும் சரி, தாம் சேவை செய்யும் அனைத்து இலங்கையர்களின் நலன்களுக்கான உண்மையான மற்றும் முழுமையான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தும் அதே வேளையில், பகுத்தறிவு மற்றும் அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும், இதுபோன்ற திரிபுபடுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் தீங்கிழைக்கும் நிகழ்வுகளை நம்பி ஏமாற வேண்டாம் என இராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.(15)   http://www.samakalam.com/முள்ளிவாய்க்காலில்-ஊடகவ/
  • காணி உரிமையாளர்கள் – ஆளுநர் சந்திப்பு திடீர் இரத்து December 1, 2021 வடக்கு மாகாண ஆளுநருடன் மாதகல் காணி உரிமையாளர்கள் சந்திப்பதற்கு இன்று ஏற்பாடுகள் இடம்பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் திடீரென அந்த சந்திப்பை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்தால் காணி உரிமையாளர்களுக்கு  இன்று மதியம் 2 மணிக்கு வடமாகாண ஆளுநர் காணி உரிமையாளர்களை சந்திக்கவிருப்பதாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென அந்த சந்திப்பை ரத்து செய்யப்பட்டதாகவும் நாளை காலை 8 மணிக்கு அந்த சந்திப்பு நடைபெறும் எனவும் ஒரு சில காணி உரிமையாளர்களுக்கு பிரதேச செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேரடியாக சென்று காணி உரிமையாளர்கள் கேட்டபொழுது,  இந்த சந்திப்பு தொடர்பில் நமக்குத் தெரியப்படுத்தப் படவில்லை என்றும் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது தொடர்பாகவோ நாளை இந்த சந்திப்பு இடம் பெறுவது தொடர்பாகவோ எமக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆளுநரை சந்திக்க தூர இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டதுடன் அங்கிருந்த மக்கள் கவலை தெரிவித்தனர். இதேவேளை மாதகலில் கடற்படையினருக்காக காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் 1.30 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த போராட்டத்தை அடுத்தா சந்திப்பினை ஆளுநர் இரத்து செய்தார் என்பதனை அறிந்துகொள்ள முடியவில்லை.  https://globaltamilnews.net/2021/169669
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.