Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ட்விட்டர், பேஸ்புக்குக்கு போட்டியாக தனி சமூக ஊடகம் தொடங்கும் டிரம்ப்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' (TRUTH Social) என்ற புதிய சமூக ஊடக வலைதளத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

"பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக இந்த தளம் நிற்கும்" என்று கூறிய அவர், அமெரிக்காவில் எதிர்ப்புக் குரல்களை அந்த நிறுவனங்கள் அமைதிப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

அமெரிக்க அதிபர் போட்டிக்கு டிரம்ப் முன்னின்றபோது, அதில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்காற்றின. அவர் அதிபராக பதவி வகித்த காலத்தில், உலகை தொடர்பு கொள்ளும் சாதனமாக சமூக ஊடகங்களையே அவர் பயன்படுத்தினார்.

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வாரங்களில் டிரம்ப் ட்விட்டர் நிறுவனத்தால் தடை செய்யப்பட்டார். அமெரிக்க செனட் இயங்கி வந்த கேப்பிடல் ஹில் கட்டடத்துக்குள் டிரம்பின் ஆதரவாளர்கள் புகுந்த பிறகு டிரம்பின் கணக்கை ஃபேஸ்புக் முடக்கியது.

டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் அவரது இடுகைகள் பலவும் அவமதிக்கும் வகையிலும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் பொய்யுரைகளை ஆராதிக்கும் வகையில் இருந்ததால் , அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஊடக நிறுவனங்களுக்கு பல தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.

 

கடந்த ஆண்டு ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவை, டிரம்பின் சில இடுகைகளை நீக்கின அல்லது அவரது பதிவின்கீழ் 'இது தவறாக வழிநடத்தப்படக்கூடிய இடுகை' என்ற வரியை இடம்பெறச் செய்தன. ஃப்ளூ காய்ச்சலை விட குறைவான ஆபத்தை கொரோனா கொண்டிருந்தது" போன்ற இடுகைகளை அவர் அந்த நாட்களில் பகிர்ந்து வந்தார்.

இதன் உச்சமாக அதிபர் தேர்தல் முடிவுகளை ஒரு மோசடி என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார் டிரம்ப். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் நடந்த கலவரத்துக்குப் பிறகு டிரம்புக்கு தடை விதிக்க அல்லது இடைநீக்கம் செய்ய இந்த சமூக வலைதள நிறுவனங்கள் முடிவெடுத்தன.

கலவரங்களுக்கு பதிலளித்த டிரம்ப், கலவரத்தில் ஈடுபடுவோரை கேப்பிடல் பற்றாளர்கள் என்று அழைத்தார். தேர்தல் முடிவை ஏற்கும் எந்த அறிகுறியையும் அவர் வெளிக்காட்டவில்லை. இந்த காரணத்துக்காக அவர் தொடர்ந்து தங்களுடைய தளங்களை பயன்படுத்த அனுமதிப்பது மிகவும் ஆபத்தாகலாம் என்ற முடிவுக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை வந்ததாகக் கூறின.

இதையடுத்து இந்த சமூக ஊடகங்களுக்கு போட்டியாக ஒரு சமூக ஊடக தளத்தை உருவாக்கப்போவதாக அப்போதே அறிவித்திருந்தார் டொனால்ட் டிரம்ப்.

முன்னதாக இந்த ஆண்டு ஜுன் மாதம் 'டொனால்ட் டிரம்பின் மேஜையில் இருந்து' என்ற பெயரில் ஒரு மக்கள்தொடர்பு வலைதளத்தை டிரம்ப் தொடங்கினார். டிரம்பை ஆதரிக்கும் பார்வையாளர்களை மட்டுமே அது ஈர்த்த வேளையில், தொடங்கிய ஒரு மாதத்திலேயே அந்த வலைதளம் நிரந்தரமாக மூடப்பட்டது.

இந்த வலைதலம் தொடங்கப்பட்டபோது, டிரம்பின் மூத்த உதவியாளர் ஜேசன் மில்லர், "இந்த வலைதளம் டிரம்பின் பரந்த முயற்சிகளுக்கு துணையாக இருக்கும்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், டிரம்ப் உருவாக்கியிருக்கும் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில், பார்வையாளர்கள் சேருவதற்கான அழைப்பு அடுத்த மாதம் விடுக்கப்படும் என்றும் 2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் தேசிய அளவிலான உறுப்பினர் சேர்க்கை அதில் இருக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

"ட்விட்டரில் தாலிபன்கள் அதிக அளவில் இருக்கும் உலகில் நாம் வாழ்கிறோம், ஆனாலும் உங்களுக்கு பிடித்த அதிபர் அமைதிப்படுத்தப்பட்டுள்ளார்," என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

"பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக ஏன் யாரும் எழுச்சி பெறுவதில்லை என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். சரி, விரைவில் நாமே அதை செய்வோம்," என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் புதிய சமூக ஊடக தள முயற்சி குறித்து வட பிபிசியின் அமெரிக்க தொழில்நுட்ப செய்தியாளர் ஜேம்ஸ் கிளேட்டன் கூறும்போது, "இதை பெரிய முயற்சியாக டிரம்பின் குழு காட்டுகிறது. ஆனால், இந்த புதிய சமூக ஊடக தளம் எப்படி இயங்கும் என்பதற்கு எந்தவொரு அறிகுறியும் இல்லை. இப்போதைக்கு அது வெறும் பதிவுப்பக்கம் மட்டுமே," என்று கூறியுள்ளார்.

பேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக ஒரு சமூக ஊடக தளத்தை உருவாக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார். ஆனால், நடைமுறையில் அது எளிதாக நடக்கக் கூடிய விஷயமல்ல என்றும் ஜேம்ஸ் கிளேட்டன் தெரிவித்தார்.

ஆரம்பிக்கும் தொனியைப் பார்க்கும்போதே, அது அரசியல் மிகுதியான தளமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ட்விட்டரின் சந்தனைகள் போலவோ ஃபேஸ்புக் போல மொத்த குடும்பமும் உறுப்பினராக இருக்கும் தளம் போலவோ அது இருக்கப் போவதில்லை என்று தோன்றுகிறது.

வேண்டுமானால், Parler அல்லது Gab போன்ற சமூக பேச்சு சுதந்திரம் மிகுந்த பிற சமூக ஊடகங்களை விட மிகையான வெற்றிகர தளமாக அது வரலாம்.

டொனால்ட் டிரம்ப்புக்கு திரும்பவும் தனது குரலை பிரதிபலிக்க ஒரு தளம் தேவை. இந்த தளம் அதற்கு பயன்படலாம். ஆனால், இந்த தளம் மூலம் நிச்சயம் அவரது கருத்துகள் கேட்கப்படும். ஆனால், அவரது குரல் உண்மையிலேயே கேட்கப்பட வேண்டுமானால், அதற்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவு டிரம்புக்குத் தேவை. அது இப்போதைக்கு நடக்காது என்றே தோன்றுகிறது என்கிறார் ஜேம்ஸ் கிளேட்டன்.

 

டொனால்ட் டிரம்ப்: ட்விட்டர், பேஸ்புக்குக்கு போட்டியாக தனி சமூக ஊடகம் தொடங்கும் முன்னாள் அதிபர் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.. பேஸ்புக் டிவிட்டர் யூடியூப் காரனுவளுக்கு திமிர்கூடிப்போச்சு… போட்டியா வேறும் பல தளங்கள் வந்து பேமஸ் ஆகவேணும்.. அஞ்சு இயக்கப்பாட்டு ஏத்திவச்சிருந்ததால முன்னூறு நானூறு வீடியோ இருபதாயிரம் பலோயர் எண்டிருந்த என்ர யூரியூப் கணக்கையும் முடக்கினவன் குரங்கன்..😡😡 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' (TRUTH Social) என்ற புதிய சமூக ஊடக வலைதளத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நானும் இதிலை இணையலாமெண்டு இருக்கிறன். 😎

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 'ட்ரூத் சோஷியல்' (TRUTH Social) தளத்துக்கு வாழ்த்துக்கள்......எதுக்கும் இருக்கட்டும் ......!   😎

Link to comment
Share on other sites

3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வாழ்த்துக்கள்.. பேஸ்புக் டிவிட்டர் யூடியூப் காரனுவளுக்கு திமிர்கூடிப்போச்சு… போட்டியா வேறும் பல தளங்கள் வந்து பேமஸ் ஆகவேணும்.. அஞ்சு இயக்கப்பாட்டு ஏத்திவச்சிருந்ததால முன்னூறு நானூறு வீடியோ இருபதாயிரம் பலோயர் எண்டிருந்த என்ர யூரியூப் கணக்கையும் முடக்கினவன் குரங்கன்..😡😡 

உங்களது கோபம் விளங்குது. க்கிரைக்கடைக்கு எதிர்க்கடை இருந்தே ஆகவேண்டும். ஆனாலும் அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட நிலைக்குப் போகக் கூடாது. எனக்கு TRUTH Social இல் கணக்கு ஆரம்பிப்பதில் பிரச்சனை இல்லை. அதன் முதலாளிதான் பிரச்சனை 🙂 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, இணையவன் said:

உங்களது கோபம் விளங்குது. க்கிரைக்கடைக்கு எதிர்க்கடை இருந்தே ஆகவேண்டும். ஆனாலும் அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட நிலைக்குப் போகக் கூடாது. எனக்கு TRUTH Social இல் கணக்கு ஆரம்பிப்பதில் பிரச்சனை இல்லை. அதன் முதலாளிதான் பிரச்சனை 🙂 

உண்மைதான் இணையவன்... அவன் ஒரு மொக்கன்… அவனை நம்பி போய் அசிங்கபடவேண்டியும் வரும்..

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் சுவீகரிக்கும் செயற்பாட்டை கைவிட வேண்டும் -  வினோ நோகராதலிங்கம் ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்   மன்னார் ,வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் சுவீகரிக்கின்ற செயற்பாட்டை உடனடியாக கைவிட வேண்டுமென  சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிடம்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சு மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அமைச்சரிடம் நேரடியாக கோரிக்கை விடுத்த அவர் மேலும் கூறுகையில், மாகாணசபைகளின் கீழிருந்த பல அதிகாரங்கள் திட்டமிடப்பட்டு மத்திய அரசினால் பறிக்கப்படுகின்ற ,மீளப் பெறப்படுகின்ற ஒரு துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக மாகாண சபைகளுக்கு இருக்கின்ற நிதி,பொலிஸ் ,காணி அதிகாரங்கள் அரசியலமைப்பில் எழுத்து வடிவத்தில்  மட்டுமே உள்ளன. நடைமுறையில் அவை எல்லாம் மாகாண சபைகளிடமிருந்து பிடுங்கப்பட்டுள்ளன. அதேபோல் தான் மாவட்ட வைத்தியசாலைகளும் கடந்த ஆண்டிலிருந்து மாகாண சபைகளிடமிருந்து பறிக்கின்ற நிலைமையை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இந்த நாட்டிலுள்ள  ஒன்பது மாவட்ட பொது வைத்தியசாலைகளை மாகாணத்திலிருந்து பறித்தெடுத்து மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.  அந்த  ஒன்பது மாவட்ட பொது வைத்தியசாலைகளில் மன்னார் ,வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி வைத்தியசாலைகளை மத்திய அரசு சுவீகரிக்கின்ற செயற்பாட்டை மாற்றியமைக்குமாறு அரசிடமும் சுகாதார அமைச்சிடமும் கோரிக்கை விடுக்கின்றேன். அதேபோல் பாடசாலைகள்,  தேசிய பாடசாலைகள் என்ற இனிப்பு முலாம்  பூசப்பட்டு பல பாடசாலைகளை மத்திய அரசு உள்வாங்கியதையும் நான் நினைவுப்படுத்த விரும்புகின்றேன். இவ்வாறான நிலைமைகளை மாற்றியமைக்க வேண்டும். மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கிவிட்டு பின்னர் அவற்றை பறித்தெடுக்கின்ற செயற்பாட்டை அரசு முழுமையாக கைவிட  வேண்டும். மாகாணங்களுக்கு  அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்ற பல்வேறு தரப்பினரின்  கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்றார்.   https://www.virakesari.lk/article/118219  
  • வறிய நிலையில் வாழும் மட்டக்களப்பு மீனவர்கள் -உதவிக்கரங்கள் நீளவேண்டும்! – மட்டு.நகரான் December 1, 2021   வறிய நிலையில் வாழும் மட்டக்களப்பு மீனவர்கள் -உதவிக்கரங்கள் நீளவேண்டும்!: கிழக்கு மாகாணத்தில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் என்பது எண்ணிலடங்காததாக உள்ளது. குறிப்பாக கிழக்கின் கரையோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையென்பது, இலகுவாகயிருந்தாலும் துன்ப துயரங்களும் அதிகமாகவே இருக்கின்றன. யுத்தகாலத்தில் இழப்புகளை சாதாரணமாக எதிர்கொண்ட சமூகம், இன்று அந்த இழப்புகளை எதிர்கொள்வதை சாதாரணமாக கொள்ளாத நிலையே இருந்து வருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கரையோர மீனவர்கள் வாழ்க்கையானது, போராட்டம் நிறைந்ததாகவே உள்ளது. தமிழ் மீனவர்களின் இந்த நிலைமை பாரிய போராட்டமாக இயிருந்து வருகின்றது. இன்று மீன்பிடித் தொழிலானது, பல்வேறு சவால்களை வென்று, உலகளவில் பாரிய வருமானமீட்டும் துறையாகவுள்ள போதிலும், இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து இன்று வெளிநாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்யும் நிலையுள்ள நிலையிலும், கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், இன்றுவரை பல மீனவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையினைக் கொண்டு நடாத்தக்கூட முடியாத நிலையில் உள்ளமையே உண்மையாகும். 1990களிலும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் அதாவது 2000ஆம் ஆண்டு வரைக்கும் தொடர்ச்சியான யுத்தப் பாதிப்புகளைக்கொண்டு தங்களுடைய தொழில்களைச் செய்யமுடியாத நிலையில் இருந்ததோடு, 2002ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட ஓர் இடைவெளியில் தங்களுடைய தொழிலை நல்ல முறையில் மேற்கொண்டிருந்தனர்.   இதன் பின்னர் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை  அனர்த்தம்  காரணமாக சகல தொழில் வளங்களையும் இழந்து, தங்களுடைய உறவுகளையும் இழந்து, நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டனர். தொடர்ந்து 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இவ்வாறான பாதிப்புகளை எதிர்கொண்ட போதிலும், மீனவர்களின் வாழ்க்கையென்பது மீளமுடியாத துயரங்களையே சுமந்து நிற்பதைக் காணமுடிகின்றது.   மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் திராய்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியிலிருந்து கடந்த 23ஆம் திகதி மீன்பிடிப்பதற்கு கடலுக்கு சென்ற சௌந்தரநாயகம் சுரேஸ்குமார் என்னும் 43வயது மீனவர் சடலமாகவே கரையொதுங்கினார். அவர் சிறுவயது முதல் கடல் தொழில்மூலமே தமது வாழ்வாதாரத்தினை முன்னெடுத்திருந்தார். அதன்மூலமே அவரது வாழ்க்கையினை முன்கொண்டுசென்றார். அவருக்கு திருமணமாகி ஐந்து பிள்ளைகள் உள்ளனர். அவரின் மூன்று பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் கல்வி கற்கின்றர். இரண்டு பெண் பிள்ளைகளுக்கு வறுமை காரணமாக சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துள்ளார். இதுதான் இங்குள்ள பெரும்பாலான மீனவர்களின் நிலைமைகள். உயிரிழந்த மீனவரின் குடும்பமானது, மிகவும் வறிய நிலையில் உள்ளது. இதுவே இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மீனவர்களின் நிலையுமாகும். குறிப்பாக குறித்த மீனவர் கடலுக்குச் சென்று மீன்பிடித்துவரும் பணத்திலேயே அன்று அந்த வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு உணவு வழங்கும் நிலை காணப்படுகின்றது. இன்று அவர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த பிள்ளைகளுக்கான உணவுத் தேவை, கல்விக்கான உதவிகளை வழங்குவதற்கு யாரும் அற்ற நிலையில், அந்தப் பிள்ளைகளும் கல்வியை இடை நடுவே கைவிடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது. இன்று மீனவர்களின் நிலைமை இதுவாகவேயுள்ளது. வடகிழக்கில் உள்ள இவ்வாறான மீனவர்களுக்கு கைகொடுக்க வேண்டியது யார் என்ற கேள்வி இங்கே எழுகின்றது. இவ்வாறான மீனவர்களை வைத்துத் தமது வயிறு வளர்க்கும் முதலாளிகள் இவர்கள் இல்லையென்றால் இவர்கள் குடும்பம் தொடர்பில் சிந்திக்கும் நிலையிருக்காது. மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், 1990ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் எவரிடமும் கையேந்தாதும், எவரது வருமானத்தையும் எதிர்பார்க்காதும் செல்வந்தர்களாக வாழ்ந்த கடற்றொழிலாளர்களின் வாழ்வு,  இன்று கேள்விக்குறியான நிலையில் காணப்படுகின்றது. ஆழிப்பேரலை அனர்த்தத்தம், யுத்தத்தம் எனத் தொடர்ச்சியாக  அழிவுகளையும், இழப்புகளையும் எதிர்கொண்டு, மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை  நோக்கிப் பயணிக்கத் தொடங்கிய மீனவர்கள், இன்று தங்களுடைய வாழ்வாதாரத் தொழிலை சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் செய்யமுடியாத நிலையில் தத்தளிக்கிறார்கள். “நிம்மதியாக  வாழவேண்டும். எங்களுக்காக உழைக்க வேண்டும் என பல இலட்சம் ரூபாய்க்குக் கடன்பட்டு, கடற்றொழில்களை ஆரம்பித்து, இன்று நாங்கள் கடனாளிகளாகவே இருக்கின்றோம். வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. பரம்பரை பரம்பரையாகக் கடற்றொழிலையே செய்து, அதன் மூலம் வருமானமீட்டி வாழ்ந்த நாங்கள், இன்று இந்தத் தொழில்களை கைவிட்டு, அரபு நாடுகளுக்கும் கொழும்புக்கும் வேலை தேடிச்செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது” எனக் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிலைமை மாற்றப்பட வேண்டும். கிழக்கில் உள்ள தமிழ் மீனவர்களின் நிலைமைகள் தொடர்ச்சியாக பேசப்படும்போதே அவர்களுக்கான ஏதாவது உதவிக்கைகள் நீளும் நிலையேற்படும்.   https://www.ilakku.org/batticaloa-fishermen-living-in-poverty/  
  • தமிழீழ விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய இரு சிங்கள அமைச்சர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடிய இரு அமைச்சரவை அமைச்சர்களின் தனிப்பட்ட பணிக்குழுவை சேர்ந்த இரு செயலாளர்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   அவர்கள் இருவரும் சட்டம், ஒழுங்கு மற்றும் கடற்றொழில் அமைச்சர்களின் செயலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   விடுதலை புலிகளினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத் தொகை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மாதம் 25 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட இருந்தது. எனினும், கடந்த வாரம் முழுவதும் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டதால் தோண்டும் பணிகள் நாளை (02) வரை ஒத்தி வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   இந்நிலையில், கடந்த 23 ஆம் திகதி முற்பகல் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவரும்  மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் என தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பொன்றை மேற்கொண்டு நாம் அந்த பக்கமாக வருகிறோம்.  வந்ததும் சந்திப்போம் என கூறியுள்ளனர். பின்னர் குறிப்பிட்ட நாளில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற குறித்த இருவரும் , தாம் திட்டமிட்டுள்ள தோண்டும் பணிகளுக்காக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இரகசியமாக அதனை செய்ய உதவுமாறும் கோரியுள்ளனர். சில நாட்கள் கழித்து முல்லைத்தீவு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு இரண்டு செயலாளர்களின் வருகை தொடர்பில் தகவல் கிடைத்து விசாரிக்கும் வரையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவித்திருக்கவில்லை. இதன்படி, அவர் ஏதேனும் கடமை மீறலில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்த முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சம்பவம் தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது   https://www.thaarakam.com/news/e5b4e1aa-cab7-480b-bf77-808ab5b8bc6b  
  • வணக்கம் வாத்தியார்......! ஆண் என்ன பெண் என்னநீ என்ன நான் என்னஎல்லாம் ஓர் இனம்தான்அட நாடென்ன வீடென்னகாடென்ன மேடென்னஎல்லாம் ஓர் நிலம்தான்நீயும் பத்து மாசம்நானும் பத்து மாசம்மாறும் இந்த வேசம்ஒன்னுக்கொன்னு ஆதரவுஉள்ளத்திலே ஏன் பிரிவுகண்ணுக்குள்ளே பேதம் இல்லேபார்ப்பதிலே ஏன் பிரிவுபொன்னும் பொருள் போகும் வரும்அன்பு மட்டும் போவதில்லேதேடும் பணம் ஓடிவிடும்தெய்வம் விட்டுப் போவதில்லேமேடைக்கும் மாலைக்கும்கோடிக்கும் ஆசைப்பட்டுவெட்டுக்கள் குத்துக்கள்ரத்தங்கள் போவதென்னஇதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்இன்னும் மயக்கமா......!   ---ஆணென்ன பெண்ணென்ன---
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.