Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கிளிநொச்சி : 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வீதி சேதம் - முறைகேடான அபிவிருத்தி என மக்கள் விசனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published by T Yuwaraj on 2021-10-22 17:23:14

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள தர்மபுரம் கிராமத்தில் 7 ஆம் ஒழுங்கை கடந்த வருடம் ஏழாம் மாதம்  தார் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டு ஒரு வருடத்திற்குள் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.

IMG-20211020-WA0008.jpg

நிறைந்த கிராமம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  கண்டாவளை பிரதேச செயலகததினால் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு கரைச்சி பிரதேச சபையின் தொழிநுட்ப மேற்பார்வையில்  பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

IMG-20211020-WA0009.jpg

வீதி புனரமைப்புக்கான  ஒப்பந்தத்தை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் பெற்றிருந்தாலும் வீதி புனரமைப்பு பணிகளை தனியார் ஒப்பந்தகாரர் ஒருவர் மேற்கொள்வதற்கு மாதர் கிராம அபிவிருத்திச்  சங்கம்   அனுமதி வழங்கியிருந்திருந்தது.

எனவே குறித்த வீதியின் பணிகள்  கடந்த வருடம் ஏழாம் மாதம் நிறைவுப்பெற்றிருந்தது. ஒப்பந்த காலத்தில் புனரமைப்பு பணிகளின் தொழிநுட்ப மேற்பார்வை மற்றும் கொடுப்பனவுகளுக்கான சிபார்சுகளை கரைச்சி பிரதேச சபையே மேற்கொண்டிருந்தது.  ஆனால் குறித்த வீதியின் தரமற்ற புனரமைப்பு காரணமாக ஒரு வருடத்திற்குள் முற்று முழுதாக சேதமுற்று பொது மக்கள்   போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறது.

IMG-20211020-WA0010.jpg

எனவே இது தொடர்பில் பிரதேச பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, மேற்பார்வை மற்றும் தொழிநுடப் கண்காணிப்பினை மேற்கொண்ட கரைச்சி பிரதேச சபையின் மீதும் தங்களது விசனத்தை தெரிவித்துள்ளனர். முறைகேடனான அபிவிருத்திப் பணிகளை   கண்டுகொள்ளதாக திணைக்களங்கள் மீதும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வீதி சேதம் -  முறைகேடான அபிவிருத்தி என மக்கள் விசனம் | Virakesari.lk

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

கடந்த வருடம் ஏழாம் மாதம்  தார் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டு ஒரு வருடத்திற்குள் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.

 

 

7 hours ago, பிழம்பு said:

இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு கரைச்சி பிரதேச சபையின் தொழிநுட்ப மேற்பார்வையில்  பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

மக்களுக்கு இந்த வீதியை சரியான முறையில் பயன்டுத்த தெரியவில்லை, திட்டமிட்டு வீதியை சேதமாக்கியுள்ளனர்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்தான் பொதுப்பணிதுறை , வீதி அபிவிருத்தி துறை  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் உலக நாடுகள் என்று  அழைக்கப்படும் நாடுகள் அனைத்தையும் பிடித்த நோய் இந்த பொது துறை ஊழல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, tulpen said:

மூன்றாம் உலக நாடுகள் என்று  அழைக்கப்படும் நாடுகள் அனைத்தையும் பிடித்த நோய் இந்த பொது துறை ஊழல். 

ஓம் பாருங்கோ.... இது மூன்றாம் நாடுகளிலை இருக்கிற சர்வசாதாரண பிரச்சனை எண்டு சொன்னால் சனத்துக்கு விளங்காது. சும்மா குய்யோ முய்யோ எண்டு கத்திக்கொண்டு திரியுதுகள். மூடர் கூட்டங்களே இதெல்லாம் நோர்மல் கண்டியளோ 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஓம் பாருங்கோ.... இது மூன்றாம் நாடுகளிலை இருக்கிற சர்வசாதாரண பிரச்சனை எண்டு சொன்னால் சனத்துக்கு விளங்காது. சும்மா குய்யோ முய்யோ எண்டு கத்திக்கொண்டு திரியுதுகள். மூடர் கூட்டங்களே இதெல்லாம் நோர்மல் கண்டியளோ 😜

சாமியார்!

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.