Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு மொழிவெறி உண்டா இல்லையா என்பதைப் போல நண்பர் சுரேஷ் வெங்கடாத்ரி ஒரு பதிவு எழுதி இருந்தார். அதன் எதிர்நிலையில் இருக்கும் இன்னொரு முகமாக இந்தப் பதிவை வாசிக்கலாம்.

நான் தற்போது வசிப்பது பெங்களூரு ரூரல் பகுதியில். முழுக்க கன்னடம் மட்டுமே சார்ந்து இயங்கக்கூடிய ஒரு கிராமப்பகுதி. இங்கு நகுலனுக்கு விளையாட்டுத் தோழர்கள் என ஓரிருவர் மட்டுமே இருக்க மற்றவர்கள் பெரும்பாலும் தோழிகளே (அது குறித்த விசாரணையைப் பின்னர் வைத்துக் கொள்வோம்.) அவர்களில் ஒரு பெண்ணுக்கு பத்து அல்லது பனிரெண்டு வயது இருக்கலாம். 

ஒரு நாள் மாலை சாலையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று என்னிடம் வந்து பேசியவள் சொன்ன வார்த்தைகள் இவை: 

“அங்கிளுக்கு ஒரு விசயம் தெரியுமா? கூகிளில் உலகின் மிகக் கேவலமான மொழிகளில் ஒன்றெனத் தமிழைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

முதலாவது கேள்வி:  சில நாட்களுக்கு முன்னால் கன்னடம் சார்ந்து கூகிளில் வந்த சர்ச்சையை யாரோ அவளிடம் திரித்துச் சொல்லி இருக்கிறார்கள் என்பது புரிந்தது. ஆனால் அதில் ஏன் தமிழை இழுக்கிறார்கள்? எந்தப் புள்ளியில் தமிழ்/தமிழன் மீதான விரோதம் இங்கு உருவாகுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சிறு குழந்தைகளிடம் கூடவா?

இரண்டாவது கேள்வி: அந்த சங்கதியை என்னைத் தேடி வந்து சொல்ல வேண்டும் என அந்தப் பெண்ணுக்கு ஏன் தோன்றியது? நான் தமிழன் என்பதால்தானே? நீ இங்கு பிழைக்க வந்திருக்கிறாய், உன்னைச் சிறுமைப்படுத்தினாலும் நீ அதைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்கிற மனப்பான்மை அந்தச் சிறுமிக்கு எப்படி வந்தது? 

அந்தக் கேள்வியைக் கேட்ட மறுகணம் ஆத்திரமாக வந்தாலும் அடக்கிக் கொண்டு பொறுமையாகவே அவளுக்கு பதில் சொன்னேன். 

“ஒவ்வொரு மொழிக்கும் தனித்த அழகு உண்டு கண்ணா. எந்த மொழியும் எதனோடும் ஒப்பிடத் தாழ்ந்ததல்ல. யாரையும் மட்டம் தட்டிப் பேசக்கூடாது, சரியா?”

ஒரு இளக்காரச் சிரிப்புடன் அந்தச் சிறுமி தலையாட்டிச் சென்றாள். பேசாமல் கூகிளில் வந்த கன்னடம் குறித்த சர்ச்சையை அவளிடம் எடுத்துக் காட்டலாமா என்று தோன்றியது? பிறகு அவளுக்குச் சொல்லிக் கொடுத்தவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் என விட்டு விட்டேன்.

https://www.facebook.com/profile.php?id=1773270303

தோழமை மாநிலங்களில் தங்கள் மொழி உணர்வு, மாநில உணர்வைவிட தமிழை சிறுமைப்படுத்துவதில் ஒருவித சந்தோஷம் கிடைப்பதைத் தொடர்ந்து கவனிக்கிறேன். எங்கும் பராபரமாய் மொழி உணர்வு வியாபித்திருக்கும் கர்னாடகத்தில் அதுபிற மொழி குறிப்பாக சமஸ்கிருதமாகிவிடாத, தமிழின் மீதும், தமிழனின் மீது வெறுப்பாக பொதுபுத்தியில் இருக்கிறது. என்னுடைய கன்னட நண்பர்கள் எவ்வளவு நெருங்கியவர்களானாலும் நேரம் பார்த்து என்னை தமிழன் என்று கேலி செய்வதைக் கவனித்திருக்கிறேன். சொந்த நண்பனாச்சே அவனைக் காயப்படுத்தக்கூடாது என்றில்லாமல் திடுக்கென்று எதையாவது உளருவார்கள். ஒருமுறை தமிழ் வேறு நாடுகளில் தமிழர்கள் உள்ளார்களா என்று பேச்சு வந்தது நான் சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே, அருகிருந்தவன் பொறுக்கமாட்டாமல், சரிவிடு பா நீங்கதான் உலகம் பூராவும் பரவி இருக்கீங்க. சுரண்டித் தின்ன பெங்களூரப்போல என்றான். எனக்கு அதை வளர்க்க விருப்பமில்லாமல் வேதனையுற்றேன். அதேபோல செல்வி ஜெயலலிதா ஜெயிலுக்குச் சென்ற சமயம்,  எனக்கு ஒரு இனம்புரியாத பயம். கலவரம் ஏதாவது நடக்குமா, அப்போது பிணக்கமாய் இருந்த மத்திய அரசு ஆட்சியைக் கைப்பற்ற பார்க்குமா என்று பலவித அச்சம். அந்த நேரமென்று பார்த்து என் கன்னட நண்பன் வந்து, உங்கம்மா இனி கர்னாநாடகா தண்ணிதான் குடிப்பா என்றான். அங்கிருக்கும் முதிர்ச்சியற்ற தேசிய உணர்வாளர்கள், அதை மாநில உணர்வாக பதிலீடு செய்கிறார்கள். நவம்பர் ஒன்று அதை இன்னும் தூபம் போடுகிறது. நமக்கு நாம் தமிழர் கட்சி இருந்தாலும், அது சித்தாந்த ரீதியில் தெளிவுள்ளவர்களால் ஓரளவு பகடி செய்யப்பட்டு கடந்து போக முயற்சிகள் நடக்கின்றன. கர்நாடகத்தின் அது பழத்தில் ஏற்றும் ஊசியப்போலத் தன் வேலையைப் பார்க்கிறது. அடிப்படை மானுடனற செய்யச்செய்கிறது. ஆந்திராவில் அதிகாரிகள், கல்விப் புலத்தார், ஆய்வாளர்கள் மத்தியிலும் இந்தப் போக்கு அதிகம்.

https://www.facebook.com/profile.php?id=100008528536874

தமிழர்களது மொழி குறித்த பெருமிதம் ஏனைய மாநிலங்களில் பெரும் வெறுப்பை உண்டாக்கியுள்ளது. ஆனால் கொடுமை என்னவென்றால் தமிழ் இங்கே தள்ளாடி தத்தளித்துக்கொண்டு உள்ளது. தமிழர்களையும் தமிழையும் வெறுக்கக் காரணம் நமது மொழிப்பெருமிதமே. 

https://www.facebook.com/mani.jayaprakashvel

 • Like 1
 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் தமிழ்மொழியினை சிதைத்து அழிய விடுவது மறைமுகமாக நடக்கிறது. தாய்மொழிக் கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் இல்லையாமே?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 23/10/2021 at 09:43, ஏராளன் said:

தமிழ்நாட்டில் தமிழ்மொழியினை சிதைத்து அழிய விடுவது மறைமுகமாக நடக்கிறது. தாய்மொழிக் கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் இல்லையாமே?

இலங்கையில் 1974ல் இருந்து 10 ஆண்டுகளுக்கு முதல்வரை   தாய்மொழி தமிழில் மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும் என்று தமிழரை இனவெறி சிங்கள அரசு கட்டாயப்படுத்தியது. இதனால் தமிழருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழ்நாடு தமிழ்மக்களுக்கு மொழி சுதந்திரம் கொடுத்து வாழ வழிசெய்திருக்கிறது. அதனால் சுந்தர் பிச்சை இன்று கூகிள் நிறுவனத்தின் அதியுயர் நிறைவேற்று அதிகாரியாக முடிந்திருக்கிறது. சிங்கள அரசால் கட்டாயப்படுத்தப்பட்டு தமிழில் படித்த நானும் நீங்களும் யாழ் களத்தில் குப்பை கொட்டத்தான் தகுதியடைந்திருக்கிறோம்.🥲

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

ஒழுங்கா படிக்கவேண்டிய வயதில் படிக்காமல் சிங்களவன் அது இது என்று கதை வேறு .🤣

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 23/10/2021 at 17:43, ஏராளன் said:

தமிழ்நாட்டில் தமிழ்மொழியினை சிதைத்து அழிய விடுவது மறைமுகமாக நடக்கிறது. தாய்மொழிக் கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் இல்லையாமே?

தமிழ்நாட்டில் தாய்மொழிக் கல்வி கட்டாயம் இல்லாமலேயே சிறந்த இலக்கியங்கள், அறிவியல் கட்டுரைகள் என்று நிறைய தமிழில் வந்துகொண்டிருக்கின்றது. கணியம் என்ற அறக்கட்டளை அமைப்பு கணிநுட்பத்தை தமிழில் கொண்டுவருகின்றது. 

ஆக, கட்டாயமோ, கட்டாயமில்லையோ மொழி வளர அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களும், கல்விச் செயற்பாட்டாளர்களும் வேலைசெய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

அப்படி இல்லை.

பெரு நகரங்களை் தாண்டிணால், தமிழ் மொழிக் கல்வி தானே இன்னும்.

இவர்கள் செய்ய தவறியது என்னவெனில், இலங்கையில் உள்ளது போல, நீஙகள் எம்மொழியிலும் படிக்கலாம். ஆனால் தாய் மொழி சித்தியடையாவிடில், ஓ லெவல் முமுவதும் பெயில்.... ( இது அண்மையில் கேள்விப்பட்டது, தவறானதல்ல என நிணைக்கிறேன்)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இலங்கையில் உள்ளது போல, நீஙகள் எம்மொழியிலும் படிக்கலாம். ஆனால் தாய் மொழி சித்தியடையாவிடில், ஓ லெவல் முமுவதும் பெயில்.... ( இது அண்மையில் கேள்விப்பட்டது, தவறானதல்ல என நிணைக்கிறேன்)

ஆறு கட்டாய பாடங்களில் முதல்மொழியும் உள்ளது.  இக் கட்டாய பாடங்களில் ஒன்றில் சித்தியடையாவிட்டாலும் ஒ லெவெல் சித்தி கிடையாது.

கட்டாய பாடங்கள்:

முதல் மொழி, சமயம், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக தமிழ் மொழி திட்டமிட்டு நாசூக்காக ஓரங்கட்டப்படுகின்றது.......புலம்பெயர் நாடுகளில் தமிழ் பிள்ளைகள் எழுத வாசிக்க படிப்பதெல்லாம் மிக குறைவானதே .......ஆனால் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் எண்ணத்தை சொல்வது......!   

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

ஆறு கட்டாய பாடங்களில் முதல்மொழியும் உள்ளது.  இக் கட்டாய பாடங்களில் ஒன்றில் சித்தியடையாவிட்டாலும் ஒ லெவெல் சித்தி கிடையாது.

கட்டாய பாடங்கள்:

முதல் மொழி, சமயம், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு

சமய பாடத்தில் , பொழிப்புரை எழுத வந்த தேவாரம்; கோழி கூவ.... பொருது வெண் சங்கே......

காலையில எதையோ நிணைத்துப் பார்த்தேன்.... வந்தது.... பாஸ்....

சோதணைகள்...... அதிஸ்டமும் வேணும்.... 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

பொதுவாக தமிழ் மொழி திட்டமிட்டு நாசூக்காக ஓரங்கட்டப்படுகின்றது.......புலம்பெயர் நாடுகளில் தமிழ் பிள்ளைகள் எழுத வாசிக்க படிப்பதெல்லாம் மிக குறைவானதே .......ஆனால் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் எண்ணத்தை சொல்வது......!   

ஆங்கில கல்வி முக்கியமானது.....

ஆனாலும் தமிழை கட்டாய பாடமாக்கினால்..... அதுவே சரியான நடவடிக்கை. தமிழகம், இலங்கையை பின்பற்ற வேண்டும்.

அங்குள்ள சிக்கல், தமிழ் என்ற சொல்லை விடுத்து, தாய் மொழி என்றால், பல மொழியில் கற்பிக்க வேண்டிய சிக்கல். இலங்கையில், இரு மொழிகள், என்பதால் பிரச்சணை இல்லை.

என்னதான் சொன்னாலும், இலங்கை கல்விக் கொள்கை மிக தரமானது. உலகில், (அவரவர்) சமயக்கல்வியை மூன்றாம் வகுப்பில் இருந்து பல்கலைகழகம் வரை கற்பிப்பது இலங்கை மட்டுமே.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடபகுதியில், 85% வீதமானோர் தமிழகத்தில் இருந்து வரும் டிவி குப்பைகளை பார்பதால், கல்விச் சீரழிவு நடக்கின்றது என இலங்கை அரச அதிகாரிகள் நேற்று பாராளுமன்ற சந்திப்பில் சொல்லி உள்ளனர்.

தமிழ் மாணவருக்காக கல்வி்ச் சானல் ஒன்றை ரூபவாகினி நடாத்துவதாகவும், அதனைப் பயன்படுத்துமாறும் கோரி உள்ளனர்.

https://www.dailymirror.lk/latest_news/85-of-northern-people-accustomed-to-watching-Indian-television-channels/342-223168

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஒழுங்கா படிக்கவேண்டிய வயதில் படிக்காமல் சிங்களவன் அது இது என்று கதை வேறு .🤣

சிரித்து… வயிறு நோகுது. 😂 🤣

3 hours ago, கற்பகதரு said:

சிங்கள அரசால் கட்டாயப்படுத்தப்பட்டு தமிழில் படித்த நானும் நீங்களும் யாழ் களத்தில் குப்பை கொட்டத்தான் தகுதியடைந்திருக்கிறோம்.🥲

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

பொதுவாக தமிழ் மொழி திட்டமிட்டு நாசூக்காக ஓரங்கட்டப்படுகின்றது.......புலம்பெயர் நாடுகளில் தமிழ் பிள்ளைகள் எழுத வாசிக்க படிப்பதெல்லாம் மிக குறைவானதே .......ஆனால் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் எண்ணத்தை சொல்வது......!   

புலம்பெயரில் எங்கள்  விரலால் எங்கள் கண்களை குத்திக்கொள்கிறோம் .

அநேக புலம்பெயர் பிள்ளைகள் தமிழ் வேப்பம்காயாக்கி  உள்ளனர் அவர்களுக்கு படிப்பிக்க என்று போன  ஆசிரியர்கள் செய்த வேலையால் .

தெரிந்த சிறுவனிடம் ஏன்  இரண்டாவது பாடமாக தமிழை  தெரிவு செய்யாமல் பிரஞ்சு மொழியை தெரிவு செய்தாய் அது தமிழை விட  கஷ்டமல்லவோ ? பதில் அது கஷ்ட்டம் தான் ஆனால் எனக்கு தமிழ் மொழி படிப்பிக்கும் டீச்சரை பிடிக்கவில்லை அவ தடியுடன் தான் எப்பவும் பாடம் சொல்லிக்கொள்கிறார் மற்றைய கிளாஸ் டீச்சர்கள் அப்படி இல்லை என்கிறார் .

பிரச்சனை  எங்கு என்று தெரிந்தும் தெரியாதது போல் நடித்துக்கொண்டு இருப்பது பெரியவர்களாகிய நாம்தான் .

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இலங்கையின் வடபகுதியில், 85% வீதமானோர் தமிழகத்தில் இருந்து வரும் டிவி குப்பைகளை பார்பதால், கல்விச் சீரழிவு நடக்கின்றது என இலங்கை அரச அதிகாரிகள் நேற்று பாராளுமன்ற சந்திப்பில் சொல்லி உள்ளனர்.

என்ன நாதம்ஸ், இங்கிலிசு மக்கரடிக்குது? லங்காவில படிச்சதோ? அப்பிடியே தெரியுது.

It has been revealed that about 85% of the people in the North are accustomed to watching Indian television channels and as a result children in those areas have less general knowledge of events in the country.

நீங்கள் தந்த இணைப்பில் தமிழகம் பற்றியோ, அங்கிருந்து வரும் டிவி “குப்பை” என்றோ, கல்வி “சீரழிவு” என்றோ எதுவுமே இல்லையே? மேலே அப்பிடியே இங்கிலிசிலேயே தந்திருக்கிறேன் மீண்டும் பாருங்கள். சரியான மொழிபையர்ப்பின்படி    சொல்லப்பட்டிருப்பது, வடக்கில் உள்ள 85 வீதமான மக்கள் இந்திய தொலைக்காட்சி பார்ப்பதால் அவர்களுக்கு நாட்டில் இடம்பெறும் விடயங்கள் பற்றிய பொது அறிவு குறைவாக இருக்கிறது என்பதாகும். அதன் விளக்கம், வடக்கு தமிழருக்கு இந்திய தொலைக்காட்சி தாராளமாக கல்வியையும், உலகறிவையும், இந்தியா பற்றிய அறிவையும் வளங்கிவருகிறது, ஆனால் சிங்களநாட்டில் நடப்பதை மக்கள் அறிய சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதாகும்.

Edited by கற்பகதரு
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

புலம்பெயரில் எங்கள்  விரலால் எங்கள் கண்களை குத்திக்கொள்கிறோம் .

அநேக புலம்பெயர் பிள்ளைகள் தமிழ் வேப்பம்காயாக்கி  உள்ளனர் அவர்களுக்கு படிப்பிக்க என்று போன  ஆசிரியர்கள் செய்த வேலையால் .

தெரிந்த சிறுவனிடம் ஏன்  இரண்டாவது பாடமாக தமிழை  தெரிவு செய்யாமல் பிரஞ்சு மொழியை தெரிவு செய்தாய் அது தமிழை விட  கஷ்டமல்லவோ ? பதில் அது கஷ்ட்டம் தான் ஆனால் எனக்கு தமிழ் மொழி படிப்பிக்கும் டீச்சரை பிடிக்கவில்லை அவ தடியுடன் தான் எப்பவும் பாடம் சொல்லிக்கொள்கிறார் மற்றைய கிளாஸ் டீச்சர்கள் அப்படி இல்லை என்கிறார் .

பிரச்சனை  எங்கு என்று தெரிந்தும் தெரியாதது போல் நடித்துக்கொண்டு இருப்பது பெரியவர்களாகிய நாம்தான் .

ஒன்றிரண்டு பாடசாலைகளில் இங்கு பிறந்து வளர்ந்த இரண்டாம், மூன்றாம் தலைமுறை தமிழ்ப் பிள்ளைகள் ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் படிப்பிக்கின்றனர். அவர்களின் கற்பித்தல் முறை சிறுவர்களைக் கவர்வதால், தமிழ் படிப்பதிலும் விருப்பம் இளவயதிலேயே ஊட்டப்படுகின்றது.

புலம்பெயர் நாட்டு கற்பித்தல் முறைகளுக்கு பரிச்சயமற்ற outdated syllabus உடன் கற்பிக்கும் ஆசிரியர்களால் தமிழ் படிப்பதில் சிறுவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் போவது உண்மைதான். 

Link to comment
Share on other sites

10 minutes ago, கிருபன் said:

என் பிள்ளைகள் இருவரும் தமிழ் சரளமாக கதைப்பார்கள். ஆனால் ஒரு சில தமிழ் (வயதான) ஆசிரியைகளால் தமிழ் பாடசாலைக்கு செல்வதை எப்பவோ நிப்பாட்டியதால் எழுத வாசிக்க முடியாது அவர்களுக்கு. ஒரு தமிழ் ஆசிரியை சனியன், மூதேசி என்றெல்லாம் திட்டியதால் நாங்களே புகார் கொடுக்க வேண்டி வந்தது.

இப்ப கேட்டால், Google translator கொண்டு வாசிப்போம் என்று பதில் தருகின்றார்கள்.

 • Like 1
 • Sad 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

என்ன நாதம்ஸ், இங்கிலிசு மக்கரடிக்குது? லங்காவில படிச்சதோ? அப்பிடியே தெரியுது.

It has been revealed that about 85% of the people in the North are accustomed to watching Indian television channels and as a result children in those areas have less general knowledge of events in the country.

நீங்கள் தந்த இணைப்பில் தமிழகம் பற்றியோ, அங்கிருந்து வரும் டிவி “குப்பை” என்றோ, கல்வி “சீரழிவு” என்றோ எதுவுமே இல்லையே? மேலே அப்பிடியே இங்கிலிசிலேயே தந்திருக்கிறேன் மீண்டும் பாருங்கள். சரியான மொழிபையர்ப்பின்படி    சொல்லப்பட்டிருப்பது, வடக்கில் உள்ள 85 வீதமான மக்கள் இந்திய தொலைக்காட்சி பார்ப்பதால் அவர்களுக்கு நாட்டில் இடம்பெறும் விடயங்கள் பற்றிய பொது அறிவு குறைவாக இருக்கிறது என்பதாகும். அதன் விளக்கம், வடக்கு தமிழருக்கு இந்திய தொலைக்காட்சி தாராளமாக கல்வியையும், உலகறிவையும், இந்தியா பற்றிய அறிவையும் வளங்கிவருகிறது, ஆனால் சிங்களநாட்டில் நடப்பதை மக்கள் அறிய சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதாகும்.

யூட்டர்,

நான் எனது கருத்தை செய்தியின் பின்னனியாக பதிந்தால், அது தந்த இணைப்பில் இல்லை எண்டால் என்னத்தை சொல்ல?

தவிர நான் மொழிபெயர்ப்பு என்று எங்கும் சொல்லவில்லை.

இந்தியாவில்பல மொழிகள் உண்டு. வடக்கே உள்வர்கள் பார்க்கும் மொழி தமிழகத்தின் சீரியல் நாடக குப்பை தான் என்று உங்களுக்கு புரிய வைக்க, மேலே பெருமாள் சொன்னதை தான் சொல்ல வேணும்....

படிக்கிற காலத்தில, ஒழுங்கா படியாம, சிங்களம், இன வெறி அரசு எண்டு இப்ப கதை விடப்படாது....

வடக்கில் மட்டுமல்ல, புலம் பெயர்தேசத்திலும், அந்த குப்பை ஓக்டோபஸ் மாதிரி கையை விரித்து பரவி விட்டது.

தவிர, வேற்று மொழியாளர்கள் என்பதால், கொழும்பில் சற்று நாகரிகமாக சொல்லியிருக்கிறார்கள்.

நான் அப்படி சொல்ல வேண்டிய தேவையில்லையே.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நிழலி said:

என் பிள்ளைகள் இருவரும் தமிழ் சரளமாக கதைப்பார்கள். ஆனால் ஒரு சில தமிழ் (வயதான) ஆசிரியைகளால் தமிழ் பாடசாலைக்கு செல்வதை எப்பவோ நிப்பாட்டியதால் எழுத வாசிக்க முடியாது அவர்களுக்கு. ஒரு தமிழ் ஆசிரியை சனியன், மூதேசி என்றெல்லாம் திட்டியதால் நாங்களே புகார் கொடுக்க வேண்டி வந்தது.

இப்ப கேட்டால், Google translator கொண்டு வாசிப்போம் என்று பதில் தருகின்றார்கள்.

நிழலி உதொரு கதையோ.. கவிதை கட்டுரை எண்டு தமிழில் புலமை உள்ள நீங்களே இப்படி சொல்லலாமா..? சனியன் மூதேசி எண்டா என்ன குறைஞ்சுபோமோ..? அந்நிய நாட்டில இப்படியாவது ஒரு சான்ஸ் தமிழ் படிக்க என் பிள்ளைக்கு கிடைக்குமானால் நான் பிள்ளைக்கு ரீச்சற்ற குணம் நமக்கு தேவை இல்லை நமக்கு மொழிதான் தேவை கொஞ்சநாள் பல்ல கடிச்சுகொண்டு படி வேற ரீச்சர் வந்தா மாறுவம் எண்டு சமாளிச்சு அனுப்பி இருப்பன்.. எனக்கு என் பிள்ளை எப்படியாவது என் மொழியை கற்கவேணும்.. அதை இழந்துவிட்டு இப்ப நீங்கள் சொல்லுறமாரி என்ர பிள்ளை தமிழ்வாசிக்கமாட்டான் எண்டு வந்து நான் சொல்லுறதை என்னால கனவிலும் நினைச்சு பாக்கமுடியாது ஜீரணிக்கவும் முடியாது.. என்னால என் பிள்ளைக்கு தமிழில் என் உணர்வுகளை எண்ணங்களை சிந்தனைகளை என் கனவுகளை அதே உயிர்ப்போடு பரிமாறிக்கொள்வதுபோல் வேறு எந்த மொழியிலும் பரிமாறுவதை நினைத்துகூட பார்க்கமுடியாது..

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்குப் போய்த் தான் தமிழ் படிக்க வேண்டுமென்பதில்லை.

பிள்ளைகளுக்கு தமிழ் தெரிய வேண்டுமென்றால் அதை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம்.

அதைத் தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு செய்தோம்.

 • Like 3
Link to comment
Share on other sites

10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நிழலி உதொரு கதையோ.. கவிதை கட்டுரை எண்டு தமிழில் புலமை உள்ள நீங்களே இப்படி சொல்லலாமா..? சனியன் மூதேசி எண்டா என்ன குறைஞ்சுபோமோ..? அந்நிய நாட்டில இப்படியாவது ஒரு சான்ஸ் தமிழ் படிக்க என் பிள்ளைக்கு கிடைக்குமானால் நான் பிள்ளைக்கு ரீச்சற்ற குணம் நமக்கு தேவை இல்லை நமக்கு மொழிதான் தேவை கொஞ்சநாள் பல்ல கடிச்சுகொண்டு படி வேற ரீச்சர் வந்தா மாறுவம் எண்டு சமாளிச்சு அனுப்பி இருப்பன்.. எனக்கு என் பிள்ளை எப்படியாவது என் மொழியை கற்கவேணும்.. அதை இழந்துவிட்டு இப்ப நீங்கள் சொல்லுறமாரி என்ர பிள்ளை தமிழ்வாசிக்கமாட்டான் எண்டு வந்து நான் சொல்லுறதை என்னால கனவிலும் நினைச்சு பாக்கமுடியாது ஜீரணிக்கவும் முடியாது.. என்னால என் பிள்ளைக்கு தமிழில் என் உணர்வுகளை எண்ணங்களை சிந்தனைகளை என் கனவுகளை அதே உயிர்ப்போடு பரிமாறிக்கொள்வதுபோல் வேறு எந்த மொழியிலும் பரிமாறுவதை நினைத்துகூட பார்க்கமுடியாது..

நான் தமிழில் எழுதுவதற்கு காரணம் தமிழ் மொழி தவிர எனக்கு வேறு மொழிகள் தெரியாமையால் தான். ஆங்கில அறிவு அன்றாடம் என் தொழிலை செய்வதற்கான அளவு தான் உள்ளதால் தமிழில் எழுதுகின்றேன். 

ஆனால் இங்குள்ள பிள்ளைகளுக்கு தமிழ் மொழி என்பது இரண்டாம் மூன்றாம் பட்சம் தான். தம் நண்பர்களுடன், மச்சான் / மச்சாள்களுடன் மற்றும் எங்கு வெளியே சென்றாலும் அவர்கள் கதைப்பது ஆங்கிலம் அல்லது அந்தந்த நாடுகளில் உள்ள முதன்மை மொழியில் தான். அப்படி இருக்கும் போது, 'உன் தாய் மொழி தமிழ் ஆகவே அதை நீ எவ்வளவு மோசமான ஆசிரியர்கள் கிடைத்தாலும் அதைக் கட்டாயம் படித்தே ஆக வேண்டும்' என்று திணிக்க முடியாது. அவ்வாறு திணிப்பதால் ஒரு பலனும் ஏற்படாது - வெறுப்பு மட்டுமே வளரும்.

அத்துடன் என் கனவை, ஆசையை, உணர்வை என் பிள்ளைகள் மீது திணிப்பது என் பண்பும் அல்ல. அவர்களுக்கான உலகை அவர்களே உருவாக்கட்டும்.

உங்கள் பிள்ளைகள் தமிழ் கற்று தமிழ் மொழியை வளர்க்க என் வாழ்த்துகள்.

 • Like 2
Link to comment
Share on other sites

இங்குள்ள ஒரு தமிழ் அமைப்புக்காக  அண்மையில் என் உறவினர் ஒருவரின் இரண்டு பிள்ளைகள் நவராத்திரியின் பெருமை பற்றி ஒரு சிறு பேச்சை பேசியும் ஆத்திசூடியை முழுமையாக சொல்லியும் ஒரு காணொளி நவராத்திரிக்காக தயாரித்து வெளியிட்டு இருந்தார்கள். சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு லைக்குகளை அள்ளியும் பாராட்டுகளையும் பெற்று இருந்தார்கள்.

கடந்த வாரம் அச் சிறுவர்களை கண்டு கதைக்கும் போது, ஆத்திசூடியில் சொல்லப்பட்ட சிலவற்றின் அர்த்தம் / பொருள் என்ன என்று கேட்க, அவர்களுக்கு எதுவுமே தெரிந்து இருக்கவில்லை. நவராத்திரி என்ற சொல்லில் இருக்கும் 'நவம்' என்றதன் அர்த்தம் கூட தெரிந்து இருக்கவில்லை. கிளிப்பிள்ளை போன்று தாய் மற்றும் ஆசிரியை சொன்னதை அப்படியே நிகழ்ச்சியில் ஒப்புவித்து இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.

இவ்வாறுதான் இங்குள்ளவர்களின் தமிழ் படிப்பித்தலும் தமிழ் பேசும் பெருமையும் வளர்கின்றது போலும்.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

மன்னிக்க வேணும்.....

எனக்கும் ஆத்திசூடி தெரியாது.....

தவிர... நவ(ம்) என்பது... வடமொழிச் சொல் தானே....

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

Just now, Nathamuni said:

தவிர... நவ(ம்) என்பது... வடமொழிச் சொல் தானே....

நவராத்திரியே வடமொழிச் சொல் மட்டுமல்லாது ஆரிய பெண் கடவுள்களை கொண்டாடும் ஒன்று தானே.

2 minutes ago, Nathamuni said:

...எனக்கும் தெியாது...

இதன் அர்த்தமும் அம்மான எனக்கு தெரியாது

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

இதன் அர்த்தமும் அம்மான எனக்கு தெரியாது

சரியா எழுதி விட்டேன்.... 😂

இரண்டு 20 வயதுப் பெடியள்.... ரஜனியின் அண்ணாத்தே பார்பது குறித்து பேசுவதை கேட்டு....

எனக்கென்னவோ... இந்த தமிழ் படங்கள் இருக்கும் வரை, தமிழ் வாழும் போலுள்ளது.... 😁

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

8 minutes ago, Nathamuni said:

மன்னிக்க வேணும்.....

எனக்கும் ஆத்திசூடி தெரியாது.....

ஆத்திசூடி தெரியாமல் இருப்பது தவறல்ல நாதம். ஆனால் அதன் அர்த்தம் தெரியாது கிளிப்பிள்ளை போல அதை மனனம் செய்து ஒப்புவித்து விட்டு 'எனக்கு என் பிள்ளைக்கு தமிழ் தெரியும்' என உலகத்தை ஏமாற்ற நினைப்பது தான் தவறு.

 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.