Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நிழலி said:

நான் தமிழில் எழுதுவதற்கு காரணம் தமிழ் மொழி தவிர எனக்கு வேறு மொழிகள் தெரியாமையால் தான். ஆங்கில அறிவு அன்றாடம் என் தொழிலை செய்வதற்கான அளவு தான் உள்ளதால் தமிழில் எழுதுகின்றேன். 

ஆனால் இங்குள்ள பிள்ளைகளுக்கு தமிழ் மொழி என்பது இரண்டாம் மூன்றாம் பட்சம் தான். தம் நண்பர்களுடன், மச்சான் / மச்சாள்களுடன் மற்றும் எங்கு வெளியே சென்றாலும் அவர்கள் கதைப்பது ஆங்கிலம் அல்லது அந்தந்த நாடுகளில் உள்ள முதன்மை மொழியில் தான். அப்படி இருக்கும் போது, 'உன் தாய் மொழி தமிழ் ஆகவே அதை நீ எவ்வளவு மோசமான ஆசிரியர்கள் கிடைத்தாலும் அதைக் கட்டாயம் படித்தே ஆக வேண்டும்' என்று திணிக்க முடியாது. அவ்வாறு திணிப்பதால் ஒரு பலனும் ஏற்படாது - வெறுப்பு மட்டுமே வளரும்.

அத்துடன் என் கனவை, ஆசையை, உணர்வை என் பிள்ளைகள் மீது திணிப்பது என் பண்பும் அல்ல. அவர்களுக்கான உலகை அவர்களே உருவாக்கட்டும்.

உங்கள் பிள்ளைகள் தமிழ் கற்று தமிழ் மொழியை வளர்க்க என் வாழ்த்துகள்.

முதலில் வாழ்த்துக்கு நன்றி நிழலி..

அப்புறம் என்னை என் பாட்டி தன் தோழிலும் மார்பிலும் சுமந்து சென்று கதைகதையாக சொல்லுவார்கள்.. அவர்கள் வாழ்வை வாழ்வியல் அனுபவங்களை அழகழகாக கேட்டவாறே அவர்கள் தோழில் ஏறி நின்று இந்த உலகை பார்த்து வியந்து என்கற்பனை சிறகுகளை விரித்து வளர்ந்திருக்கிறேன்.. அதற்காக என் பாட்டி என்மீது எதையும் திணிக்கவில்லை.. என் உலகை நான் தான் உருவாக்கினேன்.. அதை என்பாட்டியின் அனுபவங்களும் கதைகளும் இன்னும் அழகாக்கின.. இதை திணிப்பு என்று சொல்வீர்களா..? திணிப்பு என்றால் நீ டாக்டராதான் ஆகனும் நீ என்சினியராதான் ஆகணும் அப்படியென்று யாழ்ப்பாண பனங்கொட்டை மனப்பான்மை பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது திணிப்பது.. நான் சொல்லவந்தது அதுவல்ல.. தமிழ்பிள்ளைகளுக்கு மட்டும்மல்ல வெள்ளைக்கார பிள்ளைகள் வேறு நாட்டில் வாழ்ந்து அவர்கள் வேறுமொழி தாய்தகப்பன் உறவுகள் வேறுமொழி எழுதி பேசும்போது அந்தக்குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பெறக்கூடிய நிறைய வழிகாட்டுதல்களை இழப்பார்கள்.. நீங்கள் படித்த நல்லபுத்த்கங்களை கூட பிள்ளைகள் வாசிக்கமுடியா நிலை ஏற்படும்.. உங்களுக்கு அந்த ஆசிரியர் சரிவராவிட்டால் மாற்று ஏற்பாடு செய்திருக்கலாம்.. அல்லது வீட்டிலாவது வழிகாட்டி தமிழ் எழுத வாசிக்க பழக்கி இருக்கலாம்.. எனிவே அது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.. இது என் ஆதங்கம் மட்டுமே.. நன்றி..

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஒன்றிரண்டு பாடசாலைகளில் இங்கு பிறந்து வளர்ந்த இரண்டாம், மூன்றாம் தலைமுறை தமிழ்ப் பிள்ளைகள் ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் படிப்பிக்கின்றனர். அவர்களின் கற்பித்தல் முறை சிறுவர்களைக் கவர்வதால், தமிழ் படிப்பதிலும் விருப்பம் இளவயதிலேயே ஊட்டப்படுகின்றது.

விகிதசாரப்படி பார்த்தால் ஒரு வீதத்துக்கும் குறைவானதே வெள்ளம் தலைக்கு மேல் ஓடத்தொடங்கி பலவருடங்கள் ஆயிற்று லொக் டவுன் புண்ணியத்தில் அனைவரின் வீட்டிலும்  சரளமாக தமிழ் நாக்கில் நுழைவது பார்த்து சந்தோசப்படுவது தற்காலிக சந்தோசம் .

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

ஆத்திசூடி தெரியாமல் இருப்பது தவறல்ல நாதம். ஆனால் அதன் அர்த்தம் தெரியாது கிளிப்பிள்ளை போல அதை மனனம் செய்து ஒப்புவித்து விட்டு 'எனக்கு என் பிள்ளைக்கு தமிழ் தெரியும்' என உலகத்தை ஏமாற்ற நினைப்பது தான் தவறு.

 

அதுவும் சரிதான்.

அறிவிப்பாளர் அப்துல் கமீத் சுவிஸ் வந்திருந்தார்....

ஒரு அண்ணன், தங்கை.... குத்து டான்ஸ் ஆடுகிறார்கள்.

சரக்கு வை்சிருக்கேன்..... கறுத்த கோழி..... மிளகு போட்டு வறுத்து வைச்சிருக்கேன்.....

கோழி ருசியா இருந்தால்.... கோழியை வெட்டு..... குமரி ருசியா இருந்தால்.... குமரியை வெட்டு......

நன்றாக ஆடுகிறார்கள்..... கூட்டம் கை தட்டுகிறது....

அப்துல் கமீது..... வேதனையுடன் சொன்னார்.... பாட்டின் அர்த்தம் தெரியாமல்.... குழந்தைகள், அதுவும் சகோதரர்கள் பாடுகிறார்கள்.

எது சரி, எது பிழை என்பதை, வளர்ந்தவர்கள், முக்கியமாக பெற்றவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று, அவருக்குரிய இங்கிதத்துடன் சொன்னார்....

தந்தை.... பின்னர் மன்னிப்பு கேட்டதுடன்... இனி கவனமாக இருப்பதாகவும் உறுதி கொடுத்தார்.

 • Like 4
 • Thanks 1
Link to comment
Share on other sites

8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

முதலில் வாழ்த்துக்கு நன்றி நிழலி..

அப்புறம் என்னை என் பாட்டி தன் தோழிலும் மார்பிலும் சுமந்து சென்று கதைகதையாக சொல்லுவார்கள்.. அவர்கள் வாழ்வை வாழ்வியல் அனுபவங்களை அழகழகாக கேட்டவாறே அவர்கள் தோழில் ஏறி நின்று இந்த உலகை பார்த்து வியந்து என்கற்பனை சிறகுகளை விரித்து வளர்ந்திருக்கிறேன்.. அதற்காக என் பாட்டி என்மீது எதையும் திணிக்கவில்லை.. என் உலகை நான் தான் உருவாக்கினேன்.. அதை என்பாட்டியின் அனுபவங்களும் கதைகளும் இன்னும் அழகாக்கின.. இதை திணிப்பு என்று சொல்வீர்களா..? திணிப்பு என்றால் நீ டாக்டராதான் ஆகனும் நீ என்சினியராதான் ஆகணும் அப்படியென்று யாழ்ப்பாண பனங்கொட்டை மனப்பான்மை பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது திணிப்பது.. நான் சொல்லவந்தது அதுவல்ல.. தமிழ்பிள்ளைகளுக்கு மட்டும்மல்ல வெள்ளைக்கார பிள்ளைகள் வேறு நாட்டில் வாழ்ந்து அவர்கள் வேறுமொழி தாய்தகப்பன் உறவுகள் வேறுமொழி எழுதி பேசும்போது அந்தக்குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பெறக்கூடிய நிறைய வழிகாட்டுதல்களை இழப்பார்கள்.. நீங்கள் படித்த நல்லபுத்த்கங்களை கூட பிள்ளைகள் வாசிக்கமுடியா நிலை ஏற்படும்.. உங்களுக்கு அந்த ஆசிரியர் சரிவராவிட்டால் மாற்று ஏற்பாடு செய்திருக்கலாம்.. அல்லது வீட்டிலாவது வழிகாட்டி தமிழ் எழுத வாசிக்க பழக்கி இருக்கலாம்.. எனிவே அது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.. இது என் ஆதங்கம் மட்டுமே.. நன்றி..

நன்றி ஓணாண்டி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

சனியன் மூதேசி எண்டா என்ன குறைஞ்சுபோமோ..?

நல்லகாலம் பிள்ளைகள் டீச்சர் தமிழில் புல்லிங் பண்ணுறா என்று ஒரு போன் கோல் போகவில்லை போயிருந்தால் தெரிந்து இருக்கும் .

 

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அந்நிய நாட்டில இப்படியாவது ஒரு சான்ஸ் தமிழ் படிக்க என் பிள்ளைக்கு கிடைக்குமானால் நான் பிள்ளைக்கு ரீச்சற்ற குணம் நமக்கு தேவை இல்லை நமக்கு மொழிதான் தேவை கொஞ்சநாள் பல்ல கடிச்சுகொண்டு படி வேற ரீச்சர் வந்தா மாறுவம் எண்டு சமாளிச்சு அனுப்பி இருப்பன்.. எனக்கு என் பிள்ளை எப்படியாவது என் மொழியை கற்கவேணும்.. அதை இழந்துவிட்டு இப்ப நீங்கள் சொல்லுறமாரி என்ர பிள்ளை தமிழ்வாசிக்கமாட்டான் எண்டு வந்து நான் சொல்லுறதை என்னால கனவிலும் நினைச்சு பாக்கமுடியாது ஜீரணிக்கவும் முடியாது..

உங்களின் நடிப்புக்கு தமிழ் மொழி பலியாகிவிட்டது .

2 hours ago, பெருமாள் said:

பிரச்சனை  எங்கு என்று தெரிந்தும் தெரியாதது போல் நடித்துக்கொண்டு இருப்பது பெரியவர்களாகிய நாம்தான் .

 

என்ன அரிசியை சாப்பிட்டால் தேகம் ஆரோக்கியமாக இருக்கும் எதை சாப்பிட்டால் சுகர் குறையும் எனும் வயதுகளை நெருங்கி உள்ளோம் இனி இருக்கும் காலப்பகுதிகளில் தன்னும் யதார்த்தை  உணர்ந்து செயற்படுவோம் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழை பிறர்/பிற மாநிலத்தவர் கேலி பண்ணுகிறார்கள், ஒடுக்க பார்க்கிறார்கள் அழிக்க பார்க்கிறார்கள் என்பதை ஒரு ஓரமாக தள்ளி வைத்துவிட்டு  தமிழை சித்தக்கும் நடவடிக்கையை முதலில்  முன்னெடுத்தவர்கள் யார் என்பதை பார்த்தாகவேண்டும்.

திரைதுறை என்று பார்க்கும்போதே ஆரம்பகாலத்தில் படங்கள் பாடல்கள் தூய தமிழில் வந்தது , அதுவே பின்னாடி தமிழுடன் கொஞ்சம் ஆங்கிலம் கலந்து வெளியிடப்பட்டது ,காலங்கள் ஓடி இந்நாளில் ஆங்கிலத்தின் இடை நடுவில் சில சில தமிழ் வார்த்தைகளை செருகி தமிழ்படம்  அல்லது பாடல்கள் என்று சொல்லபடுகிறது அந்த நிலையில்  தமிழை கோடாலி போட்டு பொளந்தது வேறொரு இனம் /மாநிலம்/ நாடு அல்ல.

On 22/10/2021 at 12:09, பாலபத்ர ஓணாண்டி said:

அருகிருந்தவன் பொறுக்கமாட்டாமல், சரிவிடு பா நீங்கதான் உலகம் பூராவும் பரவி இருக்கீங்க. சுரண்டித் தின்ன பெங்களூரப்போல என்றான்

இதை சொல்ல உலகில் எவனுக்குமே அருகதை இல்லை, உலகின் வளர்ந்த நாடுகளிலிருந்து வறுமைகோட்டுக்குள் வாழும் நாடுகள்வரை புலம் பெயராமல் உலகம் முழுவதும் பரவாமல் அந்நியநாடுகளில் கல்வி தொழில் வருவாய் என ஈட்டாமல் வாழும் இனம் என்று எதுவுமேயில்லை.

அதிலும் கர்நாடகாகாரர் தமிழகத்தில் திரைதுறை தொழில்துறை அரச உயரதிகாரிகள் ரயில்வே  என்று பரவி  தமிழகத்தை சுரண்டி பொழைக்க கை வைக்காத துறையே இல்லை. அதைவிடுத்து வட அமெரிக்கா ஐரோப்பா  மத்திய கிழக்கு எங்குமே கர்நாடககாரர் தகவல் தொழில்நுப துறையிலிருந்து  ஜோசியம், ஆயுர்வேத வைத்தியம் என்று அடுத்தவனிடம் சுரண்டும் தொழிலில் ஈடுபட்டு பாலியல் சுரண்டல்களிலிருந்து பண சுரண்டல்கள்வரை பண்ணுகிறார்கள்.

இதை அவருடன் பகிர்ந்து கொள்ளாமல் எழுந்து வந்து பேஸ்புக்கில் கட்டுரை வரைந்தவர் ஒதுங்கி போனார் என்று அர்த்தமா இல்லை உணர்ச்சிவச கட்டுரை ஒன்று வரைந்து தன் பக்கம் பிறரை ஈர்ப்பதற்கு முனைந்தார் என்று நோக்கவா?

தமிழில் மட்டுமே பேசினால் அவரை பட்டிக்காடு என்று சொல்லும் அளவிற்கும் ஆங்கிலம் தெரியாதவர் என்ற முடிவிற்கும் வரும் நிலையில் தமிழினமே இருக்கிறது , அதுமட்டுமில்லாமல் அவரை கேலி செய்யவும் முனைகிறது, திரைபடங்களில் தமிழாசிரியர் ஒரு கேலி கதாபாத்திரமாக உருவகபடுத்தபடுகிறார்.

கொஞ்சம் விலகி நம்மவர் பக்கம் வந்தால் புலம் பெயர் நாடுகளில் எமது பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்று பெரும் கெளரவமாக கம்பீரமாக சொல்லி திரிந்த பெற்றோர் பின்னாளில் பிள்ளைகள் என்ன பேசுகிறார்கள் எவர்கூட போய் வருகிறார்கள் என்பதையே புரிந்து கொள்ள முடியாமல் தவித்து தமிழை கொஞ்சம் கற்க வைத்திருக்கலாமே என்று அலறுவதை கண்டிருக்கிறேன்.

ஒரு காலம் இந்திய திரைபடங்கள் பாடல்கள் தமிழின் வளர்ச்சியை சிதைக்கின்றன என்று புலம்பெயர் நாடுகளில் முழங்கிய பேச்சாளர்கள் ஆய்வாளர்கள் இருந்தார்கள், இன்று அதே இந்திய திரைபடங்கள் பாடல்கள்தான் இங்கு பிறந்து வளர்ந்த பல இளையோருக்கு தமிழை ஓரளவாவது பேச உச்சரிக்க ,பாட வைக்கிறது என்பதே யதார்த்தம். அதுவும் இல்லையென்றால் இங்கு பிறந்த தமிழர்களின் வாரிசுகளுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் தமிழ் எந்த வகையிலும் தேவைபடாத ஒன்றாகவே போயிருக்கும்.

அதற்கு அடிதளம் போட்டு கொடுத்ததே அவர்களின் தமிழ் பெற்றோர்களேயன்றி இன்னொரு இனத்தை சேர்ந்தவன் அல்ல.

புதிய தலைமுறைக்கு தமிழை ஓரளவாவது பரப்பியதில் முன்னணி வகித்த புலம்பெயர்நாடுகள் சுவிசும் ஜேர்மனியும் மட்டுமே.

தமிழில் மட்டும் கல்வி கற்றால் நிச்சயமாக எல்லைகள் கடந்துவிட்டால் தொழில் வாய்ப்புகள் தேட முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை .

அதே நேரம் தமிழை தவிர்த்தால்தான் பிற மொழியை கற்றுக்கொண்டு சமுதாயத்தில் உயர் அந்தஸ்துக்கு வரலாம் என்று எம்மவர்கள் நம்பி அவர்களின் புதிய தலைமுறைகளை உருவாக்கி வைத்தது  மிக மோசமான முன்னேற்பாடு என்பதும் மறுக்கபட முடியாத உண்மை.  

தமிழை சிதைக்க ஒடுக்க அழிக்க பிறர் பிறர் தேவையில்லை தமிழர்களே போதும். எதுக்கெடுத்தாலும் அநியாயமாக அடுத்தவர்மேல் பழி போடாதீர்கள்.

 

 

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிழலி இப்பகுதியில் தெரிவித்த எல்லாமே நல்ல கருத்துக்கள் 👍

18 hours ago, valavan said:

உணர்ச்சிவச கட்டுரை ஒன்று வரைந்து தன் பக்கம் பிறரை ஈர்ப்பதற்கு முனைந்தார் என்று நோக்கவா?

கட்டுரை எழுதியவரின் நோக்கம் அப்படி என்று தான் நினைக்கிறேன்.
என்னுடைய கன்னட நண்பர்கள் எவ்வளவு நெருங்கியவர்களானாலும் நேரம் பார்த்து என்னை தமிழன் என்று கேலி செய்வதைக் கவனித்திருக்கிறேன் என்று சொல்கிறார். நாம் படித்த வேலை பார்க்கும் இடங்களில் இனவெறுப்பு கொண்டவர்கள் இருக்கலாம், ஆனால் நண்பர்கள் என்று இருப்பவர்கள் இன வெறுப்பு பார்ப்பவர்களாக இருக்க மாட்டார்கள் எங்களை சிறுமைபடுத்துபவர்களாக இருக்க மாட்டார்கள்.
இந்திய தமிழ் திரைபடங்கங்களால் தமிழ் பேசும் மொழியாக ஓரளவு காலம் வாழும் என்று தான் நினைக்கிறேன். எனது நண்பருக்கு தமிழ் எழுத, படிக்க தெரியாது.  ஆனால் திரை அரங்கிற்கு சென்று தமிழ்படம் பார்ப்பார். தமிழ்பாட்டுக்கள் விரும்பி கேட்பார். அவரால் தான் கடைசியாக ஒரு ரஜனி காந்தின் படம் ஒன்று திரைஅரங்கிற்கு சென்று பார்த்தோம் 😂

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.