Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மெனிக்கே மகே ஹித்தே: பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவே காரணம்- நளின் டி சில்வா கருத்து


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மெனிக்கே மகே ஹித்தே: பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவே காரணம்- நளின் டி சில்வா கருத்து

October 23, 2021
 
menike song மெனிக்கே மகே ஹித்தே: பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவே காரணம்- நளின் டி சில்வா கருத்து

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள மக்களையும் வென்றெடுப்பதற்காக இந்தியா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறதாக சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இளம் சிங்கள பாடகி யோஹானி டி சில்வாவின் “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவின் சூழ்ச்சியான வேலையாக இருக்கலாம் எனவும் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு இந்தியா மீதுள்ள அதிருப்தியை போக்கு வதற்காக இந்தியா, யோஹானி டி சில்வாவை தெரிவு செய்துள்ளது.

இலங்கையில் இதுவரை பிரபலமாகாத அந்த பாடலுக்குத் திட்டமிட்ட அடிப்படையில் பிரச்சாரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனர், அமி தாப்பச்சன் மாத்திரமல்ல, சல்மான்கான்போன்றோரும் இதற்கு உதவி வருகின்றனர்.

இந்தியத் திரை கலைஞர்கள் தன்னிச்சையாக உதவவில்லை. சிலர் அவர்களை வழிநடத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா என்பது இலங்கையை விட மிகவும் திட்டமிட்டு வேலை செய்யக் கூடிய நாடு. அந்நாட்டின் நிர்வாக அதிகாரிகள், உளவுப் பிரிவுகள் என்பன வேலை செய்கின்றன எனவும் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த அதிருப்தியைப் போக்க இந்தியா இலங்கை பாடகியைத் தெரிவு செய்துள்ளது. அந்த பாடகி, முக்கிய பிரமுகர் ஒருவரின் மகள் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.

இலங்கையில் கூட பிரபலமாக இல்லாத பாடலுக்கு இந்தியாவில் குறித்த பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளம்பரப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

https://www.ilakku.org/manike-mage-hithe-song-comment-by-nalin-de-silva/

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாய்த்தான் இந்த பாட்டு பிரபலமானது போல கிடக்கு....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

என்னைப் பொறுத்த வரைக்கும் இந்தப்பாடல் செயற்கையாகத்தான் பரப்பப்பட்டிருக்கிறது. மக்கள் விரும்பி பார்க்காமல் அவர்களுடைய யூரியூப் ஊட்டத்தில் இது யுரியூப்பால் ஊட்டப்பட்டிருக்கலாம் என்றே எண்ணுகிறேன், ஏதேனும் உள்நோக்கத்திற்காக!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடல் எழுந்தமானமாக பாடப்பட்டிருந்தாலும்.. அது பரந்தளவில் விசிறிகளைச் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளில்.. தமிழ்.. மலையாளத்திலும் கலப்பு மொழிப் பாட்டுக்களாகவும் வெளியிடப்பட்டிருந்தது.

இதில்.. ஒரு போர்க்குற்றவாளியின் மகளின் பாடலை மையமாக வைத்து சிங்கள இராணுவத்தை தூய்மைப்படுத்திக் காட்டும் உள்நோக்கமும் நிறைந்திருக்கிறது.

அதன் பின்னணியில் ஹிந்திய போர்க்குற்றவாளிகளும் குறிப்பாக றோ போன்ற சக்திகளும்.. பரப்புகைக்கு உதவி இருக்கலாம். 

றோ மற்றும் இஸ்ரோ முள்ளிவாய்க்கால் மனிதப் பேரழிவில் நேரடியாகப் பங்காற்றியமை உலகறிந்த விடயமே. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

என்னைப் பொறுத்த வரைக்கும் இந்தப்பாடல் செயற்கையாகத்தான் பரப்பப்பட்டிருக்கிறது. மக்கள் விரும்பி பார்க்காமல் அவர்களுடைய யூரியூப் ஊட்டத்தில் இது யுரியூப்பால் ஊட்டப்பட்டிருக்கலாம் என்றே எண்ணுகிறேன், ஏதேனும் உள்நோக்கத்திற்காக!

இது உண்மையா என்பது தெரியவில்லை ஆனால், சிந்திக்க வைக்கக்கூடிய கருத்து.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாடல் பிலபல்யமான விடயம் சிங்கள தேசியவாதிக்கும் பிடிக்கவில்லை,  தமிழ் தேசியவாதிக்கும் பிடிக்கவில்லை.

ஆனால் ………

உலகெங்கும் வாழும் இசை ரசிகர்களுக்கு மொழி வேறுபாடுன்றி பிடித்திருக்கிறது. அது தான் இசையின் வலிமை. இத்த பாடல் பிடித்தவர்கள் இதைக் கேட்டு மகிழலாம். பிடிக்காதவர்கள் தமக்கு பிடித்த வேறு பாடலை கேட்டு மகிழலாம். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உலக இசை ரசிகர்களை எல்லாம் கொள்ளை கொள்ளும் அளவுக்கு இந்தப் பாடலில் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது?

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வாலி said:

உலக இசை ரசிகர்களை எல்லாம் கொள்ளை கொள்ளும் அளவுக்கு இந்தப் பாடலில் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது?

வை திஸ் கொலை வெறி பாடலில் என்ன இசை நுணுக்கம் இருந்து உலகெங்கும் ட்ரென்ட் ஆனது? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, tulpen said:

வை திஸ் கொலை வெறி பாடலில் என்ன இசை நுணுக்கம் இருந்து உலகெங்கும் ட்ரென்ட் ஆனது? 

அதைத்தான் நான் கேட்கிறேன். கொலவெறி பாடலிலும் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது.  நான் எந்தஒரு சந்தர்ப்பத்திலும் இந்த கொலவெறி பாடலை ஒரு பாடலாகவே எடுத்துக்கொண்டது கிடையாது.

அது போக, ஒரு தவறு விடப்பட்டால் அந்தத் தவற்றை மேற்கோள்காட்டி இன்னொரு தவறு விடப்படவேண்டுமா? 

கொத்தலாவலை இராணுவ பல்கலைகழக் பட்டதாரியும் , போர்க்குற்றவாளி ஒருவரின் மகளையும் தூக்கிப் பிடிக்கவேண்டிய அவசியம் தமிழ்ச் சமுகத்துக்கு ஏன் தேவைப்படுகிறது?. 

இதுவே இராணுவத்துடன் எந்தவகையிலும் தொடர்பு இல்லாத ஒரு சாதாரண சிங்களப்பெண்ணாக இருந்தால் தூக்கிக் கொண்டாடியிருக்கலாம்.

 

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இத்தனைக்கும் அதன் மூலப்பாடல் கடந்த வருடம் வந்திருந்தது. யாரும் கவனிக்கப்படாமல்

இந்த பாடலின் பிரபல்யத்துக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கு என்றேபடுகிறது. (ஒரு தமிழனை சேர்ந்து பாட வைத்தது உட்பட)

அதில் எமக்குள் புடுங்குப்படுவதும் ஒன்றாக இருக்கலாம். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாலி said:

அதைத்தான் நான் கேட்கிறேன். கொலவெறி பாடலிலும் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது.  நான் எந்தஒரு சந்தர்ப்பத்திலும் இந்த கொலவெறி பாடலை ஒரு பாடலாகவே எடுத்துக்கொண்டது கிடையாது.

அது போக, ஒரு தவறு விடப்பட்டால் அந்தத் தவற்றை மேற்கோள்காட்டி இன்னொரு தவறு விடப்படவேண்டுமா? 

கொத்தலாவலை இராணுவ பல்கலைகழக் பட்டதாரியும் , போர்க்குற்றவாளி ஒருவரின் மகளையும் தூக்கிப் பிடிக்கவேண்டிய அவசியம் தமிழ்ச் சமுகத்துக்கு ஏன் தேவைப்படுகிறது?. 

இதுவே இராணுவத்துடன் எந்தவகையிலும் தொடர்பு இல்லாத ஒரு சாதாரண சிங்களப்பெண்ணாக இருந்தால் தூக்கிக் கொண்டாடியிருக்கலாம்.

 

வாலி உங்களுக்கு பிடிக்காத ஒரு பாடலை ரசிக்குமறு கட்டாயப்படுத்தும் உரிமை  எவருக்கும் இல்லை.  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

பாடல் பிலபல்யமான விடயம் சிங்கள தேசியவாதிக்கும் பிடிக்கவில்லை,  தமிழ் தேசியவாதிக்கும் பிடிக்கவில்லை.

ஆனால் ………

உலகெங்கும் வாழும் இசை ரசிகர்களுக்கு மொழி வேறுபாடுன்றி பிடித்திருக்கிறது. அது தான் இசையின் வலிமை. இத்த பாடல் பிடித்தவர்கள் இதைக் கேட்டு மகிழலாம். பிடிக்காதவர்கள் தமக்கு பிடித்த வேறு பாடலை கேட்டு மகிழலாம். 

உங்களுக்கு இந்தப் பாடல் பிடித்ததோ இல்லையோ, சிங்களத்தைக் குறை கூறுவது பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

இந்தப் பாடல் எழுந்தமானமாக பாடப்பட்டிருந்தாலும்.. அது பரந்தளவில் விசிறிகளைச் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளில்.. தமிழ்.. மலையாளத்திலும் கலப்பு மொழிப் பாட்டுக்களாகவும் வெளியிடப்பட்டிருந்தது.

இதில்.. ஒரு போர்க்குற்றவாளியின் மகளின் பாடலை மையமாக வைத்து சிங்கள இராணுவத்தை தூய்மைப்படுத்திக் காட்டும் உள்நோக்கமும் நிறைந்திருக்கிறது.

அதன் பின்னணியில் ஹிந்திய போர்க்குற்றவாளிகளும் குறிப்பாக றோ போன்ற சக்திகளும்.. பரப்புகைக்கு உதவி இருக்கலாம். 

றோ மற்றும் இஸ்ரோ முள்ளிவாய்க்கால் மனிதப் பேரழிவில் நேரடியாகப் பங்காற்றியமை உலகறிந்த விடயமே. 

 

கலைஞர் யோகானி மூன்று வருடங்களுக்கு முன் யூரியூப்பில் பகிர்ந்த நேர்காணல் பார்த்தேன். நாம் அறியவில்லை. ஆனால், அப்போதே அவர் பிரபலமாகி விட்டார். இப்போது இன்னோர் படிமுறையில் செல்கின்றார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் சிங்களம் இந்த பாடலையும் அரசியல் ஆயுதமாக எடுத்து விட்டது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த சில்லறைகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாலேயே இது பிரபல்யமாகிறது. பாத்தோமா போனோமா என்று போய்க்கொண்டே இருப்போம்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடல் நிச்சயமாக ஏதோ ஒரு மறை நோக்கத்துக்காக் வலிந்து பரப்பபட்டுள்ளது என்பது கண்கூடு.

பெரும் எண்ணிக்கையில் பின் தொடர்பாளர்களை கொண்ட அமிதாப்பச்சன் போன்றவர்களின் ஒவ்வொரு endorsement உம் மிக பெரும் பண மதிப்புக்கு உரியது. அவர்கள் யாரோ ஒரு முகம் தெரியாத இலங்கை பாடகியின், சப்பையான ஒரு பாடலை இப்படி முன்னுரிமை கொடுத்து இலவசமாக promote பண்ணும் போதே இதன் பின்னான திட்டம் அம்பலமாகி விடுகிறது.

யாழ் உட்பட தமிழ் தளங்களிலும் தமிழர் மத்தியில் சமூக வலைதளங்களிலும் இதை காவி வந்தவர்களை கூர்ந்து அவதானித்தால் - இந்த சந்தேகம் மேலும் உறுதியாகும்.

யாழில் இந்த சந்தேகம் ஆகஸ்டு 17 அன்றே எழுப்பபட்டுவிட்டது.

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

யாழ் உட்பட தமிழ் தளங்களிலும் தமிழர் மத்தியில் சமூக வலைதளங்களிலும் இதை காவி வந்தவர்களை கூர்ந்து அவதானித்தால் - இந்த சந்தேகம் மேலும் உறுதியாகும்.

யாழில் இந்த சந்தேகம் ஆகஸ்டு 17 அன்றே எழுப்பபட்டுவிட்டது.

அப்பிடியெண்டால் நாதமுனியர் சிங்களத்தின்ரை அடியாள் எண்டுறியள்? 🤣

 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அப்பிடியெண்டால் நாதமுனியர் சிங்களத்தின்ரை அடியாள் எண்டுறியள்? 🤣

 

யோகானியின் பாடல், ஐரோப்பா, அமெரிக்கா, ரஷியா, பிரேசில், துருக்கி, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று உலகம் முழுக்க பார்க்கிறார்கள். இந்தியாவில் மட்டும் இல்லை.

வெள்ளை, கறுப்பு என்று பேதம் இல்லாமல் பார்க்கிறார்கள்.

15 கோடி பேர் பார்த்து, இன்னும் வளர்கிறது. நான் முன்னரே சொல்லி விட்டேன். இவர் முன்னரும் பாடி உள்ளார். அவை சோபிக்கவில்லை. இனியும் சோபிக்காது என்றே நினைக்கிறேன்.

தனுசின் வை திஸ் கொலைவெறி, ரவுடி பேபி, உலகெல்லாம் பில்லியன் தடவைக்கு அதிகமாக பார்கப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சன் அதனை promote பண்ணவில்லை. அவரது பேத்தி தான், அவரது நடனத்தினை இந்த பாடலுடன் இணைத்து, வீடியோ வெளியிட்டார். பேத்தியின் திறமையினை புளுகவே அவர் அதனை வெளியிட்டார்.

சும்மா, யாரு ஒரு பைத்தியம், நளின் டீ சில்வா இதுக்கும், ரோவுக்கும் தொடர்பு எண்டவுடன், இங்கே கிளப்பி அடிக்கிறார்கள். 

மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு.  இதைத்தான் சொல்வது, வேலை இல்லாத டெய்லர், பூனைக்கு கோவணம் தைச்சு போட்டு ரசிச்சான், எண்டு.

கொஞ்ச நாளைக்கு இங்கே வராமல் இருப்பம்.... வேலை இருக்குது எண்டு பார்த்தால், வம்புக்கு இழுக்கிறதே வேலையா போச்சுது. 😁

*****

நண்பனின் பார்ட்டியில் சந்தித்த, பயங்கரவாதத்தினை அழித்ததால், நாம் வந்து, ஊர் போய் வரக்கூடியதாக உள்ளது என்று சொன்ன, சிஙகள ராணுவ அதிகாரிக்கு, தீவில் தெலுங்கு நாயக்கர்கள் எப்படி, தமிழர்கள் போல வந்து, சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பெரும் பிரிவினையினை உண்டாக்கினர் என்று தெளிவாக்கினேன். அவருக்கு அந்த புரிதல் இருக்கவில்லை. 

அவரது கருத்தினை மாத்திய வகையில் இன்றும் மகிழ்ச்சி.

அதனால், மறுநாள் தேடி வந்து இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சி என்று புத்தகத்தினை பரிசாக, தந்து போனார் என்றும் சொல்லி இருந்தேன். 

இதனை எல்லாம் விட்டு விட்டு, சிங்கள ராணுவ அதிகாரியுடன் தண்ணி அடித்தவர் என்று தூக்கி பிடிக்க முடிகிறது நம்மாளுக்கு. 

SJV செல்வநாயகம் நாயக்கர் இல்லையா என்று திரி திறந்து, தனது திராவிட பாசம் காட்டியவர் நம்மாளு.....

ஆக, நாம் திராவிடர்!!. 🤑

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அப்பிடியெண்டால் நாதமுனியர் சிங்களத்தின்ரை அடியாள் எண்டுறியள்? 🤣

 

இண்டைக்கு பைட்ஸ் அவ்வளவு உறைப்பா மாட்டேல்லையோ🤣.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இந்த பாட்டு முதலில் பிரபல்யமாகாதற்கு காரணம் ஏற்கனவே பிரபல்யமாய் இருந்த பாடகர்கள் இந்த பாடலை பிரபல்யப்படுத்த விரும்பவில்லை.
இந்த பாட்டு பிரபல்யமானதற்கு காரணம் குருட்டு அதிஸ்டம் ...கொஞ்ச நாளில் எல்லாம் ஓய்ந்து விடும்...இதில் தமிழர்கள் ஏன் குத்தி முறியினம் என்று தெரியவில்லை.
விருப்பம் என்டால் கேளுங்கோ இல்லாட்டில் பேசாமல் இருங்கோ 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரே தெலுங்கர் என்ற நிலையிலிருந்து "தெலுங்கு நாயக்கர், சிங்களவர், தமிழர்"  என்று மூன்று பிரிவுகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நிலை வந்திருப்பது மகிழ்ச்சி! 😄

(பாட்டைப் பார்க்கவில்லை)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

சிங்களவரே தெலுங்கர் என்ற நிலையிலிருந்து "தெலுங்கு நாயக்கர், சிங்களவர், தமிழர்"  என்று மூன்று பிரிவுகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நிலை வந்திருப்பது மகிழ்ச்சி! 😄

(பாட்டைப் பார்க்கவில்லை)

செல்வநாயகம் திரி தன் இலக்கை அடைந்தது 🤣.

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

அமிதாப்பச்சன் அதனை promote பண்ணவில்லை. அவரது பேத்தி தான், அவரது நடனத்தினை இந்த பாடலுடன் இணைத்து, வீடியோ வெளியிட்டார். பேத்தியின் திறமையினை புளுகவே அவர் அதனை வெளியிட்டார்.

 

 

நானும் இப்படித்தான் நினைத்தேன்..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, tulpen said:

வை திஸ் கொலை வெறி பாடலில் என்ன இசை நுணுக்கம் இருந்து உலகெங்கும் ட்ரென்ட் ஆனது? 

தேடுதல் இணைய தேடுதல் பொறிமுறை கால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது, அதாவது முன்பெல்லாம் ஒரு தகவல் தொழில்னுட்பவியலாளரை வேலைகமர்த்தினால் உங்களது இணைய தளத்தினையோ அல்லது இணைய ஒளிப்பதிவு தளத்தினை தேடுதல் பக்கத்தில் முன் பக்கத்தில் கொண்டு வரலாம், ஆனால் இப்போது நிலமை அவ்வாறில்லை, உங்களது சரக்கு தரமாக இருந்தாலும் உங்களால் தேடுதல் பொறிமுறையைத்தாண்டி  வரமுடியாது.

பொதுவாக உங்களுக்கென ஏற்கனவே இணைய விசிறிகள் காணப்படவேண்டும், இதற்கு காரணம் செயற்கை கணனி பார்வை மற்றும் SEO களை தவிர்க்க Google இவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது.

இதில் கூறப்பட்டுள்ள தமிழ்ப்பாடலுக்கு அந்த வகையான சாதக அமைப்பு காணப்படுகிறதோ தெரியவில்லை, ஆனால் அந்த சாதகமற்ற இந்தப்பாடலை கோசான் கூறியது போல வட இந்திய விசிறிகள் பின்புலம் கொண்டவர்களின் (Organic viewers)  மூலம் இந்த பாடலை திட்டமிட்டு பரப்பப்பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இது இன்னுமொரு ஈஸ்ரர் தாக்குதலாக இருக்கலாம் மும்பைத் துறைமுகத்தில் ஒரு கடற்படை நீர்மூழ்கி தாக்கி மூழ்கடிக்கப்பட்டது அப்போது விபத்து எனப் பூசி மொழுகிவிட்டார்கள் இல்லையேல் பங்குச்சந்தையில் தடாலடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதுபோல் இதையும் பூசி மெழுகிவிடுவார்கள். ஆனால் சுப்பிரமணியம் சுவாமி சீனாக்காரன் செய்தவேலை என அறிக்கை விட்டிருக்கிறார். துட்டகெமுனுவின் நிலை இந்தியாவுக்கு வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் பாகிஸ்தான் சொல்லவே தேவை இல்லை காஸ்மீர் என்றும் புகையும் விடையம் இப்போ வங்காள விரிகுடாவின் இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கம் அம்பாந்தோட்டயிலிருந்து அட்டை வளர்ப்புவரை அங்கெங்கிலாதபடி அவர்கள்பாடுதான். கெமுனுக்கு ஒருபக்கம் கடலாவது இருந்தது இவர்களுக்கு கடலுக்கு அப்பாலும் சீனாக்காரன் நிக்கிறான். சிலவேளை யாராவது அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத்தமிழன்மீது பாரத்தைப்போட்டு விடுதலைப்புலி எனக்கூறினாலும் கூறலாம். 
  • மாசிகருவாட்டுக் குழம்பும் சோறும் அருமையான காம்பினேஷன்.......!  👍
  • இது நடைபெறுவதைத் தடுப்பது எங்கணம்? ஒரே வழிதான். சிங்கள பெளத்த பேரினவாத அரசு தொடர்ந்தும் இயங்குவதை முடக்குவது. இன்றிருக்கும் அதன் அதிகார பலத்தினை உடைத்து, அது கம்பீரமாக நிற்கும் வெற்றிமமதையிலிருந்து கீழே வீழ்த்தி தமிழருடன் சமரசத்தில் ஈடுபடுவதன்மூலம், அவர்களின் கோரிக்கைக்கு உடன்படுவதே ஒரே வழியெனும் நிலையினை உருவாக்குவது.  நாட்டினை தொடர்ந்து கொண்டுநடாத்துவதற்குத் தேவையான வருவாய்களை பேரினவாதம் பெற்றுக்கொள்ளும் வழிகளைத் தடுப்பது. உல்லாசப் பயணத்துறை, கைத்தொழில்ப் பேட்டைகள் மூலம் கிடைக்கும் வருவாய்களை முற்றாக முடக்குவது. பொருளாதார ரீதியில் தோல்வியடைந்த நாடாக மாற்றுவது.  இதனைச் செய்ய தமிழர்கள் தமக்கு முன்னால் இருக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவது அவசியமானது. அந்த வழிகள் என்னவென்று கண்டுபிடிப்பது இப்போதைக்குத் தேவையானது.
  • அப்படியானால் தமிழர்களின் எதிர்காலம் என்ன? நிச்சயமாக நடக்கப்போவது இவைதான் 1. தமிழர்களின் தாயகம் இன்று வடக்கென்றும் கிழக்கென்றும் பிரிக்கட்டிருப்பதுபோல, இன்னும் சிறிதுகாலத்தில் கிழக்கிலும், வடக்கிலும் பகுதிகள் சிறிது சிறிதாக அரித்தெடுக்கப்பட்டு பெருத்துவரும் சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்படும். 2. தமிழரின் அருகிவரும் தாயகத்தில் சிங்களத்தின் ராணுவமும், கடற்படையும், வான்படையும், காவல்த்துறையும், புலநாய்வு அமைப்புக்களும் தொடர்ச்சியாக நிலை நிறுத்தப்படுவதோடு, அவற்றின் பிரசன்னமும் விஸ்த்தரிக்கப்படும். 3. தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களத்தின் அதிகாரிகளும், அவர்களின்குடும்பங்களும் பெருமளவில் குடியமர்த்தப்படும். 4. தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்கள் சிங்களத்திற்குள் ஊல்வாங்கப்படும் (உடனடியாக இல்லாவிட்டாலும்கூட இன்னுமோர் 50 - 60 வருடங்களில் இது சாத்தியமே).  5. அருகிவரும் தமிழரின் மொழி, கலசார விழுமியங்கள், ச்மய அடையாளங்கள் சிறிது சிறிதாக தொல்பொருள் காத்தல் எனும் பெயரிலும், "முன்னைய சிங்கள பெளத்த சின்னங்கள் " எனும் பெயரிலும் அபகரிக்கப்படும். அப்படி அபகரிக்க முடியாத தமிழரின் தொல்லியல் சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுதலோ அல்லது வேண்டுமென்றே பராமரிப்பின்றி விடப்படும், இன்று வன்னியின் பல பகுதிகளிலும் அழிந்துவரும் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட பல தொன்மைவாய்ந்த கட்டிடங்கள் இதற்கு உதாரணம். 6. தொடர்ச்சியான ராணுவ அடக்குமுறைக்கும், நில அபகரிப்பிற்கும் முகம் கொடுக்கும் தமிழினம் ஒன்றில் நாட்டைவிட்டு வெளியேறி சிங்கள் ஆக்கிரமிப்பினை இலகுவாக்கும், அல்லது தனது அடையாலம் துறந்து சிங்களுத்தினுள் உள்வாங்கப்படும்.  7. இன்னொரு நூற்றாண்டில் முழு நாடும் சிங்கள மயமாகும். 
  • அடுத்தது கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் கூட்டு. சம்பந்தன் - சுமந்திரன் கூட்டிற்கு எதிராக தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கக்கூடியவர்கள் என்று மக்களால் கருதப்பட்டவர்கள். ஆனால், தாந்தோன்றித்தனமான நடவடிக்கைகளாலும், சுயநல அரசியலைனாலும் கூடவிருந்தவர்களின் நம்பிக்கையினை இழந்து பலர் வெளியேறக் காரனமாகவிருந்தவர்கள். கூட்டமைப்பின் தலைமைக்கு மட்டுமல்லாமல், இதர கட்சித் தலைமைகளுக்கும் எதிரான பிடிவாதமான அரசியல் நிலைப்பாட்டினால் இன்றுவரை தமிழ்த் தேசியப் பரப்பில் பல கட்சிகள் ஒன்றுபடுவதை விரும்பாதவர்கள். கூட்டமைப்பிலிருந்து பிரிந்ஹ்டு வந்ததன் பின்னர் தமக்குள் மோதுண்டு, மணிவண்ணன் வெளியேறவும், அரசுக்குச் சார்பான துனைராணுவக் குழுவின் உறுப்பினர்களுடன் சேர்ந்து அரசியல் செய்யவும் காரனமானவர்கள். பாராளுமன்றத்தில் ஆக்ரோஷமாகக் கதைப்பதே அரசியல் எனும் நிலைப்பாட்டில் வாழ்பவர்கள்.  சித்தார்த்தன், அடைக்கலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டு. முன்னாள் அரச ராணுவத் துனைக்குழுக்களின் தளபதிகள் அல்லது தலைவர்கள். இந்திய ராணுவம் மற்றும் இலங்கை ராணுவத்துடன் நேரடியான தொடர்பை நெடுங்காலம் பேணிவந்தவர்கள். பல தமிழர்களின் படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புகொணடிருந்தவர்கள். தொடர்ச்சியாக இந்திய ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்துவரும் இவர்கள், சம்பந்தன் - சுமந்திரன் கூட்டிற்கு எதிரானவர்கள். தமது அரசியல் எதிர்காலமே இவர்களின் ஒரே இலக்கு. தொடர்ந்து அரச ராணுவ குழுக்களாக இயங்கமுடியாத பட்சத்தில் தமது இருப்பிற்காக அரசியலைத் த்ர்ரெந்தெடுத்தவர்கள்.  அடுத்தது விக்னேஸ்வரன். சம்பந்தன் - சுமந்திரன் கூட்டிற்கு பதிலாக தமிழ் மக்களால் தலைவராகப் பார்க்கக்கூடியவர் எனும் மாயையினை ஏற்படுத்தியவர். ஆரம்பத்தில் நம்பிக்கையினைத் தந்து பல மேடைகளில் தமிழரின் இழப்புக்கள் குறித்து வெளிப்படையாகப்பேசியவர். ஆனால், கூடவிருக்கும் இதர அரசியல்வாதிகளினதும், ஆதரவாளர்களினது பேச்சிற்கு அடிபணிந்து, இலக்கு மாறி இன்று பத்தோடு  பதினொன்றாக நிற்பவர்.   சிறிதரன். கிளிநொச்சி மக்களால் முன்னர் ஆதரிக்கப்பட்டவர். வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் தமிழரசுக் கட்சியூடாக பாராளுமன்ற ஆசனம் என்பதைத்தவிர இவரின் அரசியல் அதிக தூரம் செல்வதில்லை. ஒரு சில பாராளுமன்ற உரைகளும், மாவீரர்களுக்கான வணக்கமும் தன்னைத் தொடர்ந்தும் அரசியலில் வைத்திருக்க உதவும் என்று நம்புபவர். இவர்கள் எவராலும் தமிழருக்கான விடிவு கிடைக்கப்போவதில்லை. இது இவர்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரியும், ஆனாலும் தமது அரசியல் எதிர்காலத்திற்காக, வருவாய்க்காக அதனைச் செய்கிறார்கள்.  தமது சொல்கேட்டு, தமது சுரண்டல்களை ஏற்றுக்கொன்டு, தமது பிராந்திய நலன்களுக்கான பகடைகளாகவிருந்து தமக்கு சலாம்போடும் அமைப்பாக புலிகள் இருக்கவேண்டும் என்று இந்தியாவும், மேற்குலகும் எதிர்பார்த்தது. அப்படி புலிகள் இருக்காதவிடத்து அவர்களை அழித்து நாடு முழுவதையும் சிங்களப் பேரினவாதிகளிடம் கொடுப்பதன்மூலம் மொத்த நாட்டையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து தமக்குத் தேவையானதை அடைந்து கொள்ளலாம் என்று இந்த அந்நிய சக்திகள் விரும்பியதன் விளைவே எமது மக்களின் அழிப்பும், போராட்டத்தின் வீழ்ச்சியும். இன்று தமிழருக்கான தீர்வு எதனையும் கொடுக்கவேண்டிய தேவை இந்த சக்திகளுக்கு இல்லை. தமக்குத் தேவையானவற்றை சிங்களமே கொடுத்துவரும்வேளையில், சிங்களத்திற்கு எதிராகச் சென்று எதுவுமேயற்ற தமிழர்களை ஆதரிக்க இந்த சக்திகளுக்கு தேவையென்று ஒன்றில்லை. ஆகவேதான் இன்றுவரை தமது பிணாமிகளாக தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகளைக் குழுக்களாகப்பிரித்து தம்பாட்டிற்கு இயக்கி வருகிறார்கள். மனிதவுரிமை மீறள்கள், போர்க்குற்ற விசாரனைகள், சிறுபான்மையினங்களுக்கான அரசியல் பாதுகாப்பு, சிறுபான்மையினக் குழுக்கள் என்று வார்த்தை ஜாலங்களைப் பாவித்து கானல்நீரைப் போன்று இன்றுவரைத் தமிழர்களை நம்பிக்கையுடன் ஏங்கவைத்து தமது நலன்களை மட்டுமே பார்த்துக்கொள்ளும் சக்திகள். இந்தியாவென்றும், அமெரிக்காவென்றும், ஐரோப்பாவென்றும் தொடர்ச்சியாக தமது பிணாமிகளை வரவழைத்து தமிழர்களை "அரசியல்த் தீர்வு ஒன்று வரப்போகிறது" எனும் மாயைக்குள் அடைத்துவைத்திருப்பவர்கள். பலமுறை தாம் பாவித்து வெற்றிபெற்ற "தமிழர்களின் நலன்களைக் காவுகொடுத்து தமது நலன் பேணல்" எனும் அதே கைங்கரியத்தை இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கத் தயங்காத சுத்த சுயநல சக்திகள்.  இவர்களாலும் தமிழருக்கென்று தீர்வொன்றும் கிடைக்கப்போவதில்லை.   
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.