Jump to content

தமிழர்களுக்கு தனி ஈழம் வழங்க வேண்டும் - விக்ரமபாகு கருணாரத்ன அதிரடி அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image_ea275fee89.jpg

இலங்கையின் வளங்கள் மற்றும் நிலங்கள் பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டால் இந்த நாட்டில் பிறந்த தமிழ் மக்களுக்கு ஏன் அவர்களின் ஈழத்திற்கான உரிமை வழங்கக் கூடாது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். 

கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிற்கும் திருகோணமலையில் உள்ள எண்ணெய் கஞ்சியங்களை இந்தியாவிற்கும் கெரவலபிட்டி மின் நிலையம் அமெரிக்காவிற்கும் என வளங்களை வழங்கினால் தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பும் ஈழத்தை வழங்குவது மிகவும் நியாயமானதாக இருக்கும் என விக்ரமபாகு  கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார். 

தமது ஈழ மண்ணிற்காக வடக்கில் தமிழ் இளைஞர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மேற்கத்திய உலகத்தால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பொது வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தமிழர்களுக்கு ஈழம் வழங்கப்பட வேண்டும் என்றும் அது சர்வதேச அங்கீகாரதிற்கு வழியேற்படுத்தும் என்றும் பாகு கூறியுள்ளார். 

https://www.lankanewsweb.net/tamil/126-தமிழ்/95485-தமிழர்களுக்கு-தனி-ஈழம்-வழங்க-வேண்டும்---விக்ரமபாகு-கருணாரத்ன-அதிரடி-அறிவிப்பு-
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நீங்கள் தமிழீழத்தை தங்கத்தாம்பாளத்தில் வைச்சுக் கொடுத்தாலும் இப்ப இருக்கிற சம் சும் கும்பல் மற்றும் டமிழ் டேசிய கூழாம்பாடிகள்.. அதை ஏற்கத்தயார் இல்லை. ஏன்னா அவை இப்ப சிங்களத் தேசியத்துக்குள் எக்க ராச்சியத்துக்குள் ஐக்கியமாகிட்டினம். 

அதிலும் இரத்தத்திலகம் சம் தாங்கள் தமிழீழமே கேட்டதில்லை என்று எஜமானர்கள் காலில் கவுண்டு குப்புறக்கிடக்கும் போது...??! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

image_ea275fee89.jpg

புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன
 

 

அதிகம் தமிழர்களின் விடுதலைக்கு எதிராக நிற்பது இந்த இடதுசாரிகளே. குறிப்பாக அனைவருக்கும் சமத்துவம் என்று செங்கொடியோடு ஆயுதம் ஏந்திய ம.வி.மு கூடத் தமிழரது சுயநிர்ணய உரிமையை நிராகரித்து நின்றது. முடிந்தால் இவர் வெற்றுவாய் மெல்வதை விடுத்து சிங்கள இடதுகளை இந்த வாக்கெடுப்புக்குத் தயார்படுத்தமுடியுமானால் இவரது கூற்றுப் பொருந்தும்.   தொடர்ந்து சிங்களத்தின் தமிழின அழிப்புவாதத்திற்கு சார்பான நிலையெடுத்து ஐ.நா மனிதஉரிமை அவையிலே சிங்களத்துக்கு ஆதரவாக இருக்கும் பெரும்பாலான நாடுகள் பெயரளவிலான இடதுசாரிகளால் ஆளப்படும்(சீனா முதல் கியூபாவரை) நாடுகளே என்பதாவது இவருக்குத் தெரியுமோ அல்லது ஆள் கோமாவில் இருந்தாரோ தெரியவில்லை. அதேவேளை, ஏதோ இந்த மேற்குலகு தானாக வலிந்து பயங்கரவாதப்பட்டம் என்று  ஒரு பொய்யையும் அடித்துவிடுகிறார். 1961இல் அமைதிவழிப்போராட்டாத்தை ஒடுக்கச் சிங்களப்படைகளை யாழுக்கு அனுப்பியது,  யே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவதத் தடைச்சட்டம் போன்றவை என்வென்று கூறுவாரா?  

 அதாவது தமது(சிங்களவரின்) இருப்பும் ஈழத்தீவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்ற ஐயத்தினால் எழும் குரல். சிங்களவர் எதிர்காலத்தில் அன்னிய ஆக்கிரமிப்பினால் அவதியுறுவது தவிர்க்முடியாததாகவேவரும். துண்டு துண்டாக விற்க்கப்படும் நாடு நாளை வாங்கும் நாடுகளின் கட்டுப்பாட்டில் வரும்போதுதான் புரியும். அவர்களுக்குத் தேவையெனில் சிங்களப்படைகளையே தமது அடியாட்களாகவும், ஆட்சியாளர்களாகவும் மாற்றிவிடுவர்.  வராலற்றுக்குமுற்பட்ட காலம் முதல் இன்றுவரை ஈழத்தீவை அந்நியரிடமிருந்து காத்தது தமிழர். காட்டிக்கொடுத்தது சிங்களவர் என்பதை இராஜசிங்கன் என்ற கண்டியரசனின் வீழ்ச்சியே சாட்சி.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.