Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அரசர்களால் தடை செய்யப்பட்ட கவுனி ! 🚫

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அரசர்களால் தடை செய்யப்பட்ட கவுனி அரிசி.

கவுனி அரிசி - கறுப்பில் இருக்கும் சிறப்பு.

கவுனி அரிசி - கறுப்பில் இருக்கும் சிறப்பு

நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசியைவிட அதிகச் சத்துகளைக் கொண்டது கறுப்பு அரிசி எனப்படும் கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது.

பண்டைய காலங்களில் தென்னிந்தியாவில் செட்டிநாடு சமுதாயம் மட்டுமே இந்தக் கவுனி அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தியது. இன்றும்கூட, செட்டிநாடு திருமணங்களில் கவுனி அரிசியில் செய்யப்பட்ட ஓர் இனிப்பு வகை இடம்பெறுகிறது. இதன் சிறப்பைப் புரிந்துகொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகள் அண்மைக்காலமாக இந்த அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. 

கவுனி அரிசி - கறுப்பில் இருக்கும் சிறப்பு

அரசர்களின் அரிசி

சீனாவில் இந்த அரிசியை ‘தடைசெய்யப்பட்ட அரிசி’ என்கிறார்கள். அதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த அரிசியை பண்டைய சீனாவில் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். ஒரு காலக்கட்டத்தில் இதன் மகத்துவத்தை அறிந்து மக்களும் பயன்படுத்தத் தொடங்க, அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் இந்த அரிசியைப் பயன்படுத்தத்  தடை விதிக்கப்பட்டது. அதனால், இன்று வரை சீனாவில் தடைசெய்யப்பட்ட அரிசி என்றே இதை அழைக்கிறார்கள். 

கவுனி அரிசியின் தனிச் சிறப்பே அதன் கறுப்பு நிறம்தான். கறுப்பு நிறத்துக்குக் காரணமாக இருப்பது ‘ஆன்தோசயானின்’ என்னும் நிறமி. திராட்சை வகைகள், கத்தரிக்காய், ஊதா முட்டைகோஸ், மாதுளை, கறுப்பு பீன்ஸ் போன்று இந்த அரிசியும் ‘ஆன்தோசயானின்’ நிறமியைக் கொண்டுள்ளது. இந்த நிறமிகள், இதயம், மூளை மற்றும் ரத்தக் குழாய்களின் செயல்பாடுகளையும் ஆரோக்கியத்தையும்  மேம்படுத்துகின்றன. வெள்ளை நிற அரிசி, பழுப்பு நிற அரிசியோடு ஒப்பிடுகையில், கவுனி அரிசி கொஞ்சம் குறைவான மாவுச்சத்தையும் அதிகமான புரதம், இரும்புச் சத்தையும் கொண்டுள்ளது. கவுனி அரிசியில் வைட்டமின் இ உள்ளதால் கண் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு  நல்லது. தவிர நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்தது.

இந்த அரிசியில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது.  நீரிழிவு, புற்றுநோய், இதய நோய் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நம்மைக் காப்பாற்றுகிறது. கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.

கவுனி அரிசி - கறுப்பில் இருக்கும் சிறப்பு

கவுனி அரிசியின் வெளிப்புற அடுக்கில், அதிக  அளவில்  ‘ஆன்தோசயானின்’ நிறமி காணப்படுகிறது. இது ரத்த நாளங்களில் படியும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. தவிர, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தி, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ரத்த நாளங்கள் முதிர்ச்சி அடையாமல் பாதுகாத்து இதய ஆரோக்கியத்தைத் தக்க வைக்கிறது. நச்சுப் பொருள்கள் உடலில் சேர்வதே பல்வேறு நோய்களுக்குக் காரணம். கவுனி அரிசியில்  காணப்படும்  ‘பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்’ (Pக்ய்டொனுட்ரிஎன்ட்ச்), உடலுக்குத்  தீங்கு விளைவிக்கும்  நச்சுகள், கல்லீரல், ரத்த நாளங்கள், பெருங்குடல் ஆகியவற்றில் குவியாதவாறு தடுக்கிறது.

கவுனி அரிசியும் பழுப்பு அரிசியைப்போன்ற சுவையைக் கொண்டதுதான். சமைக்க  அதிக நேரம் எடுக்கும். ஒரு மணி நேரம் ஊறவைத்துச் சமைத்தால் எளிதாக இருக்கும். உணவும் மென்மையாக  இருக்கும்.  இன்று   மளிகைக் கடைகளில்கூட கவுனி அரிசி விற்பனைக்குக் கிடைக்கிறது. கவுனி அரிசியின் முழுப்பயன்களும் அதன் மேல்பகுதியில் ஒட்டியிருக்கும் தவிட்டில்தான் இருக்கிறது. அதனால் வாங்கும்போதே முழுக் கவுனி அரிசியா என்று பார்த்து வாங்க வேண்டும். 

நன்றி விகடன்🙏🏻

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • Replies 133
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

இது உண்மை - அதனால் தான் நீரிழிவின் நிலை என்னவென்று ஆராயாமல் ஏன் ஐரோப்பாவில் இன்சுலின் எல்லோருக்கும் கொடுக்கிறார்கள் எனக் குழம்புகிறேன்.  எங்கள் உடலில் இரண்டாம் வகை நீரிழிவு ஆரம்பிக்கும் போது நடப்பது இ

Justin

கறுப்பு அரிசி, சிவப்பரிசி, பிறவுண் அரிசி - இவை எல்லாமே தீட்டிய வெள்ளை அரிசியை விட ஆரோக்கியமானவை. இதன் காரணம், அரிசித் தானியத்தின் மேல் படையான தவிட்டில் (bran) தான் அனேகமான நுண் போசணைகள் இருக்கின்றன, அ

Justin

கீழே இருக்கும் படத்தை அன்புடன் நானே தயாரித்திருக்கிறேன்😂. விடயம் இதை விட சிக்கல் என்றாலும், உங்கள் கேள்விக்கு இது பதில் தருமென நினைக்கிறேன்: இன்சுலின் போய் அதன் கதவை எங்கள் உறுப்புகளில் திறந்தால் தான்

 • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தகவல் ......நான் இதை சாப்பிட்டதேயில்லை .....!  😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

நல்லதொரு தகவல் ......நான் இதை சாப்பிட்டதேயில்லை .....!  😁

நான் இப்ப ஒரு மாதமாய் கவுனி அரிசியை கஞ்சியாக செய்து இரவில் சாப்பிடுகின்றேன். பிரசரும் சுகரும் குறைஞ்ச மாதிரி தெரியுது. ஒரு ஆறுமாதம் தொடர்ந்து சாப்பிட்டு பாப்பம் எண்டு இருக்கிறன்.:)

கறுப்பு எண்டாலே வேற லெவல்... 🤣

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த அரிசியை எங்கு வாங்கலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

இந்த அரிசியை எங்கு வாங்கலாம்.

ஒரு பை  அரிசி (10kg ) அனுப்பி விடுங்கோ என்று கு. சா வுக்கு விலாசம் குடுத்து தனிமடல் போடுங்கோ.....அலுவல் முடிஞ்சிடும்....... பிழைக்காத தெரியாத ஆளாய் இருக்கிறீங்கள்.......!  😎

 • Haha 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அண்ணையவை,

உதுண்ட ஆங்கில பெயர் தெரிஞ்சா சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்த அரிசியை எங்கு வாங்கலாம்.

ஏசியன் கடையளிலை வாங்கலாம். கிலோ 9 ஈரோ

71jrVPkGvsS._SL1500_.jpg

61wW4J9hZOL._SL1000_.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அண்ணையவை,

உதுண்ட ஆங்கில பெயர் தெரிஞ்சா சொல்லுங்கோ.

chakhao rice ◀️ இதுவும் ஒரு ஆங்கில பெயர்..கடைகளில் வேறு பெயர்களிலிலும் இருக்கலாம்.✍️

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அண்ணையவை,

உதுண்ட ஆங்கில பெயர் தெரிஞ்சா சொல்லுங்கோ.

கவுணி ரைஸ் என்று அடித்ததால் வரும். பிளக்/ரெட் ரைஸ் என்றும் சொல்லினம்...ஒரு சின்ன பக்கட் £3,£4 வரும்...ஹொலண்ட் அன்ட் பானட் ,சேன்ஸ்பெரி போன்ற கடைகளில் இருக்குது  
 
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அண்ணையவை,

உதுண்ட ஆங்கில பெயர் தெரிஞ்சா சொல்லுங்கோ.

நீங்கள்" பிளாக் நைட்டி" என்று கேளுங்கோ அதுக்கு முன் "ரைஸ்" என்று சொல்லுங்கோ......பிறகு அவங்கள் வேறு ஏதாவது தந்து போடுவினம்........!  (என்ற அறிவுக்கு எட்டியவரை)......!   😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

ஏசியன் கடையளிலை வாங்கலாம். கிலோ 9 ஈரோ

71jrVPkGvsS._SL1500_.jpg

61wW4J9hZOL._SL1000_.jpg

16 minutes ago, யாயினி said:

chakhao rice ◀️ இதுவும் ஒரு ஆங்கில பெயர்..கடைகளில் வேறு பெயர்களிலிலும் இருக்கலாம்.✍️

5 minutes ago, ரதி said:

கவுணி ரைஸ் என்று அடித்ததால் வரும். பிளக்/ரெட் ரைஸ் என்றும் சொல்லினம்...ஒரு சின்ன பக்கட் £3,£4 வரும்...ஹொலண்ட் அன்ட் பானட் ,சேன்ஸ்பெரி போன்ற கடைகளில் இருக்குது  
 
நன்றி ஹை. நன்றி ஹை.

6 minutes ago, suvy said:

நீங்கள்" பிளாக் நைட்டி" என்று கேளுங்கோ அதுக்கு முன் "ரைஸ்" என்று சொல்லுங்கோ......பிறகு அவங்கள் வேறு ஏதாவது தந்து போடுவினம்........!  (என்ற அறிவுக்கு எட்டியவரை)......!   😁

உங்களுக்கும் ஒரு நன்றி ஹை. எதுக்கும் ரைஸ் என்பதை கொஞ்சம் உரக்க சொல்லுவம்🤣.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

ஒரு பை  அரிசி (10kg ) அனுப்பி விடுங்கோ என்று கு. சா வுக்கு விலாசம் குடுத்து தனிமடல் போடுங்கோ.....அலுவல் முடிஞ்சிடும்....... பிழைக்காத தெரியாத ஆளாய் இருக்கிறீங்கள்.......!  😎

நல்ல ஐடியா.... சுவியர்.
பாஞ்ச் அண்ணைக்கும்  சேர்த்து... 20 கிலோவாக ஓடர் பண்ணலாம் என இருக்கின்றேன்.
குமாரசாமி அண்ணை... மறுப்பு தெரிவிக்காமல், அனுப்பி வைப்பார் என நினைக்கின்றேன். 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

கவுணி ரைஸ் என்று அடித்ததால் வரும். பிளக்/ரெட் ரைஸ் என்றும் சொல்லினம்...ஒரு சின்ன பக்கட் £3,£4 வரும்...ஹொலண்ட் அன்ட் பானட் ,சேன்ஸ்பெரி போன்ற கடைகளில் இருக்குது  
 
நீங்கள் வாங்கி சாப்பிட்டு பாத்தனீங்களோ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது நான் எப்பவோ இருந்து சாப்பிடுரன்.. சாமியர் அட்பண்ணின போட்டோல இருக்கிற ரெண்டு அரிசியுமே நல்லது.. அந்த சிவப்பும் கறுப்பு மாதிரியே சுகறை ஏத்தாது எவ்ளா சாப்பிட்டாலும்.. ஆனால் ரேஸ்ற் புழுங்கல் அரிசிமாதிரி வராது.. ஆனா நோய் நொடி இல்லாமல் இருக்கவிரும்பினால் சாப்பிடலாம்.. தாய்லாந்து சைனீஸ்கடைகளில் கொஞ்சம் விலை கம்மியா எடுக்கலாம்..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது நான் எப்பவோ இருந்து சாப்பிடுரன்.. சாமியர் அட்பண்ணின போட்டோல இருக்கிற ரெண்டு அரிசியுமே நல்லது.. அந்த சிவப்பும் கறுப்பு மாதிரியே சுகறை ஏத்தாது எவ்ளா சாப்பிட்டாலும்.. ஆனால் ரேஸ்ற் புழுங்கல் அரிசிமாதிரி வராது.. ஆனா நோய் நொடி இல்லாமல் இருக்கவிரும்பினால் சாப்பிடலாம்.. தாய்லாந்து சைனீஸ்கடைகளில் கொஞ்சம் விலை கம்மியா எடுக்கலாம்..

இதை சாப்பிட்டால் என்னென்ன நோய்க்கு நல்லது.....என்ன  நோய் வராது எண்டு உங்கடை அனுபவத்தை சொன்னால் goshan_che போன்ற பாமரமக்கள் பயன் பெறுவினம் எல்லோ...😎

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

ஒரு பை  அரிசி (10kg ) அனுப்பி விடுங்கோ என்று கு. சா வுக்கு விலாசம் குடுத்து தனிமடல் போடுங்கோ.....அலுவல் முடிஞ்சிடும்....... பிழைக்காத தெரியாத ஆளாய் இருக்கிறீங்கள்.......!  😎

நான் என்ன அரிசிக்கடையே நடத்துறன்? 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

அண்ணையவை,

உதுண்ட ஆங்கில பெயர் தெரிஞ்சா சொல்லுங்கோ.

https://www.healthline.com/nutrition/black-rice-benefits#4.-May-boost-heart-health

நானும் இப்போதுதான் பார்த்தேன் நிறைய தளம்களில் கருப்பு அரிசி பற்றி ஆகா ஓகோ என்கிறார்கள் மீராவைத்தான் கேட்கணும் .

கறுப்பு ரைஸ் வேணுமெண்டு .

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

நல்ல ஐடியா.... சுவியர்.
பாஞ்ச் அண்ணைக்கும்  சேர்த்து... 20 கிலோவாக ஓடர் பண்ணலாம் என இருக்கின்றேன்.
குமாரசாமி அண்ணை... மறுப்பு தெரிவிக்காமல், அனுப்பி வைப்பார் என நினைக்கின்றேன். 🤣

சிறித்தம்பியர்! நீங்கள் இருக்கிற இடத்திலையும் எக்கச்சக்கமான  ஏசியன் அரிசிக்கடை இருக்கெண்டு கூகிள் சொல்லுது....😁

Food-Inspiration international: Internationale Supermärkte

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

https://www.healthline.com/nutrition/black-rice-benefits#4.-May-boost-heart-health

நானும் இப்போதுதான் பார்த்தேன் நிறைய தளம்களில் கருப்பு அரிசி பற்றி ஆகா ஓகோ என்கிறார்கள் மீராவைத்தான் கேட்கணும் .

கறுப்பு ரைஸ் வேணுமெண்டு .

நானும் சாப்பிட்டு பார்க்கிற ஐடியாதான். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நீங்கள் வாங்கி சாப்பிட்டு பாத்தனீங்களோ?

இந்த நல்ல பழக்கம் எல்லாம் எனக்கில்லை...ஆனால் இந்த  அரிசியை பற்றி முதலிலே  கேள்விப்பட்டு சேர்ச் பண்ணி பார்த்துள்ளேன்...நான் இருக்கும் பக்கம் உள்ள தமிழ் கடையில் காணவில்லை . ஆனால் , தமிழ் கடைகளில் வரும் அரிசி எவ்வளவு  தூரத்திற்கு கலப்படம் இல்லாமல் வரும் என்று தெரியவில்லை.
இந்த அரிசியை வேண்டி சாப்பிட்டு பார்க்க வேண்டும்...முந்தி பாசுமதி சாப்பிட்டு வந்தேன் ...இப்ப விட்டு விட்டேன் .
இனிப்பு அதிகம் விரும்பி சாப்பிடுவதால் , இப்ப கொஞ்ச நாளாய் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுகிறேன் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கவுனி அரிசி இட்லி &தோசை 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ரதி said:

இனிப்பு அதிகம் விரும்பி சாப்பிடுவதால் , இப்ப கொஞ்ச நாளாய் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுகிறேன் 

வெந்தயம் முதன்நாள் தண்ணியில் ஊறப்போட்டு காலையில் அந்த தண்ணியுடன் வெந்தயத்தை நன்கு மென்று சாப்பிடணும் .

பூஜா சுவீட் கடையில்  ஈஸ்ட்காமில்  கிலோ 7.5 என்கிறார்கள் நெடுக்கரின் அப்பக்கடையை மூடி போட்டு அந்த இடத்தில்தான் சுவீட் கடை 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

வெந்தயம் முதன்நாள் தண்ணியில் ஊறப்போட்டு காலையில் அந்த தண்ணியுடன் வெந்தயத்தை நன்கு மென்று சாப்பிடணும் .

பூஜா சுவீட் கடையில்  ஈஸ்ட்காமில்  கிலோ 7.5 என்கிறார்கள் நெடுக்கரின் அப்பக்கடையை மூடி போட்டு அந்த இடத்தில்தான் சுவீட் கடை 🤣

வெந்தயம் ஊற வைச்சு சாப்பிடுவதிலும் பார்க்க அப்படியே வெறும் வயித்தில் மென்று சாப்பிட்டால் தான் பலனாம் 
நான் ஊரில் இருக்கும் போது முருங்கை இலையை திரும்பியும் பார்ப்பதில்லை ...அதில் இருக்கும் சத்து வேறு எதிலும் இல்லை ...அதையும் இடைக்கிடை கருஞ் சீரகத்தோடு சேர்த்து  அவித்துக் குடிப்பது உண்டு 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

பூஜா சுவீட் கடையில்  ஈஸ்ட்காமில்  கிலோ 7.5 என்கிறார்கள் நெடுக்கரின் அப்பக்கடையை மூடி போட்டு அந்த இடத்தில்தான் சுவீட் கடை 🤣

நெடுக்கர்…. அப்பக்கடை நடத்தியவரா?

இவ்வளவு நாளும், இது தெரியாமல் போச்சே…. 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் துருக்கிக் கடைகளில் வாங்கி பஸ்மதியுடன் சிறிது கலந்து காய்ச்சுவோம் முன்னர். இங்கும் கடைகளில் சிறிய பக்கற் உள்ளது.

Black rice 1kg – BasketPayBlack Rice-Organic – Vintage FarmersChinese Black Rice - Ingredient - FineCooking

இன்னும் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. இதில் எது நல்லது அல்லது எல்லாமே கவுனி அரிசியா ???? குமாரசாமி ???

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.